search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடியரசுக் கட்சி"

    • துப்பாக்கிச்சூடு நடத்திய வாலிபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
    • கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிறகு டிரம்ப் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். கடந்த 14-ம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் நகரில் பிரசாரம் செய்தபோது டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

    இதில் அவரது வலது காதில் தோட்டா உரசிச் சென்றதில் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். துப்பாக்கிச்சூடு நடத்திய வாலிபரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இதற்கிடையே, கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிறகு டிரம்ப் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார்.

    இதற்கிடையே, டிரம்ப் மீது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அமெரிக்காவின் ரகசிய பிரிவின் கவனக்குறைவே காரணம் என புகார்கள் எழுந்தன.

    இந்நிலையில், பாதுகாப்பு குறைபாட்டுக்கு பொறுப்பேற்று கிம்பர்லி சீட்டல் அமெரிக்காவின் ரகசிய பிரிவு தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார் என தகவல் வெளியானது.

    • துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
    • கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிறகு டிரம்ப் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். கடந்த 14-ந் தேதி பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் நகரில் டிரம்ப் பிரசாரம் செய்தபோது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் அவரது வலது காதில் தோட்டா உரசி சென்றதில் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

    இந்த நிலையில் கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிறகு டிரம்ப் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். மிச்சிகன் மாகாணத்தில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட அவர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறும்போது, நான் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் கடந்த வாரம் ஜனநாயகத்திற்காக ஒரு குண்டை உடலில் வாங்கினேன் என்றார்.

    • துப்பாக்கிச் சூட்டுக்கு பின் நேற்று[ஜூலை 18] நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் டிரம்ப் கட்சியினரிடையே மனம் திறந்துள்ளார்.
    • குடியரசுக் காட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர் தங்களது காதில் டிரம்பைப் போல் கட்டு போட்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    அமரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கியுள்ளார் டிரம்ப். கடந்த வாரம் பென்சில்வேனியாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டது. தலையை சற்று அசைத்ததால் குண்டு அவரது வலது காதின் மேற்பகுதியை உரசிச் சென்றது. நூலிழையில் டிரம்ப் உயிர்தப்பிய நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய தாமஸ் க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டான். டிரம்புக்கு அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரி  கோரி காம்ப்ரேட்டோர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தார்.

     

     

    இந்நிலையில்  துப்பாக்கிச் சூட்டுக்கு பின் நேற்று[ஜூலை 18] நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் டிரம்ப் கட்சியினரிடையே மனம் திறந்துள்ளார். குடியரசுக் கட்சியின் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டபின் மாநாட்டில் பேசிய அவர், இன்றுதொட்டு நான்கு மாதத்தில் [அதிபர் தேர்தலில்] நம் மிகப்பெரிய வெற்றியை பெற உள்ளோம். நான் முழு அமெரிக்காவுக்கும் அதிபர், பாதி அமெரிக்காவுக்கு மட்டுமல்ல என்று தெரிவித்தார்.

    மேலும் துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து விவரித்த அவர், 'எல்லா இடங்களிலும் ரத்தம் சிந்திக்கொண்டிருந்தது, இருந்தபோதிலும் நான் மிகவும் பாதுகாப்பாகவே உணர்ந்தேன். கடவுள் என் பக்கம் இருக்கிறார். கடைசி நொடியில் நான் எனது தலையை அசைக்காமல் இருந்திருந்தால் தோட்டா குறிவைக்கப்பட்ட எனது நெற்றியில் பாய்ந்திருக்கும். இன்று உங்கள் முன்னாள் நான் இருந்திருக்க மாட்டேன்.

     

    நான் இங்கு இருந்திக்க வேண்டியவனே இல்லை. ஆனால் கடவுளின் கருணையால் இங்கு உங்கள் முன் நிற்கிறேன்' என்று தெரிவித்தார்.மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்த பாதிகாப்பு வீரருக்கு  டிரம்ப் அஞ்சலி செலுத்தினார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற குடியரசுக் காட்சியைச் சேர்ந்தவர்கள் தங்களது காதில் டிரம்பைப் போல் கட்டு போட்டிருந்தது அனைவரின் கவனத்தையும்  ஈர்த்து வருகிறது. முன்னதாக   ஒடிசா மாநிலம் பூரியிலுள்ள கடவுள் ஜகந்நாதர்தான் டிரம்ப்பின் உயிரைக் காப்பாற்றினார் என்று கோவில் பூசாரி சொன்னது குறிப்பிடத்தக்கது.

    • மேத்யூ மிகவும் தனிமையான அமைதியான சமூகத் தொடர்பு இல்லாத பையன் என்று அவனது சக மாணவர்கள் கூறுகின்றன
    • மேத்யூ பள்ளியில் சக மாணவர்களால் கேலி செய்யப்படும் வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.

    அமேரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னால் அதிபர் டொனல்டு டிரம்ப் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பென்சில்வேனியா மாகாணத்தில் நடந்த பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிசூடு நடந்தது. குண்டு அவரது வலது காதின் மேற்பகுதியை உரசிச் சென்றது. சற்று தலைசாய்த்த நிலையில் நூலிழையில் உயிர்பிழைத்தார். அதுதொடர்பான வீடியோவும் வெளியானது. மேலும், சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு பெண் கூட்டத்தில் இருந்த வீடியோவும் வெளியாகியுள்ளது.

    அவர் மீது துப்பாக்கிசூடு நடத்தியது அப்பகுதியை சேர்ந்த தாமஸ் மாத்தியூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞர் என்பது தெரியவந்தது. சீக்ரட் சர்வீஸ் பாதுகாவலர்கள் சுட்டதில் மேத்யூ க்ரூக்ஸ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயரிழந்தார். அவரைப் பற்றிய அடுத்தடுத்த தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

    மேத்யூ மிகவும் தனிமையான அமைதியான சமூகத் தொடர்பு இல்லாத பையன் என்று அவனது சக மாணவர்கள் கூறுகின்றனர். எனவே மேத்யூவுக்கு நண்பர்களும் இல்லை. கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் திறம்மிக்கவனாக இருந்துள்ளார். துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் சரியாக குறிவைக்கும் திறன் இல்லாததால் மேத்யூ நிராகரிக்கப்பட்டுள்ளான். அவனது தோற்றத்தை வைத்து சக மாணவர்கள் தொடர்ந்து கேலி கிண்டல் செய்து வம்பிழுத்து வந்துள்ளனர். மேத்யூ, பள்ளியில் சக மாணவர்களால் கேலி செய்யப்படும் வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.

    அவன் அணியும் உடைகளை வைத்தும் அவனை அவர்கள் தொடர்ந்து சீண்டியுள்ளனர். தனது தந்தையின் AR ஸ்டைல் செமி ஆட்டோமேட்டிக் ரைபிளை பயன்படுத்தியே மேத்யூ டிரம்பை சுட்டுள்ளான் என்று விசாரணையில் தெரிகிறது. மேலும் அவனது காரில் சில வெடிகுண்டுகளையும் பாதுகாப்பு படையினர் கண்டறிந்துள்ளனர்.

    ஆனால் மேத்யூவின் டிரம்பை சுட்டதற்கு எந்த வலுவான காரணமும் இல்லை. எந்த சித்தாந்தத்தின் மீதும் மேத்யூ ஈடுபாடு காட்டவில்லை என்றும் தன்னிச்சையாகவே இந்த செயலில்ஈடுபட்டுள்ளான் என்றும் விசாரணையில் தெரியவருகிறது. டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டையே மேத்யூ கொண்டிருந்தான் என்றும் தெரிகிறது. இதற்கிடையில் உகாண்டா நாட்டில் உள்ள சில சிறுவர்கள் டிரம்ப் மீதான தாக்குதலை நடித்து விளையாடும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

    • இந்த விவாத நிகழ்ச்சியால் பைடன் இந்த நிலைமையில் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டுமா என்ற விமர்சனக் குரல்கள் எழத்தொடங்கியுள்ளன.
    • அமெரிக்காவின் துணை அதிபராக உள்ள இந்தியா மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு அதிபர் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஜநாயகக் கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் களம் காண்கின்றனர்.

    இவர்கள் இருவருக்கும் இடையிலான நேரடி விவாத நிகழ்ச்சி கடந்த ஜூன் 28 ஆம் தேதி நடந்தது. ஜோ பைடன் இந்த நிகழ்ச்சியில் பலமுறை திக்கித் திணறி பேசத் தடுமாறினார். சில நொடிகள் அப்படியே ஸ்தம்பித்து நின்றார். 81 வயதாகவும் ஜோ பைடன் சமீப காலங்களாகவே தடுமாற்றத்துடனேயே காணப்படுகிறார்.

    எனவே இந்த விவாத  நிகழ்ச்சியால் பைடன் இந்த நிலைமையில் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டுமா என்ற விமர்சனக் குரல்கள் எழத்தொடங்கியுள்ளன. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பைடன் அதன்பின் ஆற்றிய உரையிலும்கூட டெலிபிராம்டரில் END OF THE QUOTE - உரை முடிந்தது என்று எழுதப்பட்டிருந்ததையும் சேர்த்து வாசித்தது சர்ச்சையாகியுள்ளது.

    அவரது கட்சிக்குள்ளிருப்பவர்களே பைடன் அதிபர் தேர்தலில் நிற்காமல் இருப்பதே நல்லது என்று கருத்து கூறி வருகின்றனர். மேலும் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிட்ச்சல் ஒபாமா பைடனுக்கு பதில் அதிபர் வேட்பாளராக நிற்க வேண்டும் என்றும் சிலர் விரும்புகின்றனர். பைடனின் தடுமாற்றம் அமெரிக்க மக்களிடையேயும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிஎன்என் தொலைக்காட்சி தற்போது கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அதன்படி தற்போது அமெரிக்காவின் துணை அதிபராக உள்ள இந்தியா மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு அதிபர் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சிஎன்என் கருத்துக்கணிப்பின்படி, டிரம்பா பைடனா என்ற கேள்விக்கு 49 சதவீதம் பேர் டிரம்புக்கும் 43 சதவீதம் பேர் பைடனுக்கும் ஆதரவளித்துள்ளனர்.

    அதேசமயம் டிரம்பா கமலா ஹாரிஸா என்ற கேள்விக்கு 47 சதவீத வாக்காளர்கள் டிரம்புக்கு ஆதரவாகவும். 45 சதவீத வாக்காளர்கள் கமலா ஹாரிஸ் அதிபர் ஆகலாம் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளனர். டிரம்பை விட வெறும் 6 சதவீத வித்தியாசத்தில் மட்டுமே கமலா ஹாரிஸ் உள்ளார். டிரம்பை விட மிட்ச்சல் ஒபாமா 11 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார்.

     

    ஆனால் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கமலா ஹாரிஸுக்கு பெண் வாக்காளர்களின் ஆதாரவு கணிசமாக உள்ளது. எனவே கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக அதிக வாய்ப்பு உள்ளது என்று இதன்மூலம் தெரியவருகிறது. 

    ×