search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    கடவுள் எனது பக்கம் உள்ளார்.. துப்பாக்கிச்சூடு குறித்து மனம் திறந்த டிரம்ப்
    X

    'கடவுள் எனது பக்கம் உள்ளார்'.. துப்பாக்கிச்சூடு குறித்து மனம் திறந்த டிரம்ப்

    • துப்பாக்கிச் சூட்டுக்கு பின் நேற்று[ஜூலை 18] நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் டிரம்ப் கட்சியினரிடையே மனம் திறந்துள்ளார்.
    • குடியரசுக் காட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர் தங்களது காதில் டிரம்பைப் போல் கட்டு போட்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    அமரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கியுள்ளார் டிரம்ப். கடந்த வாரம் பென்சில்வேனியாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டது. தலையை சற்று அசைத்ததால் குண்டு அவரது வலது காதின் மேற்பகுதியை உரசிச் சென்றது. நூலிழையில் டிரம்ப் உயிர்தப்பிய நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய தாமஸ் க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டான். டிரம்புக்கு அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரி கோரி காம்ப்ரேட்டோர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தார்.

    இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு பின் நேற்று[ஜூலை 18] நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் டிரம்ப் கட்சியினரிடையே மனம் திறந்துள்ளார். குடியரசுக் கட்சியின் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டபின் மாநாட்டில் பேசிய அவர், இன்றுதொட்டு நான்கு மாதத்தில் [அதிபர் தேர்தலில்] நம் மிகப்பெரிய வெற்றியை பெற உள்ளோம். நான் முழு அமெரிக்காவுக்கும் அதிபர், பாதி அமெரிக்காவுக்கு மட்டுமல்ல என்று தெரிவித்தார்.

    மேலும் துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து விவரித்த அவர், 'எல்லா இடங்களிலும் ரத்தம் சிந்திக்கொண்டிருந்தது, இருந்தபோதிலும் நான் மிகவும் பாதுகாப்பாகவே உணர்ந்தேன். கடவுள் என் பக்கம் இருக்கிறார். கடைசி நொடியில் நான் எனது தலையை அசைக்காமல் இருந்திருந்தால் தோட்டா குறிவைக்கப்பட்ட எனது நெற்றியில் பாய்ந்திருக்கும். இன்று உங்கள் முன்னாள் நான் இருந்திருக்க மாட்டேன்.

    நான் இங்கு இருந்திக்க வேண்டியவனே இல்லை. ஆனால் கடவுளின் கருணையால் இங்கு உங்கள் முன் நிற்கிறேன்' என்று தெரிவித்தார்.மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்த பாதிகாப்பு வீரருக்கு டிரம்ப் அஞ்சலி செலுத்தினார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற குடியரசுக் காட்சியைச் சேர்ந்தவர்கள் தங்களது காதில் டிரம்பைப் போல் கட்டு போட்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. முன்னதாக ஒடிசா மாநிலம் பூரியிலுள்ள கடவுள் ஜகந்நாதர்தான் டிரம்ப்பின் உயிரைக் காப்பாற்றினார் என்று கோவில் பூசாரி சொன்னது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×