என் மலர்
நீங்கள் தேடியது "திமுக மாவட்ட செயலாளர்கள்"
- தேர்தலுக்காக இன்னும் வேகமாக பணியாற்ற வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களை கேட்டுக்கொண்டார்.
- நாளை மறுநாள் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சென்னை:
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார்.
பூத் வாரியாக கட்சி நிர்வாகிகள் நியமித்து அவர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கி உள்ளார். வீடு வீடாக வாக்காளர் பட்டியலை சரி பார்த்து யார் யாருக்கு ஓட்டுகள் விடுபட்டுள்ளது. வீட்டு முகவரி மாறியவர்கள் யார் யார்? என்ற பட்டியலை சேகரித்து அவர்களது ஓட்டுகளையும் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த மாதம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவதால், அதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
அது மட்டுமின்றி சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வை கண்டித்து வருகிற 11-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றும் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது கட்சிப் பணிகள் குறித்து விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தலுக்காக இன்னும் வேகமாக பணியாற்ற வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களை கேட்டுக்கொண்டார்.
அது மட்டுமின்றி தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்தும் விரிவாக பேசினார்.
சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் ஒன்றிய அரசின் கைப்பாவையாக எதேச்சதிகார போக்குடன் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவதாகவும், கூறினார்.
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியலை தேர்தலுக்கு பிறகு நடத்தலாம் என்று அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியும் அதை தேர்தல் ஆணையம் கேட்கவில்லை.
சிறுபான்மையினர் வாக்குகள் பா.ஜ.க.வின் எதிர்ப்பு வாக்குகள் ஆகியவற்றை குறிவைத்து நீக்கும் நோக்கோடு தகுதியுள்ள வாக்காளர்களை நீக்கி தகுதியற்ற வாக்காளர்களை சேர்க்கும் சதித் திட்டம் நடைபெறாமல் இருக்க அனைவரும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தேர்தலுக்காக ஆரம்ப கட்ட பணிகள் ஒவ்வொன்றையும் சிறப்பாக செய்து முடித்திட வேண்டும் என்றும் நாளை மறுநாள் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இது தவிர கட்சி பணிகள் குறித்தும் மாவட்டச் செயலாளர்களுடன் விரிவாக ஆலோசித்தார்.
இந்த ஆலோசனையில் மாவட்ட கழக செயலாளர்களுடன் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் உடன் இருந்தனர்.
- நாளை நண்பகல் 12 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக கூட்டம் நடைபெறுகிறது.
- தி.மு.க.வின் முப்பெரும்விழா மற்றும் ஓரணியில் தமிழ்நாடு- உறுப்பினர் சேர்க்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை:
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
நாளை நண்பகல் 12 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் தி.மு.க.வின் முப்பெரும்விழா மற்றும் ஓரணியில் தமிழ்நாடு- உறுப்பினர் சேர்க்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
- அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் கூட்டம் நடைபெறும்.
- மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை:
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம் வருகிற 13-ந்தேதி புதன்கிழமை காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும்.
ஓரணியில் தமிழ்நாடு- உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக நடைபெறும் இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
- கூட்டத்தில் 76 மாவட்டக் கழக செயலாளர்களும், மாநகர செயலாளர்களும் இணைந்திருந்தனர்.
- இதுவரை இணைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் விவரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் வரும் 2026 ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் அரசியல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
தேர்தல் களத்தில் ஆளும் கட்சியாக உள்ள தி.மு.க. 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து தனது தேர்தல் வியூகத்தை அமைத்துள்ளது. வலுவான கூட்டணியுடன் இருக்கும் தி.மு.க. தேர்தல் களத்தில் முந்தும் அளவுக்கு தனது கட்டமைப்பை வலுவாக்கி உள்ளது.
ஏற்கனவே கட்சி ரீதியாக எங்கெங்கு பிரச்சனை நிலவுகிறதோ அந்த தொகுதி நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உடன்பிறப்பே வா' என்று அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து விசாரித்து வருகிறார்.
அது மட்டுமின்றி வாக்குச்சாவடி முகவர்களான பி.எல்.ஏ.2 நிர்வாகிகள் கூட்டத்தையும் தொகுதி வாரியாக நடத்தி முடித்திருக்கிறார். இவர்கள் தான் ஒவ்வொரு பூத்களை நிர்வகிப்பவர்கள். இவர்களை நம்பித்தான் பணமும் செலவழிக்கப்படும்.
அது மட்டுமின்றி 100 ஓட்டுக்கு ஒருவர் வீதம் ஆட்களை தி.மு.க. நியமித்தும் உள்ளது. அவர்களிடம் எந்தெந்த வீடுகளில் எத்தனை ஒட்டுகள் உள்ளது. அதில் தி.மு.க. ஓட்டு எத்தனை என்ற பட்டியலும் கைவசம் இருக்கிறது. இது தவிர கட்சி சாராத பொது மக்களின் ஓட்டு லிஸ்டும் தனியாக வைத்துள்ளனர். இதை வைத்து கட்சியினர் செயல்படுகின்றனர்.
இப்போது ஓரணியில் தமிழ்நாடு பிரசார இயக்கத்தின் மூலம் வீடு வீடாக சென்று அரசின் சாதனைகளை சொல்வதுடன் உறுப்பினர் சேர்க்கையையும் நடத்தி வருகின்றனர். இந்த பிரசார இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் கடந்த 3-ந்தேதி தொடங்கி வைத்தார். வீடு வீடாக அவர் நடந்து சென்று உறுப்பினர் சேர்க்கையையும் நடத்தினார்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் எம்.எல்.ஏ.க்கள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட கழக செயலாளர்கள் கவுன்சிலர்கள் என நிர்வாகிகள் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகின்றனர்.
தி.மு.க.வுக்கு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கில் இதுவரை 1 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை சேர்த்துவிட்டனர். இந்த பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தி.மு.க. மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டத்தை காணொலி வாயிலாக நடத்தினார். இந்த கூட்டத்தில் 76 மாவட்டக் கழக செயலாளர்களும், மாநகர செயலாளர்களும் இணைந்திருந்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் தனது இல்லத்தில் இருந்தபடி காணொலியில் கூட்டத்தை நடத்தினார்.
அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்ணா அறிவாலயத்தில் இருந்தபடி வரவேற்று பேசினார். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து விரிவாக கேட்டறிந்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டோட மண்-மொழி-மானம் காக்கவும், நம்மோட திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஓரணியில் கொண்டுவர வீடு வீடாக போய் பரப்புரை மேற்கொள்ளவும், கழகத்தில் அவர்களை உறுப்பினர்களாக சேர்க்கவும், ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை கடந்த 3-ந்தேதி தொடங்கினோம்.
தமிழ்நாட்டு மக்களை ஓரணியில் கொண்டுவர மக்களைத் தேடி வீடு வீடாகச் செல்கிறோம் என்பது மகிழ்ச்சி. செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் வரவேற்பு நன்றாக உள்ளது என கேள்விப்படும் போது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது.
ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் உழைக்கும் ஒவ்வொரு கழக உடன் பிறப்புக்கும் என் தலை தாழ்ந்த வணக்கம். நன்றி.
நமக்கு இன்னமும் 30 நாள் இருக்கிறது. எண்ணிக்கைக்கு நாம் கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவத்தை ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது நம் கழகத்தினர் கலந்துரையாடுவதை நாம் உறுதி செய்திட வேண்டும்.
ஒன்றிய பாஜக அரசு மற்றும் அதன் கூட்டணியாக இயங்கிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள், தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ள மற்றும் இழைக்கவுள்ள அநீதியை ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் எடுத்து சொல்வது தான் இந்த முன்னெடுப்பின் நோக்கம்.
அடுத்த 30 நாட்களில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 68 ஆயிரம் வாக்குச் சாவடிகளிலும் சேர்த்து 2.5 கோடி பேரை கழக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். நாம உருவாக்கியிருக்கும் பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்கள் கழகத்துக்கு மிகப்பெரிய சொத்து. அவர்களை எதிர் வரும் சட்டன்றத் தேர்தலுக்கும் தேர்தலை கடந்தும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
உறுப்பினர் சேர்க்கையில் போலி வாக்காளர் சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை இணைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் விவரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுகிறது. எந்தெந்த வாக்குச்சாவடிகளில் நாம் வழங்கிய நடைமுறையை சரியாக கடைபிடிக்கவில்லையெனில் அங்கெல்லாம் மீண்டும் முதலில் இருந்து தொடங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
- கூட்டத்தில் 75 மாவட்ட கழக செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
சென்னை:
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொடங்கியது.
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 75 மாவட்ட கழக செயலாளர்கள், பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, கு.க.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை இந்த ஆண்டு பிரமாண்டமாக கொண்டாடுவது, பாராளுமன்ற தேர்தல் பணி குறித்து விரிவாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.
- தி.மு.க. அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
- ஒவ்வொரு பகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும் அந்த பட்டியலை ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் சரி பார்க்க வேண்டும்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது.
இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து வருகிறார்.
அதற்கேற்ப மத்தியில் ஆட்சி நடத்தும் பிரதமர் மோடியையும், பாரதிய ஜனதா கட்சியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என்று பிரதமர் மோடி சொன்ன வாக்குறுதியை ஒவ்வொரு மேடையிலும் பேசி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதையெல்லாம் பிரதமர் நிறைவேற்றினாரா? என்று கேள்வி கேட்டு வருகிறார்.
அது மட்டுமின்றி பா. ஜனதாவின் கடந்த கால தவறுகளை திரும்ப திரும்ப சுட்டிக்காட்டி மக்களிடம் பிரசாரம் செய்து வருகிறார். கட்சி நிர்வாகிகளையும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட அறிவுறுத்தி வருகிறார்.
அந்த வகையில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் கூட்டத்தை மண்டல வாரியாக கூட்டி அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
திருச்சி, ராமேசுவரம், காங்கேயம் ஆகிய ஊர்களில் மண்டல அளவில் (பி.எல்.ஏ.2) வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தையும் நடத்தி உள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்கள் எப்படி செயல்பட வேண் டும் என்பது பற்றியும் சமூக வலைதள பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்தும் அவர் எடுத்துரைத்து வருகிறார்.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் பணிகளை விரைவுப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக இன்று தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தினார்.
காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் அமைச்சர்களும் பங்கேற்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்தபடி காணொலி வாயிலாக இக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம்தான் உள்ளது. இந்த தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும்.
இதற்காக தி.மு.க. அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
ஒவ்வொரு பகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்கள் (பி.எல்.ஏ.2) நியமிக்கப்பட்டிருந்தாலும் அந்த பட்டியலை ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் சரி பார்க்க வேண்டும்.
விறுப்பு வெறுப்புகளை மறந்து கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்ல வேண்டும். அவரவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக செய்து கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் நாம் வெற்றி பெற்றதை விட இந்த பாராளுமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்து 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதற்காக தேர்தல் பணி களை தீவிரப்படுத்துங்கள்.
தொகுதி பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் நடைபெறும் கூட்டங்களில் தவறாது பங்கேற்று கட்சி நிர்வாகிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும். வருகிற தேர்தலில் கழகத்தின் வெற்றியே முக்கியம் என்கின்ற வகையில் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும் என்று அவர் அதிரடியாக உத்தரவிட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக முக்கிய மாவட்டச் செயலாளர்களின் கருத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கேட்டறிந்தார். அப்போது மாவட்டச் செயலாளர்கள் பல்வேறு அறிவுரைகளையும் அவர் வழங்கினார்.
- விறுப்பு வெறுப்புகளை மறந்து கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்ல வேண்டும்.
- வருகிற தேர்தலில் கழகத்தின் வெற்றியே முக்கியம் என்கின்ற வகையில் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் பணிகளை விரைவுப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக இன்று தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தினர்.
காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் 72 மாவட்டச் செயலாளர்களுடன் அமைச்சர்களும், 234 தொகுதி பார்வையாளர்களும் பங்கேற்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்தபடி காணொலி வாயிலாக இக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசிய சில தகவல்கள் வருமாறு:-
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம்தான் உள்ளது. இந்த தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும்.
இதற்காக தி.மு.க. அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
ஒவ்வொரு பகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்கள் (பி.எல்.ஏ.2) நியமிக்கப்பட்டிருந்தாலும் அந்த பட்டியலை ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் சரிபார்க்க வேண்டும்.
விறுப்பு வெறுப்புகளை மறந்து கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்ல வேண்டும். அவரவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக செய்து கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் நாம் வெற்றி பெற்றதை விட இந்த பாராளுமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்து 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதற்காக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துங்கள்.
பாராளுமன்ற தேர்தல் பணி நம்மை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. எனவே விரைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. ஆகவே அனைவரும் தேர்தலுக்காக விரைந்து செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.
தொகுதி பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் நடைபெறும் கூட்டங்களில் தவறாது பங்கேற்று கட்சி நிர்வாகிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும். தொகுதி நிலவரத்தை அவ்வப்போது தலைமைக்கு தெரிவிக்க வேண்டும்.
வருகிற தேர்தலில் கழகத்தின் வெற்றியே முக்கியம் என்கின்ற வகையில் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக முக்கிய மாவட்டச் செயலாளர்களின் கருத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கேட்டறிந்தார். அப்போது மாவட்டச் செயலாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும் அவர் வழங்கினார்.
தேர்தலில் மாவட்டச் செயலாளர்களின் பணி மிக முக்கியமானது. எந்த தொகுதியில் பிரச்சனை நடந்தாலும் அதை மாவட்டச் செயலாளர் சரி செய்ய வேண்டும். தினமும் தொகுதியில் நடக்கும் பிரச்சனைகளை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய வேண்டும்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியை தவிர்த்து அனைத்து இடங்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது.
இந்த முறை 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்திய அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும். பெரிய சக்தியாக உருவெடுக்க முடியும்.
எனவே அதற்காக ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் கடுமையாக பாடுபட வேண்டும். தேர்தலில் நமது வேட்பாளர் யாரேனும் தோல்வி அடைய நேரிட்டால் அதற்கு மாவட்டச் செயலாளர்தான் பொறுப்பேற்க வேண்டும். இந்த விசயத்தில் தயவு தாட்சண்யமின்றி மாவட்டச் செயலாளரை நீக்கவும் தயங்க மாட்டேன்.
இந்த தேர்தலில் தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டு உள்ள பார்வையாளர்கள் புதியவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து அவர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும்.
தொகுதி பார்வையாளர்களுக்கு சரியாக ஒத்துழைக்காத மாவட்டச் செயலாளர்கள் பற்றி புகார் வந்தால் சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு மாற்றப்படுவார்கள்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து பேசினார்.
- தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
- கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் பிரசாரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 30 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களும் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
நாளை நண்பகல் 12 மணிக்கு காணொலி வாயிலாக கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் பிரசாரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
- தனிப்பட்ட விருப்பு வெறுப்பைத் தாண்டி கட்சியோட நலன் முக்கியம். தமிழ்நாட்டோட நலன் முக்கியம்.
- நாட்டோட எதிர்காலம் தான் முக்கியம்னு வெற்றியை நோக்கி வேலை பார்க்க வேண்டும்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் களத்தில் தமிழகம் இன்று காலை முதல் பரபரப்பின் உச்சத்தில் உள்ளது. முதலில் 16 பேர் கொண்ட அ.தி.மு.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன்பிறகு புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
அடுத்ததாக, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க. தேர்தல் அறிக்கை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
இதனை அடுத்து, தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. அப்போது பேசிய மு.க.ஸ்டாலின்,
* ஒரு சட்டமன்றத் தொகுதியில் வாக்கு குறைந்தாலும் மாவட்ட செயலாளர் மற்றும் பொறுப்பு அமைச்சர் தான் பொறுப்பு.
* எந்த இடத்தில் வாக்குக் குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
* தனிப்பட்ட விருப்பு வெறுப்பைத் தாண்டி கட்சியோட நலன் முக்கியம். தமிழ்நாட்டோட நலன் முக்கியம்.
* நாட்டோட எதிர்காலம் தான் முக்கியம்னு வெற்றியை நோக்கி வேலை பார்க்க வேண்டும்.
* வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அரவணைத்து அழைத்து சென்று வாக்கு சேகரிக்க வேண்டும்.
* தேர்தலுக்குப் பிறகு ஒன்றிய- நகரம்- பகுதி- பேரூர் அளவில் வாக்கு வித்தியாசத்தின் பட்டியலை எடுக்கப் போகிறேன் எனக் கூறினார்.
- கடந்த 2021-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் செய்யூர் வி.சி. எம்.எல்.ஏ. பாபு 83 ஆயிரம் ஓட்டு பெற்று வெற்றியடைந்தார்.
- ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அதிக ஓட்டு பெற்றுத்தரும் வட்ட கழக செயலாளர்களுக்கு 1 பவுன் தங்க மோதிரம் பரிசளிப்பதாக கூறி வருகின்றனர்.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
ஓட்டு குறைந்தால் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள் பதில் சொல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதன் காரணமாக ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் ஒன்றிய பகுதி கழக செயலாளர்களிடம் அதிக ஓட்டு பெற்றுத் தருமாறு செயல் வீரர்கள் கூட்டத்தில் கூறி வருகின்றனர். அதே போல் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அதிக ஓட்டு பெற்றுத்தரும் வட்ட கழக செயலாளர்களுக்கு 1 பவுன் தங்க மோதிரம் பரிசளிப்பதாக கூறி வருகின்றனர்.
காஞ்சிபுரம் தனி தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து செய்யூர் அருகே உள்ள புத்தூர் கூட்டுச்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் சுந்தர் பேசும் போது கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேசியதாவது:-
கடந்த 2021-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் செய்யூர் வி.சி. எம்.எல்.ஏ. பாபு 83 ஆயிரம் ஓட்டு பெற்று வெற்றியடைந்தார்.
தற்போது நடைபெறும் இந்த பாராளுமன்றத் தேர்தலில் செய்யூர் சட்டசபை தொகுதியில் இருந்து 1 லட்சம் ஓட்டுகள் பெற்றுத் தந்து வேட்பாளர் செல்வத்தை வெற்றி பெற வைத்தால் செய்யூர் எம்.எல்.ஏ.வுக்கு 5 பவுன் நகை வெகுமதியாக வழங்கப்படும் என வாக்குறுதி தருகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதே போல் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் கட்சி மேலிடத்தில் நல்ல பெயர் எடுப்பதற்காக அதிக ஓட்டு பெற்றுத் தரும் ஒன்றிய, நகர செயலாளர்களுக்கு தங்க மோதிரம் தருவதாக கூறி வருவது கட்சி நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஆலோசனை கூட்டத்தில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், கழக வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
- வாக்கு எண்ணிக்கையின் போது தலைமை முகவர்கள், முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
சென்னை:
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்று வருகிறது. கூட்டத்தில், தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும் ஆலோசனை கூட்டத்தில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், கழக வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் போது தலைமை முகவர்கள், முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.






