என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளி வகுப்பறை"
- 2 மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.
- இருவரும் சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள டோனாவூரில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று 9-ம் வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவர் மற்றொரு மாணவரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதில் 2 மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை வகுப்பறைக்கு வந்த மாணவர் தன்னை அவதூறாக பேசிய மாணவரை அரிவாளால் வெட்டினார். இதனை தடுக்கச் சென்ற இன்னொரு மாணவரையும் அந்த மாணவர் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் 2 மாணவர்களுக்கும் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுபற்றி ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவரை பைக்குள் அரிவாளை மறைத்து கொண்டு வந்து சக மாணவர் வெட்டிய இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ‘ப' வடிவ இருக்கை உத்தரவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
- பள்ளிக்கல்வித்துறை அந்த உத்தரவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதாக சமூக வலைதளங்களில் நேற்று செய்திகள் வைரல் ஆகின.
சென்னை:
பள்ளி வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கைகள் கேரள பள்ளிகளில் அமைக்கப்பட்டது. இது ஒரு திரைப்படத்தில் வந்த காட்சியை பின்பற்றி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கேரளாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பள்ளி வகுப்பறைகளில் 'ப' வடிவ இருக்கைகளை அமைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து இருந்தது.
பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து, அரசியல் கட்சியினர் சிலர் திரைப்படத்தை பார்த்து பள்ளிக்கல்வித்துறை சீரழிகிறது என்றும், மாணவ-மாணவிகளுக்கு கழுத்து, முதுகுவலி ஏற்படும் என்றும், உடனடியாக 'ப' வடிவ இருக்கை உத்தரவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அந்த உத்தரவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதாக சமூக வலைதளங்களில் நேற்று செய்திகள் வைரல் ஆகின. ஆனால் அதுபற்றி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'அப்படி எந்த உத்தரவையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிடவில்லை எனவும், அது நிறுத்தி வைத்ததாக வரும் செய்தி முற்றிலும் தவறான தகவல் எனவும், 'ப' வடிவ இருக்கை அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.
- மேல்நிலை குடிநீர் தொட்டியை , தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்
- அறிஞர் அண்ணா அனைத்து வியாபாரிகள் நல சங்கத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவிலில் திருப்பூர் கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அ.லட்சுமணன் முன்னிலையில், பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியை தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார்.
வெள்ளகோவில் பஸ் நிலைய வளாகத்தில் ஆவின் பாலகம், டி. ஆர்.நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பிலான கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியையும், வெள்ளகோவில் நகராட்சி, காடையூரான்வலசில் 15வது நிதி குழு மானியம் 2020-2021 திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டியையும், தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். முன்னதாக அறிஞர் அண்ணா அனைத்து வியாபாரிகள் நல சங்கத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்.
இதில் நகர மன்ற தலைவர் மு .கனியரசி , ஆணையாளர் ஆர்.மோகன் குமார்,திமுக. ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன்வலசு கே.சந்திரசேகரன், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் உட்பட நகர்மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.
- புத்தக பையில் பாம்பு ஒன்று நெளிவதை கண்டு அதிர்ச்சியில் அந்த மாணவர் கூச்சலிட்டார்.
- ஆபத்தை விளைவிக்காது. தவளை, எலிகளை பிடிக்க பள்ளிக்குள் நுழைந்து இருக்கலாம்.
புதுச்சேரி:
புதுச்சேரி நகர பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர் ஒருவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார்.
வகுப்பு தொடங்கியதும் தனது புத்தகப்பையை அந்த மாணவர் எடுக்க முயன்றார். அப்போது புத்தக பையில் பாம்பு ஒன்று நெளிவதை கண்டு அதிர்ச்சியில் அந்த மாணவர் கூச்சலிட்டார்.
அதை கேட்டதும் மற்ற மாணவர்களும், ஆசிரியர்களும் வகுப்பறையில் இருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனே பள்ளி நிர்வாகத்தினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறை ஊழியர்கள் கண்ணதாசன், வேலாயுதம் ஆகியோர் உடனடியாக பள்ளிக்கு விரைந்து வந்து மாணவரின் புத்தகப்பையில் இருந்த பாம்பினை லாவகமாக பிடித்தனர்.
இதன் பின்னரே மாணவர்களும் ஆசிரியர்களும் நிம்மதியடைந்தனர். பின்னர் வழக்கம் போல் வகுப்பு தொடங்கியது.
இது குறித்து வனத்துறை ஊழியர்கள் கூறும் போது பிடிப்பட்ட பாம்பு விஷம் இல்லாத சாரை பாம்பு. வளர்ந்த பெரிய சாரைப் பாம்புகளின் கடி வலி மிகுந்ததாக இருந்தாலும் விஷதன்மை அற்றது. ஆபத்தை விளைவிக்காது. தவளை, எலிகளை பிடிக்க பள்ளிக்குள் நுழைந்து இருக்கலாம். புத்தக பைகளை எடுக்கும் போது மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றனர்.