search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவிலில் பள்ளி வகுப்பறை கட்டும் பணி - அமைச்சர் தொடங்கி வைத்தார்
    X

    வெள்ளகோவிலில் பள்ளி வகுப்பறை கட்டும் பணி - அமைச்சர் தொடங்கி வைத்தார்

    • மேல்நிலை குடிநீர் தொட்டியை , தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்
    • அறிஞர் அண்ணா அனைத்து வியாபாரிகள் நல சங்கத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் திருப்பூர் கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அ.லட்சுமணன் முன்னிலையில், பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியை தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார்.

    வெள்ளகோவில் பஸ் நிலைய வளாகத்தில் ஆவின் பாலகம், டி. ஆர்.நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பிலான கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியையும், வெள்ளகோவில் நகராட்சி, காடையூரான்வலசில் 15வது நிதி குழு மானியம் 2020-2021 திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டியையும், தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். முன்னதாக அறிஞர் அண்ணா அனைத்து வியாபாரிகள் நல சங்கத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்.

    இதில் நகர மன்ற தலைவர் மு .கனியரசி , ஆணையாளர் ஆர்.மோகன் குமார்,திமுக. ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன்வலசு கே.சந்திரசேகரன், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் உட்பட நகர்மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×