என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்வ பெருந்தகை"

    • இந்தியா கூட்டணி வலிமையாக, வலுவாக இருக்கிறது.
    • மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் பா.ஜ.கவினர் கூறுவது போன்று எங்கள் கூட்டணியில் எந்தவித ஓட்டையும் இல்லை.

    கோவை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி வலிமையாக, வலுவாக இருக்கிறது. மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் பா.ஜ.கவினர் கூறுவது போன்று எங்கள் கூட்டணியில் எந்தவித ஓட்டையும் இல்லை. எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது.

    எங்கள் கூட்டணியில் ஏதாவது குழப்பம் ஏற்படும், சிதறும், அதனால் தங்களுக்கு ஆதாயம் ஏற்படும் என அ.தி.மு.க.வும், பா.ஜ.கவும் பகல் கனவு காண்கிறார்கள். ஆனால் எங்கள் கூட்டணியில் எந்தவித குழப்பமும் ஏற்படாது.

    எங்கள் கூட்டணி ஒன்றும் சிதறுவதற்கு நெல்லிக்காய் மூட்டை கிடையாது. இந்த கூட்டணியானது எக்கு கோட்டையாகும். எங்கள் கூட்டணிக்குள் சிறு, சிறு பிரச்சினைகள் இருக்கலாம். அதனை எல்லாம் நாங்களே பேசி தீர்த்து கொள்வோம்.

    தமிழகத்தில் யாரெல்லாம் பாசிச சக்தியோடு இணைந்து இருக்கிறார்களோ, அவர்களை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள். தமிழ் கடவுள் முருகன் புறக்கணிப்பார்.

    தமிழகத்தில் முருகன் மாநாடு நடத்த வேண்டியதற்கான அவசியம் என்ன. எதற்காக நடத்துகிறார்கள். அயோத்தியில் ராமரை நாடினார்கள். ஆனால் அங்கு பா.ஜ.க.வை ராமர் கைவிட்டு விட்டார். பா.ஜ.க கட்சி மக்களை நம்பி இருப்பது இல்லை. மதத்தை வைத்து அரசியல் செய்வது தான் பா.ஜ.கவின் வேலையாக உள்ளது.

    பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவே இல்லை. மணிப்பூருக்கு செல்லாமல் இங்கே இவர்கள் முருகன் மாநாடு நடத்தி விட்டால், அவர்களை முருகன் மன்னித்து விடுவாரா?. மேலும் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியையும் மத்திய அரசு தர மறுக்கிறது.

    மத்தியில் காங்கிரஸ் இருந்தவரை தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தான் இருந்தது. பா.ஜ.க வந்த பிறகு தான் தமிழகத்தில் 3-வது மொழியை திணிக்கிறார்கள்.

    தமிழ் மொழியை நீங்கள் சிதைக்கிறீர்கள். தமிழகத்திற்கு துரோகம் செய்கிறீர்கள். மேலும் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றால் தமிழ் கூடாது சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என கூறுகிறீர்கள்.

    அப்படி இருக்கையில் தமிழ்க்கடவுள் முருகன் உங்களை எப்படி ஏற்றுக்கொள்வார். தமிழ் கடவுள் முருகன் இருக்கிறார் என்றால் வருகிற 2026-ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் உங்களை அவர் சூரசம்ஹாரம் செய்வார். பா.ஜ.க.வினரின் வேஷம் சில மக்களை வேண்டுமானால் ஏமாற்றலாம். ஆனால் முருக கடவுளை ஏமாற்ற முடியாது.

    ஆங்கிலத்திற்கு எதிராக பேசும் அமித்ஷாவின் மகனே, ஆங்கிலேயர் உருவாக்கிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கிறார். ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்கள் தற்போது ஆங்கிலம் பேசி வருகிறார்கள். இவர்கள் ஆங்கிலம் பேசுவது அவர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் அப்படி பேசுகின்றனர். எடப்பாடி பழனிசாமியை பார்த்து அமித்ஷா, இ.பி.எஸ். என்கிறார். அவ்வாறென்றால் அவர் இ.பி.எஸ்.சை அவமானப்படுத்துகிறாரா?.

    விபூதி வைத்ததற்கு எரிச்சல் இருந்திருக்கலாம். அல்லது உபாதை இருக்கலாம். அதனால் அழித்து இருப்பார்கள். அதனை அரசியல் படுத்தக்கூடாது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கூட்டணி கட்சி என்ற ரீதியில் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
    • சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

    பா.ஜனதா, காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளன. ஆனால் தமிழகத்தல் தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கின்றன.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் (12-ந்தேதி) நடைபெறுகிறது.

    தமிழகத்தில் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. எனவே அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ளுமா? புறக்கணிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த நிலையில் கூட்டணி கட்சி என்ற ரீதியில் கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக செல்வ பெருந்தகையிடம் கேட்ட போது, முதல்வர் அழைத்துள்ளார். கலந்து கொள்ளத்தான் வேண்டும். காங்கிரஸ் ஆதரிக்கிறதே என்கிறீர்கள். இதுவும் காங்கிரஸ் கொண்டு வந்ததுதான்.

    கட்சி என்ன நிலைப்பாட்டில் உள்ளதோ அதுவே எங்கள் நிலைப்பாடும். எனவே கூட்டத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டை தெரிவிப்போம் என்றார்.

    இதேபோல் அகில இந்திய அளவில் இந்த இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் கூட்டத்தில் பங்கேற்கிறது.

    இது தொடர்பாக மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணனிடம் கேட்ட போது, நாங்கள் கலந்து கொள்கிறோம். கூட்டத்தில் எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவோம் என்றார்.

    • அரசியலில் அவர் வழி தனி. என் வழி தனி.
    • எங்கள் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள எதிர்ப்பை பற்றி நான் கவலைப்படவில்லை.

    தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வ பெருந்தகை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்து காங்கிரசிலும் உயர்ந்த இடத்துக்கு வந்திருப்பவர். காங்கிரசுக்குள் எதிர்ப்புகளை சமாளித்து வளர்வது சாமானியமல்ல.

    இப்போதும் மாநில தலைவர் பதவி வழங்கப்படலாம் என்ற பேச்சு அடிபட்டதும் அவருக்கு அந்த பொறுப்பை வழங்குவது பொருத்தமாக இருக்காது என்று பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் வழியில் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

    அதே நேரம் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தனது முகநூல் பதிவில் வெளியிட்டுள்ளார்.

    இதுபற்றி அவர் கூறும் போது, "எந்த கட்சியை சார்ந்தவர்கள் என்றாலும் நட்பு வேறு. நட்பு ரீதியாக நாங்கள் பேசிக் கொள்வோம். அரசியலில் அவர் வழி தனி. என் வழி தனி.

    எங்கள் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள எதிர்ப்பை பற்றி நான் கவலைப்படவில்லை. நான் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பொறுப்புக்கும் வரும் போது இப்படித்தான் எதிர்ப்பு வரும். இது பழகிப் போனதுதான்.

    ஆனால் சொந்த கட்சிக்காரர்களே சொந்த கட்சிக்காரர்களை எதிர்ப்பதுதான் கஷ்டமாக உள்ளது. எல்லோரும் செயல்படுங்கள். தேவைகளை கட்சி தலைமையிடம் கேளுங்கள். அதற்கு உரிமை இருக்கிறது.

    ராஜீவை பற்றி, ராகுலை பற்றி சீமான் விமர்சித்தபோது காங்கிரஸ்காரர்கள் எதிர்த்து குரல் கொடுக்க முன்வர வில்லை. ஆனால் சொந்தக் கட்சி காரர்களுக்கு எதிராக குரல் கொடுக்க மட்டும் நான் முந்தி... நீ முந்தி என்று வந்து விடுகிறார்கள். இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?" என்றார்.

    ×