என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய கடலோர காவல்படை"

    • புதிய மங்களூரில் இருந்து 100 நாட்டிகல் மைல் தூரத்தில் படகு மாயமானது.
    • விமானம், ரோந்து படகு மூலம் தேடுதல் வேட்டையில் காவல்படை ஈடுபட்டது.

    ஸ்டீரிங் கியர் பழுது காரணமாக 11 நாட்களாக அரபிக் கடலில் சிக்கித் தவித்த 31 மீனர்களை பத்திரமாக மீட்டதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

    கோவாவைச் சேர்ந்த படகு, புதிய மங்களூரில் இருந்து 100 நாட்டிகல் மைல் தூரத்தில் மாயமானதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கடுமையான கடல் சீற்றம் மற்றும் மோசமான வானிலையை பொருட்படுத்தாமல் கடலோர காவல்படை விமானம் மற்றும் ரோந்து படகுகள் மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று, விமானம் படகு தவித்துக் கொண்டிருந்த இடத்தை கண்டுபிடித்தது.

    பின்னர் வீரர்கள் படகை சென்றடைந்து, முக்கியமான உதவிகளை அளித்து, மற்றொரு படகு உதவியுடன் மீன்படி துறைமுகத்திற்கு பழுதான படகை மீனவர்களுடன் கொண்டு வந்தனர்.

    • கடல் வழியாக ஊடுருவலை தடுக்க தீவிர கண்காணிப்பு.
    • சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு.

    தொண்டி:

    தமிழகத்தில் 180 கி.மீ. நீள கடற்கரை மாவட்டமாக ராமநாதபுரம் விளங்கி வருகிறது. இங்கு ராமநாதபுரம், ஏர்வாடி, கீழக்கரை, ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர்.

    அண்டை நாடான இலங்கை, ராமநாதபுரத்துக்கு கடல் வழியாக 20 மைல் தொலைவில் உள்ளது. எனவே அங்கிருந்து கடத்தலை தடுக்க கடலோர காவல்படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    மேலும் இலங்கையில் இருந்து அகதிகளாகவும் இங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கண்காணிக்கவும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்.பி.பட்டனம் முதல் சாயல்குடி ரோஸ்மா நகர் வரை கடற்கரை உள்ளது. பாக் நீரினை, மன்னார் வளைகுடா பகுதிகளை உள்ளடக்கிய இந்த பகுதியில் அன்னிய ஊடுருவல், கடத்தல்களை தடுக்க தொண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கடலோரப் பகுதியில் 'சஜாக்' எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை கடலோர பாதுகாப்பு குழு போலீசாரால் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது.

    வருடத்திற்கு சுமார் ஏழு முறைக்கு மேல் நடக்கும் இந்த சஜாக் எனப்படும் ஒத்திகை கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ லைத் தடுப்பதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    தற்போது காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிர வாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து தொண்டி கடல் பகுதிக்கு அருகே உள்ள இலங்கை கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் போன்ற அன்னியர்கள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி கடலில் வரும் படகுகளை நிறுத்தி உரிய ஆவணங்கள் உள்ளதா? வேறு ஏதும் கடத்தல் பொருட்கள் உள்ளதா? ஆயு தங்கள் ஏதும் வைக்கப்பட்டு உள்ளதா? என படகுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடல் மார்க்கம் மட்டுமின்றி கிழக்கு கடற்கரை வழியாவும், சாலை வழியாகவும் சோதனைச் சாவடிகளில் தீவிரகண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் ஆரம்பிக்கும் எஸ்.பி.பட்டினம் முதல் தேவி பட்டணம் வரை உள்ள கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குடும்பத்தின் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் துளசி மற்றும் ஏட்டு, போலீசார் கடல் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து கடற்கரை பகுதிக ளில் புதிய நபர்கள் நட மாட்டம் குறித்து மீனவர்கள் உடனடியாக கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

    கடற்கரையில் இருந்து 7 கடல் மைல் தொலைவில் "சஜாக்" பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. மேலும் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவு பகுதியிலும் போலீசார் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.

    • வேகமாக சென்ற படகை துரத்தி பிடித்து சோதனை.
    • கைப்பற்றப்பட்ட பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் ரூ.1.3 கோடி.

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் பகுதியை சேர்ந்த இந்திய கடலோர காவல்படையினர் போதைப் பொருள் தடுப்பு பிரிவுடன் இணைந்து கடலில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ராமேஸ்வரம் அருகே கடலில் சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற படகை அவர்கள் தடுத்தி நிறுத்த முயன்றனர். ஆனால் அதிவேகமாக சென்ற அந்த படகை துரத்தி சென்ற கடலோர காவல்படையினர் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். 


    அந்த படகில் மேற்கொண்ட சோதனையின் போது 8 கோணிப்பைகளில் 300 கிலோ எடையுள்ள கஞ்சாவும், 500 கிராம் எடையுள்ள கஞ்சா எண்ணெயும் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த படகில் இருந்த 4 பேரிடம் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் கஞ்சா எண்ணெயின் சந்தை மதிப்பு சுமார் ரூ.1.3 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

    • பனாமா நாட்டு கொடியுடன் கூடிய ஆராய்ச்சி கப்பல் உதவியை நாடியது
    • முதலுதவி செய்து ஹெலிகாப்டர் மூலம் அழைத்து வரப்பட்டார்

    மும்பை அருகே அரபிக்கடலில் பனாமா நாட்டு கொடியுடன் ஆராய்ச்சி கப்பல் ஒன்று பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது அந்த கப்பலில் இருந்த சீனாவைச் சேர்ந்தவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய கடலோர காவல்படையின் உதவியை நாடினர்.

    மருத்துவ உதவி என்பதால் உடனடியாக சீன நாட்டினர் உயிரை காப்பாற்ற இந்திய கடலோர காவல்படை கடலுக்குள் சென்றனர். தென்மேற்கு பருவமழை காரணமாக, மோசமான வானிலை நிலவியது.

    என்றாலும், கடலோர காவல்படை, அதை எதிர்கொண்டு கப்பலை அடைந்தனர். உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்து, ஹெலிகாப்டர் மூலம் கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர், கப்பல் ஏஜென்டிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    கடலோர காவல்படையின் துரித நடவடிக்கையால் சீன நபரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

    • இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குநரான ராகேஷ் பாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
    • சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சென்னை:

    இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநராக செயல்பட்டவர் ராகேஷ் பால். அவருக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

    இதையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.

    ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்த அவரது உடலுக்கு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார்.

    • இந்திய கடலோர காவல்படை, குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படை இணைந்து ரோந்து பணி.
    • பாகிஸ்தான் படகை மறித்து அதிலிருந்தவர்களை கைது செய்தனர்.

    அகமதாபாத்:

    போதை பொருள் கடத்தல் குறித்து கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், இந்திய கடலோர காவல்படையும், குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படையும் இணைந்து சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் ரோந்து பணியை மேற்கொண்டது. நேற்றிரவு பாகிஸ்தானைச் சேர்ந்த படகு ஒன்று, சந்தேகத்திற்கிடமான வகையில் குஜராத் அருகே கடற் பகுதிக்குள் வந்தது. இதையடுத்து இரண்டு ரோந்து கப்பல்கள் மூலம் அங்கு விரைந்த இந்திய கடலோர காவல் படையினர் அந்த படகை மறித்து அதிலிருந்தவர்களை கைது செய்தனர்.  


    இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் பாகிஸ்தானிலிருந்து படகு மூலம் 40 கிலோ கிராம் எடையுள்ள போதை பொருளை அவர்கள் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. 200 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த போதைப் பொருளை பறிமுதல் செய்த கடலோர காவல்படையினர் மேல் விசாரணைக்காக அந்த படகை ஜக்காவுக்கு கொண்டு சென்றனர்.

    • கடல் கொந்தளிப்பில் மீனவர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • மீட்கப்பட்ட 32 பங்களாதேஷ் மீனவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பு

    கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் போது, சிக்கிக் கொள்ளும் மீனவர்கள் மீட்பு நடவடிக்கைகளில் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து இந்திய கடலோரக் காவல் படை தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த 19 மற்றும் 20 ந் தேதிகளில் மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் இடையே கடலில் பங்களாதேஷ் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் அவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் கடலில் தத்தளித்தவர்களில் 27 மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டனர்.

    மேலும் 5 பேரை இந்திய மீனவர்கள் காப்பாற்றினர். மீட்கப்பட்ட 32 பங்களாதேஷ் மீனவர்களையும் நல்லெண்ண அடிப்படையில் சர்வதேச எல்லையில், பங்களாதேஷ் கடலோரக் காவல் படையிடம் இந்திய கடலோ காவல்படையினர் ஒப்படைத்தனர். பின்னர் தாஜுதீன் கப்பல் மூலம் பங்களாதேஷிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ×