கடலில் தத்தளித்த 32 பங்களாதேஷ் மீனவர்கள் மீட்பு - இந்திய கடலோர காவல்படை நடவடிக்கை

கடல் கொந்தளிப்பில் மீனவர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மீட்கப்பட்ட 32 பங்களாதேஷ் மீனவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பு
பங்காளதேஷ் மீனவர்கள்
பங்காளதேஷ் மீனவர்கள்
Published on

கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் போது, சிக்கிக் கொள்ளும் மீனவர்கள் மீட்பு நடவடிக்கைகளில் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து இந்திய கடலோரக் காவல் படை தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 19 மற்றும் 20 ந் தேதிகளில் மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் இடையே கடலில் பங்களாதேஷ் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் அவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் கடலில் தத்தளித்தவர்களில் 27 மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டனர்.

மேலும் 5 பேரை இந்திய மீனவர்கள் காப்பாற்றினர். மீட்கப்பட்ட 32 பங்களாதேஷ் மீனவர்களையும் நல்லெண்ண அடிப்படையில் சர்வதேச எல்லையில், பங்களாதேஷ் கடலோரக் காவல் படையிடம் இந்திய கடலோ காவல்படையினர் ஒப்படைத்தனர். பின்னர் தாஜுதீன் கப்பல் மூலம் பங்களாதேஷிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com