search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meyor"

    • மேயரிடம் இன்று புகார் அளித்தனர்.
    • நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    கோவை

    கோவை மாநகரா ட்சியில் வாரந்தோ றும் செவ்வாய்க்கிழமை அன்று பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இன்று காலை மேயர் கல்பனா தலைமையில் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது.

    மேயரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாநகராட்சி 83-வது வார்டுக்குட்பட்ட சோமசுந்தரம் ஆலை, காளீஸ்வரா ஆலை பாதையில் உள்ள ரெயில்வே பாலம் அருகில் சிலர் கோழி கழிவுகளை கொட்டிசுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. அதேபோன் அந்த பகுதி முழுவதும் திறந்த வெளி கழிப்பறையாக உள்ளது. அந்த பாதை வழியாக நடக்க முடியாத அளவு துர்நாற்றம் வீசுகிறது. எனவே உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பாதையில் இருபுறமும் கார் மற்றும் லாரிகளை விரிசையாக நிறுத்தி வருவதால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வார்டு பகுதியில் இரவு நேரத்தில் குடிநீர் கொடுப்பதால் இரவு நேரத்தில் கண்வி ழித்திருந்து தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. 10-ல் இருந்து 12 நாட்கள் என்ற நிலையில், குறைந்த இடைவெளியில்த ண்ணீர் கொடுக்கவும் இரவு நேரத்தில் தண்ணீர் தருவதை மாற்றி பகல்நேரத்தில் தண்ணீர் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    மேலும் சொத்து வரி, குடிநீர் வரி, மின்விளக்கு, சாலை வசதி என பொது பிரச்சினைகள் தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட கோரி க்கை மனுக்களை மக்கள் மேயரிடம் அளித்த னர். மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் உடனடியாக மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

    • மாநகராட்சி கூட்டத்திற்கு மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார்.
    • பருவமழை காலங்களில் பாதிக்கப்படாமல் இருக்க மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி யின் கூட்டம் மாநகர கூட்டரங்கில் இன்று காலை நடைபெற்றது. மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார்.

    ஆணையாளர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், பாலகுருசாமி, நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்டமணி,

    அதிகாரிகள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன், மற்றும் கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை கலந்து கொண்டனர். மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் வரவேற்று தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில், மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெறும் திட்டப் பணிகளை, மாநகராட்சிக்கு வருவாய் நிதி இழப்பை ஏற்படுத்தி யவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி நிவாரண நிதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், 15-வது நிதிக்குழு மானியம் மூலம் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்குதல், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 5 பஞ்சாயத்துகளில் ஊராட்சி செயலாளர்களாக இருந்தவர்களுக்கு மாநகராட்சியின் பணி வழங்குதல், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட சங்கரபேரி, முத்தையாபுரம், மீளவிட்டான் உள்ளிட்ட பஞ்சாயத்து பகுதிகளில் பருவமழை காலங்களில் பாதிக்கப்படாமல் இருக்க மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுத்தல், உட்பட வளர்ச்சி பணிகள் குறித்து 16 வகையான பொருள் குறிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகளிடம் மேயர் வலியுறுத்தினார்.
    • மாதாகோவில் திருவிழாவுக்கு முன்பு அப்பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகளை விரைந்து செயல்படுத்துவதற்காக மேயர் ஜெகன் பெரியசாமி தொடர்ந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

    அவர் இரவு நேரத்திலும் மாநகர பகுதிகளில் திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்து களநிலவரங்களை பார்வையிட்டு வருகிறார்.

    நேற்று இரவு தூத்துக்குடி விக்டோரியா சாலை பகுதியில் வடிகால் மற்றும் சாலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.

    பணிகள் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் நடைபெற்று வருவதை தொடர்ந்து அங்கு உள்ள கனரா வங்கி அருகே செல்லும் குடிநீர் குழாய் தடத்தையும், வி.இ.ரோடு, ஜின்பாக்ட்ரி ரோடு, ஆவுடையார்ரோடு, பாலவிநாயகர் ரோடு பகுதியில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    அப்போது பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.மாதாகோவில் திருவிழாவுக்கு முன்பு அப்பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்கும் வகையில் விரைந்து செயல்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி சுற்றுப்பயணத்தின்போது உத்தரவிட்டிருந்தார்.

    அதற்கேற்ப மழைநீர் வடிகால் அமைக்கும் அனைத்து பணிகளையும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இடைவிடாமல் மேற்கொண்டு வருகிறார்.

    குஜராத் மாநிலத்தின் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஷாம்ஜி சவுகான் மற்றும் முன்னாள் மேயர் ராஜ்கோட் அஷோக் டங்கர் ஆகிய இருவரும் இன்று காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். #Gujarat #BJP #Congress
    அகமதாபாத்:

    குஜராத் மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் மாநில தலைவர் அமித் சத்வா, மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் ராஜிவ் சடவ் ஆகியோர் முன்னிலையில், பாஜக கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ ஷாம்ஜி சவுகான், மற்றும் முன்னாள் மேயர் ராஜ்கோட் அஷோக் டங்கர் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் பேசியபோது, மத்தியில் ஆளும் மோடி அரசு, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை எனவும், பாஜக அரசின் இந்த அநீதியை எதிர்த்து போராடவே தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாகவும் இருவரும் தெரிவித்துள்ளனர்.

    தற்போது பாஜகவில் இருந்து விலகியுள்ள முன்னாள் மேயர் ராஜ்கோட் அஷோக் டங்கர் முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #Gujarat #BJP #Congress
    ×