search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி  மாநகராட்சி கூட்டத்தில்  16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
    X

    மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.


    தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

    • மாநகராட்சி கூட்டத்திற்கு மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார்.
    • பருவமழை காலங்களில் பாதிக்கப்படாமல் இருக்க மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி யின் கூட்டம் மாநகர கூட்டரங்கில் இன்று காலை நடைபெற்றது. மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார்.

    ஆணையாளர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், பாலகுருசாமி, நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்டமணி,

    அதிகாரிகள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன், மற்றும் கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை கலந்து கொண்டனர். மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் வரவேற்று தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில், மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெறும் திட்டப் பணிகளை, மாநகராட்சிக்கு வருவாய் நிதி இழப்பை ஏற்படுத்தி யவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி நிவாரண நிதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், 15-வது நிதிக்குழு மானியம் மூலம் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்குதல், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 5 பஞ்சாயத்துகளில் ஊராட்சி செயலாளர்களாக இருந்தவர்களுக்கு மாநகராட்சியின் பணி வழங்குதல், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட சங்கரபேரி, முத்தையாபுரம், மீளவிட்டான் உள்ளிட்ட பஞ்சாயத்து பகுதிகளில் பருவமழை காலங்களில் பாதிக்கப்படாமல் இருக்க மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுத்தல், உட்பட வளர்ச்சி பணிகள் குறித்து 16 வகையான பொருள் குறிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×