என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka Accident"

    • மைசூருவுக்கு சுற்றுலா சென்றபோது விபத்தில் சிக்கி உள்ளனர்.
    • இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    மைசூர்:

    கர்நாடகா மாநிலம் மைசூர்-கொள்ளேகால் சாலையில் இன்று பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த பயங்கர விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கியது. காரில் இருந்த 2 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    விபத்தில் இறந்தவர்களில் சிலர் பெல்லாரி சங்கனக்கல் பகுதியை சேர்ந்தவர்கள். இவர் பெல்லாரி ஊரகத் தொகுதியில் உள்ள சங்கனக்கல்லில் இருந்து மைசூருவுக்கு சுற்றுலா சென்றபோது விபத்தில் சிக்கி உள்ளனர். 

    • ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி, சாலையோரம் நின்ற 5 பேர் மீதும் மோதி கவிழ்ந்தது.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் பீலகி படதின்னி கிராமத்தை சேர்ந்தவர் யங்கப்பா (50). இவரது மனைவி யல்லவ்வா (45). இவர்களுக்கு புந்தலிகா (22) என்ற மகனும், நாகவ்வா (20) என்ற மகளும் உள்ளனர். நாகவ்வாவுக்கு அசோக் (24) என்பவருடன் திருமணமாகி விட்டது. யங்கப்பாவிற்கு சொந்தமான வயல், ஹொன்யாலா கிராஸ் என்ற இடத்தில் உள்ளது.

    இந்த நிலையில் வயலில் வேலை முடிந்ததும், வயலில் இருந்து யங்கப்பா உள்பட 5 பேரும் வெளியே வந்து சாலையோரம் நின்றனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வேகமாக வந்தது. திடீரென லாரியின் பின்பக்க டயர் வெடித்தது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி, சாலையோரம் நின்ற 5 பேர் மீதும் மோதி கவிழ்ந்தது.

    தகவல் அறிந்த பீலகி போலீசார் அங்கு சென்றனர். கவிழ்ந்த லாரி கிரேன் உதவியுடன் தூக்கி நிறுத்தப்பட்டது. இதில் லாரியின் அடியில் சிக்கிய 5 பேரும், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் லாரி ஓட்டுநர் காயத்துடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டம் குமுதா என்ற பகுதியில் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதற்காக தார்வார் பகுதியில் இருந்து ஒரு லாரியில் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு 25 வியாபாரிகள் அதில் பயணித்தனர். இந்த லாரி இன்று அதிகாலை யல்லாப்பூர் தாலுகா பகுதியில் உள்ள அர்பைல் காட் என்ற பகுதியில் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தானது.

    இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த 9 காய்கறி வியாபாரிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மற்ற வியாபாரிகள் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். லாரியின் அடியில் சிக்கி கொண்டதால் அவர்கள் உயிர் பிழைக்க அலறினர்.

    இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து யல்லாபூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதில் விபத்தில் பலியான 9 பேரின் உடல்களையும் போலீசார் போராடி மீட்டனர். பின்னர் படுகாயத்துடன் போராடிய 16 பேரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்தில் பலியான 9 வியாபாரிகளின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுப்பற்றி தெரியவந்ததும் இறந்தவர்களின் உறவினர்கள், மற்றும் சக காய்கறி வியாபாரிகள் ஆஸ்பத்திரியில் திரண்டு உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. இறந்த 9 பேரின் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை.

    அதிகாலை நேரம் என்பதால் கடும் பனிப்பொழிவு காரணமாக இந்த விபத்து நடந்ததா? அல்லது கட்டுப்பாட்டை இழந்து லாரி விபத்தில் சிக்கியதா? என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் போலீசார் விபத்து நடந்த லாரியை மீட்டு போக்குவரத்தை சீர்செய்தனர். அதிகாலையில் நடந்த விபத்தில் 9 வியாபாரிகள் பலியான சம்பவம் கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு PMNRF-ல் இருந்து 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.
    • காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை உதவிக்காக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

    கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டம் குமுதா என்ற பகுதியில் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதற்காக தார்வார் பகுதியில் இருந்து ஒரு லாரியில் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு 25 வியாபாரிகள் அதில் பயணித்தனர். இந்த லாரி இன்று அதிகாலை யல்லாப்பூர் தாலுகா பகுதியில் உள்ள அர்பைல் காட் என்ற பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தானது.

    இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த 10 காய்கறி வியாபாரிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மற்ற வியாபாரிகள் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். லாரியின் அடியில் சிக்கி கொண்டதால் அவர்கள் உயிர் பிழைக்க அலறினர்.

    இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து யல்லாபூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதில் விபத்தில் பலியான 10 பேரின் உடல்களையும் போலீசார் போராடி மீட்டனர். பின்னர் படுகாயத்துடன் போராடிய 15 பேரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் உயிரிழந்தவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் நிவாரணம் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் மிகுந்த கவலை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உள்ளூர் அரசு அதிகாரிகள் பாதிப்படைந்தவர்களுக்கு உதவிபுரிந்து வருகிறார்கள்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு PMNRF-ல் இருந்து 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை உதவிக்காக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் லாரியும் ஆட்டோவும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். #KarnatakaAccident
    மாண்டியா:

    கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் சங்கனஹள்ளி என்ற இடத்தில் நேற்று இரவில் ஆட்டோவில் சிலர் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே பாதையில் வந்த ஒரு லாரி ஆட்டோ மீது திடீரென மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ கடுமையாக சேதம் அடைந்தது.  ஆட்டோவில் பயணித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் துடிதுடித்தனர்.

    இந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு நாகமனகளா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த லாரி நெடுஞ்சாலைப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஒரு கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமானது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விபத்தில் உயிரிழந்த ஆட்டோ டிரைவர் சதீஷ், யரசம்மா, போரலிண்டா, சுரேஷ் மற்றும் தலுர்சாயித் ஆகியோர் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. #KarnatakaAccident
    கர்நாடக மாநிலத்தில் கார் மீது லாரி மோதியதில், தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். #KarnatakaAccident
    பெங்களூரு:

    தமிழகத்தைச் சேர்ந்த சிலர் சுற்றுலா சென்றுவிட்டு கர்நாடக மாநிலம் வழியாக ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். இன்று காலை அவர்கள் சித்ரதுர்கா அருகே ஜவனஹள்ளி என்ற இடத்தில் வந்தபோது, அவர்களின் கார் மீது சரக்கு லாரி மோதியது.

    இந்த விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது. காருக்குள் இருந்த 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் இறந்தவர்கள் ஆம்பூரைச் சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. #KarnatakaAccident

    ×