என் மலர்
இந்தியா

விபத்தில் நொறுங்கிய கார்
கர்நாடகாவில் கோர விபத்து- குழந்தைகள் உள்பட 10 பேர் பலியான சோகம்
- மைசூருவுக்கு சுற்றுலா சென்றபோது விபத்தில் சிக்கி உள்ளனர்.
- இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மைசூர்:
கர்நாடகா மாநிலம் மைசூர்-கொள்ளேகால் சாலையில் இன்று பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த பயங்கர விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கியது. காரில் இருந்த 2 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
விபத்தில் இறந்தவர்களில் சிலர் பெல்லாரி சங்கனக்கல் பகுதியை சேர்ந்தவர்கள். இவர் பெல்லாரி ஊரகத் தொகுதியில் உள்ள சங்கனக்கல்லில் இருந்து மைசூருவுக்கு சுற்றுலா சென்றபோது விபத்தில் சிக்கி உள்ளனர்.
Next Story






