search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Document registration"

    • தொடர்ந்து வரும் நாட்களிலும் பதிவுகள் அதிகரிக்கும் என்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
    • அதிக பட்சமாக ரூ.217 கோடி வருவாய் ஈட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பத்திரப் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொதுவாக ஆண்டு தோறும் தைப்பொங்கலுக்கு பிந்தைய நாட்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும். இதையடுத்து, வருகிற 31-ந் தேதி வரை பதிவுக்கான டோக்கன்களை கூடுதலாக வழங்கும்படி சார்பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த வகையில், போதிய அளவில் தினசரி கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு, பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

    கடந்த 22-ந் தேதி, ஒரேநாளில் தமிழகம் முழுவதும் 21,004 பத்திரப் பதிவுகள் நடைபெற்று ரூ.168.83 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. தொடர்ந்து வரும் நாட்களிலும் பதிவுகள் அதிகரிக்கும் என்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    இந்நிலையில், நேற்று முன்தினம் (24-ந்தேதி) பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 26 ஆயிரம் பத்திரப்பதிவுகள் நடைபெற்றதுடன், அதிக பட்சமாக ரூ.217 கோடி வருவாய் ஈட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வையை தற்போதுள்ள 7 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்க முடிவு.
    • விற்பனை கிரைய ஆவணம் பதிய முத்திரைத் தீர்வை 4 சதவீதம், பதவுக் கட்டணம் 2 சதவீதம் செலுத்தி்னால் போதும்.

    தமிழகத்தில், கட்டடம் மற்றும் அடிநிலம் சேர்ந்த கூட்டு மதிப்பின் அடிப்படையில் ஒரே விற்பனை ஆவணமாகப் பதிவு செய்யும் நடைமுறை வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அடுக்குமாடி குடியிருப்புகளைப் பதியும்போது இனி பிரிபடாத பாக நிலத்திற்கு ஒரு தனி ஆவணம் கட்டடத்திற்கு ஒரு தனி ஆவணம் என இரு ஆவணங்களாகப் பதியப்படும் நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ரூ.50 லட்சம் வரை உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வையை தற்போதுள்ள 7 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ரூ.50 லட்சம் முதல் ரூ.3 கோடி வரையிலான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வையை 7 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ரூ.20 லட்சம் வரையிலான புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவோர் விற்பனை கிரைய ஆவணம் பதிய முத்திரைத் தீர்வை 4 சதவீதம், பதவுக் கட்டணம் 2 சதவீதம் செலுத்தி்னால் போதும்.

    • முதல்வர் தாய் உள்ளத்தோடு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
    • வீட்டுமனைகளுக்கு ரூ. 500 செலுத்தி நில வரையறை செய்து கொள்ள 6 மாத கால அவகாசத்தை உடனே அமல்படுத்த வேண்டும்.

    சென்னை:

    இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலதரகர்கள் சங்க அகில இந்திய தலைவர் விருகை வி.என். கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக அரசுக்கு எப்பொழுதும் நிரந்தர வருவாய் ஈட்டி தரும் தொழிலாக ரியல் எஸ்டேட் தொழில் அமைந்துள்ளது. இந்த தொழிலையே நம்பி செயல்படும் ரியல் எஸ்டேட் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் விதமாக கடந்த 10-ந் தேதி முதல் பத்திரப்பதிவின் சேவை வரிகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை முதல்வர் தாய் உள்ளத்தோடு மறுபரிசீலனை செய்ய வேண்டும்

    பவர் பத்திரத்திற்கான கட்டணம் சொத்து மதிப்பில் ஒரு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதை கிரையப் பத்திரம் செய்யும்போது 7 சதவீத பத்திர கட்டணம் மற்றும் 2 சதவீத பதிவு கட்டணம் இவற்றில் ஒரு சதவீதத்தை குறைத்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். வீட்டுமனைகளுக்கு ரூ. 500 செலுத்தி நில வரையறை செய்து கொள்ள 6 மாத கால அவகாசத்தை உடனே அமல்படுத்த வேண்டும். பழைய வீட்டுமனையில் அமைந்துள்ள குறைந்த அளவில் உள்ள சாலையை ஒட்டி புதிய லே-அவுட் அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    • குடியிருப்போர் நலச்சங்க ஆலோசனை கூட்டம் தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது.
    • வங்கியில் கடன் பெற்று வீடு கட்டி வசித்து வருகிறோம்.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சி காளை பாரதிநகர், வி.பி. கார்டன் பகுதி குடியிருப்போர் நலச்சங்க ஆலோசனை கூட்டம் தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் குடியிருப்போர் 130 பேர்கலந்துகொண்டனர்.

    இதில் பாரதிநகர் பகுதியில் 200 குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளாக மனைப்பிரிவு பெறப்பட்டு வங்கியில் கடன் பெற்று வீடு கட்டி வசித்து வருகிறோம். ஆனால் இந்த பகுதியில் பத்திரப்பதிவை மேற்கொள்ளாமல் தடை செய்யப்பட்டுள்ளதாக சார்பதிவாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சொத்துக்கள் வாங்கவோ, விற்கவோ முடியாத நிலை உள்ளது. புதிய கட்டிடங்கள் கட்ட வங்கியில் கடனுதவி பெற இயலாது. கடன்தொகை முழுவதும் செலுத்தினாலும் பத்திரங்களை வங்கிகளிடமிருந்து திரும்பப்பெற இயலாத நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சார்பதிவாளர், வட்டாட்சியர், மாவட்ட கலெக்டர் ஆகியோர்க ளிடமிருந்து உரிய தகவல் பெற்றுசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • முகூர்த்த நாள் என்பதால் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் கூடினர்.
    • இரவு 8 மணிக்கு மேலும் பத்திரப்பதிவு நடந்தது.

    பல்லடம் :

    பல்லடம் மங்கலம் ரோட்டில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பத்திரம் பதிவு செய்வதற்காக பல்லடம், பொங்கலூர் மற்றும் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பத்திர பதிவு தொடர்பான பல்வேறு பணிகளுக்கு தினமும் இந்த அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த அலுவலகத்தில் தினமும் 100க்கும் அதிகமான பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

    இந்தநிலையில் நேற்று பத்திரப்பதிவு அலுவலகத்தில் முகூர்த்த நாள் என்பதால் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் கூடினர். அவர்களை பத்திரப்பதிவு அலுவலக ஊழியர்கள் முறைப்படுத்தாமல் விட்டதால், அலுவலகத்தினுள் மற்றும் முன்புற வாயில் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து கொண்டனர்.மேலும் அலுவலகத்திற்குள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.நேற்று பத்திரப்பதிவுக்கு 100க்கும் அதிகமானோர் பத்திர பதிவு செய்ய வந்ததால் இரவு 8 மணிக்கு மேலும் பத்திரப்பதிவு நடந்தது .பத்திரப்பதிவுக்கு வந்திருந்த ஒருவர் கூறுகையில், பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடந்த சில நாட்களாகவே மக்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.முறையாக டோக்கன் கொடுத்து பத்திரப்பதிவு செய்தால் ஒரே நேரத்தில் இவ்வளவு பேர் கூட்டமாக இருக்க வேண்டிய அவசியம் இருக்காது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×