பத்திரப்பதிவுக்கான தடையாணையை நீக்க வேண்டும் - குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை

குடியிருப்போர் நலச்சங்க ஆலோசனை கூட்டம் தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது.வங்கியில் கடன் பெற்று வீடு கட்டி வசித்து வருகிறோம்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

அவினாசி :

திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சி காளை பாரதிநகர், வி.பி. கார்டன் பகுதி குடியிருப்போர் நலச்சங்க ஆலோசனை கூட்டம் தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் குடியிருப்போர் 130 பேர்கலந்துகொண்டனர்.

இதில் பாரதிநகர் பகுதியில் 200 குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளாக மனைப்பிரிவு பெறப்பட்டு வங்கியில் கடன் பெற்று வீடு கட்டி வசித்து வருகிறோம். ஆனால் இந்த பகுதியில் பத்திரப்பதிவை மேற்கொள்ளாமல் தடை செய்யப்பட்டுள்ளதாக சார்பதிவாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சொத்துக்கள் வாங்கவோ, விற்கவோ முடியாத நிலை உள்ளது. புதிய கட்டிடங்கள் கட்ட வங்கியில் கடனுதவி பெற இயலாது. கடன்தொகை முழுவதும் செலுத்தினாலும் பத்திரங்களை வங்கிகளிடமிருந்து திரும்பப்பெற இயலாத நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சார்பதிவாளர், வட்டாட்சியர், மாவட்ட கலெக்டர் ஆகியோர்க ளிடமிருந்து உரிய தகவல் பெற்றுசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com