search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரவிலும் நடந்த பத்திரப்பதிவு
    X

    முன்புற வாயில் உள்ளிட்ட இடங்களில் கூட்டமாக அமர்ந்து கொண்டுருந்த பொது மக்களை படத்தில் காணலாம் .

    பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரவிலும் நடந்த பத்திரப்பதிவு

    • முகூர்த்த நாள் என்பதால் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் கூடினர்.
    • இரவு 8 மணிக்கு மேலும் பத்திரப்பதிவு நடந்தது.

    பல்லடம் :

    பல்லடம் மங்கலம் ரோட்டில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பத்திரம் பதிவு செய்வதற்காக பல்லடம், பொங்கலூர் மற்றும் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பத்திர பதிவு தொடர்பான பல்வேறு பணிகளுக்கு தினமும் இந்த அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த அலுவலகத்தில் தினமும் 100க்கும் அதிகமான பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

    இந்தநிலையில் நேற்று பத்திரப்பதிவு அலுவலகத்தில் முகூர்த்த நாள் என்பதால் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் கூடினர். அவர்களை பத்திரப்பதிவு அலுவலக ஊழியர்கள் முறைப்படுத்தாமல் விட்டதால், அலுவலகத்தினுள் மற்றும் முன்புற வாயில் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து கொண்டனர்.மேலும் அலுவலகத்திற்குள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.நேற்று பத்திரப்பதிவுக்கு 100க்கும் அதிகமானோர் பத்திர பதிவு செய்ய வந்ததால் இரவு 8 மணிக்கு மேலும் பத்திரப்பதிவு நடந்தது .பத்திரப்பதிவுக்கு வந்திருந்த ஒருவர் கூறுகையில், பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடந்த சில நாட்களாகவே மக்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.முறையாக டோக்கன் கொடுத்து பத்திரப்பதிவு செய்தால் ஒரே நேரத்தில் இவ்வளவு பேர் கூட்டமாக இருக்க வேண்டிய அவசியம் இருக்காது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×