search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coutrallam"

    • குற்றாலம் பேரூராட்சி பூங்கா பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.

    நெல்லை:

    குற்றாலம் பேரூராட்சி பூங்கா பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது அருகில் விஷ பாட்டிலும் கிடந்தது.

    இதையடுத்து அவரது உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குற்றாலம் மெயின் அருவியின் முன்பு அமைந்துள்ள அருவிக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது
    • தீர்த்தவாரி மண்டபத்தில் வைத்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு பல்வேறு நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.

    தென்காசி:

    குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவில் முக்கிய நிகழ்வான குற்றாலம் மெயின் அருவியின் முன்பு அமைந்துள்ள அருவிக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. தீர்த்தவாரி மண்டபத்தில் வைத்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு பல்வேறு நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • பழைய குற்றாலம் பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் வைத்திருந்த சுமார் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான 3 மோட்டார்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றனர்.
    • புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தாமஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

    தென்காசி:

    குற்றாலத்தை அடுத்த பழைய குற்றாலம் பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் வைத்திருந்த சுமார் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான 3 மோட்டார்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றனர்.

    இதுதொடர்பாக பண்ணை உரிமையாளர் ராதாகிருஷ்ணன் குற்றாலம் போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தாமஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் மின் மோட்டார்களை திருடியது மேலகரம் பகுதியை சேர்ந்த ரகுகுமார்(வயது 23), முருகன் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • ஆலங்குளம் அருகே உள்ள மருதப்பபுரம் மேல தெருவை சேர்ந்தவர் பட்டன் என்ற ரமேஷ்(வயது 50). இவர் மின்வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
    • கடந்த 31-ந்தேதி மதியம் வீட்டில் இருந்த ரமேசுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு ரிஷி கிருஷ்ணன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

    நெல்லை:

    ஆலங்குளம் அருகே உள்ள மருதப்பபுரம் மேல தெருவை சேர்ந்தவர் பட்டன் என்ற ரமேஷ்(வயது 50). இவர் மின்வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

    தற்போது தனது மகன் ரிஷி கிருஷ்ணனுடன் தென்காசி அருகே உள்ள குடியிருப்பு சர்ச் தெருவில் வசித்து வந்தார். சமீப காலமாக அகரக்கட்டு பகுதியில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 31-ந்தேதி மதியம் வீட்டில் இருந்த ரமேசுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு ரிஷி கிருஷ்ணன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். மறுநாள் மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது ரமேஷ் கழிவறையில் பிணமாக கிடந்தார்.

    அவர் கழிவறைக்கு சென்றபோது வழுக்கி விழுந்து இறந்துள்ளார் என்பதை அறிந்த அவரது மகன், குற்றாலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • கேரளா மாநிலம் மூணாறில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார்.
    • இதுதொடர்பாக குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    குற்றாலம் அருகே உள்ள பாட்டபத்து பாரதி வீதியை சேர்ந்தவர் கணேசன்(வயது 64).

    இவர் கேரளா மாநிலம் மூணாறில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த அவர் மனவேதனை அடைந்தார்.

    இதனால் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • நிறைவு விழாவாக திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ரவிமரியா, திரைப்பட பாடகர் வேல்முருகன் கலந்து கொள்ளும் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடத்தப்பட்ட காவடியாட்டம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்பட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் பொதுமக்க ளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

    டி.வி புகழ் நகைச்சுவை நடிகர் மதுரை முத்து, அன்னபாரதி கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சி, திரைப்பட பாடகர் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி கலந்துகொண்ட இன்னிசை நிகழ்ச்சியையும் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

    நிறைவு நாள்

    விமர்சையாக நடை பெற்ற சாரல் திருவிழாவின் நிறைவு நாளான இன்று காலையில் சுற்றுலாத்துறை சார்பில் பழைய கார்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி தொடங்கியது. மேலும் மாலையில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் நெல்லை மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவ-மாணவிகளின் மங்கள இசை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சியும், சுற்றுலா துறை சார்பில் கிராமிய கலை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெறுகிறது.

    நிறைவு விழாவாக திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ரவிமரியா, திரைப்பட பாடகர் வேல்முருகன் கலந்து கொள்ளும் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    நிறைவு விழாவில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வரவேற்று பேசுகிறார். சுற்றுலா பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை, முதன்மை செயலாளர் சந்திரமோகன் தலைமை ஏற்பு உரையும், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பரிசுகள் வழங்கி விழா பேருரையும் ஆற்றுகிறார்.

    சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி சிறப்புரையாற்றுகிறார். மேலும் தென்காசி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை ஆற்றுகின்றனர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் நன்றி கூறுகிறார்.

    • "கொழு கொழு குழந்தை போட்டி" சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் நடைபெற்றது. அதில் 56 குழந்தைகள் கலந்து கொண்டனர்.
    • சாரல் திருவிழாவில் இன்று விளையாட்டு துறை சார்பில் பளுதூக்குதல், வலுதூக்குதல் மற்றும் ஆணழகன் போட்டி, யோகா போட்டி ஆகியவை நடைபெற்றது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தின் பொதிகை மலை சாரலில் மாவட்ட கலெக்டரின் முயற்சியால் சாரல் திருவிழா 2022 குற்றாலத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

    கொழு கொழு குழந்தை போட்டி

    நிகழ்வின் ஒரு வண்ணமாக ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நேற்று "கொழு கொழு குழந்தை போட்டி" சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் நடைபெற்றது. அதில் 56 குழந்தைகள் கலந்து கொண்டனர்.

    அவர்களின் எடை, உயரம் மற்றும் இயக்க தசை செயல்பாடுகள் மூலம் முதல் மூன்று குழந்தைகளை மாவட்ட திட்ட அலுவலர் முத்துமாரியப்பன் தலைமையில், நடுவர்களாக மருத்துவ அலுவலர் சரவணன் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், கடையநல்லூர் பர்கத் சுல்தானா ஆகியோரால் ஒருங்கிணைத்து தேர்வு செய்யபட்டது.

    இதில் கீழப்பாவூர் வட்டாரத்திற்குட்பட்ட மணிராஜ், முருகலட்சுமி தம்பதியினரின் குழந்தை சிவாத்மிகாதங்கம் முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், கடையநல்லூர் வட்டாரத்திற்குட்பட்ட சாமிதுறை-இசக்கியம்மாள் தம்பதியினரின் குழந்தை கோகுல் இரண்டாம் பரிசு ரூ.5 ஆயிரமும், செங்கோட்டை வட்டாரத்திற்குட்பட்ட சார்புதீன்-நஸ்ரின் பாத்திமா தம்பதியினரின் குழந்தை ஆபிக் அகமது மூன்றாம் பரிசு ரூ.2,500 பெற்றனர்.

    இன்றைய நிகழ்ச்சிகள்

    சாரல் திருவிழாவில் இன்று விளையாட்டு துறை சார்பில் பளுதூக்குதல், வலுதூக்குதல் மற்றும் ஆணழகன் போட்டி, யோகா போட்டி ஆகியவை நடைபெற்றது.

    மாலையில் மதுரை பனையூர் ராஜா குழுவினரின் தப்பாட்டம் நிகழ்ச்சியும், நெல்லை ஸ்ரீராம் நாட்டியாலயா வழங்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி, சென்னை பாரதி திருமகன் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி,காவல்துறை இசை மேள அணிவகுப்பு, கேரள மாநில கலைஞர்களின் நிகழ்ச்சி, சங்கரன்கோவில் ஆனந்தராஜ் குழுவினரின் ஓயிலாட்டம், கலைமாமணி ஜெயக்குமார் வழங்கும் சாக்சபோன் நிகழ்ச்சி,திரைப்பட பின்னணி பாடகர் மற்றும் நடிகர் கானா பாலா கலந்துகொள்ளும் நெல்லை வானவில் திரை இசைக்குழு வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.

    • பழைய குற்றாலம் செல்லும் சாலையில் ஒரு தனியார் விடுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அவர்களிடம் இருந்து சீட்டு கட்டு, ரூ.6,500 பணம் மற்றும் சில டோக்கன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நெல்லை:

    குற்றாலம் மெயின்ரோட்டில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் சாலையில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதிநாதன் தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர்.

    அங்குள்ள ஒரு அறைக்கு சென்றபோது 4 பேர் பணம் வைத்து சூதாடியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கருப்பையா(வயது 48), எம்.கருப்பையா(62), ரமேஷ்(49), கார்த்திகேயன்(38) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டு கட்டு, ரூ.6,500 பணம் மற்றும் சில டோக்கன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×