குற்றாலம் தனியார் விடுதியில் சூதாடிய 4 பேர் கைது

பழைய குற்றாலம் செல்லும் சாலையில் ஒரு தனியார் விடுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அவர்களிடம் இருந்து சீட்டு கட்டு, ரூ.6,500 பணம் மற்றும் சில டோக்கன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குற்றாலம் தனியார் விடுதியில் சூதாடிய 4 பேர் கைது
Published on

நெல்லை:

குற்றாலம் மெயின்ரோட்டில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் சாலையில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதிநாதன் தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர்.

அங்குள்ள ஒரு அறைக்கு சென்றபோது 4 பேர் பணம் வைத்து சூதாடியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கருப்பையா(வயது 48), எம்.கருப்பையா(62), ரமேஷ்(49), கார்த்திகேயன்(38) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டு கட்டு, ரூ.6,500 பணம் மற்றும் சில டோக்கன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com