குற்றாலம் அருகே கோழிப்பண்ணையில் மோட்டார் திருடிய 2 பேர் கைது

பழைய குற்றாலம் பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் வைத்திருந்த சுமார் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான 3 மோட்டார்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றனர்.புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தாமஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
குற்றாலம் அருகே  கோழிப்பண்ணையில் மோட்டார் திருடிய 2 பேர் கைது
Published on

தென்காசி:

குற்றாலத்தை அடுத்த பழைய குற்றாலம் பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் வைத்திருந்த சுமார் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான 3 மோட்டார்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றனர்.

இதுதொடர்பாக பண்ணை உரிமையாளர் ராதாகிருஷ்ணன் குற்றாலம் போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தாமஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் மின் மோட்டார்களை திருடியது மேலகரம் பகுதியை சேர்ந்த ரகுகுமார்(வயது 23), முருகன் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com