என் மலர்
நீங்கள் தேடியது "Rohan Bopanna"
- பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது.
- இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
பார்சிலோனா:
ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி, மெக்சிகோவின் சாண்டியாகோ - பிரான்சின் வாசலின் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
- இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
வாஷிங்டன்:
இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி, நெதர்லாந்தின் வெஸ்லே- பிரிட்டனின் நியல் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-3 என முதல் செட்டை கைப்பற்றியது. இரண்டாவது செட்டை 2-6 என இழந்தது. வெற்றியாளரை நிர்ணயைக்கும் மூன்றாவது செட்டை 10-8 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது.
இதன்மூலம் ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து பெற்ற தொடரில் கோப்பை வென்ற மூத்த வீரர் என்ற சாதனையை போபண்ணா படைத்துள்ளார்.
- சானியா மிர்சா, அடுத்த மாதத்துடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
- தனது கடைசி கிராண்ட்சிலாம் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி நடந்தது.
இதில் இந்தியாவின் சானியா மிர்சா-போபண்ணா ஜோடி பிரேசிலின் லூசா ஸ்டெபானி-ரபெல் மேட்டோஸ் ஜோடியுடன் மோதியது. இதில் சானியா மிர்சா-போபண்ணா ஜோடி 6-7 (2-7), 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தது. பிரேசில் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.

சானியா மிர்சா, அடுத்த மாதத்துடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது கடைசி கிராண்ட்சிலாம் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார்.
"My professional career started in Melbourne… I couldn't think of a better arena to finish my [Grand Slam] career at."
— #AusOpen (@AustralianOpen) January 27, 2023
We love you, Sania ❤️@MirzaSania • #AusOpen • #AO2023 pic.twitter.com/E0dNogh1d0
தோல்விக்கு பிறகு சானியா மிர்சா கூறும் போது, எனது டென்னிஸ் வாழ்க்கை மெல்போர்னில் தொடங்கியது. எனது கிராண்ட்சிலாம் வாழ்க்கையை முடிக்க இதை விட ஒரு சிறந்த அரங்கை என்னால் நினைக்க முடியவில்லை என்றார்.
அப்போது சானியா மிர்சா உணர்ச்சி வசத்தில் கண் கலங்கினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரை இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. இதில் சிட்சிபாஸ் (கிரீஸ்)-கரன் கச்சனோவ் (ரஷியா), ஜோகோவிச் (செர்பியா)-டாமி பால் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை நடக்கும் இறுதி போட்டியில் சபலென்கா (பெலாரஸ்)-ரைபகினா (கஜகஸ்தான்) பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
- 3-வது தரவரிசையில் உள்ள நீல் ஸ்குப்ஸ்கி-டெசிரே க்ராவ்சிக் ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது.
- போட்டிக்கு முன்னதாக இது தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் என்று சானியா அறிவித்திருந்தார்.
ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதியில் 7-6, 6-7 (10-6) என்ற கணக்கில் 3-வது தரவரிசையில் உள்ள கிரேட் பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி-அமெரிக்காவின் டெசிரே க்ராவ்சிக் ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது.
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சானியா இது தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
- காலிறுதியில் ஆடவிருந்த ஜெலேனா ஒஸ்டாபென்கோ-டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடி வாக் ஓவர் கொடுத்து வெளியேறியது.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் இந்தியா சார்பில் கலப்பு இரட்டை பிரிவில் முன்னணி வீராங்கனை சானியா மிர்சாவும், ரோகன் போபண்ணாவும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
2-வது சுற்று ஆட்டத்தில் அரியெல் பெஹர்(உருகுவே)-மகோட்டோ நினொமியா(ஜப்பான்) ஜோடியுடன் மோதிய சானியா-ரோகன் போபண்ணா ஜோடி 6-4, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.
இந்நிலையில், காலிறுதியில் விளையாட இருந்த ஜெலேனா ஒஸ்டாபென்கோ-டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடி வாக் ஓவர் கொடுத்து வெளியேறியதால் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதிக்குள் நுழைந்தது.
- இந்திய ஜோடி 6-4, 7-6 (9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
- சானியா மற்றும் போபண்ணா ஜோடி காலிறுதிச் சுற்றில் லாட்வியன் -ஸ்பானிஷ் ஜோடியை எதிர் கொள்கிறது.
ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி 6-4, 7-6 (9) என்ற செட் கணக்கில் உருகுவேயின் ஏரியல் பெஹர் மற்றும் ஜப்பானின் மகோடோ நினோமியா ஜோடியை வீழ்த்தியது.
சானியா மற்றும் போபண்ணா ஜோடி நாளை நடைபெறவுள்ள காலிறுதிச் சுற்றில் லாட்வியன் -ஸ்பானிஷ் ஜோடியான ஜெலினா ஓஸ்டாபென்கோ மற்றும் டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடியை எதிர்கொள்கிறது.
- செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் 4ம் சுற்றுக்கு முன்னேறினார்
- மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று போட்டியில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச், பல்கேரியா நாட்டை சேர்ந்த கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 7-6 ,6-3, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
டை பிரேக்கர் வரை நீடித்த முதல் செட்டை ஜோகோவிச் கைப்பற்றியபோது, காயம் காரணமாக அவதிப்பட்டார். தொடை தசைநாரில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை வழங்கப்பட்டது. இவ்வாறு இரண்டு முறை சிகிச்சை பெற்ற நிலையிலும், அடுத்தடுத்த 2 செட்களையும் வசமாக்கி வெற்றி பெற்றுள்ளார் ஜோகோவிச். இதனால் அவர் 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது. இவர்கள், ஆஸ்திரேலியாவின் ஜெய்மீ போர்லிஸ்- லூக் சேவில்லே ஜோடியை 7-5, 6-3 என்ற நேர்செட்களில் வீழ்த்தி, 2ம் சுற்றுக்கு முன்னேறினர். இதேபோல மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.
ஸ்ரீராம் பாலாஜி-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, 7-6 (6), 2-6, 6-4 என்ற செட் கணக்கில் 5ம் தரநிலை ஜோடியான இவான் டோடிக் மற்றும் ஆஸ்டின் கிராஜிசெக் ஜோடியைத் தோற்கடித்தது.
ஜூனியர் பிரிவில், இந்தியாவின் இளம் வீரர் மனாஸ் தாம்னே (வயது 15), ஆஸ்திரேலியாவின் ஜெர்மி ஜாங்கை 6-3, 6-3 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்தது. இதில் நேற்று நடந்த இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- திவிஜ் சரண் ஜோடி, இங்கிலாந்தின் லுக் பாம்பிரிட்ஜ்-ஜானி ஓமரா இணையை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆடிய போபண்ணா- திவிஜ் சரண் கூட்டணி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 38 வயதான போபண்ணா வென்ற 18-வது சர்வதேச இரட்டையர் பட்டம் இதுவாகும். திவிஜ் சரணுக்கு இது 4-வது பட்டமாக அமைந்தது.

இருவரும் 2018-ம் ஆண்டில் எந்த கோப்பையும் வெல்லாத நிலையில், இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கி அசத்தி இருக்கிறார்கள். 32 வயதான திவிஜ் சரண் கூறும் போது, ‘நிச்சயம் எனக்கு இது சிறப்பான வெற்றி தான். உள்ளூரில் நான் வென்ற முதல் ஏ.டி.பி. பட்டம் இதுவாகும். இது, புதிய சீசனுக்கு எனக்கு நிறைய நம்பிக்கையை தந்துள்ளது’ என்று குறிப்பிட்டார். போபண்ணா- திவிஜ் சரண் இணைக்கு 250 தரவரிசை புள்ளிகளுடன், ரூ.20 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. ஆஸ்திரேலிய ஓபனிலும் இவர்கள் இணைந்து விளையாட இருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து நடந்த ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), 100-ம் நிலை வீரரான இவா கார்லோவிச்சை (குரோஷியா) சந்தித்தார். இதில் ஆண்டர்சனுக்கு எல்லா வகையிலும் கார்லோவிச் கடும் நெருக்கடி கொடுத்ததால் ஆட்டம் நீயா-நானா என்று பரபரப்புடன் நகர்ந்தது. டைபிரேக்கர் வரை சென்ற முதல் இரு செட்டுகளில் இருவரும் தலா ஒன்றை வசப்படுத்தினர். இதே போல் கடைசி செட்டிலும் அனல் பறந்தது.
இருவரும் தங்களது சர்வீஸ்களை புள்ளிகளாக மாற்றுவதில் மட்டும் கவனமாக இருந்தனர். ஆண்டர்சன் 6-5 என்று முன்னிலை பெற்று சாம்பியன் பட்டத்திற்குரிய புள்ளியை நெருங்கினார். ஆனால் எதிராளியின் இரண்டு சாம்பியன்ஷிப் புள்ளி வாய்ப்பில் இருந்து தன்னை காப்பாற்றி கொண்ட கார்லோவிச் இந்த செட்டையும் டைபிரேக்கருக்கு கொண்டு சென்றார். டைபிரேக்கரில் தொடக்கத்தில் கார்லோவிச்சின் (5-2) கை ஓங்கினாலும், அதன் பிறகு ஆண்டர்சன் சுதாரித்துக் கொண்டு மீண்டு வெற்றிக்கனியை பறித்தார்.
2 மணி 44 நிமிடங்கள் நடந்த திரிலிங்கான இந்த மோதலில் ஆண்டர்சன் 7-6 (4), 6-7 (2), 7-6 (5) என்ற செட் கணக்கில் கார்லோவிச்சை சாய்த்து பட்டத்தை சொந்தமாக்கினார். இது அவரது 6-வது பட்டமாகும். 39 வயதான கார்லோவிச் இந்த ஆட்டத்தில் மொத்தம் 36 ஏஸ் சர்வீஸ்கள் வீசியது குறிப்பிடத்தக்கது. வாகை சூடிய ஆண்டர்சனுக்கு ரூ.62 லட்சமும், 2-வது இடம் பெற்ற கார்லோவிச்சுக்கு ரூ.33 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. #MaharashtraOpen #RohanBopanna #DivijSharan
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புனே நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் ஸ்பெயினின் ஜாமி முனாரை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். பெல்ஜியம் வீரர் ஸ்டீவ் டார்சிஸ் 7-5, 6-2 என்ற நேர் செட்டில் மாலெக் ஜாஸிரியை (துனிசியா) விரட்டியடித்தார். குரோஷிய வீரர் இவோ கார்லோவிச் தன்னை எதிர்த்த எர்னஸ்ட்ஸ் குல்பிசை (லாத்வியா) 7-6 (5), 7-6 (5) என்ற நேர் செட்டில் தோற்கடித்தார்.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த ஒற்றையர் 2-வது சுற்றில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் 7-6 (6) 6-7 (5), 3-6 என்ற செட் கணக்கில் துனிசியாவின் ஜாஸிரியிடம் வீழ்ந்தார். இத்துடன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
அதே சமயம் இரட்டையர் பிரிவின் கால்இறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா -திவிஜ் சரண் ஜோடி 6-7 (4-7), 6-4, 17-15 என்ற செட் கணக்கில் லியாண்டர் பெயஸ் (இந்தியா), மிக்யூல் ஏஞ்சல் ரியேஸ் (மெக்சியா) இணையை வெளியேற்றி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. 6 முறை ‘மேட்ச் பாயிண்ட்’ ஆபத்தில் இருந்து தப்பித்த போபண்ணா கூட்டணி இந்த வெற்றியை பெற 1 மணி 45 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது. ‘இது போன்ற மிகவும் நெருக்கமான போட்டியை ஒரு போதும் விளையாடியதில்லை’ என்று வெற்றிக்கு பிறகு போபண்ணா கூறினார்.
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று ஆடவருக்கான இரட்டையர் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- திவிஜ் சரண் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதன்மூலம் ஆசிய போட்டியில் இந்தியா 6 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. இதுதவிர 4 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியது. #AsianGames2018 #RohanBopanna