என் மலர்

  டென்னிஸ்

  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சானியா-போபண்ணா ஜோடி வெற்றி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் 4ம் சுற்றுக்கு முன்னேறினார்
  • மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

  மெல்போர்ன்:

  கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

  இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று போட்டியில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச், பல்கேரியா நாட்டை சேர்ந்த கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 7-6 ,6-3, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

  டை பிரேக்கர் வரை நீடித்த முதல் செட்டை ஜோகோவிச் கைப்பற்றியபோது, காயம் காரணமாக அவதிப்பட்டார். தொடை தசைநாரில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை வழங்கப்பட்டது. இவ்வாறு இரண்டு முறை சிகிச்சை பெற்ற நிலையிலும், அடுத்தடுத்த 2 செட்களையும் வசமாக்கி வெற்றி பெற்றுள்ளார் ஜோகோவிச். இதனால் அவர் 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

  கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது. இவர்கள், ஆஸ்திரேலியாவின் ஜெய்மீ போர்லிஸ்- லூக் சேவில்லே ஜோடியை 7-5, 6-3 என்ற நேர்செட்களில் வீழ்த்தி, 2ம் சுற்றுக்கு முன்னேறினர். இதேபோல மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

  ஸ்ரீராம் பாலாஜி-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, 7-6 (6), 2-6, 6-4 என்ற செட் கணக்கில் 5ம் தரநிலை ஜோடியான இவான் டோடிக் மற்றும் ஆஸ்டின் கிராஜிசெக் ஜோடியைத் தோற்கடித்தது.

  ஜூனியர் பிரிவில், இந்தியாவின் இளம் வீரர் மனாஸ் தாம்னே (வயது 15), ஆஸ்திரேலியாவின் ஜெர்மி ஜாங்கை 6-3, 6-3 என்ற கணக்கில் தோற்கடித்தார்.

  Next Story
  ×