search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanji"

    • சிறுதானியங்களை அடிக்கடி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
    • இந்த கஞ்சியை குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் அருந்தலாம்.

    தேவையான பொருட்கள்:

    சாமை, திணை, வரகு, சிவப்பரிசி, பாசிப்பருப்பு தலா - 50 கிராம்,

    மோர் - 3 கப்,

    தண்ணீர் - 4 கப்,

    சின்ன வெங்காயம் - 8,

    சீரகம் - 1 டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - தேவையான அளவு,

    பச்சைமிளகாய் - 3,

    கடுகு - 1 டீஸ்பூன்,

    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,

    கொத்தமல்லித்தழை,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    * சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கொத்தமல்லிதழை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சாமை, தினை, வரகு, சிவப்பரிசி, பச்சைப்பருப்பு இவற்றைத் தனித்தனியாக கடாயில் வறுத்து சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு குருணையாகப் பொடிக்க வேண்டும்.

    * இதில் 4 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரில் 3 விசில் வந்ததும் இறக்கவும்.

    * கடாயில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பச்சை மிளகாய் தாளித்து சின்ன வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கி, கஞ்சியில் கொட்டவும்.

    * பிறகு அதில் மோர், கொத்தமல்லிதழை சேர்த்து நன்றாக கலந்து பருகவும்.

    * உடலுக்கு ஆரோக்கியம் இந்த கஞ்சியை குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் அருந்தலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு சத்தான ரெசிபிகளை செய்து கொடுப்பது உடலுக்கு நல்லது.
    • பாசிப்பயறில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    பாசிப்பயறு - அரை கப்

    கருப்பட்டி - 300 கிராம்

    சுக்குத்தூள் - அரை டீஸ்பூன்

    ஏலக்காய் - 3

    உப்பு - கால் டீஸ்பூன்

    செய்முறை:

    பாசிப்பயறை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.

    வெந்ததில் பாதியை எடுத்து தண்ணீர் வடித்து மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.

    கருப்பட்டியைத் தூளாக்கி கனமான அடிப்பகுதியுள்ள வாணலியில் சேர்த்து 300 மில்லி தண்ணீர் விட்டுக் காய்ச்சவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.

    வடிக்கட்டிய கருப்பட்டி சிரப்பை மீண்டும் அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். இத்துடன் சுக்குத்தூள், ஏலக்காய் சேர்த்து நன்கு கலக்கவும்.

    இதில் வேகவைத்து அரைத்த பயறுக் கலவையைச் சேர்த்து நன்கு கலக்கவும். தேவையெனில், சிறிது தண்ணீர் ஊற்றி, கஞ்சி பதத்துக்குக் கொண்டு வரவும்.

    4 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைத்து உப்பு சேர்த்துக் கஞ்சியைக் கொதிக்க விடவும்.

    அடுத்து அதில் வெந்த பயறைச் சேர்த்துக் கலந்து இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பிலிருந்து இறக்கினால், சுவையான கருப்பட்டிக் கஞ்சி தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கம்பில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.
    • இரத்தசோகை உள்ளவர்கள் இந்த கஞ்சியை குடித்து வரலாம்.

    தேவையான பொருட்கள்:

    கம்பு - அரை கப்,

    கேரட் - 2,

    பீன்ஸ் - 50 கிராம்,

    காலிஃப்ளவர் - ஒன்று சிறியது,

    பட்டாணி - கால் கப்,

    பட்டை - 2,

    ஏலக்காய் - 4,

    கிராம்பு - 1,

    பிரியாணி இலை - 1,

    நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்,

    பூண்டு - 5 பல்,

    கடுகு - அரை ஸ்பூன்,

    மிளகு - அரை ஸ்பூன்,

    சீரகம் - அரை ஸ்பூன்,

    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,

    மிளகுத்தூள் - ஒரு ஸ்பூன்,

    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    எலுமிச்சை பழம் - பாதி அளவு,

    உப்பு - 2 ஸ்பூன்.

    செய்முறை:

    கேரட், பீன்ஸ், கொத்தமல்லி தழை, காலிஃப்ளவரை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கம்பினை நன்றாக சுத்தம் செய்து, ஊற வைத்துக் கொள்ளவேண்டும்.

    பூண்டை நசுக்கி கொள்ளவும்.

    ஊறவைத்த கம்பை குக்கரில் போட்டு அதோடு கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், பட்டாணி, இரண்டு கப் தண்ணீர், மிளகு, சீரகம், ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, இரண்டு விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

    குக்கரில் பிரஷர் குறைந்ததும், காய்கறிகளில் சேர்ந்துள்ள பிரியாணி இலையை மட்டும் தனியாக எடுத்துவிட்டு, மற்ற பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு மற்றும் நசுக்கிய பூண்டை சேர்த்து தாளித்த பின்னர் அரைத்து வைத்துள்ள கஞ்சை சேர்த்து கொதிக்க விடவும்.

    கஞ்சி நன்றாக கொதித்தவுடன் இவற்றில் எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள், கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி விட வேண்டும்.

    அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான கம்பு வெஜிடபிள் கஞ்சி தயார் ஆகிவிடும்.

    கம்பு வெஜிடபிள் கஞ்சி பயன்கள்: கம்பு உடல் சூட்டைத் தணித்து, குளிர்ச்சியடைய செய்கிறது. கம்பில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு துணைபுரிகிறது. இரத்தசோகை உள்ளவர்கள் இந்த கஞ்சியை குடித்து வர மிகவும் ஆரோக்கியமாக இருக்கமுடியும். தூக்கமின்மை, உடல் சோர்வு உடையவர்கள் இதனை சாப்பிட புத்துணர்ச்சி கிடைக்கும். குழந்தைகள் முடிகள் பெரியவர்கள் வரை இந்த கம்பு வெஜிடேபிள் கஞ்சியை அடிக்கடி குடித்து வர உடல் மிகவும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

    • சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
    • சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்:

    சாமை - அரை கப்

    பயத்தம் பருப்பு - அரை கப்

    வெங்காயம் - 2

    பச்சை மிளகாய் - 2

    கேரட், பீன்ஸ் - 1/4 கப்

    இஞ்சி - பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்

    தேங்காய் பால் - 100 மில்லி

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்

    தனியாத்தூள் - 1/4 டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

    உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

    தாளிக்க

    பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை,

    கடுகு - சிறிதளவு

    செய்முறை:

    சாமை அரிசியை நன்றாக கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்.

    பயத்தம் பருப்பை வறுத்து கொர கொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் கேரட், பீன்ஸ் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கிய பின், அரை லிட்டர் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    பிறகு அதில் பயத்தம் பருப்பு, சாமை, மிளகுத்தூள், தனியாத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். பிரஷர் குறைந்தும், மூடியைத் திறந்து தேங்காய்பால் சேர்த்து நன்கு கலக்கவும்.

    பின்னர் மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து சூடுபடுத்தி உடன் எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள் சேர்த்து, உடனே அடுப்பிலிருந்து இறக்கவும்.

    சுவையான சாமை காய்கறி கஞ்சி தயார்.

    • தினமும் கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
    • கேழ்வரகில் சத்தான பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு மாவு - 3 ஸ்பூன்,

    தண்ணீர் - 4 கப்,

    கேரட் - 1

    பசலை கீரை - அரை கப்

    பச்சை பட்டாணி - கால் கப்

    காலிஃப்ளவர் - சிறிதளவு

    துருவிய கோஸ் - கால் கப்

    பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்

    சோயா பீன்ஸ் - கால் கப்

    பீன்ஸ் - கால் கப்

    எலுமிச்சை பழம் - பாதி

    உப்பு - தேவைக்கு

    மிளகு தூள் - தேவைக்கு

    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    நெய் - 1 ஸ்பூன்

    செய்முறை

    * கடாயில் நெய் ஊற்றி சூடானதும் கேழ்வரகு மாவை போட்டு வறுத்து கொள்ளவும்.

    * பீன்ஸ், கேரட், பசலைக்கீரை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * காலிஃப்ளவரை சிறிய பூக்களாக உதிர்த்து வைக்கவும்.

    * கேழ்வரகு மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் நெய், பீன்ஸ், கேரட், பசலைக்கீரை, காலிஃப்ளவர், சோயா பீன்ஸ், துருவிய கோஸ், பச்சை பட்டாணி, உப்பு சேர்த்து மிதமான தீயில் 12 நிமிடம் கொதிக்க விடவும்.

    * அடுத்து அதில் நறுக்கிய பூண்டை சேர்த்து கொதிக்கவிடவும்.

    * கரைத்த வைத்த கேழ்வரகு கரைசலை ஊற்றி(கட்டி விழக்கூடாது) நன்றாக கலக்கி விடவும். அதை 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

    * அடுத்து அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை, எலுமிச்சை சாறு சேர்த்து 1 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.

    * இப்போது சூப்பரான கேழ்வரகு - காய்கறி சூப் ரெடி.

    * விருப்பான எல்லா காய்கறிகளையும் இதில் சேர்த்து கொள்ளலாம்.

    • இந்த கஞ்சியை செய்வது மிகவும் சுலபம்.
    • இந்த கஞ்சி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    அரிசி - 2 கப்

    வறுத்த சிறு பருப்பு - 1 கப்

    எலும்பில்லாத மட்டன் - அரை கிலோ

    பெ.வெங்காயம் - 3 (நறுக்கவும்)

    கேரட் - 4 (நறுக்கவும்)

    உருளைக்கிழங்கு - 2 (நறுக்கவும்)

    பட்டாணி - சிறிதளவு

    மஞ்சள் தூள் - சிறிதளவு

    மசாலா தூள் - தேவைக்கு

    மிளகாய் தூள் - தேவையான அளவு

    தக்காளி - 4 (நறுக்கவும்)

    பட்டை, ஏலக்காய் - சிறிதளவு

    இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு

    செய்முறை:

    அரிசியை சிறிதுநேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.

    குக்கரில் மட்டன், மிளகாய்தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, உருளைக்கிழங்கு, பட்டாணி, தக்காளி, கேரட், உப்பு, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

    நன்கு வெந்ததும் குக்கரை திறந்து அரிசி, பருப்பு சேர்த்து போதுமான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். நன்கு வெந்ததும் ஆற வைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும் ஏலக்காய், கருவா பட்டை, வெங்காயம், மசாலா தூள் சேர்த்து வதக்கி அரைத்துவைத்த கலவையில் சேர்க்கவும்.

    பின்னர் அதனை அடுப்பில் வைத்து தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடலாம்.

    சுவையான மட்டன் கஞ்சி ரெடி.

    • டயட்டில் இருப்பவர்கள் ஓட்ஸ் சாப்பிடலாம்.
    • மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

    தேவையானபொருட்கள்:

    ஓட்ஸ் - 2 மேசைக்கரண்டி,

    கேரட் - சிறியது 1,

    பீன்ஸ் - 2,

    முட்டை கோஸ் - 25 கிராம்,

    இஞ்சி - சிறிய துண்டு,

    பூண்டு - 2 பல்,

    பச்சை மிளகாய் - 1(தேவைப்பட்டால்),

    வெஜ் ஸ்டாக் பவுடர் - கால் தேக்கரண்டி,

    எலுமிச்சை சாறு - கால் தேக்கரண்டி(தேவைப்பட்டால்),

    மிளகு தூள் - தேவையான அளவு,

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    கேரட், பீன்ஸ், முட்டை கோஸ், இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சூப் செய்ய போகும் பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய், வெஜ் ஸ்டாக் பவுடர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    தண்ணீர் கொதி வந்ததும் கேரட், முட்டைகோஸ், பீன்ஸ் சேர்த்து 10 நிமிடங்கள் வேக விடவும்.

    இந்த காய்கறி கலவையில் ஓட்ஸ் சேர்த்து 2 நிமிடங்கள் வேக விடவும்.

    சுவையான ஓட்ஸ் வெஜிடபிள் கஞ்சி தயார்.

    தேவையான அளவு எலுமிச்சை சாறு மற்றும் மிளகு தூள் தூவி சூடாக பரிமாறவும்.

    அதிகம் காரம் வேண்டாம் என்பவர்கள் பச்சை மிளகாயை தவிர்த்து விடலாம்.

    எலுமிச்சைசாறும் அவரவர் ருசிகேற்ப சேர்த்துக் கொள்ளலாம்.

    • தேவகோட்டையில் அம்மன் கோவிலுக்கு பெண் பக்தர்கள் கஞ்சி கலயம் எடுத்து ஊர்வலம் சென்றர்.
    • சுமார் 10 ‌ஆயிரத்துக்கும் மே‌ற்ப‌ட்ட பெண்கள் கலந்து கொண்டனர்

    தேவகோட்டை

    தேவகோட்டை நகர் போலீஸ் நிலையம் எதிர் புறம் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி திருவிழா நடைபெறும். அதேபோல் 33-ம் ஆண்டு முப்பெரும் விழா நடைபெற்றது.

    நேற்று மாலை கருதா வூரணியில் இருந்து 108 பெண்கள் அக்னி சட்டி எடுத்து கோவில் சென்றனர். இன்று காலை 5004 பேர் கருதாவூரணியில் இருந்து கஞ்சி கலயம் எடுத்து சிவன் கோவில் சாலை, பேருந்து நிலையம், திருப்பத்தூர் ரோடு வழியாக கோவில் சென்றடைந்தனர்.

    அதனைத் தொடர்ந்து 1008 பெண்கள் பால்குடம் எடுத்து யூனியன் ஆபீஸ் விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றனர். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதில் பொன்னழகு பெரியநாயகி, கனகசபை, கவுன்சிலர் நிரோஷ சுந்தரலிங்கம் உள்ளிட்டோர் அன்னதானம் வழங்கி னார்கள். விழாவில் தேவகோட்டை மற்றும் சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 10 ‌ஆயிரத்துக்கும் மே‌ற்ப‌ட்ட பெண்கள் கலந்து கொண்டனர்

    • குதிரைவாலியில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கும்.
    • எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு மாவு - 200 கிராம்

    குதிரைவாலி அரிசி - 50 கிராம்

    தயிர் - கால் கப்

    சின்ன வெங்காயம் - தேவையான அளவு

    உப்பு - சுவைக்கு

    செய்முறை:

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முந்தைய நாள் இரவே கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து மூடிவைக்கவும். நன்றாகப் புளித்துவிடும்.

    குதிரைவாலி அரிசியை நன்றாகக் களைந்து தண்ணீர்விட்டு வேக வைத்துக்கொள்ளவும்.

    அரைப் பதத்தில் வெந்ததும், ஊறவைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்துக் கிளறவும்.

    தண்ணீரில் கையை நனைத்துவிட்டு, கூழைத் தொட்டுப்பார்த்தால், அது கையில் ஒட்டாமல், அல்வா பதத்தில் வரும் போது இறக்கி விடவும்.

    பிறகு, தயிர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், வெந்த கூழ் மூன்றையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு, தண்ணீர் விட்டுக் கரைத்துக் குடிக்கலாம்.

    மாம்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும், நல்ல தூக்கம் வரும். மாம்பழம் புற்றுநோய், குடல் இறக்கம், இருதய நோய், மூலம் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்து.
    தேவையான பொருட்கள்

    வேக வைத்த சாதம் - 1 கப்
    தயிர் - முக்கால் கப்
    ப.மிளகாய் - 2
    உப்பு - சுவைக்கு
    நன்கு கனிந்த மாம்பழம் - 1
    சாதம் வடித்த தண்ணீர்  - அரை கப்
    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை

    மாம்பழத்தை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ப.மிளகாயை இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு மண் சட்டியில் வேக வைத்த சாதத்தை போட்டு அதனுடன் தயிர், உப்பு, ப.மிளகாய், நறுக்கி மாம்பழம் சேர்த்து கைகளால் நன்றாக கலக்கவும்.

    அனைத்தும் நன்றாக ஒன்று சேர்ந்ததும் சூடான சாதம் வடித்த தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்.
    கோதுமையில் எப்போதும் ஒரே மாதிரி சப்பாத்தி, பூரி செய்து சாப்பிடாமல் வித்தியாசமாக கோதுமை மாவில் கஞ்சி செய்து சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சம்பா கோதுமை மாவு - 3 டீஸ்பூன்,
    தண்ணீர் - ஒரு கப்,
    ஓமம், சுக்கு, சீரகம், மிளகு - சிறிதளவு,
    எலுமிச்சம்பழம் - அரை மூடி,
    நாட்டு சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்,
    ஏலக்காய் - 2.

    செய்முறை:

    ஓமம், சுக்கு, சீரகம், மிளகு நான்கையும் வெறும் வாணலியில் சூடு வர லேசாக வறுத்துப் பொடிசெய்து வைத்துக்கொள்ளவும்.

    வெறும் வாணலியில் கோதுமை மாவைப் போட்டு வறுத்து, சிறிது தண்ணீர் சேர்த்துக் கட்டிபடாமல் கிளறி, மீதி தண்ணீரையும் ஊற்றிக் கிளறவும். கூழ் போல் ஆகிவிடும். அத்துடன் உப்பு சேர்த்துக் கிளறவும்.

    பொடித்து வைத்திருக்கும் பொடியில் ஒரு டீஸ்பூன் எடுத்து, 3, 4 துளிகள் எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து மிளகு போன்ற சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

    இந்த உருண்டைகளை, கோதுமைக் கஞ்சியில் சேர்த்துப் பருகவும்.

    வித்தியாசமான சுவையில், காரசாரமாக இருக்கும் இந்த சம்பா கோதுமை கஞ்சி.

    கைக்குத்தல் அரிசியில் உள்ள நார்சத்துக்கள் உணவினை எளிதாக செரிக்க செய்து மலசிக்கலை தடுக்கின்றது. மெக்னீசியம் ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு உதவுகின்றது.
    தேவையான பொருட்கள்

    கைக்குத்தல் அரிசி - 4 டீஸ்பூன்
    பொரிகடலை - 2  டீஸ்பூன்
    சுக்குத்தூள் - ½  டீஸ்பூன்

    செய்முறை

    அரிசியை நன்றாக கழுவி வெயிலில் காய வைத்து நன்றாக காய்ந்ததும் வெறும் கடாயில் போட்டு பொன்னிறமாக உப்பி வரும் வரை மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.

    அதே போல் அடுத்து கடாயில் பொரிகடலையை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து கொள்ளவும்.

    இரண்டும் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் சுக்குத்தூள் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    அடிகனமான பாத்திரத்தை  அடுப்பில் வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் 2 டீஸ்பூன் கஞ்சிப்பொடியை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.

    மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு கஞ்சி பதம் வரும் அளவிற்கு கலக்கவும்.

    கஞ்சி தயார் ஆனவுடன் இளஞ்சூட்டுடன் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

    இப்போது சத்தான பொரிகடலை அரிசி கஞ்சி ரெடி.

    ×