search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "26 பேர் பலி"

    சீனாவில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்ததில் 26 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். #ChinaBusAccident #BusCatchesFire
    பீஜிங்:

    சீனாவின் ஹுனான் மாகாணம் சாங்தே நகரில் 50க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் நேற்று மாலை ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. நெடுஞ்சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்தபோது பேருந்தின் ஒரு பகுதியில் தீப்பிடித்தது. வேகமாக சென்றதால் காற்றின் வேகம் காரணமாக, சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பற்றியது. உள்ளே இருந்தவர்கள் தீக்காயங்களுடன் அலறித் துடித்தனர்.

    தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இந்த கோர விபத்தில் 26 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.



    விபத்து தொடர்பாக பேருந்தின் இரண்டு டிரைவர்களையும் போலீசார் கைது செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். #ChinaBusAccident #BusCatchesFire
    பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்ததிலும் 26 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #PakistanHeavyRain
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பல்வேறு நகரங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. கொட்டித் தீர்த்த பெருமழையால் இங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. 

    வெள்ள நீரில் மூழ்கியும், வீட்டின் மேற்கூரைகள் சரிந்தும், நிலச்சரிவில் சிக்கியும் இங்குள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலியாகினர். திர் பகுதியில் நிலச்சரிவு மற்றும் மழையால் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒரு பெண் மற்றும் குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

    இதேபோல், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லாஸ்பெல்லா மற்றும் பரூகாபாத், கதுவா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வெள்ளத்தில் சிக்கி 10க்கு மேற்பட்டோர் பலியாகினர். 

    பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படிருந்த உணவு தானியங்களும், பழத்தோட்டங்களும் நாசமடைந்தன. நூற்றுக்கணக்கான வீடுகளும் சேதமடைந்தன.

    வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #PakistanHeavyRain
    இமாச்சல பிரதேசம் சுர்காத் பகுதியின் அருகே மலைப் பாங்கான பாதையில் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 26 பேர் படுகாயமுற்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #HimachalPradeshAccident
    சிம்லா:

    மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த பகுதி இமாச்சல பிரதேசம் ஆகும். இம்மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள சுர்காத் பகுதியின் அருகே இன்று காலை சுற்றுலா பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, பக்கவாட்டில் சறுக்கி பள்ளத்தாக்கில் விழுந்தது.

    இவ்விபத்தில் 26 பேர் படுகாயமுற்றதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்களில், 18 பேர் சோனகர் மாவட்டத்தில் நலாஹார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் 8 பேர் கவலைக்கிடமான நிலையில் சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #HimachalPradeshAccident

    பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தானில் பேருந்து ஒன்றின் மீது டீசல் லாரி மோதி தீப்பிடித்த விபத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #pakaccident
    குவெட்டா:

    பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து, பலூசிஸ்தான் மாகாணம் பஞ்ச்கர் பகுதிக்கு நேற்று இரவு பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 40 பயணிகள் பயணித்துள்ளனர். பலூசிஸ்தானின் தொழில் நகரமான ஹப் அருகே சென்றபோது, எரிபொருள் ஏற்றி வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    எதிரே வந்த டிரக்கில் ஈரானிய டீசல் இருந்ததால் விபத்தின்போது பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. பயணிகள் தங்கள் உயிரை காப்பாற்ற பேருந்தில் இருந்து தப்பிக்க முயன்றனர். ஆனால், தீப்பிழம்புகள் பேருந்தில் வேகமாக பரவியதால் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

    இந்த துயரச் சம்பவத்தில் இதுவரை 26 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் நடைப்பெற்று வருவதாகவும் லாஸ்பேலா துணை ஆணையாளர் ஷபீர் மெங்கல் தெரிவித்துள்ளார். மேலும் 16 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏதீ அறக்கட்டளையின் ஒரு மீட்பு அதிகாரி கூறுகையில், போதிய  வசதிகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் இல்லாததால், காயமடைந்தவர்களை நீண்ட தாமதத்திற்கு பின்னரே கராச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தார். மீட்கப்பட்ட உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு தீயில் கருகியிருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். #pakaccident

    4½ வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    திருவள்ளூர்:

    சென்னை பாடி புதுநகர் பகுதியை சேர்ந்த 4½ வயது சிறுமியை அந்த சிறுமியின் தாயார் சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு விட்டிருந்தார்.

    27-1-2012 அன்று கடைக்கு பென்சில் வாங்குவதற்கு சென்ற அந்த சிறுமியை சென்னை விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான மணி என்கிற மணிகண்டன் (35) முகப்பேர் கிழக்கு நக்கீரன் சாலையில் உள்ள பாழடைந்த குழந்தைகள் மைய கட்டிடத்திற்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றார்.

    குடிபோதையில் அந்த சிறுமியின் உடலில் பல இடங்களில் நகங்களால் கீறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இரவு முழுவதும் அந்த சிறுமியை சித்ரவதை செய்துள்ளார்.

    28-1-2012 அன்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிறுமியுடன் இருந்த மணிகண்டனை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது அவர் பொதுமக்கள் மீது கற்களை வீசி அவர்களை விரட்டியுள்ளார்.

    பின்னர் அவர்கள் சென்னை முகப்பேர் ஜெ.ஜெ. நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டனை கைது செய்து அந்த சிறுமியை மீட்டனர். இது குறித்து அந்த சிறுமியின் தாயார் ஜெ.ஜெ.நகர் போலீசில் புகார் செய்தார்.

    இந்த வழக்கு விசாரணை திருவள்ளூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    சட்டத்திற்கு புறம்பாக சிறுமியை கடத்தி அடைத்து வைத்து கொடுங்காயம் ஏற்படுத்தியதற்கு 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், சிறுமியை அடித்து மிரட்டி துன்புறுத்தியதற்காக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை என மணி கண்டனுக்கு மொத்தம் 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    ×