என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராகவா லாரன்ஸ்"
- பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.
- இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய யுனிவர்ஸுக்கு லாரன்ஸை வரவேற்கிறார்.
லியோ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்புல உருவாகி வரும் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 'ஜி ஸ்குவாட்' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி 'ஃபைட் கிளப்' என்ற படத்தை தயாரித்திருந்தார்.
ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் ஏற்கனவே ரெமோ, சுல்தான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், ராகவா லாரன்ஸின் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய யுனிவர்ஸுக்கு லாரன்ஸை வரவேற்கிறார்.
இதனால் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யு.வில் ஏற்கெனவே இருக்கும் கைதி டில்லி, விக்ரம், லியோ உள்ளிட்ட கதாபாத்திரங்களுடன் இந்த 'பென்ஸ்' கதாபாத்திரமும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
A warrior with a cause is the most dangerous soldier ?Welcome to the universe @offl_Lawrence master ??Wishing you a very Happy Birthday ?❤️#BENZ ?@GSquadOffl @PassionStudios_ @TheRoute @bakkiyaraj_k @Jagadishbliss @Sudhans2017 @gouthamgdop @philoedit @PradeepBoopath2… pic.twitter.com/51Xuktst6x
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 29, 2024
- . இவர் இயக்கி நடித்த காஞ்சனா சீரிஸ் படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.
- இப்படத்தை இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கியுள்ளார்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா சீரிஸ் படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதனிடையே திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையிலும் ராகவா லாரன்ஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், ராகவா லாரன்ஸ் நடிக்கும் 25 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு கால பைரவா என்ற பெயரை வைத்துள்ளனர்.
இப்படத்தை இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்க இந்த படத்தை கொனிரு சத்யநாரதனா மற்றும் நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரமேஷ் வர்மா இதற்கு முன் ரக்ஷடு மற்றும் கில்லாடி ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
கால பைரவா திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் நிறைந்த பான் இந்தியன் சூப்பர் ஹீரோ திரைப்படமாக உருவாகவுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் மிகவும் முரடனாக ராகவா லாரன்ஸ் அதற்கு பின் பாம்பு மற்றும் பைரவா கடவுளின் உருவங்கள் இடம் பெற்றுள்ளன.
இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்திலிருந்து தொடங்கவுள்ளது. திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையிலும் ராகவா லாரன்ஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
- இப்படத்தில் ராகவா லாரன்ஸின் தம்பியான எல்வின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா சீரிஸ் படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதனிடையே திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையிலும் ராகவா லாரன்ஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் நடித்து வரும் புல்லட் திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தை இன்னசி பாண்டியன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் அருள்நிதி நடிப்பில் வெளியான டைரி திரைப்படத்தை இயக்கியவராவார்.
இந்த படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸின் தம்பியான எல்வின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வைஷாலி ராஜ் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. படத்தைப் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ்.
- புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் வெளியீடு.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா சீரிஸ் படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதனிடையே திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையிலும் ராகவா லாரன்ஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற "கில்" படத்தின் தமிழ் ரீமக்கில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரெயிலில் வைத்து படமாக்கப்பட்டு இருந்த கில் திரைப்படம் ஆக்ஷன் காட்சிகளை கொண்டிருந்தது.
இந்த நிலையில், ராகவா லாரன்ஸ் நடிக்கும் 25 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (அக்டோபர் 29) காலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கும் இந்த படத்தை நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரபல தயாரிப்பாளர் கோனேரு சத்யநாராயணா இப்படத்தை தயாரிக்கிறார்.
- பான் இந்திய படமாக இப்படம் உருவாகிறது.
நடிகர் ராகவா லாரன்ஸின் 25வது படத்தை தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
'ராக்ஷசுடு', 'கிலாடி' போன்ற பிளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர், கல்வியாளர் மற்றும் கேஎல் பல்கலைக்கழகத்தின் தலைவர் கோனேரு சத்யநாராயணா, தற்போது ஏ ஸ்டுடியோஸ் எல்எல்பி பேனரின் கீழ் பல நல்ல படங்கள் தயாரிப்பதில் பிஸியாக இருக்கிறார். இந்த மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனம் நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஹவ்விஷ் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து ஒரு புதிய படத்தை இன்று அறிவித்துள்ளனர்.
'மிகப்பெரிய ஆக்ஷன் அட்வென்ச்சர் ஆரம்பம்' என்ற உற்சாக செய்தியுடன் படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த தயாரிப்பு நிறுவனம் முன்பு தயாரித்த 'ராக்ஷசுடு' மற்றும் 'கிலாடியை' இயக்கிய ரமேஷ் வர்மா இந்தப் படத்தையும் இயக்குகிறார். தயாரிப்பாளர் கோனேரு சத்யநாராயணா மற்றும் ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இதுவாகும்.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். நடன இயக்குநராக இருந்து கதாநாயகனான ராகவா லாரன்ஸின் 25 ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல தயாரிப்பாளர் கோனேரு சத்யநாராயணா இப்படத்தை தயாரிக்கிறார். பான் இந்திய படமாக வெளியாகும் இந்தப் படத்தின் அறிவிப்பு போஸ்டரில் நடிகர் ராகவா லாரன்ஸின் நிழல் உருவம் இடம்பெற்றுள்ளது. இந்த படம் குறித்தான மேலும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். படப்பிடிப்பு நவம்பர் 2024 முதல் தொடங்குகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
BIG ACTION ADVENTURE BEGINS ? I Need all your blessings for this special one ?? #RL25 https://t.co/9VaKOc4sYZ
— Raghava Lawrence (@offl_Lawrence) September 14, 2024
- காஞ்சனா 4 கதையை எழுதி முடித்துவிட்டதாக சமீபத்தில் ராகவா பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.
- ரூ.100 கோடி பட்ஜட்டில் கோல்டுமைன் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
ஹாரர் ஜானர் படங்களுக்குப் பெயர்போன ராகவா லாரன்ஸ் தனது பிரபல காஞ்சனா திரைப்பட சீரிஸில் 5 வது படத்தை இயக்க உள்ளார். அதாவது, கடந்த 2007 ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி திரைப்படம் மற்ற பேய் படங்களிலிருந்து மாறுபட்டு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போன நிலையில் அதைத்தொடர்ந்து முற்றிலும் காமெடி ஹாரர் ஜானரில் அவர் இயக்கிய காஞ்சனா திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியாகியது.
அதுவரை ஹாரர் படங்களுக்கு இருந்த டெம்ப்லேட் கதைகளை மாற்றி தனது பாணியில் காஞ்சனா படத்தை இயக்கி அதில் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து 2015 இல் காஞ்சனா 2, 2019 இல் காஞ்சனா 3 என இயக்கி வெளியிட்டார். குழந்தைகளைக் கவரும் வகையில் இந்த படங்கள் அமைந்த நிலையில் தற்போது காஞ்சனா 4 திரைப்படத்தை ராகவா லாரன்ஸ் இயக்க உள்ளார். காஞ்சனா ஜானரை பின்பற்றி எடுக்கப்பட்ட சுந்தர் சி யின் அரண்மனை திரைப்படங்களில் சமீபத்தில் அரண்மனை 4 வரை வெளியாகியிருந்தது. இடையே பி.வாசு இயக்கத்தில் ஹாரர் ஜானரில் ராகவா லாரன்ஸ் நடித்த சிவலிங்கா, சந்திரமுகி 2 ஆகியவை எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் மீண்டும் இயக்குனராக மாறி எடுக்க உள்ள காஞ்சனா 4 படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காஞ்சனா 4 கதையை எழுதி முடித்துவிட்டதாக சமீபத்தில் ராகவா பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த படமானது ரூ.100 கோடி பட்ஜட்டில் கோல்டுமைன் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தனது படத்திற்கான ஹீரோயின் தேர்வில் அதிக கவனம் செலுத்தும் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 4 படத்தில் விஜய்யின் பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டேவை ஒப்பந்தம் செய்ய உள்ளாராம். அவரை படத்தின் ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முனதாக இந்த படத்தில் மிர்னால் தாக்கூர் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தகக்து.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மாநகரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்,
- இப்படத்தை ரெமோ மற்றும் சுல்தான் பட புகழ் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார்.
மாநகரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், `கைதி', `மாஸ்டர்', `விக்ரம்' மற்றும் `லியோ' படங்களை இயக்கி குறுகிய காலத்திலேயே பிரபல இயக்குனரானார்.
தற்போது ரஜினியின் 171 -வது படமான கூலி திரைப்படத்தை இயக்கவுள்ளார். திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. படங்கள் இயக்குவது மட்டுமல்லாமல் ஜி ஸ்குவாட் (G Squad)' தயாரிப்பு என்ற பெயரிலான சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 2023 -ல் 'பைட் கிளப்' மூலம் தயாரிப்பாளரானார்.
அதைத்தொடர்ந்து 'பென்ஸ்' என்ற புதிய படத்தை தயாரிக்கவுள்ளார் லோகேஷ். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தை ரெமோ மற்றும் சுல்தான் பட புகழ் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். இப்படத்தின் கூடுதல் அப்டேட் தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்தில் ஃபகத் பாசில் மற்றும் எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சேவையே கடவுள் எனும் நோக்கத்தில் "மாற்றம்" என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கியுள்ளார்.
- குருவே சரணம் என சூப்பர் ஸ்டாருன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ராகவா லாரன்ஸ், தன் உதவும் குணத்தால் மக்கள் மத்தியில் தனக்கு என்று ஓர் நிலையான இடத்தை பிடித்துள்ளார். இதுவரையில் பலருக்கு தனிப்பட்ட முறையில் உதவிகள் செய்துவந்த நடிகர் லாரன்ஸ், சேவையே கடவுள் எனும் நோக்கத்தில் "மாற்றம்" என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கியுள்ளார்.
இந்த அறக்கட்டளை மூலம் பலருக்கு உதவிகளை செய்து வருகிறார். இந்த அறக்கட்டளையில் முன்னணி நடிகர் எஸ் ஜே சூர்யா மற்றும் கலக்கப்போவது யாரு பாலா, செஃப் வினோத் , அறந்தாங்கி நிஷா ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளி மாணவியான ஸ்வேதா, தனது படிப்பிற்கு உதவுமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இணையத்தில் இந்த வீடியோ டிரெண்டாகி அது ராகவா லாரன்ஸின் கண்ணில் பட, அந்த வீடியோவை லாரன்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, ஹாய் ஸ்வேதா, கவலைப்படாதே, இன்றிலிருந்து நீ என் சொந்த குழந்தை, நான் எப்போதும் உங்களுக்காக இருப்பேன், இரண்டு நாட்களில் உங்களை சந்திப்பேன் என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவானது இணையத்தில் டிரெண்டாகியது.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் மாற்றம் அறக்கட்டளை சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது, "தலைவர் சூப்பர் ஸ்டாரை மாற்றம் அறக்கட்டளைக்கு ஆசீர்வாதம் வாங்க சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி எனவும், குருவே சரணம்" என சூப்பர் ஸ்டாருன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.
I'm so happy to meet Thailavar superstar @rajinikanth to take blessings for the #Maatram Foundation! Guruve Saranam ?? #serviceisgod pic.twitter.com/0w8gBXd8a9
— Raghava Lawrence (@offl_Lawrence) June 23, 2024
- சமீபத்தில் அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் 10 டிராக்டர்கள் வழங்கப்பட்டன.
- ராகவா லாரன்சின் இந்த சேவையை பாராட்டும் பலரும் அவரது அறக்கட்டளை இணைந்து வருகின்றனர்.
நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் 'மாற்றம்' என்ற அறக்கட்டளை மூலம் ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அவரது இந்த பணியில் KPY பாலாவும் இணைந்துள்ளார். இருவரும் சேர்ந்து ஏழ்மை நிலையில் வாடும் மக்களுக்கு உதவி வருகின்றனர்.
சமீபத்தில் அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் 10 டிராக்டர்கள் வழங்கப்பட்டன. ராகவா லாரன்சின் இந்த சேவையை பாராட்டும் பலரும் அவரது அறக்கட்டளையில் இணைந்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே. சூர்யா மாற்றத்தில் இணைந்துள்ளார். இதுதொடர்பாக ராகவா லாரன்ஸ் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு கூறியுள்ளதாவது:-
எனது சொந்தப் பணத்தில் மாற்றம் அறக்கட்டளை மூலம் 10 டிராக்டர்களை விவசாயிகளுக்கு வழங்கியது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இன்று (நேற்று) எஸ்.ஜே.சூர்யா அண்ணன் தன் சொந்தப் பணத்தில் இன்னொரு டிராக்டரைச் சேர்த்து எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்ரிக்கு 11வது டிராக்டரைக் கொடுத்தோம். அவருடைய ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எஸ்.ஜே.சூர்யா மற்றும் அவரது குடும்பத்திற்காக நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன். எனக்கு எப்போதும் போல் உங்கள் அன்பும் ஆசியும் தேவை என கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயம்.
- இருவரும் மக்கள் தொண்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
இதைத் தொடர்ந்து கட்சியின் சின்னம், கொடி வடிவமைப்பு ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த கட்டமாக கட்சிக்கு 2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதையொட்டி விஜய் ஆலோசனையின் பேரில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்வாகிகளுடன் நேரடியாகவும், தொலைபேசி மூலமும் ஆலோசனை நடத்தி உறுப்பினர் சேர்க்கைக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வந்தார்.
மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் விஜய் போட்டியிடுவார் எனவும் அறவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு திரைத்துறையில் இருந்து ஆதரவு திரண்டு வருகிறது.
இந்நிலையில், தவெக-வில் நடிகர் லாரன்ஸ் மற்றும் KPY பாலா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருவரும் மக்கள் தொண்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சினிமாவை தாண்டி நடிகர் லாரன்ஸ் மற்றும் KPY பாலான மக்கள் மனதில் தனி இடம் பிடித்துவிட்டனர்.
இந்நிலையில், நடிகர் லாரன்ஸ் மற்றும் KPY பாலா விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த ஆண்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ் பென்ஸ், ஹண்டர் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
- ராகவா லாரன்ஸ், முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 போன்ற காமெடி கலந்த ஹாரர் படங்களை இயக்கி, நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். அதே சமயம் இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், நடன இயக்குனர் என பன்முகத் திறமைகளை கொண்டவர்.
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த ஆண்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ் பென்ஸ், ஹண்டர் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேசமயம் இவர் ரஜினியின் கூலி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் படை தலைவன் படத்தில் கேமியா ரோலில் நடித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.
ராகவா லாரன்ஸ், முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 போன்ற காமெடி கலந்த ஹாரர் படங்களை இயக்கி, நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
ஹாரர் கதைக்கள பாணி பெருமளவு வெற்றிப் பெற்ற காரணத்தினால் அடுத்ததாக காஞ்சனா 4 திரைப்படத்தை இயக்க ராகவா லாரன்ஸ் திட்டமிட்டுள்ளார். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 செப்டம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாகூரை அணுகியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி மிருணாள் தாகூர் ஒப்புக்கொண்டால் அவர் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும்.
மிர்ணாள் தாகூர், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதாராமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து ஹாய் நான்னா, ஃபேமிலி ஸ்டார் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் கூடுதல் தகவல்களைப் பற்றி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், நடன இயக்குனர் என பன்முகத் திறமைகளை கொண்டவர்.
- ராகவா லாரன்ஸ், முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 போன்ற காமெடி கலந்த ஹாரர் படங்களை இயக்கி, நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். அதே சமயம் இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், நடன இயக்குனர் என பன்முகத் திறமைகளை கொண்டவர்.
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த ஆண்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ் பென்ஸ், ஹண்டர் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேசமயம் இவர் ரஜினியின் கூலி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் படை தலைவன் படத்தில் கேமியா ரோலில் நடித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.
ராகவா லாரன்ஸ், முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 போன்ற காமெடி கலந்த ஹாரர் படங்களை இயக்கி, நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். கடந்த மாதம் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.
ஹாரர் கதைக்கள பாணி பெருமளவு வெற்றிப் பெற்ற காரணத்தினால் அடுத்ததாக காஞ்சனா 4 திரைப்படத்தை இயக்க ராகவா லாரன்ஸ் திட்டமிட்டுள்ளார். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 செப்டம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது.