என் மலர்tooltip icon

    வழிபாடு

    • சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, புரட்டாசி 18 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சஷ்டி காலை 10.06 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம்: மிருகசீர்ஷம் நள்ளிரவு 12.02 மணி வரை பிறகு திருவாதிரை

    யோகம்: மரணயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பொறுமை

    ரிஷபம்-அமைதி

    மிதுனம்-போட்டி

    கடகம்-ஆதரவு

    சிம்மம்-உற்சாகம்

    கன்னி-நட்பு

    துலாம்- பெருமை

    விருச்சிகம்-ஆக்கம்

    தனுசு- புகழ்

    மகரம்-அமைதி

    கும்பம்-நன்மை

    மீனம்-பக்தி

    • குன்றத்தூரில் உள்ள முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
    • தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    பூந்தமல்லி:

    குன்றத்தூரில் உள்ள முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. குன்றின் மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டு மின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    ஆண்டு தோறும் அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் சூரகம்ஹாரம் நிகழ்ச்சி மட்டும் நடத்தப்படாமல் இருந்தது.

    பிரசித்தி பெற்ற மற்ற முருகன் கோவில்களில் சூர சம்ஹாரம் நிகழ்ச்சி நடத்தப் படும் போது குன்றத்தூரில் உள்ள முருகன்கோவிலில் இந்த விழா நடத்தப்படாமல் இருந்தது பக்தர்களுக்கு பெரும் குறையாக இருந்தது. கடைசியாக கடந்த 1969-ம் ஆண்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பின்னர் பல்வேறு காரணங்களுக்காக சூரசம்ஹாரம் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் குன்றத் தூர் முருகன் கோவிலில் புதிதாக அறங்காவலர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் மீண்டும் சூரசம்ஹாரம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பாக அறங் காவலர் குழு ஆலோசனைக் கூட்டம் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. அப்போது இந்த ஆண்டு முதல் குன்றத் தூர் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. இதைத் தொடர்ந்து சூரசம்ஹாரத் தின் போது இருக்க வேண்டிய சாமி சிலைகளை புதுப்பிக்கும் பணிக்காக அவற்றை வாகனங்களில் எடுத்து செல்லும் பணி நடந்தது.

    குன்றத்தூர் முருகன் கோவிலில் சுமார் 54 ஆண்டு களுக்கு பிறகு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடத்தப்படுவது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் இந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நவம்பர் மாதம் நடைபெறும் எனவும் தெரி விக்கப்பட்டு உள்ளது.

    • இறைவனுக்கு அனைவரும் ஒருவர் தான்.
    • இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது தூய்மையான பக்தியை தான்.

    நாவார் புகழ்த்தில்லை யம்பலத் தானருள் பெற்றுநாளைப்

    போவா னவனாம் புறத்திருத் தொண்டன்றன் புன்புலைபோய்

    மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதி தான்

    மாவார் பொழிறிக ழாதனூ ரென்பரிம் மண்டலத்தே

    -என்று பாடிய நந்தனாரை திருநாளைப்போவார் நாயனார் என்று அழைக்கின்றனர்.

    இறைவனுக்கு அனைவரும் ஒருவர் தான். இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது தூய்மையான பக்தியை. இறைவன் சாதியையோ, மதத்தையோ பார்ப்பதில்லை.

    அந்த காலத்தில் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்கள் கோவிலுக்குள் செல்லக்கூடாது என்ற நிலைமை இருந்தது. சோழநாட்டில் ஆதனூர் என்ற ஊரில் நந்தன் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் புலையர் குலத்தில் பிறந்தவர். ஆயினும் அவர் இறைவன் மீது தீராத பக்தி கொண்டிருந்தார்.

    சிவபெருமானை தன் உயிரினும் மேலாக கருதி, சிவபெருமான் மீது அளவிகடந்த பக்தியுடன் வாழ்ந்து வந்தார். கோவில் முரசுகளுக்கு தோல் தைத்து கொடுப்பது, யாழ்களுக்கு நரம்பு செய்து தருவது தான் இவருடைய வேலை. அவ்வாறு கிடைக்கும் பணத்தை தனக்காகவும், தன் குடும்பத்துக்காக செலவு செய்யாமல் ஈசனுக்கும், ஈசனின் திருப்பணிகளுக்காகவே அனைத்து பணத்தையும் செலவு செய்வார்.

    அந்த காலக்கட்டத்தில் தீண்டத்தகாதவன் என்ற கொடுமையால் அவரால் கோவிலுக்குள் செல்லமுடியாத நிலைமை இருந்தது. அதனால் சிவன் கோவிலின் வாசலில் நின்றபடிதான் சிவபெருமானை நினைத்து வணங்கி உருகுவார். எப்படியாவது கோவிலுக்குள் சென்று இறைவனை வணங்கிவிட வேண்டும் என்று நீண்டகாலமாக ஆசை அவருக்கு இருந்தது. ஆனால் சாதியின் கொடுமை அவரை தடுத்தது.

    மனிதன் சுயலாபத்திற்காக சாதியை உருவாக்கினான். அந்த சாதி தான் பக்திக்கு தடையாக இருந்தது. இந்த நிலையில் ஒருநாள் ஆதனூரை அடுத்துள்ள திருப்பங்கூரில் உள்ள சிவலோகநாதர் திருக்கோவிலில் உள்ள சிவபெருமானை சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது.

    ஆனாலும் அங்கேயும் தீண்டாமை தடுத்தது. ஆனாலும் அங்கு சென்று வணங்கிவிட்டு வரலாம் என்று நேராக அந்த ஊருக்கு சென்றார். நந்தனார். அங்கு சென்று இறைவனை வணங்கினார் நந்தனார். ஆனால் வாசலில் நின்று சிவபெருமானை அவரால் தரிசிக்க முடியவில்லை. காரணம் லிங்கத்தின் முன்பாக இருந்த நந்தி லிங்கத்தை மறைத்து நின்றது.

    அதனைப்பார்த்த நந்தன் சிவபெருமானை பார்க்கமுடியாத ஆதங்கத்தில் அழுதுபுலம்பினார். அப்போது நந்தனின் உன்னதமான பக்தியின் காரணமாக சிவபெருமான் நந்தியை சற்று விலகி இருக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

    உடனே நந்தி வலதுபக்கமாக நகர்ந்தது. உடனே கருவறையில் உள்ள ஆனந்த சுடராய் அருள்வடிவாய் இருந்த சிவபெருமானை கண்டு எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்து இறைவனைக் கண்டு ஆனந்தம் கொண்டார் நந்தனார்.

    இன்றும் இக்கோவிலில் நந்தி பகவான் சற்று விலகியே இருக்கிறார். அதாவது நந்தனாருக்கு தரிசனம் தரவேண்டும் என்பதற்காகவே ஈசன் சொற்படி நந்தி பகவான் வலது பக்கமாக நகர்ந்துள்ளார்.

    இந்த நிகழ்வுக்கு பிறகு சைவ சமயத்தின் மேன்மையான திருக்கோவிலாக கருதப்படும் சிதம்பரம் நடராஜனை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் நந்தனாருக்கு ஏற்பட்டது. ஆனால் இங்கேயும் சாதி குறுக்கே நின்றது. இருந்தாலும் எப்படியாவது தில்லை அம்பலவானனை தரிசிக்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் அவரால் தில்லைக்கு செல்லமுடியாமல் போனது. இப்படி பல நாட்கள் சிதம்பரம் நடராஜரின் தரிசனம் நந்தனாருக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.

    சிதம்பரம் சென்று என் ஈசனை தரிசிக்க முடியாதென்றால் இந்த பூலோகத்தில் இருந்து என்ன பயன் என்று உறுகி நின்றார். இப்படி நந்தனாரின் ஆசை நிறைவேறாமல் தடைபட்டுக்கொண்டே இருந்தது. இப்படி நாளைக்கு சென்றுவிடுவோம் என்று எண்ணி எண்ணி நாட்கள் கடந்துகொண்டே வந்தது. இதுநாளேயே நந்தனார், திருநாளைப்போவார் என்று அழைக்கப்படுகிறார்.

    இந்த நிலை ஒருநாள் தில்லையில் நடனம் பிரியும் நடராஜரை தரிசிக்க சென்றார் நந்தன். தில்லையில் ஊருக்குள் செல்லத்தயங்கிய நந்தன், ஊருக்கு வெளியே நின்று கோபுரத்தை தரிசனம் செய்து பெரும் மகிழ்ச்சி அடைந்தார். கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என்றால் என்ன சிதம்பரமே சிவன் தானே என்று உணர்ந்து பூமியில் உள்ள மண்ணை கையில் எடுத்து நெற்றியில் திருநீராக பூசிக்கொண்டார்.

    மேலும் ஊருக்கு வெளியிலேயே தங்கி இருந்தார் நந்தனார். அன்று இரவு கோவில் முக்கியஸ்தர்கள் மற்றும் தில்லைவாழ் அந்தணரின் கனவில் தோன்றிய ஈசன், `என் அடியவன், என் பக்தன் நந்தன் ஊருக்கு வெளியே காத்துக்கொண்டிருக்கிறான். அவனை உரிய மரியாதையுடன் என்னிடம் அழைத்து வாருங்கள்' என்றார் ஈசன்.

    மறுநாள் அந்தனர்கள், ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி பூரண கும்ப மரியாதையுடன் நந்தனை கோவிலுக்குள் அழைத்து வந்தனர். அந்த நிலையில் கோவிலுக்குள் நுழையும் போது கூட்டத்தில் இருந்த அந்தணர் ஒருவர், நந்தனர் கோவிலுக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்தார்.

    தாழ்த்தப்பட்டவன் கோவிலுக்குள் நுழைவதை என்னால் ஏற்கமுடியாது. இறைவன் கனவில் சொன்னது உண்மையாகவே இருக்குமானால் இங்கு ஒரு அக்னிபரீட்சை வைத்து தான் நந்தனை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும். நந்தன் அக்னியில் இறங்கி திரும்பிவரட்டும். அதன்பிறகு அவரை கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்றார் அந்த அந்தணர்.

    அதனை கேட்ட நந்தன் எந்த பதட்டமும், பயமும், அதிர்ச்சியும் அடையவில்லை. என் வாழ்வில் எத்தனையோ அற்புதங்களை செய்த இறைவன் நான் சிதம்பரம் வருவதற்கும் ஒரு அற்புதம் செய்து அனுப்பி இருக்கிறான். இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்க இயலாது. இறைவன் சித்தம் இதுவென்றால் நான் எதையும் செய்ய தயார் என்றார் நந்தனார்.

    அங்கு தீ கொளுந்துவிட்டு எரிந்தது. அந்த அக்னிகுண்டத்தில் இறங்கினார் நந்தனார். தீயில் இறங்கி எந்த தீங்கும் இன்றி பட்டாடை உடுத்தி அழகிய தெய்வீகத்தோற்றத்துடன் வெளிப்பட்டார். பின்னர் கோவிலுக்குள் சென்று ஈசனை கண்குளிர கண்டு ரசித்தார். மேலும் கருவறையில் நுழைந்து அங்கு ஒரு தீப்பிழம்பு போல தோன்றி அங்கு ஒரு ஜோதியாய் இறைவனோடு ஐக்கியமானார் நந்தனார்.

    திருநாளைப்போவார் நாயனாரின் குருபூஜை ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று திருநாளைப்போவார் நாயனாரின் குருபூஜை இன்று.

    • சனீஸ்வரன், ஜேஷ்டாதேவி ஆகியோரின் புதல்வன் குளிகன்.
    • குளிகனின் பிறப்பே நல்ல நிகழ்ச்சிகளை தொடங்குவதற்காக உருவானது.

    குளிகன் என்னும் மாந்தன், சனீஸ்வரன், ஜேஷ்டாதேவி ஆகியோரின் புதல்வன் ஆவார். குளிகனின் பிறப்பே நல்ல நிகழ்ச்சிகளை தொடங்குவதற்காக உருவானது.

    முந்தைய காலத்தில் ராவணனின் மனைவி மண்டோதரி கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் இருந்தாள். இந்த நிலையில் ராவணன் தன்னுடைய குலகுருவான சுக்ராச்சாரியாரை சந்தித்தார். யாராளும் வெல்ல முடியாத அழகும், அறிவும் கொண்ட மகன் தான் தனக்கு பிறக்க வேண்டும் எனவே அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார் ராவணன்.

    அதற்கு சுக்லாச்சாரியார் கிரகங்கள் அனைத்து ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் உனக்கு பிள்ளை பிறந்தால் அந்த குழந்தை நீ விரும்பியபடி எல்லா சிறப்புகளை கொண்டதாக இருக்கும் என்று கூறினார். அவ்வளவு தான் உடனே ராவணன் நவகிரகங்களை சிறைபிடித்து ஒரே சிறையில் அடைத்தான்.

    ஒரே அறையில் இருந்த கிரகங்கள் அனைவரும் திகைத்து நின்றனர். நவக்கிரகங்களும் ஒரே அறையில் இருப்பதால் நடக்கப்போகும் இன்னல்களை எண்ணி கவலை கொண்டனர். அதேநேரத்தில் மண்டோதரியும் குழந்தை பிறக்க முடியாமல் பெரும் தவிப்பில் இருந்தாள்.

    இந்த செய்தியை கேட்ட நவகிரகங்கள் அவர்களால் தான் ராவணனின் மனைவிக்கு குழந்தை பிறப்பதில் தாமதம் ஆகிறதோ? இதனால் ராவணன் தன்னை தண்டிப்பானோ என்று ஒருவித அச்சடனேயே இருந்தனர் நவக்கிரகங்கள். இதற்காக சுக்லாச்சாரியாரிடம் யோசனையும் கேட்டனர்.

    இந்த சிக்கலில் இருந்து விடுபட வேண்டும் என்றால் உங்கள் ஒன்பது பேரை தவிர நல்ல செயல் செய்வதற்காக இன்னொரு புதியவரை சிருஷ்டித்து ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றி கொடுத்தால் உங்களுக்கு நன்மை உண்டாகும். அதோடு அதேவேளையில் மண்டோதரிக்கும் சுகப்பிரசவம் உண்டாகும். நீங்களும் விடுதலை ஆகலாம் என்று சுக்லாச்சாரியார் ஆலோசனை கூறினார்.

    அதன்படியே சனீஸ்வரர் தன்னுடைய சக்தியினால் ஜேஷ்டாதேவிக்கு ஒரு மகன் பிறக்க வழிசெய்தார். அந்த நேரத்தில் சனீஸ்வரனுக்கும், ஜேஷ்டாதேவிக்கும் பிறந்த மகன் தான் இந்த குளிகன். குளிகன் பிறந்த அந்த நேரத்தில் மண்டோதரிக்கும் அழகான ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு மேகநாதன் என்ற பெயரும் சூட்டப்பட்டது.

    அவன் பிறக்கும்போதே நல்லதை நடத்தி வைத்த குளிகன் நவக்கிரகங்களால் பாராட்டப்பட்டார். அவன் பிறந்த அந்த நேரத்தை குளிகை நேரம் என்று தினமும் பகலிலும்-இரவிலும் ஒருமணிநேரம் கொடுக்கப்பட்டது. அந்த நேரம் காரிய விருத்தி நேரம் என்று ஆசீர்வதிக்கப்பட்டது.

    இதனால் தான் இந்த நேரத்தில் செய்யும் எந்த செயலும் தொடர்ந்து நடைபெற்று அந்த குடும்பமே செழிக்கும் என்று சொல்லப்படுகிறது. குளிர்விக்கும் தன்மை கொண்ட குளிகன் ஒவ்வொரு நாளிலும் நல்ல காரியங்களை தொடங்குவதற்காக உருவாக்கப்பட்டார்.

    குளிகனை சனிக்கிழமை தினத்தின் மாலை வேளையில் வணங்கலாம். சனீஸ்வரனை வணங்கும் போது மனதி குளிகனை நினைத்தும் வணங்கல்லாம். குளிகனை வணங்கும் போது கும்குளிகாய நம என்னும் மந்திரத்தை சொல்லி வணங்கும் போது நல்லது நடக்கும். குளிகனுக்கு மாந்தி என்கிற தங்கையும் இருக்கிறார்.

    எனவே நல்ல காரியங்களை குளிகை காலத்தில் செய்தால் தொடர்ந்து நல்லது இல்லத்தில் நடைபெறும் என்பது ஐதீகம்.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, புரட்டாசி 17 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: பஞ்சமி காலை 10.01 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம்: ரோகிணி இரவு 11.22 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    மகாவியதீ பாதம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை. திருநாளைப்போவார் நாயனார் குரு பூஜை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் காலை அலங்கார திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆர்வம்

    ரிஷபம்-மாற்றம்

    மிதுனம்-ஆதரவு

    கடகம்-ஆக்கம்

    சிம்மம்-போட்டி

    கன்னி-லாபம்

    துலாம்- மகிழ்ச்சி

    விருச்சிகம்-பிரீதி

    தனுசு- சாதனை

    மகரம்-வாழ்வு

    கும்பம்-உழைப்பு

    மீனம்-உயர்வு

    • கும்பகோணம் கோவிந்தபுரத்தில் ஸ்ரீவிட்டல் ருக்மணி ஸம்ஸ்தான் கோவில் உள்ளது.
    • ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ் கோவிந்தபுரத்தில் பலகோடி மதிப்பில் கோவில் அமைத்துள்ளார்.

    தலச்சிறப்பு

    கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தில் ஸ்ரீவிட்டல் ருக்மணி ஸம்ஸ்தான் கோவில் உள்ளது. சேங்காலிபுரம் நாராயண தீஷிதர் புதல்வர் ராமதீஷீதர். இவர் இன்றும் பிரவசனம் செய்து கொண்டு வருபவர். இவரது புத்திரர் ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ்.

    நாமசங்கீர்த்தனமே நாதன்தாள் பற்றுவதற்கான நல்ல வழி என்பதை உலகெங்கும் பறைசாற்றிய ஞானானந்த சுவாமிகள் சீடரான குருஜி ஹரிதாஸ் கிரி சுவாமிகளையும், ஸ்ரீஸ்ரீகிருஷ்ண பிரேமி மகராஜ் ஆகியோரை தமது குருவாக ஏற்று நாடெங்கும் நாமசங்கீர்த்தனத்தை நடத்தி வருபவர் ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ் ஆவார்.

    வடமாநிலத்தில் பண்டரிபுரத்தில் உள்ள ஸ்ரீபாண்டுரங்கனின் கோவிலை போன்று அனைத்து பக்தர்களும் கோவில் கர்ப்பகிரகத்தினுள் சென்று பகவானை தரிசிக்க வேண்டும் என்று ஜாதி, மதம், இனம், மொழி என்ற வேறுபாடு இல்லாமல் ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ் கோவிந்தபுரத்தில் பலகோடி மதிப்பில் கோவில் அமைத்துள்ளார்.

    பண்டரிபுரத்தில் இருந்து வந்தருளிய பாண்டுரங்கனும், ருக்மணியும் புதிய கோவிலில் அருள்பாலிக்கின்றனர். மகாமண்டபம், அர்த்தமண்டபம், நாமசங்கீர்த்தனை கூடம், அன்னதானக்கூடம், மகாபக்த விஜயத்தில் இடம்பெற்றுள்ள பக்த சிரோண்மனிகளின் கதை சிற்பங்கள், பொன் போன்ற ஒளிரும் மேல் விதானம் மடப்பள்ளி போன்றவைகள் தெய்வீகமாக அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு பசுக்களுக்கான பிரத்தியேக கோசாலை அமைந்துள்ளது. ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ் நாடெங்கும் நாமசங்கீர்த்தனம் செய்தே பக்தர்களின் கைங்கர்யத்துடன் கோவில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

    தல வரலாறு

    கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரத்தில், ஸ்ரீவிட்டல் ருக்மணி பாண்டுரங்கன் கோவில் கும்பாபிஷேகம் ஜூலை 15, 2011 ம் ஆண்டு நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஜெயகிருஷ்ண தீட்சிதர் என்ற விட்டல்தாஸ் மகராஜ், பல கோடி ரூபாய் மதிப்பில், மகாராஷ்டிர மாநிலம், பண்டரிபுரத்தில் உள்ள போலவே, இக்கோவிலை அமைத்துள்ளார்.

    பண்டரிபுரத்தில் இருந்து வந்தருளிய பாண்டுரங்கனும், ருக்மணியும், புதிய கோவிலில் அருள்பாலிகின்றனர். மகாமண்டபம், அர்த்தமண்டபம், நாமசங்கீர்த்தன கூடம், அன்னதானக்கூடம், மகாபக்த விஜயத்தில் இடம்பெற்றுள்ள பக்த சிரோண்மணிகளின் சுதை சிற்பங்கள், பொன் போன்று ஒளிரும் மேல் விதானம், மடப்பள்ளி போன்றவை, பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளன.இங்கு பசுக்களுக்கான பிரத்யேக கோசாலை அமைந்துள்ளது.

    விட்டல்தாஸ் மகராஜ், நாடெங்கும் நாமசங்கீர்த்தனம் செய்து, பக்தர்களின் கைங்கர்யத்துடன் கோவில் திருப்பணி செய்துள்ளார். விமான கும்பாபிஷேகத்தை, விட்டல்தாஸ் மகராஜ் நடத்தி வைத்தார். தொடர்ந்து சுவாமி, தாயார் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விசேஷ தீபாராதனை காட்டப்பட்டது. மண்டலாபிஷேக துவக்கத்தையொட்டி, மகாஅபிஷேகம் நடைபெற்றது.

    காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகள், சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், குருஜி ஹரிதாஸ் கிரி சுவாமிகள், அண்ணா கிருஷ்ண பிரேமி சுவாமிகள் ஆகியோரின் அருளாசியுடன் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    சேங்காலிபுரம் ராமதீட்ஷிதர் முன்னிலை வகிக்கிறார். கோவில் திருப்பணி வேலைகளில் மஹாராஷ்டிரா ஸ்தபதி பாலாஜி, சென்னை ஸ்தபதி செல்வநாதன், பொறியாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஈடுபட்டனர். எங்கும் பார்க்கமுடியாத வகையில் பைபர் கிளாஸில் சீலிங் மோல்டு டெக்கரேஷன் செய்துள்ளனர். 100 கோடி விட்டல் நாமங்களை கீழே உள்ள அறையில் வைத்து அதன் மேலே மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது சிறப்பு ஆகும்.

    ஆயிரம் பசுக்கள்:

    ஸ்ரீவிட்டல் ருக்மணிதேவி சம்ஸ்தானத்தில் 2,000 பசுக்கள் கொண்ட மிகப்பெரிய கோசாலை உள்ளது. ஏகாதசி, கோகுலாஷ்டமி, ஆஷாட ஏகாதசி போன்ற தினங்களில் விசேஷ வழிபாடுகள் இங்கு நடைபெறுகின்றன.

    தினசரி இந்த சந்நிதியில் புஐயதேவரின் 24 அஷ்டபதியும் பாடப்படுவது வேறு எங்கும் காண முடியாத சிறப்பாகும். ஸ்ரீபாண்டுரங்கன். ருக்மணித் தாயார் திருத்தலத்தில் வருஷம் 365 நாள்களும் பகவானின் நாமாவளி ஒலித்துக் கொண்டிருக்கும்.

    அமைவிடம்:

    திருவிடைமருதூர் அருகிலுள்ள கோவிந்தபுரத்தில் ஸ்ரீவிட்டல் ருக்மணி சம்ஸ்தான வளாகத்தில் அமைந்துள்ளது ஸ்ரீபாண்டுரங்கன், ருக்மணித்தாயார் திருத்தலம்

    நடைதிறப்பு

    காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்களிடம் நற்பெயர் பெற்றால் போதும், அவருக்கு சொர்க்கம் உறுதி.
    • நல்லவர்களுக்கு நீ கெடுதல் செய்யாதே

    ஓய்வு என்பது, தற்காலிக ஓய்வு, நிரந்தரமான ஓய்வு என இரு வகைப்படும். ஓய்வு என்பதன் பொருள்: 'தொடர்ச்சியான, ஒரு செயலில் இருந்து விடுபடுவது' என்பதாகும். இந்த விடுபடுதல் என்பது தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இருக்கலாம்.

    நாம் ஈடுபடும் செயலில் இருந்து சிறிது நேரம் நம்மை விடுவித்து களைப்பாறுதல். நமது அன்றாட பணியின் வேலைப்பளு தாக்கத்தில் இருந்து தம்மைத் தாமே ஆசுவாசப்படுத்திக் கொள்ள இளைப்பாறுதல். ஒருநாள் தொடர் வேலையில் மத்தியப்பகுதியில் சற்றுநேரம் அவகாசம் எடுத்துக் கொண்டு தளர்வை போக்க ஓய்வு பெறுதல். நோயில் இருந்து உடல் விடுபட மருத்துவ சிகிச்சை பெற மருத்துவமுறை ஓய்வு, இவையாவும் தற்காலிக ஓய்வுகளாகும்.

    இன்னும், சில ஓய்வுகள் நிரந்தரமானதாக அமைந்துவிடுகிறது. அது, பணிநிறைவு எனும் ஓய்வு. அடுத்தது, வாழ்க்கையில் இருந்து முற்றிலும் விடுபட்டு, இயற்கை எய்தி இறைவனடி நிழலில் இளைப்பாறுதலாகும்.

    'நபி (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் 'இவர் ஓய்வு பெற்றவராவார்; அல்லது இவர் பிறருக்கு ஓய்வு அளித்தவராவார்' என்றார்கள்.

    மக்கள் 'இறைத்தூர் அவர்களே, ஓய்வு பெற்றவர், அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?' என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'இறைநம்பிக்கை கொண்ட அடியார் இறக்கும்போது இவ்வுலகத்தின் துன்பத்தில் இருந்தும், தொல்லையில் இருந்தும் ஓய்வுபெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார்.

    பாவியான அடியான் இறக்கும்போது அவனின் தொல்லைகளிடம் இருந்து மற்ற அடியார்கள் (நாடு) நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு (பெற்று நிம்மதி) பெறுகின்றன' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூகதாதா (ரலி), நூல்: புகாரி)

    'ஒருமுறை, ஒரு பிரேதத்தை கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றி மக்கள் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'உறுதியாகி விட்டது' என்றார்கள். மற்றொருமுறை வேறொரு பிரேதத்தை கடந்து சென்றபோது, மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசினார்கள். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், 'உறுதியாகி விட்டது' என்றார்கள்.

    உடனே உமர் (ரலி), 'எது உறுதியாகி விட்டது?' என்று கேட்டதும், நபி (ஸல்) அவர்கள், 'இவர் விஷயத்தில் நல்லதைக் கூறி புகழ்ந்தீர்கள். எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது. மற்றவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள், எனவே இவருக்கு நரகம் உறுதியாகி விட்டது. ஆக நீங்களே பூமியில் இறைவனின் சாட்சிகளாவீர்கள்' என்று கூறினார்கள்.

    (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி) மக்களிடம் நல்லவிதமாக நடந்து, நல்லதை செய்து, இவர் நல்லவர் என்று மக்களிடம் நற்பெயர் பெற்றால் போதும், அவருக்கு சொர்க்கம் உறுதி. மக்களிடம் மோசமாக நடந்து, மோசடி செய்து, கெட்டபெயர் பெற்று, கெட்டவன் என்று மக்கள் இகழ்ந்தாலே போதும், அவருக்கு நரகம் உறுதி.

    ஹஜ்ஜாஜ் பின் யூசுப் அநியாயத்திலும், அட்டூழியத்திலும், கொடுமைப்படுத்துவதிலும் பிரபலமாகத் திகழ்ந்தான். அப்துல்லாஹ் பின் சுபைர், ஸயீத் பின் சுபைர் போன்றோரை ஈவு இரக்கமின்றி கொன்றான். இறுதியில் அவன் நோய்வாய்ப்பட்டான். நோயின் வேதனை தாங்கமுடியாமல் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களிடம் உதவியும், நிவாரணமும் வேண்டினான். அதற்கு ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் 'நல்லவர்களுக்கு நீ கெடுதல் செய்யாதே, என நான் உன்னைத் தடுத்தேன்.

    இப்போது நீ கடும் சிரமத்தில் மாட்டிக்கொண்டாய்' என்றார். அதற்கு ஹஜ்ஜாஜ் பின் யூசுப் 'ஹஸனே! என்னிடமிருந்து கடும் சிரமம் நீங்கிவிட இறைவனிடம் பிரார்த்திக்கும்படி நான் உம்மை வேண்டிக் கொள்ளவில்லை. மாறாக, எனது உயிர் சீக்கிரமாக கைப்பற்றப்பட வேண்டும் எனவும், எனக்கு ஏற்படும் வேதனை நீடிக்கக்கூடாது எனவும் தான் நான் உம்மை வேண்டும்படி கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.

    ஹஜ்ஜாஜ் இறந்தபோது, அந்த செய்தியை அறிந்த மக்கள் வீதிக்கு வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மஃமூன் இறந்தபோது இமாம் அஹ்மது (ரஹ்) அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். தன்னை நபி என்று வாதிட்ட பொய்யன் முஸைலமா கொல்லப்பட்ட செய்தியை கேள்விப்பட்ட ஜனாதிபதி அபூபக்கர் (ரலி) இறைவனுக்கு தலைவணங்கி, சிரம் தாழ்த்தி நன்றி கூறி மகிழ்ந்தார்.

    நல்லவர்கள் நம்மை விட்டுச் சென்றால் அது நமக்கு கவலை தரும். தீயவர்கள் மரணமானால் அது உலகத்திற்கும், உலக மக்களுக்கும் நிம்மதி தரும் ஓய்வாகும். நல்லவர்களால் இந்த உலகம் நன்மை பெறட்டும்.

    • இயேசு அவரைப் பார்த்து 'அழாதீர்' என்று சொன்னார்.
    • 'இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன் எழுந்திடு' என்றார்.

    ஒரு முறை கப்பர்நாகும் என்ற ஊரில் இருந்து நயீன் என்னும் ஊருக்கு தேவன் இயேசு சென்றார். அப்போது அங்குள்ள மக்கள் இறந்தவர் ஒருவரின் உடலை தூக்கிக்கொண்டு வந்தனர். இறந்து போனவர் ஒரு இளைஞர். தாய்க்கு அவர் ஒரே மகன். கணவனை இழந்த அந்தப்பெண், தனது ஒரே நம்பிக்கையான மகனும் இறந்துவிட்டானே என்பதை எண்ணி அழுது கொண்டு இருந்தார்.

    அப்போது இயேசு அவரைப் பார்த்து 'அழாதீர்' என்று சொன்னார். அதன் பிறகு பாடையின் அருகே சென்று, அதைத் தொட்டு 'இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன் எழுந்திடு' என்றார். உடனே இறந்து போன அந்த இளைஞர் எழுந்து உட்கார்ந்து பேசத்தொடங்கினார். அதன் பின் இயேசு அந்த இளைஞனை அவரது தாயிடம் ஒப்படைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார். இதனை பார்த்த அங்குள்ள மக்கள் ஆச்சரியத்துடன், 'நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றி இருக்கிறார், கடவுள் தம் மக்களைத்தேடி வந்து இருக்கிறார்' என்று கூறினார்கள்.

    இந்த அற்புதமான நிகழ்வு லூக்கா நற்செய்தி 7-வது அதிகாரத்தில் இடம் பெற்று இருக்கிறது. நான்கு நற்செய்தியாளர்களுள் லூக்கா மட்டுமே இந்த நிகழ்வைப் பதிவு செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்பொழுது இந்த இறைவார்த்தை பகுதியை சற்று சிந்தித்து பார்ப்போம். இதனை இரண்டு விதங்களில் பார்க்கலாம். ஒன்று, இயேசு அந்தத்தாயின் மீது இரக்கம் கொண்டதால், இளைஞனைத் தொட்டு உயிர் பெறச்செய்தார், என்பது ஒரு கண்ணோட்டம்.

    இரண்டாவது, அந்த இளைஞன் மீது இயேசு கொண்டிருந்த அபரிமிதமான நம்பிக்கை. அந்த இளைஞன் எழுந்து விட்டால், அவனது தாயைப் பார்த்துக்கொள்வான். அவனது தாய்க்கு ஆறுதலாக இருப்பான் என்று முழுமையாக நம்பியதால், மக்கள் சூழ்ந்து இருந்த கூட்டத்தில் இருந்து நகர்ந்து, அந்த இளைஞனை வைத்திருந்த இடத்திற்குத் தேடிச்சென்று உயிர்கொடுத்தார். இவ்வாறு இரண்டு விதங்களிலும் இந்த வேதாகமப் பகுதியை சிந்தித்துப் பார்க்கலாம்.

    இப்போது இந்த இறைவார்த்தைப் பகுதியை நம் நிகழ்கால வாழ்க்கையோடு பொருத்திப் பார்ப்போம். தற்போதைய தொழில்நுட்ப உலகில் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்குமான இடைவெளி பெரிதாகி கொண்டே வருகிறது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கிறது. அதனை சரி செய்ய ஒரு புரிதல் தேவைப்படுகிறது.

    அந்த புரிதலை அனைவரும் பெறுவதற்காக, ரோம் நகரில் இருக்கிற போப் ஆண்டவர் பிரான்சிஸ் 2019 -ம் ஆண்டு 'கிறிஸ்து வாழ்கிறார்' என்கிற தலைப்பில் ஒரு மடலை எழுதினார். அதில் அவர், 'இளைஞர்கள் திருச்சபையின் நிகழ்காலம். இளைஞர்களின் புனித நிலமாகிய இதயத்திற்குள் செல்கிற போது உங்கள் காலணிகளை கழற்றி விட்டு செல்லுங்கள்' என்று எழுதியுள்ளார்.

    இதில் அவர் சொல்கிற வார்த்தைகள் அவர் சுயமாக எழுதியதல்ல, இளைஞர்கள் பலரிடம் நேரடியாக உரையாடி அவர்களது மனநிலையைப் புரிந்து கொண்டும், திருச்சபையின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு தேவை என்பதை உணர்ந்தும் இவ்வாறு சொன்னார்.

    இது இளைஞர்கள் மீது கொண்டிருக்கிற அன்பை, நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இதுவே இயேசு கொண்டிருந்த பார்வை ஆகும். இந்த பார்வை நாம் அனைவருக்கும் இருக்க வேண்டும். இளைஞர்களிடம் உரையாடும் போது, நமது பழைய சிந்தனைகளைக் கடந்து, திறந்த மனதோடு இளைஞர்களின் புதிய சிந்தனைகளுக்கு செவி கொடுக்க வேண்டும். ஏனெனில் இளைஞர்கள் பலவிதமான மனக்காயங்களோடு தங்கள் வாழ்க்கையை வாழுகின்றனர்.

    இதனால் ஏதாவது ஒன்றிற்கு அடிமையாகி, அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கின்றனர். நயீன் ஊர் இளைஞனை தேடிச்சென்று புதுவாழ்வு கொடுத்த இயேசுவைப் போல, இளைஞர்களைத் தேடிச்சென்று அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொண்டு வழிகாட்டுகிறபோது, இளைஞர்கள் பெரியவர்கள் உறவில் நல்ல புரிதல் ஏற்படும். இளைஞர்களது வாழ்வில் மாற்றம் நிகழும்.

    அவ்வாறு நடக்கிறபோது, 'மிகச்சிறியோராகிய என் சகோதர சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள்' (மத்தேயு:25:40) என்ற இறைவார்த்தை நமது வாழ்வில் நிதர்சனமாகும்.

    அன்பார்ந்தவர்களே! ஒவ்வொரு நாளும் இரவு தூங்கும் முன், இன்று நான் இயேசுவின் பார்வையில் இளைஞர்களையும், மற்ற மக்களையும் பார்த்தேனா? என்ற கேள்வியை கேட்போம். இயேசுவின் பார்வையான அன்போடும், இரக்கத்தோடும், நம்பிக்கையோடும், பொறுமையோடும் இளைஞர்களையும் இந்த சமூகத்தையும் பார்ப்போம்.

    இறைவனின் சாயலாக படைக்கப்பட்ட நாம், அனைவரிலும் அனைத்திலும் இறைவனைக் காண்போம். இறைவனின் சாயலாய் வாழ்வோம்!

    • தேவர்களின் வரிசையில் போய் நின்றான் சுவர்பானு.
    • அகப்பையைக் கொண்டு சுவர்பானுவின் தலையை துண்டித்தாள்.

    ஒரு முறை துர்வாச முனிவரின் சாபத்தால், தேவேந்திரன் தன்னுடைய செல்வம் அனைத்தையும் இழந்தான். அந்த செல்வங்கள் அனைத்தும் கடலுக்குள் சென்று மறைந்துவிட்டன. அதேநேரத்தில் அசுரர்களுடனான போரில் தேவர்களின் பக்கம் இழப்பும் அதிகமாக இருந்தது. அந்த இழப்பு ஏற்படாமல் இருக்க அனைவரும் பிரம்மதேவனிடம் முறையிட்டனர். அவர், பாற்கடலை கடைவதன் மூலம் வெளிப்படும் அமிர்தத்தை அருந்துவதால், தேவர்கள் உயிரிழப்பை தவிர்க்கலாம் என்று ஆலோசனை வழங்கினார்.

    ஆனால் பாற்கடலை கடைய தேவர்களால் மட்டுமே இயலாது என்பதால், அசுரர்களையும் உடன் சேர்த்துக்கொள்ள முன்வந்தனர். அமிர்தத்தில் அவர்களுக்கும் பங்கு கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. திருப்பாற்கடலைக் கடைவதற்காக மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு கடலைக் கடைந்தனர். வாசுகிப் பாம்பின் தலைப்பகுதியை அசுரர்களும், வால் பகுதியை தேவர்களும் பிடித்து இழுத்து, திருப்பாற்கடலைக் கடைந்தனர்.

    கடலில் இருந்து முதலில் வெளிப்பட்ட விஷத்தை, சிவபெருமான் அருந்தினார். அந்த விஷம் அவரது கழுத்தில் நின்றதால், 'நீலகண்டன்' எனப் பெயர் பெற்றார். பின்னர் கடலில் இருந்து பல பொருட்கள் வெளிப்பட்டன. அவற்றில் தேவேந்திரன் இழந்த செல்வங்களும் அடங்கும்.

    அதில் காமதேனு என்ற பசு, உச்சைசிரவஸ் என்ற வெள்ளைக் குதிரை, ஐராவதம் என்ற வெள்ளை யானை மற்றும் கற்பக விருட்சம் ஆகியவற்றை தேவேந்திரன் எடுத்துக்கொண்டான். அகலிகை என்ற அழகான பதுமையை பிரம்மன் தனது வளர்ப்பு மகளாக எடுத்துக்கொண்டார். பின்னாளில் அவளை கவுதம முனிவர் மணம் முடித்தார்.

    திருமகள் என்ற லட்சுமி தேவியை, மகாவிஷ்ணு தன் மார்பில் அமர்த்திக் கொண்டார். பாரிஜாதம், கவுஸ்துப மணி, சங்கு, ஜேஷ்டா தேவி, அப்சரஸ்களும் வெளிப்பட்டனர். இறுதியாக அமிர்த கலசத்துடன் வெளிவந்த தன்வந்திரி பகவானிடம் இருந்து, அசுரர்கள் அமிர்த கலசத்தை பறித்துச் சென்றனர்.

    அமிர்தத்தை யார் முதலில் அருந்துவது என்பதில் அசுரர்களுக்குள்ளேயே கலவரம் மூண்டது. இதில் அமிர்தம் யாருக்கும் கிடைக்காமல் வீணாகிவிடும் நிலை உருவானது. இதனால் தேவர்கள் பெரும் கவலை அடைந்தனர். அவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று, அமிர்தத்தை காத்து அருளும்படி வேண்டினர்.

    தேவர்களின் வேண்டுதலை ஏற்றுக்கொண்ட விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களிடம் சென்றார். மோகினி உருவத்தில் இருந்த மகாவிஷ்ணு, 'நான் அமிர்தத்தை தேவர்களுக்கும் உங்களுக்கும் சரிபாதியாக பங்கிட்டு தருகிறேன்' என்று அசுரர்களிடம் கூறினார். மோகினியின் அழகில் மயங்கிய அசுரர்கள் அமிர்த கலசத்தை அவளிடம் கொடுத்தனர். அமிர்த கலசத்தை வாங்கிய மோகினி, தேவர்களையும் அசுரர்களையும் இரு வரிசைகளாக நிற்கச் சொன்னாள்.

    பின்னர், "முதலில் எந்த வரிசைக்குக் கொடுக்கட்டும். இல்லை ஒருவர் மாற்றி ஒருவராக தரட்டுமா?" என்றாள். அசுரர்கள் 'அமிர்த கலசத்தின் அடிப்பாகத்தில் உள்ள அமிர்தத்தை தங்களுக்கும், தெளிந்த மேல் பகுதியில் இருப்பதை தேவர்களுக்கும் அளிக்கலாம்' என்றனர். அதன்படி தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்கத் தொடங்கினாள் மோகினி. அளவுக்கு அதிகமாகவே தேவர்களுக்கு வழங்கப்பட்டது.

    மோகினியின் சூழ்ச்சியை உணர்ந்த சுவர்பானு என்ற அசுரன், தேவர்களை போல உருவத்தை மாற்றிக்கொண்டு, தேவர்களின் வரிசையில் போய் நின்றான். இதனை கவனிக்காத மோகினி, சுவர்பானுவுக்கும் அமிர்தத்தை வழங்கினாள்.

    அமிர்தம் கிடைத்தவுடன் அதை உடனடியாக பருகிவிட்டான். தான் அமிர்தம் உண்டதை யாரும் அறியவில்லை என்று சுவர்பானு கருதிய நேரத்தில், அவனை சூரியனும், சந்திரனும் இனம் கண்டு கொண்டனர். உடனடியாக அது பற்றி மோகினிக்கு உணர்த்தினர். மோகனி, அமிர்தம் வழங்குவதற்காக தன் கையில் இருந்த அகப்பையைக் கொண்டு சுவர்பானுவின் தலையை துண்டித்தாள்.

    உடலும், தலையும் தனித்தனியாக ஆனாலும், அமிர்தம் அருந்தியதன் விளைவாக சுவர்பானு இறக்கவில்லை. இதற்கிடையில் அசுரர்கள் ஏமாற்ற நினைத்ததாகக் கூறி, அவர்களுக்கு அமிர்தம் வழங்க முடியாது என்று மோகினி தெரிவித்து விட்டாள். இதனால் கோபம் கொண்ட அசுரர்கள், சுவர்பானுவை தங்களோடு சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டனர்.

    உடல் வேறு, தலை வேறாக பிரிந்தாலும், அமிர்தம் உண்ட காரணத்தால் சுவர்பானுவின் துண்டான தலைக்கு பாம்பின் உடலும், உடலுக்கு 5 பாம்பின் தலையும் முளைத்தன. இந்த மாறுபட்ட உடல் அமைப்பைக் கொண்ட அவனை, தேவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.

    இதனால் மிகவும் வருத்தம் அடைந்த சுவர்பானு, பிரம்மதேவரை தஞ்சம் அடைந்தான். தனக்கு பழைய உடல் உருவைத் தரும்படி பிரம்மனிடம் வேண்டினான். பிரம்மதேவரோ, "நாராயணரால் தண்டிக்கப்பட்ட உன்னை, பழைய நிலைக்கு மாற்றுவது என்பது இயலாது. எனவே இருவேறு உடல் பிரிவுகளைக் கொண்டவனாக இருப்பாய்.

    மனித தலையும் பாம்பு உடலும் கொண்ட உடல் அமைப்பிற்கு 'ராகு' என்றும், மனித உடலும், பாம்பின் தலையும் கொண்ட அமைப்புக்கு 'கேது' என்றும் பெயர் அமையும்" என்றார்.

    அப்போது பிரம்மனிடம் சுவர்பானு மீண்டும் ஒரு கோரிக்கையை வைத்தான். "சூரியனும் சந்திரனும் காட்டிக் கொடுத்ததால் தான் எனக்கு இந்த நிலை ஏற்பட்டது. எனவே அவர்களைப் பழி வாங்குவதற்கு அருள்புரிய வேண்டும்" என்றான். அதற்கு பிரம்மன், "பின்னாளில் நீங்கள் நவக்கிரக அமைப்புடன் சேரும்போது, சூரியன் மற்றும் சந்திரன் ஒளிகளை மறைத்து, அவர்களுக்கு கிரகண தோஷத்தை ஏற்படுத்துவீர்கள். மேலும் நீங்கள் இருவரும் மற்ற கிரகங்களைப் போல் முன்னோக்கிச் செல்லாமல், பின்னோக்கி சஞ்சாரம் செய்வீர்கள்" என்று அருள்புரிந்தார்.

    பூமியில் பூண்டாக மாறிய அமிர்தம்

    காசியப முனிவரின் மகன் விப்ரசித்தி. இவருக்கும் சிம்மிகை என்ற அசுர குல பெண்ணுக்கும் பிறந்தவர்தான், சுவர்பானு. பின்னாளில் இவர் ராகு-கேதுவாக மாறினார். மோகினி வழங்கிய அமிர்தத்தை, தேவர்களைப் போல உருமாறி வாங்கி பருகியதற்காக மோகினி, சுவர்பானுவின் தலையை துண்டித்தபோது, அவன் வாய்க்குள் இருந்த சில துளி அமிர்தம், பூமியில் விழுந்தது. அந்த அமிர்தத்தில் இருந்து தோன்றியதுதான் பூண்டு என்று புராணங்கள் சொல்கின்றன.

    அமிர்தத்தில் இருந்து உருவானதால், பூண்டுவுக்கு மருத்துவ குணம் அதிகமாக இருக்கிறது. அதே நேரம் இந்த பூண்டு தெய்வீக காரியங்களில் இருந்து விலக்கிவைக்கப்பட்டது. அமிர்தத்தில் இருந்து தோன்றிய பொருளாக இருந்தாலும் கூட, அது அசுர குலத்தைச் சேர்ந்த ஒருவரின் எச்சிலாக வெளிப்பட்டதில் முளைத்தது என்பதால், அதில் ராட்சச குணம் இருக்கும் என்ற ரீதியில் ஆன்மிகத்தில் இருந்து பூண்டு விலக்கப்பட்டுள்ளது.

    • வருகிற 8-ந்தேதி ராகு-கேது பெயர்ச்சி
    • ராகு-கேது கிரகங்களால் நன்மை பெற பரிகாரங்கள் செய்தால் நலமாக வாழலாம்.

    ராகு-கேது பெயர்ச்சி வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்த நாளில் ராகு-கேது கிரகங்களால் நன்மை பெற சில வழிபாடுகளை செய்தால் நலமாக வாழலாம். ராகு -கேது அருளைப்பெற, நவக்கிரகங்களில் உள்ள ராகு- கேதுவுக்கு பச்சை கற்பூரம் கலந்த பன்னீர் அபிஷேகம் செய்யலாம்.

    * சிதம்பரத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காட்டு மன்னார்குடி தலத்தில் சவுந்தரநாயகி உடனாகிய அனந்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலய இறைவனை அஷ்டநாகங்களும், அவர்களின் தலைவனான அனந்தனும் வழிபட்டு இறைவனருள் பெற்றதாக ஐதீகம். நாகதோஷம், கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் அகன்றிட ராகு-கேது பெயர்ச்சியின்போது இங்கு வந்து வழிபடலாம்.

    * காரைக்குடி செஞ்சை பகுதியில் பெரியநாயகி சமேத நாகநாத சுவாமி கோவில் இருக்கிறது. இங்கு நாக விநாயகர் சன்னிதியும் உண்டு. இங்கு வந்து இறைவனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்யலாம்.

    * பரமக்குடியில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் நயினார்கோவில் என்ற ஊரில் சவுந்தரநாயகி சமேத நாகநாத சுவாமி சன்னிதி உள்ளது. இங்கும் ராகு-கேது பெயர்ச்சி அன்று சீர்காழியில் சிரபுரம் பகுதியில் உள்ள பொன்நாகவள்ளி உடனுறை நாகேஸ்வரமுடையார் கோவிலில் வழிபடலாம்.

    * திருச்சி தெப்பக்குளம் கிழக்கு வீதியில் (மலைக்கோட்டை அடிவாரம்) நாகநாதர் திருக்கோவில் உள்ளது. இங்கு நாகநாதர் திருக்கோவில் உள்ளது. இங்கு ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

    * செம்மங்குடியில் உள்ள கேதுபுரம் கேது தலம் ஆகும். இங்கு வழிபடலாம்.

    * தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம்-திருச்செந்தூர் பாதையில் உள்ள நவதிருப்பதிகளில் ஒரு தலமான தொலைவில் மங்கலம் சென்று வணங்கலாம்.

    * மன்னார்குடி அருகில் பாமினியில் ஆதிசேஷன் வழிபட்ட தலம் உள்ளது. இங்கு வழிபட உடனடி பலன் கிடைக்கும்.

    * மயிலாடுதுறை - பேரளம் அருகில் திருமீயச்சூரில் உள்ள ஸ்ரீலலி தாம்பிகை கோவில் பிரகாரத்தில் பன்னிரு நாகர் உள்ளன. இதற்கு பாலாபிஷேகம் செய்யலாம்.

    * கும்பகோணம் அருகில் நாச்சியார் கோவில் என்ற ஊரில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலில் கல் கருடன் உள்ளது. அவர் உடலில் ஒன்பது இடத்தில் நாகர் உருவம் அமைந்துள்ளது. ஏழு வியாழக்கிழமை தொடர்ந்து அர்ச்சனை செய்யலாம்.

    * கோவை -அவினாசி பாதையில் மோகனூர் அருகில் வாழை தோட்டத்து அய்யன் கோவில் உள்ளது. இது ராகு-கேது பரிகார தலம், பிரார்த்தனை தலமாகும்.

    * ராகு- கேது பெயர்ச்சி நல்ல இடங்களில் ஏற்பட்டாலும் சரி, கெட்ட இடங்களில் மாறினாலும் சரி - அதற்காக பயப்படத் தேவை இல்லை. குண்டலினி சக்தியை தன்னுள் கொண்டு ஜீவ ஜோதியான சித்தர்களின் ஜீவ சமாதிகளில் சென்று வழிபட்டால் போதும். ராகு- கேது பெயர்ச்சி பலனை உங்களுக்கு இனிய பெயர்ச்சியாக மாற்றுவார்கள்.

    * சோளிங்கரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள பெத்த நாகபுடியில் நாகவல்லி சமேத நாக நாதேஸ்வரரை தரிசிக்கலாம்.

    * கொடுமுடியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது ஊஞ்சலூர். இத்தலத்தில் உள்ள நாகேஸ்வரரை வழிபடலாம்.

    * காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு அருகேயுள்ள தலத்தில், மாகாளன் எனும் நாகம், காளத்திநாதர் ஆணைப்படி இங்கு லிங்கம் அமைத்து பூஜித்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள மூலவரான மகாகாளேஸ்வரரை வழிபட்டால் பலன் கிடைக்கும்.

    * ஆதிசேஷன் பூஜித்து அருள் பெற்ற தலம் சென்னை திருவொற்றியூர். இங்குள்ள வடிவுடையம்மன்-உடனுறை படம்பக்கநாதர் மற்றும் மாணிக்கதியாகேஸ்வரை வணங்குங்கள். ராகு-கேதுவால் உண்டான தோஷம் விலகும்.

    * கும்பகோணம்-மயிலாடுதுறை இடையே உள்ளது கதிராமங்கலம். நவமி திதி அன்று இந்த தலத்திற்கு சென்று காவிரியில் நீராடி இங்குள்ள வனதுர்க்கை அம்மனை வழிபடுங்கள். ராகு பகவானால் உண்டான தீமை விலகும்.

    * சிவகங்கை அருகில் உள்ள காளையார் கோவிலுக்கு சென்று கொண்டின்ய மகரிஷி மற்றும் நாகங்களின் அரசன் வழிபட்ட மகமாயி அம்மன், கானக்காளையீஸ்வரரை வழிபடுங்கள். ராகு மற்றும் கேதுவால் உண்டான தோஷம் விலகும்.

    * நன்னிலம்- குடவாசல் பேருந்து சாலையில் உள்ள வாஞ்ச நாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகதீர்த்தத்தில் நீராடி, நாகநாத சுவாமியையும், நாகராஜரையும் பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.

    * விருத்தாசலத்திற்கு தெற்கே சுமார் 7 கி.மீ. தொலைவில் நாகேந்திரபட்டினம் எனும் ஊரில் உள்ள நீலமலர் கண்ணியம்மை உடனுறை நீலகண்ட நாயகேஸ்வரை வணங்குங்கள். ராகு மற்றும் கேதுவினால் உண்டான தோஷங்கள் விலகும்.

    • ராகுவிற்கு எந்த வீடும் சொந்தமில்லை.
    • அனுகூல ராகு கீழான ஒருவரை சக்கரவர்த்தியாக மாற்றும் வலிமை படைத்தவர்.

    சந்திரனையும், சூரியனையும் பலம் இழக்கும்படியாகவும், ஒளி குன்றும்படியாகவும் கட்டுப்படுத்தும் ஆற்றல் ராகு மற்றும் கேதுவிற்கு உண்டு. ராகுவிற்கு எந்த வீடும் சொந்தமில்லை. அதாவது எந்த ராசியும் ராகுவிற்கு சொந்தமாக இல்லை. ராகு எந்தராசியில் இருக்கின்றாரோ, எந்த கிரகத்தினால் பார்க்கப்படுகின்றாரே சிறந்த இடத்தில் சேர்க்கை பெற்றுள்ளாரோ அந்த இடத்தின் பலன்களை முழுமையாக தருவார்.

    ஒருவரது ஜாதகத்தில் அனுகூலம் தரும் நல்ல இடத்தில் ராகு இருந்து விட்டால், அந்த நபருக்கு நல்ல மனைவி, நல்ல வேலைக்காரர், ஆட்சி மற்றும் செல்வாக்கு ஆகியவை அமையும். பல்வேறு மொழிகளில் தேர்ச்சி பெறுவதற்கும் ராகுவேகாரணமாகிறார். மருந்து, வேதியியல், நூதன தொழில் நுட்பக் கருவிகள் ஆகியவற்றுக்கும், அவ்வப்போது மாறி வரும் நவ நாகரிகத்திற்கும் ராகுவுடன் இணைந்த சுக்ரன் காரணமாக அமைகிறார்.

    அரசியல் செல்வாக்கு, ஆட்சியுரிமை போன்றவற்றுக்கும் ராகுவின் அனுக்கிரகம் நிச்சயம் தேவை. அனுகூல ராகு கீழான ஒருவரை சக்கரவர்த்தியாக மாற்றும் வலிமை படைத்தவர். மந்திரஜாலம், கண்கட்டி வித்தை போன்றவைகளும் ராகுவின் அனுக்கிரகத்தால் தான் கைவரப்பெறும். ராகு ஒருவரை குபேரபுரிக்கு அழைத்துச் செல்வார்.

    அதேநேரத்தில் ராகு தோஷம் ஒருவருக்கு அமைந்தால். அந்த நபர் மிகவும் கடுமையான பலன்களையும் அனுபவிப்பார். ஒருவரது ஜாதகத்தில் 7-வது இடத்தில் ராகு இருப்பதால் திருமணம் தாமதமாகிறது. இல்லற வாழ்க்கை சிறப்பதற்கும் ராகுவின் அனுக்கிரகம் தேவை. 5-ம் இடத்தில் இருக்கும் ராகுவால் புத்திர தோஷம் ஏற்படுகிறது. ஆகவே களத்திர தோஷம், புத்திரதோஷம் ஆகியவை நீங்குவதற்கு ராகுவை வழிபடுதல் வேண்டும்.

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருநாகேஸ்வரம். இங்கு நாகநாத சுவாமி கோவில் உள்ளது. ராகு பகவான். சிவபெருமானை பூஜித்த சிறப்புமிக்க தலம் இது. ஆதலால் தான் இந்த தலத்தை 'திருநாகேஸ்வரம்' என்று அழைக்கிறார்கள்.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்தில், நாகநாத சுவாமி, பிறையணி அம்மன், கிரிகுஜாம்பிகை ஆகியோர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இந்தக் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் ராகு பகவான் தனது இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார்.

    சுசீல முனிவரின் பிள்ளையை, அரவாகிய ராகு தீண்டியது. இதனால் ராகுவிற்கு சாபம் ஏற்பட்டது. இந்த சாபம் நிவர்த்தி பெற நான்கு தலங்களை வழிபட்டு முடிவில் திருநா கேஸ்வரத்தில் உள்ள நாகநாத சுவாமியை மகா சிவராத்திரி நாளில் வழிபட வேண்டும். அதன்படியே ராகு பகவான் நாகநாத சுவாமியை வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார்.

    அதோடு இத்தல சிவபெருமான். ராகுவுக்கு ஒரு வரத்தையும் அளித்தார். "இத்தலத்திற்கு வந்து என்னை வழிபடும் பக்தர்கள் உன்னையும் வணங்கினால், உன்னால் ஏற்படக் கூடிய கால சர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம் ஆகியவை நீங்கும்" என்று அருளினார்.

    அதன்படி ராகு பகவானும் இந்த ஆலயத்தில் மங்கள ராகுவாக, நாககன்னிமற்றும் நாகவள்ளி ஆகிய இரு தேவியருடன் நிருதி மூலையில் அமர்ந்து, தன்னை வணங்கும் பக்தர்களுக்கு தோஷங்களை நீக்கி அருள்பாலிக்கிறார்.

    பல்வேறு தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், இத்தல சூரிய புஷ்கரணியில் நீராடி, நாகநாத சுவாமியை வழிபட்டு, பின்னர் ராகுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி நன்மை கிடைக்கும். இந்த ஆலயத்திற்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து எண்ணற்ற பக்தர்கள் வந்து பால் அபிஷேகம் செய்து வழிபட்டு செல்கின்றனர்.

    இங்குள்ள ராகு பகவானுக்கு, பாலா பிஷேகம் செய்யும்போது, அந்த பாலானது நீல நிறமாக மாறும் அதிசயம் நிகழ்கிறது. இந்த ஆலயத்தில் ராகு-கேது பெயர்ச்சி நடைபெறும் நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டால் அதற்கேற்ற பலன்கள் கிடைக்கும்

    • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.
    • திருநாளைப்போவார் நாயனார் குரு பூஜை

    3-ந்தேதி (செவ்வாய்)

    * கார்த்திகை விரதம்.

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * திருச்செந்தூர் முருகப்பெருமான், திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பவனி.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    4-ந்தேதி (புதன்)

    * வியதிபாத மகாளயம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.

    * திருநாளைப்போவார் நாயனார் குரு பூஜை

    * மேல்நோக்கு நாள்.

    5-ந்தேதி (வியாழன்)

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை!.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருவல்லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சனம்.

    * சமநோக்கு நாள்.

    6-ந்தேதி (வெள்ளி)

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

    * திருவல்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    * மேல்நோக்கு நாள்.

    7-ந்தேதி (சனி)

    * திருவல்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோவிலில் கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா.

    * பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு கண்டருளல்.

    * வாடிப்பட்டி குலசேகரன் கோட்டை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    8-ந்தேதி (ஞாயிறு)

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

    * திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    9-ந்தேதி (திங்கள்)

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதியில் கருடாழ் வாருக்கு திருமஞ்சனம்,

    * கீழ்நோக்கு நாள்.

    ×