என் மலர்
வழிபாடு
- ராமபிரான் யோக நித்திரை நிலையில் எழுந்தருளியுள்ளார்.
- ராமபிரானின் கைகளில் ஆயுதங்கள் ஏதுமில்லை.
கோவில் தோற்றம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள நெடுங்குணம் என்ற இடத்தில் ராமபிரான் மிக அரிதான திருக்கோலத்தில் யோக நித்திரை நிலையில் எழுந்தருளியுள்ளார்.

மகாபாரதத்தை இயற்றிய வியாசரின் மகன் சுகப் பிரம்ம மகரிஷி. இவர் கிளித் தலையும், மனித உடலும் கொண்டவர். ஒரு சமயம் சுகப் பிரம்ம ரிஷி, இத்தலத்தில் இருந்து ராமபிரானை நினைத்து தவம் இயற்றிக் கொண்டிருந்தார்.
இலங்கையில் ராவணனை வதம் செய்து முடித்து திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில், வழியில் இத்தலத்தில் சுகப் பிரம்ம ரிஷியின் ஆசிரமத்துக்கு ராமபிரான் எழுந்தருளினார். சுகப்பிரம்ம மகரிஷி தான் பாதுகாத்து வைத்திருந்த அரிய சுவடி ஒன்றை, ராமனுக்கு வழங்கினார்.
சுகப் பிரம்ம ரிஷியிடம் இருந்து பெற்ற ஓலைச்சுவடியை அனுமனிடம் கொடுத்து அவற்றைப் படிக்குமாறு பணித்தார். அனுமனும் பத்மாசனத்தில் அமர்ந்து அதனைப் படிக்கலானார்.
அனுமன் வாசிக்க ராமபிரான் அதற்கு ஞான விளக்கம் தந்தார். பின்னர் சுகப் பிரம்ம மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று இந்தத் தலத்தில் ஒருநாள் தங்கினார் ராமபிரான்.

இத்தலத்தில் சீதாதேவி, லட்சுமணன் மற்றும் அனுமனுக்கு சாஸ்திர விளக்கங்களை உபதேசித்த ராமன், அதே கோலத்தில் இங்கு எழுந்தருளி இருப்பதாக ஐதீகம்.
ஐந்து நிலை ராஜகோபுரம் பிரமாண்டமான வடிவத்தில் அமைந்துள்ளது. கோவிலுக்குள் நுழைந்ததும் வலது புறம் கல்யாண மண்டபமும், இடப்புறம் பதினாறு கால் ஊஞ்சல் மண்டபமும் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. வெளி திருச்சுற்றில் பலிபீடம், கொடிமரம், இரண்டாம் மதில், ஐந்து நிலை கோபுரம் காட்சி தருகின்றன.
கருவறையில் வலப்புறத்தில் லட்சுமணன் நின்ற கோலத்தில் வில் அம்போடு காட்சி தருகிறார். இடதுபுறத்தில் சீதாபிராட்டியார் அமர்ந்த திருக்கோலத்தில் வலது கையில் தாமரை ஏந்தி காட்சி தருகிறார். நடுவில் ராமபிரான் பத்மாசனத்தில் அமர்ந்து தனது வலது கரத்தினை சின்முத்திரை அமைப்பில் மார்பில் வைத்தபடி, கண்களை மூடி யோக நிலையில் காட்சி தருவது தனிச் சிறப்பு.
ராமபிரானின் கைகளில் ஆயுதங்கள் ஏதுமில்லை. ராமருக்கு எதிரில் அனுமன் பத்மாசனத்தில் அமர்ந்து தனது கரங்களில் பிரம்ம சூத்திர சுவடிகளை ஏந்தி வாசிக்கும் கோலத்தில் காட்சி தருவதும் வேறெங்கும் காண முடியாத அற்புதக் காட்சியாகும். இத்தலத்தின் உற்சவர் விஜயராகவப் பெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியோடு காட்சி தருகிறார்.
அர்த்த மண்டபத்தின் வடப்புறம் உள்ள மேடை மீது விஷ்வக்சேனர், ஆளவந்தார் மற்றும் ஆழ்வார்கள் சிலாரூபத்தில் காட்சி தருகின்றனர். வெளி திருச்சுற்றின் வடமேற்கில் கிழக்கு நோக்கிய திசையில் செங்கமலவல்லி தாயார் சன்னிதி அமைந்துள்ளது.

யோக ராமர் திருக்கோவிலின் நேர் எதிரே சஞ்சீவி அனுமன் சன்னிதி உள்ளது. இந்த அனுமன் சன்னிதியில் இரட்டை ஆஞ்சநேயர் காட்சி தருவதும் ஒரு அபூர்வ அமைப்பாகும்.
இத்தலத்தில் சக்கரத்தாழ்வார் சன்னிதி, கல்யாண வேங்கடேசப் பெருமாள் சன்னிதி முதலான சன்னிதிகளும் அமைந்துள்ளன. இத்தலத்தின் திருச்சுற்று மண்டபத்தின் வடக்குப்பகுதியில் விகனசர் சன்னிதி உள்ளது.
விகனசர் தன் பின்னிரு கரங்களில் ஆழியும் சங்கும் கொண்டும், முன் வலக்கரத்தினை சின் முத்திரையில் வைத்தும், முன் இடக்கரம் அஸ்த முத்திரையும் கொண்டு அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலத்தின் தீர்த்தம் சுகர் தீர்த்தம். இது சூரிய தீர்த்தம் என்றும் வழங்கப்படுகிறது.

ஆடி மாதத்தில் பவித்ரோத்ஸவமும், வைகாசி மாதத்தில் கருடசேவை, கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி விழாவும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள யோகராமரை தரிசிப்பவர்களுக்கு ஞானம் கைகூடும். இல்லறம் செழிக்கும் என்பது ஐதீகம்.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
வந்தவாசியில் இருந்து சேத்துப்பட்டு செல்லும் சாலையில் உள்ளது, நெடுங்குணம் திருத்தலம்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-12 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவாதசி (முழுவதும்)
நட்சத்திரம்: அஸ்தம் காலை 6.35 மணி வரை பிறகு சித்திரை
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராமர் காலை திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர் வேதாரண்யம் ஸ்ரீசிவபெருமான் காலை அபிஷேகம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் திருப்புளிங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மன் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தனம்
ரிஷபம்-ஊக்கம்
மிதுனம்-நலம்
கடகம்-புகழ்
சிம்மம்-லாபம்
கன்னி-பெருமை
துலாம்- கவனம்
விருச்சிகம்-மகிழ்ச்சி
தனுசு- கீர்த்தி
மகரம்-குழப்பம்
கும்பம்-இரக்கம்
மீனம்-இன்பம்
- பாரம்பரிய வழக்கப்படி பூக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- தேங்காய்களை கொப்பரை தொழிலாளர்கள் சட்ட விரோதமாக சேகரிக்க தடை.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களது வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை தேவசம் போர்டு செய்து வருகிறது. கேரள ஐகோர்ட்டும் பக்தர்கள் வசதிக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் சபரிமலை சன்னிதானத்தில் ஆர்க்கிட் மலர்கள் மற்றும் இலைகளை அலங்காரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று தேவசம் போர்டுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
பாரம்பரிய வழக்கப்படி பூக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவற்றை தினமும் மாற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், எஸ்.முரளி கிருஷ்ணா ஆகியோர் உத்தர விட்டு உள்ளனர்.

மேலும் பக்தர்கள் உடைக்கும் தேங்காய்களை கொப்பரை தொழிலாளர்கள் சட்ட விரோதமாக சேகரிப்பதை தடுக்க சன்னிதானம் நிர்வாக அதிகாரி மற்றும் தேவசம் விஜிலென்ஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
- திருப்பதியில் நேற்று 63, 637 பேர் தரிசனம் செய்தனர், 24,016 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
- நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி 10 முதல் 19-ந்தேதி வரை வைகுண்ட துவார தரிசனம் நடைபெற உள்ளது.
வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் குறித்து திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் வெங்கய்ய சவுத்ரி கூறியதாவது:-
வைகுண்ட ஏகாதசி ஜனவரி 10 முதல் 19-ந்தேதி வரை நடைபெறுகிறது.
வைகுண்ட ஏகாதசி நடைபெறும் 10 நாட்களும் சாதாரண பக்தர்களும் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக தரிசனம் செய்வதற்காக விஐபி பிரேக் தரிசனம், ஏழை குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், ராணுவ வீரர்கள் உள்ளிட்டோருக்கான சிறப்பு ஆர்ஜித தரிசன சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் வைகுண்ட ஏகாதசி நாட்களில் அன்னதான பிரசாத கூடத்தில் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதியில் நேற்று 63, 637 பேர் தரிசனம் செய்தனர், 24,016 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.20 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- சூரியனுடன் ராகு அல்லது கேது அல்லது சனி அல்லது மாந்தி இருப்பது பிதுர் தோஷம்.
- கன்றுடன் கூட பசுவை தானம் செய்ய வேண்டும்.
ஜோதிடர்கள் சில நேரங்களில் நமது ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்கிறது, அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். என்ன காரணம் தெரியுமா?
சித்திரை, ஆவணி, ஐப்பசி மாதத்தில் பிறந்தோருக்கும், மாத பிறப்புக்கு முன்பின் 15 நாழிகையில் பிறந்தோருக்கும் பிதுர்தோஷம் உண்டாகிறது.

ஜாதகத்தில் சூரியனுடன் ராகு அல்லது கேது அல்லது சனி அல்லது மாந்தி இருப்பது பிதுர் தோஷம் என்று சொல்வார்கள். இவர்களுடன் குரு அல்லது புதன் சம்பந்தம் எனில் குலதெய்வ கோபமும் உண்டு என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
வீட்டில் பராமரிப்பு இல்லாமல் பெரியோர்கள் இறந்து விட்டார்கள் என்றாலோ துர் மரணங்களால்" விஷம், தற்கொலை போன்ற காரணங்களால் இறந்திருந்ததாலோ அந்த காரணம் வருங்கால சந்ததியினருக்கு பிதுர் தோஷமாக உருவெடுத்து வந்து அவர்தம் நல்வாழ்வுக்கு தடையாக வந்தடையும் " என்பது ஆன்றோர் கூற்று.
எனவே அதற்கு தோஷப் பரிகாரமாக காசியில் பித்ரு சிரார்த்தம், அல்லது ஆயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் அல்லது கன்றுடன் கூட பசுவை தானம் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்ய இயலாது எனில் தினமும் காலையில் குளித்து சூரியனை நமஸ்காரம் செய்து பின்னர் கீழ் உள்ள சுலோகத்தை பொருளுணர்ந்து கூறிவிட்டு தூய்மையான இடத்தில் நீர் விட்டு காகத்திற்கு அன்னமிட வேண்டும். தினமும் இவ்வாறு செய்தால் பித்ருக்கள் மனமகிழ்ச்சியுடன் ஆசி வழங்குவார்கள் என்பதால் தோஷம் நீங்கப் பெற்று நல்வாழ்வு பெறுவது கண்கூடாக காணும் உண்மை.

பித்ரு சுலோகம்:
ஓம் நம: பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவே மயாய ச ஸுகதாய ப்ரசன்னாய ஸுப்ரீதாய மகாத்மனே"
"என் பிறப்பிற்குக் காரணமான முன்னோர்களே! தெய்வீக சக்தி பெற்றவர்களே! உங்கள் ஆசியால் எங்களுக்கு நல்வாழ்வும் மகிழ்ச்சியும் உண்டாகட்டும். நல்லவர்களால் போற்றப்படும் உங்களை வணங்குகிறோம்" என்பது இந்த சுலோகத்தின் பொருள்.
மானிட அவதாரம் எடுத்து வந்த ராம பிரான் ராமேஸ்வரத்தில் தனது தந்தை தசரதருக்கு" பிதுர் சிரார்த்தம் "செய்து வழிபட்டார். அது மானிட கடமைகளில் ஒன்று என்பதை வலியுறுத்தியுள்ளார்.
எனவே நாமும் ஸ்ரீராமபிரான் வழிநின்று நமது ஜென்ம கடன் தீர்த்து நல்வாழ்வு பெற்று சுபிட்சமாக வாழ்வோம்.
- பாட்னாவிலிருந்து நூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கயா.
- இந்துக்களுக்கும், பவுத்தர்களுக்கும் புனித தலமாகத் திகழ்கிறது.
கயா செல்லாமல் காசி யாத்திரை நிறைவு பெறாது என்பார்கள்.
புராண காலத்தில் கயாசுரன் என்பவன், பிரம்மனை நோக்கி கடுமையான தவம் புரிந்தான். அவன் முன்பாக தோன்றிய பிரம்மன், "உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு கயாசுரன், "தேவர்கள் அனைவரையும் வெல்லும் வரம் எனக்கு வேண்டும்" என்ற வரத்தைக் கேட்டு பெற்றான்.

இதையடுத்து தேவர்கள் அனைவரையும் வென்ற கயாசுரன் அவர்களை துன்புறுத்தினான். இதனால் தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று தஞ்சமடைந்தனர். இதையடுத்து கயாசுரனுடன் போரிட்ட சிவபெருமான், அவனை காசியில் வைத்து சூலத்தால் குத்தி, அவனது தோலை உரித்ததாக புராணத்தில் உள்ளது.
இன்னொரு புராணத்தின் படி, கயாசுரனால் துன்பப்பட்ட தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் சரணடைந்தனர். கயாசுரன் இருப்பிடம் சென்ற விஷ்ணு, "உனக்கு தேவையான வரத்தை தருகிறேன். தேவர்களை துன்புறுத்துவதை நிறுத்து" என்றார்.

உடனே கயாசுரன், "பாவங்களைப் போக்கும் அனைத்து தீர்த்தங்களையும் விட, நான் உயர்ந்த தீர்த்தமாக இருக்க வேண்டும். அதற்கு என் புனிதமான உடலை தொடுபவர்கள் அனைவரும் மோட்சத்திற்குச் செல்ல வேண்டும்" என்ற வரம் கேட்டான். மகாவிஷ்ணுவும் அந்த வரத்தை அருளினார்.
அதன்படி கயாசுரனின் உடல், புனிதமானதாக மாறியது. பாவம் செய்பவர்கள் அனைவரும், கயாசுரனின் உடலை தொட்டு மோட்சத்திற்குச் செல்லத் தொடங்கினர்.
இதைக் கண்ட எமதர்மன், "இது என்ன அநியாயமாய் இருக்கிறது. பாவம் செய்பவர்கள் அனைவருமே மோட்சத்துக்கு செல்வர் என்றால், நரக தண்டனை யார்தான் அனுபவிப்பது" எனக் கேட்டு விஷ்ணு பகவானிடம் முறையிட்டார்.
உடனே விஷ்ணு பகவான் பிரம்மனை அழைத்து "நீ கயாசுரனிடம் சென்று 'உன் உடல் புனிதமானது. ஆகவே அதைக் கொண்டு யாகம் செய்ய விரும்புகிறோம். எனவே யாகம் செய்ய உன் உடலைத் தர வேண்டும்' என்று கேள்" என்றார்.
பிரம்மனும் அப்படியே கயாசுரனிடம் கேட்க, அவனும் தன்னுடைய உடலைக் கொடுத்தான். அவனின் உடல் மீது தேவர்கள் புடை சூழ அமர்ந்து, பிரம்மன் வேள்விளைத் தொடங்கினார். வேள்வி முடியப்போகும் தருவாயில், கயாசுரனின் தலை அசைய ஆரம்பித்தது.

பிரம்மனின் உத்தரவுப்படி, கயாசுரனின் தலை மீது ஒரு கல்லை எடுத்து வைத்தார், எமதர்மன். அப்போதும் கயாசுரனின் தலை அசைவது நிற்கவில்லை. அனைவரும் மகாவிஷ்ணுவை வேண்டினர்.
அப்போது மகாவிஷ்ணு அங்கு தோன்றி, தன் கதாயுதத்தால் கயாசுரனின் தலை அசையாதபடி தடுத்து நிறுத்தினார். மேலும் கயாசுரனிடம் "உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டார்.
அதற்கு கயாசுரன், "நான் கேட்பது பழைய வரம்தான் என்றாலும், அதையே எனக்கு தந்தருள வேண்டும். இந்த இடம் என் பெயரால் வழங்கப்பட வேண்டும். இங்கு வந்து யார் ஒருவர் தன் முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்தாலும், அவர்கள் செய்த பாவங்கள் விலகி, முக்தி கிடைக்க வேண்டும்" என்றான்.

விஷ்ணு பகவானும் மகிழ்ந்து "அப்படியே ஆகட்டும்" என வரம் கொடுத்ததாக சொல்வார்கள். இந்த புராண நிகழ்வு ளின் காரணமாகவே, இங்குள்ள பல்குனி நதியும், விஷ்ணு பாதமும், அட்சய வடமும் புனிதமானதாக கருதப்படுகிறது.

பாட்னாவிலிருந்து நூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, கயா. ஒரு காலத்தில் வரலாற்று ரீதியாக புகழ்பெற்ற மகத பேரரசின் ஒரு பகுதியாக இருந்த இந்த நகரம், பல்குனி நதியின் ஓரத்தில் அமைந்துள்ளது. இந்துக்களுக்கும், பவுத்தர்களுக்கும் இது ஒரு புனித தலமாகத் திகழ்கிறது.
- 28-ந்தேதி பிரதோஷம்.
- 30-ந்தேதி அமாவாசை.
26-ந்தேதி (செவ்வாய்)
* சுமார்த்த ஏகாதசி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* சமநோக்கு நாள்.
27-ந்தேதி (புதன்)
* முகூர்த்த நாள்.
* வைஷ்ணவ ஏகாதசி.
* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* திருத்தணி முருகப்பெருமாலுக்கு பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
28-ந்தேதி (வியாழன்)
* முகூர்த்த நாள்.
* பிரதோஷம்.
* திருச்சானூர் பத்மாவதி தாயார் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.
* சமநோக்கு நாள்.
29-ந்தேதி (வெள்ளி)
* முகூர்த்த நாள்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
30-ந்தேதி (சனி)
* அமாவாசை.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள், விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தல்.
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
1-ந்தேதி (ஞாயிறு)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
2-ந்தேதி (திங்கள்)
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* திருவெண்காடு, திருக்கழுக்குன்றம். திருவாடானை, திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
* கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
- முருகர் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம்கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-11 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: ஏகாதசி நாளை விடியற்காலை 5.23 மணி வரை பிறகு துவாதசி.
நட்சத்திரம்: அஸ்தம் (முழுவதும்)
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம்கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகப் பெருமான் அபிஷேகம், அலங்காரம். சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சுகம்
ரிஷபம்-நட்பு
மிதுனம்-வரவு
கடகம்-பக்தி
சிம்மம்-வெற்றி
கன்னி-பரிசு
துலாம்- பாராட்டு
விருச்சிகம்-பொறுமை
தனுசு- பொறுப்பு
மகரம்-ஆதரவு
கும்பம்-புகழ்
மீனம்-போட்டி
- கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ந்தேதி நடைபெறுகிறது.
- இணையதளம் வாயிலாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும்.
திருவண்ணாமலை:
மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ந்தேதி நடைபெறுகிறது.
விழாவில், அன்னதானம் வழங்க விரும்பும் தனி நபர்கள், நிறுவன்ங் www.foscos.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
இதுதவிர, திருவண்ணாமலை - செங்கம் சாலை, பழைய அரசு மருத்துவமனையில் இயங்கும் உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் இன்று முதல் வருகிற 4-ந்தேதி வரை நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளித்து அனுமதி பெறலாம்.
விண்ணப்பத்துடன் கடவுச் சீட்டு அளவு புகைப்படம் முகவரிக்காக ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட சான்றின் நகல் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடம் நாள், நேரத்தில் மட்டுமே அன்ன தானம் வழங்க வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்கக்கூடாது.
பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் கிரிவலப் பாதையில் இருந்து 100 மீட்டர் உள்புறம் அன்னதானம் வழங்க வேண்டும். நோய்த்தொற்று உள்ளவர்கள் அன்னதானம் சமைக்கவோ, வழங்கவோ அனுமதிக்கக் கூடாது.
வாழை இலையில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். உணவுப் பொருள்கள் தரமானதாக, தூய்மையானதாக, கலப்படம் இல்லாமல் இருக்க வேண்டும்.
இந்த வழிகாட்டு முறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற் கொள்ளப்படும். மேலும், விவரங்களுக்கு 044-237416, 9047749266, 9865689838 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சபரிமலைக்கு ரூ.41கோடியே 64 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
- பக்தர்களை சன்னதிக்கு நேராக அனுப்ப சில மாற்றங்கள்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன்கோவிலில் மண்டல பூஜை கடந்த 16-ந்தேதி தொடங்கி யது. தினமும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டு நேற்றுடன் 9 நாட்கள் ஆகும் நிலையில், 6 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ளனர். ரூ.41கோடியே 64 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பக்தர்கள் வருகை மற்றும் வருமானம் அதிகம் என்று தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்யாமல் திரும்ப வேண்டிய அவசியம் இருக்காது என்றும், அதற்கான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்யவும், தினமும் அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு வருவதற்கும் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை தேவசம்போர்டு செய்திருக்கிறது.
கூடுதல் நேரம் சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்று பக்தர்களின் தரப்பில் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.
அதற்கான ஏற்பாடுகளை செய்ய தேவசம்போர்டு தயாராகி வருகிறது. தற்போது பதினெட்டாம் படி ஏறும் பக்தர்கள், சாமி தரிசனம் செய்ய செல்வதற்கு சன்னிதான பகுதியில் உள்ள மேம்பால பகுதியில் நடந்து செல்ல வேண்டும். கூட்ட நெரிசல் அதிகம் உள்ள நேரங்களில் பக்தர்கள் இந்த மேம்பால பகுதியில் வெகுநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படும்.
இதனை மாற்றுவது குறித்து தேவசம்போர்டு பரிசீலனை செய்து வருகிறது. பதினெட்டாம் படி ஏறி வரும் பக்தர்களை, பாலத்தில் ஏறச்செய்யாமல் நேரடியாக சன்னதிக்கு முன்புறம் அனுப்புவதன் மூலம் பக்தர்கள் கூடுதல் நேரம் சாமியை தரிசிக்க முடியும். ஆகவே அந்த முறையை செயல்படுத்த தேவசம் போர்டு திட்டமிட்டு வருகிறது.
இதுதொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித் துள்ளார். அவ்வாறு பாலத்தில் ஏறிச் செல்லாமல் பக்தர்களை சன்னதிக்கு நேராக அனுப்பவதற்கு சில மாற்றங்களை செய்ய வேண்டும். அதனை செய்த பிறகு இந்த முறை அமல்படுத்தப்படலாம் என தெரிகிறது.
- கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.
- மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-10 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: தசமி பின்னிரவு 3.17 மணி வரை பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: உத்திரம் மறுநாள் விடியற்காலை 4.01 மணி வரை பிறகு அஸ்தம்.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பன் கொலு தர்பார் காட்சி. மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை. திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் கோவில்களில் 1,008 சங்காபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் கோவிலில் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மேன்மை
ரிஷபம்-நேர்மை
மிதுனம்-சிந்தனை
கடகம்-அனுகூலம்
சிம்மம்-உழைப்பு
கன்னி-சாதனை
துலாம்- வெற்றி
விருச்சிகம்-போட்டி
தனுசு- உறுதி
மகரம்-ஓய்வு
கும்பம்-கவனம்
மீனம்-நட்பு
- கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.
- மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-10 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: தசமி பின்னிரவு 3.17 மணி வரை பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: உத்திரம் மறுநாள் விடியற்காலை 4.01 மணி வரை பிறகு அஸ்தம்.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பன் கொலு தர்பார் காட்சி. மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை. திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் கோவில்களில் 1,008 சங்காபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் கோவிலில் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மேன்மை
ரிஷபம்-நேர்மை
மிதுனம்-சிந்தனை
கடகம்-அனுகூலம்
சிம்மம்-உழைப்பு
கன்னி-சாதனை
துலாம்- வெற்றி
விருச்சிகம்-போட்டி
தனுசு- உறுதி
மகரம்-ஓய்வு
கும்பம்-கவனம்
மீனம்-நட்பு






