என் மலர்
கோவில்கள்
ஆசியாவிலேயே மிக பிரமாண்டமாக, ஈரோடு மாவட்டத்தில் ஸ்வர்ண ஹர்ஷண பைரவர் கோவில் உருவாகி வருகிறது.
ஆசியாவிலேயே மிக பிரமாண்டமாக, ஈரோடு மாவட்டத்தில் ஸ்வர்ண ஹர்ஷண பைரவர் கோவில் உருவாகி வருகிறது. தமிழகத்தில், பைரவருக்கு ஒரு சில இடங்களில் தனிக்கோவில்கள் உள்ளன. ஆனாலும், ஸ்வர்ண ஹர்ஷண பைரவர் கோவில், ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறையை அடுத்த, ராட்டை சுற்றிப்பாளையம் கிராமத்தில், பல சிறப்புகளுடன் ஒரு ஏக்கர் பரப்பளவில், உருவாகி வருகிறது.
கோவில் என்றாலே, ராஜகோபுரம் தான் பிரமாண்டமாக இருக்கும். இங்கு ராஜகோபுரத்துக்குப் பதில், 33 அடி உயரத்தில் பிறந்த மேனியாக கால பைரவர் சிலை வடிவமைக்கப்படுகிறது.
மேலும், 125 அடி நீள கலை நயமிக்க மண்டபம், அதை சுற்றிலும், 63 பைரவர்கள் வீற்றிருக்கும் வகையிலும், கர்ப்பகிரக கோபுரம், பிரமிடு முறையிலும் உருவாக்கப்படுகிறது.
பிரமாண்ட கோவிலை, அமைத்து வரும், விஜய் சுவாமிகள் கூறியதாவது:
அடிக்கடி கனவில் பைரவர் தோன்றியதால், நாம் ஏன் பைரவருக்கு கோவில் கட்டக்கூடாது என்கிற எண்ணம் தோன்றியது. அதன் வெளிப்பாடு தான், ஐந்து ஆண்டுகளாக தனி மனிதனாக நின்று கோவில் கட்டும் பணிகளில் போராடி வருகிறேன். என் பணிகள் பாதி முடிந்தன.
உள்நாடு, வெளிநாடு சுற்றுலா பயணியர் கண்டுகளிக்கவும், பக்தர்கள் வணங்கும் கோவிலாகவும், கால பைரவர் கோவில் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

வட பகுதியைப் போலவே தென் பகுதியிலும் வியாக்ரபாதீஸ்வரர், பதஞ்சலியுடன் இருந்து அருள்புரிந்த தலம் இதுவாகும். இந்த ஸ்தல வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
உத்திரதேசத்தை சிங்கவர்மன் தவறான முறையில் ஆட்சி செய்தான். அதனால் அவனது அரியணை பறிபோனது. இதையடுத்து காட்டுப்பகுதியில் அலைந்து திரிந்தான். வெயிலில் துவண்டு, தாகத்தினால் ஓரிடத்தில் மயங்கிச் சரிந்தான். அப்போது அங்கு வந்த வழிப்போக்கன் “அருகே தில்லை வனத்தின் நடுவில் குளம் இருக்கிறது. அங்கு சென்றால் தாகம் தணிக்கலாம்” என்றான்.
சிங்கவர்மன் மகிழ்ந்தான். வழிப்போக்கன் காட்டிய திசையில் சென்று, தில்லை வனத்திலே குளம் இருக்க கண்டான். அதன் நீரை அள்ளிப்பருகி தாகம் தணித்தான். தாகம் தீர்ந்தவுடன் புத்துணர்வு பெற்றான். அந்த நேரத்தில் குளத்திற்குள் புலி வடிவமும், பாம்பு வடிவமும் கொண்ட இரண்டு முனிவர்கள் தவம் இயற்றிக் கொண்டிருப்பதைக் கண்டான்.
அந்த முனிவர்களை நோக்கி வணங்கி நின்றான். சிங்கவர்மனைக் கண்டதும், “சிங்கவர்மனே! நான் பதஞ்சலி. இவர் வியாக்ரபாதர். மனுநீதி தவறாது ஆளும் மன்னனாக உன்னைக் காண நாங்களும் ஆசைக் கொண்டிருந்தோம். ஆனால் அதற்குள் உன் நிலைமை இப்படி ஆகி விட்டது” என்றார் பதஞ்சலி முனிவர்.
தன் தவறை உணர்ந்துவிட்டிருந்த சிங்கவர்மன், “என் பாவம் தீர நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
“நீ இந்த குளத்திலே மூழ்கி எழுந்து வா. உன்னுடைய பாவம் தீரும்” என்றனர், முனிவர்கள்.
சிங்கவர் மனும் அவ்வாறே செய்தான். அவன் பாவம் நீங்கியது. புதுப்பொலிவு பெற்ற அவன், முனிவர்களிடம், “ரிஷிகளே! இந்த இடத்தில் நீங்கள் தவம் செய்த நோக்கம் என்ன?” என்று கேட்டான்.
“இந்த தில்லை வனம் பரம ரகசியமான முக்கியமான ஸ்தலமாகும். இந்த தீர்த்தம் சிவனுடைய வடிவமானது. அதனால் இதற்கு ‘சிவகங்கை’ என்று பெயர். இந்த அகண்ட வனத்துக்குள் தான் நடேச பெருமான் திருநடனம் புரிந்தார். அதனை நாங்கள் தவத்தினால் கண்டு களித்துக் கொண்டிருந்தோம்” என்றனர் ரிஷிகள்.
“நானும் அரச வாழ்வை துறந்து, இங்கேயே தங்கி விடுகிறேன்” என்றான், சிங்கவர்மன்.
ஆனால் அதை முனிவர்கள் தடுத்தார்கள். “அரசன் சகல உயிர்களையும் காக்கும் பொறுப்புடையவன். நீ அரசனாக இருப்பதே உயிர்களுக்கு நல்லது. நீ வனத்தில் இருக்கக்கூடாது”
உடனே சிங்கவர்மன், “அப்படியானால் நீங்கள் கண்டுகளிக்கும் நடேசபெருமானின் திருநடனத்தை எனக்கும் காட்டியருள வேண்டும்” என்று வேண்டினான்.
முனிவர்கள் அருளினால் சிங்கவர்மனுக்கும், நடராஜரின் நடனக்காட்சி தரிசனம் கிடைத்தது. அதை கண்டு ஆனந்த கண்ணீர் வடித்தான்.
“ரிஷிகளே! சிவபெருமானுக்காக நான் ஏதாவது செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
அதற்கு முனிவர்கள், “இத்தலம் ஏனைய தலங்களுக்கெல்லாம் மணிமகுடம் போன்றது. ஆகவே, இங்கு அற்புதமான ஆலயம் ஒன்றை உருவாக்கி அதில் சிவபெருமானை பிரதிஷ்டை செய்வாயாக” என்று கூறினார்கள்.
அதை கேட்டு ஆனந்தமடைந்த சிங்கவர்மன், முனிவர்களிடம் ஆசிபெற்று, அரண்மனை திரும்பினான். அவனுக்கு மீண்டும் அரியணை கிடைத்தது. பின்னர் ஆலயப் பணிகளை தொடங்கினான்.
இதனால் ‘தில்லை’ என்றும், ‘திருச்சிற்றம்பலம்’ என்றும் பெருமையுடன் அழைக்கப்படும் ‘சிதம்பரம்’ மாநகர் உருவானது.

இதே கதையைக் கொண்டதுதான் தென் தில்லை என்று அழைக்கப்படும் செய்துங்க நல்லூர். வட பகுதியைப் போலவே தென் பகுதியிலும் வியாக்ரபாதீஸ்வரர், பதஞ்சலியுடன் இருந்து அருள்புரிந்த தலம் இதுவாகும்.
இத்தல இறைவன் வியாக்ரபாதீஸ்வரர் என்றும், அம்பாள் சிவகாமி அம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர். தாமிரபரணியாறு தற்போது ஓடுவதை விட சற்று மேற்காக சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஓடியுள்ளது. அவ்விடத்தில் கூழையாற்று தீர்த்தம் ஒன்றுள்ளது. அந்த காலகட்டத்தில் ஜெயதுங்க பாண்டியன் என்னும் அரசன், முறப்பநாட்டை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தான்.
இந்த மன்னன் பெயரால் இதனருகே உள்ள அனவரதநல்லூர் என்னும் ஊர், ‘செய்துங்க நாட்டு சதுர்வேதி மங்கலம்’ என்றழைக்கப்படுகிறது. இதை ‘வரதுங்கநல்லூர்’ என்றும் அழைத்துள்ளனர். ‘செய்துங்கன்’ என்றால் ‘வெற்றி திருமகன்’ என்று பொருள். இவர் எங்கு சென்றாலும் வெற்றிதான். செய்துங்கன் ஒரு முறை வேட்டையாட தாமிரபரணி கரையில் உள்ள கூழையாற்றுக்கு வந்தார். அங்கே வியாக்ரபாதீஸ்வரர் மற்றும் பதஞ்சலி முனிவர் தவமிருந்த தென் சிவகங்கை குளக்கரை காணப்பட்டது. அதில் அவர்கள் சிவனை வைத்து வணங்கி வந்தனர். மோன நிலையில் அவர்கள் இருந்த இடத்துக்கு ராஜா வந்த போது, ஒரு அதிர்வு ஏற்பட்டது.
மன்னனுக்கு காட்சி அளித்த சிவன் “வடதில்லையாக சிதம்பரத்தில் காட்சி தந்தது போல, இங்கேயும் நாங்கள் காட்சி தர விரும்புகிறோம். எனவே எங்களுக்கு கோவில் கட்டி வணங்கு” என்று சிவன் கூறினார்.
அதன்படி செய்துங்க மகாராஜன் கோவிலை கட்டினார். அதன்பின் தான் பதஞ்சலி முனிவர், ராமேஸ்வரம் சென்று சமாதி நிலை அடைந்தார். எனவே இது மிக பழமையான ஆலயம் என்கிறார்கள் ஆன்மிக அன்பர்கள்.
இத்தல சிவபெருமானுக்கு, ‘வியாக்ரபாதீஸ்வரர், கூழையாற்று நாதர், திருவரங்கேஸ்வரர், திருப்புலிஸ்வரமூடையார்’ போன்ற பெயர்கள் உண்டு, தாயார் பெரிய நாச்சியார் மற்றும் சிவகாமி அம்மை என்று அழைக்கப்படுகிறார். இதே சிறப்பை உணர்த்தும் வண்ணம் இந்த ஊரில் திருவரங்க செல்விஅம்மன் என்ற ஆலயம் சற்று மேற்கே வாய்கால் கரையில் அமைந்துள்ளது. இந்த ஊரில் உள்ள கால்வாய் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பாய்வதால், இவ்வூரை ‘தட்சண கங்கை’ என்றும் அழைக்கிறார்கள். சிதம்பரத்தினை போலவே தில்லை அம்பல நாடராஜராக இவர் விளங்குவதால், செய்துங்கநல்லூரை ‘தென்சிதம்பரம்’ என்கிறார்கள். இவ்வூரில் திருவரங்க செல்வி, திருவரங்க பெருமாள் ஆலயங்கள் உள்ள காரணத்தினால் இவ்வூர் தென் ‘ஸ்ரீரெங்கம்’ எனவும் அழைக்கப்படுகிறது.
இங்கு கழனியில் வேலைசெய்யும் பெண்கள், தங்களது குழந்தைகளை மரத்தில் தொட்டில் கட்டி தூங்க வைத்துவிட்டு வேலை செய்வார்களாம். பொதிகை மலையில் இருந்து வரும் தென்றல் காற்றின் சுகத்தில் அந்த குழந்தைகள் அயர்ந்து தூங்கி விடுமாம். இதனால் இந்த ஊர் ‘சேய் தூங்க நல்லூர்’ என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி ‘செய்துங்கநல்லூர்’ என்று வழங்கப்பட்டது.
இங்குள்ள யோக தட்சிணாமூர்த்தி வியாக்ரபாதீஸ்வரருக்கும், பதஞ்சலிக்கும் மோன நிலையில் அருள் உபதேசம் செய்வதாக ஐதீகம். எனவே கல்வி பெருகவும், நினைவாற்றல் பெருகவும், உயர்ந்த நிலையை அடையவும் இந்த தட்சிணாமூர்த்தியை வணங்கி செல்கிறார்கள்.
இந்தக் கோவிலில் தொடர்ந்து வணங்கினால் ஆன்ம பலம் பெருகும். சனிக்கிழமை தோறும் நவக்கிரகங்களை சுற்றி வணங்கினால் நவக்கிரக தோஷம் நீங்கும். ஆணவம், மாயை, கண்மம் ஆகிய மும் மலங்கள் அகலும். யோகநிலையில் இங்கு தட்சிணா மூர்த்தி இருப்பதால் கல்வி பெருகி நோயற்ற தன்மை ஏற்படும். இங்குள்ள சிவனை வணங்கினால் மரண பயம் நீங்கி 16 செல்வங்களும் கிடைக்கிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
திருநெல்வேலி -திருச்செந்தூர் ரெயில் மார்க்கம் மற்றும் பஸ் மார்க்கத்தில் செய்துங்கநல்லூரில் இறங்கி, அங்கிருந்து அரை கிலோமீட்டர் சென்றால் கோவிலை அடையலாம். ஆட்டோ வசதி உண்டு.
முத்தாலங்குறிச்சி காமராசு

கீர்த்தி கொண்ட மகாகணபதி எழுந்தருளியிருக்கும் கோவில்களில் ஒன்று, வேலூர் அருகில் அமைந்துள்ள சேண்பாக்கம். ஒரே கருவறையில் பதினோரு சுயம்பு லிங்கங்களாக விநாயகப்பெருமான் திருவருள் புரிகிறார்.
எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன்பாக, விநாயகப்பெருமானை வணங்கிவிட்டு தொடங்குவது வழக்கம். அப்படிச் செய்வதால், செய்யும் காரியம் எதுவாக இருந்தாலும் தடங்கல்கள் இன்றி நல்லபடியாக நடந்தேறும் என்பது வழிவழியாக தொடர்ந்து கொண்டிருக்கும் நம்பிக்கை. ஒரு சிலர் காகிதத்தில் எழுதத் தொடங்கும் போது கூட, பிள்ளையார். சுழி போட்டு எழுதத் தொடங்குவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
விநாயகப் பெருமான், அகிலத்தையே தன் கட்டைவிரல் அசைவில் வைத்திருக்கும் சிவபெருமானின் மூத்த மகனாக போற்றப்படுகிறார். முருகப்பெருமானுடைய அண்ணனாக வணங்கப்படுகிறார். அதே நேரத்தில் ‘ஓம்’கார தத்துவத்தையே, தலையாக கொண்டிருக்கும் விநாயகர் மூல முதல்வனாகவும், ஞான முதல்வனாகவும் பக்தர்களால் வழிபடப்படுகிறார்.
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்பது சொல் வழக்கு. எந்த பொருளிலும் விநாயகரை செய்துவைத்து வழிபட முடியும். இருப்பினும் விநாயகப் பெருமானின் புகழ்பாடும் அற்புத ஆலயங்கள், தமிழக மெங்கும் பரவிக்கிடக்கின்றன. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், பேராவூரணி நீலகண்ட பிள்ளையார், முக்குறுணி விநாயகர், கள்ள வாரணப் பிள்ளையார் என்று பல பெயர்களிலும் கணபதி பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
அப்படிப்பட்ட அற்புத கீர்த்தி கொண்ட மகாகணபதி எழுந்தருளியிருக்கும் கோவில்களில் ஒன்று, வேலூர் அருகில் அமைந்துள்ள சேண்பாக்கம். ஒரே கருவறையில் பதினோரு சுயம்பு லிங்கங்களாக விநாயகப்பெருமான் திருவருள் புரிகிறார். இந்த ஆலயத்தின் பிரதான விநாயகராக ‘செல்வ விநாயகர்’ அருள்கிறார். தலமரமாக வன்னிமரம் போற்றப் படுகிறது. இது மிகவும் தொன்மையான தலம் என்று கூறப்படுகிறது.
ஆரம்ப காலத்தில் செண்பக காடாக இருந்ததால் இப்பகுதி ‘செண்பக வனம்’ என அழைக்கப்பட்டு, பின் அதுவே மருவி ‘சேண்பாக்கம்’ என்று அழைக்கப்பட்டதாக பெயர்க் காரணம் சொல்லப் படுகிறது. மேலும் இத்தலத்தில் சுயம்புவாக விநாயகர் இருப்பதால் ‘ஸ்வயம்பாக்கம்’ என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி, பிற்காலத்தில் ‘சேண்பாக்கம்’ என்று மருவியதாகவும் கூறுகிறார்கள்.
மராட்டிய அமைச்சரான துக்காஜி, தனது தேரில் இவ்வழியாக சென்று கொண்டிருந்தார். ஓரிடத்தில் சக்கரத்தின் அச்சு முறியவே கீழே இறங்கி பார்த்தார். சக்கரத்தின் கீழிருந்து ரத்தம் கொப்பளித்தது. பயந்து போனார் துக்காஜி. அப்போது விநாயகர் அசரீரியாக ‘இவ்விடத்தில் ஏகாதச வடிவில் நான் இருக்கிறேன். என்னை வெளிக்கொண்டு வந்து ஆலயம் எழுப்பு’ என்று ஆணையிட்டார்.
அதன்படி இவ்விடத்தில் லிங்க வடிவில் இருந்த 11 விநாயகர்களையும் எடுத்து பிரதிஷ்டை செய்தார் துக்காஜி. மூலவரான செல்வ விநாயகரின் முதுகின் வலது பக்கத்தில் தேர் சக்கரம் ஏறிய வடு இருப்பதை இப்போதும் பார்க்க முடியும்.
ஆதிசங்கரருக்கு சுயம்பு மூர்த்தங்களை தரிசனம் செய்வதில் மிகவும் விருப்பம். சேண்பாக்கத்தில் 11 சுயம்பு மூர்த்திகள் இருப்பதை அறிந்து அவர் இத்தலத்திற்கு வந்தார். 11 சுயம்பு மூர்த்திகளும் லிங்க வடிவிலேயே இருப்பதைக் கண்டார். பின் தன் ஞானதிருஷ்டியால் அனைத்து லிங்கங்களும் விநாயகரே என்பதை அறிந்தார். சுயம்பு மூர்த்திகளுக்கு எதிரில் ஈசான்ய மூலையில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்தார். ஆதிசங்கரரும் இந்த ஆலயத்தை வழிபட்டிருக்கிறார் என்பதிலிருந்தே இந்தக் கோவிலின் பழமையும் சிறப்பும் விளங்கும்.
பாலவிநாயகராக பூமியில் இருந்து வெளிப்பட்ட விநாயகப்பெருமான், நடன விநாயகர், ஓம்கார விநாயகர், கற்பக விநாயகர், சிந்தாமணி விநாயகர், செல்வ விநாயகர், மயூர விநாயகர், மூஷிக விநாயகர், வல்லப விநாயகர், சித்திபுத்தி விநாயகர், பஞ்சமுக விநாயகர் என்று வரிசையாக வளைந்து ஓம் வடிவத்தில் இருக்கும் அற்புதம் மனதை கொள்ளை கொள்ளும். விநாயகர் அருவமும், உருவமுமானவர் எனும் தத்துவத்தை கண்முன் நிறுத்தி, தத்துவங்கள் சொல்லும் ஞான மூர்த்திகளாக இந்த திருத் தலத்தில் அமைந்து அருள்பாலித்து வருகிறார்.
ஆலயத்தில் நவக்கிரக மேடை அமைந்துள்ளது. இதில் இருக்கும் சனி பகவான், விநாயகரைப் பார்ப்பது போல் அமைந்திருப்பது தனிச் சிறப்பு. திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை இல்லாதவர்கள், சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்து தீபம் ஏற்றி விநாயகரை வழிபாடு செய்தபின், ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரம் அமைத்துள்ள இடத்திலுள்ள நவக்கிரகத்தையும் வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பாலவிநாயகருக்கு பால் அபிஷேகம் செய்கிறார்கள். விநாயகருக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
செல்வவிநாயகர் கோவில் என்று அழைக்கப்படும் இத்தலம், வேலூர் நகருக்கு வடமேற்கில் வேலூரில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிகின்ற பாதையில் 1 கிலோமீட்டர் தொலைவில் பாலாற்றின் தென்கரையில் சேண்பாக்கம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
அறந்தாங்கி சங்கர்

ஜெர்மனி நாட்டின் நோட்றைன் வெஸ்பாலன் மாநிலத்தில் உள்ள கும்மர்ஸ்பர்க் மலை நகரில், குறிஞ்சிக்குமரன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தினால், உடைமைகளை இழந்து, உயிரைக் காத்துக் கொள்ள வெளிநாடுகளுக்கு சென்ற தமிழர்கள், அவரவர் வசதிக்கேற்ப பல்வேறு நாடுகளில் அகதிகளாகக் குடியேறினர். பல்வேறு கடல்களைத் தாண்டி, ஐரோப்பிய மண்ணில் காலடி வைத்தவர்களும் இதில் அடக்கம்.
இப்படி குடியேறி, ஜெர்மனிய நாட்டில் தஞ்சம் புகுந்தவர்களை தாயுள்ளத்தோடு அரவணைத்தது, ஜெர்மானிய அரசு. தாயகத்தையும், தங்கள் உறவுகளையும் இழந்தவர்களுக்கு ஆறுதல் தேடி தவித்து, முடிவில் இறைவழிபாட்டின் பக்கம் கவனம் செலுத்தினர். அதன்மூலம் நிம்மதியைத் தேடினர். அப்படி அமைந்த ஆலயமே கும்மர்ஸ்பர்க் நகர குறிஞ்சிக்குமரன் ஆலயம்.
இக்கோவிலின் தோற்றத்திற்கு நோட்றைன் வெஸ்பாலன் மாநிலத்தில், கும்மர்ஸ்பர்க் நகரில் உள்ள மலை சார்ந்த பகுதி இயற்கையாகவே அமைந்தது. அரசு அனுமதியோடு மரங்களையும் தகரங்களையும் கொண்டு, எளிய வடிவில் குறிஞ்சிக்குமரன் ஆலயம் 1993-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1996-ம் ஆண்டு மூன்று தேர்கள் உருவானது. இந்த ஆலயமே ஜெர்மனியில் முதன்முதலில் சூரசம்காரம், தேர் வீதிஉலா விழாக்கள் நடத்திய ஆலயமாகப் போற்றப்படுகிறது.
2005-ம் ஆண்டு தொழிற்சாலைகள் நிறைந்த ஓரிடம் சொந்தமாக வாங்கப்பட்டது. அதனை அடியார்கள் ஆதரவில், ஆலயத்திற்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டது. இதற்கு அரசின் அனுமதியும் முறையாகப் பெறப்பட்டது. கருவறை, விமானங்கள், சுதைச்சிற்பங்கள் உருவாக்கி, அவைகளுக்கு அழகிய வண்ணம் பூசப்பட்டது. 2006-ம் ஆண்டு குடமுழுக்கு விழா இனிதே சிறப்புடன் நடத்தப்பட்டது. தற்போது ஐந்துநிலை ராஜகோபுரம் அமைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
ஆலயத்தில் கொடிமரம், பலிபீடம், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத குறிஞ்சிக்குமரன், இவர்களோடு நவக்கிரகம், சனீஸ்வரர், பைரவர், நவவீரர்கள், சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகிய பரிவார மூர்த்திகளும் இக்கோவிலில் இடம் பெற்றுள்ளன. உற்சவர்களாக சண்முகர், சிவலிங்கம், அம்பிகை, சந்தானகிருஷ்ணன், நாகபூஷணி, முப்பெருந்தேவியார், சிவகாமி சமேத ஆனந்த நடராஜர், சந்திரசேகரர் முதலான மூர்த்திகளும் உள்ளன.
வருட உற்சவம், ஜூலை மாதத்தில் ஆடி உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. பத்தாம் நாளன்று உற்சவர்களைச் சுமந்து, மூன்று தேர்களும் வீதியுலா வருகின்றன.
இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
ஜெர்மனி நாட்டின் நோட்றைன் வெஸ்பாலன் மாநிலத்தில் உள்ள கும்மர்ஸ்பர்க் மலை நகரில், குறிஞ்சிக்குமரன் ஆலயம் அமைந்துள்ளது. இது பெர்லினில் இருந்து 300 கிலோமீட்டர், பிரான்ங்பர்ட்டில் இருந்து 165 கிலோமீட்டர், சாவேரியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அருகில் உள்ள ரெயில் நிலையம் கும்மர்ஸ்பர்க். விமான நிலையம் கலோன், மற்றும் டுசுல்டாப் ஆகும்.
பனையபுரம் அதியமான்

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருமேனி அழகேஸ்வரர் ஆலயம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கர்நாடக தேசத்தை வல்லபராஜா என்ற மன்னன் ஆண்டு வந்த நேரம் அது. குழந்தை இல்லையே எனத் தவித்த அந்த மன்னனுக்கு நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பிறப்பிலேயே ஊமையாகவும், முடமாகவும் இருந்ததால், மன்னனின் வேதனை அதிகரித்தது. குழந்தை வளர்ந்து சிறுவனானதும், அவனுக்கு குஷ்டரோக நோய் பற்றியது. நாளாக ஆக அந்த நோயின் வீரியம் அதிகமாகியது.
சிறுவனின் உருவம் மாறியது. பார்க்கவே அருவருப்பான நிலையை அடைந்தான் அந்தச் சிறுவன். மகனின் ஊனத்தால் மன வேதனையில் இருந்த மன்னன், இப்போது மீளாத் துயரில் ஆழ்ந்தான். ஒரு காவலாளியை அழைத்த மன்னன், தன் மகனை தண்டகாவனத்தில் கொண்டு போய் விட்டு விட்டு வரும்படி பணித்தான். காவலாளியும் மன்னன் கூற்றுப்படி அந்தச் சிறுவனை தண்டகாவனத்தில் கொண்டு போய் விட்டுவிட்டு திரும்பினான்.
வனத்தில் விடப்பட்ட சிறுவன் அங்கிருந்து நடந்தபடியே மதங்காசிரமம் என்னும் மணிக்கிராமம் பகுதிக்கு வந்தான். அங்கு அருள்பாலிக்கும் அழகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள இறைவனை வணங்கினான். அங்கேயே தங்கினான். கோவில் பூஜைக்காக வரும் அர்ச்சகர், அந்தச் சிறுவனை தினமும் கண்டு வந்தார். ஒரு நாள் இறைவனுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை அச்சிறுவனுக்குக் கொடுத்து அருந்த செய்தார். தினசரி அச்சிறுவன் அபிஷேக தீர்த்தத்தை அருந்த அவன் நோய் மெல்ல மெல்ல குணமாகத் தொடங்கியது. அவனது உருவம் மாறத் தொடங்கியது. பேசத் தொடங்கினான். முட நோய் நீங்கியது. கண்டவர் வியக்கும் மன்மதனாக மாறினான்.
தனக்கு பேரழகைக் கொடுத்த திருமேனி அழகேஸ்வரரை வணங்கி நின்றான். பின்னர் அவன் தன் நாட்டிற்குத் திரும்பி பெற்றோருடன் இணைந்தான் என்பது செவி வழித் தல வரலாறு.
இந்த திருமேனி அழகேஸ்வரர் ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முன் முகப்பைத் தாண்டியதும் நீண்ட பிரகாரம். நடுவே பலிபீடம் இருக்க, அடுத்து நந்தி பகவான் அருள்பாலிக்கிறார். அடுத்துள்ள மகாமண்டபத்தில் வலதுபுறம் அன்னை சவுந்திர நாயகி நின்ற கோலத்தில் இளநகை தவழ அருள் பாலிக்கிறாள். இங்கு அன்னையின் திருமேனி கருவறைப் பக்கம் சற்றே திரும்பியபடி அமைந்துள்ளது. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் அன்னை பத்மத்தையும், அட்ச மாலையையும் சுமந்து நிற்க, கீழே உள்ள வலது கரம் அபய ஹஸ்த முத்திரையுடன் காணப்படுகிறது. அன்னையின் இடது கரம் இடையில் பதிந்துள்ளது.
அடுத்துள்ள கருவறையில் இறைவன் திருமேனி அழகேஸ்வரர் லிங்கத் திருமேனியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தின் கீழ் திசையில் நாகர், விநாயகர், சிவலிங்கம் திருமேனிகள் உள்ளன. தேவக் கோட்டத்தின் தென் திசையில் தட்சிணாமூர்த்தி அருள்புரிகிறார். திருச்சுற்றில் விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, சண்டிகேசுவரர், மகாலட்சுமி ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.
கிழக்குப் பிரகாரத்தில் நவக்கிரக நாயகர்களின் சன்னிதி உள்ளது. இங்கு நவக்கிரக நாயகர்கள் இரண்டு சூரியனுடன் வரிசையாக இருந்து அருள்பாலிப்பது விசேஷமாக கருதப்படுகிறது. கிழக்கு பிரகாரத்தில் உள்ள துர்க்கை மேற்கு திசை நோக்கி அருள்பாலிப்பதும் இங்கு சிறப்பான அமைப்புதான். ஆலயத்தின் தல விருட்சம் பன்னீர் மரம். தீர்த்தம் ஆலயத்தின் தெற்கே உள்ள வேட்டை குளம்.
தன்வந்திரி பகவான், மருத்துவத்துக்கு அதிபதி. தன்வந்திரியாக அவதரித்த மகாவிஷ்ணு இத்தல இறைவனை ஆராதித்து பேறு பெற்றாராம். எனவே இத்தல இறைவனை ஆராதிப்பதால் தீராத வியாதிகள் தீரும் என்கின்றனர் பக்தர்கள். ஒரு சமயம் சமயக் குரவரான திருநாவுக்கரசர், மணிக்கிராமம் வழியே சாயாவனம் சென்றார். சாயாவனம் சென்றதும், அவரோடு வந்த பக்தர்கள் வரும் வழியில் உள்ள தொன்மை வாய்ந்த மணிக்கிராமம் ஆலயத்தை பார்க்கவில்லையே எனக்கூற அவர் அங்கிருந்தபடியே இத்தல இறைவனை பாடியுள்ளார். இத்தல இறைவனை வழிபாடு செய்வதன் மூலம், முன்னோர்கள் செய்த பாவம் நம்மை அண்டாது என்கின்றனர் பக்தர்கள்.
இந்த ஆலயத்தில் நவராத்திரி, சிவராத்திரி, சோமவார தினங்களில் இறைவன் இறைவிக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. கார்த்திகை மாதம் மூன்றாவது வியாழக்கிழமை ஆலயத்தில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு விசேஷ அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது. இங்கு குழந்தை பாக்கியம் வேண்டுவோர் அன்னையின் சன்னிதியில் தரப்படும் ஐந்து மஞ்சள் பலகைகளை தேய்த்து குளித்து வர, அவர்கள் பலன் காண்பது உறுதி என்கிறார்கள்.
1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தினசரி ஒரு கால பூஜை நடக்கும் இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி - திருவெண்காடு - பூம்புகார் பேருந்து தடத்தில், சீர்காழியில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது மணிக்கிராமம். இங்கு செல்வதற்கு பஸ் மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.
ஜெயவண்ணன்

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக சாரங்கபாணி கோவில் விளங்குவதால் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாரங்க ராஜாவை தரிசித்து வருகின்றனர்.
ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுவது கும்பகோணம் ஸ்ரீசாரங்க பாணி கோவில் ஆகும். கும்பகோணம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் மற்றும் திருத்தேர், திருவாபரணம் ஆகிய அனைத்துமே பாடல் பெற்று விளங்குவது வரலாற்றுச் சிறப்புடையது ஆகும்.
பெரியாழ்வார் தனது திருப்பல்லாண்டு பதிகத்தில் “சார்ங்கமெனும் வில்லாண்டான் தன்னை” என்று பெருமாள் கையில் தரித்திருக்கும் சார்ங்கம் எனும் வில்லையும் வடக்கு பிரகாரத்தை “தூநிலா முற்றத்தே போந்து விளையாட” என்றும் மங்களா சாசனம் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது
நாலாயிர திவ்ய பிரபந்தம் நமக்கு கிடைப்பதற்கு இந்த எம்பெருமான் காரணமாயிருந்தார் என்பதனை திருமங்கையாழ்வார் தனது பாசுரத்தில் “அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை” என்றும் வைகுண்டத்தில் இருந்து திருத்தேருடன் எம்பெருமான் எழுந்தருளியுள்ள எழிலின் எடுத்துக் காட்டாக இத்தல கர்ப்பக்கிரகம் திருத்தேர் வடிவில் “திருவெழுகூற்றிருக்கை” எனும் ரதபந்தத்திலும் ஸ்ரீகோமள வல்லித் தாயார் அவதரித்த பெருமையினையும் பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் என்று திருக்குளத்தினையும் திருமங்கை யாழ்வார் தனது பாசுரங்களில் பாடியுள்ளார்
இக்கோவிலில் மூலவர்:- ஆராவமுதன்
தாயார்:- கோமளவல்லி நாச்சியார்
உற்சவர்:- சாரங்கபாணி , அபர்யாப்தாம்ருதன், உத்தானசாயி ஆகும்
உத்தானசாயி சயான கோலத்துடன் கிழக்கு திசையில் கோவில் கொண்டுள்ள ஸ்ரீ சாரங்க ராஜாவின் கர்ப்பக்கிரகம் வைதிக விமானம் எனும் அமைப்பை உடையது.
தீர்த்தம்:- ஹேம புஷ்கரணி ஆகும்.
மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள்:-
பூதத்தாழ்வார், பேயாழ் வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், பெரியாழ் வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார். திருத்தலத்தில் உறையும் உற்சவரான இறைவன், சங்கு, சக்கரத்துடன், சாரங்கம் என்ற வில்லை ஏந்தியவாறு காட்சி தருகிறார். பாணி என்றால் “கையில் ஏந்தியவன்” என்று பொருள். இதன் காரணமாகவே இத்தல இறைவன் “சாரங்க பாணி”என்ற திருநாமம் பெற்றார்.
மேலும், “ஆராவமுதன்” என்ற திருநாமமும் உண்டு. “ஆராவமுதன்” என்பதற்கு “திகட்டாத அமுதம் போன் றவன்” என்று பொருள். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் தாம் பாடிய திருவாய்மொழி பகுதியில் 10 பாசுரங்களில் “ஆராவமுதன்” என்ற திருநாமத்தைக் கூறியே “மங்களாசாசனம்“ செய்கிறார்.
தாயார் பிறந்த தலம்
இந்த தலம் தாயாரின் பிறந்த வீடு ஆகும். திருமால், திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். எனவே, இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. தாயாரை வணங்கிய பிறகே பெருமாளை வணங்க வேண்டும். இத்தலத்தைப் பொறுத்த வரை, தாயார் சன்னதிக்கு சென்ற பிறகே, பெருமாள் சன்னதிக்குள் செல்லும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. நடைதிறக்கும் போது, சுவாமி சன்னதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, இக்கோவிலில் கோமளவல்லித் தாயார் சன்னதி முன்பாக நடத்துகின்றனர். பின்னரே, சுவாமி சன்னதியில் நடக்கிறது.
ஒரு சமயம் வைகுண்டம் சென்ற பிருகு மகரிஷி, திருமாலின் சாந்த குணத்தை சோதிப்பதற்காக அவரது மார்பில் உதைக்கச் சென்றார். இதைத் திருமால் தடுக்கவில்லை. “உங்கள் மார்பில் ஐக்கியமான என் மீது பிற ஆணின் பாதம் பட இருந்ததை தடுக்காமல் இருந்து விட்டீர்களே” என கோபப்பட்ட மகாலட்சுமி கணவரைப் பிரிந்தாள்.
இதன் காரணமாகவே நம் முன்னோர்கள் எவரையும் காலால் உதைப்பது பாவம் என்கிறார்கள். ஏனெனில், உதைபட்டவர்களிடம் உள்ள திருமகள் கடாட்சம் அவரை விட்டு நீங்கும் என்பது ஐதீகம். தவறை உணர்ந்த பிருகு மகரிஷி, புண்ணிய பூமியான கும்பகோணம் பகுதியில் தாயாரை நோக்கி தனக்கு மகாலட்சுமி மகளாக அவதரிக்க வேண்டும் என தவமிருந்தார்.
அதற்கு மனமிரங்கிய மகாலட்சுமி தாயார் இங்குள்ள ஹேம புஷ்கரணியில் தாமரை மலரில் அவதரித்தாள். அவளுக்கு “கோமளவல்லி” என பெயரிட்டு வளர்த்து அவர் திருமாலுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். திருமழிசை யாழ்வாருக்கு நேரில் காட்சி தந்து அவரது வேண்டு கோளுக்கிணங்கி சயனித்துள்ள மூலவர் சற்று எழுந்திருக்கும் நிலையில் உத்தானசாயியாய் கருவறையில் எழுந்தருளியிருப்பார்.
நடந்த கால்கள் நொந்தவோ
நடுங்கு ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ
விலங்கு மால் வரைச்சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக்
கரைக் குடந்தையுள்
கிடந்த வாறெ எழுந்திருந்து
பேசு வாழி கேசனே
ராம அவதாரத்தில், காடு, மலை, மேடுகளிலெல்லாம் நடந்து நடந்து கால்கள் நொந்தனவோ! அதனால் தான் சயனித் திருக்கிறீர்களோ! வராக அவதாரத்தில், பாதாள லோகம் சென்று பூமித்தாயை மீட்டுத் தாங்கி வந்தீர்களே! அதனால் களைப்போ! “பெருமாளே, ஏன் கிடக்கின்றீர்கள்? எழுந்து வந்து என்னோடு பேசுங்கள்” என்று மிகுந்த பணிவுடன் கேட்கிறார். அதனால், சகல லோகங்களும் அதிர “சாரங்கபாணி” சற்று எழுந்தார். முழுமையாக பள்ளி கொண்டிராமல் சற்று எழுந்த கோலத்தில் இருப்பதை “உத்தான சயனம்“ என்பர். இத்தலம் நித்யவை குண்டம் , பூலோக வைகுண்டம் என போற்றப் படுகிறது.ஆகவே இத்தலத்தில் தனியாக சொர்க்கவாசல் (பரமபத வாசல் ) கிடையாது என்பது சிறப்பாகும்.
தேர் வடிவில் கருவறை
ஸ்ரீமந் நாதமுனிகள் இத்தலத்தில் பெருமாளைச் சேவிக்கும்போது பெருமாளை பற்றிப்பாடப்பட்ட ஆராவமுதே எனத் தொடங்கும் பத்து பாசுரங்களை கேட்டு அதில் ஊன்றி இருந்தார். அதில் ஓர் இடத்தில் நாலாயிரம் பிரபந்தங்களில் இது ஒரு பத்து என்னும் பொருளின்படிக் கேட்டு மற்ற பாடல்களின் விவரத்தை அறியும் முயற்சிகளில் ஈடுபட்டார்.
அப்போது பெருமாள் அவரது கனவில் தோன்றி நம்மாழ்வார் இருக்கும் இடமான ஆழ்வார் திருநகரிக்குச் சென்றால் பிரபந்தப் பாசுரங்களைப் பெறலாம் என்றார். அவ்வாறே ஸ்ரீமந்நாத முனிகள் நம்மாழ்வாரை சந்தித்து, வணங்கி நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களை உலகோர் அறியச் செய்தார் என்பது வரலாறு.
இங்குள்ள தாயார் உலா வராத நிலையில் இருப்பவராவார். எனவே அவரை படிதான் டாப் பத்தினி என்கிறார்கள்.
இத்தலத்தில் உத்தராயணவாசல் எனவும் தட்சிணாயன வாசல் எனவும் இரண்டு வாசல்கள் உள்ளன. அந்தந்த காலங்களில் அதற்குரிய வாசல் வழியே சென்று வழிபாடு செய்யப்படுகிறது. ராஜகோபுரம் 147 உயரத்துடன், 11 நிலைகளுடன் பிரமாண்டமாக உள்ளது. அதுபோல கருவறை தேர் வடிவில் இருப்பது ரசிக்கத்தக்கது. 12 ஆண்டுக்கு ஒரு தடவை சிம்மராசியில் மகம் நட்சத்தில் குரு வலம் வரும் போது மகாமகம் விழா கொண்டாடப்படுகிறது.
புரட்டாசி மாத வழிபாடு
சாரங்கபாணி கோவிலில் புரட்டாசி மாதத்தில் எல்லா நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருக்கும். நீண்ட வரிசையில் நின்று சாரங்கபாணி- தாயாரை தரிசித்து விட்டு செல்வார்கள். குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். தொடர்ந்து சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றாக சாரங்கபாணி கோவில் விளங்குவதால் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாரங்க ராஜாவை தரிசித்து வருகின்றனர்.
இத்தலத்தில் இருகரத் துடன் எழுந்தருளியுள்ள மூலவர் (ஸ்ரீஆராவமுதனை ஏரார்கோலம் திகழக் கிடந்தாய்) என்றும் நான்கு திருக்கரங்களுடன் சேவை சாதிக்கும் உற்சவரை (நாற்றோளெந்தாய்) என்றும் நம்மாழ்வார் மங்களா சாசனம் செய்ததால் இத்தலம் உபயப்ரதான திவ்யதேசம் என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கிலாந்து தேசத்தின் வடகிழக்கில் உள்ள லெஸ்டர் நகரின் ரோஸ்வாக் வீதியில் அமைந்துள்ள முருகப்பெருமானின் திருக்கோவில் ‘கந்தக் கோட்டம்’ என்று அழைக்கப்படுகிறது
இங்கிலாந்து தேசத்தின் வடகிழக்கில் உள்ள லெஸ்டர் நகரின் ரோஸ்வாக் வீதியில் அமைந்துள்ள முருகப்பெருமானின் திருக்கோவில் ‘கந்தக் கோட்டம்’ என்று அழைக்கப்படுகிறது. வட இந்தியப் பகுதியைச் சேர்ந்த குஜராத்தியினரும், தமிழர்களும் அதிகமாக வசிக்கும் இந்தப் பகுதியின் கடை வீதியில் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலையில் இருந்து அரை பர்லாங்கு துரத்தில் கந்தக் கடவுள் கோவில் கொண்டுள்ளார்.
இந்தத் திருக்கோவிலில் கொடிமரமும், அதன் அடியில் ஸ்தம்ப விநாயகரும், அருகில் பலிபீடமும் இருக்கிறது. அடுத்தாற் போல் உள்ள மயில் வாகனத்தின் எதிரே கிழக்கு நோக்கிய தனி விமானத்தின் கீழ் முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். இவர் ஒரு கரத்தில் வேலும், மறுகரத்தில் சேவற்கொடியும் தாங்கி புன்னகை மின்ன நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். முருகப்பெருமானின் வலப் புறம் நீலோற்பல மலர் ஏந்தியபடி வள்ளியம்மையும், இடப்புறம் தாமரை ஏந்தியபடி தெய்வானை அம்மையும் இருக்க தம்பதியராக அருள்புரிகிறார்கள்.
கோவிலுக்குள் நுழைந்தவுடன் மூல முதற்கடவுளான விநாயகப்பெருமான் வீற்றிருக்கிறார். சித்தி விநாயகர் என்ற பெயர் கொண்ட இவர் நான்கு கரங்களுடன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். மூலவர் முருகனுக்கு வலதுபுறம் தனிச் சன்னிதியில் காசி விஸ்வநாதர், லிங்கத் திருமேனியில் அருள்காட்சி தருகிறார். அவருக்கு அருகில் விசாலாட்சி அம்மன் வீற்றிருக்கிறார். முருகப்பெருமானின் ஆலயத்தின் அம்மையப்பனும் அருகில் இருந்து காட்சி தருவதால், இத்தல மூலவரை ‘சிவ முருகன்’ என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.
மூலவரின் கருவறை கோஷ்டத்தில் தெற்கு நோக்கியபடி, கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து தட்சணாமூர்த்தி சுவாமி அருளாசி வழங்குகிறார். பிரகாரத்தில் வடதிசை நோக்கி சூலமேந்திய துர்க்கா தேவி தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாா். வடபுறச் சுற்றில் ஐயப்பன் ஒரு கோவிலில் காட்சி தருகிறார். வண்ணமயமான வசந்த மண்டபத்தில் அனைத்து தெய்வங்களின் உற்சவ மூர்த்தங்களும் மின்னுகின்றன. ஈசானிய மூலையில் ஒன்பது கிரகங்களும் ஆயுதம் ஏந்தி தங்கள் மனைவியுடன் தோன்றுவது எங்குமில்லாதச் சிறப்பு. மேற்கு நோக்கி பைரவர் காட்சி தருகிறார்.
இந்தத் திருக்கோவிலில் நடைபெறும் கந்த சஷ்டி விழா மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. ஒவ்வொரு நாளும் மூலவர் முருகனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெறுவதுடன், ஆறாம் நாள் திருச்செந்தூர் கடற்கரையிலும், மற்ற ஆலயங்களிலும் நிகழ்வது போன்று சூரசம்கார நிகழ்ச்சி கண் நிறைந்த காட்சியாக பக்திப் பரவசத்துடன் நடத்தப்படுகிறது. கந்த சஷ்டிக்கு மறுநாள் சீர்வரிசை எடுத்து நலங்கு பாடி முருகனின் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. வைகாசி மாதத்தில் பத்து நாள் விழா நடத்தி, விசாக நாளில் தேரோட்டம் நடைபெறுவது அனைத்து மக்களையும் கவர்கிறது.
திருக்கார்த்திகை அன்று ஒளிவிளக்கு ஏற்றி சொக்கப்பனை கொளுத்துகிறார்கள். சதுர்த்தியில் விநாயகருக்கும், ஆடி வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இந்தத் தலத்தில் தங்கள் மனைவியருடன் அருள்பாலிக்கும் நவக்கிரகங்களுக்கு, அந்தந்த கிரகங்களுக்கு ஏற்ற நாட்களிலும், கிரக பெயர்ச்சி காலங்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கோவில் திறந்து வைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் கடந்த 2010-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆலயம் தினமும் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
டாக்டர் ச.தமிழரசன்

திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை அருகே வீ.கே.புதூர் என்னும் வீரகேரளம்புதூர் கிராமத்தில், சுமார் 1000 ஆண்டுகள் பழமையான நவநீத கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை அருகே வீ.கே.புதூர் என்னும் வீரகேரளம்புதூர் கிராமத்தில், நவநீத கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் அருளும் இறைவனை ‘தமிழகத்தின் குருவாயூரப்பன்’ என்று போற்றுகிறார்கள். இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது குறித்து மெய்சிலிர்க்கும் சம்பவம் ஒன்று செவிவழிச் செய்தியாக இங்குள்ள ஆன்மிகப் பெரியோர்களிடையே கூறப்பட்டுவருகிறது. அதனைப் பார்க்கலாம்.
‘திருமாலும் கருடனும் ஒருவரே’ என்று மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. கண்ணன் துவாரகைக்கு வெளியே இருந்தபோதெல்லாம், துவாரகையை காத்தவர் கருடன். “வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியில் விளங்குவாய்” என்று கருடனுக்கு திருமால் வரமளித்துள்ளார். கருட தரிசனம் உள்ளத்தில் உற்சாகம், ஊக்கத்தை உண்டாக்கும். ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும், அதன் குரலைக் கேட்பதும் நல்ல சகுனம். எதிரிகளை முறியடிக்கும் நேர்மறை அதிர்வலைகளை கருட தரிசனம் அருளும். கருடனைக் கண்டாலே காரிய வெற்றி கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.
பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்த வீரகேரளம்புதூரை, வைணவத்தை தழுவிய மன்னன் ஒருவர் ஆட்சி செய்து வந்தார். அவர் கருடனின் பெருமைகளை அறிந்து அனுதினமும் அவரை வணங்கிய பிறகே தன்னுடைய பணிகளைத் தொடங்குவார். திருமாலின் வாகனமும், அணுக்கத் தொண்டரும், நித்ய சூரியுமான கருடனை, காலை உணவுக்குமுன் தரிசிப்பதை அந்த மன்னன் வழக்கமாக வைத்திருந்தார். வீரவைணவர்கள் கருட தரிசனம் செய்யாமல் உணவருந்த மாட்டார்கள். கருடனைக் கண்டதும் ‘மங்களானி பவந்து’ என்று மனதுக்குள் சொல்லி தரிசனம் செய்த பிறகே உணவருந்துவார்கள். மன்னனும் அதே போல செய்து வந்தார். இதனால் அவர் மனதில் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாக அமைந்தன.
ஒரு நாள் வழக்கம் போல கருட தரிசனத்துக்காகக் காத்திருந்தார் மன்னன். அவருடன் பணியாளர்களும் காத்திருந்தனர். வெகுநேரமாகியும் வானில் கருடன் தென்படவில்லை. அரசரும் ‘கருட தரிசனம் இன்றி, இந்த நாள் கடந்து விடுமோ’ என்று தவித்தார். நேரம் கடந்து கொண்டிருந்தது. பசி மயக்கத்தில் சோர்ந்து போயினர் பணியாளர்கள். பசியைப் பொறுக்க இயலாத அரண்மனைப் பணியாளர்கள், ஒரு தந்திரம் செய்தனர். உடனே செயற்கையாகக் கருடன் போன்ற ஒரு பொம்மைப் பறவையைத் தத்ரூபமாகத் தயார் செய்தனர். அதனை ஒரு மரத்தின் உச்சியில் கட்டிவைத்தனர்.
பின்னர் அரசரிடம் வந்து, “அரசே! அதோ பாருங்கள், மரத்தின் உச்சியில் கருடன் ஒன்று இருக்கிறது” என்று தாங்கள் செய்த கருடப் பறவையைக் காட்டினர். அரசன் மகிழ்ச்சி பொங்க, பக்திப்பரவசத்துடன் “கிருஷ்ணா! கிருஷ்ணா!” என்று மனதில் கூறிக்கொண்டே பேரானந்தம் கொண்டார். அடுத்த கணம் யாரும் எதிர்பாராத விதமாக, மரத்தில் கட்டிவைத்திருந்த பொம்மைக் கருடன் உயிர்பெற்று விண்ணில் பறந்து சென்று மறைந்தது. அரசரோ கருட தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்தார். பணியாளர்களோ பயத்திலும், வியப்பிலும் அரசரிடம் சென்று உண்மையைக் கூறிவிட்டனர்.
அரண்மனைப் பணியாளர்களின் செயலுக்காக மன்னன் கோபப்படவில்லை. தன்னுடைய பக்திக்காக கருட பொம்மைக்கு உயிரூட்டிய திருமாலின் கருணையை நினைத்து உள்ளம் உருகினார்.
ஒரு சில நாளில் மன்னனுக்கு திடீரென்று உடல்நலம் குன்றியது. அவர் படுத்தபடுக்கையானார். மூன்றாம் நாள் திருநாடு (வைகுண்டம்) அடைந்தார். இதையறிந்த இவ்வூர் மக்கள், “தன் பக்தனான அரசரை, திருமால் வைகுண்டம் அழைத்துச் சென்றுவிட்டார்” என்று கூறி சிலிர்த்தனர்.
இந்த சம்பவத்தின் அடிப்படையில் உருவானதுதான் வீரகேரளம்புதூர் நவநீத கிருஷ்ணன் கோவில். பாண்டிய மன்னர்களால் மதுரைக்குத் தெற்கே எழுப்பப்பட்ட ஒரே வைணவக் கோவில் இது என்று கூறப்படுகிறது. மன்னர்களின் ஆட்சி காலத்தில் தென்காசிக்கு அடுத்து, பெரிய ஊராக வீரகேரளம்புதூர் விளங்கியுள்ளது. இவ்வூரில் தாமிரபரணியின் ஊட்டாறுகளான ‘சித்ரா நதி’யும் (சிற்றாறு), ‘அனுமன் நதி’யும் ஒன்று சேருமிடத்தில் இந்த நவநீத கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் இங்குள்ள சித்ரா நதிக்கரையில் ஒரு சிறிய விநாயகர் சன்னிதி இருந்ததாகவும், நவநீத கிருஷ்ணன் கோவில் கட்டுவதற்காக, சித்ரா நதி தெற்கு நோக்கித் திருப்பி விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விநாயகர் சிலை தற்போது கிருஷ்ணன் கோவிலுக்குள் இருக்கிறது.
திருமாலின் மார்பில் நிரந்தரமாக வசிக்கும் மகாலட்சுமியின் அருட்பார்வையால், இவ்வூரே செழிப்பாக உள்ளது. கருடனின் நிழல்பட்ட நிலத்தில் நல்ல விளைச்சல் உண்டாகும். வேத ஒலிகளுக்கு தாவரங்களை நன்கு வளரவைக்கும் சக்தியுண்டு. நல்ல தெய்வீக சக்திகள் நிறைந்த சூழ்நிலையில் நிச்சயமாக கருடன் வாசம் செய்வார். “பறவைகளுள் நான் கருடன்” என்று கீதையில் கிருஷ்ண பகவான் கூறியுள்ளார். வானில் கருடன் வட்டமிட்டபிறகே கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இத்தகைய தெய்வீக அதிர்வலைகள் நிரம்பிய வீரகேரளம்புதூரில், எழில்மிகுந்த சித்ரா நதிக்கரையில் நவநீதகிருஷ்ண சுவாமி ஆலயம் அமைந்திருப்பது சிறப்புக்குரியது.
இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நவநீத கிருஷ்ணன் சிலை, இந்த ஊருக்கு அருகே உள்ள கீழப்பாவூரில் செதுக்கப்பட்டதாகவும், மதுரை அருகேயுள்ள திருமங்கலத்தில் வடிக்கப்பட்டதாகவும் இருவேறு கருத்துகள் கூறப்படுகின்றன. குருவாயூரில் உள்ளது போன்றே, இந்த ஆலய நவநீத கிருஷ்ணனின் தோற்றம் இருக்கிறது. கையில் வெண்ணெயுடன் அருள்பாலிக்கிறார், இத்தல நவநீதகிருஷ்ணன்.
ஆலயத்தின் உட்பிராகாரத்தில் தசாவதார மூர்த்திகளும் விக்கிரங்களாக நின்ற நிலையில் ஒரே இடத்தில் எழுந்தருளியுள்ளனர். பன்னிரு ஆழ்வார்களும் இங்குள்ளனர். மூலக்கருடன், பொருத்துக்கல், தங்கக் கொடி மரம், நவக்கிரகங்களும் அமைந்திருக்கிறது. கிழக்கு நோக்கியுள்ள இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெரும் சிறப்புகளைக் கொண்டது.
திருமணம் தடை அகல, புத்திர பாக்கியம் கிடைக்க, மாங்கல்ய தோஷம் நீங்க, நெஞ்சக நோய் தீர, எதிரிகளை வெற்றிபெற, அதிகாரப் பதவி கிடைக்க, இங்கு வந்து நவநீத கிருஷ்ணனை வழிபட்டுச் சென்றால் விரைவில் பலன் கிடைக்கும் என்கிறார்கள். 41 நாள் விரதம் இருந்து இத்தல இறைவனை வழிபட வேண்டும் என்பதும், தமிழ் மாதக் கடைசி வெள்ளிக்கிழமை தோறும் மாலை 6 மணிக்கு நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்டு தரிசித்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
இந்த ஆலயத்தில் முன்பு 11 நாள் தேரோட்டம் நடைபெற்றுள்ளது. இங்கு பங்குனி உத்திரம் உற்சவம் சிறப்பாக நடக்கிறது. பங்குனி மாத கார்த்திகை நட்சத்திரம் அன்று கொடியேற்றி 10 நாள் திருவிழா வெகு உற்சாகமாக நடைபெறும். ஆடி சுவாதி, வளர்பிறை பஞ்சமி, கோகுலாஷ்டமி, விஜய தசமி பரிவேட்டை, ரோகிணி நட்சத்திரம் ஆகிய நாட்களில் இங்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன. தினமும் ஆறுகால பூஜை நடைபெறும் இந்த ஆலயம், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம் :
திருநெல்வேலி - தென்காசி சாலையில் உள்ள ஆலங்குளத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், தென்காசி - பாவூர்சத்திரம் - சுரண்டை வழியாக 21 கிலோமீட்டர் தூரத்திலும், தென்காசி - ஆய்க்குடி - சாம்பவர்வடகரை - சுரண்டை வழியாக 18 கிலோமீட்டர் தூரத்திலும், சங்கரன்கோவில் - வீரசிகாமணி - சுரண்டை வழியாக 30 கிலோமீட்டர் தொலைவிலும், சுரண்டையில் இருந்து 5 கிலோமீட்டரிலும் வீரகேரளம்புதூர் என்னும் வீ.கே.புதூர் இருக்கிறது.
கீழப்பாவூர் கி.ஸ்ரீமுருகன்

உடல் வலிமைக்குத் தேவையான பல்வேறு மூலிகைகள் கலந்த மருத்துவ எண்ணெய் வழங்கும் சிறப்பு மிக்கக் கோவிலாகக் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், தகழியில் அமைந்திருக்கும் தருமசாஸ்தா (ஐயப்பன்) கோவில் இருந்து வருகிறது.

தல வரலாறு
கேரளாவைத் தோற்றுவித்த பரசுராமர், கேரளப் பகுதி முழுவதும் 108 கோவில்களை நிறுவி வழிபட்டிருக்கிறார். அவர் நிறுவிய 108 கோவில்களுள் ஒதர்மலை எனும் மலையின் மேற்பகுதியில் அமைந்த சாஸ்தா கோவிலும் ஒன்றாக இருந்தது. பிற்காலத்தில் அந்தக் கோவிலில் வழிபாடுஇல்லாமல் போனது.
ஒரு முறை அதிக மழை பெய்த போது ஏற்பட்ட வெள்ளத்தால், அந்தக் கோவில் முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. அந்தக் கோவிலின் கருவறையில் இருந்த சாஸ்தா சிலை மழை நீரால் கீழே இருந்த பகுதிக்குக் கொண்டு வரப்பட்டது. தரைப்பகுதியில் இருந்த புதைகுழி ஒன்றில் அந்தச் சிலை சிக்கிக் கொண்டது.
அந்த வழியாக வில்வமங்களம் சுவாமிகள் ஒரு முறை சென்று கொண்டிருந்த போது, ஓரிடத்தில் இருந்து தெய்வீக ஒளி வருவதைக் கண்டார். அந்த ஒளி வரும் இடத்தை நோக்கிச் சென்ற அவர், அங்கிருந்த புதைகுழியில் சாஸ்தா சிலை ஒன்று இருப்பதைக் கண்டார். அந்தச் சிலை பரசுராமர் நிறுவி வழிபட்ட சிலை என்பதையும் அவர் அறிந்து கொண்டார்.
அந்தப் பகுதியில் மந்திரவாதியாக இருந்த ஒடியன் என்பவரை உதவிக்கு அழைத்து, புதைகுழிக்குள் இருந்த சிலையை வெளியில் எடுத்துப் புனிதப்படுத்தி வழிபாட்டுக்குரியதாக மாற்றினார்.
இந்த ஆலயத்தில் உள்ள சாஸ்தா, புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்டதால் ஆரம்ப காலகட்டத்தில் ‘பொதக்குழி சாஸ்தா’ என்றும், குழியில் புதையுண்டிருந்த சிலையை எடுக்க உதவிய ஒடியன் பெயரையும், முன்பிருந்த ஒதர்மலையையும் சேர்த்து, ‘ஒதரோடியன் சாஸ்தா’ என்றும் அழைத்து வந்தனர்.
சம்பகசேரி மன்னர் அந்தச் சிலை நிறுவப்பட்ட இடத்தில் ஒரு கோவிலைக் கட்டுவித்தார். அந்தக் கோவிலில் இருந்த சிலை சூரிய உதயத்தைப் போல் அதிக ஒளியைத் தந்ததால், அதனை மலையாளத்தில் ‘உதயர்க்கன் சாஸ்தா’ என்றழைத்தனர். பிற்காலத்தில் ஊர்ப் பெயரான தகழியுடன் சேர்த்து ‘தகழி தர்மசாஸ்தா’ என்றே அழைத்து வருகின்றனர்.
திருவிதாங்கூர் மன்னர் இந்தப் பகுதியைக் கைப்பற்றியதால், சம்பகசேரி மன்னர் அந்த இடத்தை விட்டு வெளியேறி விட்டார். அதன் பிறகு, அந்தக் கோவிலின் செயல்பாடுகள் அனைத்தும் முடங்கிப் போயின. அதனைக் கண்டு, அந்தக் கோவிலில் அனுதினமும் வழிபாடு செய்து வந்த ஆசான் என்ற பக்தர் வருத்தம் அடைந்தார். அவர் அந்த ஆலயத்தை எப்படியாவது புதுப்பித்து வழிபாட்டுக்குக் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தார்.
ஆனால், கோவிலைப் புதுப்பித்துப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நிதி ஏதும் அவரிடம் இல்லாததால், தான் தினமும் வழிபட்ட சாஸ்தாவிடமே, கோவிலைப் புதுப்பித்துக் கட்டுவதற்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு வழிகாட்டிட வேண்டுதல் வைத்து வந்தார்.
ஒரு நாள் அவரது கனவில் தோன்றிய சாஸ்தா, அங்கிருக்கும் மலைப்பகுதியில் கிடைக்கும் மூலிகைகள் மற்றும் எண்ணெய்களைக் கலந்து புதிதாக ஒரு மருத்துவ எண்ணெய்யைத் தயாரிக்க அவருக்குக் கற்றுக் கொடுத்தார். அந்த எண்ணெய்யை அப்பகுதி மக்களுக்கு விற்பனை செய்து, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கோவிலைப் புதுப்பிக்கும்படி சொல்லிவிட்டு மறைந்தார்.
மறுநாள் காலையில், அங்கிருந்த மலைப்பகுதிக்குச் சென்ற ஆசான், சாஸ்தா கனவில் சொன்ன மூலிகைகளைப் பறிந்து வந்து, அதனுடன் சாஸ்தா தெரிவித்த சில எண்ணெய்களைக் கலந்து புதிய மருத்துவ எண்ணெய் ஒன்றைத் தயாரித்து, அந்தப் பகுதி மக்களுக்கு வழங்கினார். அந்த மருத்துவ எண்ணெய் பல்வேறு வலிகளை நீக்கியதுடன் உடல் வலிமைக்கு உதவுவதாக அமைந்தது. அதன் மூலம் அவருக்குத் தேவையான வருவாயும் கிடைத்தது.
தனக்குக் கிடைத்த பணத்தைக் கொண்டு, அங்கிருந்த சாஸ்தா கோவிலைப் புதுப்பித்துக் கட்டி மீண்டும் வழிபாட்டுக்குக் கொண்டு வந்தார். மருத்துவ எண்ணெய் வழங்கி வந்த அந்த ஆசானை அப்பகுதியில் இருப்பவர்கள் ‘எண்ண வலியச்சான்’ (எண்ணெய் வலியச்சான்) என்று அழைத்தனர். பிற்காலத்தில் அக்கோவிலில் அவருக்கும் ஒரு சிலையமைத்து நிறுவப்பட்டது என்று இக்கோவிலின் தல வரலாறு சொல்லப்படுகிறது.
கோவில் அமைப்பு
இக்கோவிலில் தர்மசாஸ்தாவான ஐயப்பன் கிழக்கு நோக்கிய நிலையில், வலது காலை மடித்தும், இடதுகாலைத் தரையில் ஊன்றிய நிலையிலும் அமர்ந்திருக்கிறார். அவரது வலது கையில் சிறிய எண்ணெய்க் கிண்ணம் ஒன்றை வைத்திருக்கிறார். இக்கோவிலில் சாஸ்தாவைத் தவிர்த்து வழிபாட்டுக்குரியதாக வேறு துணை தெய்வங்கள் எதுவும் இல்லை. இக்கோவிலில் ஐயப்பனுக்குரிய மண்டல பூஜை நாட்கள் மற்றும் சிறப்பு நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்த ஆலயத்தில் மலையாள நாட்காட்டியின்படி, கும்பம் (மாசி) மாதத்தில் எட்டு நாட்கள் ஆண்டுத் திருவிழா நடைபெறுகிறது. முதல்நாள் கொடியேற்றத்துடன் தொடங்கும் இவ்விழா, எட்டாம் நாளில் ஆறாட்டு விழாவுடன் நிறைவடைகிறது. ஐயப்பனுக்குரிய மண்டல பூஜை நாட்களான 41 நாட்களும் இத்திருக்கோவிலில் ‘களமெழுத்துப் பாட்டு’ நடைபெறுகிறது. தனுர் (மார்கழி) மாதம் முதல் நாளில் தொடங்கி 11 நாட்களுக்குக் கலாபாபிஷேகம் எனும் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இக்கோவிலில் ஒதர்மலையில் இருந்து பறிக்கப்படும் மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும், வலி எண்ணெய் வழங்கப்படுகிறது. இந்த மருத்துவ எண்ணெய் மூட்டுவலி உள்ளிட்ட பல்வேறு வலிகளைக் குணப்படுத்துவதாக இருக்கிறது. எனவே, இங்கு வரும் பக்தர்கள் தங்கள் நோய்கள் அனைத்தும் மறைந்து உடல் வலிமை பெற்றிட வேண்டிச் செல்கின்றனர்.
இந்த ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் பக்தா்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், சம்பக் குளம் வட்டம், தகழி எனுமிடத்தில் இக்கோவில் அமைந்திருக்கிறது. ஆலப்புழா நகரில் இருந்து 19 கிலோமீட்டர் தூரத்திலும், சம்பக்குளம் நகரில்இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது தகழி திருத்தலம். ஆலப்புழா, சம்பக் குளத்தில் இருந்து ஏராளமான பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தேனி மு.சுப்பிரமணி

யோககுரு பகவானின் அருளைப் பெற்று மேன்மை பெறவும் இறைவன் யோகீஸ்வரர் அருளால் வாழ்வில் யோகம் பெறவும் ஒரு முறை நாமும் இத்தலத்தை தரிசித்து வரலாமே!
நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு பகுதியை தஞ்சையைப் போல் நெற்களஞ்சியமாக ஆக்கிக் கொண்டிருப்பது காவிரி நதி. இதன் கிளை நதி மணிகர்ணிகை. இந்த நதி காவிரியில் உள்ள புனித நதியான கங்கை நதிக்கு சமமான நதி என புராணங்கள் குறிப்பிடப்படுகின்றன. இந்த புனித நதியின் தென் பகுதியில் திருவெண்காடும், வடபகுதியில் மங்கைமடமும் அமைந்துள்ளன.
12 ரிஷிகள் மங்கைமடத்தில் சிவபெருமானை நோக்கி தவமிருந்தனர். இதையடுத்து இறைவன் சுயம்புவாகத் தோன்றி அவர்களுக்கு அருள்பாலித்தாராம். அந்த புராணத்தின் படி உருவானதே இங்குள்ள யோகீஸ்வரர் ஆலயம். இங்குள்ள இறைவன் ‘யோகநாதசுவாமி’ என்றும், இறைவி ‘யோகாம்பாள்’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. மேற்கு திசையில் இருந்து ஆலயத்திற்குள் வரவும் ஒரு வாசல் உள்ளது. ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம் காணப்படுகிறது. அடுத்துள்ள மகா மண்டபத்தில் பலிபீடம் இருக்க, அடுத்து நந்தியம் பெருமான் அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தின் வலது புறம் அன்னை யோகம்பாள் நின்ற கோலத்தில் தென்திசை நோக்கி இன்முகம் மலர வீற்றிருக்கிறாள்.
அவருக்கு எதிரே உள்ள கருவறையில் யோகநாத சுவாமி, லிங்கத் திருமேனியில் பத்ம பீடத்தில் மேற்குத் திசை நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். மகா மண்டபத்தின் மேல் திசையில் பெருமாளின் திருமேனி உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், ஞான பூங்கோதை, சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, கஜலட்சுமி, பைரவர், நவக்கிரக நாயகர்கள், சூரியன், விஷ்ணு, துர்க்கை அம்மன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். தேவ கோட்டத்தின் தென் திசையில் தட்சிணாமூர்த்தி அருள்புரிகிறார்.
கருங்கல் திருப்பணியுடன் கூடிய இந்த ஆலயம் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்கின்றனர் பக்தர்கள். ஆலயத்தின் மேற்கு திசையில் ஆலய தீர்த்தமான திருக்குளம் உள்ளது. ஆலய தல விருட்சம் பால மரம்.
பொதுவாக துர்க்கை அம்மன் தென்திசை நோக்கி அருள்பாலிப்பார். ஆனால் இங்கு கிழக்கு பிரகாரத்தில் அருள்பாலிக்கும் விஷ்ணு துர்க்கை, மேற்கு நோக்கி அமைந்திருப்பது விஷேச அமைப்பாகக் கருதப்படுகிறது.
ராஜ குருவான பிரகஸ்பதிக்கும், அசுர குருவான சுக்ரனுக்கும் கிரக தோஷம் பற்றியது. அவர்கள் இருவரும் தங்களை பற்றியுள்ள தோஷம் விலக, குருவின் குருவாய் இங்கு அமர்ந்து அருள்பாலிக்கும் யோக தட்சிணாமூர்த்தியை வழிபட்டனர். இதையடுத்து அவர்களது தோஷம் விலகியதாம்.
ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என ஐந்து முகங்களைக் கொண்ட அகோரமூர்த்தியான சிவபெருமான், மருத்துவாசுரனை சம்ஹாரம் செய்தார். எனவே அவரை பிரம்மஹத்தி தோஷம் பற்றியது. அந்த தோஷம் நீங்கவும் தன்னிடம் இயல்பாக உள்ள உக்கிரத்தை குறைக் கவும் இத்தலம் அருகே உள்ள நிகரான மணி கர்ணிகை ஆற்றில் நீராடினார். பின் தன் ஐம்புலன்களையும் அடக்கி சாந்தம் ஏற்பட தவம் இருந்து யோகம் செய்தார். எனவே இத்தல இறைவன் யோநாத சுவாமி என்றும், யோகீஸ்வரர் என்றும் அழைக்கப்படலானார். மங்கைமடம் என்ற இத்தலத்திற்கு இதனால் யோகீஸ்வரம் என்ற பெயரும் உண்டு.
ஐப்பசி அமாவாசையின் போது இறைவன், இறைவி எழுந்தருளி தீர்த்தவாரி தருவதுண்டு. இது குருதலம். குரு பெயர்ச்சி நாட்களில் இங்குள்ள யோக தட்சிணாமூர்த்திக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவதுண்டு. நூற்றுக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கு கொண்டு பயன் பெறுவது உண்டு.
சுற்றிலும் அழகிய மதில் சுவர்களைக் கொண்ட இந்த ஆலயம் இந்து அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
யோககுரு பகவானின் அருளைப் பெற்று மேன்மை பெறவும் இறைவன் யோகீஸ்வரர் அருளால் வாழ்வில் யோகம் பெறவும் ஒரு முறை நாமும் இத்தலத்தை தரிசித்து வரலாமே!
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி - திருவெண்காடு பேருந்து சாலையில் சீர்காழியில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது மங்கை மடம் திருத்தலம்.
மல்லிகா சுந்தர்
கும்பகோணத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்திலும், நாச்சியார் கோவிலில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் திருச்சேறை சார நாதப்பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.
ஒரு பிரளய காலத்தில் பிரம்மனுக்கு வேதங்களையும், ஆகமங்களையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவர் மண்ணால் ஒரு குடம் செய்து, அதனுள் வேதங்களையும், ஆகமங்களையும் வைக்க முயன்றார். ஆனால் குடம் உடைந்து போயிற்று. இருப்பினும் முயற்சியைக் கைவிடாத பிரம்மன், மீண்டும் மீண்டும் மண்ணெடுத்து குடம் செய்தாலும், அது உடைந்துகொண்டேதான் இருந்தது. பூவுலகின் பலத் திருத்தலங்களுக்கும் சென்று மண்ணெடுத்துக் குடம் செய்து பார்த்தார். எந்த மண்ணிலும் குடம் நிலையாய் இருக்கவில்லை.
இதனால் வருந்திய பிரம்மன், மகாவிஷ்ணுவை வேண்டினார். அப்போது மகாவிஷ்ணு, “பிரம்மா தேவா! நான் பூலோகத்தில் மிகவும் விரும்பி உறையும் சாரச்சேத்திரம் எனும் திருத்தலத்தில் இருந்து மண்ணெடுத்து குடம் செய்திடுக. அது உடையாமல் நிலைத்திருக்கும். இத்தலத்து மண் மிகவும் சத்து மிக்கசாரம் நிறைந்தது” என்றருளினார்.
இதனால் மகிழ்ச்சியடைந்த பிரம்மன் சார சேத்திரம் வந்து, மகாவிஷ்ணுவை துதித்து அத்தல மண்ணெடுத்து குடம் செய்தார். அதில் வேதங்களையும், ஆகமங்களையும் வைத்துக் காப்பாற்றிப் பராமரித்தார். பிரம்மன் பாதுகாத்து பராமரித்த வேதங்கள் உள்ளடங்கிய அந்த மண்குடத்தை, உலக நன்மைக்காக இன்றும் பிருகு, சவுனகர், வியாசர், பராசரர், வயின தேவர், மார்க்கண்டேயர், பணீந்திரர் ஆகிய சப்த ரிஷிகளும், சார புஷ்கரணிக்கரையில் தவமியற்றியவாறு காப்பாற்றி வருவதாக நம்பிக்கை.
இப்படி தேவர்கள், பூவுலகினர் என அனைத்து வகை உயிரினங்களின் வாழ்வாதாரம் பொதிந்த வேதங்களையும், ஆகமங்களையும் அந்த சார சேத்திர மண்குடம் தாங்கிக் கொண்டிருப்பதால், அத்தலம் ‘திருச்சாரம்’ என்று அழைக்கப்பட்டது. அதுவே தற்போது மருவி ‘திருச்சேறை’ என்று வழங்கப்படுகிறது. ‘சாரம்’ என்றால் ‘சத்து’ எனப் பொருள்படும். பிரம்மன் குடம் செய்ய மண் கொடுத்த திருக்குளம் ‘சார புஷ்கரணி’ என்று அழைக்கப்படுகிறது. இந்தத் திருக்குளத்தில் சேறு போன்ற மண் கிடைத்து அதில் குடம் செய்யப்பட்டதால், இத் திருத்தலம் ‘திருச்சேறை’ என்றானதாகவும் கூறுகிறார்கள்.
இங்கு எழுந்தருளிய மகாவிஷ்ணு ‘சாரநாதப் பெருமாள்’ எனற திருநாமம் கொண்டுள்ளார். அவரது உடனுறையும் தாயாரும் ‘சார நாயகி’ என அழைக்கப்படுகிறாள். ஆலய விமானமும் ‘சார விமானம்’ என்றானது. இப்படி ‘சாரநாதப் பெருமாள்’, ‘சார நாயகித் தாயார்’, ‘திருச்சாரம் தலம்’, ‘சார புஷ்கரணி’, ‘சார விமானம்’ என முறையே மூர்த்தி, தாயார், தலம், தீர்த்தம், விமானம் என ஐந்து விதத்திலும் அழியாமல் நிலைத்து நிற்பதால், இத்தலம் ‘பஞ்சசார சேத்திரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
கருவறையில் சாரநாதப் பெருமாள் கிழக்குப் பார்த்த வண்ணம் சேவை சாதிக்கிறார். பெருமாளுக்கு வலப்புறம் மார்க்கண்டேயரும், இடப்புறம் காவிரித் தாயும் எழுந்தருளி உள்ளனர். என்றும் பதினாறு வயது கொண்டவராய், சிரஞ்சீவியாய் இருக்கும் வரம் பெற்ற மார்க்கண்டேயர், ‘இறைவனின் திருவடிகளே சிரஞ்சீவத்துவத்தை விட மேன்மைதரும்’ என்பதை உணர்ந்து திருச்சேறையில் அருளும் சாரபரமேஸ்வரர், காலபைரவர் ஆகியோரை வழிபட்டு, பின்னர் சாரநாதப் பெருமாளின் திருவடியில் முக்திப் பெற்றார். இதனால்தான் இன்றளவும் பக்தர்கள் முதலில் திருச்சேறை சார புஷ்கரணியில் நீராடி, அதற்கு மிக அருகில் உள்ள சாரபரமேஸ்வரர் சிவாலயத்தை வழிபாடு செய்து, அங்குள்ள காலபைரவர் சன்னிதியில் தீபம் ஏற்றி வழிபட்ட பிறகுதான் சாரநாதப் பெருமாள் திருக்கோவில் வந்து வழிபாடு செய்கிறார்கள்.
ஒருமுறை கங்கை, காவிரி ஆகிய இரு நதி தேவதைகளுக்கும், ‘தமக்குள் யார் பெரியவர்?’ என்ற விவாதம் ஏற்பட்டது. அவர்களை அழைத்த பிரம்மன், காவிரியைப் பார்த்து, “பெருமைமிக்கவளே! மகாவிஷ்ணு வாமனனாக அவதரித்து, திாிவிக்கிரமனாக ஆகாயத்தை அளந்தபோது, எமது சத்தியலோகம் வரை அவரது திருவடிகள் நீண்டது. அப்போது அவரது திருப்பாதங்களை நான் திருமஞ்சனம் (நீராட்டுதல்) செய்தேன். அதுவே பெருக்கெடுத்து ஓடி புனிதம் மிக்க கங்கை நதி ஆனது. எனவே கங்கையே பெரியவள்” என்று கூறி முடித்தார்.
இதனைக் கேட்டு மிகவும் வருத்தமுற்ற காவிரி, “கங்கையினும் மேலான பெருமைபெற நான் என்ன செய்ய வேண்டும்” என்று பிரம்மனிடம் கேட்டாள்.
அதற்கு பிரம்மதேவன், “தூயவளே! நீ பூலோகத்தில் திருச்சாரம் எனும் திருத்தலம் சென்று, அத்தல சார புஷ்கரணிக் கரையில் உள்ள அரச மரத்தடியில் மகாவிஷ்ணுவை நினைத்து தவம் இயற்று. நீ விரும்பிய பெரும் பேற்றினை அடைவாய்” என்று அருளினார்.
அதன்படியே இந்தத் திருத்தலம் வந்து கடும் தவம் இயற்றினாள் காவிரித் தாய். அந்த தவத்தால் மகிழ்ந்த மகாவிஷ்ணு, ஒரு தைப்பூச நன்னாளில், குரு என்னும் வியாழன் கூடியிருந்த நேரத்தில் குழந்தை கண்ணனாக தவழ்ந்து வந்து காவிரியின் மடியில் அமர்ந்தார். ‘குழந்தையாக தம் மடியில் வந்து அமர்ந்திருப்பது மகாவிஷ்ணுவே’ என்பதை உணர்ந்த காவிரி, மகாவிஷ்ணுவின் பரிபூரண தரிசனத்தை வேண்டினாள்.
மறுநொடியே குழந்தையாக இருந்த கண்ணன், விஸ்வரூபம் எடுத்து, கருட வாகனத்தில் பத்மம் என்னும் தாமரையை தமது வலது கரத்தில் தாங்கி, வைகுண்டத்தில் இருப்பது போல காட்சி கொடுத்தார். அப்போது அவருடன் ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவி, மகாலட்சுமி, சாரநாயகி என ஐந்து தேவியர்களும் அருட்காட்சி புரிந்தனர். பின்னர் காவிரியின் வேண்டுதலுக்கு இணங்க, மகாவிஷ்ணு இங்கே திருக்கோலம் கொண்டார்.
குழந்தையாக கண்ணன் தவழ்ந்து வந்து, காவிரித் தாயின் மடியில் அமர்ந்ததைக் கண்ட பூலோகத்தின் அனைத்து நதிகள், தீர்த்தங்களும், காவிரியின் பெரும் புனிதத்தன்மையைக் கண்டு தொழுது நின்றன. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் வியாழன் கிரகம் வரும்போது, இத்தல சார புஷ்கரணியில் நீராடி சார நாத பெருமாளை வழிபட்டால், சகல தோஷங்களும், முன்ஜென்ம வினைகளும், கிரக தோஷங்களும், தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களும் அகன்று, வாழ்வில் நல்வளம் பெருகும் என்று தல புராணம் சொல்கிறது.
காவிரித்தாய் கண்ணனை மடியில் அணைத்த திருக்கோலத்தில் இருக்கும் திருக்கோவில், சார புஷ்கரணியின் மேற்குக்கரையில் அரசமரத்தடியில் அமைந்துள்ளது. சாரபுஷ்கரணியில் நீராடி காவிரித்தாய், சார நாதப் பெருமாளை முறைப்படி வலம் வந்து தீபமேற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு என்கிறார்கள்.
அமைவிடம்
கும்பகோணத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்திலும், நாச்சியார் கோவிலில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் திருச்சேறை சார நாதப்பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மிக அருகில் பாடல் பெற்ற சிவாலயமான சார பரமேஸ்வரர் திருக்கோவிலும் அமைந்துள்ளது.
சிவ.அ.விஜய் பெரியசுவாமி

திப்பு சுல்தான் ராணுவத்தினர் உருவாக்கிய ஆலயம், சயனக் கோலத்தில் அம்மன் காட்சிதரும் திருத்தலம் என்று பல்வேறு சிறப்புகள் கொண்டதாக திகழ்கிறது, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் ஆலயம்.
திப்பு சுல்தான் ராணுவத்தினர் உருவாக்கிய ஆலயம், விழாக் காலங்களில் தசாவதாரக் கோலம், சயனக் கோலத்தில் அம்மன் காட்சிதரும் திருத்தலம், மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் சூரியன் வழிபடும் கோவில் என்று பல்வேறு சிறப்புகள் கொண்டதாக திகழ்கிறது, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் ஆலயம்.
புராண காலத்தில் ‘பத்மகிரி’, ‘திண்டீச்சுரம்’, ‘நெல்லிவனம்’ என்றும், தற்போது ‘திண்டுக்கல்’ என்றும் அழைக்கப்படும் இந்த ஊரில், காணப்படும் மலையானது திண்டு போல் காட்சியளிப்பதால் இந்தப் பெயர் வந்தது. சேர, சோழ, பாண்டிய நாடுகளின் நடுப்பகுதியில் அமைந்த நகரம் இது.
சேரமன்னன் தர்மபாலன், மலை மீது பத்மகிரி நாதருக்கும், அபிராம்பிகைக்கும், கோவில் எழுப்பி இருந்ததாகவும், இதனை கி.பி. 1538-ல் அச்சுத தேவராயர் புனரமைத்தார் என்றும் வரலாறு கூறுகிறது. கி.பி. 1605-ல் முத்துகிருஷ்ணப்ப நாயக்கர் மலை மீது கோட்டை கட்டினார். திருமலை நாயக்கர் - ராணி மங்கம்மாள் திருப்பணிகள் செய்தனர். கி.பி. 1772-ல் ஐதர்அலியின் சகோதரர் மீர்சாகிப் மற்றும் ஆங்கிலேயர்களும் திருப்பணிகள் செய்ததாக வரலாறு கூறுகிறது.
தேவியின் சக்தி அம்சங்களில் ஒன்றான ரேணுகாதேவி, அக்னி வடிவானவள். ஜமதக்கினி முனிவரின் பத்தினியாக ரேணுகாதேவி விளங்கினார். அப்பகுதியை ஆண்ட கார்த்தவீர்யார்ச்சுனன், முனிவரிடம் இருந்த காமதேனுவை அடைய விரும்பினான். அதற்கு முனிவர் மறுக்கவே, மன்னனும் அவனது மகன்களும் சேர்ந்து முனிவரை கொன்றனர். முனிவரின் சிதையில் ரேணுகாதேவி உடன்கட்டை ஏறினாள்.
அப்போது ரேணுகாதேவியை காப்பதற்காக இந்திரன் வேண்டுதல்படி, வருணன் மழை பொழிந்து அக்னியை அணைத்தார். ஆனால் ரேணுகாதேவியின் ஆடைகள் எரிந்த நிலையில், அவர் வேப்பிலையை ஆடையாக அணிந்து கொண்டார்.
அப்போது அங்கு தோன்றிய சிவபெருமான், “நீ மானிடப் பிறவியல்ல. என் தேவியின் அம்சங்களில் ஒன்றானவள். நீ இந்தப் பூவுலகில் வாழ்ந்து மக்களுக்கு ‘மாரியம்மன்’ என்ற பெயரில் அருள்புரிந்து மக்களைக் காப்பாயாக” என்றார்.
இப்படி உருவான தேவியே ‘மாரியம்மன்.’ இந்த அன்னைக்கு வேப்பிலை ஆடையே விருப்பம். அவள் புசித்த மாவெல்லம், இளநீர் பானகமும் ஆகியவையே நிவேதனம் பொருட்கள் ஆகும்.
திண்டுக்கல் கோட்டையின் அடிவாரத்தில் அமைந்த மாரியம்மன் என்பதால் அன்னைக்கு ‘கோட்டை மாரியம்மன்’ என்ற பெயர் வழங்கப்படலானது.
மலைக்கோட்டையின் கீழே கோட்டை குளத்திற்கு கிழக்கே கவாத்து மைதானத்தில், திப்புசுல்தான் காலத்தில் ராணுவத்தினரால் சிறுபீடமும், அதன்பின்புறம் மாரியம்மன் நிறுவப்பட்டு, ஊரின் காவல் தெய்வமாகத் திகழ்ந்தது. இதுவே இன்றைய கோட்டை மாரியம்மன் திருக்கோவிலாகப் புகழ் பெற்றுள்ளது. தொடக்கத்தில் வெறும் மண்ணால் கட்டப்பட்டு, பீடம் மட்டும் இருந்து வந்தது. இதனைப் புதுப்பித்து அம்மனின் சிலா வடிவம் அமைக்கப்பட்டது. தரையோடு இணைந்த அமைப்பாக இது காணப்படுகிறது.
ஆலய அமைப்பு
கிழக்கு நோக்கிய இந்த ஆலயம், கோட்டையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. அம்மன் சன்னிதியை ஒட்டி தெற்கே விநாயகர், கருவறையின் பின்புறம் தெற்கே முனீஸ்வரர், வடக்கே கருப்பண்ணசாமி வீற்றிருக்கின்றனர். நடுநாயகமாக அன்னை கோட்டை மாரியம்மன் அமர்ந்து அருள்பாலிக்கிறார். இந்த அன்னை வலது காலை தொங்கவிட்டு, இடது காலை மடக்கி, ஆவுடையார் பீடத்தில் அமர்ந்து காட்சி தருகிறார். எட்டுக் கரங்கள் கொண்டு, வலதுபுறம் பாம்புடன் உடுக்கை, கத்தி, வேல், சூலாயுதம், இடதுபுறம் அரிவாள், வில், மணி, கிண்ணம் தாங்கி அன்னை அருள்பாலிக்கிறார்.
மார்ச் 9, 10, 11 மற்றும் அக்டோபர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் காலை 6.20 மணி முதல் 20 நிமிடம் சூரியன் தன்னுடைய ஒளிக்கதிர்களை அம்மன் சிரசில் பதியச் செய்கிறார்.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப் பட்டிருக்கும்.

திண்டுக்கல் மலை அடிவாரத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையம் மற்றும் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் கோவில் இருக்கிறது. திண்டுக்கல்லுக்கு மதுரை, திருச்சி, பழனி, தேனியில் இருந்து ஏராளமான பேருந்து வசதி உள்ளது.
பனையபுரம் அதியமான்