என் மலர்
கோவில்கள்
தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் திண்டல் மலையில் அமைந்துள்ளது திண்டல் முருகன் கோவில் என்னும் அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோவில்.
தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் திண்டல் மலையில் அமைந்துள்ளது திண்டல் முருகன் கோவில் என்னும் அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோவில். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில் திண்டல் மலை வேலாயுத சுவாமி கோவிலும் ஒன்று. இந்த திண்டல் மலை முழுவதும் உயர்ந்த மரங்கள் நிறைந்து காணப்படுகிறது.
திண்டல் மலை மீது தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். இங்கு தீபத்திருநாள் அன்று திருவிளக்கு ஏற்றி பக்தர்கள் ஜோதி வழிபாடு நடத்தி வருகின்றனர். இக்கோவிலில் மூலவர் குழந்தை வேலாயுத சுவாமி, குமார வேலாயுத சுவாமி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
இக்கோவிலில் உள்ள இடும்பனார், பஞ்சம் ஏற்பட்டபோது மழை பொழிய வேண்டியதாகவும் வேண்டுதலை கேட்டு மழை பொழிந்ததாகவும் வரலாறு கூறுகிறது. ஆகையால் இங்கு உள்ள மக்கள் தங்களது வேண்டுகோளை இடும்பன் மூலம் தெரிவித்து முருகனின் அருளை பெருவது இன்றும் நடைமுறையில் உள்ளது.
தீராவினை தீர்க்கும் வேலுடன் காட்சி தருகிறார் திண்டல்மலை முருகன். கருவறையின் வடமேற்கு பகுதி மலைச்சரிவில் சற்று தாழ்வான பகுதியில் தன்னாசி குகை உள்ளது. இந்த தன்னாசி குகையில் கார்த்திகை தீபத்தன்று மட்டும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்தக் கோயிலில் இரண்டு எலுமிச்சை பழங்களை வைத்து பூஜிக்கும் பக்தர்கள், அதில் ஒன்றை வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள். அதை நறுக்கி வீட்டின் நான்கு பக்கங்களிலும் வீசினால், துஷ்டர்களாளும் எதிரிகளாலும் ஏற்படும் ஆபத்துகள் நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கை. பங்குனி உத்திரம், கந்தசஷ்டி முதலான விழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

சென்னையில் உள்ள சிவாலயங்களில் சிவராத்திரி விழா களைகட்டியது. ஏராளமான பக்தர்கள் விடிய, விடிய தரிசனம் செய்தனர்.
சென்னை:
சிவபெருமானுக்கு உரிய விரதங்களில் மகா சிவராத்திரி விரதம் மிகவும் சிறப்பானது. இந்த புண்ணிய காலத்தில் சிவனின் நாமம் கூறி, நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில் சென்னையில் உள்ள கோவில்களில் சிவராத்திரி விழா நேற்று இரவு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மயிலாப்பூர் கபாலிசுவரர் கோவில், திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில், வடபழனி முருகன் கோவில், பாரிமுனை கச்சாலீசுவரர் கோவில், பாடி திருவலிதாயம் திருவல்லீசுவரர் கோவில் புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவில் உள்பட மாநகரில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடந்தது.
இதனையொட்டி பல்வேறு கோவில்கள் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சிவாலயங்களில் நேற்று இரவு முழுவதும் நான்கு காலங்களிலும் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இரவு, 8.30 மணி, 11 மணி, அதிகாலை 1 மணி மற்றும் 3 மணிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. ஒவ்வொரு கால அபிஷேக வேளையிலும் பஜனை நடந்தது.
சிவாராத்திரியையொட்டி மேற்கண்ட கோவில்களில் பக்தர்கள் விடிய, விடிய பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதங்களும் வினியோகம் செய்யப்பட்டன.
சிவநிந்தனைக்கு ஆள்பட்ட பிரம்மா, விஷ்ணுவுடன் சேர்ந்து சிவபெருமானும் வழிபட்ட சிறப்புமிக்க ஆலயம், திருமூவலூர் திருத்தலம் ஆகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
‘தான், தன்னால்’ என்ற எண்ணம் யாருக்கும், எப்பொழுதும் ஏற்படக்கூடாது. அப்படி ஏற்பட்டால் அது கர்வமாக மாறும். கர்வம் தேவையற்ற இன்னல்களை உருவாக்கும். இன்னல்கள் அமைதியை குலைக்கும். அமைதியின்மை நிம்மதியை அழிக்கும். இதன் அடிப்படையில்தான் ‘விட்டுக் கொடுக்க நினைப்பவர் கெட்டுப் போவதில்லை.. கெட்டுப்போக நினைப்பவர் விட்டுக் கொடுப்பதில்லை’ என்ற பழமொழி உருவானது. இந்த பழமொழி மனிதர்களுக்கு மட்டுமன்றி, தேவர்களுக்கும் பொருந்தும்.
சிவநிந்தனைக்கு ஆள்பட்ட பிரம்மா, விஷ்ணுவுடன் சேர்ந்து சிவபெருமானும் வழிபட்ட சிறப்புமிக்க ஆலயம், திருமூவலூர் திருத்தலம் ஆகும்.
தல வரலாறு
தாரகாசுரனின் மைந்தர்களான தாருகாட்சகன், கமலாட்சகன், வித்யுன்மாலி ஆகிய மூவரும், தந்தையைப் போலவே கடுந்தவம் செய்து பிரம்மனிடம் இருந்து பல வரங்களைப் பெற்றனர். அந்த அசுரர்கள் மூவருக்கும், மூன்று பறக்கும் நகரங்களை பிரம்மன் அளித்தார். அந்தரத்தில் பறக்கும் வல்லமை கொண்ட அந்த திரிபுரங்களுக்குள்ளும் சோலைகள், சிவாலயங்கள், குளங்கள் போன்ற வசதிகள் இருந்தன. கற்பக விருட்சமும், காமதேனும் அங்கிருந்து மக்களின் தேவைகளை நிறைவேற்றின.
தேவதச்சனான மயனைக் கொண்டு தாருகாட்சகன் பொன்னாலான கோட்டையையும், கமலாட்சகன் வெள்ளிக் கோட்டையையும், வித்யுன்மாலி இரும்புக் கோட்டையையும், தங்கள் நகரில் கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தனர். அவர் களின் மூன்று நகரங்களும் ஒளி யுடன் பிரகாசித்தன. ஆயினும் அவை அந்தரத்தில் விரைந்து பறக்கும்போது, பல ஜீவராசிகள் அழிந்தன, நட்சத்திரங்கள் உதிர்ந்தன. பூமி, சொர்க்கம் முதலியவற்றில் இந்த நகரங்கள் நிலைபெறும்போது, தேவர்கள், மனிதர்கள், முனிவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நாளடைவில் அசுரர்கள், தங்கள் பிறவிக்குணத்தை காட்டத் தொடங்கினர். அவர்கள், தங்கள் சக்தியை பயன்படுத்தி தேவர்கள், முனிவர்கள், மனிதர்களுக்கு துன்பங்களை இழைத்தனர். இதனால் அனைவரும் அஞ்சி நடுங்கினார்கள். ஒரு கட்டத்தில் அனைவரும் பிரம்மா, விஷ்ணு இருவரிடமும் சென்று தங்களைக் காப்பாற்றும்படி வேண்டினர். அவர்கள் தேவர்களை அழைத்துக் கொண்டு சிவபெருமானை சரணடைந்தனர்.
சிவபெருமான், “அந்த அசுரர்களை அழிக்க ஒவ்வொருவரும் தங்கள் ஆற்றலில் பாதியை அளித்தால் மட்டுமே முடியும்” என்று கூறினார். இதற்கு தேவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர். அதன்படி அனைத்து சக்திகளையும் திரட்டி வைதீகத் தேரை உருவாக்கப்பட்டது. அதனை பிரம்மதேவன் ஓட்ட முடிவானது. மேருமலையை வில்லாக்கி, வாசுகி என்ற நாகத்தை நாணாக்கி, திருமாலை அம்பின் தண்டாக்கினர். வாயுவை அம்பின் அடிப்பாகமாகவும், அக்னியை அம்பின் நுனிப்பாகமாகவும் செய்தனர். இப்படி சக்தி வாய்ந்த வில்- அம்பை தன் கையில் ஏந்திய சிவன், அசுரர்களின் கோட்டையை நோக்கி குறி வைத்தார்.
அப்போது, ‘நம்முடைய பங்களிப்பு இல்லாமல் இது நடக்காது’ என பிரம்மாவும் விஷ்ணுவும் கர்வம் கொண்டனர். அதை தன் ஞானக் கண்ணால் உணர்ந்த சிவன், சத்தமாக சிரித்தார். அந்த சிரிப்பே ஆயுதமாக மாறி, எவரது துணையும் இன்றி மூன்று அசுரர்களையும் கோட்டையையும் எரித்து சாம்பலாக்கியது. அசுரர்களும் மாண்டுபோனார்கள்.
இதைக் கண்ட திருமாலும் பிரம்மனும் தங்கள் கர்வத்தை கைவிட்டனர். இருப்பினும் அவர்கள் செய்த சிவநிந்தனையால் பாவம் வந்து சேர்ந்தது. அந்த பாவத்தைப் போக்க, திருமாலும், பிரம்மாவும் சிவனிடமே வழிகாட்டும்படி வந்து வேண்டி நின்றனர்.
தன் முன்பாக தலைவணங்கி நிற்கும் இருவரையும் பார்த்த சிவன், “காவிரிக் கரையில் புன்னாகவனம் எனப்படும் புன்னை மரக்காட்டில் ஒரு மரத்தடியில் லிங்க ரூபமாய் நான் இருக்கிறேன். அங்கு வந்து என்னை பூஜித்து விமோசனம் பெறுங்கள்” என்று அருளினார்.
அதன்படி திருமாலும், பிரம்மனும் இத்தலம் வந்து லிங்கத் திருமேனியைத் தேடினர். அப்போது வேடம் உருவில் வந்த சிவபெருமான், அவர்களை எதிர்கொண்டு புன்னாக வனத்திற்கு அழைத்துச் சென்று அங்கு மறைந்திருந்த லிங்கத் திருமேனியைக் காட்டி மறைந்தார்.
பிரம்மனும், விஷ்ணுவும் மீண்டும் ருத்ரமூர்த்தியை வேண்டி, “தாங்களே லிங்கத்திற்கு பூஜை செய்து காட்டியருள வேண்டும்” என்றனர். அதன்படி ஈசனே வந்து, இத்தல லிங்கத் திருமேனியை பூஜித்து வழிபடுவதற்கான வழியைக் காட்டியருளினார்.
இப்படி வழி (மார்க்கம்) காட்டி, பூஜையையும் உடனிருந்து செய்தமையால் (சகாயம்) ‘மார்க்கசகாயேசுவரர்’ என்று அழைக்கப்பட்டார். இதையே அழகுத் தமிழில் ‘வழித்துணைநாதர்’, ‘வழிகாட்டி வள்ளல்’ என்கிறார்கள். சிவன், பிரம்மன், திருமால் (அரி, அயன், அரன்) ஆகிய மூவரும் புண்ணாகீஸ்வரரை பூசித்ததால், இத்தலத்திற்கு ‘மூவரூர்’ (மூவர் ஊர்) என்று பெயர் வந்தது. அதுவே நாளடைவில் ‘மூவலூர்’ என்று மாறிப்போனது.
இந்த ஆலயம் 10-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இத்தலத்தில் 1925-ம் ஆண்டு தொல்லியல் ஆய்வறிக்கை மூலம் எட்டு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. அந்த கல்வெட்டுகளில் இவ்வூர் ‘ஜெயங்கொண்ட சோழ வளநாட்டு திருவழுந்தூர் நாட்டு திருமூவலூர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விக்கிரம சோழ தேவன் (கி.பி.1120), மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1189), மூன்றாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1225) காலக் கல்வெட்டுகளில், ஆலயத்திற்கு வழங்கப்பட்ட நிலக்கொடை, அந்தணர்களுக்கு வழங்கப்பட்ட கொடை, பூஜைகள் செய்ய வழங்கப்பட்ட பொற் காசுகள், இறைவன்- இறைவிக்கு வழங்கிய ஆபரணம் உள்ளிட்ட பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளன. இறைவன் ‘மூவலூர் உடைய நாயனார்’ என்று அழைக்கப்பட்ட செய்தியும் கல்வெட்டில் இருக்கிறது.
மகிஷாசுரன் என்ற அசுரன் தவம் செய்து, ‘எந்த ஆண்களாலும் தன் உயிருக்கு ஆபத்து வரக் கூடாது’ என்ற வரத்தை சிவபெருமானிடம் கேட்டுப் பெற்றான். பெண்கள் எல்லாரும் சக்தியற்றவர்கள் என்ற எண்ணத்தால், பெண்களை அவன் முன்னிலைப் படுத்தவில்லை. பின்னர் தேவர்களுக்கும், மக்களுக்கும் தீராத துயரத்தைத் தந்தான். இதனால் பாதிக்கப்பட்ட அனைவரும் இறைவனிடம் முறையிட்டனர்.
மகிஷாசுரனை வதம் செய்ய பெண் சக்தியால் மட்டுமே இயலும் என்பதை உணர்ந்த சிவன், அன்னை பார்வதியை நாடுமாறு கூறினார். அதன்படி தேவர்கள் அனைவரும், அன்னையிடம் சென்று முறையிட்டனர். அதற்கு செவிமடுத்த அன்னை, துர்க்கையாக வடிவம் பூண்டு, அசுரனை வதம் செய்து அழித்தாள். பிறகு தனது கோர முகம், அழகிய முகமாக மாற, மூவலூரில் தீர்த்தம் உண்டாக்கி நீராடி, இறைவனை வழிபட்டு வந்தாள். அதன் பயனால், அழகிய முகத்தையும், திருவுருவத்தையும் பெற்றாள். அதோடு மீண்டும் தவம் இயற்றி இறைவனை மணந்தார் என்பது தல வரலாறு.
இத்தல அன்னையின் திரு நாமம், ‘மங்களநாயகி’, ‘சவுந்தர நாயகி’ என்பதாகும். இத்தலத்தில் சவுந்தரநாயகி அம்பாளுக்கு தனி சன்னிதி உள்ளது. இச்சன்னிதியின் கருவறைச் சுவரில் வெளிப் புறத்தில் மேற்புறமாக பல அரிய சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த அன்னையுடன், மங்களாம்பிகை என்ற அம்பாளுக்கும் தெற்கு நோக்கிய தனி சன்னிதி அமைந்துள்ளது. அன்னை இருவரின் வடிவங்களும் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. அமாவாசை தோறும் சவுந்தரநாயகிக்கு சிறப்பு அபிஷேகமும், லலிதா திரி சடையும், சிறப்பு ஆராதனையும் செய்யப்படுகிறது.
ஆலய தல விருட்சம் புன்னை மரம். தீர்த்தங்கள் - சந்திர புஷ்கரணி, துர்கா புஷ்கரணி, உபமன்யு முனிவர் வழிபட்ட ‘உபமன்யு கூபம்’ என்னும் கிணறு, காவிரி நதியில் அமைந்துள்ள பிப்பிலர் தீர்த்த கட்டம் ஆகியவைகளாகும். இத்தலத்து இறைவனை, பிரம்மா, விஷ்ணு, துர்க்கை, சந்திரன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். மகா சிவராத்திரியின் நான்காம் காலத்தில் நவ நாகங்களும், ரத சப்தமியில் சப்தமாதர்களும் வழிபட்டுப் பேறுபெற்றனர்.
இதய நோய் உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் 11 நெய் தீபம் ஏற்றி, சுவாமிக்கு அர்ச்சனை செய்தும், பாலாபிஷேகம் செய்தும், அபிஷேக பாலை அருந்தியும் வந்தால் நோய் குணமாவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ஏழூர் கோவில்
மயிலாடுதுறையை மையமாகக் கொண்டு மயிலாடுதுறை - ஐயாறப்பர், தனியூர் - புனுகீஸ்வரர், சித்தர்காடு - பிரம்மபுரீஸ்வரர், சோழம்பேட்டை - அழகியநாதர், துலாகட்டம் - காசிவிஸ்வநாதர், மயிலாடுதுறை - மாயூரநாதர், மூவலூர் - மார்க்கசகாயேஸ்வரர் என்னும் சப்த ஸ்தான தலங்கள் ( ஏழூர் கோவில்கள்) இருக்கின்றன. இந்த ஏழூர் ஆலயங்களில் ஒன்றுதான் மார்க்க சகாயேஸ்வரர் கோவில். மயிலாடுதுறையை மையமாகக் கொண்டு கிழக்கே திருவிளநகர் துறைகாட்டும் வள்ளல், தெற்கே பெருஞ்சேரியில் மொழிகாட்டும் வள்ளல், மேற்கே மூவலூரில் வழிகாட்டும் வள்ளல், வடக்கே உத்திர மாயூரத்தில் கைகாட்டும் வள்ளல் எனப்படும் நாற்திசை வள்ளல்களில் ஒருவராகவும், இத்தல இறைவன் திகழ்கிறார்.
ஆலய அமைப்பு
கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் ஆலயத்தின் சிறப்பை எடுத்துரைக்கிறது. ராஜகோபுரத்திற்கு வெளிப்புறம் விநாயகர், முருகன் சன்னிதிகள் உள்ளன. உட்புறம் உயர்ந்த கொடிமரமும், நான்கு திக்குகளை நோக்கும் விதமாக, வேதநந்திகளை நாற்புறமும் கொண்ட பலிபீடமும் அமைந்துள்ளது. இதுபோன்ற பலிபீட அமைப்பு வேறெந்த ஆலயத்திலும் இல்லை என்கிறார்கள். அதற்கு அடுத்ததாக இறைவனை நோக்கியவாறு அதிகார நந்தி அருள்பாலிக்கிறார்.
அமைவிடம்
மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் ரெயில்வே மேம்பாலத்தை ஒட்டி 2 கிலோமீட்டர் தொலைவில் பிரதான சாலையில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. அடிக்கடி பஸ் வசதிகள் உள்ளன.
நெய்வாசல் நெடுஞ்செழியன்

திருமால் பேறு பெற்ற தலம் என்பதால் இத்தலம் ‘திருமாற்பேறு’ என்றானது. அதுவே மருவி நாளடைவில் ‘திருமால்பூர்’ என்றானது. இந்த தலத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
ஒருமுறை சிவனுக்கும் பார்வதிக்கும் தமக்குள் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென பார்வதிதேவி, பரமேஸ்வரனின் கண்களை தன் கரங்களால் மூடினார். அது ஒரு கண நேரம்தான் என்றாலும், மற்ற உலகங்களில் அது பல யுகங்களாக நீடித்தது. சிவனின் கண்களாக அறியப்படும் சூரியன், சந்திரன், அக்னி ஆகிய முக்கண்களும் மூடப்பட்டதால், உலக உயிர்கள் அனைத்தும் வதைபட்டன. உலகம் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
தன் விளையாட்டு வினையாகி விட்டதை உணர்ந்த பார்வதிதேவி, தன்னால் உலகம் சந்தித்த விளைவை எண்ணி வருந்தினார். தன் தவறுக்கு பரிகாரம் வேண்டினார்.
உடனே சிவபெருமான், “நீ பூலோகம் சென்று தவம் செய்” என்றார். அதை ஏற்று பூலோகம் வந்த பார்வதி, பாலாற்றின் கரையிலிருந்த வில்வ மரத்தடியில் மணல் லிங்கம் அமைத்து வழிபட்டதோடு, 32 தருமங்களையும் வளர்த்தார்.
தேவியின் தவத்தில் மனம் குளிர்ந்த ஈசன், அவரைத் தேடிவந்து “பார்வதி.,” என்று அழைத்தார். சிவ சிந்தனையில் ஆழ்ந்திருந்ததால், ஈசனின் குரல் பார்வதி தேவியின் மனதிற்குள் நுழையவில்லை.
தன்னை அலட்சியம் செய்வதாக எண்ணிய இறைவன், பார்வதியின் தவத்தை கலைப்பதற்காக, தம் தலையில் இருந்த கங்கையை தூக்கி பாலாற்றில் விட்டார். இதனால் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் தேவியின் தவம் கலைந்தது. வெள்ளத்தில் மணல் லிங்கம் அடித்துச் சென்றுவிடாமல் இருக்க, அதை இறுக்கமாக தழுவியபடி இருந்தார், பார்வதிதேவி. மேலும் தனக்கு உதவும்படி தன் அண்ணனை அழைத்தார்.
தங்கையின் குரல் கேட்டு அங்கு வந்த பெருமாள், ஆற்றின் குறுக்காக சயனக் கோலத்தில் படுத்து, பாலாற்றை தெற்கு நோக்கி பாயச் செய்தார். அதன் பின் சிவ பூஜையை நிறைவு செய்தார் பார்வதி. இதையடுத்து பார்வதிக்கு காட்சி தந்து, அவரை ஏற்றி கயிலை திரும்பினார் சிவபெருமான்.
ஜலந்தாசுரன் என்னும் அசுரன், தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். இதனால் தேவர்கள், சிவனிடம் சென்று முறையிட்டனர். உடனே ஈசன், தன் விரலால் பூமியில் ஒரு வட்டமிட்டார். அது சக்கராயுதமாக மாறி, ஜலந்தாசுரனை அழித்து, மீண்டும் ஈசனிடம் வந்துசேர்ந்தது.
அந்த சமயத்தில் குபன் என்ற அரசனுக்கும், ததீசி என்ற முனிவருக்கும் பகை உண்டானது. விஷ்ணு பக்தனான குபன், திருமாலிடம் முறையிட்டான். உடனே திருமால் தன்னிடம் உள்ள சக்கராயுதத்தை ஏவினார். அது ததீசி முனிவரின் வஜ்ர உடலை தாக்க முடியாமல் கூர்மழுங்கியது. இதையடுத்து சிவனிடம் உள்ள சக்கராயுதத்தை பெற திருமால் முடிவு செய்தார்.
அதன்படி உடல் முழுவதும் திருநீறு, ருத்ராட்சம் உள்ளிட்ட சிவச்சின்னம் அணிந்து, பார்வதி வழிபட்ட மணல் லிங்கத்திற் பூஜை செய்து வழிபட்டார். மேலும் தினமும் ஆயிரம் தாமரை கொண்டு இறைவனை பூஜித்தார். ஒரு நாள் பூஜைக்கு ஒரு தாமரை குறைந்தது, அதையடுத்து தன் கண்களில் ஒன்றை சிவனுக்கு அர்ப்பணித்தார் திருமால்.
சிவபெருமான் மகிழ்ச்சி அடைந்து திருமால் முன்பாக காட்சி தந்து அவருக்கு அருள்பாலித்தார். மேலும் அவருக்கு தேன் தாங்கிய தாமரைக் கண்களை வழங்கியதுடன், தன்னிடம் இருந்த சுதர்சன சக்கரத்தையும் வழங்கி அருளினார். திருமால் பேறு பெற்ற தலம் என்பதால் இத்தலம் ‘திருமாற்பேறு’ என்றானது. அதுவே மருவி நாளடைவில் ‘திருமால்பூர்’ என்றானது.
மேற்கண்ட புராணங்களின் அடிப்படையில் அமைந்ததுதான், அஞ்சனாட்சி சமேத மணிகண்டீஸ்வரர் ஆலயம். இந்த தலம் காஞ்சிபுரம் அருகே திருமால்பூரில் உள்ளது. 1000 ஆண்டுகளுக்கும் முந்தைய இந்த ஆலயத்தின் மூலவர் மணலால் ஆனவர். இது தீண்டாத் திருமேனி என்பதால், இவருக்கு புனுகு மட்டுமே சாற்றப்படுகிறது. உற்சவ மூர்த்தியான, சிதம்பரரேஸ்வருக்குத்தான் அபிஷேகம் நடக்கிறது.
மூலவருக்கு எதிரில் நந்தியம்பெருமான், அருகில் திருமால் கைகூப்பிய நிலை இருக்கிறார். உற்சவர் திருமாலின் கரத்தில் தாமரை மலரும், கண்ணும் உள்ளன. இங்குள்ள சிவபெரு மானுக்கு, தணிவொன்று மணமுடையார், புகழ்தீண்டச் சிவந்தபிரான், சாதரூபர், மணிகண்டர், தயாநிதியார், பவளமலையார், வாட்டந்தவித்தார், பாசப்பிணி விண்ட சாகினர் (திருமாற்குப் பேறளித்தார்) என்று எட்டு திருநாமங்கள் உள்ளன. இத்தல இறைவனை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். பாசப்பினைப்பில் இருந்து நீங்குவீர்கள். முக்தி நிலையை எட்டலாம்.
இத்தல இறைவியான அம்பாள், ‘அஞ்சனாட்சி’ என்ற திருநாமத்துடன், அஷ்டலட்சுமியோடு கூடிய பீடத்தில் எழுந்தருளியுள்ளார். இவருக்கு பவுர்ணமி தோறும் ஊஞ்சல் சேவை நடக்கிறது. மீன ராசிக்காரர்கள் இந்த அம்பாளை வழிபட்டு, சகல தோஷ நிவர்த்தி பெறலாம். இது சித்திரை நட்சத்திர தலமாகவும் திகழ்கிறது. இந்த ஆலயம் சந்திரன் வழிபட்ட தலமாகும்.
இறைவனுக்கு சிவப்புத் தாமரை அணிவித்து, நெய் தீபமேற்றி அர்ச்சனை செய்து வழிபடுவது இங்குள்ள தரிசனமுறை. சடாரி வைத்து, தீர்த்தம் தருவது இவ்வாலய சிறப்பு. திருமால் உண்டாக்கியதால் இங்குள்ள தீர்த்தம் ‘சக்கர தீர்த்தம்’ என அழைக்கப்படுகிறது. தல விருட்சமாக வில்வமரம் உள்ளது. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் இத்தலத்தில் பதிகம் பாடியுள்ளனர்.
குரங்கு முகத்துடன் நந்தி
ஒருமுறை ராவணன் தன் புஷ்பக விமானத்தில் வடதிசை நோக்கிப் பறந்து கொண்டிருந்தான். திடீரென்று பறக்க முடியாமல் விமானம் நின்றுவிட்டது. அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள ராவணன் ரதத்தைவிட்டு கீழே இறங்கினான்.
அப்போது அவன் முன் நந்தி பகவான் தோன்றி, “ராவணா, நீ நின்றுகொண்டிருப்பது சிவபெருமான் வாழும் கயிலாய மலைப் பகுதி. சிவபெருமான் தவத்தில் உள்ளார். அவருக்கு இடையூறு செய்யாதே. உன் போல் ஆணவம் கொண்டவர்களால், இந்த மலையைக் கடந்துசெல்ல இயலாது. எனவே நீ மலையைச் சுற்றிக்கொண்டு பறந்து போ!” என்றார்.
அதைக்கேட்டு ஆத்திரமடைந்த ராவணன், “குரங்கு போன்ற தோற்றம்கொண்ட நீயா என்னைத் திரும்பிப் போகச் சொல் கிறாய்? என் பராக்கிரமத்தை நினைத்துப் பார்க்காமல் என்னை இழித்துப்பேசிய நீ யார்?” என்று கேட்டான்.
ராவணன் அப்படி கேட்டதும், நந்தியின் முகம் குரங்காக மாறியது. இதைக் கண்ட நந்தி, “ராவணா, என்னை குரங்கு என்று நீ இகழ்ந்து பேசியதால், நீயும் உன் இலங்கை நகரமும் ஒரு குரங்கால் அழிந்துபோகும்” என்று சபித்தார்.
அதைக்கேட்டு ராவணனின் கோபம் மேலும் அதிகரித்தது. “இந்த மலையை கிள்ளி எறிந்துவிடுகிறேன் பார்” என்று சூளுரைத்தவாறு, கயிலைமலையை அடியோடு பெயர்க்கத் தொடங்கினான், ராவணன்.
இதைக் கண்ட சிவபெருமான், மலையின் அடியில் ராவணனை சிக்கவைத்து, தன் கால் கட்டை விரலால் மலையை அழுத்திக்கொண்டார். பல ஆயிரம் ஆண்டுகளாக அதில் இருந்து ராவணன் மீள முடியவில்லை. தவறை உணர்ந்த அவன், தன் தலையைக் கிள்ளி குடமாக்கி, ஒரு கையை தண்டமாக்கி, நரம்புகளால் தந்தி செய்து ஒரு வீணையை உருவாக்கினான். அதன் மூலம் சாம கானம் இசைத்தான். இதில் மனம் கரைந்த சிவன், ராவணனை விடுவித்தார்.
இருப்பினும், நந்தி கொடுத்த சாபம் ராவணனைத் தொடர்ந்தது. அதனால்தான் ஆஞ்சநேயரால், இலங்கை நகரம் தீக்கிரையாக்கப்பட்டது.
இந்த ஆலயத்தில் குரங்கு முகம் கொண்ட அதிகார நந்தியை நாம் தரிசிக்கலாம். இவரை தரிசித்த பிறகே, மூலவரை வழிபடச் செல்ல வேண்டும் என்ற வழிபாட்டு நியதியும் இங்கே உள்ளது.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
காஞ்சிபுரத்தில் இருந்து 12 கி.மீ., அரக்கோணத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் திருமால்பூர் உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து பள்ளூர் ரெயில் நிலையம் வரை சென்று, அங்கிருந்து 4 கி.மீ. பயணித்தும் இந்த கோவிலை அடையலாம்.
கி.ஸ்ரீமுருகன்

தஞ்சை மாவட்டம் திருவையாறு- கும்பகோணம் சாலையில் காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது கபிஸ்தலம் எனப்படும் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குவது கபிஸ்தலம் எனப்படும் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில். இந்த கோவில் தஞ்சை மாவட்டம் திருவையாறு- கும்பகோணம் சாலையில் காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. கபி என்ற சொல்லுக்கு குரங்கு என்று பொருள். ராமபக்தனான அனுமனுக்கு திருமால் இத்தலத்தில் ராமபிரானாக காட்சி அளித்ததால் கபிஸ்தலம் என பெயர் ஏற்பட்டது. கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா, தீ மாற்றமும் சார வகை அறிந்தேன்- ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரைக் கிடக்கும் உள்ளத் தெனக்கு என்று திருமங்கை ஆழ்வார் ஆற்றங்கரை கண்ணனே என்று பாடியதால் பெரு மாளை கண்ணன் என்றும் அழைப்பர்.
இத்தலத்தில் மூலவர் கஜேந்திர வரத ராஜ பெருமாள் கிழக்கு நோக்கியபடி புஜங்க சயனராக ஆணைக் கருளியவராக பாம் பணையில் பள்ளி கொண்ட படி காட்சி தருகிறார். தாயார் ரமாமணி வல்லிக்கு தனி சன்னதி உள்ளது. உற்சவர் வரதராஜ பெருமாள். தீர்த்தம்-:- கஜேந்திர புஷ்கரணி, கபில தீர்த்தம்.
தல வரலாறு
இந்ரத்யும்னன் என்ற பாண்டிய மன்னன் ஏகாதசி தோறும் விரதம் இருப்பது வழக்கம். எப்போதும் நாராயணனை நினைத்து தவமிருப்பார். அச்சமயத்தில் ஒருமுறை அகத்திய முனிவர் தன் சீடர்களுடன் மன்னனை காண வந்தார். பகவானை நினைத்து தியானத்தில் இருந்த மன்னன், அகத்தியரை கவனிக்க வில்லை. ஆணவத் தில் தன்னை அவ மரியாதை செய்வதாக கருதிய அகத்தியர், மன்னனை யானையாக போகும்படி சபித்தார். சாபம் உடனே பலித்தது. மன்னன் கஜேந்திரனாக (யானை) பிறந்தான். ஒரு குளத்தில் தாமரை மலர் எடுத்து வந்து தினமும் பகவானை அர்சித்து வழிபட்டு வந்தான்.
புகூ என்ற கந்தர்வன் தேவலோகத்தில் இருந்து பூமிக்கு வந்து கபிஸதலத்தில் உள்ள குளத்தில் குளிப்பது வழக்கம். ஒருநாள் அந்த குளத்தில் குளித்து கொண்டு இருந்த காசிப முனிவரின் காலை கந்தர்வன் பிடித்து இழுத்தான். உடனே கோபம் கொண்ட முனிவர் அவனை முதலையாக போகும் படி சாபமிட்டார். கந்தர்வன் முதலையாக மாறி பெருமாளிடம் சாபவிமோசனம் வேண்டி இந்த குளத்தில் இருந்து பிரார்த்தனை செய்து வந்தான்.
முதலையாக மாறி இருந்த கந்தர்வன் ஒருநாள் மலர் பறிக்க வந்த கஜேந்திரனின் காலை பிடித்து கொண்டான். முதலையின் பிடியில் இருந்து யானை தனது காலை விடுவிக்க முயல, யானையை முதலை தண்ணீருக்குள் இழுக்க, ஒராயிரம் வருட காலங்கள் இந்த போராட்டம் நீடித்தது.
கடைசியாக கஜேந்திரன் பகவானின் பாதத்தை சரணடைந்து மூர்த்தியான பகவான் ஸ்ரீமன் நாராயணன் சங்கு. சக்கரதாரியாக கருடன் மீது விரைந்து வந்து தன் சக்கராயுதத்தால் முதலையை சம்ஹாரம் செய்தார். முனிவரின் சாபம் நீங்க பெற்ற முதலை, கந்தர்வனாக ஆனது. கஜேந்திரனுக்கு பெருமாள் மோட்சம் அளித்து தன்னுடன் ஐக்கியப்படுத்தி கொண்டார்.
தூய்மையான பக்தி கொண்டு வணங்குவோருக்கு இத்தலத்து பெருமாள் மோட் சம் அளிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. வலது கரத்தில் முத்திரையுடன் ஆதிமூல பெருமாள் பள்ளி கொண்ட திருக்கோலத்துடன் காட்சி அளிக்கிறார். நாபிக் கமலத்தில் பிரம்மன் அமர்ந்திருக் கிறார். பொற் றாமரை வல்லி தாயார், கனகவல்லி தாயார் உடனிருக் கின்றனர். இங்கு சக்கரத்தாழ்வார், நரசிம் மருக்கு தனி சன்னதிகள் உள்ளன. வருடந்தோறும் ஆடி மாதம் கஜேந்திர மோட்சம் உற்சவம் 3 நாட்கள் நடைபெறுகிறது.
விழாக்கள்
சித்திரை மாதம் உற்சவம், ஆடிப்பூரம், புரட்டாசி மாதம் நவராத்திரி உற்சவம், மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி, ராப்பத்து, பகல்பத்து உற்சவம் நடைபெறும். காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் இருந்து வடக்கே 2 கிலோ மீட்டர் தூரத்தில் இத்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் பஸ்சிலும் ஏறி இத்தலத்துக்கு செல்லலாம். பாபநாசத்தில் இருந்து கபிஸ் தலம் செல்ல டவுன் பஸ் வசதி உள்ளது.
கருடன் மூலம் குறை தீர்க்கும் பகவான்
இங்கு உங்கள் மனதில் உள்ள குறைகளை எல்லாம் கொட்டினால், பகவான் கருடன் மூலம் பறந்து வந்து உங்கள் குறைகளை தீர்த்து வைப்பார். குறிப்பாக எதிரிகளிடம் சிக்கி உயிருக்கு பயந்து கொண் டிருப்பவர்கள் இத்தலத்து பெருமாளை வழிபட அவர் கஜேந்திர நாத னாக வந்து உங்களை காத்தருள்வார்.
ஏழ்மை நீங்காதவர்கள், சாபம் பெற்றவர்கள், தொடர் நஷ்டத்தை சந்திப்பவர்கள், தீராத நோயால் அவதிப்பட்டு கொண்டிருப்பவர்கள் இத்தலத்தில் ஒரு நாள் முழுவதும் தங்கி இருந்து அர்ச்சனை ஆராதனை உள்ளிட்ட எல்லா பூஜைகளும் செய்ய,குறைகள் பணி போல மறையும்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் குடி கொண்டிருக்கும் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கிழக்கு முகமாய் நின்ற திருக்கோலத்தில் உள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் குடி கொண்டிருக்கும் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கிழக்கு முகமாய் நின்ற திருக்கோலத்தில் உள்ளார். பெருமானின் வலதுபக்கத்தில் நம்பிக்கை நாச்சியார், வஞ்சுளவல்லி என்ற திருநாமத்துடன் தமது வலது திருக்கையில் வரத முத்திரையுடன் இடது திருக்கையைத் தொங்க விட்டுக் கொண்டு நின்ற திருக்கோலத்தில் உள்ளார். இவ்வாறு நாச்சியார் மூலவர் பெருமாளுடன் மூலஸ் தானத்திலேயே நின்ற திருக்கோலத்துடன் மற்ற எந்த திவ்விய தேசத்திலும் இல்லாத வகையில் இக்கோவிலில் தரிசனம் தருகிறார்.
சீனிவாசப் பெருமாளுக்கு வலதுபக்கத்தில் நான்முகப் பிரமன் சங்கர்ஷணன் என்ற பெருமாளும் இடது பக்கத்தில் வரிசையாக அநிருநத்தன், ப்ரத்யும்னன் (இவர் மட்டும் சற்றுக் குட்டையான திருமேனியுடன் எழுந்தருளியுள்ளார்). சாம்பன் என்ற புருசோத்தமன் என்பவர் மிடுக்காக நின்ற திருக்கோலத்தில் காட்சி தருவது கூடுதல் சிறப்பாகும். பக்தர்களுக்கு அற்புதங்கள் நிகழ்த்தி சினீவாச பெருமாள் விளங்கி வருகிறார். 108 திவ்ய தேசங்களில் இக்கோவிலும் ஒன்றாகும்.
இது நாச்சியாருக்கு சிறப்புள்ள தலமாகும். ஆஸ்தானத்திலும், திருவிழாக்காலங்களிலும் பெருமாளுக்குச் சற்றுமுன் இருப்பார். நாச்சியாருக்குத் தனிச்சன்னதி இல்லை. ஆண்டாளுக்கு தனிக்கோவில் இல்லை. தேரோடும் தெரு முதல் கருவறை முடிய சேர்த்து ஏழு சுற்றுகள். எல்லாத் தலங்களிலும் வடக்கில் தான் பரமபத வாசல் இருக்கும். ஆனால் இத்தலத்தில் திருவுண்ணாழி தெற்கு சுற்றில் தெற்கு நோக்கி பரமபத வாசல் உள்ளது.
இத்தனை சிறப்புகள் பெற்றிருக்கும் இத்தலத்தில் மேலும் மெருகூட்டும் விதமாக இறைவன் அருளோடு அனைவருக்கும் அருளாசி வழங்கி வரும் கல் கருட பகவானை வழிபடுவது மிகவும் சிறந்தது.
கல்கருட பகவான்
நாச்சியார்கோயில் சீனிவாச பெருமாள் கோவில் கருவறைக்குக் கீழே மகாமண்டபத்தில் வடபால் தெற்கு நோக்கியுள்ள சந்நிதியில் பட்சிராஜன், பெரிய திருவடி, வைநதேயன், புள்ளரசர் என்றெல்லாம் அழைக்கப்படும் கருடன் எழுந்தருளியுள்ளார். மற்றைய திருப்பதிகளில் இல்லாத தனிச்சிறப்பு இத்தலத்தில் இவருக்கு உண்டு. இவர் சிலை வடிவானவர், சாளகிராம வடிவானவர் என்றும் கூறுவார்கள். இத்தலத்தில் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கல்கருடன் தரிசனம் மிகவும் புகழ் பெற்றது.
பெருமாளுக்கும் திருவா ராதனம் கண்டருளப் பண்ணியவுடன் அவர் செய்த அமுதுபடியை இவருக்கும் சமர்ப்பிக்கும் ஆராதனம் நடைபெறும். இவர் மிகவும் வரப்பிரசாதி. இவருக்கு ஆடி மாதம் சுக்கில பஞ்ச மயில் ‘அமுதகலசம்” என்ற கொழுக் கட்டைப் பணியாரம் செய்து சமர்ப்பித்தால் நினைத்த காரியம் உடனே கைகூடும்.
பட்சிராஜன் கருடனுக்குத் தனிச்சிறப்பு இத்தலத்தில் உள்ளதுபோல் எங்கும் காண இயலாது. இத்தலத்தில் கருடனின் தனிக் கோயில் மூலத்தானத்திற்கு கீழே மகா மண்டபத்தில் தெற்கு நோக்கியுள்ளது. உள்ளே பட்சிராஜன், கருடன் வைநதேயன், பெரிய திருவடி, புள்ளரசு, மங்களாலயன் என்றெல்லாம் புனிதப்பெயர் கொண்டு அழைக்கப்படும். கருடன் சாளக்கிராமச் சிலை வடிவில் வாகன அமைப்பில், நீள் சிறகும், நீள் முடியும் நீண்டு வளர்ந்த திருமேனியும் கொண்டு பெருந்தோளுடனும், மிகவும் மிடுக்குடனும், வீரத்துடனும், எழுந்தருளியுள்ளார்.
இவர் எழுந்தருளி உள்ள இடம் 10 1/2 அடி சதுரம் உள்ளது. இவர் வாகன மண்டபத்துக்குப் புறப்பாடு கண்டருளும் காலத்து, ஸ்ரீபாதம் தாங்குவோர் மொத்தம் நால்வராகவும், வாரைகள் சேர்த்தபின் மூலை ஒன்றுக்கு நால்வராகவும், (16 பேர்கள்) பின் எண்மர், பதின்மார் களாகவும் படிகளில் இறங்கியருளும் போது கணக்கற்றவர்களும் ஸ்ரீபாதம் தாங்கிச் செல்வது காண கண்கோடி வேண்டும். இத்தலத்தில் கருடன் எழுந்தருளியது பற்றி மற்றோர் வாய்வழிக் கதையும் கூறப்படுகிறது.
ஒரு சிற்பி ஆகம முறைப்படி கருட வடிவம் ஒன்றை செதுக்கி வந்தார். முடிவில் இரு பக்கங்களிலும் சிறகுகளைச் செதுக்கிப் பிராணப் பிரதிஷ்டை செய்தார். அப்போது திடீரென்று உயிர்ப்பெற்ற கருடன் வானத்தில் எழும்பி பறந்ததைக் கண்டு அச்சமுற்ற சிற்பி, உடனே தன் கையில் இருந்த கல் உளியை எடுத்துக் கருடன் மேல் வீசி எறிந்தார். அதனால் கருடன் மூக்கில் அடிப்பட்டு அதன் பின்பு கலியுக வரதராய் அவர் இறங்கி வந்து அமர்ந்தது நாச்சியார்கோயில் எனும் இத்தலமே ஆகும் என்பது புராண வரலாறு.
இவர் கச்யபருக்கும் விந்தைக்கும் இரண்டாவது குமாரராக அவதரித்தார். ‘தானாகவே முட்டையிலிருந்து வெளி வந்தார்” எனச் சிலரும், அவசரப்பட்டு தாய் முட்டையைக் குத்தியதால் மூக்கில் சிறிது காயத்துடன் வெளிவந்தார். அதனால் தான் இன்றும் பெருமாள் ஆலயங்களில் உள்ள வாகன ‘கருடன்கள் மூக்கின் அடியில் சிறுபுள்ளி அமைந்திருக்கும்” என்றும் சிலர் கூறுவார்கள்.
சூரியனுடைய தேரோட்டியான அருணன் இவரது தமையன் ஆவார். இவருக்கு இரு மனைவிகள் ஒருவர் ருத்ரா மற்றொருவர் ஹூகீர்த்தி. இவர் ஐந்து பிராணன்களின் அதிஷ்டான தேவதை. இவரது பலத்தையும், பக்தியையும் கண்டு திருமால் இவர் வேண்டுகோளின் படியே இவரை வாகனமாகவும் கொடியின் சின்னமாகவும் ஏற்றுக் கொண்டார். இவரைப் பற்றிய ‘கருட பஞ்சாஷரீ” மந்திரம் மிகவும் சிறந்தது. இவரது தரிசனமும் குரலும் என்றும் சிறப்புடையது. வியாழன் மாலையிலும், சனி காலையிலும் ஸ்ரீ கருட வழிபாடு மிகவும் சிறப்புள்ளன என்பார்கள்.
கருட வழிபாட்டு சிறப்பு
இவரை நினைத்தால் விஷ ஜந்துக்கள் குறிப்பாக பாம்புகளினால் துன்பம் ஏற்படாது. இவரது பெயர் கொண்ட ‘கருடோத்காரம்” என்ற பச்சை மரகதம் மிகவும் சிறப்புடையது. அமுதம் கொண்டு வந்து தாயின் அடிமைத்தனத்தை நீக்கியவர். பாம்புகளில் ஆதிசேஷனுடன் நட்பு கொண்டவர். வைகுந்தத்தில் உள்ள அணுக்கத் தொண் டர்களான நித்திய சூரிகளில் இரண்டாமவர். முற் காலத்தில் நகர அமைப்பில் மக்களுக்கு விஷ பீடை உண்டாகாமல் இருக்க கருடன் பறப்பது போல் நகர் அமைப்பதுண்டு. அதற்கு எடுத்துக்காட்டாக முற் காலத்திய தஞ்சை நகரம் அமைக்கப்பட்டு ‘கருடபுரி” என்று அழைக்கப்பட்டது.
இவரது திருமேனியில் உள்ள சர்ப்பங்களில், பட்டு முதலிய சித்திர வஸ்திரங்களை சமர்பிப் போர்களுக்கு எண்ணிய நலன்கள் கைகூடும். ஆடி சுக்கில பஞ்சமி திதியில் இவரை வணங்குகி றவர்களுக்கு (பிள்ளையே இல்லாதவர்களுக்கு) நல்ல பிள்ளை பிறக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவன் எளிதில் கிட்டுவான். இவரது திருநட்சத்திரம் சுவாதியானதால் அன்று கருடனுக்கு அர்ச்சனை செய்வது மிகவும் உகந்தது.
கல் கருடன் வருடத்துக்கு இருமுறை சீனிவாச பெருமாளுடன் எழுந் தருள்வது காணத்தக்க தொரு காட்சியாகும். ஒன்று மார்கழிப் பெருந் திருவிழாவில் நான்காம் திருநாளும், மற்றொன்று பங்குனிப் பெருந் திருவிழாவில் நான்காம் திருநாளுமாகும். இத்தலத்தில் உறைந் துள்ள அருள்மிகு வஞ்சுள வல்லி தாயார் சமேத நறையூர் நம்பியான சீனிவாச பெருமானை தரிசித்தால் கஷ்டங்கள், கவலைகள் விலகும். கல் கருட பகவானை சரணடைவோர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது திண்ணமாகும்.
சக்தி வாய்ந்த தீர்த்தத்தலம்
பிரமன் தனக்கிருந்த தோஷம் நீங்கச் சங்கர்ஷண தீர்த்தத்தில் நீராடி பெருமாளை வழிபட்டுப்பேறு பெற்ற தலம். இந்திரன் அநிருந்த தீர்த்தத்தில் நீராடிப் பெருமாளை வழிபட்டு சாப நீக்கம் பெற்றான். சாம்ப தீர்த்தத்தில் சப்த ரிஷிகள் நீராடித்தவம் செய்தனர். பானுதத்தன் என்னும் அரக்கன் பிரத்தியுமனன் என்னும் தீர்த்தத்தில் நீராடி பெருமாளை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றான். கோச்செங்கட் சோழன் மணிமுத்தாற்றின் திருக்குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டு வெற்றி வாள் பெற்றான். இந்தகுளம் 684ஜ்225நீள, அகலம் கொண்டது.
எனவே இந்த நான்கு வகை தீர்த்தங்களிலும் நீராடி பெருமாளை தரிசித்தால் குறைகள் எல்லாம் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மகான்களின் ஆசி கிடைக்கும். பஞ்சமாபாதகங்கள், பழிகள் விலகி ஓடி விடும். அந்த அளவுக்கு இத்தலத்து தீர்த்தங்களுக்கு சக்தி உள்ளது.

தென்னகத்தில் திருகண்டீஸ்வரர் அருளும் இடம், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள நாணல்காடு. இதுவே ‘தென்காஞ்சி’ என அழைக்கப்படுகிறது.
தேவர்களும் அசுரர்களும் மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாகக் கொண்டு திருப்பாற்கடலைக் கடைந்தனர். திடீரென்று வாசுகி நஞ்சை கக்கியது. அனல் தகிக்கும் அந்த நஞ்சு பரவினால் உலக உயிர்கள் துன்பத்தில் துவளும் என்பதால், சிவபெருமான் அந்த விஷத்தை பருகினார்.
இந்த பிரபஞ்சமே ஈசனின் அசைவில்தான் உள்ளது. அவர் உடலில் விஷம் சென்றால், உலக உயிர்கள் அழிந்து போகும் என்பதை உணர்ந்த அம்பாள், ஈசனின் கழுத்தை அழுத்திப் பிடித்தார். இதனால் விஷம் உடலுக்குள் இறங்காமல், ஈசனின் கழுத்திலேயே நின்றது. இதனால் அவர் ‘திருகண்டீஸ்வரர்’ என்று பெயர் பெற்றார்.
காஞ்சிபுரத்தில் திருக்கண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது. அதுபோலவே தென்னகத்தில் திருகண்டீஸ்வரர் அருளும் இடம், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள நாணல்காடு. இதுவே ‘தென்காஞ்சி’ என அழைக்கப்படுகிறது.
ஒரு காலத்தில் மிக பிரபலமாக இருந்தது இந்த ஆலயம். தற்போது மஞ்சனத்தி மரங்களும், முட்புதர்களும் மண்டிக் கிடக்க, கோபுரம் எதுவும் இல்லாமல் காட்சி அளிக்கிறது. திருப்பணி கண்டு 100 வருடங்களை கடந்து விட்டது. இடிந்து கிடக்கும் சுவரும், சாய்ந்து விழத்துடிக்கும் சுற்றுபுறச்சுவரும் கொண்டதாகவே விளங்குகிறது. ஆனாலும் இத்தல இறைவனின் கீர்த்தி மிகப்பெரியது. எனவேதான் வெள்ளிக்கிழமை இக்கோவிலுக்கு வந்து, மூன்று மணி நேரம் அமர்ந்து, குரு ஓரை காலத்தில் சிவனுக்கும் சனீஸ்வரனுக்கு அபிஷேகம் செய்தால் கேட்ட வரம் கிடைக்கிறது.
முற்காலத்தில் இவ்வூரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் நாணல்களுடன் தர்ப்பையும் அடர்த்தியாகக் காணப்பட்டது. எனவே இத்தலம் ‘தர்ப்பாரண்யம்’ எனப் போற்றப்பட்டது. இவ்வூரில் சிவகாமி அன்னையும், சிவபெருமானும் வாழ்ந்து வந்ததாகவும், தாமிரபரணி கரையில் மஞ்சள் தேய்த்து அன்னை சிவகாமி அம்மை ஸ்நானம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
ஒரு கட்டத்தில் அசுரர்களின் சதியால் தாமிரபரணி நதி நீர் விஷமாகி விட்டது. அதைக்கண்ட சிவபெருமான், விஷமான நதியை தானே உண்டு, தேவர்கள் மற்றும் மக்களை காப்பாற்றினாராம். அப்போது தேவர்கள், “எந்த வேளையிலும் எவர் தடுத்தாலும், நதி நீர் விஷமாகாமல் தடுக்கப்படவேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். அதன்படியே வரம் கொடுத்தார் சிவபெருமான்.
கருணாகர பாண்டியன் என்ற அரசன், முறப்பநாடு சிவன் கோவிலில் திருப்பணி செய்து கொண்டிருந்தார். அவர் காலத்தில் நாணல் காட்டில் சரவண பொய்கையில் முருகப்பெருமான் அமர்ந்திருந்தார். அவர் மீது தீவிர பற்று கொண்டவர், கருணாகர பாண்டியனின் ஒரே மகள். சரவண பொய்கை கரையில் முருகப்பெருமானை வேண்டி வேல் வைத்து வணங்கி வந்தாள், மன்னனின் மகள். அரண்மனைக்கே செல்லாமல் இவ்விடமே கதி என காத்துக்கிடந்தாள்.
ஆண் வாரிசு இல்லாத நிலையில், கிடைத்த ஒரே மகளும் அரண்மனைக்கே வராமல் இருப்பது மன்னனுக்கு கவலையை தந்தது. இதனால் மகள் மீண்டும் அரண்மனை திரும்ப ஈசனை வேண்டி நின்றார், மன்னன்.
இந்த நிலையில் சிலர், மன்னனின் மகளை ஒழித்து கட்ட நினைத்தனர். அதற்காக பிரசாதத்தில் விஷம் கலந்து இளவரசிக்கு கொடுத்தனர். அப்போது இளவரசி வளர்த்த கிளி, விஷத்தினை உண்டு உயிரிழந்தது. மனமுடைந்த இளவரசி சிவபெருமானை நோக்கி தவமிருந்தாள். அவள் தவத்தினை மெச்சிய சிவன் கிளிக்கு உயிர் கொடுத்து, இளவரசியின் மனதை மாற்றி அரண்மனைக்கு அனுப்பி வைத்தார். எனவே இந்த ஆலயத்திற்கு வந்து வணங்கினால், மரணத்தை வெல்லலாம் என்று கருதப்படுகிறது.
சிவபெருமானால் ஈஸ்வரப் பட்டம் பெற்ற சனிபகவான், தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாா். தாமிரபரணி கரையில் தர்ப்பை வனமும் (நாணல்காடு) உள்ளது. எனவே இத்தலம் ‘தென் திருநள்ளாறு’ என்றும் போற்றப்படுகிறது.
இக்கோவில் 14 அல்லது 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் ‘கோனேரின்மை கொண்டான்’ என்ற வாசகம் இடம் பெற்றிருக்கிறது. இந்தப் பட்டப் பெயரினைப் பெற்றவன், வீரபாண்டியன். எனவே இந்த மன்னனின் காலத்தைச் சேர்ந்த கோவிலாக இருக்கக்கூடும் என்கிறார்கள்.
இவ்வூரில் கவிராயர் ஒருவர் வந்து உணவு கேட்டதாகவும், அவருக்கு யாரும் உணவளிக்காததால், “இங்குள்ள மக்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்காமல் போவது” என்று சாபமிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சாபத்தில் இருந்து விடுபட நினைத்த மக்கள், இந்த ஆலயத்தின் வளாகத்தில் சந்தான கோபால கிருஷ்ணன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, குழந்தைப் பேறுபெற்றுள்ளனர்.
இந்த ஆலயத்தில் பவுர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி மற்றும் திருவாதிரை திருவிழாக்கள் மிகவும் விசேஷமாக நடைபெறுகின்றன. பிரதோஷ நாளில் சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரமும், வன்னி இலை மாலை, வில்வ மாலை சாத்தி, வெண் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால், வேலை இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கிறது. செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சிவகாமி அம்பிகைக்கு அபிஷேகம் செய்து, பச்சை சாத்தி, பிச்சிப்பூ அல்லது மல்லிகைப்பூ மாலை சாத்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களது நம்பிக்கை.
இவ்வூர் தாமிரபரணி கரையில் உள்ள தீர்த்தம் ‘சப்தரிஷி தீர்த்தம்’ ஆகும். இங்கு சப்த ரிஷிகளும் வந்து சிவபெருமானை வணங்கி நிற்கிறார்கள். எனவே சனிக்கிழமைகளில், தாமிரபரணியில் நீராடி, சனிபகவானுக்கு கறுப்பு நிற வஸ்திரம் சாத்தி, எள் தீபம் ஏற்றி, அச்சுவெல்லம் நைவேத்தியம் செய்தால், சனி தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
இந்தப் பகுதியில் தவழ்ந்தோடும் தாமிரபரணி, வடக்கிலிருந்து தெற்காகப் பாய்ந்து செல்வதால், ‘தட்சிண கங்கை’ என்று சிறப்பித்து கூறுகிறார்கள். திருநள்ளாறு மற்றும் காசிக்குச் செல்ல முடியாதவர்கள், இந்தத் தலத்துக்கு வந்து திருக்கண்டீஸ்வரரை வழிபட்டால், காசிக்கும், திருநள்ளாறுக்கும், காஞ்சிக்கும், திருச்செந்தூருக்கும் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும். இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.

திருநெல்வேலி - தூத்துக்குடி நாலுவழிச் சாலையில் செல்லும் புறநகர் பேருந்தில் ஏறி, வல்லநாட்டில் இறங்க வேண்டும். அங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் நாணல்காடு என்ற இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது.
முத்தாலங்குறிச்சி காமராசு
பரமக்குடியில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பெருங்கருணை என்ற திருத்தலம். இங்கு மிகவும் பழமை வாய்ந்த வரதராஜப் பெருமாள் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தின் சிறப்புகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

ஆவணி மாதம் பூச நட்சத்திரத்தில் ஏகாதசி திதியில் திருக்கோஷ்டியூரில் கைங்கரியம் செய்து வந்த சவும்ய நாராயணனுக்கு மகனாக பிறந்தவர் செல்வ நம்பி. இவரது தாய் பெருங்கருணையைச் சேர்ந்தவர். இவர் மாமா வரதராஜ வேத விற்பன்னரிடம், வேதங்களை முறையாகக் கற்றார்.
இந்த நிலையில் விக்ரம பாண்டியன் என்ற மன்னன், தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால், தனது குல தெய்வமான அழகர் பெருமாளிடம் முறையிட்டான். பெருமாள், அந்த மன்னரை சேது சமுத்திரம் பயணித்து, திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாத பெருமாளை தரிசிக்கும்படி அருளினார். அங்கு செல்லும் வழியில் இரவு நேரத்தில் கொற்றவேல்குடி என்ற கிராமத்தில் மன்னன் தங்கினான்.
இதையறிந்த செல்வ நம்பி, அங்கு சென்று மன்னனை சந்தித்து, அவனுக்கு பாகவத புராணத்தில் கண்ணனின் அவதார கட்டத்தை விளக்கி கூறினார். அதன் முடிவில் “இந்த புராணத்தை யார் கேட்கிறார்களோ, அவர்கள் துன்பங்களில் இருந்து விடுபடுவர்” என்று கூறினார்.
அந்த நேரத்தில் மன்னனுக்கு ஒரு தகவல் கிடைத்தது. பாண்டிய நாட்டில் நிலவி வந்த சிறுசிறு பிரச்சினைகள் அனைத்தும் ஒரே இரவில் தீர்ந்து விட்டதாக அந்த தகவலில் சொல்லப்பட்டது. இதைக் கேட்டு மன்னன் மகிழ்ந்து போனான். பாகவத புராணத்தில் பெருமையை உணர்ந்தான். அதோடு மட்டுமின்றி சில நாட்களிலேயே மன்னனின் மனைவி கருவுற்றாள். அடுத்த பத்து மாதங்களில் அவளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் என்று பெயரிட்டனர்.
அவனே பிற்காலத்தில் வல்லப தேவ பாண்டியன் என அழைக்கப்பட்டான். விக்ரம பாண்டியன் தனது நாட்டு பிரச்சினையும், வீட்டுப் பிரச்சினையும் தீர்ந்தது கண்டு, செல்வ நம்பியை தனது குருவாக ஏற்றான். அதோடு அவரை, மதுரையில் தனது ராஜ புரோகிதராகவும் அறிவித்தான். பின்னாளில் பெருமாளின் கருணையை எண்ணி, அவருக்கு பெருங்கருணையில் வரதராஜப் பெருமாள் என்ற ஆலயத்தை மன்னன் நிர்மாணித்தான். கோவிலுக்காகவும், அதன் உற்சவங்களுக்காகவும் 96 கிராமங்களை தர்மமாக எழுதி வைத்தான்.
பெருங்கருணை வரதராஜப் பெருமாள் கோவில் ராமநாதபுரம் சேதுபதி மன்னனால் புதுப்பிக்கப்பட்டது. தற்போது இவ்வாலயம் ராமநாதபுரம் சமஸ் தானத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆலயம் ராஜகோபுரம் இன்றி, சிறிய விமான அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. அதன் நடுவில் சுதைச் சிற்பமாக, ஸ்ரீதேவி- பூதேவி சமேத பெருமாள் காட்சியளிக்கிறார்.
முகப்பைக் கடந்து உள்ளே செல்கையில், பலிபீடத்தைக் காணலாம். இதையடுத்து கருட பகவான் சன்னிதி உள்ளது. மகாமண்டபத்தில் துவாரபாலகர்கள் காட்சி தருகின்றனர். அந்த மண்டபத்தின் இடது புறத்தில் சேனை முதலியார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், செல்வ நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, எம்பெருமானார் எழுந்தருளியுள்ளனர். சிறிய விமான அமைப்பில் கருவறை மண்டபம் காணப்படுகிறது.
கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாய் பெருமாள் திருக்காட்சி தருகிறார். பெருமாள் வெளிர் நீல நிறத்துடன் கிழக்கு முகமாக நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். கழுத்தில் மற்றும் இடையில் ஆபரணங்கள், நான்கு கரங்களுடன் பெருமாள் சேவை சாதிக்கிறார். வலது கரங்கள் இரண்டில் சக்கரமும், அபய முத்திரையும், இடது கரங்களில் சங்கும், வாவென்று அழைக்கும் ஆஹ்வான முத்திரையும் உள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் ரோஜாப்பூ நிறத்தில் இரு கரங்களுடன் ஒரு கையில் மலரேந்தி காட்சி தருகின்றனர்.
உற்சவர் வரதராஜர் (பேரருளாளன்) ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சகிதமாக அருள்கிறார். தவிர யாக பேரர் (அபிஷ்ட வரதர்), தீர்த்த பேரர் (சத்ய வரதன்), பிரணதார்த்தி வரதன், சந்தான கோபாலன், வெண்ணைக் காடும் பிள்ளை (நர்த்தன கிருஷ்ணன்), சக்கரத்தாழ்வார் ஆகியோரது உற்சவர் திருமேனி களையும் வணங்கலாம். செல்வ நம்பி தனியாக அருள்பாலிக்கிறார்.
கருடன் சன்னிதிக்கு எதிரில் வலது பக்கம் தனிச் சன்னிதியில் ஹேமாம்புஜவல்லித் தாயார், புன்னகை தவழ நான்கு கரங்களுடன் அருள் பாலிக்கிறார். இரண்டு கரங்களில் மலர் ஏந்தியும், மற்ற இரு கரங்கள் அபய, வரத ஹஸ்தங்களுடனும் காணப்படுகிறது. பெருந்தேவி என்ற திருநாமத்துடன் தாயார், உற்சவராகவும் இருக்கிறாா். கருடன் சன்னிதிக்கு எதிரில் இடது பக்கம் ஆண்டாள் சன்னிதி அமைந்துள்ளது. பிரகாரத்திற்கு வெளியே ராமர் சன்னிதி உள்ளது. சீதை, லட்சுமணனுடன் ராமன் காட்சி தருகிறார்.
மனக்குறைகள் நீங்க, நினைத்த காரியத்தில் ஜெயம் ஏற்பட பெருமாள் மற்றும் தாயாரை பிரார்த்தித்துக் கொள்கின்றனர். குழந்தைப் பேறு பாக்கியம் கிடைக்க, சந்தான கிருஷ்ணரை வேண்டி பலனடைகின்றனர். எதிரிகள் தொல்லை, பயம் நீங்க சக்கரத்தாழ்வாரை வணங்கி நிம்மதியடைகின்றனர்.
இவ்வாலயத்தில் ஆவணி மாதம் 6 நாட்கள் செல்வ நம்பி சாத்துமறையும், கிருஷ்ண ஜெயந்தியும், ஐப்பசி மாதம் நான்கு நாட்கள் பவித்ர உற்சவமும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
அமைவிடம்
மானாமதுரையில் இருந்து பரமக்குடி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது பார்த்திபனூர் என்ற ஊர் வரும். பார்த்திபனூர் - கமுதி - அருப்புக்கோட்டை மார்க்கமாக சென்றால் அபிராமம் என்ற ஊர் இருக்கிறது. இங்கிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் பெருங்கருணை கிராமத்தை அடையலாம். பரமக்குடியில் இருந்து பஸ் வசதி உள்ளது.
-மு.வெ.சம்பத்

செம்பனார் கோவில் கடை வீதியில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஜமதக்னி ரேணுகாதேவி பரசுராமர் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
செம்பனார் கோவில் கடை வீதியில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஜமதக்னி ரேணுகாதேவி பரசுராமர் ஆலயம். செம்பனார் கோவில், கீழையூர், முடிகண்டநல்லூர், மேலபாதி என நான்கு கிராமங்களின் எல்லையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. எனவே இந்த ஆலயத்தை ‘எல்லையம்மன் கோவில்’ என்றும் அழைக்கின்றனர்.
தல வரலாறு
விதர்ப்ப தேசத்து மன்னனான இறைவத வேந்தன், பிரம்ம தேவனின் அருள்பெற்றவன். இவனது மகள் ரேணுகா, காண்பவர் மயங்கும் அழகுப் பதுமையாக இருந்தாள். பருவம் வந்ததும் தனக்கு ஏற்ற கணவரை தேர்வு செய்ய, தந்தையின் அனுமதியுடன் குண்டலிபுரம் வனத்திற்கு வந்தாள்.
அங்கே இறைவனின் அருளைப் பெற கடுந்தவம் செய்து கொண்டிருந்த ஜமதக்னி முனிவரைக் கண்டு, அவர் அழகில் மயங்கினாள். அவரையே கணவனாக அடைய வேண்டும் என முடிவு செய்தாள். ஜமதக்னி முனிவரிடம், தன்னை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டவே, அவர்கள் இருவரும் மணம் புரிந்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு நான்கு புதல்வர்கள் பிறந்தனர்.
இவர்களின் மூத்த மகனான பரசுராமர், தவம் புரிவதற்காக மகேந்திர மலைக்குச் சென்றுவிட்டார். மற்ற மகன்களுடன் ஜமதக்னி முனிவரும், ரேணுகாவும் வசித்து வந்தனர். கற்புக்கரசியான ரேணுகா, ஆற்றங்கரைக்குச் சென்று அங்குள்ள மணலில் ஒரு குடம் செய்து, அதில் நீர் பிடித்து வருவாள். அதைக் கொண்டு ஜமதக்னி முனிவர் சிவபூஜை செய்வார். ஒரு முறை நீர் எடுக்கச் சென்ற ரேணுகா, நீரில் ஒரு கந்தா்வனைக் கண்டு மனம் மயங்கினாள். இதனால் அவள் செய்த மண் குடம் உடைந்தது. இதை தன் தவ வலிமையால் அறிந்த ஜமதக்னி முனிவர், தன் மூன்று மகன்களிடமும் தாயின் தலையை வெட்டி விடும்படி உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர்.
உடனே பரசுராமரை, தன் தவ சக்தியால் அழைத்து, தாயின் தலையை துண்டிக்கச் சொன்னார். மறுபேச்சு பேசாது, தாயின் தலையை துண்டித்தார் பரசுராமர். இதனால் மகிழ்ந்த முனிவர், “உனக்கு வேண்டிய வரம் கேள்” என்றார். உடனே பரசுராமன், “தாயை உயிரோடு திருப்பித் தாருங்கள்” என்றார்.
அதன்படியே ரேணுகாவை உயிரோடு கொண்டு வந்தார் ஜமதக்னி முனிவர். மேலும் “உன்னை நினைப்பவர்களை நீ காத்து அருள்புரிவாய்” என்ற வரத்தையும், ரேணுகாவுக்கு வழங்கினார்.
இந்த ரேணுகா தேவியின் ஆலயம்தான் முடிகண்டநல்லூரில் உள்ளது. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் ஐந்து நிலை ராஜகோபுரம் சுமார் 60 அடி உயரத்துடன் கம்பீரமாக காட்சி தருகிறது. உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம். எதிரே நந்தியும், வலதுபுறம் பிள்ளையாரும் இருக்க, அடுத்து மகாமண்டபம் உள்ளது. மகாமண்டபத்தின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகனும் அருள்பாலிக்கிறார்கள். தனி சன்னிதியில் ஜமதக்னி முனிவர், ரேணுகாதேவி, பரசுராமர் வீற்றிருக்கின்றனர்.
இதையடுத்து அர்த்த மண்டபமும், தொடர்ந்து கருவறையும் உள்ளது. கருவறையில் அன்னை ரேணுகாதேவி கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இங்கு அன்னையின் தலை பகுதி மட்டுமே கருவறை தெய்வமாய் அருள்பாலிக்க அன்னையின் பின்பறம் பல நூற்றாண்டுகளை கடந்த மண்புற்று ஒன்று அன்னையின் சிரசைவிட உயரமாக வளர்ந்து நிற்கிறது.
அன்னைக்கு நடைபெறும் சொர்ணாபிஷேகம், இங்கு வெகு பிரசித்தம். புதியதாக நகைகள் வாங்கும் பெண்கள் அதை அன்னைக்கு அணிவித்து, அன்னைக்கு சொர்ணாபிஷேகம் செய்து தங்கள் நகைகளை திரும்ப வாங்கிச் செல்கின்றனர். இதனால் தங்கள் வீட்டில் தங்கம் மேலும் தழைக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.
ஆலயத்தின் தலவிருட்சம் வேம்பு. தீர்த்தம் வடக்கே உள்ள குளம். தவிர ஆலயத்தின் பின்புறம் காவிரி நதி தெற்கு வடக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆலய திருச்சுற்றில் தெற்கில் எல்லையம்மன் என அழைக்கப்படும் ரேணுகாதேவியின் சன்னிதியும், வடக்கில் ஜமதக்னி முனிவரின் சன்னிதியும் உள்ளன. தேவக்கோட்டத்தில் தெற்கில் ஐந்து தலை நாகத்தின் சிற்பமும், மேற்கில் விஷ்ணு துர்க்கையும் அருள்பாலிக்க, வடக்கில் நாகம் சிவனை பூஜை செய்யும் அற்புத சிற்பம் காணப்படுகிறது.
தன்னை நாடும் பக்தர்களின் குறைகளை குறைவின்றி தீர்த்துவைப்பதில், இத்தல அன்னைக்கு நிகரில்லை என்று பக்தர்கள் நம்புவது உண்மையே.
இந்த ஆலயம் தினமும் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை- திருக்கடையூர் சாலையில் உள்ளது செம்பனார் கோவில். இதன் அருகே உள்ளது முடிகண்டநல்லூர் ஜமதக்னி ரேணுகாதேவி ஆலயம்.
ஜெயவண்ணன்

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் இருந்து தென்கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் நொய்யல் நதியின் வடக்கே அமைந்துள்ளது திருமுருகன்பூண்டி.
சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமாக விளங்குவது, திருமுருகன்பூண்டி. இது திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் இருந்து தென்கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் நொய்யல் நதியின் வடக்கே அமைந்துள்ளது.
சுந்தரர் தனது நண்பரான சேரமான் பெருமானை சந்தித்து, பொன்னும், பொருளும் பெற்று அவிநாசியப்பரை தரிசிக்க சென்று கொண்டிருந்தார். அப்போது இருள் சூழத் தொடங்கி விட்டதால், வழியில் பாறை மீது அமைந்த விநாயகர் கோவிலில் தங்கினார்.
அப்போது தன் பக்த சினேகிதனான சுந்தரரோடு, திருவிளையாடல் புரிய சித்தமானார், சிவபெருமான். அதன்படி தன் பூதகணங்களை வேடர் வடிவில் அனுப்பி, சுந்தரரிடம் இருந்த பொருட்களைக் களவாடச் செய்தார். திகைத்துப் போன சுந்தரர், தன்னுடைய பொருட்களை களவாடியது யார் என்று விநாயகரிடம் வேண்டினார்.
அவரோ, ‘இது தனது தந்தையின் திருவிளையாடல்’ என்று உணர்த்தும் வகையில், கிழக்கு திசை நோக்கி குறிப்பு காட்டினார். அதன் அடிப்படையில் சுந்தரர், திருமுருகன்பூண்டி திருத்தலம் சென்று, அத்தல ஈசனை செல்லமாக கோபித்துக் கொண்டு, 10 பதிகங்களை பாடினார். இதில் மகிழ்ந்து போன இறைவன், அவருக்கு மீண்டும் பொக்கிஷத்தை தந்தருளினார்.
இத்தகு சிறப்பு வாய்ந்த திருமுருகன் பூண்டியில் மேற்கு திசை நோக்கி ‘முருகநாத சுவாமி’யாக சிவபிரானும், ‘பூண்முலை அம்மை’ என்ற பெயரில் அம்பாளும் அருள்பாலிக்கிறார்கள். தென்திசை நோக்கி, வள்ளி - தெய்வானை சமேதராக ஆறுமுகப்பெருமான் வேலேந்தி நின்ற கோலத்தில் சிவலிங்கத்தைப் பூஜிப்பது இத்தலச் சிறப்பாகும்.
சூரபதுமர்களை அழித்த காரணத்தால், முருகப்பெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷம் நீங்குவதற்காக இங்கே சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். எனவே இத்தல ஆறுமுகப்பெருமானை, காரிய சித்தி பெற நினைப்பவர்கள் வழிபாடு செய்கிறார்கள். இங்குள்ள ஞான தீர்த்தத்தில் நீராடினால், மனத் தெளிவு கிடைக்கும் என்பது ஐதீகம்.
நெடுஞ்சாலையை ஒட்டி வடபுறத்தில் முருகநாத சுவாமிக் கோவிலும், தென் புறத்தில் காண்பவர் வியக்கும் வகையில் இன்னொரு சிவாலயமும் அமைந்து, இரட்டைக் கோவில்களாக பரிணமிக்கின்றன. கிழக்கு நோக்கிய இந்தக் கோவிலில் ராஜகோபுரம் இல்லை. ஆனால் மூலவர் வீற்றிருக்கும் கருவறை விமானமே சிவலிங்க வடிவிலும், எதிரே மிகப் பெரிய வெள்ளை நிற நந்தி, மண்டபங்களின் மீது அமர்ந்த நிலையில் உருவாக்கப்பட்டு, வெளியில் இருந்து பார்க்கும் போதே மிகப் பெரிய சிவாலய தோற்றத்தைக் காட்டுவது அற்புதம்.
மாதவனேஸ்வரர் மூலவராக வீற்றிருக்கும் இவ்வாலய மரத்தடியில் நாகர்கள் சூழ, விநாயகர் சர்ப்ப விநாயகராக காட்சி தருகிறார். கருங்கல் ஸ்தூபி ஒன்று கொடிமரமாகக் காட்சி தருகிறது. வரவேற்பு வளைவைத் தாண்டி உள்ளே சென்றதும் மகா மண்டபத்தில் பெரிய கல் நந்தி வீற்றிருக்க, இருபுறமும் கணேசரும், பாலமுருகரும் தகப்பனுக்குத் துணையாக நிற்க, கருவறையில் மாதவனேஸ்வரர் என்ற திருநாமத்துடன் லிங்கத் திருமேனியாக இறைவன் காட்சி தருகிறார்.
தேவ கோட்டத்தில் தட்சணாமூர்த்தி தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். வடபுறம் துர்க்கையும், சண்டேசரும் எழுந்தருளியுள்ளனர். வெளிப்பிரகாரத்தில் கன்னி மூலை கணபதியும், வள்ளி - தெய்வானை சமேத முருகனும் தனித்தனி சன்னிதிகளில் உள்ளனர்.
ஆலயத்தின் வடமேற்கு மூலையில் ஐந்து தலை நாகமும் மனித உடலுமாக கேது பகவான் தனிக் கோவில் கொண்டு விளங்குகிறார். இங்கே இவர்தான் சிறப்பு மூர்த்தி. ஒரு கோவிலில் ஒன்பது கிரகங்களும் இருக்கும் இடத்தினை ஆராய்ந்தால், கேது அங்கே வடமேற்கில்தான் வீற்றிருப்பார். அதேபோல இந்த ஆலயத்தின் வடமேற்கில் கேது சன்னிதி அமைந்திருப்பது மிகச் சிறப்பானதாகும். கேதுதிசை, கேது புத்தி நடப்பவர்கள், ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், கொள்ளு தானியம் முடிச்சு போட்டு, பல வண்ண நிற திரி போட்டு, நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றுகிறார்கள். கொள்ளு சாதம் நைவேத்தியமும் படைக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு கேது பகவானுக்கு, சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடை பெறுகிறது.
இவருக்கு எதிரே மாவிலங்க மரம் தல விருட்சமாக தழைத்து நிற்கிறது. இங்கே நாகப் பிரதிஷ்டை செய்து கொள்கிறார்கள். சுவாமிக்கு இடப்புறம் தனிக் கோவிலில் மங்கள நாயகியாக அம்பிகை அருளாட்சி செய்கிறாள். ஈசானிய மூலையில் நவக்கிரகங்களும், தனி சன்னிதியில் தெற்கு பார்த்தபடி கால பைரவரும் காட்சி தருகிறார்கள்.
திருக்காளகஸ்தி தவிர, சோழ நாட்டில் கேதுவுக்குத் தனி சன்னிதியுள்ள கீழப் பெரும்பள்ளம், ராகு -கேது ஏக சரீரமாக விளங்கும் திருப்பாம்புரம், மன்னை பாமணி போல கொங்கு நாட்டில் திருமுருகன் பூண்டி கேது பகவானுக்கு தனியான பரிகாரத்தலமாக சிறந்து விளங்குகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் 1 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
டாக்டர்.ச. தமிழரசன்

கேரளா மாநிலம், திருச்சூர் அருகே உள்ள கூர்க்கன்சேரியில் இருக்கிறது மகேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கேரளா மாநிலம், திருச்சூர் அருகே உள்ள கூர்க்கன்சேரியில் இருக்கிறது மகேஸ்வரர் ஆலயம். இந்தக் கோவிலில் மகேஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட சிவபெருமான்தான் முதன்மை தெய்வம் என்றாலும், இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சுப்பிரமணியருக்காக 7 நாட்கள் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவே மிகவும் சிறப்பு வாய்ந்த திருவிழாவாக இருக்கிறது.
தல வரலாறு :
கேரள மாநிலத்தில் பல சமூகத்தினருக்குக் கடவுள் வழிபாடு மறுக்கப்பட்டு வந்த நிலையில், இந்து ஆன்மிகவாதியும், சமூகச் சீர்திருத்தவாதியுமான ஸ்ரீ நாராயணகுரு அனைவருடைய வழிபாட்டுக்கும் ஏற்றக் கோவில்களைக் கட்ட முடிவு செய்தார். அதன்படி, 1888-ம் ஆண்டில் திரு வனந்தபுரத்திற்கு அருகிலுள்ள அருவிப்புரம் என்ற இடத்தில், அங்கிருந்த நெய்யாற்றில் இருந்து ஒரு கல்லை எடுத்து வந்து, அந்தக் கல்லைச் சிவலிங்கமாக நிறுவிக் கோவில் ஒன்றைக் கட்டினார்.
அதனைத் தொடர்ந்து, அவர் கேரளாவில், ‘கடவுளை வழிபட அனைவருக்கும் உரிமையுண்டு’ என்கிற அடிப்படையில் பல இடங்களில் பொது வழிபாட்டுக்குரிய பல கோவில்களை அமைத்தார். அக்கோவில்களுள், திருச்சூர் அருகிலுள்ள கூர்க்கன்சேரி என்ற இடத்தில் கட்டப்பட்ட மகேஸ்வரர் கோவிலும் ஒன்றாக இருக்கிறது.
மலையாள நாட்காட்டியின்படி, மலையாள ஆண்டு 1092, சிங்ஙம் மாதம் (1916-ம் ஆண்டு, ஆவணி மாதம்) உத்திராடம் நட்சத்திர நாளில் ஸ்ரீநாராயணகுருவால் கோவிலின் முதன்மை தெய்வமாக மகேஸ்வரர் திருமேனி நிறுவப்பட்டு, ஆலயம் உருவானதாக கோவில் வரலாறு சொல்லப்படுகிறது.
கோவில் அமைப்பு :
இக்கோவிலின் முதன்மை தெய்வமாக ஸ்ரீ நாராயணகுருவால் நிறுவப்பட்ட மகேஸ்வரர் இருக்கிறார். அதன் பிறகு, இக்கோவிலில் பிரம்மஸ்ரீ போதானந்த சுவாமிகள் என்பவரால் கணபதி, பாலசுப்பிரமணியர் சிலைகள் நிறுவப்பட்டன. இக் கோவில் வளாகத்தில் ஐயப்பன், வேணுகோபாலன், பார்வதி, முத்தப்பன், பகவதி, நவக்கிரகங்கள் சிலைகளும் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு சிவபெருமானுக்குரிய சிறப்பு நாட்கள் அனைத்திலும் மகேஸ்வரருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இதே போன்று இங்குள்ள பாலசுப்பிரமணியர் கோவிலில் முருகனுக்குரிய சிறப்பு வழிபாடுகள் அனைத்தும் செய்யப்படுகின்றன.
சிவபெருமானுக்குரிய இக்கோவிலில் ஆண்டுதோறும் மலையாள நாட்காட்டியின்படி மகரம் (தை) மாதத்தில் ஏழு நாட்கள் கொண்டாடும் முக்கியமான விழாவாக சுப்பிரமணியருக்கான தைப்பூச விழா இருக்கிறது. இவ்விழாவில், காவடியாட்டம் முக்கியமானதாக இடம் பெறுகிறது. இக்காவடி ஆட்டத்தில் ஒரு குழுவிற்கு 30 அம்பலக் காவடிகள் மற்றும் 60 பூக்காவடிகள் என்று பத்துக் குழுக்கள் வரை பங்கேற்கின்றன.
அம்பலக்காவடி என்பது அலங்கரிக்கப்பட்ட வெவ்வேறு கோவில் மாதிரி வடிவங்களைக் கொண்டதாக இருக்கிறது. ஆறு முதல் 10 அடி வரையிலான உயரம் கொண்ட இக்காவடியினை ஆண் பக்தர்கள் தோளில் சுமந்து செல்கின்றனர். பூக்காவடி என்பது பூக்களால் அலங்கரிக்கப்பட்டக் காவடியாகும். இக்காவடியாட்டம் காலையில் தொடங்கி, யானை அணிவகுப்புடன் மதியம் வரை நடைபெறுகிறது. இத்திருவிழாவின் இறுதி நாளில் கண்ணைக் கவரும் வாண வேடிக்கை நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன.
இக்கோவிலில், சிவபெருமானுக்குரிய வழிபாடுகளைச் செய்து அதற்குரிய நற்பயனைப் பெற்றிட முடியும் என்பதும், பாலசுப்பிரமணியர் சன்னிதியில் வழிபட்டு முருகப்பெருமானிடம் இருந்து பெறக்கூடிய சிறந்த பலன்களைப் பெறமுடியும் என்பது இங்கு வந்து வழிபடுபவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம் :
கேரள மாநிலம், திருச்சூர் நகரில் இருந்து 3.5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கூர்க்கன்சேரி எனுமிடத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல, திருச்சூர் பேருந்து நிலையத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் அதிக அளவில் இருக்கின்றன.
- தேனி மு.சுப்பிரமணி.

திருநெல்வேலி மாவட்டத்தில் அருள்வாக்கிற்கு பெயர் பெற்ற கடையநல்லூர் தாலுகா, புளியங்குடி நகரில் அரசு மத்துவமனை அருகில் கோபுரநகரில் அமைந்துள்ளது முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயம்.
ஆலயங்கள் இறைவனின் அளவிலா அருட்சிறத்தை எடுத்துணர்த்தும் புனிதத் தலங்கள் மனிதர்களின் ஆத்ம சக்தியை உணரவைத்து அவனுள்ளே அவனையே உணர வைக்கும் சக்திப் பீடங்கள். உலகமே சக்தி மயமானது என்பதை மனிதர்களுக்கு உணர்த்தும் ஆன்மீக சொருபங்கள். இத்தகைய அருட்திறம் வாய்ந்த ஆலயங்களில் ஒன்று தான் திருநெல்வேலி மாவட்டத்தில் அருள்வாக்கிற்கு பெயர் பெற்ற கடையநல்லூர் தாலுகா, புளியங்குடி நகரில் அரசு மத்துவமனை அருகில் கோபுரநகரில் அமைந்துள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயம்.
கோவில் உருவாக காரணம்
சுமார் பத்து வருடங்களுக்கு முன் சாதாரண ஒரு மொட்டை மாடியில் உள்ள ஒரு சிறு அறையையே கோவிலாக கொண்டு இத்தேவியர் தங்களை நாடி வரும் பக்தர்களின் கண்கண்ட தெய்வமாக விளங்கினர். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புற்றுக்கோவில் இருந்து பக்தர்கள் வழிபட்டு வந்தனர். அதனால் அந்த இடம் வாங்கப்பட்டு, சென்னை பெரியபாளையத்தில் இருந்து பிடிமண்கொண்டு வரப்பட்டு, ஒரு நன்நாளில் பூமிபூஜை போட்டு கட்டிட வேலை ஆரம்பிக்கப்பட்டது.
ஆடி மாத சிறப்புகள்
ஆடி மாதம் வரும் பூரம் திருவிழா இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நாளில் அம்மாக்களிடம் குழந்தை வரம் வேண்டி வரும் கன்னியர்களுக்கும், நீண்ட நாள் குழந்தை வரம் இல்லாதவர்களுக்கும், குழந்தை பாக்கியம் பெற்றவர்களுக்கும் இக்கோவிலில் வளையல் வளைகாப்பும், 21 வகையான சாதங்களும், பிரசாதமாக வழங்கப்படும். இந்த அருட்பிரசாதத்தை பெற்றவர்களுக்கு குழந்தைச் செல்வம் கட்டாயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அருள்வாக்கு
ஒவ்வொரு ஐப்பசி மாதமும் முதல் வெள்ளிக்கிழமையன்று பெரும்பூஜை என்னும் சிறப்புப் பூஜை நடைபெறுகிறது. சக்தியம்மாளின் உடம்பிற்குள் ஸ்ரீ பெரிய பாளையத்து பவானி அம்மன் குடி கொண்ட நாளையே பெரும்பூஜையாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அம்மாக்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும் காலை 8 மணி முதல் குருநாதர் சக்தியம்மா சேலை அணிந்து முழு பெண் உருவத்தில் ஒரு கையில் தீச்சட்டியுடன் மகாசக்தி வாய்ந்த பவானி அம்மாவாக பக்தர்களுக்கு தலையில் கை வைத்து சொல்லும் அருள்வாக்கு என்னும் சிறப்பு நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இப்பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்படும் பவானி அம்மன் அருள்வாக்கு 100 சதவீதம் பலித்து வருகிறது. பவானி அம்மாவாக அருள் வாக்கு தரும் சக்தியம்மாவே அனைத்து மக்களுக்கும் ஆன்மீகம் போதிக்கும் குருவாக விளங்குகிறார்.
இக்கோவிலில் கொடுக்கப்படும் மஞ்சள் காப்பு பிரசாதத்தை ‘ஜெய்பவானி’ என்று சொல்லி நெற்றியில் பூசிக் கொண்டால் அனைத்து செயல்களும் நன்மையாக நடக்கும்.