என் மலர்
கோவில்கள்
கேரளாவில் ஏராளமான பகவதி அம்மன் ஆலயங்கள் இருந்தாலும், எந்த ஆலயத்திற்கும் இல்லாத, அல்லது எல்லா ஆலயங்களையும் விட உயர்ந்த சிறப்பு ஆற்றுக்கால் என்னும் இடத்தில் உள்ள பகவதி அம்மன் ஆலயத்திற்கு உண்டு.
மகாவிஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் பரசுராமர், ‘இறைவனின் இருப்பிடம்’ என்று அழைக்கப்படும் கேரளாவை உருவாக்கியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. கேரள தேசத்தை உண்டாக்கிய பரசுராமன், அங்கு 108 சிவாலயங்களையும், 108 அம்மன் ஆலயங்களையும் அமைத்தார். கேரளாவில் உள்ள அம்மன்களுக்கு என்று தனித்தனி பெயர்கள் எதுவும் கிடையாது. அனைத்து அம்மன்களும், அந்தந்த ஊரின் பெயரைச் சேர்த்து ‘பகவதி அம்மன்’ என்றே அழைக்கப்படுகிறார்கள்.
கேரளாவில் ஏராளமான பகவதி அம்மன் ஆலயங்கள் இருந்தாலும், எந்த ஆலயத்திற்கும் இல்லாத, அல்லது எல்லா ஆலயங்களையும் விட உயர்ந்த சிறப்பு ஆற்றுக்கால் என்னும் இடத்தில் உள்ள பகவதி அம்மன் ஆலயத்திற்கு உண்டு. அதற்கு இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பெண் பக்தர்கள் கூடி, பொங்கல் வைத்து வழிபாடு முக்கியமான நிகழ்வு நடைபெறுவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
தல வரலாறு
சிலப்பதிகாரத்தின் நாயகியும், கற்புக்கரசியுமான கண்ணகியின் அவதாரம்தான், ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று கூறப் படுகிறது. ‘தன்னுடைய கணவன் கள்வன் அல்ல’ என்பதை மதுரை பாண்டிய மன்னனிடம் நிரூபணம் செய்த கண்ணகி, மதுரையை தன்னுடைய கற்பின் வலிமை கொண்டு தீக்கிரையாக்கினாள்.
பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக சேரநாடு சென்றாள். அவர் கேரளாவின் கொடுங்கல்லூர் என்ற இடத்திற்கு செல்லும் வழியில் ஆற்றுக்கால் என்ற பகுதியில் தங்கியதாகவும், அதன் நினைவாகவே, இங்கு ‘ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்’ அமைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இது தவிர இந்த ஆலயம் அமைந்ததற்கான மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது.. அதையும் இங்கே பார்க்கலாம்.
பராசக்தியின் பக்தர் ஒருவர், கிள்ளி என்ற ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு தெய்வீக அம்சம் பொருந்திய அழகுச் சிறுமி ஒருத்தி வந்தாள்.
அந்தச் சிறுமியைப் பார்த்ததும், அன்னையே குழந்தை வடிவில் நேரில் வந்திருப்பதாக, பக்தர் நினைத்தார். கருணையோடு, அந்த பக்தரை பார்த்த சிறுமி, “ஐயா.. என்னை இந்த ஆற்றின் மறுகரையில் கொண்டுபோய் விட முடியுமா?” என்று கேட்டாள்.
ஆனால் அந்தச் சிறுமியை பிரிய மனமில்லாத பக்தர், தன்னுடைய வீட்டிற்கு வந்து விருந்து சாப்பிட்டுச் செல்லும்படி சிறுமியை அழைக்க நினைத்தர். அவர் யோசனையில் இருந்து மீண்டபோது, அந்தச் சிறுமியை அங்கு காணவில்லை. அந்த நொடிப்பொழுதுக்குள்ளாக சிறுமி மாயமானதை கண்டு திகைத்த அந்த பக்தர், சிறுமியாக வந்தது அம்பாளாக இருக்குமோ என்று எண்ணினார்.
அன்று இரவு பக்தரின் கனவில் அதே சிறுமி தோன்றினாள். “தென்ன மரங்கள் அடர்ந்த பகுதியில் மூன்று கோடுகள் தென்படும். அந்த இடத்தில் கோவில் அமைத்து என்னை குடியமர்த்துங்கள்” என்றாள்.
மறுநாள் சிறுமி சுட்டிக்காட்டிய இடத்திற்குச் சென்ற பக்தர், அங்கு மூன்று கோடுகள் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். பின்னர் அந்த இடத்தில் சிறிய ஆலயம் ஒன்றை அமைத்து, அம்மனை வழிபட்டார். இந்தக் கோவிலே நாளடைவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலாக எழுச்சியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பல லட்சம் பெண்கள் கலந்துகொண்டு நடத்தும் பொங்கல் விழா, ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயத்தின் அடையாளமாக திகழ்கிறது. 1997-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் 15 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்தது, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. பின்னர் 2009-ம் ஆண்டு நடந்த விழாவில் 30 லட்சமாக இந்த எண்ணிக்கை உயர்ந்து, முந்தைய உலக சாதனையை முறியடித்தது. பொங்கல் வைக்கும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்வதாக கூறப்படுகிறது.
ஒரே நாளில்.. ஒரே நேரத்தில்.. ஒரே ஊரில்.. ஒரே அம்மனை வழிபட்டு பல லட்சம் பெண்கள், பொங்கலிட்டு சிறப்பு செய்யும் அம்மன் ஆலயம் இதுவாகும். கோவிலைச் சுற்றி சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவில், அதாவது திருவனந்தபுரம் நகரில் சாலை ஓரங்கள், வீட்டு வளாகங்கள், தெருக்கள் என அனைத்து இடங்களிலும் பொங்கலிட்டு அம்மனை வழிபடுவார்கள்.
தனது வெஞ்சினப் பார்வையால் மதுரையை தீக்கிரையாக்கிய கண்ணகியின் மனதை அமைதிப்படுத்தும் வகையில், பெண்கள் பொங்கல் படைத்து நைவேத்தியம் செய்வதாக ஐதீகம் உள்ளது. மகிஷாசுர வதம் முடிந்து பக்தர்கள் முன் தோன்றிய தேவியை, பெண் பக்தைகள் பொங்கல் நைவேத்தியம் படைத்து வரவேற்றதாக ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.
இந்த பொங்கல் திருவிழா 10 நாள் உற்சவமாக கொண்டாடப் படுகிறது. முதல் நாளில் கண்ணகி கதை பாடலாகப் பாடப்பெறும். அதோடு கொடுங்கல்லூர் பகவதியை ஆவாகனம் (அழைத்து வந்து) செய்து, 10 நாள் குடியிருக்கும்படி செய்வார்கள். விழா நடைபெறும் 10 நாட்களிலும் இரவு தீபாராதனை முடிந்து நடை மூடுவதற்கு முன்பாக, பலவித வண்ண காகிதங்களாலும், குருத்தோலைகளாலும், தீப விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மனை அமரச் செய்து, நடனமாடியபடி கோவிலைச் சுற்றிவருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
திருவிழாவின் ஒன்பதாவது நாள், உலக பிரசித்திப் பெற்ற ஆற்றுக்கால் பொங்கல் விழா நடைபெறும். பொங்கல் வைக்கும் நிகழ்வு முறையாக செய்யப்படும். தந்திரி, கருவறையில் இருந்து தீபம் ஏற்றி அதை மேல்சாந்தி என்று அழைக்கப்படும் தலைமை பூசாரியிடம் கொடுப்பார். அவர் அதைப் பெற்று, கோவில் வளாகத்தில் உள்ள பொங்கல் அடுப்பில் தீ மூட்டுவார். பின்னர் அதே தீபச் சுடரை, சக பூசாரியிடம் வழங்குவார். அவர் கோவிலின் முன்பு உள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டுவார்.
தொடர்ந்து மற்ற அனைத்து பொங்கல் அடுப்புகளிலும் தீ மூட்டப்படும். இதற்கான அறிவிப்புக்காக செண்டை மேளமும், வெடிமுழக்கமும், வாய்க்குரவையும் ஒலிக்கப்படும். அந்த ஒலி கேட்டு, பெண்கள் அனைவரும் பொங்கல் வைப்பதற்காக, அடுப்பை மூட்டுவர். குறிப்பிட்ட வேளையில் கோவிலில் நியமனம் செய்யப்பட்ட பூசாரிகள், புனித தீர்த்தம் தெளித்து பொங்கல் நைவேத்தியம் படைப்பார்கள். அப்போது விமானம் மூலமாக வானத்தில் இருந்து மலர் தூவப்படும்.
பொங்கல் திருவிழா முடிந்த அன்றைய தினம் இரவு, ஆற்றுக்கால் பகவதி அம்மன், மணக்காடு என்ற இடத்தில் உள்ள சாஸ்தா கோவிலுக்கு எழுந்தருள்வாள். ஊர்வலம் செல்லும் வழிசெயங்கும் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். குத்துவிளக்கேற்றி, பூஜை பொருட்கள் சமர்ப்பித்து வழிநெடுகிலும் அம்மனுக்கு பக்தர்கள் வரவேற்பளிப்பார்கள். சாஸ்தா கோவிலுக்கு செல்லும் ஒன்றரை கிலோமீட்டர் தூரமும் அலங்கார வண்டிகள் மற்றும் கண்ணைக் கவரும் பல்வேறு களியாட்டங்கள், மேளதாளம், பஞ்சவாத்தியம், நாதஸ்வர இசை முழங்க ஊர்வலம் செல்லும்.
மறுநாள் அதிகாலை சாஸ்தா கோவிலில் பூஜை முடிந்தபின், அங்கிருந்து புறப்பட்டு, மீண்டும் தன் இருப்பிடத்தை வந்து சேர்வாள், ஆற்றுக்கால் பகவதி அம்மன்.
ஆலய அமைப்பு
இந்த ஆலயம் முழுவதும் செம்புத் தகடால் வேயப்பட்டது. கோவிலில் ஸ்ரீசக்கரத்தை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். கோவில் தூண்கள் மற்றும் சுவரில் மகிஷாசுரமர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவ-பார்வதியின் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வரலாற்றுச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
ஆலய கருவறையில் இரண்டு அம்மன் சிலைகள் உள்ளன. மூல விக்கிரகத்தில் ரத்தினங்கள் பதித்து, தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது. மூல விக்கிரகத்தின் கீழே அபிஷேக விக்கிரம் உள்ளது. அம்மனின் கருவறை ‘ஸ்ரீகோவில்’ என்று அழைக்கப் படுகிறது.
சிறுமிகளின் தாலப்பொலி
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா நடைபெறும் அன்று காலையில் சிறுமிகள் தங்களை அலங்கரித்த நிலையில் அம்மன் சன்னிதியை நோக்கி குடும்பத்துடன் வந்து அம்மனை பூஜித்து திரும்புவார்கள். இந்த நிகழ்வுக்கு ‘தாலப்பொலி’ என்று பெயர். எல்லா சிறுமிகளும் புத்தாடை அணிந்து, தலையில் மலர்கிரீடம் சூடி, கையில் தாம்பாளம் ஏந்தி, அதில் அம்மனுக்குரிய பூஜை பொருட்களை வைத்து, சிறு தீபம் ஏற்றிக்கொண்டு வருவார்கள். சிறுமிகளுடன் அவர்களது பொற்றோர் மற்றும் உறவினர்களும் வருவார்கள். அனைவரும் அம்மனை வழிபடுவார்கள். இதனால் அந்த சிறுமிகளுக்கு நோய், நொடிகள் வராது, அவர்களுக்கு அழகும், செல்வமும் அதிகரிக்கும். எதிர்கால வாழ்வு வளமாக அமையும் என்பது நம்பிக்கை.
சிறுவர்களின் குத்தியோட்டம்
விழாவின் 3-ம் நாள் முதல் தொடர்ந்து 7 நாட்கள், 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களால் ‘குத்தியோட்டம்’ என்ற நிகழ்வு நடத்தப்படுகிறது. ஆலயத்தின் தலைமை பூசாரியிடம் பிரசாதம் பெற்று, கோவில் இடத்தில் 7 தினங்கள் தங்கி இந்தச் சிறுவர்கள் விரதம் கடைப்பிடிப்பார்கள். தினமும் ஆலய குளத்தில் நீராடி, அம்மன் சன்னிதியில் ஈர உடையுடன் அமர்ந்து அம்மனின் திருநாமங்களை உச்சரிக்க வேண்டும். 7 தினங்களுக்குள் அம்மனுக்கு 1008 நாமங்களையும் முடித்திருக்க வேண்டும். இந்த விரதத்தை கடைப்பிடிக்கும் சிறுவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பது நம்பிக்கை. இந்த சிறுவர்கள், மகிஷாசுரமர்த்தி னியுடன், சூரனை எதிர்த்து போரிட்ட வீரர்கள் என்று கருதப்படுகிறார்கள்.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
திருவனந்தபுரத்தில் கிழக்குகோட்டை சிட்டி பஸ் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் ஆற்றுக்கால் என்ற இடம் இருக்கிறது.
எம்.பிரபா

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்காக 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாண்டியா மாவட்டம் பெல்லூர் நகரில் உள்ள ஆதிசுன்சனகிரியில், கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் காலபைரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
காலபைரவர் என்றவுடன் நமக்கெல்லாம் உடனடியாக ஞாபகத்திற்கு வருவது, பைரவரின் வாகனமாக இருக்கும் நாய்தான். பைரவரை தேய்பிறை அஷ்டமியில் அதிகாலையில் நீராடி விரதம் இருந்து பஞ்ச தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இப்படி தொடர்ந்து ஆறு தேய்பிறை அஷ்டமியில் காலபைரவரை வணங்கினால், ஆரோக்கியமான வாழ்க்கை, செல்வ வளம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பைரவர், வீரபத்திரர், ஷேத்ரபாலர் ஆகிய மூவரும் சிவபெருமானுடைய மற்ற வடிவங்கள். தீயவர்களை அழித்தபோது பைரவராகவும், தட்சனின் யாகத்தை அழித்தபோது வீரபத்திரராகவும், கோவில்களைக் காக்கும் நிலையில் ஷேத்ரபாலராகவும் போற்றப்படுகிறார். புராண அடிப்படையில் இதற்கு பல விஷயங்களைச் சொல்லலாம்.
எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னிடம் வந்தவர்களுக்கு அருள்பாலிப்பதால் இவருக்குப் ‘பைரவர்’ என்று பெயர். வில்வம், செம்பருத்தி தவிர்த்த மற்ற மலர்களை பைரவருக்கு பயன்படுத்தலாம். சம்பா சாதம், உளுத்தம் பருப்பு கலந்த தயிர்சாதம், அப்பம், மிளகுவடை ஆகியவை இவருக்குரிய நைவேத்தியம்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்காக 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாண்டியா மாவட்டம் பெல்லூர் நகரில் உள்ள ஆதிசுன்சனகிரியில், கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் காலபைரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில் இது. 1993-ம் ஆண்டு கோவில் புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டு, 2008-ம் ஆண்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.
ஆதி ருத்ரராகிய சிவன், ஆதிசுன்சனகிரி மலைக்கு தவம் செய்வதற்காக வந்தபோது, அங்கிருந்த சித்த யோகிக்கு கோவில் அமைந்திருக்கும் இடத்தைக் கொடுத்து “இங்கு அமையப்பெறும் கோவிலில் பஞ்சலிங்க வடிவில் காட்சித் தருவேன்” என்று அருளினார். யோகி அந்த இடத்தில் சித்த சிம்மாசனத்தையும், மடத்தையும், கோவிலையும் அமைத்ததாக கூறப்படுகிறது.
இந்த காலபைரேஸ்வரர் ஆலயத்தில், கங்காதரேஸ்வரர், மல்லேஸ்வரர், சோமேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்திரமவுலீஸ்வரர் என ஐந்து அவதாரங்களைக் கொண்டு பஞ்ச லிங்கமாக சிவபெருமான் காட்சியளிக்கிறார். இந்த ஆலயத்தில் பழமை வாய்ந்த பிந்து சரோவரா புஷ்கரணியும் உள்ளது. இந்த புஷ்கரணியில், குழந்தையில்லாத தம்பதியினர் காலபைரவரை பரிபூரணமாக நினைத்து புனித நீராடினால் குழந்தையின்மை நீங்கி விரைவில் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.
கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள காலபைரேஸ்வரர் கோவில், நான்கு பெரிய கோபுரங்களை கொண்டதாக உள்ளது. கோவில் உள்பிரகாரத்தில் 172 தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணிலும் 4½ அடி உயரத்தில் 64 வகையான காலபைரவர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கோவிலில் நடுவே காலபைரவரும், வடமேற்காக ஸ்தம்பம்பிகா தேவியும் அருள்புரிகின்றனா். தென்மேற்கில் நாகலிங்கேஸ்வரர் வீற்றிருக்கிறார். கணபதி, சுப்ரமணி ஆகியோரை சேர்த்து 5 தெய்வங்கள் இங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
சுயம்புவாக எழுந்த ஸ்தம்பம்பிகா தேவியை பிரார்த்தனை செய்தால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒவ்வொரு வருடமும் தை மாதம் 1-ந் தேதி மகர சங்கராந்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு அம்மாவாசை மற்றும் மாத சிவராத்திரி அன்றும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு ஒரு முறை காலபைரேஸ்வரருக்கு தெப்போற்சவமும், கங்காதரேஸ்வரசாமிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது. வருடாந்திர தெப்போற்சவம் நடத்துவதற்கு இரண்டு புது ஏரிகளை உருவாக்கியிருக்கிறார்கள்.
ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைஅன்று ஸ்தம்பம்பிகா தேவிக்கும், சங்கடஹர சதுர்த்தியன்று கணபதிக்கும் சிறப்பு அலங்காரமும் பூஜையும், ஒவ்வொரு அம்மாவாசையன்று துர்க்கா ஹோம பூஜையும் நடைபெறுகிறது.

வட இந்தியாவில் உள்ள காசியில், சனீஸ்வரனுக்குக் குருவாக இருக்கும் காலபைரவரைத்தான் முக்கிய கடவுளாக தரிசிக்கிறார்கள். காசி தவிர மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் இருக்கும் மற்றொரு காலபைரவரையும் பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

ரா.சுந்தர்ராமன்
சீர்காழி கதிர்காம சுவாமிகள் கட்டிய முருகன் ஆலயம் ஒன்று, சீர்காழி தென்பாதியில் கைவிளாஞ்சேரி பகுதியில் உள்ள ‘கதிர்காம பாலதண்டாயுதபாணி ஆலயம்’ ஆகும்
தமிழ்நாட்டில் நம்முடைய நிகழ் காலத்தில் வாழ்ந்து சித்தியடைந்த மகான்கள் பலர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பூண்டி மகான் ஸ்ரீசத்குரு ஞானானந்தகிரி சுவாமிகள், திருவண்ணாமலை ஸ்ரீ ரமண மகரிஷி, வள்ளிமலை சித்தினாந்த சுவாமிகள், சீர்காழி கதிர்காம சுவாமிகள் ஆகியோர். இவர்கள் சித்தியான இடம் புனிதம் பெற்று, வேண்டும் பக்தர்களுக்கு வரம் தரும் தலங்களாக இன்றும் விளங்கி வருகிறது.
இவர்களில் சீர்காழி கதிர்காம சுவாமிகள் கட்டிய முருகன் ஆலயம் ஒன்று, சீர்காழி தென்பாதியில் கைவிளாஞ்சேரி பகுதியில் உள்ளது. ‘கதிர்காம பாலதண்டாயுதபாணி ஆலயம்’ என்பது இந்தக் கோவிலின் திருப்பெயராகும். அழகிய இந்த ஆலயம் பிரதான சாலைக்கு சற்றே உள்ளடங்கி மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது.
சுமார் 90 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். அழகான வண்ண முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் மணிமண்டபமும், அதைத் தொடர்ந்து மகாமண்டபமும் உள்ளன. மகாமண்டபத்தின் நடுவே பிரார்த்தனை தீபம், பீடம் ஆகியவற்றுடன் சிந்தாமணி விநாயகர் அருள்பாலிக் கிறார்.
அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவு வாசலில் சிற்றம்பல விநாயகர், பேரம்பல விநாயகர் அருள்பாலிக்க கருவறையில் இறைவன் கதிர்காம பால தண்டாயுதபாணி, நின்ற திருக்கோலத்தில் புன்னகை தவழ மேல் திசை நோக்கி அருள்பாலிக் கிறார். எங்கும் காண முடியாத சிறப்பு அம்சமாக, இங்கு முருகன் பிரதிஷ்டை செய்திருக்கும் பீடத்தின் கீழ் நூதன முறையில் யந்திர பிரதிஷ்டை செய்து வைத்துள்ளார், கதிர்காம சுவாமிகள். முருகப்பெருமானின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் பீடத்தின் கீழ், ஜலயந்திரம் சுழன்று கொண்டே இருக்கும்.
மகாமண்டபத்தின் மேற்கில் நால்வர், அருணகிரிநாதர் ஆகியோரது சன்னிதிகள் உள்ளன. வடக்கில் நடராஜர், சிவகாமி அம்மன், வேணு கோபாலன் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். முருகப்பெருமான் உற்சவ திருமேனியும் தனி சன்னிதியில் உள்ளது. கிழக்கில் விநாயகர் அருள்பாலிக்கிறார். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் பக்தர் ஒருவர், இங்கு பிரதிஷ்டை செய்வதற்காக வேணுகோபால சுவாமியின் சிலையை பார்சலில் அனுப்பி வைத்தார் என்றும், அவர் யார் என்று அறிய முடியவில்லை என்றும் கூறும் ஆலய நிர்வாகத்தினர், அந்த சிலையின் அற்புத படைப்பைக் கண்டு மகாமண்டபத்தில் அதனை பிரதிஷ்டை செய்த தாகவும் கூறுகின்றனர்.
இங்கு கந்தசஷ்டி விழா, 6 நாட்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முதல் 5 நாட்கள் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதுடன் 6-ம் நாள் சத்ரு சம்ஹார அர்ச்சனை நடைபெறுகிறது. பங்குனி உத்திரம் அன்று 108 பால்குட அபிஷேகம் மூலவருக்கு நடைபெறும். மாத சஷ்டிகளில் முருகனுக்கு அவல் பாயசம் நைவேத்தியம் செய்யப்பட்டு அதை பக்தர்களுக்கு வினியோகம் செய்கின்றனர். மாதக் கிருத்திகை நாட்களில் சபண ஹோமம் நடைபெறுகிறது.
வைகாசி விசாகத்தன்று முருகனுக்கு மாம்பழ அர்ச்சனை நடைபெறுவதுடன், அந்த பழங்களை பக்தர் களுக்கு பிரசாதமாகத் தருகின்றனர். கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருநாளின் போது, இலுப்பை எண்ணெயில் 1008 தீபமேற்றி ஆலயத்தை ஒளிமயமாக திகழ வைக்கின்றனர். மகாமண்டப மத்தியில் உள்ள கண் கவர் பிரார்த்தனை விளக்கில், 155 திதியுடன் தீபமேற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்கின்றனர் பக்தர்கள்.
தினசரி இரண்டு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயம், காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
சீர்காழி வந்து கதிர்காம பால தண்டாயுத பாணியை தரிசிப்பவர்கள், தவறாது சுவாமியின் அதிஷ்டானத் திருக்கோவிலையும் தரிசிக்கலாம்.
அமைவிடம்
வேணுகோபாலன்

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் 1 கி.மீ தொலைவில் கைவிளாஞ்சேரியில் உள்ளது இந்த ஆலயம்.
தொடர்புக்கு - +91 9865556488
வேணுகோபாலன்
காசிக்கு நிகரான சிவத்தலங்களுள் மிகவும் குறிப்பிடத்தக்கது, ஈரோடு அருகே குரும்பலமகாதேவி கிராமம், வடுகபாளையத்தில் உள்ள காசி விசாலாட்சி சமேத காசி விசுவநாதர் ஆலயம்.
இந்து சமயத்தவர்கள், தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் காசிக்கு சென்று கங்கையில் நீராடி அங்குள்ள விசுவநாதரை தரிசிப்பதை கடமையாக கொண்டுள்ளனர். ஏனெனில் இந்த நகரம் சிவபெருமானால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. காசிக்குச் சென்றுவர உடல்பலம், மனபலம், பொருள் பலம் ஆகிய மூன்றும் தேவை. அத்துடன் அந்த காலத்தில் இங்கு செல்ல பயணக் காலமும் அதிகம். இத்தகைய காரணங்களால் காசிக்கு செல்ல இயலாதவர்கள் தமிழகத்திலேயே காசிக்கு நிகராக விளங்கும் சிவத்தலங்களைத் தரிசித்து, காசி விஸ்வநாதரைத் தரிசித்து புண்ணியப் பலனைப் பெற்று வருகின்றனர்.
காசிக்கு நிகரான இத்தகைய சிவத்தலங்களுள் மிகவும் குறிப்பிடத்தக்கது, ஈரோடு அருகே குரும்பலமகாதேவி கிராமம், வடுகபாளையத்தில் உள்ள காசி விசாலாட்சி சமேத காசி விசுவநாதர் ஆலயம். இந்த ஆலயம் காவிரி நதியின் கிழக்குக் கரையில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு காவிரி நதியானது, வடக்கில் இருந்து தெற்காக பாய்கிறது.
நம் நாட்டில் கங்கையும், தாமிரபரணியும் மட்டும் தான் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்கின்றன. இவ்விரு நதிக்கரைகளிலும் ஏராளமான சைவ - வைணவ ஆலயங்கள் அமைந்து அணி சேர்க்கின்றன. அந்த வரிசையில் அகத்திய முனிவரால் தோற்றுவிக்கப்பட்ட மற்றொரு நதியான காவிரி, வடக்கு - தெற்காகப் பாய்ந்தோடும் வடுகபாளையம் பகுதியில் சிவாலயம் அமைந்திருப்பது சிறப்பானதாகப் போற்றப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த திருத்தலம் காசிக்கு இணையாகக் கருதப்படுகிறது.
இந்த திருத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெருஞ் சிறப்புகள் கொண்டது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம் இது. இங்கு அருளும் இறைவனை தரிசித்தால், காசிக்கு சென்று வந்த மெய்யுணர்வு ஏற்படும். சிறப்புமிக்க இந்த ஆலயத்தை நிர்மாணித்தவர், மாமன்னன் ராஜராஜ சோழன்.
காவிரி நதியில் வெள்ளம் வந்தாலும், வராவிட்டாலும் பாதிப்படைவது சோழநாடுதான். அதே நேரம் காவிரியில் வெள்ளம் வந்தாலும், வராவிட்டாலும் சேரநாடு செழிப்பாகவே விளங்கியது. இருப்பினும் அந்த நிலப் பகுதியை குறுநில மன்னர்கள் பலரும் சீரற்ற முறையிலேயே ஆட்சி செய்தனர். மேலும் தங்களுக்கு போட்டி பொறாமையில் சண்டையிட்டும் வந்தனர்.
இதனையறிந்த ராஜராஜசோழன், அடர்ந்த வனமாக இருந்த கொங்கு மண்டலத்தின் மீது, ‘பெருத்த நாட்டு ஆணையாட்கள்’ என்ற படைப்பிரிவு கொண்டு படையெடுத்தான். சிற்றரசர்கள் அனைவரையும் எளிதில் வெற்றி கொண்டான். தாம் கைப்பற்றிய இடங்களில் எல்லாம் அணைகள் கட்டி, காட்டைத் திருத்தி நாடாக்கி, வேளாண்மையை செழிப்படையச் செய்துவிட்டு நாடு திரும்பினான். ஆனாலும், அவன் கைப்பற்றி ஆட்சிபுரிந்த பகுதிகளில் சிறுசிறு குழுக்களிடையே கிளர்ச்சி நடைபெற்று வந்தது.
‘பொங்கிவரும் காவிரி பாய்ந்தோடும் நாட்டிலா சண்டை, சச்சரவு’ என்று வியந்த ராஜராஜசோழன், ஒற்றர்களை அனுப்பி அதற்கான காரணத்தை அறிய முற்பட்டான். காவிரி நதி பாய்ந்தோடினாலும், அதன் அருகே மறுபுறம் உள்ள பகுதிகள் வறட்சியாகக் காணப்பட்டன. கலகத்திற்கு காரணம் வறட்சிதான் என்பதை அறிந்து, மீண்டும் கொங்கு மண்டலத்திற்கு வந்து தங்கினான். அங்கே வறட்சியைப் போக்கும் விதமாகவும், தம்முடைய வெற்றிச் சின்னமாகவும் ‘சோழ கங்கை’ என்ற பெயரில் ஒரு பெரிய ஏரியை வெட்டினான் (தற்போது இந்த ஏரி ‘பொய்யேரி’ என்ற பெயரில் உள்ளது). இதனால் வேளாண்மை சிறந்து விளங்கியது. அப்பகுதியில் கலகம் நீங்கி அமைதி பிறந்தது.
தொடர்ந்து தான் தங்கியிருந்த இடம், வெற்றி பெற்ற ஊர் என ஒவ்வொரு பகுதியிலும், காவிரி நதிக்கரையில் சிவாலயம் அமைத்து, அவற்றைப் பராமரிக்கவும், நித்ய பூஜைகளுக்காகவும் மானிய நிலங்களை வழங்கினான். இவ்வாறு கொங்கு மண்டல காவிரிக் கரையில் ராஜராஜசோழன் 108 சிவாலயங்களை நிர்மாணித்ததாகக் கூறப்படுகிறது. இவ்வாலயங்கள் கரைகளின் இருபுறமும் நேர் எதிரே அமைக்கப்பட்டன. அப்போது, இந்தப் பகுதியில் இருந்த சைவ சமய இயக்கம் ஒன்று, ராஜராஜ சோழனுக்கு ‘சோழ சிரோன்மணி’ என்ற பட்டத்தை வழங்கியுள்ளது. மன்னுக்கு பட்டம் வழங்கப்பட்ட இடம் தற்போது, ‘சோழ சிரோமணி’ என அழைக்கப்படுகிறது.
இப்படியாக ராஜராஜ சோழன் நிர்மாணித்த ஆலயங்களுள் குரும்பலமகாதேவி கிராமம், வடுகபாளையம் பகுதியில் காவிரிக் கரையில் உள்ள காசி விசுவநாதர் ஆலயமும் ஒன்று. முன் காலத்தில் இந்த ஆலயம் குரும்பலமகாதேவி சமேத மணிபுரீஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்துள்ளது. காலப்போக்கில் இவ்வாலயம் முற்றிலும் சிதில மடைந்து, ஒரே ஒரு சன்னிதி மட்டும் இடிந்துவிழும் நிலையில் எஞ்சியது. அரசு ஆவணங்களில் ‘சுப்ரமணிய ஆலயம்’ என்று குறிக்கப்பட்டுள்ள இவ்வாலயத்தை, இந்த கிராம மக்கள் ‘சிவன் கோவில்’ என்றழைத்து, தீபமேற்றி வழிபட்டு வந்துள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் மூலஸ்தான கருவறையும் சிதிலமடையத் தொடங்கியது. இதையடுத்து இந்த ஆலயத்தை புனரமைக்கும் பணி தொடங்கியது. ராஜராஜ சோழன் காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம், விநாயகர், பாலதண்டாயுதபாணி ஆகியோர் விக்கிரகங்களுடன், புதிதாக ஸ்ரீதேவி - பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் உள்பட அனைத்து பரிவார தெய்வச் சிலைகளும் அமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள ஈசனுக்கு ‘காசி விசுவநாதர்’ என்றும், அம்பாளுக்கு ‘காசி விசாலாட்சி’ என்றும் திருவுளச்சீட்டு மூலம் புதிதாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்திற்கு சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ளது.
வழிபாட்டு பலன்
இத்தலத்திற்கு நேரில் வந்து அம்மையப்பரை தரிசிப்போருக்கு மறுபிறவி இல்லையென்று நம்பப்படுகிறது. திருமணம், மகப்பேறு, தொழிற்கல்வி ஆகிய பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன என்பது பலனடைந்தவர்கள் கூறும் தகவல். மேலும் தொழில் சிக்கல் தீரவும், தம்பதி அன்னி யோன்யமாக வாழவும் இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வருகின்றனர். வரலாற்றுப் பெருமைமிக்க இவ்வாலயம், எழில் கொஞ்சும் இயற்கைப் பேரழகு நிரம்பிய சூழலில் அமைந்துள்ளது.
அமைவிடம்
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், குரும்பலமகாதேவி கிராமம், வடுகபாளையத்தில் இக்கோவில் இருக்கிறது. திருச்செங்கோடு - ஜேடர்பாளையம் வழியில் கள்ளுக்கடைமேடு பஸ் நிறுத்தத்தில் இருந்து மேற்கில் 1 கிலோமீட்டர் அருகில் வடுகபாளையம் காவிரிக்கரை அமைந்துள்ளது.
கீழப்பாவூர் கி.ஸ்ரீமுருகன்

உதகமண்டலத்தில் அமைந்த பழமையான சிவாலயம், ஆறு சித்தர்களின் நினைவாலயம் கொண்ட கோவில் எனப் பல்வேறு பெருமைகளைக் கொண்டதாக விளங்குகிறது, ஊட்டி காந்தள் காசி விசுவநாதர் திருக்கோவில்.
உதகமண்டலத்தில் அமைந்த பழமையான சிவாலயம், நர்மதைக் கரையில் கிடைத்த பாணலிங்கம் கொண்ட ஆலயம், யோக தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கும் திருத்தலம், ஆறு சித்தர்களின் நினைவாலயம் கொண்ட கோவில், காந்தியடிகள் வியந்து போற்றிய மடம் எனப் பல்வேறு பெருமைகளைக் கொண்டதாக விளங்குகிறது, ஊட்டி காந்தள் காசி விசுவநாதர் திருக்கோவில்.
உலகம் போற்றும் நாயகனான சிவபெருமான், ஆன்மாக்கள் உய்யும் பொருட்டுப் பல்வேறு வடிவங்களில் காட்சியளிக்கும் திருத்தலங்கள் பல உள்ளன. அந்த வகையில் கொங்குநாட்டின் சிவ வடிவமாக விளங்குவது வெள்ளியங்கிரி மலை. அதேபோல சக்தி வடிவமாகத் திகழ்வது, நீலகிரி மலையாகும். சக்தி வடிவான நீலகிரியின் உதகமண்டலத்தில் உள்ள திருக்காந்தளில், அருள் வழங்கும் விதமாகத் திகழ்கிறது காசி விசுவநாதர் ஆலயம்.
தல வரலாறு
சிதம்பரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சிதம்பரம் ஸ்ரீ ஏகாம்பர சுவாமிகள் நீலகிரியின் மலை பிரதேசத்தில் தவம் இயற்றினார். ஒரு கட்டத்தில் இவருக்கு, அடியார் வடிவில் தட்சிணாமூர்த்தியாக காட்சி தந்த சிவபெருமான், புலித்தோல் ஆசனமும், பாதக்குறடும் வழங்கி அருள்பாலித்தார். அதன்பின் கோவையில் உள்ள பழமையான பேரூர் மடம் சென்று, தவத்திரு ராமலிங்க அடிகளாரைச் சந்தித்து, துறவு மேற்கொண்டார், ஏகாம்பர சுவாமிகள்.
இவருக்குப் பிறகு வந்த நிரஞ்சனப் பிரகாச சுவாமிகளுக்கு, காசி விசுவநாதர் ஆலயம் எழுப்ப வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. ராயபோயர் என்ற சிவனடியாரும், அவர்தம் மனைவியான கற்பகத்தம்மையாரும் இந்தப் பணியில் இணைந்தனர். மஞ்சம்மாள் என்பவர் தலைமையில், அடியார்கள் ஆதரவில் ஆலயப் பணிகள் தொடர்ந்தன. கி.பி. 1913-ல் யோகீந்தர் ஓம்பிரகாச அடிகளார் தலைமையில் பாலதண்டாயுதபாணி சிலை நிறுவப்பட்டது. இம்மடத்தின் பெருமை அறிந்து பயனடைந்த, ஜெய்ப்பூர் அரசி ராஜராஜேசுவரி, 1932-ல் அருளுரை மண்டபம் அமைத்துத் தந்தார். இதன்பின் 1935-ல் யோக தட்சிணாமூர்த்தி சிலை அமைக்கப்பட்டது.
இவ்வாலயத்திற்கான சிவலிங்கத்தினை நர்மதை நதியில் இருந்து நான்முகன், திருமால், தேவர்கள் ஆகியோர் வழிபட்ட பூணூல் ரேகை தாங்கிய பாணலிங்கம், 1958-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு, நிறுவப்பட்டது. இதன்பின் சில அடியார்களின் ஆதரவோடு திருப்பணிகள் முடிந்து, குடமுழுக்கு விழா நடந்தேறியது. ஆலய வளாகத்தில் சித்தர்கள் நினைவாலயம், காசி விசுவநாதர் திருக்கோவில் என இரண்டு பகுதிகள் அமைந்துள்ளன.
ஆலய அமைப்பு
ஆலயம் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால், சாலையில் இருந்து சில படிகள் கீழே இறங்கி உள்ளே செல்ல வேண்டும். கொடிமரத்தில் கலைநயம் மிக்க நந்திகள், பலிபீடம், நந்திதேவர் ஒருங்கே அமைந்துள்ளன. மகாமண்டபம் தாண்டியதும், கரு வறையில் நர்மதை நதியில் கிடைத்த பாணலிங்கம் நம்மை வரவேற்கிறது. இறைவன் கிழக்கு முகமாகப் புதுப்பொலிவோடு காட்சி அருளுகிறார். சன்னிதியில் தெற்கு நோக்கிய அன்னை விசாலாட்சி எளிய வடிவில் அருள் வழங்குகின்றாள்.
இதுதவிர வலம்புரி விநாயகர், தட்சிணாமூர்த்தி, ஐயப்பன், ஸ்ரீதேவி -பூதேவி சமேத வரதராஜப் பெருமாள், ஆஞ்சநேயர், விஷ்ணு துர்க்கை, கங்கை அம்மன், சனி பகவான், காலபைரவர், நவக்கிரகங்கள், பாண்டுரங்கன், தத்தாத்ரேயர், கனகசபை, ஓங்காரம் அனைத்தும் ஒருங்கே அமைந்துள்ளன. கருவறை சுற்றில் லிங்கோற்பவர், பிரம்மா, சண்டிகேசுவரர் சிலா வடிவங்கள் அமைந்துள்ளன. இந்த வளாகத்தின் மறு பகுதியில் சித்தர்கள் நினைவாலயம், ஆறு சித்தர்களின் சமாதிகளைக் கொண்டு அமைந்துள்ளது.
யோக தட்சிணாமூர்த்தி
இத்தலத்து யோக தட்சிணாமூர்த்தி, சின் முத்திரையோடு காட்சியளிப்பது தனிச்சிறப்பாகும். ஞானம்பெற விரும்புவோருக்கு ஏற்ற தெய்வமாக இவர் விளங்குகிறார். இந்த ஆலயத்தில் விநாயகர் வழிபாடு, கிருத்திகை, பிரதோஷம், புத்தாண்டு உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. என்றாலும், மகாசிவராத்திரி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இதுபோல, சித்தர்களின் குருபூஜைகளும் இங்கே சிறப்பாக நடத்தப்படுகின்றன.
சித்தர்கள் நினைவாலயம்
இங்குள்ள ஆலயம் எழும்புவதற்கு முன்பாக உருவான, தட்சிணாமூர்த்தி திருமடாலயத்தைத் தோற்றுவித்தவர் ஏகாம்பரதேசிக சுவாமிகள், இவருக்குப் பின் வந்த சித்தீசுவரர் ரத்தின அம்மணி அம்மையார், யோகீந்தர் ஓம் பிரகாச சுவாமிகள், நிரஞ்சன் பிரகாச சுவாமிகள், மஞ்சம்மாள், சுப்பிரமணிய சுவாமிகள் என ஆறு சித்தர்களின் ஜீவசமாதிகள் அமைந்த மண்டபமே சித்தர்கள் நினைவாலயமாக போற்றப்படுகிறது. இதுதவிர, பாலதண்டாயுதபாணி சுவாமிகளுக்கும் இங்கு குருபூஜை நடத்தப்படுகிறது.
பாணலிங்கம்
பாணாசுரன் எனும் அரக்கன் நதிக்கரையில் வழிபாடு செய்த, பூணூல் ரேகை கொண்ட லிங்கமே ‘பாணலிங்கம்’ எனப்படுகிறது. ஆயிரம் கல் லிங்கத்திற்கு இணையானது ஒரு ஸ்படிக லிங்கம். பன்னிரண்டு லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்கு இணையானது, ஒரு பாணலிங்கம் என ஆன்றோர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் நர்மதை நதியில் கிடைத்த இந்த பாணலிங்கம் அபூர்வ சக்தி கொண்டதாக பார்க்கப்படுகிறது. இத்தல இறைவனை வழிபட்டால் அனைத்து நன்மைகள் தேடி வந்து சேரும்.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் உள்ள போட் அவுஸ் எனப்படும் படகுக் குழாம் இடத்திற்கு மிக அருகில் உள்ளது காந்தள் என்ற பகுதி. இங்குதான் இந்த ஆலயம் இருக்கிறது.
பனையபுரம் அதியமான்

அபுதாபியில் பிரமாண்ட இந்து ஆலயம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதியையும், இடத்தையும் வழங்கியிருக்கிறது அமீரகம். இந்த கோவில் உருவாகும் விதம் மற்றும் அதன் கட்டு மானத்தில் உள்ள வியப்பூட்டும் தகவல்களை இங்கு பார்ப்போம்.
பொதுவாக வளைகுடா நாடு என்றதும், அரபு நாட்டு கலாசாரம் மற்றும் பாரம்பரியம் மட்டுமே நினைவிற்கு வரும். ஆனால் அமீரகம் அதில் விதிவிலக்காக, மத நல்லிணக்கத்திற்கு மிகப்பெரிய சான்றாக விளங்கி வருகிறது.
இந்த நாட்டில் மற்ற மதங்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இந்து கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், சீக்கிய குருத்துவார் மற்றும் புத்தர் கோவில் உள்ளிட்ட பலவற்றிற்கு உரிய அனுமதி வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. 200 நாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழும் இந்த நாட்டில், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட மத நம்பிக்கைகளுக்கு மதிப் பளித்து வருவது சிறப்பாகும்.
இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, அபுதாபியில் பிரமாண்ட இந்து ஆலயம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதியையும், இடத்தையும் வழங்கியிருக்கிறது அமீரகம். அந்த இந்துக் கோவிலானது சாதாரணமாக அல்லாமல், சிறப்பான கட்டிடக்கலையில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் உருவாகும் விதம் மற்றும் அதன் கட்டு மானத்தில் உள்ள வியப்பூட்டும் தகவல்களை இங்கு பார்ப் போம்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த பாப்ஸ் (போச்சசன்வாசி ஸ்ரீ அக்ஷார் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா) என்ற அமைப்பு சார்பில் பல்வேறு வெளிநாடுகளில் இந்து கோவில்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்தியா உள்பட இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் மொத்தம் 1,200 கோவில்களை இந்த அமைப்பு கட்டி நிர்வகித்து வருகிறது.
தற்போது இந்த அமைப்பு சார்பில் அரபு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் முதல் முறையாக, அபுதாபியில் பிரமாண்டமான இந்து கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமீரகத்திற்கு முதல் முறையாக வருகை புரிந்தார்.
அப்போது அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக மோடியின் வேண்டு கோளுக்கு இணங்க அபுதாபியில் இந்து கோவில் ஒன்று கட்டுவதற்கு அமீரக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் துபாய்- அபுதாபி, ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் 27 ஏக்கர் இடம், அபுதாபி அரசு சார்பில் கோவில் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பிறப்பித்தார்.
இந்த கோவிலின் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கும், நிர்வாகம் செய்வதற்கும் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரைச் சேர்ந்த பாப்ஸ் அமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது. அபுதாபிக்கு கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் வருகை புரிந்த இந்திய பிரதமர் மோடி, பாப்ஸ் அமைப்பின் நிர்வாகிகளை சந்தித்து கோவில் கட்டுமான திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
அபுதாபியில் கட்டப்படும் ஆலயமானது, இந்திய பாரம்பரிய முறைப்படி கட்டமைக்கப்பட உள்ளது. எனவே இதற்காகஇந்தியாவில் இருந்து கைதேர்ந்த 3 ஆயிரம் சிற்பக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கூடுதலாக இன்னும் சில நாட்களில் கோவில் கட்டுமான பணிகளை பற்றி அறிந்துகொள்ளும் விதத்தில் பிரத்யேக இணையதளம் ஒன்று உருவாக்கப்பட இருக்கிறது. இதில் பொதுமக்கள் அனைவரும், கோவில் கட்டுமான பணிகளின் வளர்ச்சியை பார்த்து அறிந்து கொள்ள வசதி செய்து தரப்பட இருக்கிறது. இந்த இணையதளத்தில் மந்திர் லிமிடெட் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று இந்த கோவிலுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நிதி வசூல் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த கோவில் நிதிக்கு வாட் வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடல் கடந்து தேசம் கடந்து மனித உணர்வுகளை மதநல்லிணக்கத்தோடு உருவாக்கப்படும் இந்த இந்துக் கோவில் வளாகம், அமீரகத்தின் சகிப்புத்தன்மைக்கு சான்றாக வரலாற்றில் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.
கட்டிட அமைப்பு
இந்த பிரமாண்ட இந்து கோவிலின் கட்டுமான பணிகள் இந்த மாதம் (பிப்ரவரி) தொடங்கியது. இந்த கட்டிடத்தின் சிறப்பம்சமாக 3 ஆயிரம் கன மீட்டர் அளவில் கான்கிரீட் கலவை பயன்படுத்தப்படுகிறது.
இதில் துருபிடிக்கும் இரும்பு கம்பிகள் மற்றும் தளவாடங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதிலாக பிளை ஆஷ் எனப்படும் நவீன சிமெண்ட் போன்ற பொருளுடன் கலந்து கான்கிரீட் தயார் செய்யப்படுகிறது. இந்த கோவிலில் 5 ஆயிரம் டன் எடையுள்ள இத்தாலி கராரா மார்பிள் சலவை கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல கட்டிட வெளிப்புற தோற்றத்திற்காக 12 ஆயிரத்து 250 டன் எடையுள்ள இளஞ்சிவப்பு கற்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த பிரமாண்ட கோவில் கட்டிடமானது 10 அடுக்குகளாக பிரிக்கப்பட்டு, அதில் 300 உயர்தரத்திலான உணரும் கருவிகள் பொருத்தப்பட உள்ளது. இந்த கருவிகள் புவிசார் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கக்கூடியது. இந்தக் கருவியைக் கொண்டு, அந்த கட்டிடத்தின் அடுத்த 50 ஆண்டுகளில் ஏற்படும் அழுத்தம், தட்பவெப்பநிலை, கட்டிட உறுதித்தன்மை, விரிசல்கள் உள்ளிட்ட அனைத்தும் கண்காணிக்கப்படும். இந்த தொழில்நுட்ப ஏற்பாடுகளை அபுதாபி கலீபா பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கோவில் வளாகத்தில் பார்வையாளர்கள் மையம், பிரார்த்தனை கூடங்கள், கண்காட்சி அரங்குகள், கற்றல் பகுதி, இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு திடல்கள், அழகிய பூங்காக்கள், தண்ணீர் பூங்காக்கள், உணவு அருந்தும் கூடங்கள், புத்தகங்கள் மற்றும் அன்பளிப்பு விற்பனை கடைகள் உள்பட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. பிரமாண்டமான வாகனங்கள் நிறுத்தும் இடம் இந்த வளாகத்தின் முன்னால் அமைக்கப்பட உள்ளது. இந்த வளாகத்தில் அனைத்து இந்து விழாக்களையும் கொண்டாடலாம்.
மர்யம்.சா
இந்த நாட்டில் மற்ற மதங்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இந்து கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், சீக்கிய குருத்துவார் மற்றும் புத்தர் கோவில் உள்ளிட்ட பலவற்றிற்கு உரிய அனுமதி வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. 200 நாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழும் இந்த நாட்டில், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட மத நம்பிக்கைகளுக்கு மதிப் பளித்து வருவது சிறப்பாகும்.
இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, அபுதாபியில் பிரமாண்ட இந்து ஆலயம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதியையும், இடத்தையும் வழங்கியிருக்கிறது அமீரகம். அந்த இந்துக் கோவிலானது சாதாரணமாக அல்லாமல், சிறப்பான கட்டிடக்கலையில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் உருவாகும் விதம் மற்றும் அதன் கட்டு மானத்தில் உள்ள வியப்பூட்டும் தகவல்களை இங்கு பார்ப் போம்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த பாப்ஸ் (போச்சசன்வாசி ஸ்ரீ அக்ஷார் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா) என்ற அமைப்பு சார்பில் பல்வேறு வெளிநாடுகளில் இந்து கோவில்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்தியா உள்பட இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் மொத்தம் 1,200 கோவில்களை இந்த அமைப்பு கட்டி நிர்வகித்து வருகிறது.
தற்போது இந்த அமைப்பு சார்பில் அரபு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் முதல் முறையாக, அபுதாபியில் பிரமாண்டமான இந்து கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமீரகத்திற்கு முதல் முறையாக வருகை புரிந்தார்.
அப்போது அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக மோடியின் வேண்டு கோளுக்கு இணங்க அபுதாபியில் இந்து கோவில் ஒன்று கட்டுவதற்கு அமீரக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் துபாய்- அபுதாபி, ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் 27 ஏக்கர் இடம், அபுதாபி அரசு சார்பில் கோவில் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பிறப்பித்தார்.
இந்த கோவிலின் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கும், நிர்வாகம் செய்வதற்கும் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரைச் சேர்ந்த பாப்ஸ் அமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது. அபுதாபிக்கு கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் வருகை புரிந்த இந்திய பிரதமர் மோடி, பாப்ஸ் அமைப்பின் நிர்வாகிகளை சந்தித்து கோவில் கட்டுமான திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த நிலையில் அதன் அடிக்கல் நாட்டு விழாவானது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ந் தேதி அபுதாபியில் நடைபெற்றது. இந்த கோவிலின் அடிக்கல் நாட்டு விழாவை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் அந்த கோவில் கட்டுமானத்திற்கான மாதிரி வடிவத்தை, பிரதமர் மோடி துபாய் ஒபெரா ஹவுஸ் அரங்கத்தில் நடைபெற்ற இந்தியர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் திறந்து வைத்தார். இதே தோற்றத்தில் அமெரிக்காவின் நியூஜெர்சி நகரத்திலும் ஒரு இந்து கோவில் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கடல் கடந்து தேசம் கடந்து மனித உணர்வுகளை மதநல்லிணக்கத்தோடு உருவாக்கப்படும் இந்த இந்துக் கோவில் வளாகம், அமீரகத்தின் சகிப்புத்தன்மைக்கு சான்றாக வரலாற்றில் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.
கட்டிட அமைப்பு
இந்த பிரமாண்ட இந்து கோவிலின் கட்டுமான பணிகள் இந்த மாதம் (பிப்ரவரி) தொடங்கியது. இந்த கட்டிடத்தின் சிறப்பம்சமாக 3 ஆயிரம் கன மீட்டர் அளவில் கான்கிரீட் கலவை பயன்படுத்தப்படுகிறது.
இதில் துருபிடிக்கும் இரும்பு கம்பிகள் மற்றும் தளவாடங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதிலாக பிளை ஆஷ் எனப்படும் நவீன சிமெண்ட் போன்ற பொருளுடன் கலந்து கான்கிரீட் தயார் செய்யப்படுகிறது. இந்த கோவிலில் 5 ஆயிரம் டன் எடையுள்ள இத்தாலி கராரா மார்பிள் சலவை கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல கட்டிட வெளிப்புற தோற்றத்திற்காக 12 ஆயிரத்து 250 டன் எடையுள்ள இளஞ்சிவப்பு கற்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த பிரமாண்ட கோவில் கட்டிடமானது 10 அடுக்குகளாக பிரிக்கப்பட்டு, அதில் 300 உயர்தரத்திலான உணரும் கருவிகள் பொருத்தப்பட உள்ளது. இந்த கருவிகள் புவிசார் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கக்கூடியது. இந்தக் கருவியைக் கொண்டு, அந்த கட்டிடத்தின் அடுத்த 50 ஆண்டுகளில் ஏற்படும் அழுத்தம், தட்பவெப்பநிலை, கட்டிட உறுதித்தன்மை, விரிசல்கள் உள்ளிட்ட அனைத்தும் கண்காணிக்கப்படும். இந்த தொழில்நுட்ப ஏற்பாடுகளை அபுதாபி கலீபா பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கோவில் வளாகத்தில் பார்வையாளர்கள் மையம், பிரார்த்தனை கூடங்கள், கண்காட்சி அரங்குகள், கற்றல் பகுதி, இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு திடல்கள், அழகிய பூங்காக்கள், தண்ணீர் பூங்காக்கள், உணவு அருந்தும் கூடங்கள், புத்தகங்கள் மற்றும் அன்பளிப்பு விற்பனை கடைகள் உள்பட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. பிரமாண்டமான வாகனங்கள் நிறுத்தும் இடம் இந்த வளாகத்தின் முன்னால் அமைக்கப்பட உள்ளது. இந்த வளாகத்தில் அனைத்து இந்து விழாக்களையும் கொண்டாடலாம்.
மர்யம்.சா
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி கரையில் அமைந்துள்ள கருங்குளம் வெங்கடாசலபதி கோவில், தென் திருப்பதிகளுள் ஒன்றாக திகழ்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி கரையில் அமைந்துள்ள கருங்குளம் வெங்கடாசலபதி கோவில், தென் திருப்பதிகளுள் ஒன்றாக திகழ்கிறது. நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் கருங்குளம் வகுளகிரி சேத்திரத்தில் மலைமேல் ஆலயம் உள்ளது. ஒருபுறம் பாய்ந்தோடும் தாமிரபரணி, இக்கோவிலுக்கு மாலையாக அணி சேர்க்க, சுற்றிலும் சோலையாய் வாழை மரங்கள் பசுமையாய் நின்று மனதை கொள்ளை கொள்கிறது. மத்தியில் மிக ஒய்யாரமாய் வகுளகிரி சேத்திரம் காணப்படுகிறது.
இந்தக் கோவிலில் உருவமற்ற சந்தன கட்டையில் வெங்கடாசலபதி மூலவராக காட்சியளிக்கிறார். இந்த அமைப்பு அரியும் சிவனும் ஒன்று என்பதை உலகத்திற்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவது போல, தாமிர பரணி ஆற்றில் ஸ்ரீனிவாசர் இறங்கும் திருவிழா சித்ரா பவுர்ணமி தோறும் இங்கு வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.
வடநாட்டில் சுபகண்டன் என்ற அரசன் நல்லாட்சி புரிந்தான். மன்னனின் முன்ஜென்ம வினையால் அவனுக்கு கண்டமாலை நோய் உண்டானது. அதன் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்ததால், மன்னன் மிகவும் அவதிப்பட்டான். எத்தனை வைத்தியம் பார்த்தும் பலனில்லை. இறுதியாக திருப்பதி வேங்கட மலையானை தரிசித்து தீர்வு கேட்டு நின்றான். உண்ணாமல் வரம் கேட்டுக் கிடந்தான்.
அவனுக்கு அருள சித்தம் கொண்டார் ஏழுமலையான். அன்று இரவு மன்னனின் கனவில் தோன்றி, “சுபகண்டா.. சந்தனக் கட்டை கொண்டு, அதன் துண்டுகளை மிச்சமில்லாமல் எனக்கு ஒரு தேர் செய். தேர் செய்து முடியும் போது உனக்கு நல்லதொரு செய்தி சொல்கிறேன்” என்று கூறி மறைந்தார்.
இதையடுத்து, கைதேர்ந்த சிற்பிகளை கொண்டு, தேர் வேலை ஆரம்பித்தது. தேர் பணி முடிவுற்ற நிலையில், ஒரு சந்தன கட்டை மிஞ்சியது.
மனமுடைந்தான் சுபகண்டன், “இறைவா, மிச்சமின்றி கட்டைகளை கொண்டு தேர் செய்ய ஆசைப்பட்டேன். ஆனால் ஒரு கட்டை மிஞ்சுகிறதே. நான் என்ன செய்வேன்” என கலங்கித் துடித்தான்.
அன்று இரவு மீண்டும் மன்னன் கனவில் தோன்றிய ஏழுமலையான், “தென்னகத்தில் தாமிரபரணி கரையில் உள்ள வகுளகிரி சேத்திரத்தில் அமர்ந்து மக்களுக்கு அருள்புரிய உள்ளேன். எனவே அங்கே சென்று இந்த உருவமற்ற சந்தனக் கட்டையை பிரதிஷ்டை செய். அங்கே நான் அனைவருக்கும் அருள் புரிவேன். அங்கு உன் நோயும் தீரும்” என அருளினார்.
“இறைவா.. தென் திருப்பதியை எவ்வாறு கண்டறிவேன்” என்று மன்னன் வேண்ட, அதற்கும் இறைவன் பதிலளித்தாா். “இங்கு ஒரு பசுவும், கன்றும் தோன்றும். அதன் பின்னால் சந்தனக் கட்டையுடன் செல். பசுவும் கன்றும் எங்கு மறைகிறதோ, அங்கு என்னை பிரதிஷ்டை செய்” என்றார்.
அதன்படியே கருங்குளம் வகுளகிரி மலையை கண்டு, வெங்கடாசலபதி உறைந் திருக்கும் உருவமற்ற சந்தனக் கட்டையை மன்னன் பிரதிஷ்டை செய்தான். பின்னர் அதற்கு பால், நெய், சந்தனம் போன்றவற்றால் அபிஷேகங்களைச் செய்தான். என்ன ஆச்சரியம்.. மன்னனின் நோய் தீர்ந்தது. முன்பிருந்ததை விட கூடுதல் தேகப் பொலிவோடு, தன் நாட்டிற்குத் திரும்பினான். பல ஆண்டுகள் அபிஷேகம் நடந்தும், தற்போது வரை அந்த சந்தனக் கட்டை எந்தவொரு சேதமும் இன்றி காணப்படுவது இறைவனின் அருள் அன்றி வேறென்ன..
ஒரு சமயம் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் திருமாலைக் காண, நாரதர் வருகை தந்தார். ஆனால் அவரை அங்கே காணவில்லை. எங்கு சென்றிருக்கிறார் என்று நாரதர், தன்னுடைய ஞானக் கண் கொண்டு தேடினார். அப்போது திருமால் தாமிரபரணி நதிக்கரையில் கருட வாகனத்தில் லட்சுமியோடு வீற்றிருக்க, ஆதிசேஷன் மலையாக விளங்க, தேவர்களும், முனிவர்களும் இறைவனை வணங்கிக் கொண்டிருந்தனர். அதைக்கண்டு மனம் மகிழ்ந்த நாரதர், தானும் அங்கு சென்று பகவானை வணங்கினார்.
இந்த ஆலயத்தில் உள்ள அபூர்வ புளிய மரத்தினை ‘உறங்கா புளிய மரம்’ என்று அழைக்கிறார்கள். இந்த புளியமரத்தில் பூ பூக்கும்; ஆனால் காய் காய்க்காது. ராத்திரி தன் இலைகளை மூடாது. இந்த புளிய மரம் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் தவம் செய்த புளியமரத்திற்கு இருக்கும் சிறப்பு, இவ்விடத்தில் இருக்கும் புளியமரத்துக்கும் உண்டு.
வகுளகிரி மலை மீது ஏறி வெங்கடாசலபதியை வணங்கும் முன்பு, பக்தர்கள் மலையின் அடிவாரத்தில் உள்ள மார்தாண்டேஸ்வரரை வணங்க வேண்டும். மேலும் அங்கு தம்பதிகள் சகிதமாக அருளும் நவக்கிரகங்களை சேவித்து விட்டுதான், முன்பக்க படி வழியாக ஏறிச் சென்று வெங்கடாசலபதியை வணங்க வேண்டும்.
வெங்கடாசலபதிக்கு சாயரட்சை என்னும் சாயங்கால பூஜையில், அரிசியின் மேல் தேங்காய் உடைத்து வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்றி (நீராஞ்சனம்) பூஜை நடத்தினால் நினைத்த காரியம் கைகூடும். குழந்தை பேறு கிடைக்கும், அரசு வேலை கிடைக்கும், இழந்த பொருளை மீட்கலாம். நாள்பட்ட நோய் தீருகிறது. இந்த பூஜைக்காக எப்போது பக்தர்கள் வந்தாலும் அர்ச்சகர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவார்கள். தென்திருப்பதிகளுள் ஒன்றாக திகழும் கருங்குளம் வெங்கடாசலபதிக்கான நேர்ச்சையை திருப்பதியில் செய்ய இயலாது. ஆனால் திருப்பதிக்கு செய்ய வேண்டிய நேர்ச்சையை கருங்குளம் வெங்கடாசலபதி கோவிலில் செய்யலாம் என்பது இக்கோவிலின் சிறப்பாகும்.
இக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை தோறும் கருடசேவை மிகச்சிறப்பாக நடை பெறும். இரவு 11 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கருட வாகனத்தில் உற்சவர் ஸ்ரீனிவாசர், கிரிவலம் வருவார். இந்த வேளையில் பக்தர்கள் “கோவிந்தா, கோபலா” என கோஷமிட்டபடி அவர் பின்னால் சுற்றி வருவார்கள்.
கருங்குளத்தில் சித்ரா பவுர்ணமி விழா 10 நாள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் பகவான் கிரிவலம் வருவார். இறுதி நாள் மலையை விட்டு கீழ் இறங்கி, அதிகாலை தாமிரபரணி ஆற்றில் மீன் விளையாட்டு விளையாடுவார். மறுநாள் மலை மீது பச்சை சாத்தி, ‘கோவிந்தா..’ கோஷம் முழங்க மலை மீது ஏறுவார். இந்த நிகழ்வுகளைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இந்த நிகழ்ச்சி மதுரையில் கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்ச்சிக்கு இணையானதாகும்.
சந்திர கிரகணம் நடைபெறும் நேரங்களில், சித்திரா பவுர்ணமி வரும் காலங்களில் பகல் வேளையிலேயே உற்சவர் ஸ்ரீனிவாசர், மலையை விட்டு கீழே இறங்குவார். இந்த அபூர்வ காட்சி எப்போதாவது தான் நடை பெறும். வைகுண்ட ஏகாதசி திருவிழா இக்கோவிலில் மிக சிறப்பாக நடக்கும். இக்கோவிலில் பரமபத வாசல் என தனியாக கிடையாது. எனவே பிரதான வாசல் வழியாகவே பகவான் சொர்க்கவாசலுக்கு செல்வார். இக்கோவிலில் லட்சார்ச்சணை விழா, மகா சாந்தி ஹோமம் வருடந்தோறும் மிகச்சிறப்பாக நடக்கிறது.
கோவில் மூலவராக உருவமற்ற சந்தனக் கட்டையில் உள்ள வெங்கடாசலபதி வீற்றிருக் கிறார். உற்சவர் ஸ்ரீனிவாசர், தாயார் ஸ்ரீதேவி - பூதேவியுடன் காட்சியளிக்கிறார். மூலக் கோவிலிலும் தம்பதி சகிதம் வெங்கடாசலபதி அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சுற்றியுள்ள நவ திருப்பதிகளை தரிசிக்கும் முன்பு கருங்குளம் வெங்கடாசலபதி என்னும் தென் திருப்பதி தலத்தினை தரிசிப்பது மிக முக்கியமாகும். படி வழியாக நடந்து ஏறிச்செல்ல முடியாதவர்களுக்கு, கோவிலின் பின் புறம் வழியாக வாகனங்கள் மலை மீது ஏறிச்செல்ல சாலை வசதி செய்யப்பட்டுள்ளது.
அமைவிடம்
நெல்லை - திருச்செந்தூர் பிரதான சாலையின், 15-வது கிலோமீட்டர் தூரத்தில் கருங் குளம் வெங்கடாசலபதி திருக்கோவில் அமைந்துள்ளது.
முத்தாலங்குறிச்சி காமராசு

வல்லநாடு பாறைக்காட்டில் உள்ள சித்தர் பீடத்தில் மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பாறைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசாது - உலகம்மை தம்பதியர். தெய்வபக்தி மிக்கவர்கள், ஏழைகளுக்கு மூலிகை மருத்துவம் செய்து வந்தனர். தம்பதியருக்கு வெகுநாளாய் குழந்தை பாக்கியம் இல்லை. எனவே ராமேஸ்வரத்திற்கு நடந்து சென்று சிவபெருமானை வணங்கி நின்றனர்.
இதன் பயனாக ஐப்பசி மாதம் அமாவாசைஅன்று சித்திரை நட்சத்திரத்தில், வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் பிறந்தார். 3-வது வகுப்பு வரை படித்தார். ஏழ்மை காரணமாக வல்லநாடு மலையில் ஆடு மேய்க்க ஆரம்பித்தார். அப்போதே இவர் அனைத்து உயிர்களையும் நேசிக்க ஆரம்பித்தார்.
இவருக்கு நஞ்சு கக்கும் நாகப்பாம்பு ஒன்று நண்பன் ஆனது. இருவரும் ஒரே கலசத்தில் உணவு அருந்தினர். இதைக் கண்ட அவரது நண்பர்கள் அச்சமடைந்தனர். மலை மீது திடீரென்று தோன்றிய சித்தர் மூலம் உபதேசம் பெற்றார்.
இதை அறிந்த பெற்றோர், தங்கள் பிள்ளை தங்களைவிட்டு பிரியாமல் இருக்க திருமணம் செய்து வைத்து விடலாம் என்று யோசித்தனர். அதன்படி லட்சுமி என்ற பெண்ணை மணமுடித்து வைத்தனர். ஆனாலும் துறவறம் மேற்கொள்வதே என் எண்ணம் என்று முதல் நாள் இரவே அப்பெண்ணை பிரிந்து இல்லற துறவு பூண்டார். கணவனை தெய்வமாக போற்றிய அவரது துணைவியார், கணவன் ஈடுபட்டிருந்த ஆன்மிகப் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டார். சுவாமி ஏற்படுத்திய சமூகப் பணியிலும் சிறந்து விளங்கினார்.
சுவாமிகள் அன்னக்காவடி எடுத்து ஏழைக்கு அன்னதானம் வழங்கினார். இது அவரின் உறவினர்களுக்கு பிடிக்கவில்லை. பெரிய சமுதாயத்தில் பிறந்தவன் பிச்சை எடுப்பதா? என கண்டித்தனர். ஆனாலும் சுவாமி தொடர்ந்து பிச்சை எடுத்தார். எனவே அவரை கொலை செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் உறவினர்கள் சிலர் அவரது வீட்டுக்கு வந்தனர். அங்கு அவர் தனது உடலை எட்டு துண்டாக பிரித்து நவயோகம் செய்து கொண்டிருந்தார், சிதம்பர சுவாமிகள். அதை கண்டவர்கள் யாரோ ஒருவர் நமக்கு முன்பு சுவாமியை வெட்டி கொன்று விட்டனர் என்று பயந்து ஓடினர்.
மறு நாள் ஊரார்களை கூட்டி வந்த போது, சுவாமி குளித்து விட்டு பூஜை செய்து, “என்ன சாமி நீங்க நினைச்சது நடக்கலையா?” என்று கேட்டாராம்.
காடுகளிலும், மலைகளிலும் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலை இவருக்கு மிகவும் பிடித்த இடமாகும். அங்கு மதம்பிடித்த யானை ஒன்றை, தனது பார்வையால் கட்டுப்படுத்தினார். அதன் பின் சுவாமி எப்போது சதுரகிரிக்கு சென்றாலும் அந்த யானை சுவாமியை பார்க்க வந்துவிடுமாம். யானை இறந்த பிறகு அதன் சிரசை, சட்டபடி வாங்கி பாறைக்காட்டில் உள்ள தனது தியானமடத்தில் தீபம் போட்டு வணங்க வைத்துள்ளார்.
சுவாமிகள் வேட்டியும் துண்டும்தான் அணிவார். எளிய தோற்றம் படைத்தவர்கள். எளிதில் எவரும் அருகே சென்று பேசலாம். ஆனால் காலைத் தொட்டு வணங்க மட்டும் சம்மதிக்கமாட்டார். தெரியாமல் யாராவது, அவரது காலை தொட்டு கும்பிட்டு விட்டால், அவரும் அதே போல் அந்த நபரின் காலில் விழுந்து வணங்குவார். இனிய வார்த்தைகளையே பேசுவார். அடிக்கடி மொட்டையடித்துக் கொள்பவர். மண்சட்டியில் சோறு போட்டு உண்ணுவார். எங்கு சென்றாலும் தரையில் துண்டு விரித்தே அமர்வார். ஜாதி மதம் பார்க்க மாட்டார். மூலிகை மருந்தை ஏழைகளுக்கு இலவசமாக வழங்குவார். தமக்கு பணம் தர முயலுவோர்களுக்கு ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கச் சொல்வார்.
‘அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை’ என்ற வள்ளலாரின் வாசகத்தைத் தனது வாழ்நாளில் நோக்கமாகக் கொண்டு மக்களை வழிநடத்தியவர். பல ஊர்களுக்கு சென்று பக்தர்களின் வீடுகளில் தீப வழிபாட்டினைச் செய்தார். அற்புதங்களை விளைவித்து அருள்வாக்குகளைத் தந்தார். சுவாமிகள் பெற்றோரைப் பேணியவர். வீட்டாருக்கும், வெளியாருக்கும் மகானாக விளங்கியவர். ஊனமுற்றோருக்கு தீபாவளிஅன்று எண்ணெய் தேய்த்து குளிக்க உதவிகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதற்காக பாளையங்கோட்டை காதுகேளாதோர் மற்றும் கண் தெரியாதோர் பள்ளிக்குசென்று வருவார். தொண்டர் குலத்தார் அப்பணியை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
வல்லநாடு பாறைக்காட்டில் உள்ள சித்தர் பீடத்தில் மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. 1981-ல் வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தன்று சுவாமிகள் ஜோதியில் இரண்டறக் கலந்தார். அவரது உடல் தனது தாய் தந்தையர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இவ்விடத்தில் வந்து நின்றாலே நமது வினைகள் தீருகிறது. கேட்ட வரம் கிடைக்கிறது. சுவாமி ஜோதியில் கலந்த நாளில் குருபூஜை நடத்தப்படுகிறது. தை பூசத்தில் வள்ளலார் ஜோதியான நாளை முன்னிட்டும், வைகாசி பூசத்தில் சுவாமி ஜோதி ஆன நன்னாளிலும் 1008 தீப வழிபாடு நடைபெறுகிறது.
அன்னதான மகிமை
ஏர்வாடியைச் சேர்ந்த முகமதியப் பெண் ஒருவர் தீராத வயிற்று வலியால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். சுவாமி அந்த பெண்ணின் வயிற்று வலியை போக்க அன்னதானத்தில் வந்து உணவு உண்ண கூறினார். அதுவரை சாப்பிடக்கூட முடியாத அளவிற்கு, தீராத நோயாக இருந்த அந்நோய் தீர்ந்தது. தற்போதும் கூட வல்லநாட்டு சித்தர் பீடத்திற்கு வந்து சுவாமியை வணங்கி விட்டு அன்னதானம் சாப்பிட்டால் பலதரப்பட்ட நோய்களும் தீருகிறது. இந்த சித்தர் பீடத்தில் தினமும் அன்னதானம் நடந்துவருகிறது.
சித்தரின் அற்புதம்
சாது சித்தர் சுவாமிகள், ஒரே சமயத்தில் இரு இடங்களில் இருப்பார். இப்படித்தான் ஒரு சமயம் நெல்லை அருகே ஒரு கிராமத்தில் தீப வழிபாட்டினை சுவாமி நடத்திக் கொண்டிருந்தார். அதே சமயம் அருகில் உள்ள ஆற்றில் ஒருவர் குளிக்க இறங்கியபோது தண்ணீர் அடித்து சென்று விட்டது. அங்கு வந்த சுவாமி அவரை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தார். காப்பாற்றப்பட்ட நபர் தீப வழிபாட்டு இடத்திற்கு வந்தபோது அங்கேயும் சுவாமி இருந்தார்.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அமைவிடம்
வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமி பீடத்திற்கு செல்ல திருநெல்வேலி - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள வல்லநாட்டில் இறங்க வேண்டும். அங்கிருந்து கலியாவூர் செல்லும் சாலையில் 1 கிலோமீட்டர் தூரத்தில் பாறைக்காடு திருத்தலம் உள்ளது. வல்லநாட்டில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.

ஒரே தலத்தில் ஐந்து வெவ்வேறு பெயர்களுடன் கூடிய சிவமூர்த்தங்களைக் கொண்டதுமான சிறப்புகளைப் பெற்றது, நாகப்பட்டினம் மாவட்டம் இலுப்பைப்பட்டு மங்களநாயகி சமேத நீலகண்டேசுவரர் திருக்கோவில்.
தேவார திருத்தலங்களில் ஒன்றானதும், சிவனார் ஆலகால விஷத்தை பருகியபோது உமையம்மை சிவனாரின் கழுத்தை தன் கரங்களால் அழுத்தி விஷத்தை தொண்டையிலேயே நிற்கச் செய்ததும், வனவாசத்தின் போது வழிபட்ட பஞ்சபாண்டவர்களுக்கு சிவன் தரிசனம் தந்ததும், ஒரே தலத்தில் ஐந்து வெவ்வேறு பெயர்களுடன் கூடிய சிவமூர்த்தங்களைக் கொண்டதுமான சிறப்புகளைப் பெற்றது, நாகப்பட்டினம் மாவட்டம் இலுப்பைப்பட்டு மங்களநாயகி சமேத நீலகண்டேசுவரர் திருக்கோவில்.
‘சிவனேன்னு இரு’ என்று சிலர் சொல்வதை இன்றளவும் கேட்கலாம். அவர்கள் சொல்லும் சிவனே என்பதை ‘சும்மாயிருப்பது’ என்றே பலரும் எடுத்துக்கொள்வர். ஆனால் அது உண்மையல்ல. சிவன், அதாவது அந்த ‘பரமசிவனை நினைத்தவாறு’ என்பதே அதற்கான சரியான பொருள். சதாநேரமும் அந்த சதாசிவனை சிந்தையுள் நிரப்பி வாழ்வோருக்கு இன்னல்களுக்கு இடமில்லை. அப்படியே இன்னலை எதிர்கொள்ள நேரிட்டாலும் பாதிப்பை ஏற்படுத்தாது.
அதேசமயம் சிவனார் பாதம் பணிவது என்பதும் அத்தனை சுலபமல்ல. அதற்கும் அவரருள் வேண்டும் என்கிறார் மாணிக்கவாசகர். இதை உணர்ந்தவர்கள் உய்கிறார்கள். துன்பத்தால் கலங்கிய பஞ்ச பாண்டவர்களுக்கு ஒரு சித்திரை பவுர்ணமி நாளில் காட்சியளித்து அவர்களை அரவணைத்தவர்தான் பழமண்ணி படிக்கரை நாதர். நாகப்பட்டினம் மாவட்டம் மணல்மேடு அருகே இலுப்பைப்பட்டு என்ற ஊரில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.
தலவரலாறு
அமுதத்தை பெற விரும்பி தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்தனர். அதுசமயம் முதலில் ஆலகால விஷம் வெளிப்பட, இருதரப்பினரும் அஞ்சி பின்வாங்கியதுடன் தங்கள் முயற்சியையும் கைவிட முனைந்தனர். அவர்களுக்கு ஏற்பட்ட பயத்தைப் போக்க விரும்பிய சிவபெருமான், அந்த விஷத்தை தன் கைகளால் எடுத்து பருகினார். பதறிப்போன உமையம்மை சிவனாரின் கழுத்தை தன் கரங்களால் அழுத்தி அவ்விஷத்தை தொண்டையிலேயே நிற்கச் செய்தார். விஷத்தைத் தாங்கிய அவரது கழுத்துப் பகுதி நீலநிறமாக இருந்தமையால், அவருக்கு ‘நீலகண்டன்’ என்ற பெயர் ஏற்பட்டது.
அந்த வரலாற்றின் அடிப்படையில் எழுப்பப்பட்ட இவ்வாலயம் பிற்காலத்தில் வந்த மன்னர்களால் வளர்த்தெடுக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது. கல்வெட்டில் இவ்வூரின் பெயர் ‘விருதராச பயங்கர வளநாட்டு ராஜராஜ வளநாட்டு திருப்படிக்கரை’ என்று குறிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் விஜயநகரவேந்தர் வீரபூபதி உடையார், வீரப்பிரதாப கிருஷ்ணதேவ மகராயர் காலத்திய கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. வீரபூபதி உடையார் கல்வெட்டில் (கி.பி. 1408), இறைவனின் பெயர் ‘திருநீலக்கண்டம் உடைய நாயனார்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
பண்டைய சோழவள நாட்டில் மண்ணியாற்றின் படிக்கரையில் இத்தலம் அமைந்திருந்ததால், ‘பழமண்ணிபடிக்கரை’ என்றானது. காலப்போக்கில், மண்ணியாறு இவ்வாலயத்தைச் சிதைத்து விடாமல் இருக்க அதன் வழியை ஆலயத்தின் தென்புறத்திற்கு மாற்றி அமைத்து விட்டனர்.
இரண்டு விநாயகர் சன்னிதிகள், ஐந்து சுவாமி சன்னிதிகள், இரண்டு அம்பாள் சன்னிதிகள், மூன்று தீர்த்தங்களைக் கொண்டது இக்கோவில். ஈசனுக்கு நீலகண்டேசுவரர், படிக்கரைநாதர், மகதீசுவரர், பரமேசுவரர், முத்தீசுவரர் ஆகிய சன்னிதிகள் உள்ளன. அம்பாளுக்கு அமுதகரவள்ளி மற்றும் மங்களநாயகி சன்னிதிகள் காணப்படுகின்றன. தலவிருட்சம் தெய்வவிருப்பை எனப்படும் இலுப்பை மரம். தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம், அமிர்த தீர்த்தம் மற்றும் வடகாவிரி எனப்படும் கொள்ளிடம் ஆகியவையாகும்.
இத்தல இறைவனை இந்திரன், சனி, பாண்டவர்கள், உரோமச முனிவர், அருணகிரிநாதர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். வனவாசத்தில் இருந்த பாண்டவர்கள் சிவபூஜை செய்ய விரும்பி சிவலிங்கத்தைத் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காமல் போக உரோமச முனிவரின் வழிகாட்டலில் ஒரு இலுப்பை மரத்தின் கீழ் அமர்ந்து இலுப்பைக் காயில் விளக்கேற்றி, தங்கள் சிரமத்தை குறைத்தருளும்படி வழிபட்டு வந்தனர். அவர்கள் வேண்டுதலுக்கிணங்க, பாண்டவர்கள் ஐந்து பேருக்கு இறைவன் தனித்தனியாக காட்சி தந்தார்.
ஆலய அமைப்பு
மூன்றுநிலை ராஜகோபுரத்துடன், மூன்று பிரகாரங்களுடன் ஆலயத்திற்குள் ஆலயமாக (இரண்டு கோவில்கள்), கிழக்கு நோக்கி இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுரத்தின் நேர் எதிரில் 500 மீட்டர் தொலைவில் ஸ்ரீவிஜயகணபதியின் சிறு ஆலயமும், அதன் பின்னால் பிரம்ம தீர்த்தமும் இடம்பெற்றுள்ளது. உள்பிரகாரத்தில் இடதுபுறம் மதில்சுவரில் சந்திரனும், மடப்பள்ளி அருகில் தலவிருட்சமான இலுப்பையும், விநாயகரும் காட்சி தருகின்றனர்.
தெற்கு பிரகாரத்தில் பீமன் பூஜித்த மகதீசுவரர் சன்னிதியும், நகுலன் பூஜித்த பரமேசுவரர் சன்னிதியும், தென்கிழக்கு மூலையில் திரவுபதி பூஜித்த வலம்புரி விநாயகர் சன்னிதியும், மேற்கு பிரகாரத்தில் கிழக்கு பார்த்தவாறு அமுதகரவள்ளி அம்பாள் சன்னிதியும், அவரது சன்னிதியின் இடதுபுறத்தில் வள்ளி தெய்வானை உடனுறை முருகப்பெருமானும், அடுத்து மகாலட்சுமி சன்னிதியும் அமைந்துள்ளது. அமுதகரவள்ளி அம்பாள் சன்னிதி சுவாமி சன்னிதியின் பின்புறம் இடம்பெற்றுள்ளது. வடகிழக்கு மூலையில் யாகசாலை மண்டபமும், தொடர்ந்து மதில் சுவரில் பைரவர், சூரியன், சனி ஆகிய மூவரையும் உள்ளடக்கிய சன்னிதியும் அமைந்துள்ளது.
பிரகாரத்தில் இருந்து ஐந்து அடி உயரத்தில் ஆலயத்தின் எஞ்சிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன. அதற்கான படிகள் வழியேச் செல்ல நேரெதிரில் தருமனால் பூஜிக்கப்பட்டவரும், ஆலகால விஷத்தை உண்டவருமான நீலகண்டேசுவரர் காட்சி தருகிறார். மூலவர் சன்னிதிக்கு இடதுபுறத்தில் ஆலயகிணறு அமைந்துள்ளது. அதனையொட்டி சகாதேவன் பூஜித்த முக்தீசுவரர் சன்னிதி தென்முகமாக இருக்கிறது. சாஸ்திரம், ஜோதிடம் கற்பவர்கள் இவரை வழிபட்டால் நலம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த சன்னிதிக்கு முன்புறம் உள்ள மற்றொரு சிறிய சிவாலயத்தில் அர்ச்சுனன் பூஜித்த படிக்கரைநாதர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அவருக்கு நேரெதிரில் பலிபீடமும் நந்தியும் உள்ளன. சுவாமியின் இடது புறத்தில் மங்களநாயகி அம்பாள் தென்முகம் நோக்கியவாறு அருள்பாலிக்கிறார். படிக்கரைநாதர் சன்னிதி கோட்டத்தில் நடனவிநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், துர்க்கை ஆகியோரும், தனி சன்னிதியில் சண்டிகேசுவரரும் வீற்றிருக்கின்றனர். படிக்கரைநாதர் சன்னிதிக்கு வடபுறத்தில் சுப்பிரமணியர் சன்னிதி மண்டபத்துடன் அமைந்துள்ளது. அருணகிரியாரால் பாடப்பெற்ற முருகப்பெருமான் இவர்.
இத்தலத்தில் வேண்டிக்கொண்டால் சனியின் ஆதிக்கம் குறையும், பணியில் சிறப்பிடம் பெறலாம் என்ற நம்பிக்கை நிலவுகிறது. சித்திரை பவுர்ணமியில் 10 நாட்கள் பிரமோற்சவம் நடக்கிறது. சிவராத்திரி, நவராத்திரி, நடராஜர் அபிஷேகங்கள், சஷ்டி, திருக்கார்த்திகை முதலான உற்சவங்கள் நடைபெறுகின்றன. தினசரி நான்குகால பூஜைகள் நடைபெறும் இவ்வாலயம், தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம்
வைத்தீசுவரன்கோவில் - திருப்பனந்தாள் பேருந்து மார்க்கத்தில் மணல்மேட்டில் இருந்து வடக்கில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய ஊர்களில் இருந்து நேரடி பேருந்துகள் உள்ளன. ஆலயத்திற்குச் செல்ல பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.
நெய்வாசல் நெடுஞ்செழியன்

குரு பரிகாரத் தலமாக விளங்குவது ஆலங்குடியில் உள்ள ஏலவார்குழலி அம்மை உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
குருபார்வை பட்டால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஜோதிட வாக்கு. குருவின் திருவருளால் திருமணம் கைகூடும், காரியத்தடை நீங்கி இருண்ட வாழ்வில் ஒளி கிடைக்கும் என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
அப்படிப்பட்ட குரு பரிகாரத் தலமாக விளங்குவது ஆலங்குடியில் உள்ள ஏலவார்குழலி அம்மை உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில். இங்கே தென்திசை நோக்கி அமர்ந்தருளும் தட்சிணாமூர்த்தி தான், சிறப்பு மூர்த்தியாக போற்றப்படுகிறார்.
இத்தகு பெருமைமிகு தலம் செல்லுவோர், அதனருகில் திகழும் திருமாலின் திருத்தலத்திற்கும் சென்று வழிபட்டால், அனைத்து நற்பலன்களும் விரைவில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆம்.. நீடாமங்கலம் - குடந்தை சாலையில் ஆலங்குடி பஸ் நிறுத்தம் அருகிலேயே மரச்சோலைகளுக்கு நடுவில் அமைந்திருக்கிறது அபயவரதர் திருக்கோவில்.
கோபுரம் இல்லாத வாசலைத் தாண்டி உள்ளே நுழைந்தால் தகதகவென்று மின்னும் இருபது அடி உயரமுள்ள கொடிமரமும், அருகே பலிபீடமும் உள்ளன. கடந்து சென்றால் கருடன் மூலவரைப் பார்த்து தொழுதபடி நிற்கிறார்.
சுவாமி சன்னிதி வாசலின் வலப்புறம், விநாயகர் ‘தும்பிக்கை ஆழ்வார்’ என்ற பெயரில் நமது தோப்புக்கரண சேவையை ஏற்றுக்கொள்கிறார். இன்னொருபுறம் நாகர் நிற்கிறார்.
கருவறைக்குள் ஏழடி உயரத்தில் காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவரும்படி கம்பீரமாக கருத்த திருமேனியுடன் காக்கும் கடவுளான பெருமாளின் திருக்காட்சி நம்மை சிலிர்க்கச்செய்கிறது.
இடதுகரத்தை இடையில் வைத்தபடி, வலது கரத்தை உயர்த்தி அபயம் அளித்து அபயவரதராஜப் பெருமாள் என்ற திருநாமத்துடன் திகழ்கிறார். மேல் இடக்கரத்தில் வலம்புரிச்சங்கும், மேல் வலக்கரத்தில் சக்கரப்படையையும் ஏந்தியுள்ளார். இந்த சக்கரம் இங்கே சுழன்று பிரயோகிக்கும் நிலையில் இருப்பது தனிச்சிறப்பு. சுவாமியின் இருபுறமும் ஸ்ரீதேவியும் - பூதேவியும் அழகுடன் அருட்காட்சி நல்குகின்றனர்.
பேரொளிப்பெருமாள்
ஒரு யுகத்தில் திருமால் - திருமகள் திருமணம் இங்கே நடைபெற்றது. அத்திருக்காட்சியைக் காண தேவரெல்லாம் கூடியிருந்தனர். ஆனால் இரு தேவதைகள் மட்டும் சேர்ந்து வரத்தயங்கினர். அவர்கள் சூரியனும், சந்திரனும் ஆவர்.
திருமால் அவர்களைக் காரணம் கேட்க, சூரிய சந்திரர்கள் ஒன்றாக இணைந்தால் அன்று அமாவாசை தினமல்லவா. எனவே பெருமாள் தனது திருமேனியில் இருந்து கோடி பிரகாசத்தை வெளியிட்டு எங்கும் ஒளிமயமாக்கினார். அதனால் சூரிய - சந்திரர்கள் தரிசனத்துக்கு ஒன்றாக வந்தனர் என்கிறது தலபுராணம்.
இதைச் சித்தரிக்கும் வகையில் மூலவரின் விமானத்துக்கு வலதுபுறமுள்ள தனிச் சன்னிதியில் பேரழகுடன் திகழும் பெருந்தேவித் தாயாரின் கருவறையில், சூரிய சந்திரர்கள் ஒன்றாக காட்சி தருகின்றனர்.
சுவாமி சன்னிதி முன்புள்ள அர்த்த மண்டபத்தில் தெற்கு திசை பார்த்த வண்ணம் லட்சுமி தேவியுடன் நரசிம்மர் தோற்றமளிக்கிறார். இதிலும் மற்ற ஆலயங்களில் இல்லாத ஒரு தனிச்சிறப்பு உள்ளது. எல்லா இடங்களிலும் நரசிம்மரின் இடதுபுறத்தில் அமர்ந்து காட்சிதரும் லட்சுமி தேவியை, இங்கு சுவாமி வலதுபுறத்தில் அமர்த்தி கைகளால் அணைத்தபடி காட்சி தருவது வேறெங்கும் காணமுடியாதது.
கணவரின் வலப்புறம் மனைவி இருப்பது திருமணமான கோலத்தைக் காட்டுவதாகக் கொள்வது நமது நடைமுறை. எனவே இவர் ‘கல்யாண லட்சுமி நரசிம்மர்’ என்று போற்றப்படுகிறார்.
திருமணத் தடை நீக்கி மணவாழ்க்கை அமைத்துக் கொடுப்பதாக நம்பிக்கையுடன் இவரைச் சேவிக்கிறார்கள்.
நரசிம்ம மூர்த்திக்கு உகந்த பிரதோஷ காலம், சுவாதி நட்சத்திரம் அல்லது தங்களது ஜென்ம நட்சத்திரத்தில் கல்யாண நரசிம்மரை வழிபட்டால் நல்வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.
கோவில் வளாகத்தில் வலதுபுறத்தில் தனிக்கோவிலில் மேற்கு பார்த்தபடி பதினாறு கரங்களுடன் சக்கரத்தாழ்வார் சுதர்சனராக அருள் வழங்குகிறார். அவருக்குப் பின்புறம் யோகநரசிம்மர் வீற்றிருக்கிறார்.
இவர்கள் தங்கள் பக்தர்களின் பகை, ஏவல், கண்ணேறு போன்ற தீவினைகள் தீர அருள்பாலிக்கிறார்கள்.
சுதர்சன சன்னிதிக்கு எதிரேதான் தல நாயகியான பெருந்தேவித் தாயார் கோவில் கொண்டுள்ளார். இரண்டுக்கும் நடுவே தல விருட்சமான பலாமரம் உள்ளது. கோவிலின் வடபுறம் தல தீர்த்தம் லட்சுமி தீர்த்தமாக விளங்குகிறது.
தெற்கு பார்த்த கோவிலில் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பது விசேஷமாகச் சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவர் சென்று சிதையைக் கண்டு தூதுரைத்து எரியூட்டிய இலங்கைத் தீவு தென்திசையில் தானே இருக்கிறது.
சோழர் காலத்தில் நிறுவப்பட்டு திருப்பணிகள் நடத்தப்பட்ட அபய வரதராஜப் பெருமாள் ஆலயம் அறநிலையத் துறையின் கீழ் குரு ஸ்தலத்துடன் இணைந்த கோவிலாகும்.
இந்த ஆலயம் தினசரி காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலங்குடி குருபகவானைத் தரிசிக்கச் செல்பவர்கள் அருகே நடக்கும் தூரத்தில் உள்ள அபயவரதரையும் சேவித்தால் இருமடங்கு பலன்கள் கிடைக்குமல்லவா.
டாக்டர் ச.தமிழரசன்
மண்ணச்சநல்லூரில் உள்ளது பூமிநாதர் கோவில். இந்த கோவில் இறைவன் பூமிநாதசுவாமி என்று அழைக்கப்படுகிறார். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
வாஸ்து தோஷங்களை நீக்கும் சக்திவாய்ந்தவராக, மண்ணச்சநல்லூரில் உள்ள பூமிநாதர் கோவிலில் அருளும் பூமிநாதசுவாமி இருக்கிறார். இந்த ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்ததும் கொடிமர விநாயகரும், நந்தியும் அருள்கின்றனர். அடுத்து கொடிமரம், நந்தி, பலிபீடம் காணப்படுகிறது.
கொடிமர மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்கள் உள்ளன. இங்கு சூரியன் நடுநாயகமாக இருக்க, மற்ற கிரகங்கள் சூரியனைப் பார்த்த நிலையில் வீற்றிருக்கின்றன. தவிர ராகு - கேது கிரகங்கள் முழு மனித உருவத்தில் இங்கு அருள்பாலிப்பது அபூர்வ அமைப்பாகக் கருதப்படுகிறது. மகாமண்டப நுழைவு வாசலில் இடது புறம் விநாயகரும், வலது புறம் முருகனும் அருள்கிறார்கள்.
அதைத் தாண்டி உள்ளே சென்றால் வலதுபுறம் அன்னை தர்மசம்வர்த்தினி, தனிச் சன்னிதியில் அருள்கிறார். நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி இருக்கும் இந்த அன்னையின் முன்பு, மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மகா மண்டப கிழக்கு திசையில் சூரிய- சந்திரர்கள் உள்ளனர். அர்த்த மண்டபத்தை தொடர்ந்து உள்ள கருவறையில் இறைவன் பூமிநாதசுவாமி, லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். சாபம் பெற்ற இந்திரன், இத்தல இறைவனை ஆராதித்து பாவ விமோசனம் பெற்றான். 16 வித தோஷங்களை இத்தல இறைவன் நீக்குவதாக, அகத்தியர் தனது ஓலைச்சுவடியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆலயத்தின் தல விருட்சம் இரண்டு. ஒன்று வில்வம், மற்றொன்று வன்னி மரம். இவை ஆலய கிழக்கு பிரகாரத்தில் உள்ளன. மார்கழி முதல் ஞாயிறு அன்று இத் தலத்தில் மகா ருத்ர யாகம் நடை பெறுகிறது. இந்த யாகத்தில் 1008 மூலிகைகள், பலவித தானியங்கள் இடப்படுகிறது. இந்த யாகத்தின் சாம்பல், வன்னி மரத்தடியில் கொட்டப்படுகிறது.
வாஸ்து சம்பந்தமாக அனைத்து தோஷங்களையும் நிவர்த்தி செய்யக் கூடியவராக இத்தல இறைவன் பூமிநாத சுவாமி விளங்குகிறார். தோஷம் விலக சில வரைமுறைகள் இங்கு கடைப்பிடிக்கப்படுகின்றன.
வீடுகட்ட விரும்புவோர், தன் வீட்டில் உள்ள வாஸ்து தோஷம் நீங்க வேண்டும் என நினைப்பவர்கள், வீட்டின் அல்லது மனையின் வடகிழக்கு மூலையில் மூன்று பிடி மண் எடுத்து, அதை மஞ்சள் துணியில் கட்டி ஆலயம் கொண்டு வருகின்றனர். அந்த மண் அர்ச்சனை தட்டில் பூ, பழங்கள், மாலையுடன் வைத்து, இறைவனுக்கு அர்ச்சிக்கப்படுகிறது.
அர்ச்சனை முடிந்தபின் ஆலயத்தை வலம் வர வேண்டும். முதல் சுற்றின்போது, மண்ணில் ஒரு பிடியை ஆலய தல விருட்சமான வில்வ மரத்தடியில் போட வேண்டும். இரண்டாம் சுற்றின்போது, மற்றொரு பிடி மண்ணை வன்னி மரத்தடியில் போடுகிறார்கள். அப்போது மகா ருத்ர யாகம் செய்த சாம்பலில் ஒரு பிடி எடுத்து தங்கள் கையில் இருக்கும் துணி முடிப்பில், எஞ்சிய ஒரு பிடி மண்ணோடு சேர்த்து வைத்துக் கொள்கின்றனர்.
மூன்றாவது முறை ஆலயத்தை வலம் வந்து நவக்கிரக நாயகர்களை வழிபடுகிறார்கள். வீட்டிற்கு வந்ததும், மண்ணோடு கலந்த சாம்பலை வீட்டின் பூஜை அறையில் வைத்து விடுகிறார்கள். 5 நாட்களுக்குப் பின்னர், அதில் பாதியை எடுத்து மண் எடுக்கப்பட்ட இடத்தில் போட வேண்டுமாம். அப்படி செய்தால் மூன்று மாதங்களுக்குள் நினைத்தது நடக்கும் என்கிறார்கள்.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
திருச்சியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மண்ணச்சநல்லூரில் சாலை அருகில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
ஜெயவண்ணன்

சிவபெருமானின் திருப்பாதம் பதிந்த பெரும் புனிதமான புராதனமான திருத்தலம், திருவெண்ணெய்நல்லூர். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சிவபெருமானின் திருப்பாதம் பதிந்த பெரும் புனிதமான புராதனமான திருத்தலம், திருவெண்ணெய்நல்லூர்.
ஒருமுறை திருக்கயிலாயத்தில், பளிங்கு போல் காட்சியளித்த பனிப்படலத்தில் தன் கண்களைத் திறந்து நோக்கினார், சிவபெருமான். அதில் அவரது பிம்பம் தெரிந்தது. தன் எதிரில் பிரதிபலித்த அந்த பிம்பத்தின் அழகில் மயங்கிய ஈசன், அதை நோக்கி "சுந்தரா வா" என்றார். உடனே அந்த பிம்பம் உயிர் பெற்று, சிவபெருமானை நோக்கி வந்தது. அவருக்கு சுந்தரர் என்று பெயரிட்டு, அணுக்கத் தொண்டராய் அருகில் அமர்த்திக் கொண்டார் சிவன்.
திருப்பாற்கடல் கடைந்தபோது, அதில் இருந்து வெளிப்பட்ட ஆலகால விஷத்தை, பந்து போல உருட்டி சிவபெருமானிடம் கொண்டு வந்து கொடுத்தவர், சுந்தரர்தான். அதனால்தான் அவரது பெயர் 'ஆலால சுந்தரர்' என்றானது.
சிவபெருமான் சாப்பிட்ட விஷம் அவரது கழுத்தில் நின்றது. அது வெம்மையை தராமல் இருக்க, பெண்ணை ஆற்றின் கரையில் பசுவின் வெண்ணெயால் கோட்டை அமைத்து, அதனுள் பஞ்சாக்கினி வளர்த்து, அதன் நடுவில் தவம் இயற்றினார். அந்த திருத்தலமே 'திருவெண்ணெய் நல்லூர்' என்றானது.
ஒருநாள் சிவபூஜைக்காக பூப்பறிக்க, கயிலையில் இருந்த நந்தவனத்திற்கு சென்றார் சுந்தரர். அப்போது அங்கே பார்வதியின் தோழியர்களான கமிலினி, அனிந்ததை ஆகியோர் மீது சுந்தரருக்கு ஈர்ப்பு உண்டானது. இதனை அறிந்த ஈசன், தம் அடியவர்களான ஆலால சுந்தரர், கமிலினி, அனிந்ததை ஆகிய மூவரையும் பூலோகத்தில் பிறப்பெடுத்து காதல் வாழ்வை வாழ்ந்து, பின்னர் திருக்கயிலாயம் வந்தடையும்படி அருளினார்.
உடனே சுந்தரர் ஈசனை வேண்டி, "தன்னை பூலோகத்தில் தக்கச் சமயத்தில் தடுத்தாட்கொள்ள வேண்டும்" என்று வேண்டினார். ஈசனும் அதற்கு இசைந்தார்.
இதையடுத்து திருநாவலூரில் சடையனார் - இசைஞானியார் தம்பதிகளுக்கு ஆதிசைவ மரபில் நம்பிஆரூரர் எனும் திருநாமத்தில் சுந்தரர் பிறந்தார். சிறு வயதில் சுந்தரரை பார்த்த, அந்தப் பகுதி மன்னனான நரசிங்கமுனையர், அவரை தன்னுடைய அரண்மனையிலேயே வளர்த்து வந்தார். சுந்தரருக்கு 16 வயதான போது, புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை அவருக்கு மணம் செய்து வைக்க பேசி முடித்தனர்.
சுந்தரருக்கு கொடுத்த வாக்கின்படி, அவரை தடுத்தாட்கொள்ள வேண்டிய தருணம் சிவபெருமானுக்கு வந்தது. அதன்படி திருமணம் நடைபெற இருந்த இடத்திற்கு ஓர் அந்தணக் கிழவராக உருவெடுத்து வந்தார் சிவபெருமான்.
அங்கு கூடியிருந்தவர்கள் முன்னிலையில் நம்பி ஆரூரரை காட்டி, "இவன் என் அடிமை. இவனை என்னோடு அனுப்புங்கள். மணம் செய்து வைக்காதீர்கள். இவன் பாட்டன் எழுதிக் கொடுத்த ஓலையில், அவனும், அவனது வழிவழி சந்ததியினரும் இந்த திருவெண்ணெய் நல்லூர் அந்தணனுக்கு அடிமை" என்று கூறியதோடு, அதற்கான ஓலையையும் காட்டினார்.
அதைக் கேட்ட சுந்தரர், "உமக்கு என்ன பித்து பிடித்திருக்கிறதா?" என்று கேட்டவாறே, முதியவரின் கையில் இருந்த அடிமை ஓலையை பிடுங்கி, படித்துக்கூட பார்க்காமல் கிழித்து எறிந்தார்.
முதியவருக்கும், சுந்தரருக்கும் வழக்கு மூண்டது. "இங்கே எனக்கு நீதி கிடைக்காது. எனது ஊரான திருவெண்ணெய் நல்லூருக்குச் செல்வோம். அங்கு வழக்காடு மன்றத்தில் மறையோர்கள் முன்னிலையில் உண்மையை நிரூபிக்கிறேன்" என்று கூறி சுந்தரரை தன்னுடன் அழைத்துச் சென்றார் முதியவர்.
சுந்தரரோ, "அப்படியோர் வழக்கு இருக்குமெனில், அதை முடித்த பின்னரே இங்கு வந்து மணம் முடிப்பேன்" எனச் சபதம் இட்டு முதியவருடன் சென்றார்.
பின்னர் வழக்கு திருவெண்ணெய்நல்லூரில் மறையவர்கள் முன்னிலையில் நடந்தது. அப்போது சுந்தரரின் பாட்டனார் கையெழுத்திட்ட பழைய ஓலைச் சுவடிகளை கொண்டுவந்து சரிபார்த்தனர். முதியவர் காண்பித்த அடிமை ஓலைச் சுவடியில் உள்ள சுந்தரரின் பாட்டனார் கையெழுத்தும், இதுவும் பொருந்திப்போயின. எனவே அங்கிருந்த மறையவர்கள், சுந்தரரை அந்த முதியவருக்கு அடிமை என தீர்ப்பளித்தனர்.
இதனால் வழியின்றி அந்த முதியவருடன் சென்றார், சுந்தரர். வழியில், "ஐயா.. என்னை எங்கு அழைத்துச் செல்கிறீர்? உமது வீடு எங்கு இருக்கிறது?" என வினவினார்.
உடனே அந்த முதியவர், "அன்பனே! நமது வீடு அதோ இருக்கிறது" என திருவெண்ணெய்நல்லூர் ஆலய அருட்துறையை கைகாட்டி அழைத்துச் சென்றார்.
சுந்தரருக்கு ஒன்றும் புரியவில்லை. "ஐயா.. அங்கே தெரிவது திருவெண்ணெய்நல்லூர் ஆலயம் அல்லவா? நான் கேட்டது, உமது வீடு எங்கிருக்கிறது என்றுதானே" என்றார் சுந்தரர்.
முதியவர் வேடத்தில் வந்த சிவபெருமான் மீண்டும் திருவெண்ணெய்நல்லூர் ஆலய அருட் துறையை கைகாட்டி, சுந்தரரை ஆலயக் கருவறைக்குள் கைப்பிடித்து அழைத்துச் சென்றார். அங்கு சிவலிங்கத்திற்கு முன்பாக தமது பாதக் குறடுகளைக் கழற்றி விட்டுவிட்டு, சிவலிங்கத்திற்குள் சென்று மறைந்தார், முதியவர்.
சுந்தரர் திகைப்பில் ஆழ்ந்து போனார். அப்போது கருவறைக்குள் இருந்து சிவபெருமான் தோன்றி, சுந்தரரின் முற்பிறவியையும், இப்போதைய பிறவியையும் பற்றி விளக்கிவிட்டு மறைந்தார்.
இதையடுத்து சிவபெருமானின் மீது, 'பித்தா பிறை சூடி.." தன்னுடைய முதல் பதிகத்தை பாடினார் சுந்தரர்.
சுந்தரருடன் பஞ்சாயத்துச் சபையில் ஈசன் வழக்காடிய மண்டபம் இன்றும் திருவெண்ணெய்நல்லூரில் உள்ளது. தீராத வழக்குகளில் வெற்றி கண்டிட இத்தல வழிபாடு பெரிதும் கைகொடுக்கும் என் கிறார்கள். சடையப்ப வள்ளல், கவிச்சக்கரவர்த்தி கம்பரை ஆதரித்துப் போற்றிய பவித்திரமான புண்ணியபூமி இதுவாகும். சந்தான குரவரான மெய்கண்டார், 'சிவஞான போதம்' அருளிய திருத்தலமும் இதுதான். மெய்கண்டாருக்கு அவரது ஐந்தாம் வயதில் ஞான உபதேசம் செய்த பொல்லாப் பிள்ளையார் இங்கு அருள்கிறார்.
இத்தல மங்களாம்பிகை அம்மன் சன்னிதியில் வழிபட செல்வம், வீடு, வாசல், கல்வி, நன்மக்கட்பேறு, நீண்ட ஆயுள் அனைத்தும் கிடைக்கும். இங்கு அம்பாள் சன்னிதியில் ஸ்ரீசக்கரம், சங்கநிதி, பதுமநிதி அமைந்துள்ளது சிறப்பாகும். அறுபத்து மூவர், சப்தகன்னியர் சன்னிதிகளும் உள்ளன.
இத்தல ஈசனின் திருநாமம் 'கிருபாபுரீஸ்வரர்' என்பதாகும். சுந்தரரை தடுத்தாட்கொள்ள ஈசன் வந்தபோது அணிந்திருந்த பாதக்குறடுகள் இன்றும் இங்கு உள்ளது. இத்தல இறைவனுக்கு 'தடுத்தாட்கொண்ட நாதர்' என்ற பெயரும் உண்டு.
வழிபாட்டு பலன்
இத்தல ஈசனின் சன்னிதியில் 11 திங்கட்கிழமைகள் கருவறை தீபத்தில் பசுநெய் சேர்த்து வந்தால், நம்முடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். இங்குள்ள ஈசனின் பாதக்குறடுகளுக்கு வில்வார்ச்சனை செய்து வழிபட வேண்டும் என்றும் சொல் கிறார்கள். இத்தல ஈசனை அர்ச்சுனன், இந்திரன், திருமால் வழிபட்டுள்ளனர். விஜயலிங்கம் என்ற பெயரில் அர்ச்சுனன் வழிபட்ட லிங்கமும், சுந்தர லிங்கம் எனும் பெயரில் இந்திரன் வழிபட்ட லிங்கமும் இங்குள்ளது. திருமால் வழிபட்ட லிங்கத்திற்கு, 'சங்கரலிங்கம்' என்று பெயர். நவக்கிரகங்கள் வழிபட்ட ஜோதிலிங்கமும் காணப்படுகிறது.
இத்தல பலிபீடத்தின் நேர் உயரத்தில், சுந்தரருக்கு ஈசன் ரிஷபாரூடராகக் காட்சிகொடுத்த விமானக் கோவில் உள்ளது. அதற்கு எதிரில் கீழே கையில் ஓலைச்சுவடியுடன் சுந்தரர் உள்ளார். ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தில் சுந்தரர் குருபூஜை விழா இங்கு இரண்டு நாட்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். விழா நாளில் சுந்தரரின் திருமண உற்சவம், ஈசன் சுந்தரரின் திருமணத்தை தடுத்தாட்கொண்டது, அவிநாசியில் முதலை உண்ட பாலகனை மீட்டது, சுந்தரருக்கு ஈசன் காட்சி கொடுத்தது, திருக்கயிலாயம் செல்லுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.
மகாசிவராத்திரி அன்று இத்தலத்தில் நடைபெறும் திருமுறை பாராயணம் சிறப்பானது. மகாசிவராத்திரி நாளில் விரதமிருந்து இத்தலத்தில் தங்கியிருந்து ஈசனை மனமுருகி வழிபட்டால் வாழ்வில் தீவினைகள் அகன்று நல்லனவெல்லாம் வந்தடையும். சிவராத்திரி அன்று நள்ளிரவில் இத்தல மூலவர் கருவறைச் சுற்றின் பின்புறமுள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது.
அமைவிடம்
விழுப்புரத்தில் இருந்து அரசூர் செல்லும் வழியில் 19 கிலோமீட்டர் தூரத்தில் திருவெண்ணெய்நல்லூர் அமைந்துள்ளது. இத்தலத்தின் அருகில் அப்பரின் பாடல்பெற்ற திருத்தலமான திருமுண்டீஸ்வரம் சிவலோகநாதர் திருக்கோவிலும் அமைந்துள்ளது.