என் மலர்
கோவில்கள்
மதுரையில் இருந்து 7 கி.மீ. தொலைவில் சிவகங்கை ரிங்ரோட்டில் பாண்டி முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் அறிந்து கொள்ளலாம்.
மதுரையில் இருந்து 7 கி.மீ. தொலைவில் சிவகங்கை ரிங்ரோட்டில் பாண்டி முனீஸ்வரர் கோவில் உள்ளது. இது 200 ஆண்டுகளுக்கும் முந்தைய வழிபாட்டு பெருமைக்கு உரிய தலம். 39 சென்ட் இடத்தில் சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த இயற்கை அழகில் மதுரையின் காவல் தெய்வமாக ‘பாண்டி முனீஸ்வரர்’ வீற்றிருக்கிறார்.
பாண்டி கோவில்
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனே பாண்டி முனீசுவரராக குடிகொண்டு உள்ளதாக கூறப்படுகிறது. இங்கு முன்பு மதுரை மாநகரம் இருந்தது என்கின்றனர். இதனை மெய்ப்பிக்கும் வகையில் கோவிலைச் சுற்றிய வயல்வெளி வரப்புகளில் பெரிய, பெரிய செங்கற்களைக் கொண்ட கோட்டைச் சுவர்கள், மதில்கள் இன்றும் உள்ளன. மன்னர் அரண்மனை பகுதியும் இப்பகுதியில் இருந்ததற்கான தொல்லியல் கூற்றுகளும் உண்டு. அதனால் இவரை ‘பழமதுரை பாண்டீஸ்வரர்’ என்று அழைக்கின்றனர்.
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் இங்கு பாண்டி முனீஸ்வரராக கோவில் கொண்டது எப்படி?
தல வரலாறு
இதன் உட்பொருளை தவறாகப் புரிந்து கொண்ட கோவலன், மாதவியை பிரிந்து, கண்ணகியிடம் மீண்டான். அதன் பிறகு கோவலன் வணிகம் செய்யும் பொருட்டு கண்ணகியுடன் மதுரைக்கு சென்றான்.
அங்கு கண்ணகியின் சிலம்பை விற்று வர வேண்டி, கோவலன் மதுரை கடைவீதிக்கு சென்றான். அப்போது பாண்டிமாதேவியின் காற்சிலம்பை திருடிய பொற் கொல்லன், கோவ லன் மேல் பொய்ப் பழி சுமத்தினான். அதனை மன்னன் நம்ப, கோவலன் கொலை செய்யப்படுகிறான்.
இந்த நிலையில் கணவன் கொல்லப்பட்ட செய்தி அறிந்ததும் கண்ணகி நேராக அரண்மனைக்கு சென்றாள். மன்னனிடம் நியாயம் கேட்டாள். அப்போது, “கள்வனை கொலை செய்வது கொடுங்கோல் அல்ல, அதுவே அரச நீதி” என்று மன்னன் கூறினான். அதற்கு கண்ணகி “என் கணவர் விற்பதற்காக எடுத்து வந்திருந்த கால்சிலம்பு, மாணிக்க பரல்களை உடையது” என்றாள். அதற்கு அரசன் “என் மனைவி கால்சிலம்பில் முத்து பரல்கள் உள்ளன” என்றான். இதனை தொடர்ந்து கோவலனிடம் கைப்பற்றிய சிலம்பு உடைக்கப்பட்டது. அப்போது அதில் மாணிக்கப்பரல்கள் இருந்தன.
இதனை கண்டு அதிர்ந்த பாண்டிய மன்னன் “பொன் தொழில் செய்யும் கொல்லனின் பொய்யுரை கேட்டு, அறநெறி தவறிய நான் அரசன் அல்ல, நானே கள்வன். என் வாழ்நாள் அழியட்டும்” என்றபடி மயங்கி விழுந்து இறந்தான். அதன்பிறகு பாண்டிய மன்னனின் ஆத்மா, சிவபெருமானிடம் சென்றது. அப்போது, “நீதிக்காக உயிரை நீத்த நீ மீண்டும் மானிடப் பிறவி எடுத்து உன் பிறவிக்கடன் தீர்ப்பாய்” என்று சிவபெருமான் ஆசீர்வதித்தார்.
மானகிரி மைந்தன்
இதனை கேட்ட பாண்டிய நெடுஞ்செழியன், ‘எனக்கு மீண்டும் மானிட பிறவி வேண்டாம். என்னை பூஜித்து மானிடர்கள் வழிபடட்டும். நான் அவர்களை காத்து அருளும் பொருட்டு, எனக்கு தீய சக்திகளை வெல்லும் வரம், தீயவர்களை கொல்லும் வரம், நம்பியவர்களுக்கு அருள்புரியும் வரம் வேண்டும்’ என்று கேட்டார். அதற்கு சிவபெருமான், ‘அப்படியே ஆகட்டும்’ என்று ஆசி கூறினார். அதன் பிறகு மதுரை மானகிரி கிராமத்தில் இறைவனை நோக்கி தவம் இருந்த பாண்டிய நெடுஞ்செழியன், அப்படியே கல்லாக மாறி பூமிக்குள் மறைந்தார்.
இந்த நிலையில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளியம்மாள்- பெரியசாமி தம் பதியர் கரூரில் இருந்து பஞ்சம் பிழைப்பதற்காக மதுரைக்கு வந்தனர். வழியில் இருட்டி விட்டதால், மாட்டுத்தாவணி அருகே உள்ள மானகிரியில் தங்கினர். அப்போது வள்ளியம்மாள் கனவில் முனிவர் தோன்றி, “நான் மதுரையை ஆண்ட பாண்டிய நெடுஞ்செழியன். கண்ணகியின் கணவன் கோவலனுக்கு அநீதி இழைத்த பாவத்துக்காக மறுபிறவி எடுத்து உள்ளேன். அந்த பாவத்தின் நிவர்த்திக்காக இதே இடத்தில் ஈசனை நோக்கி 8 அடி மண் ணுக்குள் தியானம் செய்து வருகிறேன், என்னை மீட்டு எடுத்து வழிபட்டால், அன்னாரின் குடும்பத்தை சீரும் சிறப்பு மாக வாழ வைப் பேன்” என்று கூறி மறைந்தார்.
அடுத்த நாளே பனை ஓலையால் குடிசை அமைத்து, அங்கு பாண்டி முனீஸ்வரரை பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர்.
தற்போது கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மகா மண்டபம் கட்டப்பட்டு மிகப்பெரிய கோவிலில் அருள்பாலித்து வருகிறார். முனிவர் வேடத்தில் சிவன் இருந்ததால் முனீஸ்வரன் என்றும் பாண்டிய மன்னன் தான் முனீஸ்வரனாக இவ்விடம் வந்துள்ளேன் என்று அருள் வந்து ஆடிய பெரியசாமி கூறியதாலும் அன்று முதல் இக்கோயில் தெய்வம் பாண்டி முனீஸ்வரர் என்றழைக்கப்பட்டார். இங்கு உலகின் பிற காவல் தெய்வம் போல அல்லாமல், முனீசுவரர் பத்மாசனமிட்டு யோக நிலையில் கிழக்கு நோக்கி அமர்ந்து உள்ளார்.
இவர் குழந்தை இல்லாதோருக்கு மழலை வரம் தருவது முதல் பேய்& பிசாசு பிடித்தவருக்கு நிவர்த்தி தருதல் வரை, அத்தனை பிரார்த்தனைகளையும் நிறைவேற்றி வைக்கிறார். சிறப்புகள்: இங்கு பாண்டியமன்னன் நெடுஞ்செழியனே தர்ம முனீஸ்வரராக இருந்து ஆட்சி புரிகிறார். கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் மட்டுமின்றி அந்த வழியாக செல்லும் இறைநம்பிக்கையுள்ள பக்தர்களிடம் அதிக திருவிளையாடல்களை நடத்துவார்.
இப்போதும் நிறைய பக்தர்கள் இவரை நேரில் பார்த்து இருப்பதாக சொல்கிறார்கள். பெரும்பாலும் முதியவர் வேடத்தில் தான் பாண்டி முனீஸ்வரர் தோன்றுவதாக மக்கள் கூறுகின்றனர். துயரங்களோடு வரும் உண் மையான பக்தர்களுக்கு வெறும் சிலையாக மட்டும் இன்றி நேரில் வந்து பிரச்சினைகளை தீர்த்து வைப்பவர். இந்த கோவிலுக்கு வந்து முழுமனதோடு வழிபட்டு சென்றால் வெற்றிநிச்சயம். இந்த கோவிலுக்கு ஒருமுறை சென்று மன பாரங்களை கொட்டுங்கள். உங்கள் துயரங்களில் இருந்து நிச்சயம் பாண்டி முனீஸ்வரர் காப்பார்.
வழிபாடு
பாண்டி முனீஸ்வரர் கோவிலில் தினமும் காலை, மாலை இருவேளையும் பூஜை நடை பெறுகிறது. பூஜையின்போது எப்போதும் கூட்டம் அலைமோதும். பாண்டி முனீஸ் வரரை மதுரை மட்டுமல்லாது தேனி, விருதுநகர், திண்டுக்கல், கரூர், திருச்சி, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
இந்த கோவிலில் விநாயகர், சமய கருப்ப சாமி, ஆண்டிச்சாமி, சுப்பிரமணியருக்கு தனி சன்னதிகள் உள்ளன. பாண்டி முனீஸ்வரர் வெண்ணிற ஆடை சாத்தி, பால், மணமிகு தைலம், சந்தனம், ஜவ்வாது, பொங்கல் மற்றும் தேங்காய் பழம் போன்றவைகளை கொண்டு வந்து வழிபடுகின்றனர். இங்குள்ள சமய கருப்பசாமிக்கு ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டும் சாராயம், சுருட்டு போன்றவற்றை படைத்தும் வழிபடுகின்றனர்.
குழந்தை வரம் வேண்டுபவர்கள் தொட்டில் கட்டி முனீஸ்வரரிடம் வேண்டிக் கொள்வார்கள். கருணை உள்ளம் கொண்ட அவர் மழலைச்செல்வம் கொடுக்கிறார். பல்வேறு வேண்டுதல்களுக்கும் பக்தர்கள் கோவிலில் காணிக்கைகளாக செலுத்திய மணி அங்கு குவிந்து கிடப்பதை காணலாம்.
பாண்டி கோவில்
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனே பாண்டி முனீசுவரராக குடிகொண்டு உள்ளதாக கூறப்படுகிறது. இங்கு முன்பு மதுரை மாநகரம் இருந்தது என்கின்றனர். இதனை மெய்ப்பிக்கும் வகையில் கோவிலைச் சுற்றிய வயல்வெளி வரப்புகளில் பெரிய, பெரிய செங்கற்களைக் கொண்ட கோட்டைச் சுவர்கள், மதில்கள் இன்றும் உள்ளன. மன்னர் அரண்மனை பகுதியும் இப்பகுதியில் இருந்ததற்கான தொல்லியல் கூற்றுகளும் உண்டு. அதனால் இவரை ‘பழமதுரை பாண்டீஸ்வரர்’ என்று அழைக்கின்றனர்.
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் இங்கு பாண்டி முனீஸ்வரராக கோவில் கொண்டது எப்படி?
தல வரலாறு
காவிரிப் பூம்பட்டினத்தை சேர்ந்த கோவலன், கண்ணகியை மணந்து இன்ப மாக வாழ்ந்தான். இதற்கிடையே ஆடலரசி மாதவி மேல் மோகம் கொண்டு அங்கேயே தங்கினான். இதன் காரணமாக கோவலன், செல்வத்தை எல்லாம் இழந்தான். அப்போது ஒருதடவை மாதவி இந்திர விழாவில் கானல் வரி பாடலை பாடினாள்.
அங்கு கண்ணகியின் சிலம்பை விற்று வர வேண்டி, கோவலன் மதுரை கடைவீதிக்கு சென்றான். அப்போது பாண்டிமாதேவியின் காற்சிலம்பை திருடிய பொற் கொல்லன், கோவ லன் மேல் பொய்ப் பழி சுமத்தினான். அதனை மன்னன் நம்ப, கோவலன் கொலை செய்யப்படுகிறான்.
இந்த நிலையில் கணவன் கொல்லப்பட்ட செய்தி அறிந்ததும் கண்ணகி நேராக அரண்மனைக்கு சென்றாள். மன்னனிடம் நியாயம் கேட்டாள். அப்போது, “கள்வனை கொலை செய்வது கொடுங்கோல் அல்ல, அதுவே அரச நீதி” என்று மன்னன் கூறினான். அதற்கு கண்ணகி “என் கணவர் விற்பதற்காக எடுத்து வந்திருந்த கால்சிலம்பு, மாணிக்க பரல்களை உடையது” என்றாள். அதற்கு அரசன் “என் மனைவி கால்சிலம்பில் முத்து பரல்கள் உள்ளன” என்றான். இதனை தொடர்ந்து கோவலனிடம் கைப்பற்றிய சிலம்பு உடைக்கப்பட்டது. அப்போது அதில் மாணிக்கப்பரல்கள் இருந்தன.
இதனை கண்டு அதிர்ந்த பாண்டிய மன்னன் “பொன் தொழில் செய்யும் கொல்லனின் பொய்யுரை கேட்டு, அறநெறி தவறிய நான் அரசன் அல்ல, நானே கள்வன். என் வாழ்நாள் அழியட்டும்” என்றபடி மயங்கி விழுந்து இறந்தான். அதன்பிறகு பாண்டிய மன்னனின் ஆத்மா, சிவபெருமானிடம் சென்றது. அப்போது, “நீதிக்காக உயிரை நீத்த நீ மீண்டும் மானிடப் பிறவி எடுத்து உன் பிறவிக்கடன் தீர்ப்பாய்” என்று சிவபெருமான் ஆசீர்வதித்தார்.
மானகிரி மைந்தன்
இதனை கேட்ட பாண்டிய நெடுஞ்செழியன், ‘எனக்கு மீண்டும் மானிட பிறவி வேண்டாம். என்னை பூஜித்து மானிடர்கள் வழிபடட்டும். நான் அவர்களை காத்து அருளும் பொருட்டு, எனக்கு தீய சக்திகளை வெல்லும் வரம், தீயவர்களை கொல்லும் வரம், நம்பியவர்களுக்கு அருள்புரியும் வரம் வேண்டும்’ என்று கேட்டார். அதற்கு சிவபெருமான், ‘அப்படியே ஆகட்டும்’ என்று ஆசி கூறினார். அதன் பிறகு மதுரை மானகிரி கிராமத்தில் இறைவனை நோக்கி தவம் இருந்த பாண்டிய நெடுஞ்செழியன், அப்படியே கல்லாக மாறி பூமிக்குள் மறைந்தார்.
இந்த நிலையில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளியம்மாள்- பெரியசாமி தம் பதியர் கரூரில் இருந்து பஞ்சம் பிழைப்பதற்காக மதுரைக்கு வந்தனர். வழியில் இருட்டி விட்டதால், மாட்டுத்தாவணி அருகே உள்ள மானகிரியில் தங்கினர். அப்போது வள்ளியம்மாள் கனவில் முனிவர் தோன்றி, “நான் மதுரையை ஆண்ட பாண்டிய நெடுஞ்செழியன். கண்ணகியின் கணவன் கோவலனுக்கு அநீதி இழைத்த பாவத்துக்காக மறுபிறவி எடுத்து உள்ளேன். அந்த பாவத்தின் நிவர்த்திக்காக இதே இடத்தில் ஈசனை நோக்கி 8 அடி மண் ணுக்குள் தியானம் செய்து வருகிறேன், என்னை மீட்டு எடுத்து வழிபட்டால், அன்னாரின் குடும்பத்தை சீரும் சிறப்பு மாக வாழ வைப் பேன்” என்று கூறி மறைந்தார்.
அதன் அடிப்படையில் ஊர்ப்பெரியவர்கள் ஒன்று கூடி வள்ளியம்மாள் கனவில் சாமி சொன்ன இடத்தைத் தோண்டியபோது, அங்கே மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை, அடர்ந்து நீண்ட ஜடாமுடியோடு சுவாமி சிலை சம்மணம் இட்ட தவக்கோலத்தில் கிடைத்தது. அந்த சிலையை வெளியே எடுத்து வைத்து கும்பிடத் தொடங்கினார் கள். அப்போது பாண்டி முனீஸ்வரர் ஒருதடவை நேரில் காட்சி தந்து, ‘நான் வெயிலில் காய்கிறேன். மழையில் நனைகிறேன்’ என்று கூறினார்.
தற்போது கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மகா மண்டபம் கட்டப்பட்டு மிகப்பெரிய கோவிலில் அருள்பாலித்து வருகிறார். முனிவர் வேடத்தில் சிவன் இருந்ததால் முனீஸ்வரன் என்றும் பாண்டிய மன்னன் தான் முனீஸ்வரனாக இவ்விடம் வந்துள்ளேன் என்று அருள் வந்து ஆடிய பெரியசாமி கூறியதாலும் அன்று முதல் இக்கோயில் தெய்வம் பாண்டி முனீஸ்வரர் என்றழைக்கப்பட்டார். இங்கு உலகின் பிற காவல் தெய்வம் போல அல்லாமல், முனீசுவரர் பத்மாசனமிட்டு யோக நிலையில் கிழக்கு நோக்கி அமர்ந்து உள்ளார்.
இவர் குழந்தை இல்லாதோருக்கு மழலை வரம் தருவது முதல் பேய்& பிசாசு பிடித்தவருக்கு நிவர்த்தி தருதல் வரை, அத்தனை பிரார்த்தனைகளையும் நிறைவேற்றி வைக்கிறார். சிறப்புகள்: இங்கு பாண்டியமன்னன் நெடுஞ்செழியனே தர்ம முனீஸ்வரராக இருந்து ஆட்சி புரிகிறார். கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் மட்டுமின்றி அந்த வழியாக செல்லும் இறைநம்பிக்கையுள்ள பக்தர்களிடம் அதிக திருவிளையாடல்களை நடத்துவார்.
இப்போதும் நிறைய பக்தர்கள் இவரை நேரில் பார்த்து இருப்பதாக சொல்கிறார்கள். பெரும்பாலும் முதியவர் வேடத்தில் தான் பாண்டி முனீஸ்வரர் தோன்றுவதாக மக்கள் கூறுகின்றனர். துயரங்களோடு வரும் உண் மையான பக்தர்களுக்கு வெறும் சிலையாக மட்டும் இன்றி நேரில் வந்து பிரச்சினைகளை தீர்த்து வைப்பவர். இந்த கோவிலுக்கு வந்து முழுமனதோடு வழிபட்டு சென்றால் வெற்றிநிச்சயம். இந்த கோவிலுக்கு ஒருமுறை சென்று மன பாரங்களை கொட்டுங்கள். உங்கள் துயரங்களில் இருந்து நிச்சயம் பாண்டி முனீஸ்வரர் காப்பார்.
வழிபாடு
பாண்டி முனீஸ்வரர் கோவிலில் தினமும் காலை, மாலை இருவேளையும் பூஜை நடை பெறுகிறது. பூஜையின்போது எப்போதும் கூட்டம் அலைமோதும். பாண்டி முனீஸ் வரரை மதுரை மட்டுமல்லாது தேனி, விருதுநகர், திண்டுக்கல், கரூர், திருச்சி, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
இந்த கோவிலில் விநாயகர், சமய கருப்ப சாமி, ஆண்டிச்சாமி, சுப்பிரமணியருக்கு தனி சன்னதிகள் உள்ளன. பாண்டி முனீஸ்வரர் வெண்ணிற ஆடை சாத்தி, பால், மணமிகு தைலம், சந்தனம், ஜவ்வாது, பொங்கல் மற்றும் தேங்காய் பழம் போன்றவைகளை கொண்டு வந்து வழிபடுகின்றனர். இங்குள்ள சமய கருப்பசாமிக்கு ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டும் சாராயம், சுருட்டு போன்றவற்றை படைத்தும் வழிபடுகின்றனர்.
குழந்தை வரம் வேண்டுபவர்கள் தொட்டில் கட்டி முனீஸ்வரரிடம் வேண்டிக் கொள்வார்கள். கருணை உள்ளம் கொண்ட அவர் மழலைச்செல்வம் கொடுக்கிறார். பல்வேறு வேண்டுதல்களுக்கும் பக்தர்கள் கோவிலில் காணிக்கைகளாக செலுத்திய மணி அங்கு குவிந்து கிடப்பதை காணலாம்.
புதிய அவதாரத்தை உருவாக்கும் நோக்கில் மும்மூர்த்திகளும் அமர்ந்து பேசிய திருத்தலமே ‘கோஷ்டியூர்’ எனும் ‘திருக்கோஷ்டியூர்’ ஆகும். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
இரண்யகசிபு என்ற அரக்கனை அழிப்பதற்காக சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மதேவர் ஆகிய மும்மூர்த்திகளும் கூடிப் பேசி, புதிய அவதாரம் ஒன்றை உருவாக்கினார்கள். அதுவே மகாவிஷ்ணுவின் ‘நரசிம்ம அவதாரம்.’
அந்த அவதாரத்தை உருவாக்கும் நோக்கில் மும்மூர்த்திகளும் அமர்ந்து பேசிய திருத்தலமே ‘கோஷ்டியூர்’ எனும் ‘திருக்கோஷ்டியூர்’ ஆகும். மகாவிஷ்ணு தாம் எடுக்கப்போகும் நரசிம்ம அவதாரத்தை முன்கூட்டியே தேவர்களுக்கும், கதம்ப முனிவருக்கும் இத்தலத்தில் காட்டி அருளினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த இந்திரன் முதலான தேவர்களும், கதம்ப முனிவரும், மற்ற கோலங்களையும் காட்டி அருளும்படி விஷ்ணுவிடம் கேட்டனர்.
அதன்படி நின்ற, இருந்த, கிடந்த, நடந்த ஆகிய நான்கு கோலங்களையும் இங்கு காட்டியருளினார் மகாவிஷ்ணு. இந்த தலத்தின் மூலவர் ‘உரக மெல்லணையான்’ ஆவார். ‘உரகம்’ என்றால் ‘பாம்பு.’ ‘மெல்லணை’ என்றால் ‘மிருதுவான உடல் படுக்கை’ என்பதாகும். ஆதிசேஷன் மீது பெருமாள் பள்ளிகொண்டதால், அவருக்கு இந்தத் திருநாமம் வழங்கப்படுகிறது. இவர் புஜங்க சயனத்தில் கிழக்கு பார்த்த வண்ணம் ஸ்ரீதேவி - பூதேவியுடன் அருள்கிறார். மது, கைடபர், இந்திரன், காசி மகாராஜா, புருரூப சக்கரவர்த்தி, கதம்ப முனிவர், பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி, சந்தான கிருஷ்ணன் ஆகியோரும் காட்சி தருகிறார்கள்.
சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் வீற்றிருக்கிறார். இத்தல ‘பிரார்த்தனை கண்ணன்’ எனும் சந்தான கிருஷ்ணரை வழிபட்டால், வெகுவிரைவில் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். நாக தோஷத்தினால் திருமணம், குழந்தை பாக்கியம், வீடு கட்டும் மற்றும் வீடு வாங்கும் யோகம் தடைபட்டவர்களுக்கும் இத்தல தரிசனம் மிகச்சிறப்பானதாக கூறப்பட்டுள்ளது. இத்தல உற்சவர் சவும்ய நாராயணப் பெருமாள், வெள்ளியால் ஆனவர். இவர், தேவேந்திரனால் கதம்ப முனிவருக்கு அன்புடன் கொடுக்கப்பட்டவர்.
‘திருமாமகள்’ என்ற திருநாமத்துடன் தாயார் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். இத்திருக்கோவிலின் கருவறை விமானம், அஷ்டாங்க விமானமாகும். ‘ஓம் நமோ நாராயணாய’ என்னும் அஷ்டாட்சர மந்திரத்தைக் கொண்டே இந்த விமானம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது மூன்று தளங்களாக அமைந்துள்ளது. விமானத்தின் கீழ் தளத்தில் ருக்மணி - சத்யபாமாவுடன் நர்த்தன கிருஷ்ணர் உள்ளார். இவர் பூலோகப் பெருமாளாய் அருளாசி வழங்கி வருகிறார்.
அடுத்ததாக முதல் தளத்தில் சவும்ய நாராயணர் திருப்பாற்கடல் பெருமாளாய், பள்ளிகொண்ட கோலத்தில் அருள்செய்கிறார். இவருடன் ஸ்ரீதேவி -பூதேவி தாயாரும் உள்ளனர். இரண்டாவது அடுக்கில் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக உபேந்திர நாராயணர், தேவலோகப் பெருமாளாய் அருள்பாலித்து வருகிறார். மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் ஸ்ரீதேவி - பூதேவியுடன் பரமபத நாதர் வைகுண்ட பெருமாளாய் எழுந்தருளியுள்ளார்.
நரசிம்மர் இத்தலத்தில் இரண்யனை வதம் செய்த திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். ஐந்து நிலை ராஜகோபுரத்தை வணங்கி ஆலயம் உள்ளே சென்றால், கருவறையில் உரக மெல்லணையானை தரிசனம் செய்யலாம். இங்குள்ள தீர்த்தம் ‘தேவபுஷ்கரணி.' தல மரமாக பலா மரம் இருக்கிறது. கோவில் முகப்பில் சுயம்பு லிங்கம் ஒன்று இருக்கிறது. இதனை ‘சரபேஸ்வர லிங்கம்’ என்கிறார்கள். எதிரில் நந்தியும் உள்ளது. அருகில் முருகப்பெருமான் மற்றும் நாகர் சிலைகளும் உள்ளது.
பெரியாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திரு மழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேச ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும்.
திருக்கோஷ்டியூர் பகுதியில் நம்பி என்பவர் வாழ்ந்து வந்தார். வைகுண்டத்தில் திருமாலுக்குத் தொண்டு செய்யும் நித்யசூரிகளுள் ஒருவரான புண்டரீகர் தான், திருக்குருகைப் பிரான் எனும் திருக்கோஷ்டியூர் நம்பியாக வந்துதித்தார். அவரிடம் மந்திர உபதேசம் பெற எண்ணிய ராமானுஜர், ஸ்ரீரங்கத்தில் இருந்து வந்தார். ஆனால் தன்னைக் காண வந்த ராமானுஜரை 17 முறை திருப்பி அனுப்பி விட்டார் நம்பி. இருப்பினும் மனம் தளராது 18-வது முறையும் நம்பியைக் காணவந்தார் ராமானுஜர்.
இதையடுத்து அவருக்கு ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை உபதேசம் செய்தார் திருக்கோஷ்டியூர் நம்பி. பின்னர் ‘இந்த மந்திரத்தை வெளியில் பிறருக்குச் சொன்னால் உனக்கு நரகம் கிடைக்கும்’ என்று கூறி ராமானுஜரை அனுப்பிவைத்தார். ஆனால் ராமானுஜர் உலக உயிர்கள் அனைத்தும் நாராயண மந்திரத்தைத் தெரிந்துகொண்டு, சகல வளங்களும் பெற்று வைகுண்டம் அடைய வேண்டும் என்பதற்காக, இத்தல விமானத்தில் நின்றுகொண்டு மக்களுக்கு ‘ஓம் நமோ நாராயணாய’ எனும் மந்திரத்தையும், அதன் சிறப்புகளையும் உரக்கச் சொல்லி உபதேசித்தார்.
இதனால் கோபமுற்ற நம்பி, ராமானுஜரிடம் “நான் ரகசியமாய் உரைத்த மந்திரத்தை பிறர் அறியும் வண்ணம் உரக்க உபதேசித்தது ஏன்?” என வினவினார்.
அதற்கு ராமானுஜர், “அடியேனுக்கு நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை. மக்கள் நன்றாக வாழ்வார்களே, அதுதான் அடியேனுக்கு வேண்டும்” என திருவாய் மலர்ந்தார்.
இதனைக் கேட்டு பெரிதும் மகிழ்ந்த நம்பி, “நீர்! என்னிலும் பெரியவர்” என்றுகூறி கட்டித் தழுவி ‘எம்பெருமானார்’ எனும் பட்டத்தை ராமானுஜருக்கு வழங்கினார். இன்றும் ராமானுஜர் நின்று உபதேசித்த இடத்தில் ராமானுஜருக்கு சிலை உள்ளது. திருக்கோஷ்டியூர் நம்பிக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தில் நம்பியின் சன்னிதியில் அவரது திருவாராதன மூர்த்தியான சீதை, லட்சுமணன், அனுமன் சமேத ராமபிரானும் உள்ளனர்.பின்னாளில் திருக்கோஷ்டியூர் நம்பி தமது புதல்வி தேவகியையும், புதல்வன் தெற்காழ்வானையும் ராமானு ஜருக்குச் சீடர்களாக்கினார். இத்தல கோபுர உச்சியில் இருந்து பார்த்தால் திருக்கோஷ்டியூர் நம்பி வாழ்ந்த வீட்டினைக் காணலாம். இந்த வீடு ‘கல்திருமாளிகை’ என்று அழைக்கப்படுகிறது. நம்பியின் சந்ததியினர் இன்றும் இவ்வூரில் வாழ்ந்து வருகிறார்கள்.
விளக்கு பிரார்த்தனை
மகாமக கிணறு
நவக்கோள்களில் ஒருவரான புதனின் புதல்வன் புருரூபன், அரச சக்கரவர்த்தியாக திகழ்ந்தவன். ஒருமுறை புருரூப சக்கரவர்த்தி திருக்கோஷ்டியூர் வந்தபோது, மாசி மகாமகம் வந்தது. மகா மகத்தன்று மகாவிஷ்ணுவை கங்கையில் நீராடி தரிசிக்க விரும்பினார் புருரூப சக்கரவர்த்தி. அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் திருக்கோஷ்டியூர் தலத்தின் வடகிழக்கு திசையில் உள்ள கிணற்றில் இருந்து கங்கை நதி பொங்கிவர, அதன் மத்தியில் மகாவிஷ்ணு காட்சி தந்தார்.
தற்போதும் ஆலய பிரகாரத்தில் அமைந்துள்ள இந்தக் கிணறு ‘மகாமக கிணறு’ என்று அழைக்கப்படுகிறது. இன்றும் மாசி மக நட்சத்திர நாளில் இந்த கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம். எனவே மாசிமக நாளில் இத்தல மகாமக கிணற்றினை தொழுது, ஆலயத் தெப்பக்குளத்தை வலம்வந்து பெருமாளைப் பணிந்தால் பாவங்கள், தோஷங்கள் அகன்று விடும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.
அமைவிடம்
மதுரையில் இருந்து 61 கிலோமீட்டர் தூரத்திலும், திருச்சியில் இருந்து புதுக்கோட்டை சென்று அங்கிருந்து 49 கிலோமீட்டர் தூரத்திலும் திருக்கோஷ்டியூர் அமைந்துள்ளது.
சிவ.அ.விஜய் பெரியசுவாமி

ஆண்டுதோறும் இத்திருத்தலத்தில் மாசி மாத மக நட்சத்திர நாளின் பவுர்ணமி திதி முடிவுறும் நேரத்தில், இரவு ‘தெப்ப விளக்குத் திருவிழா’ எனும் ‘வரந்தரும் விளக்கு எடுக்கும் விழா’ கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது பெருமாளும், தாயாரும் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தருவார்கள். அந்த நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குளக்கரையில் மண் அகல்விளக்கு தீபமேற்றி வழிபாடு செய்வார்கள். இது சிறப்பான விளக்குப் பிரார்த்தனை பரிகாரமாகக் கூறப்படுகிறது.
பிரார்த் தனை செய்பவர்கள், ஒரு அகல்விளக்கை ஆலயத்தில் வாங்கி, வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். பின்னர் அந்த விளக்கில் ஒரு ரூபாய் காசும், துளசியும் போட்டு சிறுபெட்டியில் வைத்து மூடி பூஜை அறையில் வைத்து விடுகின்றனர். இந்த விளக்கில் திருக்கோஷ்டியூர் பெருமாள் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம்.
இவ்வாறு செய்வதால் நமது நியாயமான பிரார்த்தனைகள் எதுவாக இருந்தாலும் அது எளிதில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியவர்கள், அடுத்த ஆண்டு மாசி மகத்தன்று இரவு, இத்தல குளக்கரையில் நடைபெறும் தெப்ப விளக்குத் திருவிழாவின் போது தாங்கள் வீட்டில் வைத்து வழிபட்ட அகல்விளக்குடன் மற்றொரு விளக்கில் தீபமேற்றி தெப்பக் குளக்கரையில் வைத்து வழிபடுகின்றனர்.
மகாமக கிணறு
நவக்கோள்களில் ஒருவரான புதனின் புதல்வன் புருரூபன், அரச சக்கரவர்த்தியாக திகழ்ந்தவன். ஒருமுறை புருரூப சக்கரவர்த்தி திருக்கோஷ்டியூர் வந்தபோது, மாசி மகாமகம் வந்தது. மகா மகத்தன்று மகாவிஷ்ணுவை கங்கையில் நீராடி தரிசிக்க விரும்பினார் புருரூப சக்கரவர்த்தி. அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் திருக்கோஷ்டியூர் தலத்தின் வடகிழக்கு திசையில் உள்ள கிணற்றில் இருந்து கங்கை நதி பொங்கிவர, அதன் மத்தியில் மகாவிஷ்ணு காட்சி தந்தார்.
தற்போதும் ஆலய பிரகாரத்தில் அமைந்துள்ள இந்தக் கிணறு ‘மகாமக கிணறு’ என்று அழைக்கப்படுகிறது. இன்றும் மாசி மக நட்சத்திர நாளில் இந்த கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம். எனவே மாசிமக நாளில் இத்தல மகாமக கிணற்றினை தொழுது, ஆலயத் தெப்பக்குளத்தை வலம்வந்து பெருமாளைப் பணிந்தால் பாவங்கள், தோஷங்கள் அகன்று விடும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.
அமைவிடம்
மதுரையில் இருந்து 61 கிலோமீட்டர் தூரத்திலும், திருச்சியில் இருந்து புதுக்கோட்டை சென்று அங்கிருந்து 49 கிலோமீட்டர் தூரத்திலும் திருக்கோஷ்டியூர் அமைந்துள்ளது.
சிவ.அ.விஜய் பெரியசுவாமி
பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரியில் மேகம் திரை கொண்ட சாஸ்தா கோவில் அமைந்துள்ளது. சுமார் 900 வருடம் பழமையான இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
தென்காசி மலையான் தெருவில் பாண்டியர் காலத்தில் இறைவழிபாட்டிலும், சிவபக்தியிலும் சிறந்து விளங்கிய மலையநாடார் (திருமலை நாடார்) என்பவர் வாழ்ந்து வந்தார். ஒரு சமயம் மலையநாடார் தனது குடும்பத்துடன் கிழக்கு நோக்கி பிழைப்பு தேடி வந்தார்.தென்காசி பாண்டிய அரசின் கீழ்திசை பகுதியாக விளங்கிய கீழப்பாவூரின் அருகே ஒரு இடத்தில் குடி அமர்ந்தார்.அதுவே பிற்காலத்தில் அருணாப்பேரி ஆனது. வானம் பார்த்த பூமியான அருணாப்பேரியில் மழை காலங்களில் விதைத்து அறுவடை செய்யும் பயிர்கள் மட்டுமே பயிரிடப்பட்டு வந்தன. மலையநாடார் இப்பகுதியில் மழைப்பயிரான எள் செடியை விளைவித்து வந்தார்.
ஒரு முறை ஆடி மாதம் அங்கு ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அபரிமிதமாக விளைந்த எள்ளினை அறுவடை செய்த மலையநாடார் தம்பதியினர் அவற்றை காய வைப்பதற்காக குவியல் குவியலாக குவித்து வைத்தனர். நல்ல வெயிலில் எள் கூடு வெடித்து களத்தில் கிடந்தது. அப்போது திடீரென மழை பெய்ய தொடங்கியது. காய போட்டிருந்த எள் அனைத்தும் மழையில் அடித்து செல்லும் நிலை உண்டானது. கடவுள் மீது நம்பிக்கை வைத்திருந்த மலையநாடார் தம்பதியினர் என்ன செய்வது என்று அறியாமல் அழுது புலம்பினர். அப்போது வானில் இருந்து “எள்ளுக்குள் மழை தண்ணீர் வராமல் இருக்க எள்ளை சுற்றி மண்ணை அணைத்து வை” என அசரீரி குரல் எழுந்தது.
இந்த குரல் கேட்டதும் கணவனும் மனைவியும் தலை நிமிராமல் மழையில் நனைந்து கொண்டே எள்ளை சுற்றி மண் அணைத்தனர். நிமிர்ந்து பார்த்தபோது அவர்கள் கண்ட காட்சி அவர்களை திகைக்க செய்தது. எள் செடி காய வைக்கப்பட்டிருந்த களத்திற்கு வெளியே சுற்றிலும் மழை பொழிந்தது. எள்ளின் மீது மழைத்துளி ஒன்றுகூட விழவில்லை. மழை வெள்ளம் மண் அணைப்பிற்கு வெளியே திரண்டு ஓடியது. மழை நின்றபாடில்லை.இறைவன் மீது பாரத்தை போட்டு மலையநாடார் தமபதியினர் மழையில் நனைந்தபடி வீட்டுக்கு வந்தனர்.
ஆடி புதன் கிழமை காலை மழை நின்றதும் மலையநாடார் எள் களத்திற்கு சென்று பார்த்தார்.அங்கு எள் குவியல் எந்த பாதிப்பும் இல்லாமல் நனையாமல் இருந்தது. மகிழ்ச்சியில் திளைத்த மலையநாடார் ஓலைபெட்டிகளில் எள்ளை அள்ளினார். அப்போது எள் குவியலின் உள்ளே லிங்க முகம் ஒன்று தோன்றியிருந்தது.இதை பார்த்ததும் அவர் ஆச்சரியம் அடைந்தார். இத்தகைய லிங்க முகத்தை அப் பகுதியில் யாரும் பார்த்ததில்லை.சுயம்புவாக தோன்றிய இந்த லிங்க முகத்தை கண்டு பரவசம் அடைந்த மலைய நாடார் பிறமக்களை அழைத்து வந்து அந்த அற்புத காட்சியை காட்டினார்.பெரும் மழையில் இருந்து மழை தரும் மேகத்தையே குடையாக ,தடுப்பு திரையாக அமைத்து எள் குவியலை நனையாமல் காப்பாற்றிய சுயம்புநாதர் காரணப்பெயராக மேகம் திரைகொண்ட சாஸ்தா என்று அழைக்கலானார்.
மலையநாடாரின் மறைவுக்கு பின்னர் அவரது வாரிசுகள் 5 பேரும் ஆண், பெண் வாரிசு என்ற பாகுபாடின்றி இணைந்து கோவில் பணியை மேற்கொண்டனர். கோவில் வளாகம் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. சாஸ்தாவின் கிழக்கு நோக்கிய சன்னதி சிறிய அளவில் உள்ளது. வளாகத்தின் மேற்கு பகுதியில் கிழக்கு முகமாக அருள்பாலிக்கும் சுயம்பு சாஸ்தாவுக்கு உருவச்சிலையும் சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இங்கு பூரண, புஷ்கலை சிலைகள் அமைக்கப்படவில்லை. பின்னர் பக்தர்கள் சேர்ந்து பூரண, புஷ்கலை உருவங்களை அமைத்து வழிபட்டனர். மேகம் திரை கொண்ட சாஸ்தா 1300&க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குலதெய்வமாக உள்ளார்.
நல்லெண்ணெய் காப்பு
பங்குனி உத்திர திருவிழா இங்கு சிறப்பாக நடந்து வருகிறது. திருவிழா அன்று காலை கோவில் நடைதிறக்கப்பட்டு சாஸ்தாவுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேகங்கள் நடைபெறும். தொடர்ந்து மதிய சாம பூஜையுடன் அன்னதானம் நடைபெறும். இதில் அருணாப்பேரி மற்றும் அதனை சுற்றியுள்ள 20&க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்பட சென்னை, மும்பை, பாண்டிச்சேரியிலுள்ள மலையன் குடும்பத்தினர் கலந்து கொள்வார்கள்.
வழிபாடு பலன்கள்
துஷ்ட தேவதைகளிடம் இருந்து கிராமம், நகர் மற்றும் விளை நிலங்களை காப்பாற்றும் சக்தி கொண்ட சாஸ்தாவின் துணைவியர் பஞ்சம், கடும்நோய், சண்டை, சச்சரவு ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு கொடுக்கும் சக்தி படைத்தவர்கள் என்ற நம்பிக்கை இன்றும் நிலவுகிறது. குடும்பம் செழிக்க குலம் தழைக்க மேகம் திரைகொண்ட சாஸ்தா அருள் புரிந்து வருகிறார்.
குதிரை எடுப்பு விழா
ஆடி மாதம் 3-வது புதன்கிழமை லிங்கமுகம் கண்டதால் ஆண்டு தோறும் ஆடி மாதம் 3 ம் புதன்கிழமை இங்கு கொடைவிழா நடக்கிறது. ஆண்டுக்கு 2 முறை இங்கு விழாக்கள் எடுக்கப்படுகின்றன. மிக விமரிசையாக நடைபெறும் குதிரை எடுப்பு விழா ஆடி மாதம் 3&ம் புதன்கிழமை நடைபெறும். குதிரை எடுப்பு விழாவின் போது கோவில் பூசாரி வேளார் செய்த மண் குதிரையை கீழப்பாவூரில் இருந்து மேள தாளம் முழங்க எடுத்து வருவார்.
சாஸ்தாவின் சன்னதி முன்புற மண்டபத்தில் கிழக்கு முகமாக மண் குதிரை நிலை நிறுத்தப்படும். முத்தாரம்மனுக்கு பூஜையும், வழிபாடும் முடிந்த பின்னர் எடுத்து வரப்பட்ட குதிரை முன்னால் செங்கிடாய் வெட்டப்பெடும். அதை தொடர்ந்து பூஜையும் பின்னர் விழா நிகழ்ச்சிகளும் தொடங்கும்.
முகவரி: மேகம் திரை கொண்ட சாஸ்தா கோவில்
அருணாப்பேரி,
பாவூர்சத்திரம்.
தென்காசி மாவட்டம்.
ஒரு முறை ஆடி மாதம் அங்கு ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அபரிமிதமாக விளைந்த எள்ளினை அறுவடை செய்த மலையநாடார் தம்பதியினர் அவற்றை காய வைப்பதற்காக குவியல் குவியலாக குவித்து வைத்தனர். நல்ல வெயிலில் எள் கூடு வெடித்து களத்தில் கிடந்தது. அப்போது திடீரென மழை பெய்ய தொடங்கியது. காய போட்டிருந்த எள் அனைத்தும் மழையில் அடித்து செல்லும் நிலை உண்டானது. கடவுள் மீது நம்பிக்கை வைத்திருந்த மலையநாடார் தம்பதியினர் என்ன செய்வது என்று அறியாமல் அழுது புலம்பினர். அப்போது வானில் இருந்து “எள்ளுக்குள் மழை தண்ணீர் வராமல் இருக்க எள்ளை சுற்றி மண்ணை அணைத்து வை” என அசரீரி குரல் எழுந்தது.
இந்த குரல் கேட்டதும் கணவனும் மனைவியும் தலை நிமிராமல் மழையில் நனைந்து கொண்டே எள்ளை சுற்றி மண் அணைத்தனர். நிமிர்ந்து பார்த்தபோது அவர்கள் கண்ட காட்சி அவர்களை திகைக்க செய்தது. எள் செடி காய வைக்கப்பட்டிருந்த களத்திற்கு வெளியே சுற்றிலும் மழை பொழிந்தது. எள்ளின் மீது மழைத்துளி ஒன்றுகூட விழவில்லை. மழை வெள்ளம் மண் அணைப்பிற்கு வெளியே திரண்டு ஓடியது. மழை நின்றபாடில்லை.இறைவன் மீது பாரத்தை போட்டு மலையநாடார் தமபதியினர் மழையில் நனைந்தபடி வீட்டுக்கு வந்தனர்.
ஆடி புதன் கிழமை காலை மழை நின்றதும் மலையநாடார் எள் களத்திற்கு சென்று பார்த்தார்.அங்கு எள் குவியல் எந்த பாதிப்பும் இல்லாமல் நனையாமல் இருந்தது. மகிழ்ச்சியில் திளைத்த மலையநாடார் ஓலைபெட்டிகளில் எள்ளை அள்ளினார். அப்போது எள் குவியலின் உள்ளே லிங்க முகம் ஒன்று தோன்றியிருந்தது.இதை பார்த்ததும் அவர் ஆச்சரியம் அடைந்தார். இத்தகைய லிங்க முகத்தை அப் பகுதியில் யாரும் பார்த்ததில்லை.சுயம்புவாக தோன்றிய இந்த லிங்க முகத்தை கண்டு பரவசம் அடைந்த மலைய நாடார் பிறமக்களை அழைத்து வந்து அந்த அற்புத காட்சியை காட்டினார்.பெரும் மழையில் இருந்து மழை தரும் மேகத்தையே குடையாக ,தடுப்பு திரையாக அமைத்து எள் குவியலை நனையாமல் காப்பாற்றிய சுயம்புநாதர் காரணப்பெயராக மேகம் திரைகொண்ட சாஸ்தா என்று அழைக்கலானார்.
மலையநாடாரின் மறைவுக்கு பின்னர் அவரது வாரிசுகள் 5 பேரும் ஆண், பெண் வாரிசு என்ற பாகுபாடின்றி இணைந்து கோவில் பணியை மேற்கொண்டனர். கோவில் வளாகம் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. சாஸ்தாவின் கிழக்கு நோக்கிய சன்னதி சிறிய அளவில் உள்ளது. வளாகத்தின் மேற்கு பகுதியில் கிழக்கு முகமாக அருள்பாலிக்கும் சுயம்பு சாஸ்தாவுக்கு உருவச்சிலையும் சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இங்கு பூரண, புஷ்கலை சிலைகள் அமைக்கப்படவில்லை. பின்னர் பக்தர்கள் சேர்ந்து பூரண, புஷ்கலை உருவங்களை அமைத்து வழிபட்டனர். மேகம் திரை கொண்ட சாஸ்தா 1300&க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குலதெய்வமாக உள்ளார்.
நல்லெண்ணெய் காப்பு
கோவிலில் நித்திய பூஜை அன்றாடம் நடைபெறுகிறது.புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நாள் முழுவதும் நடை திறந்திருக்கும்.மேகம் திரை கொண்டு இறைவன் எள்ளை காப்பாற்றியதால் சுவாமிக்கு நித்தமும் எண்ணை காப்பு நடக்கிறது.எள்ளில் இருந்து பெறப்படும் நல்லெண்ணை மட்டுமே இங்கு பயன்படுத்தப்படுவதால் பக்தர்கள் நல்லெண்ணை காணிக்கையாக செலுத்துவது மரபாக உள்ளது.இங்கு சாஸ்தாவுக்கு பக்தர்கள் செவ்வந்திப்பூ மாலைகளை விரும்பி அணிவிக்கிறார்கள்.
வழிபாடு பலன்கள்
துஷ்ட தேவதைகளிடம் இருந்து கிராமம், நகர் மற்றும் விளை நிலங்களை காப்பாற்றும் சக்தி கொண்ட சாஸ்தாவின் துணைவியர் பஞ்சம், கடும்நோய், சண்டை, சச்சரவு ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு கொடுக்கும் சக்தி படைத்தவர்கள் என்ற நம்பிக்கை இன்றும் நிலவுகிறது. குடும்பம் செழிக்க குலம் தழைக்க மேகம் திரைகொண்ட சாஸ்தா அருள் புரிந்து வருகிறார்.
குதிரை எடுப்பு விழா
ஆடி மாதம் 3-வது புதன்கிழமை லிங்கமுகம் கண்டதால் ஆண்டு தோறும் ஆடி மாதம் 3 ம் புதன்கிழமை இங்கு கொடைவிழா நடக்கிறது. ஆண்டுக்கு 2 முறை இங்கு விழாக்கள் எடுக்கப்படுகின்றன. மிக விமரிசையாக நடைபெறும் குதிரை எடுப்பு விழா ஆடி மாதம் 3&ம் புதன்கிழமை நடைபெறும். குதிரை எடுப்பு விழாவின் போது கோவில் பூசாரி வேளார் செய்த மண் குதிரையை கீழப்பாவூரில் இருந்து மேள தாளம் முழங்க எடுத்து வருவார்.
சாஸ்தாவின் சன்னதி முன்புற மண்டபத்தில் கிழக்கு முகமாக மண் குதிரை நிலை நிறுத்தப்படும். முத்தாரம்மனுக்கு பூஜையும், வழிபாடும் முடிந்த பின்னர் எடுத்து வரப்பட்ட குதிரை முன்னால் செங்கிடாய் வெட்டப்பெடும். அதை தொடர்ந்து பூஜையும் பின்னர் விழா நிகழ்ச்சிகளும் தொடங்கும்.
முகவரி: மேகம் திரை கொண்ட சாஸ்தா கோவில்
அருணாப்பேரி,
பாவூர்சத்திரம்.
தென்காசி மாவட்டம்.
சங்க இலக்கியங்களைப் படைத்த பல்வேறு தமிழ் அறிஞர்கள் பல கோவில்களைப் பற்றிப் பாடல்களையும் பாடியுள்ளனர். அவ்வாறு பாடல் பெற்ற ஸ்தலங்களில் திருகன்றாப்பூர் (கோவில் கண்ணாப்பூர்) நடுத்தறியப்பர் கோவிலும் ஒன்று.
தமிழகத்தில் சோழ மன்னர்கள் ஆட்சி செய்த இடங்களில் ஏராளமான கோவில்கள் கட்டினர். சங்க இலக்கியங்களைப் படைத்த பல்வேறு தமிழ் அறிஞர்கள் பல கோவில்களைப் பற்றிப் பாடல்களையும் பாடியுள்ளனர். அவ்வாறு பாடல் பெற்ற ஸ்தலங்களில் திருகன்றாப்பூர் (கோவில் கண்ணாப்பூர்) நடுத்தறியப்பர் கோவிலும் ஒன்று. இக்கோவிலில் இருந்து 8 கிலோ மீட்டர் சுற்றளவில் தேவார பதிகம் பாடப் பெற்ற பத்து கோவில்கள் அமைந்துள்ளன.
திருகன்றாப்பூர் கோவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. சிறிய அளவில் மூன்று ராஜ கோபுரங்களைப் பார்க்க முடிகிறது. கோவிலில் கொடிமரம் இல்லை. பலிபீடம், நந்தி சற்று உயந்த பீடத்தில் காணப்படுகிறார். கோவிலின் உள் பிரகாரத்தைச் சுற்றி வரும் போது ஆறு வகையான விநாயகர், முருகன், பிடாரியம்மன், துர்க்கை, சந்திரன், லிங்கோத்பவர், சூரியன், நவக்கிரகங்கள், சனீஸ்வரன் சன்னிதிகள் உள்ளன. சனி பகவானுக்கு அருகில் திருஞானசம்பந்தரையும், அப்பரையும் காணலாம்.
பிரகாரத்தை சுற்றி வந்த பிறகு, வலதுபுறம் வள்ளிநாயகி என்ற மாதுமை நாயகி அம்பாள் நின்ற நிலையில் காட்சி தரும் சன்னிதி உள்ளது. அதற்கு நேராக மூலவர் நடுதறிநாதர் என்றழைக்கப்படும் நடுதறியப்பர் தரிசனம் தருகிறார். கோவிலின் மகாமண்டபத்தில், பத்து பதிகமும் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது.
தல வரலாறு
தன்னுடைய கோபத்திற்கு ஆளான சுதாவல்லி எனும் வித்யாதரப் பெண்ணை, மண்ணுலகத்தில் பிறந்து சிவனைப் பூஜித்து எம்மை அடைவாய் என்று சபித்தார், உமாதேவி. அதன்படி அந்தப் பெண், சோழநாட்டில் தேவூருகுத் தெற்கே அமைந்துள்ள இத்திருத்தலத்தில், சைவ வேளாளர் மரபில் கமலவல்லி என்றத் திருப்பெயருடன் பிறந்து வளர்ந்து வந்தாள். சைவ நெறியில் வளர்ந்து சிவபெருமானையே நினைத்து, பூஜை செய்து வந்தாள்.
திருமண வயது வந்தவுடன் அவளுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்குப் பிறகும், சிவபெருமானிடம் பேரன்பு கொண்டதால், உரிய பூஜைகள் செய்து வாழ்ந்து வந்தாள். ஆனால் கணவரும், மாமியாரும் சிவனை வழிபடுவதை விரும்பவில்லை. எனவே அவர்கள் இருவருக்கும் தெரியாதவறு சிவலிங்க வழிபாடு செய்து வந்தாள்.
ஒருநாள் சிவலிங்க வழிபாட்டைக் கண்ட கணவன், அந்த சிவலிங்கத்தை கிணற்றில் எறிந்து விட்டான். கணவனின் செயலைக் கண்டு வருந்திய கமலவல்லி, வீட்டின் பின்புறம் கன்றுக் குட்டிகள் கட்டப்பட்டு இருந்த, ஒரு தறியையே (ஆப்பு) சிவபெருமானாக பாவனை செய்து வழிபட்டு வந்தாள். அதையும் கண்டுபிடித்த அவளது கணவன், கடுமையாகக் கோபம் கொண்டு அத்தறியைக் கோடரியால் வெட்டினான். இரண்டாக பிளவுபட்ட தறியில் இருந்து ரத்தம் வழிந்தது.
கமலவல்லியின் ஆத்மார்த்த பக்தியை உலகில் உள்ளவர்களும், அவளது கணவனும் அறிய வேண்டுமென்பதற்காக அக்கட்டுத் தறியில் லிங்க வடிவத்தில் இறைவன் காட்சி தந்தார். கமலவல்லியும், அவளது கணவனும் சிவலோகம் அடைந்தனர். சிவபெருமான் தறி என்ற ஆப்பிலிருந்து வெளிப்பட்டு சைவப் பெண்ணிற்கு அருள்புரிந்த இடம் என்பதாலும், கன்று கட்டும் தறி லிங்கமாக மாறியதாலும் இத்தலம் திருக்கன்றாப்பூர் (கன்று+ஆப்பு+ஊர்) என்றழைக்கப்படுகிறது.
அந்த கன்றுக் குட்டியின் நடுதறி இருந்த இடமே, இன்று நடுதறிநாதர் கோவிலாக விளங்குகின்றது. இன்றும் மூலவரது உச்சியில் கோடரி வெட்டு உள்ளதைக் காணலாம். இடும்பன் என்னும் அசுரன் இத்தலத்தில் நடுதறிநாதரை வழிபட்டு அருள்பெற்றான்.
இக்கோவிலின் வழியே நடந்துசென்றால், இக்கோவிலில் தங்கி வாழ்ந்த புண்ணியத்தைப் பெறலாம். இக்கோவிலில் தங்கி உதவி செய்தால், நல்ல மனைவி - நல்ல மகள் கிடைக்கப் பெற்று, எல்லா வளங்களையும் செல்வங்களையும் பெறுவர். ‘கன்றாப்பூர்’ என்று ஒருமுறை சொன்னாலேயே பாவம் கெடும். நோய் நீங்கும். நல்வாழ்வு கிட்டும். இத் தலத்தில் வாழ்வோர் இம்மையில் சிவயோகத்தில் அமர்ந்து மறுமையில் சிவபோகம் துய்ப்பர்.
கண் சம்பந்தப்பட்ட நோய் இருப்பவர்கள், இந்தக் கோவிலுக்கு அருகில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில் குளித்தால் கண் நோயில் இருந்து விடுபடலாம் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகிறது.

இந்த ஆலயத்தின் தல விருட்சமாக பனை மரம் (கல்பனை) உள்ளது. இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
ரா.சுந்தர்ராமன்
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், மாவேலிக்கரா வட்டத்தில் உள்ள செட்டிக்குளங்கரா என்ற இடத்தில் பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை பார்க்கலாம்.
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், மாவேலிக்கரா வட்டத்தில் இருக்கிறது, செட்டிக்குளங்கரா என்ற இடம். இங்கு பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அன்னையானவர், தினந்தோறும் மூன்று வேளைகளில் மூன்று ரூபங்களில் காட்சி தருகிறார். இந்த ஆலயத்தின் வரலாற்றை பார்க்கலாம்.
தல வரலாறு
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, செட்டிக்குளங்கரா ஊர்ப் பெரியவர்கள் சிலர், அருகிலுள்ள கொய்பள்ளிகராஷ்மா பகவதி கோவிலில் நடைபெற்ற ஆண்டு விழாவைக் காணச் சென்றனர். அப்போது அங்கிருந்த கோவில் நிர்வாகிகளும், ஊர்க்காரர்கள் சிலரும் சேர்ந்து, அவர்களைக் கேலி செய்து அவமானப்படுத்தினர். அதனால் மனவருத்தமடைந்த அவர்கள், அங்கிருந்து செட்டிக்குளங்கராவிற்கு உடனடியாகத் திரும்பினர்.
தங்களை அவமானப்படுத்தியவர்களுடன் சண்டை போடாமல், தங்களது ஊரிலும் ஒரு பகவதி கோவிலைக் கட்டி வழி படுவது என்று முடிவு செய்தனர். அதன் பின்னர், கோவிலைக் கட்டுவதற்காக, அந்த ஊரில் முதன்மையாக இருக்கும் ஐந்து குடும்பத் தலைவர்களின் தலைமையில் கோவில் கட்டுமானக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த ஐந்து தலைவர்களும் கோவில் கட்டுவதற்கு முன்பாகக் கொடுங்கலூர் சென்று பகவதியை வழிபட்டு வருவது என்று முடிவு செய்து கிளம்பினர்.
கொடுங்கலூர் சென்ற அவர்கள், அங்கு 12 நாட்கள் வரை தங்கியிருந்து இறைவியான பகவதியைப் பஜனைப் பாடல்கள் பாடி வழிபட்டு வந்தனர். பன்னிரண்டாம் நாள் இரவில் அவர்களது கனவில் தோன்றிய தேவி, தான் விரைவில் செட்டிக்குளங்கரா வந்து கோவில் கொள்வதாகத் தெரிவித்தார். மறுநாள் கோவில் வெளிச்சப்பாடு (அர்ச்சகர்) தந்த புனித வாளைப் பெற்றுக் கொண்டு ஊர் திரும்பிய அவர்கள், கோவில் கட்டுவதற்கான பணியைத் தொடங்கினர்.
சில நாட்களுக்குப் பின்னர், கரிப்புழா ஆற்றில் படகு செலுத்தும் ஒருவர், மாலை நேரத்தில் தனது பணியை முடித்து வீடு திரும்ப இருந்தார். அப்போது வயதான ஒரு பெண்மணி, தன்னை செட்டிக்குளங்கராவில் கொண்டு சேர்க்கும்படி வேண்டினார். படகுக்காரரும் வயதான பெண்மணிக்கு உதவும் எண்ணத்துடன் அவரை அழைத்துக் கொண்டு செட்டிக்குளங்கராவிற்குச் சென்றார். வழியில் அவர்கள் ஒரு மரத்தடியில் ஓய்வெடுத்தனர் (அந்த இடத்தில் தற்போது, புத்துசெரியம்பலம் கோவில் இருக்கிறது). அதிகாலையில் படகுக்காரர் எழுந்து பார்த்த போது, அந்த வயதான பெண்மணியைக் காணவில்லை. படகுக்காரர் செட்டிக்குளங்கராவுக்குச் சென்று, அங்கிருந்தவர்களிடம் தன்னுடன் வயதான பெண்மணி ஒருவர் வந்ததாகவும், அவர் மறைந்து போன தகவலையும் சொன்னார். அதனைக் கேட்ட ஊர்ப் பெரியவர்கள், தாங்கள் எதிர்பார்த்திருக்கும் தேவி செட்டிக்குளங்கரா வந்தடைந்ததை உணர்ந்தனர்.
அடுத்த நாள், தற்போது கோவில் இருக்கும் இடத்தில் அருகில் இருந்த ஒரு வீட்டில் மேற்கூரை பராமரிப்பு பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த வீட்டைச் சேர்ந்த பெண், பணியாளர்கள் அனைவருக்கும் மதிய உணவு அளித்தார். அந்த தொழிலாளர்களுடன், வயதான பெண்மணி ஒருவரும் இருந்தார். உணவு சாப்பிட்டு முடித்த பின்பு, வயதான பெண்மணி அந்த வீட்டின் மேற்குப் பகுதிக்குச் சென்று ஒளியாக மாறி மறைந்தார். அதனைக் கண்ட உணவு பரிமாறியப் பெண் மயக்கமடைந்தார். பின்னர், தான் கண்ட காட்சியை அங்குள்ள மக்களிடம் கூறினார்.
அன்று இரவு, கிராமத் தலைவர்களின் கனவில் தோன்றிய தேவி, தான் செட்டிக்குளங்கரா வந்தடைந்ததைத் தெரிவித்தாள். கிராமத் தலைவர்கள் ஜோதிடர்களை வரவழைத்து தங்கள் கனவைத் தெரிவித்தனர். அவர்களும், தேவி செட்டிக்குளங்கராவுக்கு வந்திருப்பதை உறுதி செய்தனர். அதன் பிறகு, கோவில் பணியை விரைந்து நிறைவு செய்ததாக இந்த ஆலயத்தின் தல வரலாறு சொல்லப்படுகிறது.
இந்தக் கோவில் கி.பி. 823-ம் ஆண்டில், மகரம் (தை) மாதத்தில் உத்திரட்டாதி நட்சத்திர நாளில் ஆதிசங்கரரின் முதன்மைச் சீடரான பத்மபாதாச்சாரியா என்பவரால் நிறுவப்பட்டது என்றும், இது முதலில் ஒரு குடும்பக் கோவிலாக இருந்தது என்றும், பிற்காலத்தில் அது அந்த கிராமத்திற்கான, அந்தப் பகுதிக்கான ஆலயமாக மாற்றம் அடைந்தது என்றும் சொல்கிறார்கள்.
ஆலய அமைப்பு
இந்த ஆலயத்தின் கருவறையில் முதன்மைத் தெய்வமாகப் பத்ரகாளி இருக்கிறாள். இந்த அன்னையை ‘செட்டிக்குளங்கரா பகவதி’ என்றும், ‘செட்டிக்குளங்கரா தேவி’ என்றும் அழைக்கின்றனர். கோவில் வளாகத்தில் யட்சினி, கணபதி, நாகராஜா, பாலகன், நாகயட்சி, தேவாரமூர்த்தி, கண்ணம்பள்ளி பகவதி, ரக்சாஸ், வல்லியச்சான் போன்ற துணைத் தெய்வங் களுக்கான சன்னிதிகளும் இருக்கின்றன.
இக்கோவிலில் இருக்கும் தேவி காலை வேளையில் சரஸ் வதியாகவும், மதிய வேளையில் மகாலட்சுமியாகவும், மாலை வேளையில் துர்க்கா தேவியாகவும் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்காட்சி தருகிறார்.
மலையாள நாட்காட்டியின்படி, மகரம் (தை) மாதம் மகாயிரம் (மிருகசீருடம்) நட்சத்திர நாளில் அம்மனை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் பறையெடுப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. கும்பம் (மாசி) மாதம் பரணி நட்சத்திர நாளில் நடை பெறும் கும்பாபரணி விழாவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவின் போது, ‘குத்தியோட்டம்’ மற்றும் ‘கெட்டுக்கச்சா’ எனும் சிறப்பு நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன.
கும்பாபரணியைத் தொடர்ந்து பத்தாம் நாள், ஆலயத்தின் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. 13 நாட்கள் வரை நடைபெறும் இந்த விழாவில் கோவிலைச் சுற்றிலும் அமைந்திருக்கும் 13 பகுதியைச் சேர்ந்தவர்களால் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்நாட்களில் மாலை வேளைகளில், கேரள மரபு வழியிலான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பெறுகின்றன. இதில் ‘தோட்டம்பாட்டு’ எனும் நிகழ்வு சிறப்பானதாக இருக்கும்.
அதே போல் மீனம் (பங்குனி) மாதம் அஸ்வதி நட்சத்திர நாளில், அஸ்வதி விழா நடத்தப்பெறுகிறது. இவ்விழாவின் போது செட்டிக்குளங்கரா தேவி, கொடுங்கலூரிலுள்ள தாயைப் பார்க்கச் செல்வதாக ஐதீகம். இதற்காக, கோவிலைச் சுற்றியுள்ள நான்கு பகுதி மக்களிடம் கொடுங்கலூர் செல்லத் தேவி அனுமதி கேட்பதாகவும், அதிகாலையில் அம்மன் மேற்கு நோக்கிச் செல்வதாகவும் நிகழ்வுகள் அமைகின்றன. அன்றைய நாளில் கோவில் மூடப்பட்டு மறுநாள் வழக்கம் போல் திறக்கப்படுகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், மாவேலிக்கரா வட்டத்தில் அமைந்திருக்கிறது, செட்டிக்குளங்கரா தேவி கோவில். மாவேலிக்கரா எனும் ஊரில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும், காயங்குளம் எனும் ஊரில் இருந்து வடக்கே 7 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஊர் இருக்கிறது. இந்தக் கோவிலுக்குச் செல்ல மாவேலிக்கரா, காயங்குளம் ஆகிய இரு ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
கெட்டுக்கச்சா
ஆறு கோவில்களின் தேர்களாகக் கருதப்படும் குதிரா (குதிரைகள்), ஐந்து தேர்கள், பீமன் மற்றும் அனுமன் உருவங்களுடன் உலா வரும் ஊர்வலத்தை ‘கெட்டுக்கச்சா’ என்கிறார்கள். ‘குதிரா’ என்பது அடிக்கூடு, கதிரக்கல், இடக்கூடாரம், பிரபாதா மற்றும் மேலக்கூடாரம் எனும் 5 அடுக்குகளில், 70 முதல் 75 அடி வரையிலான உயரத்தில் வடிவமைக்கப்பட்ட தேர்களைப் போன்று இருக்கிறது. இடைக்கூடாரம் மற்றும் பிரபாதா போன்றவை இல்லாமல், குதிராவை விடச் சிறிது உயரம் குறைந்ததாகத் தேர்கள் இருக்கின்றன. பீமன், அனுமன் உருவங்கள் வடிவமைக்கப்பட்ட சிறிய தேர்களும் இந்த ஊர்வலத்தில் கொண்டு வரப்படுகின்றன.
ஜீவதா
செட்டிக்குளங்கரா தேவி கோவில் பறையெடுப்பு விழாவில், கோவில் மாதிரி அமைப்பில் உருவாக்கப்பட்ட ‘ஜீவதா’ ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. தச்சு சாத்திரங்களின்படி அமைக்கப்பட்ட ஜீவதா, அழகிய வடிவமைப்பைக் கொண்டதாக இருக்கிறது. இரண்டு மீட்டர் நீளமுள்ள இரு தேக்கு மரக் கம்புகளின் நடுவில் கட்டுவிக்கப்பட்டதாகவும், பல்லக்கு போன்றும் இருக்கிறது. நடுவிலுள்ள அமைப்பானது, தங்க நிறத்திலான தகடுகளில் படங்கள், அழகிய பளபளப்பான கம்பளித் துணிகள், சிறிய கண்ணாடித் துண்டுகள், தேவியின் புனித ஆடை போன்றவைகளுடன் வண்ணமயமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
சிறப்புகள்
திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் சபரிமலைக்கு அடுத்து, அதிக வருமானம் கொண்ட இரண்டாவது மிகப்பெரும் கோவிலாக இக் கோவில் இருந்து வருகிறது.
இக்கோவில் 1200 ஆண்டுகள் பழமையானது என்று சொல்லப் படுகிறது. இருப்பினும், இதில் சில மாற்றுக் கருத்துகளும் கூறப் படுகின்றன.
செட்டிக்குளங்கரா தேவியின் அருளால் பயனடைந்ததாகச் சொல்லப்படும் வாய்மொழிக் கதைகள், இப்பகுதி மக்களிடையே அதிக அளவில் வழக்கத்தில் இருக்கின்றன.
செட்டிக்குளங்கரா தேவி கோவிலில் நடத்தப்பெறும் கும்பாபரணி விழாவில் நடைபெறும் கெட்டுக்கச்சா, குத்தியோட்டம் நிகழ்வைக் காணக் கேரள மாநிலம் முழுவதிலும் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.
இக்கோவிலில் கும்பாபரணி, குத்தியோட்டம் போன்ற வழிபாட்டு நடைமுறைகளை யுனெஸ்கோவின் உலக மரபுரிமைகள் பட்டியலில் சேர்ப்பதற்காக யுனெஸ்கோ அலுவலர்கள் இக்கோவில் விழாத் தகவல்களைச் சேகரித்துச் சென்றிருக்கின்றனர்.
தேனி மு.சுப்பிரமணி

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வடமாநிலத்தை சேர்ந்த லிங்கமநாயக்கர் என்பவர் தன்னுடைய சகோதரர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சொந்த ஊரை விட்டு புறப்பட்டு பாண்டியநாடு (மதுரை) செல்ல நினைத்து பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து நடைபயணமாக பல மைல்களை கடந்து வந்தார். வழியில் பச்சை பசுமையான மலைக்காடுகள் சூழ்ந்த வனப்பகுதிகளை பார்த்ததும் லிங்கமநாயக்கர் மனதில் சிறு தடுமாற்றம் ஏற்பட்டது. இனி தென்திசையை நோக்கி செல்ல வேண்டாம் என்று அவருடைய மனதில் ஒரு எண்ணம் தோன்றியது.
இதனால் லிங்கமநாயக்கர் அந்த காட்டுப்பகுதியிலேயே தங்கினார். தனது அறிவுத்திறமையால் அந்த காட்டுப்பகுதியை ஒரு குட்டி நாடாக மாற்றினார். பின்னர் கோட்டை, கொத்தளங்களை அமைத்தார். மானாவாரி பயிர்களை விளைவித்தார். விளைந்த தானியங்களை ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கினார். தான் வாழும் பகுதிக்கு ‘‘இரசை’’ என்று பெயரிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த திருமலை நாயக்கர், லிங்கமநாயக்கரை அழைத்து விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் ‘‘இரசை’’ நகரின் சிற்றரசராக லிங்கமநாயக்கர் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து இரசை நகர்ப்பகுதியை லிங்கமநாயக்கர் நீதியுடனும், நேர்மையுடனும் சிறப்பான முறையில் ஆட்சி செய்து வந்தார். அப்போது அரண்மனையின் தேவைக்கு, அங்குள்ள பண்ணையில் இருந்த பசும்பால் போதவில்லை. இதனால் பக்கத்து ஊரில் இருந்து பால் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி தினமும் ஒரு பணியாளர் பால் கறந்து, குடத்தில் கொண்டு வந்து சேர்த்தார். ஒருநாள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது அந்த பணியாளர் பால்குடத்தை கீழே வைத்துவிட்டு, நிழலுக்காக மரத்தடியில் ஒதுங்கி களைப்பு தீர படுத்து தூங்கினார். திடீரென காலில் கட்டெறும்பு கடித்ததும், கண் விழித்த அவர் பால்குடத்தை பார்த்தார். ஆனால் அதில் பால் இல்லாமல் வெற்றுக்குடமாக இருந்தது. இதேபோல் பல நாட்கள் அந்த மரத்தடி அருகே வரும்போது பால் மாயமாகி வந்தது. இதனால் அரண்மனையில் பசும்பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து மன்னரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே பணியாளரை கூப்பிட்டு மன்னர் விசாரித்த போது, அரசே நீங்களே ஒருமுறை நேரில் வந்து சோதனை செய்து விட்டு, பின்னர் என்னை தண்டியுங்கள் என்று பரிவாக அந்த பணியாளர் கெஞ்சினார்.
பணியாளரின் அந்த கோரிக்கையை பரிசீலித்த மன்னர், மீண்டும் அவரிடமே பால் நிரம்பிய குடத்தை கொடுத்து அதே மரத்தடியில் வைக்க உத்தரவிட்டார். இந்த சம்பவத்தை மன்னர், அரண்மனை பணியாளர்கள் மற்றும் சிப்பாய்கள் ஒரு மறைவான இடத்தில் நின்று பார்த்தனர். சிறிது நேரம் கழித்து மன்னரும், மற்றவர்களும் போய் அந்த பால் குடத்தை கவனித்தனர். அப்போது அனைவரும் வியப்படையும் வகையில் பால்குடம், வெறும் குடமாக காட்சி அளித் தது. இதனால் அனைவரும் திகைத்தனர். உடனே அந்த இடத்தை தோண்டிப் பார்க்க லிங்கமநாயக்கர் உத்தரவிட்டார்.
அதன்படி அந்த பகுதியை பணியாளர்கள் தோண்டும் போது திடீரென ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வானில் கருடன்கள் வட்டமிட்டன. கடப்பாரையால் ஓங்கி குத்தியபோது பூமிக்கு அடியில் இருந்து ரத்தம் பீறிட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்தது. தொடர்ந்து மண்ணை அகழ்ந்து பார்த்தபோது கையில் உடுக்கை, சூலாயுதத்துடன் அமர்ந்த நிலையில் அம்மன் சிலை இருந்ததை கண்டு லிங்கமநாயக்கர் ஆச்சரியம் அடைந்தார். அம்மனின் தோளில் கடப்பாரை பட்டதால் ரத்தம் வந்த அதிசயம் நிகழ்ந்ததும் தெரியவந்தது. சிறிது நேரத்தில் ரத்தம் வருவது நிற்கவே, அதே இடத்தில் அம்மன் சிலைக்கு மஞ்சள் நீராட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போது மேகம் திரண்டு பலத்த மழை (மாரி) பெய்தது. இதனால் ‘மாரி’ அம்மன் என்று அழைக்கப்பட்டு மன்னரும், மக்களும் வணங்கத்தொடங்கினார்கள்.
சிற்றரசன் லிங்கமநாயக்கர், மதுரையை ஆட்சி செய்யும் மீனாட்சி அம்மனின் அம்சமான மாரியம்மனுக்கு கும்பம் இல்லாமல் விமான அமைப்பில் கோவில் கட்டினான். 'ரத்தம் பீறிட்ட அம்மன், ரத்தம் காட்டிய அம்மன்' என்று அழைக்கப்பட்டது நாளடைவில் மருவி 'நத்தம் மாரியம்மன்’ என்று அழைக்கப்பட்டது. பக்தர்கள் நினைத்ததை நிறைவேற்றுவதுடன், நித்தம் அருள் தரும் நத்தம் மாரியம்மனுக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். அம்மனை போற்றும் படியாக மிகச்சிறப்பாக நடைபெறும் மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.
நோய் தீர்க்கும் அபிஷேக தீர்த்தம்
நத்தம் மாரியம்மன் கோவில், வெளிப்பிரகாரம் வரை கருங்கற்களால் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் 22 கல்தூண்கள் நிலைநிறுத்தப்பட்டு, மேல்தளம் பட்டிய கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோபுரத்திலும், பிரகாரத்தை சுற்றிலும் கலைநயம் மிகுந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை பக்தர்களை மிகவும் கவரும் வகையில் உள்ளன. அபிஷேக மூலிகை தீர்த்தம் நத்தம் மாரியம்மனின் அருளால் பலருடைய துன்பங்களையும் போக்கி வருகிறது. அத்துடன் ‘அம்மை’ தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு மாரியம்மனின் அபிஷேக மூலிகை தீர்த்தத்தை அளித்தால் 3 நாளில் குணமாகும்.
இது போல் மேலும் பல நோய்களை போக்கும் தீர்த்தமாகவும் மாரியம்மன் கோவில் அபிஷேக மூலிகை தீர்த்தம் விளங்குகிறது.
கோவில் நடை திறப்பு
நத்தம் மாரியம்மன் கோவிலில் தினந்தோறும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12 மணிக்கு அடைக்கப்படும். பின்னர் மாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு அடைக்கப்படும்.

துர்வாச முனிவர், தாமிரபரணி நதிக்கரையில் 8 இடங்களில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். அவர் பிரதிஷ்டை செய்ததில் சிறப்பு வாய்ந்த திருத்தலம், கரிசூழ்ந்த மங்கலம்.
துர்வாச முனிவர், தாமிரபரணி நதிக்கரையில் 8 இடங்களில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். அவர் பிரதிஷ்டை செய்ததில் சிறப்பு வாய்ந்த திருத்தலம், கரிசூழ்ந்த மங்கலம். ராகு தோஷத்தை நீக்கும் தென்னகத்து காளகஸ்தியாக இந்த ஆலயம் திகழ்கிறது. துர்வாச முனிவர், தற்போதும் இந்த ஆலயத்தில் வாசம் செய்வதாக கூறப்படுகிறது.
தாமிரபரணி நதிக்கரை முழுமையாக நடந்தார், துர்வாச முனிவர். அப்போது பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடினார். தனது நெற்றியில் புனித திருநீறு அணிந்துகொண்டு நதியின் தென் கரைக்கு வந்தார். அங்கு ஓரிடத்தில் சிவபெருமானை பிரதிஷ்டை செய்தார். அவருக்கு ‘காளத்தியான் என்ற ஸ்ரீகாளகஸ்தீஸ்வரர்’ என்று பெயரிட்டார். பின் காளத்தியானைத் தாமிரபரணி நீரால் அபிஷேகம் செய்தார். தாமரை மலர்களைக் கொண்டு அர்ச்சித்தார். அங்கேயே தங்கி அனுதினமும், ஈசனை பூஜித்தார். பல காலம் அங்கேயே இருந்து நற்கதியடைந்தார்.
துர்வாச முனிவர், கரிசூழ்ந்த மங்கலம் சிவனை வணங்கும் போது, ‘கந்தரக்கறை நாயகன்’ என்கிறார். “திருக்கழுத்தில் விஷத்தினால் ஏற்பட்டக் கறையை (நீல நிறம்) கொண்டவனான திருநீலகண்ட நாதராகிய திருக்காளத்தியப்பருடைய திருவடிகளில் பணிந்து இனியகுரலில் புனித மந்திரங்கள் ஒதுகிறேன்” என்கிறார். “முன்னொரு காலத்தில் உனது மாமனாராகிய தட்சனின் அகந்தையால் உன்னை பல விதங்களில் அவமதித்து ஏசிப் பேசி இகழ்ச்சி செய்த போது அவனை அழித்துத் தண்டித்தாய். அதன் பின் அவன் உன்னை அண்டியபிறகு அவனுக்கு வேண்டிய உதவிகளை செய்தாய். ஆடற்கலையில் வல்லோன் நீ. பலவிதமான நடனங்களை ஆடியவன். திருமாலோடும் இணைந்து ஆடியிருக்கிறாய். நீ கயிலாய மலைச் சிகரத்தில் நின்றாடினாய். இந்த முழுமையான எல்லா உலகங்களிலும் நீக்கமற நிறைந்து நிற்கும் சிவபெருமான் நீ. உன்னைத் தரிசித்து தொழுவது எப்படி என்று முறைப்படி தெரியாமல் தயக்கத்துடன் நிற்கிறேன்” என்றார்.
பெரிய மகானான துர்வாச முனிவர், அவரது திருக்கரத்தினால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் இந்த ஆலயத்தில் உள்ள காளகஸ்திநாதர். பிரம்மாவினால் ஏற்பட்ட சாபம் தீர, துர்வாச முனிவர் இத்தலத்தில் பிரம்மசாப நிவர்த்தி பூஜையில் ஈடுபட்டார். எனவே இங்கு வந்து வணங்கினால் அனைத்து சாபங்களும் தீரும்.
கரிசூழ்ந்த மங்கலம், சரித்திர சான்று களுடன் கல்வெட்டுச் செய்திகள் பலவற்றை தாங்கி நிற்கிறது. சோழ மன்னர்களுடைய ஆட்சிக் காலத்தில் ‘முள்ளி வள நாட்டு கலி செய மங்கலம்’ என்று இந்த ஊர் அழைக்கப்பட்டுள்ளது. கி.பி. 18-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இந்த ஊர், ‘கலி செய மங்கலம்’, ‘கலிசிய மங்கலம்’, ‘கவி சேகர மங்கலம்’ என்றெல்லாம் பெயர் பெற்றிருந்தது. அதற்குப் பிறகு நாயக்க மன்னர்களின் ஆட்சியின் போது, ‘தென் திருவேங்கடம்’ என்று விளங்கி வந்துள்ளது.
‘கரிசூழ்ந்த மங்கலம்’ என்பதற்கு உள்ளூர் மக்கள் கீழ்கண்டவாறு பொருள் கூறுகிறார்கள். ‘கரி’ என்றால் ‘யானை’ என்று பொருள். யானைகள் சூழ்ந்து வருகின்ற மங்கலமே ‘கரிசூழ்ந்த மங்கலம்.’ பழங்காலத்தில் இங்கு விளைந்த நெல் மணிகளை யானை கட்டி போரடித்த காரணத்தினாலும், இந்தப் பெயர் வந்திருக்கலாம் என்று சிலர் எடுத்துரைக்கிறார்கள். ‘கரி’ என்றால் ‘மேகம்’ என்றொரு பொருளும் உண்டு. எப்போதும் மேகம் சூழ்ந்து மழை பெய்து கொண்டிருக்கும் ஊர் என்பதாலும், ‘கரிசூழ்ந்த மங்கலம்’ எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
இந்தப் பகுதியில் பாய்ந்தோடும் தாமிரபரணி நதிக்கு, ‘ மவுத்திக வாகிணி’ என்ற பெயர் உள்ளதாக கல்வெட்டு கூறுகிறது. இந்த ஊர் ‘துர்வாச சேத்திரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள தீர்த்தம் துர்வாச தீர்த்தமாகும். இந்த தீர்த்தத்தில் நீராடினால் துர்வாச முனிவரை போல நன்மை பயன் பெற்று மோட்சம் பெறுவார்கள் என்பது ஐதீகம். மேலும் வடக்கே காளகஸ்திக்கு சென்று வணங்க முடியாதவர்கள், தாமிரபரணி நதிக்கரையில் உள்ள இந்த காளகஸ்தி நாதரை வணங்கினால் வடகாளகஸ்திக்கு சென்று வந்த நற்பலன் கிட்டுகிறது.
இங்குள்ள இறைவன் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரராகவும், அம்மை ஞான அம்பிகாவாகவும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். தாமிர பரணி கரையில் உள்ள இந்த கோவில் கிழக்கு பார்த்து உள்ளது. தாமிரபரணியில் வலது கரை ஓரத்தில் உள்ள இந்த கோவிலுக்குள் நுழைந்தால், சிவனுக்கு தனது கண்ணை கொடுத்த கண்ணப்ப நாயனார் கல்வெட்டு சிற்பம் உள்ளது. அம்மனின் விமானத்தில் துர்வாச முனிவர் சிவனை பூஜிப்பது போல மற்றொரு சிற்பம் காணப்படுகிறது. கோவிலுக்கு உள்ளே நுழைந்தால் சண்டிகேஸ்வரர், தட்சிணா மூர்த்தி, சனி பகவான் ராகு- கேதுவோடு ஒரே வளாகத்தில் உள்ளனர்.
சிவனின் நெற்றியில் ராகுவும், அம்மையின் இடுப்பில் கேது ஒட்டியாணமாகவும் காணப் படுகிறார்கள். சனி பகவான் நாக கொடை பிடிக்க அமர்ந்துள்ளார். இவரின் சிரசிலும் ராகு - கேது உள்ளது. எனவே தான் இந்த ஆலயம் ராகு கேது பரிகார தலம் என கூறுகிறார்கள்.
இந்த ஆலயத்தில் பிரதோஷம், ஆவணி மாதம் வருஷாபிஷேகம், மாசி சிவராத்திரி உள்பட விழாக்கள் சிறப்பாக நடைபெறும். எனவே தடைபட்ட திருமணம் மீண்டும் நடைபெறும். பிதுர்தோஷம் நீங்கும். இங்கு ஞாயிற்றுக் கிழமை தோறும் சர்ப சாந்தி பூஜை நடக்கிறது. சர்ப சாந்தி பூஜை முடிந்து துர்வாச முனிவர் தீர்த்த கட்டத்தில் மூழ்கி எழுந்தால் நினைத்தது நிறைவேறுகிறது. இதற்காக ராகு- கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து பரிகாரம் செய்கிறார்கள்.
தாமிரபரணியை புகழும் துர்வாசர்
அத்ரி மகரிஷியின் மகனான, துர்வாச முனிவர் மிகவும் சினம் கொண்டவர். யாரையும் புகழ்ந்து அவர் பாடுவது அரிதானது. அப்படிப்பட்ட துர்வாச முனிவர், தாமிரபரணி நதியை மிகவும் புகழ்ந்து பாடியுள்ளார். கி.பி. 1842-ம் ஆண்டில் திருநெல்வேலி அருட்கவி நெல்லையப்பக் கவிராயர் எழுதிய திருநெல்வேலி தலபுராணத்தில் 30-வது சருக்கமாக அமைந்துள்ளது ‘துர்வாசேஸ்வர சருக்கம்.’ முதல் முப்பத்தாறு பாடல்களில், கரிசூழ்ந்தமங்கலம் என்னும் தாமிரபரணி கரை கிராமத்தினை பற்றி கூறப்பட்டுள்ளது. அதில் துர்வாச முனிவர் தாமிரபரணியை புகழ்ந்த வாக்கியங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
அவர் கூறும் போது, “தாமிரபரணி சாதாரண நதி அல்ல. இந்த நதி பெருமையுள்ள நதி. நித்ய மங்கல சுமங்கலி. என்றென்றும் மகிழ்வுடன் மங்களங்களை அளிக்கும் சுமங்கலியே, மலையத்தின் நிலவே, மலையில் தவழும் தென்றலுடன் பிறந்த நாயகியே, சீரும் சிறப்புமிக்க ஆற்றலுடன் வந்த தாமிரபரணி தாயே! பொருணை நதியே! புத்தம் புதிய அம்ருதம் தனைக் கொண்ட வானுலக நதியாக விளங்குபவளே! உன்னிடம் அடைக்கலம் அடை கிறேன்” என்று போற்றுகிறார்.
தன் சீடர்களிடம் கூறும் போது, “புனிதமான கங்கை எப்படி தன்னிடம் நீராடுபவர்களின் கடும் பாவங்களைக் களைந்து நற்கதியையும், அருளையும் கொடுக்கிறாளோ! அதைப் போலவே தன்னை நாடி வருபவர்களுக்கு நற்கதி தரும் அருளானவள்தான், தாமிரபரணி தாய். நிறைவு உயர்வான திருக்கயிலாய மலையில் இருந்து உம் மக்களிடம் நீ கொண்ட அன்பு காரணமாக பொதிய மலைக்கு வந்து மக்களை வாழவைத்துக் கொண்டிருக்கும் தாயே. பொருணையே உன்னிடம் சரணடைகிறேன்” என்று அவர் தாமிரபரணியை புகழ்ந்தார்.
மேலும் தாமிரபரணியை, முப்பெரும் தேவியர்களான மலைமகள், திருமகள், கலைமகள் ஆகியோருடன் ஒப்பிடு கிறார். அதன்படி முறையே ‘காரணியே.., நாரணியே.., பூரணியே..’ என்று தாமிரபரணியை புகழ்கிறார், துர்வாசர்.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டு இருக்கும்.
அமைவிடம்
திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி - பாபநாசம் சாலையில் பத்தமடையில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் கரிசூழ்ந்த மங்கலம் உள்ளது. இவ்வூருக்கு பத்தமடையில் இருந்து பஸ் மற்றும் ஆட்டோ வசதி உண்டு.
முத்தாலங்குறிச்சி காமராசு

பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வட மதுரை ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
பல்லவர், சோழர்கள் திருப்பணி செய்த திருக்கோவில், மூலவரை விட உயரமான உற்சவத் திருமேனிகள் அமைந்த தலம், ராமாயணக் காட்சிகள் நிறைந்த கல் மண்டபம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வட மதுரை ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில்.
கங்கை கொண்ட சோழனான முதலாம் ராஜேந்திரன், கோசாலை நாட்டு நாயகன் ராம பிரானுக்கு இவ்வூரில் ஆலயம் எழுப்பி, 50 குழி பூந்தோட்டத்தை, சீதை சுயம்வர விழாவுக்கு வழங்கிய செய்தியை இங்குள்ள கல்வெட்டுக் குறிப்புகள் எடுத்துரைக்கின்றன. ‘திருமகள் மருவிய செங்கோல் வேந்தன்’ என்ற வரிகள் மட்டுமே கொண்ட கல்வெட்டு, இம்மன்னனின் நினைவை இன்னமும் நினைவுபடுத்துகின்றன. இக்கோவில் பல்லவர் காலத்திலேயே சிறப்பு பெற்று விளங்கியதற்குச் சான்றாக, ராஜசிம்ம பல்லவன் தூண்கள் பலவும் இக்கோவிலில் அமைந்துள்ளன.
ஆலய அமைப்பு
இந்த ஆலயத்தின் மூலவர் ஆதிகேசவப் பெருமாள் என்றாலும், ராமரே இங்கு பிரசித்தி பெற்று விளங்குகிறார். ஊரின் மையப்பகுதியில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. எளிய நுழைவு வாசல், இடதுபுறம் சிற்பங்கள் நிறைந்த கல் மண்டபம் நம்மைக் கவர்கின்றது. இதில் முன்புறம் அமைந்துள்ள இரண்டு தூண்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டு, கலைகளின் தூண்களாக விளங்குகின்றன.
மண்டபத்தின் மேல்புறத்தில் ராமாயணக் காட்சிகள் அனைத்தும் புடைப்புச் சிற்பங்களாக வடித்துள்ளது, நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றது. கோபுர ஸ்தம்பம் என்ற சிற்ப சாஸ்திரத்தைத் தழுவி, நுணுக்கமாக தூண் முழுவதும் கோபுரங்களில் செதுக்கியுள்ள வேலைப்பாடுகள் ரசிக்கத்தக்கது.
அருகே தும்பிக்கையாழ்வார், பலிபீடம், சிற்பக் கலையால் மிளிர்கிறது. அடுத்து பெருமாளை வணங்கி நிற்கும் கருடாழ்வாரின் விமானம், பெருமாள் விமானத்திற்கு சற்றும் சளைக்காமல் கலைநுணுக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
மகாமண்டபச் சுவற்றிலும் அரிதான புடைப்புச் சிற்பங்கள், கருவறை முன்மண்டபம், தூண்களில் சிற்பங்கள், கருவறையில் மூலவரான ஆதிகேசவப்பெருமாள், தன் துணைகளோடு எளிய வடிவில் காட்சி தர, அவரை விட உயரமாக உற்சவர்த்திகள் காட்சி தருகின்றனர். கருவறை முன்மண்டபத்தில் இடதுபுறம் ராமர், லட்சுமணர், சீதை, பரதன் ஆகிய உற்சவத் திருமேனிகள் நமக்கு அருள்காட்சி தருகின்றனர்.
சுவாமி கருவறையின் வலதுபுறம் தாயார் சன்னிதி தனிக்கோவிலாக அமைந்துள்ளது. தாயார் எளிய வடிவில் அழகுற காட்சி தருகின்றாள். முன் மண்டப விதானத்தில் புடைப்புச் சிற்பங்கள் அமைந்துள்ளன.
அழகிய ராமன்
இத்தலத்தின் சிறப்பு, இங்கு அமைந்துள்ள ராமபிரானின் உற்சவத்திருமேனி மற்றும் சீதை, லட்சுமணன், பரதன் திருமேனிகள். இதில் ராமன் மற்றும் பரதன் சிலைகள் மட்டுமே பழமையானவை. மற்ற இரண்டும் புதிய சிலைகள் எனக் கூறப்படுகிறது. ராமன் சிலையழகை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. தாமரை முக மண்டலம், கருணை பொழியும் கண்கள், மோகனப் புன்முறுவல், பத்ம பாதம் என அனைத்து அம்சங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. மரவுரி கிரீடம், குண்டலம், ஹாரம், பாதசரம் கொண்டு நெற்றியில் பொன்னால் ஆன திலகம், பிடரியில் சுருள்கேசம் முதுகில் தவழ, ராமபிரானின் அழகு நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த வடிவழகுதான் சீதையை மயக்கியது போலும். இதேபோல, பரதனின் வடிவமும் கலைநயத்தோடு அமைந்துள்ளது.
பழம்பெருமை கொண்ட இக்கோவிலில், வைணவ ஆலய விழாக்கள் அனைத்தும் எளிய முறையில் நடத்தப்படுகின்றன. கிராமத்து ஆலயம் என்பதால் காலை, மாலை பூஜை முடிந்ததும் நடை சாத்தப்படும்.
அமைவிடம்
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்தில், சென்னையில் இருந்து பெரியபாளையம் செல்லும் வழியில், பெரியபாளையத்திற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் இடதுபுறம் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால், வடமதுரை ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தை அடையலாம். பெரியபாளையத்தில் இருந்து ஆட்டோ மூலமும் எளிதில் வரலாம்.
பனையபுரம் அதியமான்

கர்ப்பிணி பெண்களைக் காக்கும் இறைவியைக் காண வேண்டுமா? வாருங்கள்.. அபிராமபுரத்திற்கு. இந்த ஊரில் அமைந்திருக்கிறது, ஸ்ரீ பிரம்ம புரீஸ்வர சுவாமி ஆலயம்.
கர்ப்பிணி பெண்களைக் காக்கும் இறைவியைக் காண வேண்டுமா? வாருங்கள்.. அபிராமபுரத்திற்கு. இந்த ஊரில் அமைந்திருக்கிறது, ஸ்ரீ பிரம்ம புரீஸ்வர சுவாமி ஆலயம். இத்தல இறைவனின் பெயா் ‘பிரம்மபுரீஸ்வரர்’ என்பதாகும். இறைவியின் திருநாமம் ‘அபிராமி அம்பிகை.
அபிராமபுரம் ஒரு சிறிய கிராமம். இங்கு இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் மொட்டை கோபுரம். அதைக் கடந்ததும் விசாலமான பிரகாரம். அடுத்துள்ள மகாமண்டப நுழைவு வாசலில் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகனும் அருள்பாலிக்கின்றனர்.
மகா மண்டபத்தில் நந்தியும், பலிபீடமும் இருக்க, வலதுபுறம் அன்னை அபிராமியின் சன்னிதி உள்ளது. அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் பத்மமும், அங்க மாலையும் தாங்கியிருக்கிறாள் அன்னை. கீழே உள்ள ஒரு கரம் அபய முத்திரையை பிரதிபலிக்க, இன்னொரு கரம் ஊரு ஹஸ்த நிலையில் அமைந்திருக்க, அன்னை புன்னகை தவழ அருள்பாலிக்கிறாள்.
அம்மன் கருவறையின் எதிரே உள்ள அர்த்த மண்டபத்தை அடுத்துள்ளது, சுவாமியின் கருவறை. இங்கு இறைவன் பிரம்மபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியில், கீழ் திசை நோக்கி வீற்றிருக்கிறார். இறைவனின் தேவக் கோட்டத்தின் மேல் திசையில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மா, துர்க்கை திருமேனிகள் காணப்படுகின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆலயம் இது என்று கூறப்படுகிறது. இந்த ஆலயத்தின் தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது.
இந்த ஊரில் ஒரு கர்ப்பிணி பெண் இருந்தாள். ஒரு நாள் அவளுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். வயிற்றில் இருக்கும் குழந்தையின் நிலை சிக்கலாக இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்தாலும் குழந்தை நலமாக பிறக்குமா என்பது சந்தேகம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் கதறித் துடித்த அந்தப் பெண், மீண்டும் வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்தாள். வழியில் இத்தல அன்னையை வழிபட்டு, அவளிடம் முறையிட்டாள்.
அன்று இரவு அவள் கனவில் வந்த அன்னை அபிராமி, ஒரு சிறுமியை கனவிலேயே அவள் வீட்டு வாசலில் விட்டுவிட்டு மறைந்தாள்.
அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு, மறுநாள் பிரசவ வலி அதிகமானது. அந்தப் பெண்ணை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இப்போது அந்தப் பெண்ணை பரிசோதித்த மருத்துவர்களுக்கு ஆச்சரியம். இப்போது குழந்தைக்கு இருந்த சிக்கல் அனைத்தும் நீங்கியிருந்தது. சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு சுகப் பிரசவத்துடன் அழகான பெண் குழந்தை பிறந்தது.
தனது வேண்டுதலை ஏற்று, அபிராமி அன்னையே தன்னையும், பிள்ளையையும் காப்பாற்றியதாக அந்தப் பெண் நினைத்தாள். தன் குழந்தைக்கும் அம்பாளின் திருநாமத்தையே சூட்டினாள். அபிராமி அன்னைக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக அபிஷேக, ஆராதனை செய்தாள்.
இந்த நடைமுறை இப்போதும் தொடர்கிறது. கர்ப்பிணி பெண்கள் இந்த ஆலயத்திற்கு வந்து வேண்டிக்கொண்டால் அவர்களுக்கு சுகப் பிரசவம் ஆவதாக பக்தர்கள் நம்பிக்கையோடு தெரிவிக்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள், அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அமைவிடம்
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் - பந்தநல்லூர் பேருந்து வழித்தடத்தில் பந்தநல்லூருக்கு கிழக்கே 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அபிராமபுரம் என்ற இந்த தலம்.
மல்லிகா சுந்தர்

தமிழக அளவில் அமைந்துள்ள அன்னை பராசக்தியின் அருள்பொங்கும் ஆன்மிக திருத்தலங்களில் அன்பையும், அருளையும் ஒருசேர அன்பர்களுக்கு அளிக்கும் அற்புத இடம், காஞ்சி காமாட்சியம்மன் ஆலயம் ஆகும்.
‘அன்னை’ என்ற சொல், அனைவரது மனதிலும் அன்பின் உணர்வுகளை தட்டி எழுப்பக்கூடியதாகும். உலக ஆசாபாசங்களை துறந்த முனிவர்களும் கூட, அன்னையின் அன்பையும், பாசத்தையும் துறக்க இயலவில்லை என்பதை ஆன்மிக சான்றோர்களின் வாழ்க்கை வரலாறு மூலம் அறிந்திருப்போம். தமிழக அளவில் அமைந்துள்ள அன்னை பராசக்தியின் அருள்பொங்கும் ஆன்மிக திருத்தலங்களில் அன்பையும், அருளையும் ஒருசேர அன்பர்களுக்கு அளிக்கும் அற்புத இடம், காஞ்சி காமாட்சியம்மன் ஆலயம் ஆகும். ‘காமாட்சி’ என்ற சொல்லுக்கு, ‘கருணையும், அன்பும் நிறைந்த கண்களை கொண்டவள்’ என்பது பொருள்.
அன்னை பராசக்தி அருளாட்சி செய்யும் முக்கியமான தலங்கள், காஞ்சி, மதுரை, காசி. இந்த மூன்று ஊர்களிலும் உள்ள காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி ஆகிய அன்னையர்களில், காமாட்சி தனிச்சிறப்பு பெற்றவள். ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரியின் பூரண சொரூபமாகவும், கலைமகளையும், திருமகளையும் தன் இரு கண்களாகவும் கொண்டவள் இந்த அன்னை என்பது ஐதீகம். காஞ்சி காமாட்சி அம்மன், இரண்டு கால்களையும் மடித்து, பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருப்பது சிறந்த அம்சமாகும். கைகளில் கரும்பு வில், தாமரை மற்றும் கிளி ஆகியவை உள்ளன. தந்திர சூடாமணி என்ற நூலில் குறிப்பிட்டுள்ளபடி, காஞ்சிபுரம் என்பது 51 சக்தி பீடங்களில், தேவியின் இடுப்பு எலும்பு விழுந்த இடமாகும்.
புராண காலத்தில் பந்தகாசுரன் என்ற அசுரன், கடுமையான தவங்களை செய்து, பிரம்மாவிடம் பல வரங்களை பெற்றிருந்தான். அதனால், மூவுலகங்களையும் கைப்பற்றி தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தினான். அவர்கள் அனைவரும் சிவபெரு மானிடம் சென்று முறையிட்டபோது, பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்திக்கு மட்டுமே உள்ளதாக கூறி, பராசக்தியிடம் அவர்களை அனுப்பி வைத்தார், சிவபெருமான். அந்த சமயம் அன்னையானவள், ‘காமகோட்டம்’ என்ற காஞ்சிபுரத்தில், கிளி உருவம் கொண்டு ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து ஈசனை நினைத்து தவம் செய்து கொண்டிருந்தாள். அங்கு வந்து முறையிட்ட தேவர்கள் மற்றும் முனிவர்களிடம், பந்தகாசுரனை வதம் செய்வதாக உறுதியளித்தாள்.
பல்வேறு வரங்களை பெற்றிருந்த அவனை கொல்ல, பதினெட்டுக் கரங்கள் கொண்ட பைரவ ரூபிணியாக உருவம் கொண்டாள் அன்னை. அவனை அழித்து, அவன் தலையை வெட்டி, கையில் பிடித்தபடி காஞ்சிபுரம் வந்தாள். அவளது உக்கிர வடிவத்தை கண்ட அனைவரும் நடுங்கினார்கள். அதனால், அழகிய பட்டாடை அணிந்த சிறு பெண்ணாக அன்னை காட்சியளித்தாள். அன்னை, அவர்களிடம் அந்த இடத்தில் ஒரு பள்ளம் தோண்டி பந்தகாசுரனை புதைத்து, அதே இடத்தில் வெற்றித்தூண் ஒன்றையும் அமைக்கும்படி கூறினாள்.
அன்னையின் கட்டளைப்படி, தேவர்கள் அந்த இடத்தில் பள்ளம் தோண்டியபோது, மல்லகன் என்ற அரக்கன் உள்ளே மறைந்திருப்பதைக் கண்டார்கள். அவனை அழித்து தங்களைக் காக்கும்படி, மகாவிஷ்ணுவிடம் அனைவரும் வேண்டினார்கள். மகாவிஷ்ணு மல்லகனுடன் போரிட்டபோது, அவனது உடலில் இருந்து வெளியான ஒவ்வொரு துளி ரத்தமும் ஒரு அரக்கனாக மாறி போர் புரிந்தது. அதனால், மகாவிஷ்ணு, சிவபெருமானை உதவிக்கு அழைத்தார். சிவபெருமான், ருத்ர மூர்த்தியாக அங்கே வந்து, இரண்டு பூதங்களை உருவாக்கி, மல்லகனின் ரத்தத் துளிகள் பூமியில் விழுவதற்கு முன்னரே குடிக்கும்படி கட்டளையிட்டார். அதனால், மேலும் அரக்கர்கள் தோன்றாமல் தடுக்கப்பட்ட நிலையில், மகாவிஷ்ணு சக்ராயுதத்தால் மல்லகனை அழித்தார்.
அதன் பின்னர், அன்னையின் கட்டளையிட்டபடி, பந்தகாசுரனைப் புதைத்தனர். அந்த இடத்திற்கு அருகில் இருபத்து நான்கு தூண்களை நிறுவி, ‘காயத்ரி மண்டபம்’ அமைத்து, அதற்குள் உள்ள அழகிய பீடத்தில் அன்னையின் உருவத்தை வைத்து வழிபட்டு விட்டு நிம்மதியாக திரும்பினார்கள். மறுநாள் அதிகாலையில் அந்த ஆலய கதவைத் திறந்தவர்களுக்கு அற்புதமான காட்சி கிடைத்தது. காயத்ரி மண்டபம் நடுவில், அவர்கள் அமைத்த சிலைக்கு பதிலாக அன்னை காமாட்சி தேவி, கருணை கொண்ட ராஜராஜேஸ்வரியாக காட்சியளித்தாள்.
மண்டபத்தின் மத்தியில் அன்னை தென்கிழக்காக, நான்கு கரங்களுடன், பத்மாசன கோலத்தில் காட்சியளித்தாள். அவளது நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், மலர் அம்பு, கரும்பு வில் முதலியன இருந்தன. அந்த நாள் கிருத யுகம், ஸ்ரீமுக வருஷம் பங்குனி மாதம் கிருஷ்ண பட்சம், பிரதமை திதி, பூரம் நட்சத்திரம் கூடிய வெள்ளிக்கிழமை நாள் ஆகும். அன்னையின் அழகையும், கருணையையும் கண்ட தேவர்களும், முனிவர்களும் அவள் அங்கேயே அமர்ந்து உலகம் செழிக்க அருள் புரிய வேண்டிக் கொண்டார்கள். அதனால், அன்னை காமாட்சி ஸ்தூலம், சூட்சுமம், காரணம் எனும் மூவகை வடிவிலும் அங்கே அருளாட்சி செய்து வரு கிறாள்.
காஞ்சிபுரத்தில் அன்னை காமகோடி காமாட்சியின் மூல விக்கிரகம் ஸ்தூல வடிவத்திலும், அஞ்சன காமாட்சி என்ற அரூப லட்சுமியாக சூட்சும வடிவத்திலும், காமகோடி பீடமான ஸ்ரீ சக்கரம் என்ற காரண வடிவத்திலும் அன்னை விளங்குகிறாள். காமாட்சியின் இடது பக்கத்தில் வடக்கு திசை நோக்கியவாறு அரூப லட்சுமியாகிய அஞ்சன காமாட்சி, தவம் புரியும் கோலத்தில் காட்சியளிக்கின்றாள். அது அன்னையின் சூட்சும வடிவமாகும். வடிவம் இல்லாத இந்த அன்னையின் மேனியில் தடவப்படும் அர்ச்சனை குங்குமத்தின் மகிமையால் அவள் அழகிய வடிவம் பெறுகிறாள்.
காஞ்சிபுரத்தில் உள்ள எல்லா சிவாலயங்களிலும், காமாட்சி அம்பிகையே மூல மூர்த்தம் ஆவாள். அதனால், அம்பாளின் உற்சவ மூர்த்திகள் மட்டுமே எல்லா சிவாலயங்களிலும் உண்டு. காமகோடி பீடத்தில் அன்னை தவக்கோலத்தில் இருப்பதால்தான், காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோவில்களில் அன்னைக்கு தனிப்பட்ட சன்னிதி கிடையாது என்ற கருத்தும் உண்டு. 8-ம் நூற்றாண்டில் ஆதிசங்கரரால், ஸ்ரீசக்ரம் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டது. உக்கிரமாக இருந்த அன்னையை, அழகிய காமாட்சியாக ஆதிசங்கரர் சாந்தப்படுத்தியதாக ஐதீகம்.
இன்றும்கூட அன்னை காமாட்சியின் பிரகாசமான முகத்தை பக்தியுடன் தரிசிக்கும் ஒரு சிலருக்கு அவளது கண்கள் சிமிட்டுவது போன்ற காட்சி கிடைப்பதாக சொல்லப்படுகிறது. கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் உற்சவ விழாக்கள் சிறப்பாக நடக்கும். இவற்றில் தேர்த்திருவிழாவும், தெப்பக்குள உற்சவமும் சிறப் புடையது. நவராத்திரி, ஆடி மற்றும் ஐப்பசி பூசம், சங்கர ஜெயந்தி மற்றும் வைகாசி மாத வசந்த உற்சவம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஊரின் நடுவே ஊர் மக்களைக் காக்கும் தெய்வமாய், கிராமத்தின் காவல் தெய்வமாய் கோவில் கொண்டு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள் அன்னை குள்ள முத்து மாரியம்மன்.
கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள மருதூர் என்ற பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது ராஜேந்திரம். இந்த ஊர், கருப்பஞ்சோலைகளும், வாழைத் தோப்புகளும் நிறைந்த அழகிய கிராமம்.
ஊரின் நடுவே ஊர் மக்களைக் காக்கும் தெய்வமாய், கிராமத்தின் காவல் தெய்வமாய் கோவில் கொண்டு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள் அன்னை குள்ள முத்து மாரியம்மன்.
இது அழகிய ஆலயம். முகப்பைத் தாண்டியதும் மகாமண்டபம் உள்ளது. அடுத்துள்ள கருவறையில் அன்னை கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இந்த ஆலயத்தில் உள்ள அன்னை ஆரம்ப காலத்தில் ‘மகா மாரியம்மன்’ என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறார்.
17 ஆண்டுகளுக்கு முன் இந்த ஆலயத்தின் குடமுழுக்கு நடைபெற்றது. அதற்காக அன்னையின் விமான கலசத்திற்கு மெருகேற்றினர். அப்போது அந்த கலசத்தில் பொரிக்கப்பட்டிருந்த பெயர், பக்தர்கள் அனைவரையும் கவர்ந்தது. அதில் ‘குள்ள முத்து மாரியம்மன்’ என்று இருந்தது. அன்று முதல் இத்தல அன்னையை அனைவரும் ‘குள்ள முத்து மாரியம்மன்’ என்றே அழைக்கத் தொடங்கினர். அதுவே அன்னையின் நிரந்தர திருநாமமாக மாறிப்போனது.
தினசரி ஒரு கால பூஜை நடக்கும் இந்த ஆலயம், பலநூறு ஆண்டுகளுக்கு முன் உருவானதாக பக்தர்கள் கூறுகின்றனர்.அன்னைக்கு வைகாசி மாதம் நடக்கும் திருவிழா மிகவும் பிரசித்தம். அருகே உள்ள காவிரியில் இருந்து பால் குடம், அலகு காவடி, பால் காவடி, கரகம், அக்னி சட்டி ஏந்தி சுமார் 500 பேர் அன்னையின் ஆலயம் வந்து அவைகளை அன்னையின் பாதங்களில் சமர்ப்பித்து வேண்டுதல்களை நிறைவேற்றுவர். சுற்றிலும் உள்ள கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் அன்று ஆலயம் முன் கூட ஆலயம் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.
ஆடிப் பூரத்தன்று அன்னையின் முன் மகாமண்டபத்தில் கணபதி ஹோமம், துர்க்கை ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியவை பலநூறு பக்தர்கள் சூழ நடைபெறும்.
குழந்தை வரம் வேண்டியும், விரைந்து திருமணம் நடக்க வேண்டியும், பிணி நீங்கி விரைவில் குணமாக வேண்டியும் வேண்டும் பக்தர்களின் கோரிக்கைகளை கனிவோடு நிறைவேற்றி தருகிறாள் அன்னை. பயன் பெற்றோர் அன்னைக்கு புடவை வாங்கி சாத்தியும், குத்துவிளக்கு வாங்கி சன்னிதியில் வைத்தும் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
அம்மை நோய் கண்ட பலர் அம்மன் ஆலயத்திலேயே தங்கி, அம்மன் தீர்த்தத்தைப் பருகி குணமானதும் இல்லம் திரும்புவது இங்கு வழக்கமாக காணும் காட்சி. இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
தன்னை நாடும் பக்தர்கள் நலன் பல பெற்று வாழ அன்னை குள்ள முத்து மாரியம்மன் அருள்புரிவது கண்கூடான உண்மையே!

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் என்ற சிறு கிராமத்தில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதி அங்காளம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் என்ற சிறு கிராமத்தில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதி அங்காளம்மன் திருக்கோவில் உள்ளது. அங்காளம்மன் என்ற பெயரில் நிறைய திருத்தலங்கள் இருந்தாலும், சிறப்பு வாய்ந்த திருத்தலங்களில் ஒருசிலவே உள்ளன. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தலங்களில் ஒன்றுதான், மேல்பட்டாம்பாக்கம் அங்காளம்மன் ஆலயம்.
தல வரலாறு :
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில், அதிக அளவில் பர்வதராஜ குலத்தை சேர்ந்த மக்கள் வசித்து வந்தனர். இவர்களுக்கு முக்கிய தொழிலானது, மீன்பிடித் தொழில். இவர்கள் தங்கள் தொழிலை அருகில் உள்ள தேவனாம்பட்டினம் கடற்கரையில் செய்து வந்தனர். ஒரு கட்டத்தில் மீன்பிடித் தொழிலில் மிகப் பெரிய மந்த நிலை ஏற்பட்டது. கடலில் விரித்த மீனவர்களின் வலையில் மீன்கள் சிக்கவில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.
இதனால் செய்வதறியாது திகைத்த மக்கள், தங்களின் குலதெய்வமான அங்காளம்மனை வழிபட முடிவு செய்தனர். அன்னைக்கு ஓர் ஆலயம் அமைக்கவும் தீர்மானித்தனர். ஆனால் தொழில் நடைபெறாததால், எவரிடமும் பொருளாதாரம் இல்லை. அப்படியிருக்க அன்னைக்கு எப்படி கோவில் கட்டுவது என்று அனைவரும் கலங்கினர்.
இறுதியில் ஒரு முடிவுக்கு வந்த மக்கள், பராசக்தியை மனதார நினைத்தபடி கடற்கரைக்குச் செல்வோம். அங்கு அங்காளம்மனுக்கு வழிபாடு செய்துவிட்டு வருவோம். தொழில் நல்லபடியாக நடைபெற்றால், அதில்வரும் பொருளைக் கொண்டு அன்னைக்கு கோவில் கட்டலாம் என்று நினைத்தனர். அதன்படியே அம்மனை வழிபட்டு விட்டு, மீனவர்கள் வழக்கம் போல கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றவுடன், தங்கள் வலையில் மிக கனமான பொருள் ஏதோ ஒன்று மாட்டியதை மீனவர்கள் உணர்ந்தனர். பராசக்தியின் அருளால் நமக்கு ஏராளமான மீன்கள் கிடைத்துள்ளது என்று நினைத்த மீனவர்கள், வலையை தூக்கிப் பார்த்தபோது, அதில் ஒரு சின்ன கருங்கல் மட்டுமே இருந்தது கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். ‘இந்தச் சின்னக் கல் எப்படி இவ்வளவு கணமாக இருக்க முடியும்’ என்று அதிர்ச்சியில் உறைந்தனர்.
அந்தக் கல்லில் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக நினைத்த மீனவர்கள், அதை கடற்கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது ஒரு பெண்ணின் மீது அருள் வந்தது. அவர், “நீங்கள் கொண்டு வந்திருப்பது சாதாரண கல் அல்ல.. தேவியான நானே வந்திருக்கிறேன். எனக்கு கோவில் கட்டி வழிபடுங்கள். உங்கள் துன்பங்கள் எல்லாம் நீங்கும்” என்றார்.
உடனே மீனவ மக்கள், “தாயே எங்களிடம் கோவில் கட்டும் அளவுக்கு பொருளாதாரம் இல்லையே. தொழில் வேறு மந்தமாக நடைபெறுகிறது” என்று தங்களது இயலாமையை எடுத்துரைத்தனர்.
“நாளை நீங்கள் கடலுக்கு செல்லுங்கள். உங்கள் வாழ்வு செழிக்கும். நான் துணை நிற்பேன். இனி உங்களுக்கு எந்த குறையும் இருக்காது” என்று பராசக்தியின் மறு உருவாய் அந்தப் பெண் அருள்வாக்கு கூறினார். அந்த நம்பிக்கையோடு வலையை எடுத்துக்கொண்டு மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
அன்று மட்டும், அவர்கள் கரைக்கு எடுத்து வர முடியாத அளவுக்கு அதிகப்படியான மீன்கள் வலையில் சிக்கியது. மீனவர்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள். அந்த மீன்களை விற்பனை செய்து கிடைத்த பணத்தைக் கொண்டு உடனடியாக ஒரு ஆலயம் கட்டும் முடிவுக்கு வந்தனர். அதன்படி ஒரு சிறிய கீத்துக் கொட்டகை அமைத்து, கடலில் கிடைத்த அம்மனின் அருள் சக்தி நிறைந்த கல்லை, அங்கு பிரதிஷ்டை செய்தனர். அதற்கான வழிபாடுகளும் தினமும் நடந்து கொண்டிருந்தது.
சில நாட்கள் கழித்து அந்த ஊருக்கு ஒரு முதியவர் வந்தார். அவர் தன்னை மாயவரத்தில் இருந்து வருவதாகவும், தன் பெயர் ‘மாயவரத்தான்’ என்றும் அங்குள்ளவர்களிடம் அறிமுகம் செய்து கொண்டார். மேலும் தான் ஒரு சிற்பி என்றும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “என்னுடைய கனவில் வந்த பராசக்தி, இந்த இடத்தில் நான் ஒரு கல்லாக உருவம் இல்லாமல் இருக்கிறேன். நேரடியாக நீ அங்கு சென்று, எனக்கு ஒரு உருவ சிலையை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டாள். அன்னை கூறியபடியே நான் இங்கே வந்திருக்கிறேன்” என்றார்.
அதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் மெய்சிலிர்த்து போனார்கள்.
சில நாட்களிலேயே அழகான தெய்வீகத் தன்மையை உடைய ஒரு சிற்பத்தை, அந்த சிற்பி வடித்தார். மாசி மகத்தன்று அதை பிரதிஷ்டை செய்து, ஒரு சிறிய ஆலயமாக கட்டி வழிபாடு நடத்த தொடங்கினர். இன்றும் அந்த ஆலயத்தில் மாயவரத்தான் வடித்த சிலையே கருவறையில் உள்ளது. நாளடைவில் இந்த ஆலயம் பக்தர்களால் அம்மனின் அருள்பெற்று, பலராலும் திருப்பணி செய்யப்பட்டு பெரிய அளவில் கோவில் கட்டப்பட்டு விட்டது.
ஆலய அமைப்பு :
மேல்பட்டாம்பாக்கம் அங்காளம்மன் கோவில் தெருவில் உள்ளது, ஸ்ரீ ஆதி அங்காளம்மன் திருத்தலம். சிறிய அளவிலான ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், மகா மண்டபம் காணப்படுகிறது. இங்கு திரிசூலம், பலிபீடம், கொடி மரம், சிம்ம வாகனம் ஆகியவற்றை நாம் தரிசிக்கலாம். சிம்ம வாகனத்துக்கு எதிரில் விநாயகரும், அகோர வீரபத்திரரும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.
அவர்களை வணங்கிவிட்டு கடந்து சென்றால் அர்த்த மண்டபம் உள்ளது. அதற்கு அடுத்துள்ள கருவறையில் அங்காளம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். கட்டமான பீடத்தில், நான்கு திருக்கரங்களோடு ஒரு கையில் கத்தி, இன்னொரு கையில் கபாலம், உடுக்கை, திரிசூலம் ஏந்தி சிங்க வாகனத்தின் மீது அமர்ந்தபடி மிக அற்புதமாய் காட்சி தருகிறாள்.
கருவறை கோஷ்டத்தில் அருணாச்சி சமேத பாவாடைராயன் சன்னிதி உள்ளது. இதில் ஆடி மாத குலதெய்வ வழிபாடும், கும்ப படையலும் வெகு விமரிசையாக நடைபெறும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வெளி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாநிலத்தில் இருந்தும் நிறைய பக்தர்கள் இங்கு வந்து செல்வதை காணலாம்.
இத்திருத்தலத்தில் மாசி மக உற்சவம் ஐந்து நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி உற்சவம் மக நாளன்று தென்பெண்ணை நதிக்கரையில் நடைபெறுகிறது. அன்றைய தினம் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னையை ஊர்வலமாக தென்பெண்ணை நதிக்கரைக்கு கொண்டு செல்வார்கள். அங்கு அம்மனுக்கு தீர்த்தவாரி நடைபெறும். அப்போது பக்தர்கள் வேண்டும் வரத்தை அன்னை அளிப்பாள் என்பது நம்பிக்கை.
மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சவம் இங்கு நடைபெறுகிறது. இதில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தால், நிச்சயம் மகப்பேறு கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. வேண்டுதலின் படி குழந்தை பெறுபவர்கள், குழந்தை பிறந்தவுடன் இந்த ஆலயத்தில் உள்ள மகா மண்டபத்தில் வைத்துதான் பெயர் சூட்டும் விழாவை நடத்துகிறார்கள். மேலும் அம்மனின் பாதத்தில் குழந்தையை வைத்து ஆசிபெறுகிறார்கள்.
கருவறையில் இருக்கும் அம்மன், அதன் கீழே ஆதி அம்மனாக மீனவர்களால் 300 ஆண்டுகளுக்கு முன் கடலில் இருந்து எடுக்கப்பட்ட கருங்கல் உள்ளது. இதற்கும் தினமும் அபிஷேகம் ஆராதனை நடைபெறுவது சிறப்பம்சமாகும்.
திருமண தடை உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை அன்று இவ்வாலயத்திற்கு வந்து, அம்மனுக்கு பூமாலை சூட்டி அம்மனின் திருநாமத்தை பாமாலையாக உச்சரித்தால், திருமணம் விரைவில் நடைபெறும் என்பதும் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம் :
கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் அங்காளம்மன் கோவில் தெருவில் இந்த ஆலயம் உள்ளது. கடலூர் - பண்ருட்டி செல்லும் பேருந்து, விழுப்புரம் - நெல்லிக்குப்பம் செல்லும் பேருந்துகளில் இந்த ஆலயம் செல்லலாம்.
பொ.பாலாஜிகணேஷ்