என் மலர்
நீங்கள் தேடியது "Kabisthalam"
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள வீரமாங்குடி கொள்ளிடம் ஆற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்து வந்தது. கருப்பு நிற சட்டை வேஷ்டி அணிந்த நிலையில் உடல் அழுகி ஒதுங்கி கிடந்த பிணத்தை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு வீரமாங்குடி கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித்தனர்.
வீரமாங்குடி கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் இதுபற்றி கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராகவன், வேம்பு, மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி ஆற்றில் மூழ்கிய வாலிபர் யார்? அவரை யாராவது கொலை செய்து தண்ணீரில் வீசி சென்றார்களா? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
கபிஸ்தலம்:
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே சத்தியமங்கலம் காளியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் பழனிச்சாமி (வயது 57) விவசாயக் கூலி தொழிலாளி. இவருக்கும் அதே தெருவில் வசிக்கும் சண்முகன் மகன் சுரேஷ் (32) என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயலில் ஆடு மேய்த்ததில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் பழனிசாமியை சுரேஷ் தரப்பினர் திட்டியதாக கூறி இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இரு தரப்பை சேர்ந்தவர்களும் ஆயுதங்களுடன் மோதினர். இதில் சண்முகம், சுரேஷ், மேகநாதன், லட்சுமணன், பழனிசாமி, லட்சாதிபதி ஆகிய 6 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாகரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு ,ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பழனிசாமி கொடுத்த புகாரின் சண்முகம், சுரேஷ், மேகநாதன், ஆகியோர் மீதும், சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் லட்சுமணன், பழனிசாமி, லட்சாதிபதி ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாகரத்தினம், கபிஸ்தலம் சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு மற்றும் போலீசார் கபிஸ்தலம் பகுதிகளில் தீவிர ரோந்து சென்றனர்.
அப்போது வீரமாங்குடி கொள்ளிடம் ஆற்று கரையில் எந்தவித முன் அனுமதியும் இன்றி மணல் அள்ளிய வாகனத்தை சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் எந்தவித முன் அனுமதியும் இல்லாமல் மணல் அள்ளி இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த வாகனத்தை பறிமுதல் செய்து பாபநாசம் புது தெருவைச் சேர்ந்த சூர்யா (22) என்பவரையும், அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (23) என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






