என் மலர்
கோவில்கள்
சப்தகன்னியரில் சாமுண்டி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், வள்ளலார் கோயில் ஞானாம்பிகை சமேத வதாரண்யேஸ்வரர் திருக்கோயில் ஆகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். சப்தகன்னியரில் சாமுண்டி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், வள்ளலார் கோயில் ஞானாம்பிகை சமேத வதாரண்யேஸ்வரர் திருக்கோயில் ஆகும். தருமை ஆதீன அருளாட்சியில் விளங்குவது. சாமுண்டி சிவன் அம்சம் உடையவள். மூன்று கண்களும் சூலம், கட்கம், அம்பு, சக்கரம், பாசம், பலகை, வில், சங்கு ஆகியன கொண்ட எட்டுக்கைகளும் உடையவள். சடாமகுடம் உடையவள். மகிடவாகனம் உடையவள். மயிலாடுதுறை நகரில் வள்ளலார் கோயில் அமைந்துள்ளது.
மூலவர்: வதாரண்யேஸ்வரர், (வள்ளலார்)
அம்மன்: ஞானாம்பிகை
சிறப்பு: சப்த கன்னியரில் சாமுண்டி வழிபட்ட தலம்
ஊர்: மயிலாடுதுறை
மாவட்டம்: நாகப்பட்டினம்
தல வரலாறு: பார்வதிதேவி மயில் உருவம் கொண்டு மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதரை வழிபாடு செய்து வந்தாள். அவளுக்கு அருள்பாலிக்க சிவன் ரிஷபத்தில் வந்தார். நீண்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்த ரிஷபத்திற்கு, தன்னால் தான் சிவபெருமானால் இவ்வளது தூரத்தை விரைவாக கடக்க முடிந்தது என்ற ஆணவம் ஏற்பட்டது. இதை அறிந்த சிவன், நந்தியின் ஆணவத்தை அடக்க தமது திருவடியின் பெருவிரலால் சிறிது அழுத்தினார். உடனே நந்திதேவர் பாதாள உலகத்திற்கு போய்விட்டார். தனது தவறை உணர்ந்த நந்தி, தனக்கு இனிமேல் ஆணவம் ஏற்படாதவாறு ஞான உபதேசம் செய்ய இறைவனை வேண்டினார்.
அதற்கு சிவபெருமான்,நந்தி! இவ்வுலக மக்கள் அனைவரும் தங்களது பாவம் தீர கங்கையில் நீராடுவர். இந்த பாவங்களையெல்லாம் சேர்த்து கொண்ட கங்கை, தன் பாவத்தை ஐப்பசி மாத அமாவாசையன்று இத்தல காவிரியில் நீராடி போக்கி கொள்ளும். அப்போது காவிரியின் வடகரையில் தோன்றி, குருவாக இருந்து உனக்கு ஆணவத்தை அடக்கும் முறை பற்றி உபதேசம் செய்வேன்,என்றார். இதனால் இத்தலத்தில் ரிஷபத்தின் மீது அமர்ந்த கோலத்தில் மேதா தெட்சிணாமூர்த்தி காட்சியளிக்கிறார். குருவின் முன்னால் நந்தி: சிவசன்னதி, அம்மன் சன்னதியின் முன்பு தான் நந்தியைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் இத்தலத்தில் மட்டும் தான் தெட்சிணாமூர்த்தி சன்னதி முன்பு நந்தி இருப்பதைக் காண முடியும். இவரை தரிசித்தால் ஆணவம் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
தல சிறப்பு: இத்தலம் காசிக்கு இணையானது என்றும், கைலாயத்திற்கு நிகரானது என்றும் புராணங்கள் கூறுகிறது.அன்னை பார்வதிதேவி சண்ட, முண்ட அரக்கர்களை வதம் செய்வதற்காக சப்த கன்னியர்களாக வடிவெடுத்தாள். அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. தங்கள் தோஷம் நீங்க ஏழு சிவாலயங்களை தேர்ந்தெடுத்து பூஜை செய்து தோஷம் நீங்க பெற்றனர். இவர்களில் சாமுண்டி வழிபட்ட தலம் வள்ளலார் கோயில் ஆகும். சாமுண்டி இங்கு அஷ்ட புஜ துர்க்கையாக அருள்பாலிக்கிறாள். ஞானாம்பிகை அம்மன் சன்னதியை சுற்றிலும் சப்தகன்னியரின் சுதை சிலைகள் உள்ளன. இவள் ருத்ர அம்சம்; சண்ட முண்டர்களைச் சாய்ப்பதற்காக எடுத்த அவதாரம். ஒரு சிரமும், நான்கு கரமும், மூன்று நேத்திரங்களும் உடையவள். கோரைப் பற்களும், கருப்பான மேனியும் படைத்தவள். புலித்தோலை உடுத்தி - முண்ட மாலை அணிந்திருப்பாள்.
கீழ் வலக்கரத்தில் முத்தலைச் சூலமும், இடக்கையில் முண்டமும் கொண்டிருப்பாள். மேல் வலக்கரத்தில் கத்தியும் - இடக்கரத்தில் கபாலமும் ஏந்தியிருப்பாள். சவத்தின் மேல் அமர்ந்து, பயங்கர முகத்துடன் காட்சி நல்குவாள். இவள் வெற்றித் தேவதை, கோப ரூபிணி. எதிரிகளை வெற்றி கொள்ள எதிரிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இவளை வழிபட வேண்டும். இவளை உபாசித்தால் கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் கட்டுப்பட்டு நடப்பர்!

2,100 அடி உயரத்தில், அடர்ந்த வனமும், அதிக பாறைகளும் கொண்ட கரடு முரடான மலையாக சித்தர் மலை காணப்படுகிறது. இந்த மலையை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் எஸ்.மேட்டுப்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. வைகை ஆற்றின் கரையில் இயற்கை எழிலுடன் அமைந்த இந்த கிராமத்தில்தான், சித்தர் மலை இருக்கிறது. சதுரகிரியைப் போல, இந்த மலையிலும் முன்காலத்தில் சித்தர்கள் பலர் தவம் செய்து வந்ததாகவும், தற்போதும் அரூபமாக அவர்கள் இங்கு உலவுவதாகவும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த கிராமம் முன் காலத்தில் ‘சித்தர்கள் நத்தம்’ என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது, இங்கு கிடைத்த கல்வெட்டுகளின் மூலமாக அறியமுடிகிறது.
2,100 அடி உயரத்தில், அடர்ந்த வனமும், அதிக பாறைகளும் கொண்ட கரடு முரடான மலையாக சித்தர் மலை காணப்படுகிறது. மலையின் தென்புறத்தில் 2-ம் நூற்றாண்டில் சமணர்கள் தங்கியிருந்த குகைகள், படுகைகள், தீர்த்தங்கரர்கள் தங்கியிருந்ததற்கான சான்றுகள் என பல வரலாற்று தொன்மைகள் கிடைத்திருக்கின்றன. இவற்றை தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது.
மதுரையைச் சுற்றிலும் உள்ள 7 மலைகளில் சமணர்கள் வாழ்ந்ததாக வரலாற்று சான்றுகள் கிடைத்துள்ளன. அவற்றில் 2 மலைகளில் மட்டுமே, தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று இந்த சித்தர் மலை. மற்றொன்று மதுரை அழகர் கோவிலுக்கு அருகில் உள்ள கிடாரிப்பட்டி மலை. சதுரகிரி மலையைப் போல, இங்கும் பல சித்தர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அதற்கு சான்றாக இந்த மலைக்கும், வைகை ஆற்றுக்கும் வடக்கே இன்றும் ‘சித்தர்கள் நத்தம்’ என்று ஊர் இருப்பதை சொல்லலாம்.
இந்த மலை மீது 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான சிவாலயம் ஒன்று உள்ளது. இங்குள்ள இறைவனின் திருநாமம் ‘சித்தர் மகாலிங்கம்’ என்பதாகும். இந்தக்கோவிலானது, மலையின் வடக்குபுறத்தில் அமைந்திருக்கிறது. மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவலிங்கங்களில், இந்த சித்தர்மலை சிவாலயமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய வனத்துறை, தொல்லியல் துறை மற்றும் இந்துசமய அறநிலையத்துறை ஆகியோரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலைக் கோவிலுக்கு, ஆடி அமாவாசை, பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் மலை ஏறிச் சென்று, சித்தர் மகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்து வருகிறார்கள். முன்பு இந்த மலையில் ஏறுவது மிகவும் சிரமத்திற்குரிய காரியமாக இருந்தது. இதனால் அடிவாரத்தில் இருந்து சிவன் கோவில் வரை படிக்கட்டுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சிவனடியார்கள் மற்றும் பக்தர்களின் துரித நடவடிக்கை காரணமாக சுமார் 1200 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
சித்தர் மகாலிங்கம் கோவிலின் எதிர் திசையில், ஒரு பாறையில் லிங்க வடிவ ஓவியம் பாறையிலேயே வரையப்பட்டு இருக்கிறது. மேலும் மூலிகைத் தன்மை கொண்ட வற்றாத சுனை ஒன்றும் இந்த மலைக் கோவில் அருகே இருக்கிறது. கோவிலின் பின்புறம் அமைந்துள்ள இந்த சுனைக்கு மேலே உள்ள கற்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இந்த ஆலயம், இத்திருமலையை சுற்றி அமைந்துள்ள அனைத்து கிராம மக்களுக்கும் வழிபடும் திருக்கோவிலாக விளங்குகின்றது. இந்தப் பழமையான திருத்தலம் மேற்கு நோக்கி அமைந்திருப்பதும், மூலவரின் ஆவுடை வலதுபுறம் அமைந்து அருள்பாலிப்பதும், சித்தர்கள் அரூபமாக வழிபடுவதும் இதன் கூடுதல் சிறப்பாகும்.
அமைவிடம்
திண்டுக்கல் நகரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நிலக்கோட்டை. அங்கிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் எஸ்.மேட்டுப்பட்டி கிராமம் அமைந்திருக்கிறது. நிலக்கோட்டையில் இருந்து எஸ்.மேட்டுப்பட்டிக்கு அதிக அளவில் பஸ் வசதி இல்லை என்றாலும், வாகனங்களில் செல்லமுடியும்.

கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டியில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரத்தடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டியில் பிரசித்திபெற்ற மரத்தடி மாரியம்மன் கோவில் உள்ளது. 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவிலில் வடக்கு திசை நோக்கி மாரியம்மன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தக் கோவிலின் தலவிருட்சம் ஆலமரம் ஆகும்.
குழந்தைப்பேறு
வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் மரத்தடி மாரியம்மனுக்கு பால், தயிர், தேன், பன்னீர், திருமஞ்சனம், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் மாலை நேரங்களில் அபிஷேகம் நடைபெறும். அதன்பிறகு தீபாராதனை காண்பிக்கப்படும்.
தீராத நோயால் அவதிப்படுபவர்கள் மரத்தடி மாரியம்மனை மனமுருகி வழிபட்டால் அவர்களது நோய் தீருவதாக கூறப்படுகிறது. மேலும், குழந் தைப்பேறு இல்லாத தம்பதிகள் குழந்தை போன்ற சிறு உருவபொம்மையை செய்து வைத்து அம்மனை வழிபட்டு வந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். மேலும், தங்களது நீண்ட நாள் வேண்டுதல் நிறைவேறியவுடன் அம்மனுக்கு காணிக்கை செலுத்தும் விதமாக பக்தர்கள் பொங்கல் வைத்து மரத்தடி மாரியம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.
தல வரலாறு
சின்னவேடம்பட்டி கிராம மக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று அம்மனை வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் அந்தக் கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக அம்மனிடம் உத்தரவு கேட்கும்போது, அங்கு அருளாடிய ஒருவர் “நான் சின்னவேடம்பட்டி கிராமத்தில் தென்மேற்கு திசையில் உள்ள ஒரு ஆலமரத்தில் குடிகொண்டிருக்கிறேன்” என்று அருள்வாக்கு கூறியதால் அன்றுதொட்டு கிராம மக்கள் அனைவரும் ஆலமரத்தடியில் விளக்கேற்றி அம்மனை பயபக்தியுடன் வணங்கி வந்தனர்.
நாளடைவில் இப்பகுதியில் அம்மனுக்கு கோவில் அமைக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். இதையொட்டி மரத்தடியில் தென்னை ஓலை பந்தல் அமைத்து அம்மனை வழிபட்டனர். தற்போது ஒரு சிறிய கோவிலை கட்டி வழிபட்டு வருகின்றனர். மரத்தடி மாரியம்மன் கோவிலில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ந் தேதி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவிழா
இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் அம்மனிடம் உத்தரவு கேட்டபிறகே சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை அன்று திருவிழா நடத்தப்படுகிறது. 15 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மரத்தடி மாரியம்மனுக்கு நாள் தோறும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். 11-ம் நாள் வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை நடைபெறும். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு செல்வார்கள். விழாவின் சிகர நிகழ்ச்சியான வேண்டுதல் தேர் இழுக்கும் நிகழ்ச்சி 15-ம் நாளில் நடைபெறும். அப்போது பக்தர்கள் சக்தி கரகம் மற்றும் அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இந்த விழாவில் சின்னவேடம்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து செல்வார்கள்.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் கர்நாடக மாநிலம் ஹாசன் நகரத்தில் உள்ள ஹாசனாம்பா கோவில் ஆண்டுக்கு ஒரு முறை தீபாவளிக்கு மட்டுமே திறக்கப்படுகிறது. இந்த கோவிலின் சிறப்புகள் குறித்து பார்க்கலாம்....
கர்நாடக மாநிலம் ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஹாசனாம்பாதேவி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஹாசனாம்பா கோவில் இருப்பதால்தான் இந்நகரமும் ஹாசன் நகரம் என்றே பெயர் பெற்றிருக்கிறது. மேலும், இக்கோவில் சிறப்புகளையும், தகவல்களையும் கேட்கும்போது மெய் சிலிர்க்கிறது.
இக்கோவில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்காக திறந்து விடப்படுகிறது. அக்டோபர் 25-ஆம் தேதியிலிருந்து, நவம்பர் 4-ஆம் தேதிவரை பக்தர்கள் ஹாசனாம்பா அம்மனை தரிசனம் செய்யலாம். அதாவது 10 நாட்களும் இரவு முழுவதும் நடை சாத்தப்படாமல் திறந்தே இருக்கும். எனினும் கோவில் 24ஆம் தேதியே திறக்கப்பட்டாலும் 24 மற்றும் 5-ஆம் தேதிகளில் சடங்குகள் நடைபெறுவதால் அந்த நாட்களில் பொதுமக்களுக்கு கோவிலில் நுழைய அனுமதி இல்லை.
இத்தகைய புகழ்பெற்ற ஹாசனாம்பாவுக்கு சுமார் 12-ம் நூற்றாண்டில் கிருஷ்ணப்பா நாயக்க பாளையக்காரரின் காலத்தில் கோவில் எழுப்பப்பட்டது. ஹாசனாம்பா கோவிலில் பல வீநோத நம்பிக்கைகள் உள்ளது....
மாமியார்-மருமகள் கல்....
ஒரு குட்டி கதை.... பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஹாசனாம்பா கோயிலுக்கு நாள் தவறாமல் வந்து வழிபட்டு கொண்டிருந்திருக்கிறாள் ஒரு பெண். ஒருநாள் அவளை தொடர்ந்து வந்த அவளின் மாமியார் ''வீட்டில் வேலை செய்யாமல் இங்கென்ன செய்கிறாய்'' என்று சொல்லி அப்பெண்ணை அடித்திருக்கிறாள். அப்போது அப்பெண் வலியால் சத்தமிடவே அம்மன் அவள் முன்பு பிரசன்னமாகி அவளை கல்லாக மாற்றிவிட்டாள் என்று சொல்லப்படுகிறது. அந்த கல்தான் தற்போது மாமியார்-மருமகள் கல் என்ற பெயரில் கோயிலில் காணப்படுகிறது. இந்த கல் ஆண்டுதோறும் அரிசி அளவு அம்மன் விக்ரகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதாம். அதோடு இது நகர்ந்து நகர்ந்து அம்மன் விக்ரகத்தை அடைந்துவிட்டால் இந்த கலியுகம் அழிந்துவிடும் என்று நம்பப்படுகிறது.
திருடர்கள் கோயில்...
ஹாசனாம்பா கோயிலில் ஒருமுறை அம்மன் ஆபரணங்களை திருடிச்செல்ல நான்கு திருடர்கள் வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அம்மன் அவர்களை கல்லாக போகுமாறு சபித்ததாக சொல்லப்படுகிறது. அந்த நால்வரின் கற்சிலைகள் தனிக்கோயிலாக 'திருடர்கள் கோயில்' என்ற பெயரில் ஹாசனாம்பா கோயில் வளாகத்தினுள்ளேயே அமைந்திருகிறது.
அணையா தீபம் ...
ஹாசனாம்பா கோயில் ஒவ்வொரு ஆண்டும் மூடப்படும் நாளான பலி பட்யாமி என்ற தினத்தில் கோயிலில் தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபமானது அடுத்த ஆண்டு அஸ்வினி பூர்ணிமாவை தொடர்ந்து வரும் வியாக்கிழமை கோயில் திறக்கப்படும் நாள் வரை அணையாமல் எரிந்துகொண்டிருக்குமாம்.
கோயிலுக்குள் குழந்தை மாட்டிக்கொண்டால்...
கோயில் மூடப்படும் நாளில் தவறுதலாக குழந்தை ஏதும் உள்ளே மாட்டிக்கொண்டால் மீண்டும் கோயில் திறக்கப்படும் நாள் வரை அந்த குழந்தை உயிருக்கு ஆபத்தில்லாமல் நலமுடன் இருக்கும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.
வாடா மலர்கள்....
ஹாசனாம்பா கோயில் மூடப்படும் இறுதி நாளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்படும் பூக்கள், மாலையிடப்படும் பூக்கள் எல்லாம் அடுத்த ஆண்டு வரை வாடாமல் இருக்குமென்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த அதிசயத்தை பார்ப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் கோயில் திறக்கப்படும் நாளில் கோயிலுக்கு வருகிறார்கள்.

திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் திருக்கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒரு திருத்தலம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் திருக்கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒரு திருத்தலம். சமுத்திர ராஜனுடன் கோபித்துக்கொண்ட திருமகள் வந்து நின்ற ஊர் என்பதால் ’திருநின்றவூர்’ எனப் பெயர் பெற்றது.
தலவரலாறு
சமுத்திர ராஜனுடன் கோபம் கொண்ட திருமகள் தாயார் வந்து நின்ற இத்தலத்தில், சமுத்திர ராஜன் வந்து தாயாரை திரும்பி வர வேண்டியபோது, ’என்னைப் பெற்ற தாயே’ என்று பலவாறு சமாதானம் செய்ய முயன்றார். இக்காரணத்தால் தாயார் திருநாமம் ’என்னைப் பெற்ற தாயார்’ என்றானது. எவ்வாறு வேண்டியும் தாயார் சமாதானம் அடையாததால், சமுத்திர ராஜன் மீண்டு சென்று பெருமாளிடம் உதவி வேண்ட, அவரும் பக்தனுக்காக இங்கு வந்து திருமகளிடம் சமாதானம் கூறி வைகுந்தம் வர சம்மதிக்க வைத்த திருத்தலம்
108 திவ்விய தேசங்களில் 58-ஆவது திருத்தலமாக விளங்குகிறது திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் கோயில். பகவத் ஸ்ரீராமானுஜர் வடமொழியில் மங்களா சாசனம் செய்திருப்பது இந்த கோயிலுக்கு கூடுதல் சிறப்பு. திருமங்கையாழ்வார் திருவள்ளூருக்கு வந்து சிலநாள் தங்கியிருந்து, திரு எவ்வுள் கிடந்தான்மீது "பலச்சுருதி' யுடன் பதினோரு பாசுரங்கள் பாடி னார். பிறகு தென்கிழக்காய் பத்து கல் தொலைவிலுள்ள திருநின்றவூருக்குச் சென்றார்.
ஆழ்வார் அங்கு வந்தபோது இரவு நேரமானதால், திருக்கோவில் நடையடைக்கப்பட்டு பெருமாள் ஏகாந்தத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்கள். எனவே ஆழ்வார் பயணத்தைத் தொடர்ந்து மாமல்லபுரம் வந்து சேர்ந்தார். திருமங்கையாழ்வார் திருநின்றவூரில் சேவை சாதிக்கும் திருமகளையும் பக்தவத்சலப் பெருமாளையும் சேவிக்காமல்- பாசுரங்கள் செய்யாமல் போனது திருமகளுக்கு மிகுந்த மனவருத்தத்தை அளித்தது.
அவள் பெருமாளை உசுப்பி, கடல்மல்லைக்குச் சென்று திருமங்கையாழ்வாரிடம் தங்களுக்கான பாசுரங்களைப் பெற்றுவருமாறு சொல்ல, பிராட்டியின் சொல்தட்ட முடியாத பெருமாள், கடல்மல்லைக்குச் சென்றார். அப்போது, திருமங்கையாழ் வார் தலச்சயனப் பெருமாள் சந்நிதியில் நின்று சேவித்துக் கொண்டிருந்தார். தான் வந்திருப்பதை ஆழ்வாருக்கு குறிப்பால் உணர்த்திய திருநின்றவூர் பெருமாள், தான் வந்த நோக்கத்தை சூசகமாகத் தெரிவித்தார். பெருமாள் வருகையைப் புரிந்துகொண்ட ஆழ்வார் பூரித்துப் போனார். மாமல்ல புரத்திலிருந்து கொண்டே, திருநின்றவூர் பெருமாள்மீது பாசுரம் செய்தார்.
பாசுரத்துடன் திரும்பிவந்த திருமாலிடம் தாயார், ""எல்லா திவ்விய தேசங்களுக்கும் ஆழ்வார் பத்திற்கு மேற்பட்ட பாசுரங்கள் பாடியவர். நமக்கு மட்டும் ஏன் ஒரு பாசுரத்து டன் நிறுத்திக்கொண்டார்?'' என்று கேட்டு, மேலும் பாசுரங்களைப் பெற்று வருமாறு எம்பெருமாளை அனுப்பி வைத்தாள். அதற்குள் திருமங்கையாழ்வார் பல திவ்விய தேசங்களைப் பாடியும், சேவித்துக்கொண்டும் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருக்கண்ண மங்கைக்கு வந்துசேர்ந்தார்.
இங்கே ஆச்சரியமான ஒற்றுமை என்னவென்றால், திருக்கண்ணமங்கை பெருமாளின் திருநாமமும் ஸ்ரீ பக்தவச்சலப் பெருமாள்தான். திருநின்றவூர் பெருமாள் திருக்கண்ணமங்கை பெருமாளின் சந்நிதியில் நின்றிருந்த திருமங்கை ஆழ்வாரிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தோடு, நோக்கத்தையும் உணர்த்தினார். பரவசத்தால் நெகிழ்ந்துபோன மங்கை மன்னன், கீழ்வரும் பாசுரத்தை அருளிச் செய்தார்.
இருப்பினும் இந்த கோயிலுக்கு தல வரலாற்றிலோ அல்லது புராணங்களிலோ கட்டியவர்களைப் பற்றிய குறிப்புகள் ஏதுமில்லை. ஆனாலும் சரித்திரப் பின்னணியும் இத்திருக் கோவிலுக்கு உண்டு. இரண்டு பாசுரங்களைப் பாடிய திருமங்கை ஆழ்வார் 8-ஆம் நூற்றாண் டைச் சேர்ந்தவர் என்பதும்; கி.பி. 690-728 வரை- அதாவது 38 ஆண்டுகள் அரசாட்சி செய்த பல்லவ மன்னன் இராஜசிம்மன் காலத்தில் இத்திருக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம் என்பதையும் அறிகிறோம்.
மூலவர்
இக்கோயிலில் உள்ள மூலவர் பக்தவத்சல பெருமாள் (பத்தராவிப்பெருமாள்) ஆவார். தாயார், பெருமாள் சன்னதிகளுடன் ஆண்டாள், சக்கரத்தாழ்வார், ஆதிசேஷன், விஷ்வக்ஸேனர் (சேனை முதல்வன்), பன்னிரு ஆழ்வார்கள் மற்றும் ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோருக்குத் தனித்தனியாகச் சன்னதிகள் அமைந்துள்ளன
மங்களாசாசனம் பெற்றது
திருமங்கையாழ்வார் இத்திருத்தலத்தைப் பாடாது சென்று விடவே, தாயார் பெருமாளைப் பாடல் பெற்று வர அனுப்பி வைத்தார். பக்தவத்சல பெருமாள் வருவதற்குள் திருமங்கையாழ்வார் திருவிடந்தை திருத்தலத்தையும் தாண்டி, திருக்கடல்மல்லையும் (மாமல்லபுரம்) வந்துவிட்டார். அங்கே திருநின்றவூர் பெருமாளுக்காக ஒரு பாடல் பாட, பாடலுடன் திரும்பி வந்த பக்தவத்சல பெருமாள் ஒரு பாடல் மட்டும் பெற்றுவந்தது கண்ட தாயார், மற்ற திருத்தலங்களுக்கு அதிகம் பாடல் இருக்க நமக்கு ஒன்றுதானா என்று திரும்பவும் அனுப்ப, அதற்குள் திருக்கண்ணமங்கை வந்து விட்ட திருமங்கையாழ்வார் திருநின்றவூர் பெருமாள் (பக்தவத்சல பெருமாள்) திரும்பவும் வந்ததை ஓரக்கண்ணில் கண்டு அவரையும் மங்களாசாசனம் செய்தார்.

திருக்கண்ணன்குடியின் சிறப்பு என்றால், தாயார் சந்நிதியில் உள்ள மூலவரும் உற்ஸவரும் ஒரே ஜாடையில் இருப்பதுவாம். இது வேறு எங்கும் காணமுடியாத அழகு என்பர்.
கண்ணன் என்னும் கருந்தெய்வத்தின் மீது பக்தி கொண்டு எந்நேரமும் அவன் நினைவில் திளைத்தார் மகரிஷி வசிஷ்டர். கண்ணனும் வெண்ணெயும் இணைபிரியாததாயிற்றே! எனவே, வெண்ணெயைத் திரட்டி, அதைக் கெட்டியாக்கி கண்ணன் உருவம் செய்து பூஜித்து வந்தார். வசிஷ்டரின் பக்தியால் அந்த வெண்ணெய் இளகவில்லை. இவரது பக்தியின் சிறப்பு அறிந்து ஒருநாள் கண்ணனே நேரில் வந்தான்- ஒரு குழந்தையின் வடிவாக. நேரே பூஜை இடத்துக்குச் சென்ற அந்தக் குழந்தை வெண்ணெய்க் கண்ணன் உருவத்தை எடுத்து வாயில் விழுங்கிச் சுவைத்தது.
வசிஷ்டருக்கு கோபம் வந்தது. குழந்தையை விரட்டினார். அது பிடிபடவில்லை. குழந்தையின் வேகத்துக்கு வசிஷ்டரால் ஈடுகொடுக்க முடியவில்லை. பிடிபடாது ஓடிய குழந்தை மகிழ மரம் நிறைந்திருந்த வனத்தில் ஓர் ஆசிரமத்துக்குள் சென்றது. அங்கே தவத்தில் இருந்த முனிவர்கள், வந்த குழந்தை யாரெனக் கண்டுகொண்டார்கள். எவனைத் தரிசிப்பதற்காக தவமாய்த் தவமிருந்தார்களோ அவனே நேரில் வந்தால்.. தங்கள் பாசக் கயிற்றால் அவனைக் கட்டிப் போட்டனர். கண்ணன் சொன்னான்... சீக்கிரம் என்ன வேண்டுமோ கேளுங்கள்... வசிஷ்டர் துரத்திக்கொண்டு வருகிறார்.
அவர்களோ, "கண்ணா உன் தரிசனத்துக்காகத்தானே நாங்கள் தவமிருந்தோம். எங்களுக்குக் காட்சியளித்தது போல் நீ, இங்கே வரும் பக்தர்கள் எல்லோருக்கும் காட்சி தந்து அருள வேண்டும்'. அதே நேரம் வசிஷ்டரும் வந்தார். கண்ணன் காலைப் பிடித்துக் கட்டிக் கொண்டார். இப்படி கண்ணன் தாம்புக் கயிறால் கட்டுண்டதால் தாமோதரன் ஆனான். வசிஷ்டரின் பிடிக்குள் கட்டுண்டு நின்றதால் ஊர் கண்ணன்குடியானது.
கிருஷ்ணாரண்யம் எனப்படும் இத்தலம், பஞ்ச கிருஷ்ணாரண்யத் தலங்களில் ஒன்று. திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி ஆகிய ஐந்து தலங்களையும் பஞ்ச கிருஷ்ணாரண்யத் தலங்கள் என்பர். இதனை பஞ்ச பத்ரா என்றும் புராணம் கூறும். ஆறு, காடு, நகரம், ஆலயம், தீர்த்தம் இவை ஐந்தினாலும் புகழ்பெற்ற இடம் என்பதால் பஞ்ச பத்ரா என்று ஆனது.
திருக்கண்ணங்குடி அருகேயுள்ள மற்ற நான்கு தலங்களையும் சேர்த்து பஞ்சநாராயணத் தலம் என்பர். இங்கே மூலவர் திருநாமம் லோகநாதப்பெருமாள் என்பது. உற்ஸவர்: தாமோதர நாராயணன். ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் வீற்றிருக்கும் அழகே அழகு. தாயார்: லோகநாயகி. அரவிந்தநாயகி என்பது உற்ஸவர் தாயாரின் திருநாமம். மகிழ மரமே தல விருட்சமாக உள்ளது. சிரவண புஷ்கரிணி தீர்த்தம்.
இங்கே பெருமாள், பிருகு முனிவர், பிரம்மா, உபரிசரவஸ், கெüதம ரிஷி, திருமங்கையாழ்வார் ஆகியோருக்கு பிரத்யட்சமாகி அருள் புரிந்துள்ளார். திருமங்கையாழ்வார் 10 பாசுரங்களால் இந்தப் பெருமாளைப் பாடியுள்ளார். மேலும், வைணவ ஆசார்யரான மணவாள மாமுனிகள் மனமுவந்து கொண்டாடிய பெருமாள் இவர்.
திருக்கண்ணன்குடியின் சிறப்பு என்றால், தாயார் சந்நிதியில் உள்ள மூலவரும் உற்ஸவரும் ஒரே ஜாடையில் இருப்பதுவாம். இது வேறு எங்கும் காணமுடியாத அழகு என்பர். மற்ற திவ்ய தேசங்களில் இரு கரம் குவித்த நிலையில் கருடாழ்வார் இருப்பார். ஆனால் இங்கே இரு கைகளையும் கட்டிக் கொண்டு தரிசனம் தருகிறார். இது வைகுண்டத்திலுள்ள கருடனின் காட்சி என்பர்.
இந்தத் தலத்தைப் பற்றிக் கூறும்போது, ஒரு பழமொழியாக ""காயாமகிழ், உறங்காப்புளி, ஊறாக்கிணறு, தோலா வழக்கு- திருக்கண்ணங்குடி'' என்பார்கள்.
உறங்காப்புளி: திருமங்கையாழ்வார் அரங்கன் ஆலயத்தில் மதில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். கட்டடப் பணிக்கு வேண்டிய திரவியம் இல்லை. அப்போது "நாகப்பட்டினத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட புத்தர் சிலை உள்ளது. அதைக் கொண்டுவந்து மதில் கட்டலாம்' என்று இவரது சீடர்கள் கூற, ஆழ்வாரும் நாகை சென்று அச்சிலையைக் கண்டு, அறம் பாடினார். சிலை வடிவம் மட்டும் அவ்வாறே இருக்க, சுற்றி வேயப்பட்ட தங்கம் தானாக வந்து விழுந்ததாம். அதை எடுத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் செல்லும்போது, இவ்வூரின் வழியாக வந்தவர் கால்கள் நோவு எடுக்க சாலையோர சேறு சகதி நிறைந்த நிலத்தில் அதைப் புதைத்துவிட்டு புளியமரத்தினடியில் படுத்துறங்க எண்ணினார். புளிய மரத்தைப் பார்த்து "நான் அயர்ந்து தூங்கினாலும் நீ தூங்கக் கூடாது' என்று கூறி கண்ணயர்ந்தார். மறுநாள் விடிந்தபொழுது, வயலுக்குச் சொந்தக்காரன் உழத் தொடங்க, புளிய மரம் இலைகளை உதிர்த்து ஆழ்வாரை எழுப்பியதாம். எனவே அவர் மரத்தைப் பார்த்து "உறங்காப்புளி வாழ்க' என்றாராம்.
தீரா வழக்கு!: பின்னர் ஆழ்வாருக்கும் நிலத்தின் சொந்தக்காரனுக்கும் நிலப்பிரச்னை எழுந்தது. வாதம் முற்றி, ஊர்ப் பஞ்சாயத்தில் சென்றது. நிலத்துச் சொந்தக்காரன் தனது உரிமைப் பட்டாவை பஞ்சாயத்தாரிடம் காட்டினான். பஞ்சாயத்தார் ஆழ்வாரிடம் கேட்க, "எனக்கு பட்டா ஸ்ரீரங்கத்தில் உள்ளது. இன்று ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். இங்கே தங்கியிருந்து நாளை சென்று நானும் உரிமைப் பட்டயத்தைக் கொண்டு வருகிறேன்' என்றார். ஊர்ப் பஞ்சாயத்தும் இதை ஆமோதித்தது. வழக்கும் முடிவுறாமல் போனது. அன்று முதல் இன்றுவரை இந்த ஊரில் எந்த வழக்கு ஏற்பட்டாலும் சரியான தீர்ப்பில்லாமல் தீரா வழக்காகவே (தோலா வழக்காகவே, தீராத வழக்காகவே) இருந்து வருகிறதாம்.
ஊறாக்கிணறு!: ஒரு நாள் தங்கிச் செல்ல அவகாசம் கேட்ட ஆழ்வாருக்கு சிறிது நேரத்தில் தாகம் எடுத்தது. கிணற்றடியில் நீர் இறைத்த பெண்களிடம் தாகம் தணிக்க நீர் கேட்டார். இவர் நிலத்துக்கு வழக்குரைத்தது போல் நம்மிடமும் ஏதாவது செய்தால் என்னாவது என்று எண்ணி தண்ணீர் தரமுடியாது என்றனர். வருந்திய ஆழ்வார், "இந்த ஊரின் கிணறுகளில் நீர் ஊறாமல் போகக் கடவது' என்று சபித்துவிட்டார். அது இன்றும் தொடர்கிறதாம். கிடைக்கும் நீரும் உப்புநீராகத்தான் உள்ளதாம். அதிசயமாக கோயிலுக்குள் திருமஞ்சனத்துக்காக எடுக்கப்படும் மடப்பள்ளி கிணற்றில் மட்டும் சற்று நன்னீர் உள்ளது.
காயா மகிழ்! பசி மயக்கத்தில் மகிழ மரத்தடியில் அமர்ந்தார் ஆழ்வார். அப்போது ஸ்ரீகிருஷ்ணனே தீர்த்தமும் பிரசாதமும் ஏந்தி வந்து இவரைத் தட்டியெழுப்பி, உணவைக் கொடுத்தார். தன்னை மறந்த நிலையில் உணவுண்டு ஏறிட்டுப் பார்த்த ஆழ்வார், வந்தவனைக் காணாது ஆச்சர்யம் அடைந்தார். அந்த மகிழ்வில் மகிழ மரத்தைப் பார்த்து "நீ என்றும் பசுமையுடன் இளமை குன்றாமல் காயாமகிழ மரமாக இருப்பாய்' என்றார்.
இவ்வாறு இந்தத் தலத்துக்கென சில தடங்களைப் பதித்த ஆழ்வார் அன்று இரவோடு இரவாக வயலில் இருந்து தங்கத்தை எடுத்துக் கொண்டு ஸ்ரீரங்கம் சென்று விட்டார்.
சிறப்பு: 108 வைணவத் திருப்பதிகளில் 18வது தலமும் சோழ நாட்டுத் தலங்கள் நாற்பதில் 26வது தலமுமாக விளங்குகிறது திருக்கண்ணங்குடி.
பிரார்த்தனை: இங்கே பெருமாளுக்கு பால்பாயசம் நைவேத்யம் செய்து, குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்தனை செய்கிறார்கள்.
திருப்பணி: சமீபத்தில் இத்திருக்கோயிலில் பாலாலயம் நடைபெற்றுள்ளது. திருப்பணி வேலைகள் முடிந்து விரைவில் மஹாசம்ப்ரோஷணம் நடக்க வேண்டும் என்பதே பக்தர்களின் விருப்பம்.
அமைவிடம்: நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ள ஆழியூரில் இறங்கி தெற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தை அடையலாம். ஆழியூருக்கு பேருந்து வசதி நிறைய உண்டு.
கோயில் தரிசன நேரம்: காலை 8-12, மாலை 5-9 வரை.
தொடர்புக்கு: 99431 38591

சதுரகிரி பிரமிக்க வைக்கும் சிவ தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு இன்றும் ஏராளமான சித்தர்கள் தங்கள் தவத்தை மேற்கொண்டு வருவதாக ஆன்மிகச் சான்றோர்கள் பலரும் நம்புகின்றனர். இந்த மலையின் சிறப்புகளைப் பற்றி கொஞ்சம் அறிவோம்.

சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன் திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள். வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட துறவி, அவளுக்கு ‘சடதாரி’ என்று பெயரிட்டு, காக்கும் தேவியாக சிலையாக மாற்றி விட்டு மறைந்தார்.
மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுர கிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான். சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன், இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்துக் கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி கண்ணீர் வடித்தான்.
சிவபெருமான் அவனை தேற்றி, “நீ தேவலோகத்தைச் சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்” என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி ‘மகாலிங்கம்’ என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம். சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோவில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் இருக்கின்றன. இந்தப் பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்ரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத் தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு. இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது.
கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. திடகாத்திரமான இளைஞர்கள் மட்டுமே இங்கே செல்ல முடியும். மிகவும் செங்குத்தான பாதை இது. இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு, சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுகிறது. அதைக் கடந்து சென்றால், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோவில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோவில் வரும். பின்னர் மகாலிங்கம் கோவிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.
இரட்டை லிங்கம்
ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். இவர் பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார். “சிவபெருமானே.. தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள் என்பதை, என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்” என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, “நான் உம்மை நினைக்கவில்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்” என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னிதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.
பிலாவடி கருப்பு
வணிகர் ஒருவருக்கு சிவன் கோவில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால் பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், “சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்” என்றார். வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னிதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை ‘பிலாவடி கருப்பர்’ என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.

வேலூர் சிங்கிரி கோவில் கிராமத்தின் வழியே ஓடும் நாகநதியின் வடகரையில், இலங்காமலை அடிவாரத்தில் கி.பி. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த லட்சுமிநரசிம்மர் கோவில் அமைந்துள்ளது.
வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த கத்தாழம்பட்டு ஊராட்சியில் சிங்கிரி கோவில் கிராமம் உள்ளது. இவ்வூரின் வழியே ஓடும் நாகநதியின் வடகரையில், இலங்காமலை அடிவாரத்தில் கி.பி. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த லட்சுமிநரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. வேலூரிலிருந்து கணியம்பாடி வழியாக சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிலும், ஆரணியிலிருந்து கண்ணமங்கலம் வழியாக 25 கிலோமீட்டர் தூரத்திலும் இந்தக் கோவில் இருக்கிறது.
இக்கோவிலுக்குச் செல்லும் வழியில் ஓடும் நாகநதியில், மழைக்காலங்களில் தண்ணீர் ஓடும். அப்போதெல்லாம் இந்த ஆற்றை கடந்தே கோவிலுக்குச் செல்லமுடியும். மழைக்காலங் களில் ஆற்றில் நீர்வரத்து இருக்கும்போது கோவிலுக்குச் செல்லமுடியாது. எனவே தற்போது பக்தர்கள் வசதிக்காக ஆற்றின் குறுக்கே புதிய தரைமட்ட பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இக்கோவில் முதலாம் ராஜநாராயண சம்புவராய மன்னர் கட்டியது என்பதை கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. இக்கோவிலுக்கு ராஜகோபுரம், கருவறை பின்புறம் உள்ள பாறையில் எவ்வித அஸ்திவாரமும் இன்றி 1,400 ஆண்டுகளாக நிற்கிறது. இக்கோவில் வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஈசானிய மூலையில் புதிதாக கட்டப்பட்ட பால ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது.
இயற்கை எழில் சூழ்ந்த மலையடிவாரத்தில் இருந்து கோவிலுக்குச் செல்ல படிக்கட்டுகள் உள்ளது. விசாலமான கருவறையில் பிரம்மாண்டமாக சுமார் 5 அடி உயரத்தில் சிங்க முகத்துடன், தனது வலது பக்கம் மடியில் லட்சுமியை அமர வைத்துக்கொண்டு கம்பீரமாக லட்சுமி நரசிம்மர் வீற்றிருக்கிறார். அவரது இரண்டு கைகளிலும் சங்கு சக்கரங்களைத் தாங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இங்கு வரும் பக்தர்கள் அனைத்து நலன்களும் கிடைக்க லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்து செல்கின் றனர். மாதந்தோறும் சுவாதி நட்சத்திரத்தன்று சிறப்புப் பூஜைகள் நடைபெறும். ஆண்டுதோறும் நரசிம்ம ஜெயந்தியன்று சுவாமி திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடக்கிறது. இதைக்காண பெங்களூரு, சென்னை, சித்தூர் (ஆந்திரா) உள்பட பல்வேறு ஊர்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
மேலும் ரத சப்தமி விழாவும் இங்கு சிறப்பான முறையில் நடத்தப்படுகிறது. இங்கு பரந்த அர்த்த மண்டபம், அதன் எதிரே பலிபீடம், அதன் முன்பு கருடாழ்வார் அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் கருவறையின் வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளில் அமைந்துள்ள கல்வெட்டுக்கள் சம்புவராயர் மற்றும் விஜய நகர மன்னர்கள் ஆட்சி காலத்தைச் சேர்ந்தவையாகும்.
இக்கல்வெட்டில் இத்திருத்தலப் பெருமாளை ‘அவுபள நாயனார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜய நகர மன்னரின் கல்வெட்டில், இவ்வூர் ‘ஓபிளம்’ எனவும், கருவறை இறைவனை ‘சிங்கபெருமாள்’ எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
விஜய மகாராஜர் குமாரர் சச்சிதானந்த உடையார் கால கல்வெட்டில், முருங்கைப்பற்றை சேர்ந்த மீனவராயன் செங்கராயன் என்பவர், கோவிலுக்கு திருவிளக்கு, நிலம் தானம் அளித்ததாகவும் தெரியவருகிறது. கி.பி. 14-ம் நூற்றாண்டில் முதலாம் சம்புவராய மன்னர் ராஜநாராயணன் என்பவரால் கோவிலாக எழுப்பப்படுவதற்கு முன்னரே, கி.பி. 8-ம் நூற்றாண்டில் லட்சுமி நரசிம்மர் சிறிய சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்திருப்பதை வரலாற்று சான்றுகள் பகிர்கின்றன.
இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
கோவிலில் உண்டியல் கிடையாது. ஆனாலும் பக்தர்கள் நேரடியாக வழங்கும் காணிக்கை மற்றும் நன்கொடைகள் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
அப்போது புதிதாக பாறை மீது ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு அமர்ந்த நிலையிலுள்ள ஆஞ்சநேயர் சேவை சாதித்து வருகிறார்.
எனவே 1,400 ஆண்டுகால பழமைவாய்ந்த ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமியை பக்தர்கள் அனைவரும் தரிசித்தால் வேண்டிய நலன்களுடன், பணக்கஷ்டம், மனக்கஷ்டம் தீரும் என்பது நிதர்சன உண்மையாகும்.
அமைவிடம்
இத்திருக்கோவிலுக்குச் செல்ல வேலூரில் இருந்து கணியம் பாடி, கீழ்அரசம்பட்டு வழியாகவும், ஆரணியிலிருந்து கண்ணமங்கலம், காட்டுக்காநல்லூர் வழியாகவும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. கணியம்பாடி, கண்ணமங்கலம் ஆகிய இடங்களிலிருந்து ஆட்டோ மூலமும் பயணிக்கலாம். சனிக்கிழமைகளில் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கேரள மாநிலத்தின் எல்லையில் காணப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் ஒரு சிறிய குன்றில், அருள்மிகு ஸ்ரீ திருமலைக்குமார சுவாமி கோவில் அமைந்துள்ளது.
திருமலைக்கோவில் (Thirumalai Kovil Panpoli) தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தில் தென்காசி தாலுக்காவில் செங்கோட்டை நகரிலிருந்து வடக்கு திசையில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
பண்பொழி என்ற இடத்தில் நிலைகொண்டுள்ள முருகன் கோவில் ஆகும். கேரள மாநிலத்தின் எல்லையில் காணப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் ஒரு சிறிய குன்றில், இந்தக் கோவில் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தில் அமர்ந்திருக்கும் இறைவன் முருகன் ‘திருமலை முருகன்’ என்றும் ‘திருமலை முத்துகுமாரசுவாமி’ என்றும் அழைக்கப்படுகிறார். இறைவனின் பெயர் இவ்வாறு அமைந்துள்ளதால், இங்கே காணப்படும் மக்களில் பலர் ‘திருமலை’ என்ற பெயருடன் காணப்படுகிறார்கள். இக்கோவில் வளாகத்தில் ‘திருமலை அம்மனுக்கான’ ஒரு சன்னதியும் நிலை கொண்டுள்ளது. இந்த மலைக் கோவிலைச் சுற்றி நிறைய தென்னந்தோப்புகள் மற்றும் சிறிய கிராமங்கள் சூழ்ந்துள்ளதால், மலை உச்சியில் இருந்து பார்க்கும் காட்சிகள் மிகவும் அற்புதமானதாக காணப்படுகிறது.
குற்றாலம் சென்று குளிக்கச் சென்றிருக்கிறீர்களா? இப்படிக் கேட்டால் உடனே பதில் வந்துவிடும்… எங்கிருந்தெல்லாமோ வருகிறார்கள், பக்கத்தில் இருந்துகொண்டு குற்றாலம் போகாமல் இருப்போமா? என்று! அடுத்தது, குளிப்பதற்காகவும் சாரலை அனுபவிப்பதற்காகவும் மட்டுமே அங்குச் சென்றிருப்பீர்கள்… சரி, அங்குள்ள புனிதமான திருத்தலங்களைச் சென்று தரிசித்து வந்திருக்கிறீர்களா? என்று கேட்டால், பலரும் இசைவான பதிலைத் தரமாட்டார்கள். ஆனால், தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலும், நடராஜப் பெருமானின் பஞ்ச சபைகளில் ஒன்றான குற்றாலம் சித்திரசபையும், குற்றால நாதர் கோயிலும் தவிர இன்னும் பல திவ்வியத் தலங்கள் சுற்றிலும் உள்ளன. அவைகளில் முக்கியமானதாகவும், இயற்கை அழகு கொஞ்சும் மனசுக்கு நிம்மதியளிக்கும் தலமாகவும், வரம் தரும் முருகப் பெருமானின் திவ்வியத் தலமாகவும் திகழ்வது திருமலைக் கோயில் என்னும் திருத்தலம். இது குற்றாலம் – செங்கோட்டை- பண்பொழி மார்க்கத்தில் குற்றாலத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
பொதிகை மலையின் ரம்மியமான அழகையும் மலையேறிச் செல்லும் நிம்மதியையும் விரும்புவோருக்கு அருமையான இடம் இந்தத் தலம். பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் சிக்குண்டு தவிக்கும் மக்களுக்கு நிம்மதி அளிக்கும் சுகமான இடம் இந்தத் திருமலைக்கோயில். இங்குள்ள முருகப் பெருமான், பால முருகனாக கையில் வேலோடும், மயிலோடும் காட்சி தருகிறான். மிகப் பிரமாண்டமான கோயில். படிகளில் ஏறிச் செல்லுகையில், அங்கங்கே ஓய்வெடுக்க அழகான மண்டபங்களைக் கட்டி வைத்துள்ளார்கள் பக்தர்கள் பலர். சுமார் 500 அடி உயரம் உள்ள ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில்.
செல்வதற்கு அழகான மிதமான படிகள், ஓய்வெடுக்க மண்டபங்கள் என வயதானவரும் கூட வந்து தரிசிக்கும் வண்ணம் திகழும் இந்தக் கோயிலில் வீற்றிருக்கும் முருகப் பெருமான் பேரழகின் பிம்பமாய் காட்சி தருகிறார். நான்கு திருக்கரங்கள், வலது முன் கை அபய ஹஸ்தமாக உற்ற துணை நானே என்று அருகில் அழைத்து அருள் மழை பொழியும் சங்கதியைச் சொல்லுகிறது. வலது பக்க பின் கை வஜ்ராயுதம் தாங்கி அமைந்திருக்கிறது. கிட்டத்தட்ட நான்கு அடி உயரம் கொண்ட கருங்கல்லால் ஆன இந்தத் திருவுருவம் இங்கு வந்த கதை சுவாரஸ்யமான ஒன்று.
முருகன் தலத்தின் சிறப்பு
ஒவ்வொரு நாட்டுக்கும் தனிச்சிறப்பு உண்டு. அப்படி நம் பாரத நாட்டுக்கும் பல தனிச்சிறப்புகள் உண்டு. அதில் ஒன்று, ஆங்கிலேயர் உருவாக்கி வைத்தது. நம் நாடு ஒரு தனி கண்டத்துக்கு உரிய பண்புகளோடு திகழ்வதால், இதை இந்தியத் துணைக்கண்டம் என்று ஆங்கிலேயர் அழைத்தனர். ஆனால் நாம் பாரத நாடு என்று ஒற்றுமை உணர்வோடு போற்றி மகிழ்கிறோம். நம் தமிழ்நாட்டுக்கும் பல தனித்துவச் சிறப்புகள் உண்டு. அதில் குறிப்பாக பாண்டிய நாட்டின் அங்கமாக இருந்த நெல்லைச் சீமைக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு…
அது – ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் ஒரு பகுதியில் உற்பத்தியாகி, பல ஆயிரம் ச.மைல் பரப்புள்ள நிலத்தைப் பசுமையாக்கி, அதே மாவட்டத்தின் மற்றொரு பகுதியில் உள்ள கடல்பகுதியில் கடலில் சங்கமிக்கிறது என்ற சிறப்பு பெற்ற தாமிரவருணி நதி ஒரு சிறப்பு. மற்றொரு சிறப்பு, பழங்கால இலக்கியங்கள் காட்டும் ஐவகை நிலப்பரப்பும் கொண்ட ஒரே பகுதி என்ற சிறப்பு கொண்டது நெல்லைச் சீமை என்பதே அது.
மலையும் மலை சார்ந்த இடமும் – குறிஞ்சி, நிலமும் நிலம் சார்ந்த இடமும் – முல்லை, வயலும் வயல் சார்ந்த இடமும் – மருதம், கடலும் கடல் சார்ந்த இடமும் – நெய்தல், வறண்ட பகுதி – பாலை என்று ஐவகை நிலப்பகுதியைப் பிரித்து வைத்தது முன்னோர் சாதனை. இந்த ஐவகை நிலப்பரப்பும் நெல்லைச் சீமையிலேயே உள்ளது.
சிலப்பதிகாரம் சொல்லும்… குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்து, நல்லியல்பிழந்து நடுங்கு துயருறுத்து, பாலை என்பதோர் படிவம் கொள்ளும்… என்று! பாலை என்ற ஐந்தாவது நிலப் பகுதி, தனியாக இல்லாதுபோயினும், குறிஞ்சியும் முல்லையும் தட்பவெப்ப நிலை மாறின், பாலையாக மாறுகிறது என்பது இதன் கருத்து. ஆனால், நெல்லைச் சீமையில் இந்தப் பாலை நிலமும் உண்டு. வள்ளியூர், ராதாபுரம் பகுதிகளைச் சேர்ந்த நிலப்பகுதி அதைச் சொல்லும். ஆக, இந்த ஐவகை நிலப்பாகுபாடும் நெல்லைச்சீமையில் உண்டு. அத்தகைய சிறப்பு மிக்க இந்தப் பகுதியில், முருக வழிபாடும் திருமால் வழிபாடும் செழித்தோங்கியுள்ளது. மாலவன் பேர் சொல்லும் நவ திருப்பதிகள் இந்தத் தாமிரபரணிக் கரையோரம் சிறப்புற விளங்குகிறது. அதுபோல் பொதிகை மலையை ஒட்டிய திருமலைக்கோயில் முருகப் பெருமானும், கடற்கரையை ஒட்டிய பகுதியான திருச்சீரலைவாய் என்று போற்றப்பெறும் திருச்செந்தூர் முருகப் பெருமானும் நெல்லைச் சீமைக்கு அணிசேர்த்து அருள் செய்கின்றனர்.
குறிஞ்சி நிலத்தெய்வமான முருகன் என்ற சொல்லுக்கு அழகன் என்று பொருள். இயற்கை நலமுடையவன், எழில் உடையவன், மணம் உடையவன், அறிவு உடையவன், நிறைந்த செல்வத்தை அளிப்பவன் என்று வெறு பல பொருள்களும் உண்டு. முருகப் பெருமான் கையில் வேலை வைத்திருக்கும் காரணத்தால் அவனை வேலன் என்றும் அழைத்தனர். சங்ககால இலக்கியங்கள் பலவும் வேலன் என்ற பெயரை அழகுற வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, திருமுருகாற்றுப்படை இலக்கியம் குறிஞ்சி வேலவனுக்கு நோன்பு நூற்று மக்கள் வழிபட்ட அழகை விவரிக்கிறது. சிலப்பதிகாரம், முருகனது பெருமைகளையும், அவன் அமர்ந்த குன்றுகளின் சிறப்புகளையும் கூறுகிறது. குன்றுதோராடும் குமரன், குற்றாலத்துக்கு அருகில் அமைந்திருக்கும் திருமலையிலும் எழுந்தருளி அருள் பாலிக்கிறான்.
பிரணவ மலை – திருமலை
தமிழகத்தின் மேற்கு அரணாக விளங்கக் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் தொடர்ச்சியாக நிலப்பகுதியோடு இணைந்து திருமலை விளங்குகிறது. இது கவிர மலைப் பகுதி என்று வழங்கப் படுகிறது. கரவி மலை என்பது கவிர மலை ஆகியது என்பர். கடை ஏழு வள்ளல்களில் ஒருவனான ஆய் அண்டிரன் பரிபாலித்த பகுதி இந்தப் பகுதியில்தான் உள்ளது. அதுவே கவிரமலைப் பகுதி. அவனது தலைநகராக இருந்தது ஆய்க்குடி என்று அழைக்கப் பெறும் ஊர். அது இன்றும் ஒரு முருகன் கோயிலோடு திகழ்கிறது. ஆய்க்குடியும் கவிரமலையும் பொதிகை மலையோடு சார்ந்த திருக்குற்றால மலையை ஒட்டி அமைந்துள்ளன. இப்படி மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்து, மூன்று மலைகள் சேர்ந்து காட்சியளிப்பதால் இதனை திரிகூடமலை என்றும் அழைப்பர். இதனைப் பிரணவ மலை என்றும் கூறுவர். காரணம் ஓம் என்ற வடிவில் இந்த மலைப் பகுதி அமைந்துள்ளதுதான்… இந்த மலைத்தொடரின் உயர்ந்த இடத்தில் பழங்காலத்தில் சிவபெருமானுக்குத் திருக்கோயில் ஒன்று இருந்ததாகவும், நாகம் தனக்கு அளித்த விலையுயர்ந்த ஆடையை ஆய் மன்னன் இந்த லிங்கத்துக்கு அளித்தான் என்றும் சங்க இலக்கியச் செய்தி ஒன்று உண்டு.
கோட்டைத்திரடு கோயில்
செங்கோட்டையில் இருந்து அச்சன்கோயில் செல்லும் வழியில் பண்பொழியிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் கோட்டைத் திரடு என்ற சிற்றூர் உள்ளது. பழங்காலத்தில் இங்கு ஒரு கோட்டை இருந்துள்ளது. அதற்கான சுவடுகள் இன்றும் காணப்படுகின்றன. இந்தப் பகுதி சிலகாலம் பாண்டிய அரசர்களின் ஆளுகையிலும் இருந்துள்ளது. பிற்காலத்தில் விஜயநகரப் பேரரசின் கீழும் இருந்துள்ளது. இதற்கான சான்றுகளாக இந்தக் கோட்டைப் பகுதியில் கிடந்த தூண்கள், மண்டப கற்களில் மீன் சின்னமும், வராஹம் மற்றும் லிங்க சின்னமும் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். சேரநாட்டைச் சேர்ந்த பந்தள அரசர்கள் இங்கு கோட்டையமைத்து கோட்டையில் சிவபெருமானுக்கும் முருகப் பெருமானுக்கும் கோயில் அமைத்து வழிபட்டு வந்தார்களாம். பகைவர்களாலும் ஆற்று வெள்ளத்தாலும் கோட்டையும் கோயிலும் பெரும் அழிவைச் சந்திக்க, பந்தள அரசமரபினர் இந்தக் கோட்டையை அப்படியே கைவிட்டு அவர்கள் பிரதேசத்துக்குச் சென்றுவிட்டார்களாம். அதன்பிறகு கவனிப்பாரற்றுப் போனது கோட்டையில் இருந்த கோயில். ஆனால் முருகப் பெருமான் தன் பக்தர் ஒருவர் மூலம் தன்னை வெளிப்படுத்தி, மலைமீது கொண்டான்.
சன்னிதிகள்:
திருமலையின் அடிவாரத்தில் வல்லப விநாயகர் சன்னிதி மிகப் பெரிதாக உள்ளது. இந்த விநாயகப் பெருமானை தரிசித்தபின், மலைக்கு ஏறும் படிகள் தொடங்கும் இடத்தில் இரு பாதங்களைத் தொட்டு வணங்கி முருகன் புகழ் பாடி மக்கள் படிகளில் ஏறிச் செல்வர். பரிக்கட்டுகளில் ஏறிச் சென்றால் அடுத்து நடுவட்ட விநாயகர் சன்னிதியை அடையலாம். அவரைத் தரிசித்த பிறகு படிகளில் மேலும் ஏறி, இடும்பன் சன்னிதி அடைந்து அவரை வணங்கி பிறகு தொடர்ந்து ஏறவேண்டும். அங்கே இடும்பன் சுனை இருக்கிறது. பிறகு தொடர்ந்து ஏறினால், நந்தகோபர் மண்டபம் வருகிறது. இவற்றைவணங்கி, சுமார் 544 படிகள் கடந்து மேலே உச்சி விநாயகர் சன்னிதியை அடைவோம். அங்கு சன்னிதி 16 படிகளில் ஏறிச் செல்லும் அழகான மண்டபமாக இருக்கிறது. இது, இந்த விநாயகப் பெருமானை வணங்கினால், மக்களுக்கு 16 பேறுகளும் கிட்டும் என்கின்ற தத்துவத்தைச் சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது.
இந்த விநாயகரை வணங்கி, வலம் வந்து ஆதி உத்தண்ட வேலாயுதத்தையும், சப்த கன்னியரையும் வணங்கி, அருகே இருக்கும் தீர்த்தக் குளத்தை தரிசிக்கலாம். அத்தோடு சுற்றிலும் சூழ்ந்திருக்கும் மலைகளின் இயற்கை அழகை ரசிக்கலாம். மேகங்கள் நம் கைகளைத் தொட்டுச் செல்வதுபோல் நம்மை உரசிச் செல்லும் அனுபவத்தைப் பெறலாம்.
பிறகு திருமலைக்காளி சன்னிதி சென்று காளிதேவியை வணங்கி திருமலைக் குமாரனின் சன்னிதிக்குள் சென்றால் அங்கே அழகிய பாண்டி நாட்டு கட்டடக் கலையில் அமைந்த அழகான தூண்கள் அமைந்த மண்டபத்தையும் முருகன் சன்னிதியையும் தரிசிக்கலாம். உற்சவ மூர்த்தியும் அறுமுகப் பெருமானும் ஒய்யாரமாகக் காட்சி தருகிறார்கள்.
இந்தத் தலத்தில் எல்லாத் தலத்துக்கும் உரிய சன்னிதிகள் இருந்தாலும், மிகவும் சிறப்பாகத் திகழ்வது, கபால பைரவர் சன்னிதி. இந்த சன்னிதியில் ஐந்தரை அடி உயரத்தில் மிகப் பிரமாண்டமாக பைரவர் அழகாகக் காட்சி தருகிறார். இந்த பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வடைமாலை சாற்றி வழிபட்டுவந்தால், நோய் நொடி, பில்லி சூனியம் போன்ற எதிர்மறை விஷயங்கள் நம்மை விட்டு விலகும். தொழில் அபிவிருத்தி அடைந்து இல்லத்தில் மகிழ்ச்சியும் இல்வாழ்க்கை சிறப்பாக அமைவதையும் பக்தர்கள் பலரின் வாழ்வில் இன்றும் கண்கூடாகக் காணலாம்.
பண்பொழி திருமலைக்குமாரசுவாமி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இந்தக் கோயிலின் திருவிழாக்கள் திருமலையின் மேல்தளத்திலும் வண்டாடும் பொட்டலிலும் பண்பொழியிலும் நடைபெறுகின்றன. கார்த்திகை மாதத்தில் கடைசித் திங்கள் பண்பொழியில் நரீசுவரமுடிஅயார் கோயிலுக்கு எதிர்ப்புறமுள்ல சிங்காரத் தெப்பக் குளத்தில் திருமலைக் குமாரசாமிக்கு தெப்ப உத்ஸவம் சிறப்பாக நடைபெறும். தைப்பூச உத்ஸவம் இந்தக் கோயிலின் சிறப்பான உத்ஸ்வமாகும். ஐப்பசி மாத கந்த சஷ்டி விழா பத்து தினங்கள் சிறப்பாக நடைபெறும். சித்திரை மாத ஐந்து தினங்கள், தமிழ் மாதப் பிறப்பு, தமிழ் வருடப் பிறப்பு உத்ஸவங்கள் என்று எப்போதும் இங்கு திருவிழாக்கள் களைகட்டும்.
குற்றாலத்துக்கு சுற்றுலா வருகிறவர்கள் அப்படியே இந்தத் திருமலைக்கும் வந்து திருமலைக்குமாரசாமியின் தரிசனம் பெற்று சகல நலங்களும் பெறலாம்.

சேலம் மாவட்டம் அழகாபுரம் பெரிய புதூரில், 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற துர்க்கை காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சேலம் மாவட்டம் அழகாபுரம் பெரிய புதூரில், பிரசித்தி பெற்ற துர்க்கை காளியம்மன் கோவில் உள்ளது. 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவிலில் கணபதி, கட்டு முனியப்பன், முத்து முனியப்பன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் அருள்பாலிக்கின்றன. இயற்கை எழில் சூழ்ந்த நகரமலை அடிவாரத்தில் வடக்கு திசை நோக்கி துர்க்கை காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தினமும் காலை 6 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு நித்திய பூஜைகள் நடைபெறும். பின்னர் மாலை 6 மணியளவில் கோவில் நடை சாத்தப்படும்.
சிம்ம வாகனத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் துர்க்கை காளியம்மன் சாந்த ரூபிணியாகவே பக்தர்களுக்கு காட்சி தருகிறார். வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
தீராத நோயால் அவதிப்படுபவர்கள் துர்க்கை காளியம்மனுக்கு, புதன்கிழமை தோறும் அபிஷேகம் செய்து, 18 நெய் தீபம் ஏற்றி மனமுருகி வழிபட்டால் அவர்களின் நோய் குணமாகும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாகும். மேலும் தொழில் வளம் பெருகவும், திருமணத்தடை அகலவும் மற்றும் குழந்தைப்பேறு கிடைக்கவும் அம்மனின் பாதத்தில் எலுமிச்சை பழத்தை வைத்து பக்தர்கள் பெற்றுச் செல்கிறார்கள். அதை வீட்டில் வைத்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்கிறார்கள். இதேபோல் நீண்ட நெடுநாள் வேண்டுதல் நிறைவேறியவுடன் துர்க்கை காளியம்மனுக்கு புடவை, எலுமிச்சை மாலை, தேங்காய், பழம், பூ ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்குவதுடன் பொங்கல் வைத்து நைவேத்தியம் படைத்தும் அம்மனை தரிசித்து செல்கிறார்கள்.
இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி பவுர்ணமி அன்று திருவிழா நடைபெறும். அப்போது மேளதாளம் முழங்க மாவு விளக்கு மற்றும் முளைப்பாரியை ஏந்தி பெண்கள் கோவிலுக்கு ஊர்வலமாகச் செல்வார்கள். பின்னர் துர்க்கை காளியம்மனுக்கு ஆடு, கோழி ஆகியவை பலியிடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இந்த விழாவில் அழகாபுரம், பெரியபுதூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்துச் செல்வார்கள். தற்போது இந்தக் கோவில் மிகவும் பழுதடைந்து உள்ளதால் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம் திருக்குற்றால மலைச்சாரலில் சித்திரா நதிக்கரையில் உள்ள தென்காசியில் உலகம்மன் சமேத காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திருக்குற்றால மலைச்சாரலில் சித்திரா நதிக்கரையில் உள்ள தென்காசியில் உலகம்மன் சமேத காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அரிகேசரி பராக்கிரம பாண்டிய மன்னன் 1467ம் ஆண்டு இந்த ஆலயத்தை அமைத்ததாக இங்குள்ள கல்வெட்டொன்று கூறுகிறது. தலபுராணம், இந்த தென்காசி திருத்தலம் சச்சிதானந்தபுரம், முத்துத் தாண்டவநல்லூர், ஆனந்தகூத்தனூர், தென்புலியூர் செண்பக் பொழிலூர் என்ற திருப்பெயர்களை கொண்டதாகக் கூறுகிறது.
தென்காசியை ஆண்ட பராக்கிரம பாண்டியன் நாள்தோறும் காசிக்குச் சென்று சிவபெருமானை வழிபட்டு வர விரும்பினான். இவன் எப்பொழுதும் வணங்கி வழிபடும் முருகப் பெருமான் ஒருநாள் அவனது கனவில் தோன்றி ‘ககன குளிகையை’ அவன் கையில் கொடுக்க அதை அவன் வாயிலிட்டுக்கொண்டு, பிறர் கண்களிலிருந்து மறைந்து தினமும் வான் வழியாக பறந்து சென்று காசி விஸ்வநாதரை வழிபட்டு விட்டு சூரியன் உதிக்கும் முன்னர் திரும்பிவிடுவது வழக்கம். ஒருநாள் மனைவியும் அவனும் சேர்ந்து சென்று காசியிலிருந்து லிங்கத்தை எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்து காசி விஸ்வநாதர் என்று பெயரிட்டு திருக்கோயில் அமைத்து, அந்த ஊருக்கு தென்காசி என்று பெயரிட்டதாகவும் தலபுராணம் கூறுகிறது.
வடகாசியைவிட இந்த தென்காசி புனிதமானது என்று சொல்லும் புராணம், ‘காசியில் இறந்தால்தான் முக்தி. ஆனால் தென்காசியிலோ பிறந்தால் இருந்தால் இறந்தால் முக்தி’ என்றும் சொல்கிறது. இந்த சிவாலயம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்குள்ள கல்வெட்டு ஒன்றில் சகாப்தம் 1369க்குப் பின்னர் ஆனி மாதம் 13ம் நாள் சனிக்கிழமை இரவு மீன லக்னத்தில் கருவறையில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்லியல் துறையினர் இந்த நாளை 10.6.1467 என்று கணித்து கூறியுள்ளனர்.
இரண்டு பெரிய யானைகள் பெரிய தேர் ஒன்றை இழுத்துச் செல்வது போன்று அமைக்கப்பட்டுள்ளது, ஆலயம். நந்திமண்டபம், முகமண்டபம், மகாமண்டபம் ஆகியவை, கலைக்கூடங்கள் என்று சொல்லுமளவுக்கு கடவுளர் திருவுருவங்கள், விலங்குகள், பறவைகள் என கவின்மிகு சிற்பங்களால் நிரம்பி வழிகின்றன. சைவமும் வைணவமும் ஒன்றே என்பதை வலியுறுத்தும் விதமாக இங்குள்ள தூண்களில் திருமாலின் அவதார சிற்பங்கள், அனுமன் திருவுருவங்களைக் காணலாம். வடக்கு பிராகாரத்தில் பராக்கிரம பாண்டியன் அமைத்த காசி கிணறு வற்றாமல், இன்றும் சுரந்து கொண்டேயிருக்கிறது. கங்கையை நினைவு கூறும் வகையில் அவன் இந்த கிணற்றை அமைத்ததாக கூறுவதுண்டு.
கருவறைக்குள் காசி விஸ்வநாத லிங்கம் போன்றே காட்சியளிக்கும் தென்காசி லிங்கப் பெருமானை மன்னன் தன் கோட்டையிலிருந்து பார்த்து வழிபடும்படி கோட்டையில் சில ஏற்பாடுகளை அவன் அமைத்திருந்தான். தற்போது இது மேட்டுத் தெரு எனப்படுகிறது. இன்றும் நாம் காசி விஸ்வநாதரை இங்கிருந்து தரிசிக்க முடியும். அம்மன் சந்நதியில் இறைவி உலகம்மை, அருள் பொலியும் திருமுகத்துடன் வலக்கையில் தாமரை மலர், கிளி ஏந்தி இடக்கையை தொங்கவிட்டு பத்ம பீடத்தில் ஆடை அணிகலன்களுடன் நின்ற நிலையில், எழில் ததும்ப பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
காசி விஸ்வநாதருக்கும் உலகம்மைக்கும் இத்தனை புகழ் மிக்க பெருங்கோயிலை எடுத்த பராக்கிரம பாண்டியன், ‘இக்கோயில் இறைவன் அருளால் என்றும் நிலைத்து நிற்கும். ஆயினும் இது ஒருவேளை பழுதுபட்டால் அந்த சிதைவுகளை அகற்றி செப்பனிடுபவர்களின் திருவடியில் விழுந்து வணங்குவேன் என்றும் உலகத்தார் முன்னிலையில் இவ்வாறு விழுந்து வணங்குவதுடன் மேலும் மேலும் விருத்தி செய்வோரின் திருவடியிலும் என் திருமுடியை தாழ்த்தி இறைஞ்சுவேன்’ என்றும் உருகி கல்வெட்டிலும் பொறித்து வைத்துள்ளான்.
ஒன்பது நிலையுடன் கூடிய பெரிய ராஜகோபுரம். தொல்லியலாரின் ஆய்வுப்படி 3.11.1457ல் கால் கோளிடப்பட்டு பின்னர் வந்த மன்னர் பொன்னின் பெருமாள் அழகன் குலசேகரன் என்பவரால் 1518ல் கோபுரப்பணி நிறைவு செய்ததாக கூறப்படுகிறது. அவனது காலத்திற்குப் பின் அப்பகுதி சேர மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டு, சேர மன்னன் உதய மார்த்தாண்ட வர்மன் தென்காசி கோயில் மற்றும் கோபுரத் திருப்பணிகள் செய்து 1524ல் குடமுழுக்கு செய்துள்ளான்.
அதன்பிறகு 1792-1824க்குள் பாளையக்காரர்கள் வெள்ளையர்களின் ஆவணங்களை அழிப்பதற்காக வைத்த நெருப்பு, கோபுரத்தை அழித்துவிட்டதாக கூறப்படுகிறது. பெருமழை பொழிந்தபோது பேரிடி விழுந்து கோபுரம் அழிந்ததாகவும் கூறுவதுண்டு.
அதன்பின் 150 ஆண்டுகளுக்குப் பின் திருப்பணி குழு ஒன்று அமைக்கப்பட்டு, தற்போதைய வானளாவிய ராஜகோபுரம், சுவாமி, அம்மன் பரிவார தேவதைகளுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. தற்போதைய ராஜகோபுரத்தில் 800 அழகிய சுதைச் சிற்பங்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆறுகால வழிபாடுகள் கொண்ட இந்த தென்காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மாசி மாதம் பிரம்மோத்சவம், ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, ஆவணி மூலம், தெப்பத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. மாசி மாத பிரம்மோத்சவத்தை ஆரம்பித்து வைத்தவன் பராக்கிரம பாண்டியன் என்பதால் இன்றும் முதல் மரியாதை அவனுக்கே!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கனூர் என்ற இடத்தில் அமைந்திருக்கும் சிவன் கோயில் தான் செங்கனூர் மகாதேவா கோயில் ஆகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கனூர் என்ற இடத்தில் அமைந்திருக்கும் சிவன் கோயில் தான் செங்கனூர் மகாதேவா கோயில் ஆகும். எட்டுமானூர் மகாதேவர் கோயில், வைகொம் கோயில், வடக்குநாதன் கோயில் போன்ற கேரளத்தில் இருக்கும் பிரதான சிவன் கோயில்களுள் இந்த செங்கனூர் மகாதேவா கோயிலும் ஒன்றாகும்.
இக்கோவில் செங்கன்னூர் மகாதேவர் கோவில் என்றும், செங்கன்னூர் பகவதி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. கிழக்கு நோக்கிய மகாதேவர் சன்னிதியும், சன்னிதியின் பின்புறம் மேற்கு நோக்கிய பகவதியம்மன் சன்னிதியும் உள்ளன. பரிவார தேவதை சன்னிதிகளாக கணபதி, ஐயப்பன், கிருஷ்ணர், நீலக்கிரீவன், சண்டிகேஸ்வரன், நாகர் மற்றும் கங்கா ஆகியவை உள்ளன. ஆலயக்கூரையிலும் சில தூண்களிலும், பாரத – இராமயணச் சிற்பங்கள் விளங்குகின்றன… கோயிலில் மாதத்தில் மூன்று நாட்கள் அக்கோயிலில் வீற்றிருக்கும் அம்மனுக்கே மாதவிடாய் என்று சொல்லி கோயிலுக்கு வெளியே வைக்கப்படும் வழக்கம் தொடர்கிறது. செங்கனூர் மகாதேவா கோயில் பற்றி மேலும் அறிந்துகொள்வோம் வாருங்கள்.
செங்கனூர் பகவதியம்மன் கோவில் மாதவிடாய் காலத்தின் சிறப்பு:
உலகில் வேறு எந்த கோயிலிலும் இல்லாத வகையில் இங்கே மாதவிடாய் விழா என்ற ஒன்று நடக்கிறது. செங்கனூர் மகாதேவர் கோயிலில் வீற்றிருக்கும் பார்வதி தேவிக்கு பெண்களுக்கு ஏற்ப்படுவது போலவே மாதவிடாய் ஏற்ப்படுவதாகவும், அந்நாட்களில் பார்வதி தேவியின் வஸ்திரத்தில் ரத்தக்கறை தென்படுவதாகவும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மூன்று-நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பார்வதி தேவிக்கு மாதவிடாய் ஏற்படுவதாகவும், அப்படி பார்வதி தேவியின் வஸ்திரத்தில் மாதவிடாய்க்கான அறிகுறி தெரிந்ததும் ‘தாழமண்’ மற்றும் ‘வங்கிபுழா’ ஆகிய குடும்பங்களை சேர்ந்த மூத்த பெண்கள் வந்து அம்மனுக்கு மாதவிடாய் ஏற்பட்டதை உறுதிபடுத்துகின்றனர்.
அதன் பிறகு மூன்று நாட்களுக்கு அம்மனின் சந்நிதி மூடப்படுகிறது. அப்போது இக்கோயிலில் வேறொரு இடத்தில் பார்வதி தேவியின் படத்தை வைத்து பூஜைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பின்னர் மூன்று நாள் மாதவிடாய் காலம் முடிந்ததும் நான்காம் நாள் அருகில் உள்ள பம்பை ஆற்றுக்கு பார்வதிதேவியின் சிலை கொண்டு செல்லப்பட்டு ‘ஆராட்டு’ என்னும் தூய்மைப்படுத்துதல் நிகழ்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆராட்டு நிகழ்வு தான் ‘திருப்பூதர ஆராட்டு’ என்கிற பெயரில் பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆற்றில் ஆராட்டு முடிந்தபிறகு பார்வதி தேவியின் சிலை யானை மீது வைக்கப்பட்டு கோயில் வாயிலை அடைகிறது. அங்கே மகாதேவர் சிவபெருமான் யானை மீது வீற்றிருந்து பார்வதி தேவியை கோயிலுக்குள் வரவேற்கிறார். பின்னர் மகாதேவரும், பார்வதி தேவியும் ஒன்றாக யானை மீது அமர்ந்தபடி கோயிலை மூன்று முறை வலம் வந்தபின் அவரவர் சந்நிதிகளுக்கு எடுத்து செல்லப்படுகின்றன்ர். பொதுவாக இவ்விழா மார்ச் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. நான்காம் நாள் நடக்கும் ஊர்வலத்தில் பெண்கள் பெரும் திரளாக கைகளில் ‘தளப்போளி’ என்னும் தீபம் ஏந்தி கலந்துகொள்கின்றனர்.
செங்கன்னூரில் அமைந்திருக்கும் பகவதியம்மன் கோவில் குறித்து மூன்று விதமான தல வரலாறுகள் சொல்லப்படுகின்றன. அவற்றில் முதல் தல வரலாற்றைப் பார்ப்போம்.
தல வரலாறு
பொதுவாக கோவில்களுக்கு தலபுராணம் என்பது ஒன்றுதான் இருக்கும். ஆனால், கேரளாவின், ஆலப்புழா செங்கன்னூரில் அமைந்திருக்கும் பகவதியம்மன் கோவில் குறித்து மூன்று விதமான தல வரலாறுகள் சொல்லப்படுகின்றன. அவற்றில். முதல் தல வரலாற்றைப் பார்ப்போம்.
பார்வதி தேவியான தாட்சாயிணியின் தந்தை தட்சன், பெரும் வேள்வி ஒன்றை நடத்தத் தொடங்கினான். தாட்சாயிணி அந்த வேள்விக்கு அழைத்துச் செல்லும்படி சிவனிடம் வேண்டினார். அழைப்பில்லாமல் சென்றால் அவமானம் நேரிடும் என்று சிவன் அறிவுரை சொன்னார். ஆனால், தாட்சாயிணி தனியாக அந்த வேள்விக்குச் சென்று, தட்சனால் அவ மதிக்கப்பட்ட நிலையில் வேள்வி அழியும்படி சபித்து விட்டு, வேள்வித் தீயில் குதித்து விட்டாள்.
அதனை அறிந்த சிவன், வேள்வியை அழித்த பின்னர் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு, ஊழித்தாண்டவம் ஆடினார். அவரை அமைதிப்படுத்த நினைத்த மகாவிஷ்ணு, சக்கராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை துண்டு துண்டாக வெட்டினார். தாட்சாயிணியின் உடல் பகுதிகள் பூலோகத்தில் 51 இடங்களில் விழுந்து, அவை அம்பிகையின் 51 சக்தி பீடங்களாக தோற்றம் பெற்றன. அம்பிகை உடலின், இடையின் கீழ்ப்பகுதி விழுந்த இடத்தில் இக்கோவில் அமைந்திருப்பதாக கோவில் தல வரலாறு சொல்கிறது.
செங்கனூர் சிவன் பார்வதி அம்மன் இரண்டாவது தல வரலாறு:- அகத்திய முனிவருக்குத் தங்களது திருமணக் காட்சியைக் காண்பிக்க சிவபெருமானும், பார்வதி தேவியும் தென்பகுதிக்கு வந்திருந்தனர். அவ்வேளையில், இங்கு பார்வதி தேவி வயதுக்கு வந்ததற்கான அடையாளமாக ருது என்ற பூப்பு நிகழ்வு நடந்தது என்பதன் அடிப்படையில், அம்மனுக்கு இங்கு பூப்புனித நீராட்டு விழா என்ற ருது சாந்தி கல்யாணம் நடைபெற்றது. அம்மன் வயதுக்கு வந்த நிகழ்வு நடைபெற்ற இந்த மலைப்பகுதி செந்நிறமாகிப் போனது என்றும், அதனால் இந்த இடம், மலையாளத்தில் செங்குன்னூர் என்று அழைக்கப் பெற்று, பிற்காலத்தில் செங்கன்னூர் என்று மாறி விட்டதாக சொல்லப்படுகிறது.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு போன்று அம்மனுக்கும், மாதவிடாய் ஏற்படும் நாட்களில் அம்மன் சன்னிதி அடைக்கப்பட்டு, உற்சவர் சிலை, கோவிலின் ஒரு பகுதியில் தனியாக வைக்கப்படும். மூன்று நாட்கள் கடந்த பின்னர், நான்காவது நாளில் சிலை மித்ரபுழை கடவு நதிக்குக் கொண்டு சென்று நீராட்டிய பின்னர் அலங்காரத்துடன் ஊர்வலமாக கோவிலுக்குக் கொண்டு வரப்படும்.
செங்கனூர் மகாதேவர் மூன்றாவது தல வரலாறு:- பகவதியின் மற்றொரு தோற்றமாகக் கருதப்படும் கண்ணகி, தனது கணவன் கோவலனுடன் மதுரைக்குச் சென்றார். கோவலன், தான் செய்து வந்த வணிகத்தை தொடங்குவதற்காகக் கண்ணகியின் காற்சிலம்பு ஒன்றை விற்க சென்ற நிலையில், அரசியின் சிலம்பைத் திருடிய பொற்கொல்லன், கோவலனைத் திருடனாகக் குற்றம் சுமத்தி அரசவைக்குக் கொண்டு சென்றான். அங்கு, கோவலனுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டு கோவலன் கொல்லப்பட்டான்.
செய்தியறிந்த கண்ணகி, அரசவைக்குச் சென்று வழக்குரைத்தாள். வழக்கின் முடிவில், தனது தவறான தீர்ப்பை அறிந்த மன்னன் உயிர் துறந்தான். அதனைக் கண்டும் கோபம் குறையாத கண்ணகி, தன் கற்பின் வலிமையால் மதுரை நகரை தீக்கிரையாக்கினாள். அதன் பிறகு, கண்ணகி இத்தலம் அமைந்திருக்கும் பகுதிக்கு வந்து, தவமிருந்து, கோவலனுடன் சேர்ந்து தேவலோகம் சென்றதாக ஐதீகம். சேரன் செங்குட்டுவன், அங்கு கோவில் அமைத்து அம்மன் சிலையை நிறுவி, ‘செங்கமலவல்லி’ எனும் பெயரிட்டு வழிபட்டு வந்ததாக வரலாறு.
கோவில் நேரம்:
காலை 4 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இறைவன் மகாதேவருக்கு மூன்று வேளைகள், இறைவி பகவதியம்மனுக்கு இரண்டு வேளைகள் என்று தினமும் ஐந்து வேளை பூஜைகள் செய்யப்படுகின்றன. விஷேச தினங்களில் சிறப்பு வழிபாடுகள் உண்டு.
இருநூறு வருடங்களுக்கு முன்பு, கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் அம்மன் சிலை பாதிப்படைந்த நிலையில் புதிய ஐம்பொன்சிலை நிறுவப்பட்டது. அதன் பிறகு, வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டும் மாதவிலக்கு ஏற்பட்டு, திருப்பூத்து விழா நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. இக்கோவில் கேரளாவின் தட்சிண கயிலாசமாக குறிப்பிடப்படுகிறது. காக்கை வலிப்பு போன்ற நோய் உடையவர்கள், இக்கோவிலில் வழிபாடு செய்தால், நலம் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், திருமணத் தடைகள் நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் பகவதியை வழிபடுவதும் வழக்கமாக உள்ளது.
அமைவிடம்:
செங்கனூர் மகாதேவா கோயில் ஆலப்புழாவிற்கு கிழக்கே ‘திருவல்லா-பந்தளம்’ சாலையில் அமைந்திருக்கிறது. செங்கனூர் பேருந்து மற்றும் ரயில் நிலையத்திலிருந்து வரும் 1கி.மீ தொலைவில் இக்கோயில் இருக்கிறது. கேரள மாநிலத்தில் தலைநகரமான திருவனந்தபுரத்தில் இருந்து 117 கி.மீ தொலைவில் உள்ளது