என் மலர்
கோவில்கள்
இந்த கோவிலில் செய்யப்பட்டுள்ள சிற்ப வேலைப்பாடுகள் மிகவும் பிரசித்தி பெற்றும், தனித்தன்மையுடனும் இருக்கின்றன. இங்குள்ள ஒரு அதிசய நந்தியே இதற்கு சான்றாக கூறலாம்
மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ளது, பாதேஷ் என்ற ஊர். இங்கு பாதேஸ்வரர் மகாதேவ் திருக்கோவில் உள்ளது. இந்தக்கோவில் எட்டு பெரிய குகைகளையும், பல சிறிய குகைகளையும் உள்ளடக்கிய பெரிய வளாகம் போல் காட்சியளிக்கிறது. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று சொல்லப்படும் இந்த ஆலயத்தில் ஆயிரம் சிவலிங்கங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.
இந்த ஆலய வளாகத்தில் ஒரு வித்தியாசமான சிலையையும் நாம் காண முடியும். நந்தியின் வடிவத்தில் இருக்கும் இந்த வித்தியாசமான சிலையை, அக்னி பகவானின் உருவம் என்கிறார்கள். வேதத்தில் அக்னி பகவானுக்கு இரண்டு தலைகளும், மூன்று கால்களும், ஏழு கைகளும் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. வேதத்தில் கூறப்பட்ட வடிவமைப்புக்கேற்ற வகையில் இந்த சிலை இருப்பதால், இதனை அக்னி பகவான் என்றே வழிபட்டு வருகின்றனர்.
நேராக நின்று பார்க்கும் போது, மனித முகம், சற்று சாய்வாக பார்க்கும்போது நந்தியின் முகம் என இரண்டு முகங்கள் தெரியும். நேராக நின்று பார்க்கும்போது மனித கால்கள் இரண்டு, நந்தியின் கால் ஒன்று என மொத்தம் மூன்று கால்களும், இடது பக்கமாக நின்று பார்க்கும்போது நந்தியின் கால்கள் இரண்டு, மனித கால் ஒன்று என மொத்தம் மூன்று கால்களும் தென்படும். (இதில் ஏதாவது ஒரு பக்கத்தைத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்). அதே போல் கரங்களும் 7 இருப்பதை பார்க்கலாம். நேராக நின்று பார்க்கும்போது இந்த 7 கரங்களும் தெளிவாகத் தெரியும்.
இது ஒரு சிவாலயம் என்பதால், நந்தியின் வடிவத்தில் அக்னி பகவானின் சிலையை வடித்திருப்பதாக கூறப்படுகிறது.

கர்நாடகாவில் உள்ள ஆதிரங்கம், திருவரங்கத்தில் உள்ள மத்தியரங்கம், கோவிலடியில் உள்ள அப்பாலரங்கம், கும்பகோணத்தில் உள்ள சதுர்த்தரங்கம், திருஇந்தளூரில் உள்ள பஞ்சரங்கம் ஆகியவையாகும்.
திருமாலின் பள்ளிகொண்ட திருக்கோலம் மிகவும் பிரசித்திப்பெற்றது. அப்படி அவர் பள்ளிகொண்டிருக்கும் ஆலயங்களில் திருவரங்கம் முக்கியமானது. அரங்கம் என்பது நதிநீரில் அமைந்த மேலான திட்டு என்று பொருள்படும். அந்த வகையில் திருவரங்கம்போலவே, மேலும் நான்கு கோவில்கள் உள்ளன. இவை அனைத்தும் சேர்த்து ‘பஞ்சரங்க தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. அவை, கர்நாடகாவில் உள்ள ஆதிரங்கம், திருவரங்கத்தில் உள்ள மத்தியரங்கம், கோவிலடியில் உள்ள அப்பாலரங்கம், கும்பகோணத்தில் உள்ள சதுர்த்தரங்கம், திருஇந்தளூரில் உள்ள பஞ்சரங்கம் ஆகியவையாகும்.
அப்பாலரங்கம்
108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும், பஞ்ச அரங்க தலங்களில் ‘அப்பாலரங்கம்’ என்ற பெயரோடும் அழைக்கப்படும் ஆலயம் இது. திருப்பேர்நகர் என்ற கோவிலடியில், இந்த அப்பால ரங்க நாதர் கோவில் உள்ளது. இந்த ஆலயம் கொள்ளிடம் இரண்டாகப் பிரியும் இடத்தில் இந்திரகிரி என்று அழைக்கப்படும் சிறு குன்றின் மேல் இருக்கிறது. திருச்சி அருகே உள்ள லால்குடியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம்.
உபமன்யுவிடம் இருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால், இத்தல இறைவனுக்கு அப்பக்குடத்தான் (அப்பால ரங்கநாதர்) என்று பெயர். இங்கு பெருமாள் மேற்கு நோக்கியபடி, புஜங்க சயனத்தில் வீற்றிருக்கிறார். இந்திரனுக்குக் கர்வம் போக்கியும், மார்க்கண்டேய முனிவருக்கு எம பயம் நீக்கியும், உபரிசிரவசு மன்னனுக்கு சாபம் மற்றும் பாவம் போக்கியும் பெருமாள் அருள்புரிந்த தலம் இதுவாகும்.
ஆதிரங்கம்
கர்நாடக மாநிலத்தில் உள்ளது, ஸ்ரீரங்கப்பட்டனம். இங்கு காவிரி நதி இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேருகிறது. இங்குள்ள அரங்கநாத சுவாமி ஆலயமே, ‘ஆதிரங்கம்’ எனப்படுகிறது. சப்த ரிஷிகளில் ஒருவரான கவுதமர், இங்குள்ள பெருமானை நோக்கி தவம் இயற்றியுள்ளார். அவருக்கு இத்தல பெருமாள், புஜங்க சயன திருக்கோலத்தில் காட்சி கொடுத்தார். கவுதம முனிவரின் வேண்டுகோள்படி, அவருக்கு காட்சியளித்த கோலத்திலேயே, இறைவன் இங்கு எழுந்தருளி இருக்கிறார்.
சதுர்த்தரங்கம்
சாரங்கபாணி ஆலயம்தான் ‘சதுர்த்தரங்கம்’ என்று சிறப்பிக்கப்படுகிறது. காவிரி நதி - காவிரி, அரசலாறு என்று இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேரும் இடமான கும்பகோணத்தில் இந்த ஆலயம் உள்ளது. இதுவும் திவ்ய தேச திருத்தலங்களில் ஒன்றுதான். இங்குள்ள பெருமாள் சன்னிதி, தேரின் அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேரின் இருபுறங்களிலும் உத்தராயன, தட்சிணாயன வாசல்கள் உள்ளன. பெருமாள் வைதிக விமானத்தின் கீழ் சங்கு, சக்கரம் மற்றும் சாரங்கம் என்னும் வில் ஏந்தியவாறு, கிழக்கு நோக்கி உத்தான சயன திருக்கோலத்தில் அருள்புரி கிறார். இத்தலத்தில் பெருமாளை ஏழு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
மத்தியரங்கம்
தமிழ்நாட்டில் காவிரி நதி இரண்டாகப் பிரிந்து, மீண்டும் ஒன்று சேருமிடமாக திருச்சி அருகே உள்ள திருவரங்கம் உள்ளது. பஞ்சரங்க தலங்களில் இது ‘மத்தியரங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. இதனை ‘அனந்தரங்கம்’ என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். 108 திவ்ய தேச திருக்கோவில்களில், முதல் திவ்ய தேசமாக விளங்கும் திருவரங்கம் ஒரு சுயம்பு திருத்தலமாகும். இங்கு 21 கோபுரங்களும், 7 சுற்று பிரகாரங்களும் அமைந்துள்ளன. இங்கு பெருமாள் தங்கத்தால் வேயப்பட்ட விமானத்தின் கீழே புஜங்க சயனத் திருக்கோலத்தில் தெற்கு நோக்கியபடி காட்சி தருகிறார். மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் இதுவாகும்.
பஞ்சரங்கம்
காவிரியின் வடகரையில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம், பெருமாளின் 108 திருப் பதிகளுள் ஒன்று. பஞ்ச அரங்க தலங்களில் ‘பஞ்சரங்கம்’ மற்றும் ‘அந்தரங்கம்’ என்று சொல்லப்படுகிறது. இத்தலத்தில் அருளும் பரிமள ரங்கநாதர், வேதசக்கர விமானத்தின் கீழ் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் வீற்றிருக்கிறார். பெருமாள் சன்னிதியின் இருபுறங்களிலும் ஸ்ரீதேவி கங்கையாகவும், பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது சிறப்புக்குரியதாகும். பரிமளரங்கநாதர் திருவடிகளில் எமதர்மராஜரும், அம்பரீஷ சக்கரவர்த்தியும் அமர்ந்து இரவும், பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். சந்திரன், சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் நீராடி, தன் சாபம் நீங்கப் பெற்றமையால் இவ்வூர் ‘திருஇந்தளூர்’ எனப்பெயர் பெற்றது.

வேண்டிய காரியம் நன்றாக முடிந்தால், இந்த கோவிலில் பெண்கள் தாலியை உண்டியலில் போட்டு விடுவர். தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை நேர்த்திக்கடன்களாக இத்தலத்து பக்தர்கள் வழங்குவது வழக்கமாக உள்ளது.
மூலவர் – வனபத்ர காளியம்மன்
தல விருட்சம் – தொரத்திமரம்
தீர்த்தம் – பவானி தீர்த்தம்
பழமை – 500-1000 வருடங்களுக்கு முன்பு
காலம் சொல்ல முடியாத காலத்தில் கட்டப்பட்டது இந்த வனபத்ர காளியம்மன் கோயில்.
சாகா வரம் பெற்ற மகிசாசூரனை அழிக்க அம்பாள் சிவனை நினைத்து வழிபட்டுப் பூசை செய்து சூரனை அழித்ததாள். அம்பாள் சிவனை நினைத்து இந்த வனத்தில் தியானம் செய்ததால், இங்குள்ள அம்மன் வனபத்ரகாளியம்மன் என்று பெயர் பெற்றது. இது தவிர ஆரவல்லி சூரவல்லி கதையோடும் இக்கோயில் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
மந்திரம், சூன்யம் ஆகியவற்றால் கொடிய ஆட்சி செய்த ஆரவல்லி, சூரவல்லி ஆகியோரை அடக்க பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் சென்று சிறைப்பட்டு, பின்னர் கிருஷ்ணன் அவனைக் காப்பாற்றினார். பின்பு, பாண்டவர்கள், அப்பெண்களை அடக்க, தங்களின் தங்கை மகன் அல்லிமுத்துவை அனுப்பி வைத்தனர்.
அவன் இங்குள்ள அம்மனை வழிபட்டுச் சென்று, ஆரவல்லியின் பெண்கள் சாம்ராச்சியத்தைத் தவிடுபொடியாக்க, அவர்கள் பயந்து போய் ஆரவல்லியின் மகளை அல்லி முத்துவுக்கு திருமணம் செய்து கொடுத்து, அவள் மூலம் நஞ்சு கொடுத்துக் கொன்றனர்.
இதையறிந்த அபிமன்யு, வானுலகம் சென்று அல்லிமுத்துவின் உயிரை மீட்டு வந்தான். நடந்த விசயங்களைக் கேள்விபட்ட அல்லிமுத்து, வெகுண்டெழுந்து, ஆரவல்லியை அடக்கப் புறப்பட்டுச் சென்றான். வழியில் வனபத்ரகாளியம்மனை வழிபட்டு, அவள் அருள் பெற்று ஆரவல்லியின் சாம்ராச்சியத்தை அழித்தான். இவை வரலாறாகப் பேசப்படுகிறது.
பூப்போடுதல் :
புதிதாகத் தொழில் துவங்கும் நபர்கள், திருமணம் பற்றிக் கேட்கும் நபர்கள், சுவாமி முன்பு பூ போட்டு கேட்பது வழக்கம். சிவப்பு, வெள்ளைப் பூக்களை தனித்தனி பொட்டலங்களில் போட்டு, அவற்றை அம்பாளின் காலடியில் வைத்து, ஏதவது ஒன்றை எடுத்துப் பார்க்கும்போது, மனதில் எந்த பூவை நினைக்கிறோமோ அந்தப் பூ வந்து விட்டால் அம்பாள் உத்தரவு தந்து விட்டதாக ஐதீகம். இது இக்கோயிலில் மிகவும் சிறப்பு.
15 ஆயிரம் கிடா வெட்டு :
வனபத்திரகாளியம்மன் என்றாலே கிடாவெட்டுதல் தான் நினைவிற்கு வரும். அம்மனுக்கு உகந்த ஆடு பலியிடுதல் ஞாயிறு, செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் நடக்கும். ஒரு வரத்திற்குள் சுமார் 300 லிருந்து 400 கிடா வரை வெட்டப்படுகிறது. ஒரு ஆண்டிற்கு சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிடாய் வெட்டுகின்றனர்.
அம்மன் சுயம்புவாக முளைத்துள்ளது, குண்டமிறங்கல் எனும் தீமிதிக்கும் நேர்த்திக்கடன் இத்தலத்தில் சிறப்பு.
திருவிழா:
ஆடிக்குண்டம் ஜூலை 15 நாள் திருவிழா. அன்னையிடம் முறைப்படி அனுமதி பெற்று, ஆடி முதல் செவ்வாய் பூச்சாட்டி, 2 ஆம் செவ்வாய் திருபூக்குண்டம் அமைத்து, 3 ம் செவ்வாய் மறுபூஜை செய்து விழா கொண்டாடப்படும்.
36 அடி நீளமுள்ள திருக்குண்டம் அமைக்கப்படும். இதில் தீக்கங்குகள் உருவாக்கி பக்தர்கள் இறங்கி நடப்பார்கள். இத்திருவிழாவின் போது 2 லட்சம் பக்தர்கள் பங்குபெறுவது கண்கொள்ளாக்காட்சி. இவை தவிர வாரத்தின் செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மேலும் தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பின் போதும் இக்கோயிலில் பெருந்திரளான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
இது தவிர அம்மனிடம் குழந்தை வரம் வேண்டி வணங்கி தொரத்தி மரத்தில் கல்லை கட்டிவிட்டு வழிபட்டால் தங்கள் பிரார்த்தனை நிறைவேறுகிறது. செய்வினை, பில்லிசூன்யம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக்கோயிலுக்கு ஒருமுறை வந்து அம்மனை மனமுருக வேண்டிக்கொண்டால் அத்தகைய கோளாறுகள் நீங்குகிறது என்பது இத்தலத்துக்கு வரும் பக்தர்களின் அனுபவத்தில் கண்ட உண்மை என்கிறார்கள்.
வேண்டிய காரியம் நன்றாக முடிந்தால், பெண்கள் தாலியை உண்டியலில் போட்டு விடுவர். தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை நேர்த்திக்கடன்களாக இத்தலத்து பக்தர்கள் வழங்குவது வழக்கமாக உள்ளது. இது தவிர கிடா வெட்டுதல்தான் இங்கு தனிச் சிறப்பு. வனபத்திரகாளியம்மன் என்றாலே கிடாவெட்டுதல் தான் நினைவிற்கு வரும். அம்மனுக்கு உகந்த ஆடு பலியிடுதல் ஞாயிறு, செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் நடக்கும். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 இரவு மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில்,
தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் - 641301,
கோயம்புத்தூர் மாவட்டம்.

துர்க்கையை வழிபட்டு வந்தால் செவ்வாயின் அருளை பெறலாம். வைத்தீஸ்வரன் கோவில் சென்று செவ்வாயை வழிபட செவ்வாயின் தீய தசாபுத்தி நடப்பவர்கள் அது நீங்கி சுகம் பெறலாம்.
மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது வைத்தீஸ்வரன் கோவில். இத்தலத்திற்கு புள்ளிருக்கு வேளூர் என்ற பெயரும் உண்டு. வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் வேதபுரி, கந்தபுரி, பரிதிபுரி, அங்காரபுரி, அம்பிகாபுரி என்ற பெயர்களும் உண்டு. இறைவனின் திருவிளையாடல்படி வேர்வைத் துளியிலிருந்து அங்காரகன் செந்நிற வடிவத்துடன் வேலுடன் தோன்றி சிவபெருமானை வணங்கினார். அப்போது அங்காரகனுடைய மேனியில் செங்குட்டம் இருப்பதைக் கண்டு இந்திராதி தேவர்கள் அஞ்சினார்கள். சிவபெருமான் அங்காரகனிடம் காவிரிக்கரையருகில் வைத்தியநாத தலம் ஒன்று உள்ளது. அங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் மூழ்கி இறைவனைப் பூசித்து வணங்கினால் உனக்கு ஏற்பட்டுள்ள செங்குட்டம் நீங்கி விடும் என்று கூறினார்.
அதன்படி அங்காரகன் சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி செங்குட்டம் நீங்கப் பெற்றார் ஸ்ரீ வைத்தியநாதரை தினசரி முழு ஈடுபாட்டுடன் தியானம் செய்தார். இறைவன் மனமகிழ்ந்து அங்காரகன் முன்தோன்றி அவருக்கு வேண்டிய வரங்களைக் கேட்க கூறினார். அங்காரகன் இறைவன் திருவடியை மறக்காத மனமும், செவ்வாய்க்கிழமைகளில் வந்து தன்னை வழிபடுபவர்களுக்கு சகல செல்வங்களையும் சற்புத்திரப் பேற்றையும் அளிக்கும்படி வேண்டினார்.
சிவபெருமானும் அங்காரகனுக்கு “செவ்வாய் கிழமைகளில் உன்னை வந்து துதிப்போருக்கு கிரகபீடையை நீக்கி நன்மை செய்யவும், நவக்கிரகங்களில் மூன்றாவதாகத் திகழ்க” என வரம் அளித்தார். வைத்தீஸ்வரன் கோவிலில் அங்காரகன் மூலவர் சன்னதி கிழக்குக் கோபுர வாசலில் நுழைந்தவுடன் தண்டாயுதபாணி சன்னதிக்குத் தெற்கில் தெற்கு முகமாக அமைந்துள்ளது. நான்கு கைகளில் முறையே சூலம், சக்தியாயுதம், அபயக்கை, தண்டம் தாங்கிய கையுடன் காட்சியளிக்கிறார். அங்காரகன் உற்சவர் ஸ்ரீ வைத்தியநாதர் மூலவர் சன்னதிக்குத் தெற்கில் வெள்ளிமஞ்சத்தில் காட்சியளிக்கிறார்.
செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் இங்கு வந்து அர்ச்சனை செய்து துவரை அன்னம் நிவேதனம் செய்து வழிபட வேண்டும். இதனால் தோஷம் நீங்கும். இங்கு விற்கப்படும் வைத்தியநாதர் மருந்து என்ற திருச்சாந்துருண்டையை வாங்கி உண்டால் நோய்கள் நீங்கும்.
அர்ச்சனைத் தட்டுடன் வெல்லம் மற்றும் உப்பும், மிளகும் கலந்து விற்பனை செய்கிறார்கள். வெல்லத்தை உள்ளே உள்ள (தீர்த்தத்தில்) குளத்தில் கரைத்து விட வேண்டும், உப்பை தையல் நாயகி சந்நிதி எதிரில் உள்ள இடத்தில் சேர்க்க வேண்டும். மிகச் சிறிய அளவு உப்பு மற்றும் மிளகை அதிலிருந்து எடுத்து வாயில் போட்டு மென்று தின்பதும் வழக்கம்.
கீழசந்நிதி நுழைவாயிலில் வேப்ப மரத்தடியில் ஆதிவைத்திய நாதர் காட்சியளிக்கிறார். இந்த மரத்தினை மூன்று முறை வலம் வந்து பணிந்து அவ்விடம் அமர்ந்து தியானித்தால் சகல நலன்களும் கிடைக்கும். கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும்.
இத்தலத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் அங்காரகன் இரவில் ஆடு வாகனத்தில் வலம் வந்து ஆண்டவனை வணங்குவதாகக் கூறப்படுகிறது.

இக்கோயிலில் இருந்து 75 அடி தூரத்தில் ஒரு மண்மேடு உள்ளது. இந்த மண்ணே இக்கோயிலின் திருமண்ணாக வாய்த்திருக்கிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு இத்திருமண்ணே விபூதி பிரசாதமாக அளிக்கப்படுகிறது.
மூலவர் – பாலமுருகன்
பழமை – 1000 வருடங்களுக்கு முன்
மாவட்டம் – திண்டுக்கல்
கோவிலின் சிறப்புகள்:
முருகப்பெருமான் தன் ஆறாவது படைவீடான பழமுதிர்ச் சோலையில் மலைவளம் கண்டபிறகு, தாண்டிக்குடி வருகிறார். முருகன் இங்கிருக்கும் போதுதான் அகஸ்தியரின் சீடரனான இடும்பன் கயிலாயத்திலிருந்து சிவகிரி, சக்திகிரி என் இரண்டு மலைகளை சுமந்து கொண்டு பழநி வந்து சேருகிறார். இதை அறிந்த முருகன் இந்த இரண்டு மலைகளில் ஒன்று தனக்கு இருப்பிடமாகிக் கொள்ள உரியது என கருதி, தாண்டிக்குதிக்கிறார். இதன் காரணமாகவே இந்த இடம் “தாண்டிக்குதி” என்ற அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மருவி “தாண்டிக்குடி” ஆனது.
பன்றிமலை சுவாமிகளின் வேண்டுகோளின்படி முருகனே கோயில் கட்ட தேவையான பொருள்களுக்கு அது சம்பந்தப்பட்ட நபர்களின் கனவில் தோன்றி, அந்தப் பொருள்களை கொடுக்க கூறினார் என்றும், தற்போது கோயிலில் உள்ள மூலவர் சிலை கூட ஸ்தபதி ஒருவரின் கனவில் முருகனே சென்று கூறி அதன் மூலம் நிறுவப்பெற்று, திருப்பணிவேலைகள் முருகப்பெருமானின் மேற்பார்வையிலேயே முடிந்தது.
கணபதி, முருகன், மயில், இடும்பன், பைரவர், அகஸ்தியர் மற்றும் நவக்கிரகங்களுடன் 1949ல் மிகவும் சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்கு மூலவரான முருகன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பழனி முருகன் கோயிலில் உள்ள முலவரின் அமைப்பே இக்கோயிலும் உள்ளன. இந்தக் கோயிலுக்கு மருதநாயகமும், கணபதியும் தலைமைப்பூசாரியாக இருந்திருக்கிறார்கள். பழனிக்கே முருகன் இங்கிருந்து தான் சென்றிருக்கிறார். எனவே பழனிக்கு செல்பவர்கள் இங்குள்ள தாண்டிக்குடி பாலமுருகனை தரிசித்த பின் சென்றால்தான் முழுமையான பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இங்கிருந்து பழநிக்கு தாண்டிக்குதித்துச் சென்ற முருகப்பெருமானை, பத்தொன்பது சித்தர் என்று அழைக்கப்படும் ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை சுவாமிகள் (இயற்பெயர் ராமசாமி) தாண்டிக்குடிக்கே பாலமுருகன் வடிவில் அழைத்து வந்து விட்டார்கள். அவர் மறுபடியும் முருகனை அழைத்து வந்ததற்கு அடையாளமாக தாண்டிக்குடி மலையில் முன்று நாட்கள் தொடர்ந்து அனைவரும் பார்க்கும்படி ஓர் ஜோதி தோன்றியது.
இதனாலேயே இந்த மலை “ஜோதி மலை” என வழங்கப்பட்டது. மூன்று நாட்களும் தொடர்ந்து ஜோதி தெரிந்து முடிந்தவுடன், அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது, முருகப்பெருமான் மறுபடியும் தாண்டிக்குடிக்கு வந்து விட்டதற்கு அறிகுறியாக திருவடிச்சுவடுகள் மண்ணில் பதிந்தால் எப்படி இருக்குமோ அப்படி அந்தக்கல்லில் திருவடிச்சுவடு காணப்பட்டது. மேலும் அதற்கு அடுத்தாற்போல் உள்ள பாறையில் முருகனின் வாகனமான மயில் ஒரு பாம்பை கவ்விக் கொண்டிருப்பது போன்ற தோற்றமும் காணப்பட்டது. (இந்த தோற்றங்களை நாம் இப்போதும் பார்க்கலாம்).
இக்கோயில் தீர்த்தமாக அங்குள்ள பாறையிலேயே சிறு பள்ளத்தில் என்றுமே வற்றாத தீர்த்தம் வருகிறது. இக்கோயிலில் இருந்து 75 அடி தூரத்தில் ஒரு மண்மேடு உள்ளது. இந்த மண்ணே இக்கோயிலின் திருமண்ணாக வாய்த்திருக்கிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு இத்திருமண்ணே விபூதி பிரசாதமாக அளிக்கப்படுகிறது.
வேண்டுகோள்:
திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் முருகனுக்குப் பால் திருமுழுக்காட்டு செய்து, சந்தனக்காப்பு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து, காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
வத்தலகுண்டு கொடைக்கானல் சாலையில் ஊத்து என்னும் ஊரிலிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சென்று பண்ணைக்காடு வழியாக தாண்டிக்குடி செல்லலாம். வத்தலகுண்டுவிலிருந்து 46 KM தொலைவில் உள்ளது. வத்தலகுண்டு மற்றும் கொடைக்கானலில் இருந்து நகரப் பேருந்துகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.
கோயில் முகவரி:
அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் தாண்டிக்குடி,
திண்டுக்கல் மாவட்டம் – 624 216.
தொலைபேசி:
04542- 266 378, 99626 71467

108 வைணவத் திருத்தலங்களில் திருமலையில் வழங்கப்படும் இறைவனின் அதே பெயர்களால் (ஸ்ரீநிவாசன் – அலர்மேல் மங்கைத் தாயார்) வழங்கப்படும் ஒரே தலம் இது ஒன்றே ஆகும்.
இறைவன்: சீனிவாச பெருமாள், அண்ணன் பெருமாள்
இறைவி: அலர்மேல் மங்கை நாச்சியார்
தீர்த்தம்: சுவேத புஷ்கரனி தீர்த்தம்
கோயிலின் சிறப்புகள்:
மங்கள சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 38 வது திருத்தலம். திருவெள்ளக்குளம் என்ற சொல் இத்தலத்தின் முன்புறம் அமைந்துள்ள ஸ்வேத புஷ்கரணி தீர்த்தத்தால் உண்டாயிற்று. வடமொழியில் ஸ்வேதம் என்றால் வெண்மை. எனவே ஸ்வேத புஷ்கரணி வெள்ளைக்குளமாகி பின்னர் வெள்ளக்குளமாயிற்று. திருமங்கையாழ்வார் இத்தலத்து இறைவனை அண்ணா என அழைத்துப் பாடியமையால் இது அண்ணன் கோயில் என்று அழைக்கப்படுகிறது.
திருமங்கையாழ்வாரால் மட்டும் பத்துப் பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். பிள்ளைப் பெருமாளையங்காரும் இத்தலம் பற்றி பாடியுள்ளார். அழகிய மணவாள மாமுனிக்கு இறைவன் இங்கு காட்சி கொடுத்ததாக நம்பிக்கை. 108 வைணவத் திருத்தலங்களில் திருமலையில் வழங்கப்படும் இறைவனின் அதே பெயர்களால் (ஸ்ரீநிவாசன் – அலர்மேல் மங்கைத் தாயார்) வழங்கப்படும் ஒரே தலம் இது ஒன்றே ஆகும்.
திருவேங்கடத்தானுக்கு வெள்ளக்குளத்தான் அண்ணன் என்பது நம்பிக்கையாதலால் திருப்பதிக்கு வேண்டிக் கொண்ட வேண்டுதலை இங்கே செலுத்துவது ஒரு மரபாகவே விளங்கி வருகிறது. எனவே இதனைத் தென்திருப்பதி என்றும் அழைப்பர். திருமங்கையாழ்வார் மணந்த குமுதவல்லியின் அவதாரத் தலம். நீலன் என்ற பெயரில் படைத்தளபதியாக விளங்கிய திருமங்கையாழ்வாரை ஆழ்வாராக மாற்றிய தலம் இதுவாகும். ஒரு மங்கையால் ஆழ்வாராக மாறினமையால் மங்கையாழ்வாராகி திருமங்கை ஆழ்வாரானார்.
போக்குவரத்து:
சீர்காழியிலிருந்து திருவெண்காடு செல்லும் வழியில் 11 கி.மீ.தொலைவில் இவ்வூர் உள்ளது. ஏராளமான பேருந்து வசதிகள் உண்டு.
கோவில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து திறந்திருக்கும்.
கோவிலின் முகவரி:
அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோயில்,
திருவெள்ளக்குளம், திருநாங்கூர்,
மயிலாடுதுறை மாவட்டம் 609106.
தொலைபேசி:
9489856554, 04364 – 266434

உயிர்கள் அனைத்தும் உயிர் வாழ்வதற்கு அவசியமான நீர் தொடர்ந்து சுரந்து கொண்டே இருக்கும் ஒரு கோவில் தான் கமண்டல கணபதி கோவில்.
கர்நாடக மாநிலத்தில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட சைவ மத பீடம் இருக்கும் புகழ்பெற்ற ஊர், சிருங்கேரி. இதன் அருகே `கேசவே' என்ற ஊர் உள்ளது. இங்கு கமண்டல கணபதி திருக்கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலில் உள்ள விநாயகர் விக்கிரகத்தின் முன்பாக தரையில் ஒரு துளை இருக்கும். அதன் வழியே தண்ணீர் பெருக்கெடுத்தபடியே இருக்கும். இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பது இதுவரை கண்டறியப்படாத ரகசியமாகவே இருப்பதாக சொல்கிறார்கள்.
மழைக் காலங்களில் அதிக அளவிலும், வெயில் காலங்களில் குறைவாகவும் இந்த துளையில் இருந்து நீரூற்று வந்துகொண்டே இருக்கும். ஒருபோதும் இதில் நீர் வராமல் இருந்ததில்லை என்கிறார்கள், ஆலயத்தினர். இந்த அதிசயம் 1000 வருடங்களாக நடைபெற்று வருவதாகவும் சொல்கிறார்கள். விநாயகர் முன்பாக உள்ள இந்த துளையில் இருந்து வரும் நீரைதான், கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்ய பயன்படுத்துகிறார்கள்.
சில நேரங்களில் பொங்கியும் சில நேரங்களில் சாதாரண அளவிலும் இந்த துளையிலிருந்து நீர் வந்துகொண்டே இருக்கிறது.இங்கு வரும் பக்தர்கள் இதனை புனித நீராகக் கருதி, குடுவைகளில் தங்கள் இல்லங்களுக்குப் பிடித்துச் செல்கின்றனர். விநாயகரின் காலடியில் வெளிப்படும் இந்த நீரானது, இங்கிருந்து 14 கிலோமீட்டர் தூரம் ஓடி, அங்குள்ள துங்கா நதியில் கலக்கிறது.
வேத காலத்தில் உலகம் முழுவதுமே கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு தாகத்தை தணிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் அனைத்து உயிர்களும் தவித்த போது, அன்னை உமாதேவி இந்த கோவிலில் வீற்றிருக்கும் தன் மூத்த மைந்தன் ஆன கமண்டல கணபதி விக்ரகத்திற்கு அடியில், வற்றாத தண்ணீர் சுனையை ஏற்படுத்தி உலக உயிர்களின் தாகத்தை தீர்த்ததாக தல வரலாறு கூறுகிறது.

இந்தக் கோவிலில் உள்ள சிவபெருமானை, சூரியன் வழிபாடு செய்திருக்கிறார் என்பதால், இந்த திருத்தலம் சூரியனின் பெயரால் ‘ஞாயிறு’ என்று அழைக்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்துள்ளது, ஞாயிறு என்ற திருத்தலம். இங்கு சொர்ணாம்பிகை உடனாய புஷ்பரதேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள சிவபெருமானை, சூரியன் வழிபாடு செய்திருக்கிறார் என்பதால், இந்த திருத்தலம் சூரியனின் பெயரால் ‘ஞாயிறு’ என்று அழைக்கப்படுகிறது. 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம், கிரக தோஷங்களை நீங்கும் சக்தி பெற்றதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தேவலோகத்தின் பிரதான சிற்பியாக இருப்பவர், விஸ்வகர்மா. இவரது மகள் சமுக்ஞா. இவளைத்தான் சூரிய பகவான் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு, சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாமல், சமுக்ஞா தவித்து வந்தாள். இதனால் தன்னுடைய நிழலை, தன்னைப் போன்ற உருவமாக மாற்றினாள். அந்த நிழல் பெண்ணின் பெயர் ‘சாயா.’ அவளை தன்னுடைய கணவனிடம் விட்டுவிட்டு, சமுக்ஞா தனது தந்தையிடம் சென்று விட்டாள்.
எமதர்மனின் மூலமாக இந்த விஷயத்தை அறிந்த சூரியன், தன்னுடைய மனைவி சமுக்ஞாவை அழைத்துவருவதற்காகப் புறப்பட்டார். அதற்கு முன்பாக, சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்தார். அப்போது ஒரு ஜோதி வானில் தோன்றி நகர்ந்தது. அதைப் பின் தொடர்ந்து சென்றார், சூரியன். வானில் சென்ற ஜோதியானது, இந்த திருத்தலம் இருக்கும் இடத்தில் உள்ள தடாகத்தில் பூத்திருந்த தாமரை மலரில் ஐக்கியமானது. அதில் இருந்து வெளிப்பட்ட சிவபெருமான், சூரியனுக்கு காட்சி கொடுத்து, சமுக்ஞாவை சூரியனுடன் சேர்த்து வைத்து மகிழ்ச்சியாக வாழ அருளினார்.
அதன்பின்பு, சூரியனின் வேண்டுகோளின்படி, இங்கேயே எழுந்தருளினார். சூரியன் பூஜித்த லிங்கம், தாமரை மலருக்குள்ளேயே இருந்தது.
பின்னாளில் இந்தப் பகுதியை ஆட்சி செய்த சோழ மன்னன் ஒருவன், இந்த வழியாக தன்னுடைய படை பரிவாரங்களுடன் சென்றான். அப்போது தடாகத்தில் இருந்த ஒரு தாமரை மட்டும் பிரகாசமாக மின்னிக்கொண்டிருந்தது. அதைக் கண்ட மன்னன், அந்த தாமரையைப் பறிக்க நினைத்து, தடாகத்தில் இறங்கி, தாமரையை நோக்கிச் சென்றான். அவன் அருகில் வரவர, தாமரையும் நகர்ந்து சென்றுகொண்டே இருந்ததே தவிர, அவனது கையில் அகப்படவில்லை.
இதனால் ஆச்சரியம் அடைந்த மன்னன், தன்னுடைய உடைவாளை எடுத்து தாமரைப்பூவின் தண்டுப்பகுதியை வெட்டினான். அதில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளிப்பட்டது. மேலும் தாமரையின் மின்னல் ஒளி பாய்ந்து, மன்னனின் பார்வையும் பறிபோனது. தன்னுடைய செயலுக்கு வருந்திய மன்னன், சிவபெருமானை நினைத்து வேண்டினான். இதையடுத்து அவனுக்கு கண்பார்வையை வழங்கிய சிவபெருமான், மன்னனுக்கு காட்சியும் கொடுத்தார். அதோடு தான் இந்த தடாக தாமரையில் லிங்க வடிவில் இருப்பதாக கூறினார்.
மன்னன் அந்த லிங்கத்தை எடுத்து தடாகத்தின் கரையில் பிரதிஷ்டை செய்து, ஆலயம் எழுப்பினான். தாமரை புஷ்பத்தில் எழுந்தருளியவர் என்பதால், இத்தல சிவபெருமானுக்கு, ‘புஷ்பரதேஸ்வரர்’ என்று பெயர்.
சுந்தரமூா்த்தி நாயனாரின் மனைவி சங்கிலி நாச்சியார், இவ்வூரில் பிறந்தவர். புஷ்பரதேஸ்வரரை வழிபட்ட அவர், இங்கிருந்து திருவொற்றியூர் சென்று சிவசேவையில் ஈடுபட்டு, பின்பு சுந்தரரை மணந்துகொண்டார். ஆகையால் சங்கிலி நாச்சியாருக்கும் இங்கு சன்னிதி இருக்கிறது. அமாவாசை, மாசி மகத்தன்று சங்கிலியாருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்படுகிறது. மூலஸ்தானத்திற்கு முன்புள்ள மண்டபத்தில் சூரியன், புஷ்பரதேஸ்வரர் சன்னிதியை பார்த்தபடி இருக்கிறார். கோஷ்டத்தில் பல்லவ விநாயகர், தட்சிணாமூர்த்தி, காலபைரவர், கண்வ மகரிஷி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
சூரியன் எப்போதும், இத்தல சிவபெருமானை வழிபட்டபடியே இருப்பதாக ஐதீகம். சித்திரை மாதப்பிறப்பின்போது, முதல் 7 நாட்கள் புஷ்பரதேஸ்வரர், சொர்ணாம்பிகை மீது சூரிய ஒளி விழுகிறது. அந்த நாட்களில் சிவனுக்கான பூஜையை, சூரியனே செய்வதாக ஐதீகம். எனவே, அன்று உச்சிக் காலத்தில் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
ஞாயிற்றுக்கிழமைகளிலும், சூரியன் வடக்கு நோக்கிய பயணத்தை (உத்தாரயண புண்ணிய காலம்) தொடங்கும் நாளான மகர சங்கராந்தியன்றும் (தைப்பொங்கல்) சிவன், சூரியனுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது.
சூரியன், பிற கிரகங்களுக்கு தலைமை கிரகம் என்பதால், இங்கு நவக்கிரக சன்னிதி கிடையாது. பிற கிரகங்களால் தோஷ பாதிப்பிற்குள்ளானவர்கள், அந்தந்த கிரகத்திற்குரிய நாட்களில் இவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, நெய் மற்றும் கோதுமையில் விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஞாயிறு கிராமத்திற்கு செல்ல திருவள்ளுர், சென்னையில் இருந்து பஸ் வசதியுள்ளது.

இந்த கோவிலில் தன்னை நாடி வரும் பக்தர்களை காக்கும் பொருட்டு வலிமை பொருந்திய இடது திருவடியை சற்று முன் வைத்த நிலையில் அனுமன் அருள்பாலிக்கிறார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ளது இடுகம்பாளையம் கிராமம். இங்கு அனுமந்தராய சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஆலய நுழைவு வாசலைக் கடந்து உள்ளே நுழைந்ததும் கல் சிற்பங்கள் நிறைந்த கொடிமரம் உள்ளது. அதன் அருகே தல விருட்சமாக ஆலமரம் நிற்கிறது. கொடிமரத்தை தாண்டி உள்ளே சென்றால் அனுமன் வீற்றிருக்கும் சன்னிதி உள்ளது.
இந்தப் பகுதி சுமார் 900 வருடங்களுக்கு முன்பு, பசும் சோலைகள் நிறைந்த நந்தவனமாக இருந்துள்ளது. கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில், அவரது குலகுருவான வியாசராஜ தீர்த்தர், இங்கு நடந்தே வந்துள்ளார். அப்போது இங்கு ஒரு ஆளுயர அழகிய பாறை தென்பட்டது. அந்த பாறையில்தான் ராமாயண காலத்தில் அனுமன் அமர்ந்து தியானம் செய்துள்ளார்.
சுயம்புவாக தோன்றிய இந்த பாறை, அனுமனின் அருள் நிறைந்த பாறை என்பதை உணர்ந்த வியாசராஜ தீர்த்தர், அந்த பாறையின் முன்பாக விழுந்து வணங்கினார். அவரின் உத்தரவுப்படியே, இந்தப் பாறையில் அனுமனின் சிலை புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் அனுமனுக்காக சிறிய ஆலயம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 1994-ம் ஆண்டு, பொதுமக்களின் பேராதரவால் கோவில் புனரமைக்கப்பட்டுள்ளது.
அனுமனுக்கு ‘சுந்தரன்’ என்ற பெயரும் உண்டு. சுந்தரம் என்றால் அழகு என்று பொருள். சீதாபிராட்டியை தேடி இலங்கை செல்லும் வழியில் அனுமன் பல தடங்கல்களை சந்திக்கிறார். அவற்றை தன் வீரத்தாலும், விவேகத்தாலும் வெற்றி காண்கிறார். அதன் ஒரு பகுதியாகவே இங்குள்ள பாறை மீது அனுமன் வந்து அமர்ந்து தவம் இயற்றியதாகவும் சொல்லப்படுகிறது. இங்குள்ள அனுமன் சிற்பத்தில், ஓங்கிய வலது திருக்கரத்தில் தெய்வீக வகையான சுதர்சன ரேகை வடிக்கப்பட்டுள்ளது. இது சக்கரத்தாழ்வார் எனப்படும் சுதர்சனரின் சக்தியை குறிப்பதாகும். எனவே அனுமனை தரிசித்தால் நவக்கிரக தோஷங்கள், முற்பிறவியில் செய்த பாவங்கள், இப்பிறவியில் ஏற்படும் துன்பங்கள், நோய்கள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இங்குள்ள அனுமனின் திருவுருவத்தில் பல்வேறு தோற்றங்கள், மற்ற கோவில்களில் உள்ள சிற்பங்களை விட மாறுபட்டு உள்ளது. தன்னை நாடி வரும் பக்தர்களை காக்கும் பொருட்டு வலிமை பொருந்திய இடது திருவடியை சற்று முன் வைத்த நிலையில் அனுமன் அருள்பாலிக்கிறார். இந்த திருவுருவை வணங்குவோருக்கு நான் என்ற ஆணவம் நீங்கும். நாம் என்ற ஒற்றுமை மனதில் பிறக்கும். இதனால் அவர்களின் தலைமை பண்பு தரணியை ஆளும் என்பது ஐதீகம்.
ராமபிரானின் திருவடிகளை ஏந்திய வலது திருக்கரம், அபய திருக்கரமாக அமைந்துள்ளது. ஓங்கி உயர்ந்து தலைக்குமேல் தூக்கிய திருக்கரம், அடியவர்களுக்கு வாழ்வளிக்கும் வகையில் விளங்குகிறது. தெய்வீகமான சவுகந்திக மலரைக் கொண்டு ராமபிரானின் திருவடிகளை ஆஞ்சநேயர் பூஜித்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த வகையில் இந்தக் கோவிலில் அனுமன் தனது திருக்கரத்தில் கவுகந்திக மலரை தாங்கிய திருக்கோலம் உள்ளது. இந்த கோலத்தை தரிசிக்கும் பக்தர்களுக்கு நோய்கள் நீங்கி சகல சவுபாக்கியங்களும் கைகூடும். இடது தொடையில் ஊன்றிய திருவடி பக்தர்களுக்கு அருளும் வீரத்தினை உணர்த்துவதாக உள்ளது.
இந்த திருத்தலத்திற்கு வந்து அனுமனை வழிபட்டால் கலையாத கல்வியும், நீண்ட ஆயுளும், கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும், குன்றாத இளமையும், பிணி இல்லாத உடலும், சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும், தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும், தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஒரு துன்பம் இல்லாத வாழ்வும் கிடைக்கப்பெறும்.
இந்த கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடக்கிறது. திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு கதலிப்பழம், சுடு பால், பருப்பு, நெய் சாதம், அவல், கல்கண்டு, வெண்பொங்கல், சர்க்கரை, நெய் சாதம், சர்க்கரை பொங்கல், அவல் இனிப்பு, வடை, எலுமிச்சை அன்னம், புளியோதரை சாதம், தயிர்சாதம், தேங்காய் சாதம், சுண்டல் உள்ளிட்ட பொருட்களால் நைவேத்தியங்கள் செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் சனிக்கிழமை இந்த கோவிலில் விஷேசமானது. வாரந்தோறும் சனிக் கிழமையில் சிறப்பு பூஜை நடக்கிறது. ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கோவையில் இருந்து 51 கிலோ மீட்டர் தொலைவிலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலும், சிறுமுகையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும் இடுகம்பாளையம் அமைந்துள்ளது.

இந்தக் கோவிலுக்கு, 20 நிலைகள் கொண்ட உயரமான ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோபுரத்தின் உச்சியில் இருந்து மிகப்பெரிய சிவன் சிலையையும், கடற்கரை அழகையும் பார்க்கும் வகையில் லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது.
500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், அரபிக்கடலின் ஓரத்தில் அழகுற அமைந்துள்ளது.
சிவபெருமானே நம்மை வியக்க வைக்கும் சக்தி படைத்தவர்தான். அதோடு அவரது ஆலயமும் வியக்க வைக்கும் வகையில் அமைந்தால், அது பார்ப்பதற்கு எவ்வளவு சிறப்பாக இருக்கும். அப்படி ஒரு ஆலயம்தான், ‘முருடேஸ்வரர் திருக்கோவில்.’திருமணத்தடை விலகவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், வேலைவாய்ப்பு ஏற்படவும், கல்வியில் மேம்படவும் இங்கு பக்தர்கள் பிரார்த்திக்கிறார்கள். இதற்காக 108 கலச அபிஷேகமும் செய்யப்படுகிறது.
சிவபெருமானிடம் இருந்து பிராண லிங்கத்தைப் பெற்ற ராவணன், அதை இலங்கையில் நிறுவ எடுத்துச் சென்றான். அப்போது விநாயகர், சிறுவன் வேடத்தில் வந்து, ராவணன் சந்தியா கால பூஜை செய்யும் நேரத்தில் சிவலிங்கத்தை இங்கே நிறுவியதாக தல வரலாறு சொல்கிறது.
இங்குள்ள இறைவனின் பெயர் ‘முருடேஸ்வரர்.’ இங்கு 123 அடி உயரத்தில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய சிலை நிறுவப்பட்டுள்ளது. அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் இவர் காட்சி தருகிறார்.
பெரிய சிவன் சிலைக்கு கீழே திருக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சிவ-பார்வதி சன்னிதிகள், கணபதி, ஆஞ்சநேயர், முருகன், நவக்கிரக சன்னிதி, தத்தாத்ரேயர், சனீஸ்வரர் சன்னிதிகள் உள்ளன. சிவ-பார்வதியை, ராமர், சீதா, லட்சுமணர் பூஜிப்பது போல் சிலை வடிக்கப்பட்டுள்ளது.
முருடேஸ்வரர் சன்னிதியில் அணையா விளக்கு ஒன்று உள்ளது. பக்தர்கள் இந்த விளக்குக்கு எண்ணெய் ஊற்றி, காணிக்கை செலுத்தி, தீபத்தில் தங்கள் முகத்தைப் பார்க்கிறார்கள். இதனால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை.
இந்தக் கோவிலுக்கு, 20 நிலைகள் கொண்ட உயரமான ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இது 237.5 அடி உயரம் கொண்டது. இந்தக் கோபுரத்தின் உச்சியில் இருந்து மிகப்பெரிய சிவன் சிலையையும், கடற்கரை அழகையும் பார்க்கும் வகையில் லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது.
எம பயம் மற்றும் நோய் தீர்க்கும் வல்லமை படைத்தவராக இத்தல ஈசன் விளங்குகிறார். இங்கு சிவனுக்கும், பார்வதிக்கும் ‘ருத்ர அபிஷேகம்’ செய்யப்படுகிறது.
இங்கு குடும்பமாக வருபவர்களுக்கு ‘சர்வதேவ பூஜை’ செய்யப்படுகிறது. இது ஒரு தோஷ நிவர்த்தி பூஜையாகும். இந்த பூஜையின் போது, எள், நெய், வெல்லம், பச்சைப் பயறு, ஏலக்காய் பொடி கலந்த ‘பஞ்ச கஜ்ஜாய பிரசாதம்’ படைக்கப்படுகிறது.
கோவிலைச் சுற்றிலும், ராவணவன் விநாயகரிடம் சிவலிங்கத்தைக் கொடுக்கும் காட்சி, கயிலையில் சிவன் வீற்றிருக்கும் காட்சி, தேரில் அமர்ந்தபடி அர்ச்சுனுக்கு கிருஷ்ணன் கீதையை உபதேசிக்கும் காட்சி உள்ளிட்டவை அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆலயத்தில் தை மாதம் முதல் தேதி தொடங்கி 8 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவம் மிகவும் விசேஷமானது. அதே போல் தேரோட்டம், சிவராத்திரி, நவராத்திரி, கார்த்திகை தீப விழாக்களும் விமரிசையாக கொண்டாடப்படும்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தர கன்னடா என்ற மாவட்டத்தில் பாட்கல் என்ற கிராமத்தில் முருடேஸ்வரர் கோவில் இருக்கிறது.

இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமானை ராமபிரானும், சீதாதேவியும், அனுமனும் வழிபாடு செய்து அருள்பெற்றுள்ளனர். இந்த ஆலயம் பற்றிய சில தகவல்கள் இங்கே பார்ப்போம்..
ராமேஸ்வரம் கோவிலில் உள்ள அதிகார நந்தியானது, வாகனம், விக்கிரகம், உற்சவர் ஆகிய மூன்று சிறப்புகளையும் பெற்று இருப்பது வேறு கோவில்களில் இல்லாத சிறப்பு. அதிலும் இந்த நந்தி வாகனம் முழுவதும் தங்கத்தால் ஆனது.
கோவிலின் முதல் பிரகாரத்தில் 144 விக்கிரகங்களும், இரண்டாம் பிரகாரத்தில் 17 விக்கிரகங்களும் பூஜைக்காக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவை தவிர கோவிலில் உள்ள 381 விக்கிரகங்களுக்கும் நாள் தோறும் பூஜை நடத்தப்படுகிறது.
நம் நாட்டில் புனிதத் தலங்களாக நான்கு தலங்கள் மட்டும் கருதப்படுகின்றன. அவற்றுள் ஒன்று ராம்நாத் என்ற ராமேஸ்வரம். எஞ்சிய மூன்று தலங்களும் வட நாட்டில் அமைந்து இருப்பன. அவை துவாரகநாத், பத்ரிநாத், கேதார்நாத். இவை மூன்றும் வைணவத் தலங்களாகும்.
இக்கோவிலுள்ள நந்தி வேலைபாடுமிக்க சுதையினாலான பெரிய உருவமுடையதாகும். இந்த நந்தி 23 அடி நீளம், 12 அடி அகலம், 17 அடி உயரம் கொண்டது.
தலம், தீர்த்தம், மூர்த்தி என்ற முப்பெரும் சிறப்புக்களைக் கொண்டது, ராமேஸ்வரம். இங்குள்ள ராமநாதர் கோவில், ராமபிரானால் வழிபடப்பட்ட பெருமையுடையது.
காசி யாத்திரை சென்றவர்கள், ராமேஸ்வரத்திற்கு சென்று தனுஷ்கோடியில் தீர்த்தமாடி ராமேஸ்வர லிங்கத்தை வழிபட்டால் தான், காசி யாத்திரை முழுமை பெறும் என்பது ஐதீகம்.
இத்தலத்து கோவிலில் எழுந்தருளியுள்ள ராமநாதப் பெருமானுக்கு, நாள்தோறும் கங்கையில் இருந்து கொண்டுவரப்படும் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படுவது தனிச் சிறப்புடையது.
ராமேஸ்வரம் கோவிலில் ஒரே சங்கினுள் அடுத்தடுத்து இரு சங்குகளைக் கொண்ட தெய்வீக திரிசங்கு உள்ளது. இது தவிர ராமநாதருக்கு அபிஷேகம் செய்வதற்காகவே இத்தலத்தில் பிரத்யேகமாக 1008 அபிஷேகச் சங்குகள் இருக்கின்றன.
ராமேஸ்வரம் கோவிலில் முழுக்க, முழுக்க மூலிகைகளால் உருவாக்கப்பட்ட புதுமையான ஒரு லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்துக்கு `வைணலிங்கம்' என்று பெயர்.
ராமபிரான் சூரிய குலத்தைச் சேர்ந்தவர். அந்த குலத்தின் நேரடி வாரிசாக நேபாள மன்னர் குடும்பம் கருதப்படுகிறது. எனவே நேபாள மன்னர்களின் குல தெய்வமாக ராமேஸ்வரம் தலம் திகழ்கிறது.
ராமேஸ்வரம் ஆலயத்துக்குள் பூஜை செய்யும் ஒவ்வொருவரும் சிருங்கேரி மகா சன்னிதானத்திடம் சிவாச்சாரிய தீட்சை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விநாயகருக்கு இந்தியா முழுவதுமே பல திருக்கோவில்கள் அமைந்துள்ளன. அந்த வகையில் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற விநாயகர் கோவில்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
விநாயகருக்கு இந்தியா முழுவதுமே பல திருக்கோவில்கள் அமைந்துள்ளன. ஏன் ஒவ்வொரு தெருக்களிலும் கூட விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற விநாயகர் கோவில்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
சாசிவேகாலு கணேசா
கர்நாடகா மாநிலத்தின் சரித்திர புகழ்பெற்ற இடம் ஹம்பி நகரம். இங்குள்ள ஹேமகூட மலையின் அடிவாரத்தில்தான் ‘சாசிவேகாலு கணேசா’ கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள விநாயகர் சிலையானது, கடுகுகளினால் பூசப்பட்டதுபோல் காட்சியளிப்பதால் இந்தப் பெயர் வந்துள்ளது. இத்தல விநாயகர் தன்னுடைய வயிற்றில் பாம்பு ஒன்றை இறுக்கி கட்டிய நிலையில் காட்சி தருகிறார். 8 அடி உயரம் உள்ள இந்த விநாயகர், ஒரே கல்லில் செதுக்கப்பட்டவர்.
தொட்ட கணபதி
பெங்களூருவில் உள்ள பசவனகுடி என்ற பகுதியில்தான் இந்த தொட்ட கணபதி ஆலயம் அமைந்திருக்கிறது. இங்குள்ள விநாயகர் சிலை ஒற்றைப் பாறையை குடைந்து உருவாக்கப்பட்டதாகும். 18 அடி உயரம், 16 அடி அகலத்துடன் வெகு பிரமாண்டமாக காட்சியளிக்கிறார் இந்த விநாயகர். இதனாலேயே இவரை தொட்ட (மிகப்பெரிய) கணபதி என்று அழைக்கிறார்கள்.
தக்டுசேட் கணபதி
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள புகழ்பெற்ற விநாயகர் கோவில்தான், தக்டுசேட் கணபதி ஆலயம். திருப்பதி வெங்கடாஜலபதியைப் போல, இத்தல விநாயகரும் ‘பணக்கார விநாயகர்’ என்றே அழைக்கப்படுகிறார். ஏனெனில் இந்த கோவிலில் உள்ள விநாயகர் சிலை ரூ.1 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.
உச்சிப்பிள்ளையார்
திருச்சியில் உள்ள மலைக்கோட்டை, 3 பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மலையின் உச்சியில் அமைந்த காரணத்தால், இங்குள்ள விநாயகர் ‘உச்சிப் பிள்ளையார்’ என்று அழைக்கப்படுகிறார். இந்தக் கோவில் பணி பல்லவர்கள் காலத்தில் தொடங்கப்பட்டு, 7-ம் நூற்றாண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் முடிக்கப்பட்டுள்ளது. தரை மட்டத்தில் இருந்து 273 அடி உயரத்தில் அமைந்த இந்தக் கோவிலை அடைய, 437 படிகள் ஏறிச்செல்ல வேண்டும்.
சித்தி விநாயக் மந்திர்
மும்பையின் புகழ்பெற்ற திருக்கோவில்களில் ஒன்று இது. 1801-ம் ஆண்டு இந்த ஆலயம் கட்டப்பட்டள்ளது. முன் காலத்தில் சிறிய செங்கல் கட்டிடமாக இருந்த இந்த ஆலயம், தற்போது புனரமைக்கப்பட்டு, பார்க்கவே பிரமாண்ட தோற்றம் தரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
மணக்குள விநாயகர்
புதுச்சேரியில் 1666-ம் ஆண்டிலேயே இந்தக் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோவில் அமைந்திருக்கும் பகுதியில் முன்பு எங்கும் மணல் பரந்து கிடந்ததோடு, அருகே ஒரு குளமும் இருந்ததால் இது ‘மணக்குள விநாயகர்’ என்ற பெயரை பெற்றது.
சுயம்பு கணபதி
மகாராஷ்டிரா மாநிலத்தின் கணபதிபுலே நகரில் கடற்கரைப் பகுதியில் இந்தக் கோவில் இருக்கிறது. இங்குள்ள விநாயகர் சிலை, மணற்பாறையில் தானாகவே உருவானது. இதனாலேயே இதனை ‘சுயம்பு கணபதி’ என்கிறார்கள். இந்த சுயம்பு விநாயகரைத் தவிர, சிங்கத்தின் மீது காட்சியளிக்கும் தாமிரத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலையும் இந்த ஆலயத்தில் உள்ளது.
கொட்டாரக்கரா மகாகணபதி
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம்தான் கொட்டாரக்கரா. இங்கு மகா கணபதி ஆலயம் உள்ளது. முன் காலத்தில் இந்தக் கோவில் இங்கு முதன்மை தெய்வமாக இருக்கும் சிவனின் பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்துள்ளது. நாளடைவில் இங்குள்ள கணபதியின் புகழ் பரவத் தொடங்கியதால், இப்போது கணபதியில் பெயரிலேயே கோவில் வழங்கப்படுகிறது. இங்கு சிவன், விநாயகர் தவிர, பார்வதி, முருகன், ஐயப்பன் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன.