என் மலர்
கோவில்கள்
ஆலயத்தின் வெளிமதில்களில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், ஊர்த்துவ தாண்டவர், சந்தியா தண்டவர், பிட்சாடனர் என்று சிவபெருமானின் பல்வேறு வகையான வடிவங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில், கயிலாசநாதர் கோவில் இருக்கிறது.
மண், மரம், செங்கல், சுண்ணாம்பு, உலோகம் எதுவும் இன்றி ஒரு ஆலயம் கட்ட நினைத்தான், மகேந்திரவர்மன். அவன் மரபில் வந்த ராஜசிம்மன் அதை சாத்தியப்படுத்தினான். அதுவே காஞ்சிபுரத்தில் உள்ள கயிலாசநாதர் கோவில். இது முழுவதும் கல்லால் மட்டுமே அமைந்திருக்கிறது.
காஞ்சிபுரத்தில் பாயும் வேகவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த ஆலயம், ‘தென்திசை கயிலாயம்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆலயத்தில் 1300 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
கருவறை விமானம் தனிச்சிறப்பு கொண்டது. மாமல்லபுரத்தில் உள்ள தர்மராஜ ரதத்தின் உச்சிப் பகுதியை போன்று இதன் விமானம் அமைந்துள்ளது.
இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் ராஜசிம்ம பல்லவனால் இந்த ஆலயத்தின் கட்டுமானம் கி.பி.700-ல் தொடங்கப்பட்டது. ஆனால் அவரது மகன் மூன்றாம் மகேந்திரவர்மன் காலத்தில்தான் கட்டிடப் பணிகள் முடிவுற்றன.
கருவறையில் வீற்றிருக்கும் கயிலாசநாதர் என்ற பெயருடைய சிவலிங்கம், 16 பட்டைகள் கொண்டு ‘ஷோடச லிங்க’மாக விளங்குகிறது. இந்த லிங்கத்தின் பின்புறம், சிவபெருமான், பார்வதி ஆகியோரின் நடுவில் முருகப்பெருமான் வீற்றிருக்கும் ‘சோமாஸ்கந்தர்’ உருவம் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
பிரதான ஆலயத்தைச் சுற்றி பல சிறு துணை ஆலயங்கள் உள்ளன. அவை அனைத்தும் சிறு விமானத்தைக் கொண்டிருக்கின்றன. இந்த துணை ஆலயங்களை அமைத்தவர், ராஜசிம்மனின் பட்டத்தரசி ரங்கபதாகை ஆவார்.
ஆலயத்தின் வெளிமதில்களில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், ஊர்த்துவ தாண்டவர், சந்தியா தண்டவர், பிட்சாடனர் என்று சிவபெருமானின் பல்வேறு வகையான வடிவங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன.
கருவறையை சுற்றி குறுகலான திருச்சுற்று உள்ளது. இதற்கு ‘புனர்ஜனனி’ என்று பெயர். இந்த திருச்சுற்றின் உள், வெளி வாசல்கள் தரையில் படுத்து ஊர்ந்து செல்லும் வகையில் அமைந்தவை. இதனைச் சுற்றி வந்தால் மறுபிறவி இல்லை என்கிறார்கள்.
ராஜசிம்ம பல்லவன், போரில் சிங்கம் போன்றவன் என்ற பெருமைக்குரியவன். அதைச் சுட்டிக்காட்டும் வகையில் ஆலயத்தில் அனைத்துப் புறங்களிலும், கோவிலைத் தாங்கி நிற்பது போல சிங்கத்தின் சிலைகளே அதிகமாக காணப்படுகின்றன.
பிரதான ஆலயத்திலும், சுற்றியுள்ள துணை ஆலயங்களிலும் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் கால ஓவியங்கள் உள்ளன. கி.பி.14-ம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்கள் இந்த ஓவியங்கள் மீது புதிய ஓவியங்கள் தீட்டியதாக கருதப்படுகிறது. இதனால் இதனை ‘ஈரடுக்கு ஓவியங்கள்’ என்கிறார்கள்.

புதிய செயல்களை தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக் கொண்டால் அச்செயல் முடியும் வரையில் பாதுகாப்பாக இருந்து அதனை சிறப்புற முடித்து தருவார் என்பது நம்பிக்கை.
மூலவர்: – தலையாட்டி விநாயகர்(காவல் கணபதி)
தீர்த்தம்: – வசிஷ்ட நதி
பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்
மாவட்டம்: – சேலம்
தலவரலாறு
சிவதல யாத்திரை சென்ற வசிட்ட முனிவர், வசிட்ட நதிக்கரையில் பல இடங்களில் தவம் செய்தார். அவ்விடங்களில் எல்லாம் ஒரு லிங்கத்தை நிறுவனம் செய்து ஆத்மார்த்தமாக வணங்கி சிவனது அருள் பெற்றார். அவர் இத்தலத்தில் தவம் செய்தபோது, திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தருவது போல சிவதரிசனம் பெறவேண்டும் என விரும்பினார். எனவே, அவர் நிறுவிய லிங்கத்தில் ஒளிப்பிழம்பு வடிவாக அமர்ந்தார் சிவன்.
காலப்போக்கில் இந்த லிங்கம் மண்ணில் புதைந்தது. பல்லாண்டுகளுக்குப்பின், இப்பகுதியை கெட்டி முதலி எனும் குறுநிலமன்னன் ஆட்சி செய்தான். அவன் தினமும் சிவனை வணங்கிய பிறகே எந்தச் செயலையும் செய்வான். ஒருநாள் அவனது கனவில் தோன்றிய சிவன், தான் இத்தலத்தில் மண்ணிற்கு அடியில் இருப்பதாகவும், தனக்கு கோயில் எழுப்பும்படியும் கூறினார். அதன்படி, மன்னன் இவ்விடத்தில் மண்ணைத் தோண்டினான். அப்போது லிங்கத்தையும், அதனருகில் பெரும் புதையலையும் எடுத்தான். புதையல் பணத்தை வைத்தே இத்தலத்தை கட்டினான்.
இவ்வாறு மன்னன் இக்கோயிலை கட்டும் முன்பு சிவனிடம் உத்தரவு கேட்டுவிட்டு அதன்பின்பே, பணியைத் துவங்கினான். சிவனே கோயில் திருப்பணிக்குப் பாதுகாவலராகவும் இருந்தார். மன்னன் கோயில் வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு இவரிடம் வந்து “பணிகளை சிறப்பாக முடித்திருக்கிறேனா?” என்று கேட்டான். அதற்கு சிவன், “நன்றாகவே கட்டியிருக்கிறாய்‘ என்று சொல்லும்விதமாகத் தனது தலையை ஆட்டினாராம். எனவே இவருக்குத் “தலையாட்டிப் பிள்ளையார்” என்ற பெயர் வந்தது. தற்போதும் இவர் தனது தலையை இடப்புறமாக சற்றே சாய்த்தபடி இருப்பதை காணலாம்.
தலப்பெருமை
புதிய செயல்களை தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக் கொண்டால் அச்செயல் முடியும் வரையில் பாதுகாப்பாக இருந்து அதனை சிறப்புற முடித்து தருவார் என்பது நம்பிக்கை.
பொதுத்தகவல்
முற்காலத்தில் இப்பகுதியில் வசிட்டநதி, சுவேத நதி, மலையாறு, சிற்றாறு என பல நதிகள் இருந்தன. இதனால் “ஆற்றூர்‘ என்றழைக்கப்பட்ட இவ்வூர் பிற்காலத்தில் “ஆத்தூர்” என்று மருவியுள்ளது. இவரது கோயிலுக்கு அருகில் சிவன், காயநிர்மாலேசுவரராக அருளுகிறார்.
திருவிழா: – விநாயகர் சதுர்த்தி.
கோரிக்கைகள்:
திருமண, புத்திர, கிரக தோடம் நீங்க இங்கு வழிபடலாம்.
நேர்த்திக்கடன்:
விநாயகருக்கு புத்தாடை சாத்தி, பூசைகள் செய்து வழிபடுகிறார்கள்.
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு தலையாட்டி விநாயகர் திருக்கோயில்,
ஆத்தூர் -636102,
சேலம் மாவட்டம்

ஸ்ரீகாணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் சாட்சியாக, நான் சொல்வதெல்லாம் சத்தியம் என்று எவர் கூறுகிறாரோ, அவருடைய இந்த சத்தியப்பிரமாணம் இன்றளவும் ஆந்திர மாநிலம் கிராமப் பஞ்சாயத்துகளில் நூற்றுக்கு நூறு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
காணிப்பாக்கம் என்று இப்போது அழைக்கப்படும் ஸ்தலம். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் விஹாபுரி கிராமமாக இருந்தது. அந்த கிராமத்தில் மூன்று நண்பர்கள் ஒற்றுமையாக விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். மூவருமே உடல்குறை உள்ளவர்கள். ஒருவரால் பேச முடியாது. ஒருவர் பார்வையற்றவர். முன்றாம்வரால் கேட்க இயலாது. கிணற்றிலிருந்து ஏற்றம் மூலம் நீர் முகந்து வயல்களில் பாய்ச்சிக் கொண்டிருந்தார்கள். செவியற்ற வரும், பார்வையற்றவரும் ஏற்றக் காலில் ஏறி நின்று மிதிக்க ஏற்றம் சுமந்துவரும் நீரை கீழே இருக்கும் பேச்சிழந்தவர் கையால் பற்றி கால்வாயில் ஊற்றுவார்.
வறட்சியால் கிணற்றில் நீர் வற்றிவிடவே பேச்சிழந்தவர் உள்ளே இறங்கி ஊற்று நீர் கிடைக்குமா என்று பார்க்க மண்வெட்டியால் தோண்டினார். அப்போது மண்வெட்டி பாறை ஒன்றில் மோத அந்தப்பாறையிலிருந்து ரத்தம் பீறிட்டது. அதைப்பார்த்த அவர் பயந்து ஐயோ என்று அலறினார். கிணற்றுக்கு மேலே நின்றிருந்த பார்வையற்றவருக்கும் இவர் கத்தியது கேட்க இருவரும் உள்ளே எட்டிப்பார்த்தனர் ஆமாம்.
செவியற்றவர் கேட்டார் பார்வையற்றவர் பார்த்தார். கிணற்றிலிருந்து நீருக்கு பதிலாக குருதி பெருகுவதைக்கண்டு இவர்கள் கூச்சலிட வயிலில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் ஓடோடி வந்தார்கள். நடந்த அதிசயங்களைக்கண்டு அவர்கள் பிரமித்து நின்றார்கள். சில விநாடிகளுக்குப் பிறகு பிரமிப்பிலிருந்து விடுபட்டு கிணற்றுக்குள் இறக்கினர். உள்ளே ஒரு பாறை அமைப்பிலான விநாயகர் சிலையையும் அதன் தலையிலிருந்து ரத்தம் வருவதையும் பார்த்தனர். ஒரு துணி எடுத்து குருதி வழிந்த இடத்தில் வைத்துக்கட்டினார்கள். பிறகு அந்த சிலையை வெளியே எடுத்து வந்தார்கள்.
மேலே வந்து விநாயகரை நிறுவி, தற்காலிகக்கோவில் ஒன்றை நிர்மானித்தார்கள். அதன் பிறகு கிராமமக்கள் ஒவ்வொருவரும் அவரை வேண்டிக்கொண்டு உடைத்த தேங்காய்களிலிருந்து வெளிப்பட்ட நீர் ஒரு காணி பரப்பளவில் பரவிநின்றதாம். அதாவது சுமார் ஒன்றேகால் ஏக்கர்! காணி நிலத்தில் பாரகமானதால் (தெலுங்கில் பாரகம் என்றால் நீர் பாய்தல் என்று பொருள்) இந்ததலம் காணிப்பாரகமாகி பிறகு காணிப்பாக்கம் ஆனது.
ஸ்ரீகாணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் சாட்சியாக, நான் சொல்வதெல்லாம் சத்தியம் என்று எவர் கூறுகிறாரோ, அவருடைய இந்த சத்தியப்பிரமாணம் இன்றளவும் ஆந்திர மாநிலம் கிராமப் பஞ்சாயத்துகளில் நூற்றுக்கு நூறு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சத்தியத்துக்கு மாறாக எவரேனும் நடத்துகொண்டால், அவர் தொண்ணூறு நாட்களுக்குள்ளேயே விநாயகரால் தண்டிக்கப்படுவார். இதை அனுபவப்பூர்வமாக மக்கள் கண்டிருக்கிறார்கள். ஆந்திர மாநிலம் சித்தூர் பேருந்து நிலையத்திலிருந்து (12) கிலோ மீட்டர் பயணத்தில் காணிப்பாக்கத்தை அடையலாம். சுயம்புவான விநாயகர் கிணற்றின் மேல் அமைக்கப்பட்டுள்ளார். சுற்றி என்றும் வற்றாத கிணற்று நீரே பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இவருக்கு அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனை அனைத்தும் உண்டு. ஆனால் விசேஷ அலங்காரம் எதுவும் செய்வதில்லை. இவ்விநாயகர் ஆண்டுதோறும் அகலமாகப் பெருகி வருவது ஆன்மிக அதிசயமாக விளங்குகிறது. அன்று விநாயகருக்குச் செய்வித்த வெள்ளிக்கவசம் இன்று சிறியதாகவிட்டது. என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! விநாயகர் வளர்வது போலவே அவரை தரிசிக்க வரும் பக்தர்களும் வளம் பெருக வாழ்கிறார்கள். சாதாரண நாளில் கூட நிரம்பி வழியும் பக்தர் கூட்டம் இதை உண்மை என்று நிரூபிக்கிறது.
நல்லொழுக்கம் கைவரப்பெறவும் இவர் வரம் அருள்கிறார். ஆமாம்.... இவர் முன் நின்று இனி குடிக்க மாட்டேன், புகைக்க மாட்டேன் சூதுவை நாடமாட்டேன் என்று மனமுருக வேண்டுவோர் அந்தத்தீயப் பழக்கங்களிலிருந்து விடுபடுகிறார்களாம்! விநாயகரின் தந்தை சிவபெருமான் திருவானைக்கா என்னும் திருத்தலத்தில் லிங்க வடிவில் தண்ணீருக்குள் இருப்பது போல் ஆந்திர மாநிலம் சித்தூருக்கு(12) கி.மீ. தொலைவில் உள்ள காணிப்பாக்கத்தில் உள்ள (வரசித்தி) காணிப்பாக்கம் விநாயகர் கோவில் மூலவரான பிள்ளையார் முழங்கால் வரை உள்ள தண்ணீருக்குள் இருந்தபடி அருள் தருகிறார்.

தட்சனின் சாபத்தால் தனது ஒளியையும் அழகையும் இழந்து வருந்திய சந்திரன், சிவபெருமானை நோக்கி உடுப்பியில் கடும் தவம் செய்து இழந்த ஒளியையும் அழகையும் திரும்பப் பெற்றார்.
உடுப்பி கிருஷ்ணன் கோவில் கர்நாடக மாநிலம் உடுப்பி எனும் நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் கிருஷ்ணர். இக்கோவிலில் மத்வ புஷ்கரிணி எனும் தீர்த்தமுள்ளது. சந்திரக் கடவுள் தனது மனைவிகளான இருபத்து ஏழு நட்சத்திரங்களுடன் கிருஷ்ணரை வழிபட்ட தலம். இங்கு நாள்தோறும் அன்னதானம் அளிக்கின்றனர்.
விஸ்வகர்மாவால் செய்யப்பட்டு துவாரகையில் ருக்மிணி தேவியால் வழிபடப்பட்டு துவாரகை கடலில் மூழ்கிய போது மூழ்கி பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மத்வருக்குக் கிடைத்து, மத்வராலேயே பிரதிஷ்டை செய்யப்பட்ட பாலகிருஷ்ணரின் திருவுருவமே உடுப்பி கிருஷ்ணரின் கோவிலில் உள்ளது.
தட்சனின் சாபத்தால் தனது ஒளியையும் அழகையும் இழந்து வருந்திய சந்திரன், சிவபெருமானை நோக்கி உடுப்பியில் கடும் தவம் செய்து இழந்த ஒளியையும் அழகையும் திரும்பப் பெற்றார். அப்போது சந்திரன் நிர்மாணித்த திருக்குளம் ’சந்திர புஷ்கரணி’. நட்சத்திரங்களின் அதிபதியான சந்திரன் தவம் புரிந்ததால் (உடு=சந்திரன்;பா=அதிபதி) உடுபா என்றும் பின்னர் அது மருவி உடுப்பி என்றும் ஆனது.
உடுப்பி கிருஷ்ணனுக்கு வழிபாடு செய்வதற்காக எட்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்து கணியூர் மடம், சோதே மடம், புதிகே மடம், அத்மார் மடம், பேஜாவர் மடம், பாலிமார் மடம், கிருஷ்ணாபுரம் மடம், சிரூர் மடம் என எட்டு மடங்களையும் நிர்மாணித்து ஒவ்வொரு மடமும் இரண்டு மாதங்கள் நிர்வகிக்க வேண்டும் என்ற நடைமுறையை மத்வர் ஏற்படுத்தினார்.
புதிய சுவாமி மடத்தின் பொறுப்பை ஏற்கும் விழா பர்யாய வைபவம் என்று கொண்டாடப்படுகின்றது. உடுப்பியில் மிகச் சிறப்பாகக்கொண்டாடப்படும் விழாவாக இது அமைகிறது. இவ்விழாவின் போது விறகுத்தேர் அமைக்கப்படுகின்றது. இத்தேர் விறகுதான் கோவில் சமையலுக்குப் பயன்படுகின்றது.
முன்பு கனகதாசர் என்ற மகான் தாழ்த்தப்பட்டிருந்த குலத்தில் பிறந்திருந்ததால் உடுப்பி கோவிலில் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவர் தினமும் உடுப்பி கிருஷ்ணனின் கருவறைக்குப் பின்னால் நின்று ஏகதாரி வீணை எனும் ஒரு கம்பி மட்டும் கொண்ட வாத்தியக் கருவியை மீட்டி வழிபட்டுவந்தார். ஒருநாள் கருவறையின் பின்பக்கச் சுவரின் கற்கள் தாமாகவே விழுந்து உடுப்பி கிருஷ்ணரும் பின்புறச்சுவர் நோக்கித் திரும்பி கனகதாசருக்கு காட்சியளித்தார்.
கனகதாசர் கண்ணனை வழிபட வழிவகுத்த ஒன்பது துவாரங்கள் கொண்ட பலகணி கனகதண்டி என அழைக்கப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் கனகதாசர் கிருஷ்ணரை தரிசித்த பலகணி வழியாகவே மூலவரை தரிசனம் செய்யும் வழக்கமும் இந்நிகழ்வுக்குப் பின்னர் ஏற்பட்டது. தற்போது அதுவே நடைமுறையில் உள்ளது.

இங்கு திருமணம் நடத்துவதற்காகவும், ஆன்மிக சொற்பொழிவு பயன்படும் வகையில் ஒரு விசாலமான மண்டபம் உள்ளது. இந்த கோவில் ராஜகோபுரத்தில் கந்த புராண காட்சிகள் விளக்கும் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.
மூலவர் : வடபழநி ஆண்டவர்
அம்மன்/தாயார் : வள்ளி, தெய்வானை
தல விருட்சம் : அவதும்பரவிருக்ஷம் (அத்திமரம்)
தீர்த்தம் : குகபுஷ்கரணி (திருக்குளம்)
ஆகமம்/பூஜை : காமிகாகமம் (சிவாகமம்)
அமைந்த இடம் : வடபழநி, சென்னை, தமிழ்நாடு
கோவில் வரலாறு
1890-ம் ஆண்டு மிகவும் எளிய ஓலைக்கூரைக் கொட்டகையுடன் இந்த கோவில் கட்டப்பட்டது. பின்னர் மக்களின் அதிக வருகையாலும், ஆதரவாலும் கோவில் புகழ் பெற்றது. ஆண்டுக்கு சுமார் 7 ஆயிரம் தம்பதியர் இந்த ஆலயத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர். இந்த கோவில் அண்ணாசாமி நாயக்கர் எனும் முருக பக்தர் தனது சொந்த வழிபாட்டிற்காக கொட்டகையுடன் இந்த கோவில் அமைத்தார் எனவும். அங்கு பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியின் வண்ணப்படத்தை வைத்து வழிபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் ஒரு சமயம் கடுமையான வயிறு வலியால் அவதிப்பட்டார். அவரின் நோய் தீர வேண்டி அடிக்கடி திருத்தணி மற்றும் திருப்போரூர் முருகன் ஆலயத்திற்கு சென்று வந்தார். ஒரு முறை தென் பழநி யாத்திரை சென்ற போது அங்கு ஒரு சாது சொல்லியபடி, அண்ணாசாமி தங்கியிருந்த கொட்டகையில் பழநி முருகன் உருவ படம் வைத்து வழிபடலானார்.
தன்னுடைய நாக்கை அறுத்து முருகனுக்கு காணிக்கையாக்கினார். இதற்கு "பாவாடம்" என்று பெயர். இதனால் அவருடைய வயிற்றுவலி நீங்கியது. நாளடைவில் அவர் முருகப்பெருமானின் தெய்வீக சக்தியை உணரத் தொடங்கினார். அதன் பின் அவர் சொல்லக்கூடிய “அருள்வாக்கு” பலருக்கும் உண்மையாக நடப்பதாக கூறினர். அதனால் மக்கள் தங்களின் அன்றாட பிரச்னை தீர அண்ணாசாமி நாயக்கரிடம் அருள்வாக்கு பெற்றனர்.
தனிச் சன்னதிகள்
இந்த கோவிலில் பல தெய்வங்களுக்குரிய தனிச் சன்னதிகள் உள்ளன. இங்கு வரசித்தி விநாயர், சொக்கநாதர் சிவன், மீனாட்சி அம்மன், காளி, பைரவர், மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் சன்னதிகள், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி என பல சன்னதிகள் இங்கு உள்ளன. இந்த ஆலயத்தின் மூலவராக பழநி முருகன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றார். முருகப்பெருமானின் காலில் பாதரட்சைகளுடன் காட்சியளிக்கிறார்.
இங்கு திருமணம் நடத்துவதற்காகவும், ஆன்மிக சொற்பொழிவு பயன்படும் வகையில் ஒரு விசாலமான மண்டபம் உள்ளது. இந்த கோவில் ராஜகோபுரத்தில் கந்த புராண காட்சிகள் விளக்கும் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.
கோவிலின் சிறப்பு
பல முருகன் கோவில்களில் இல்லாத ஆஞ்சநேயர் சன்னதி இங்கு உண்டு. தென்பழநி கோவிலுக்குச் செய்வதாக வேண்டிக்கொண்ட காணிக்கைகளை இக்கோவிலில் செலுத்துவதும் உண்டு.
வழிபாடு
கோவில் தினமும் அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. 7 மணிக்கு காலசந்தி பூஜை, 12 மணிக்கு உச்சிகால பூஜை நடக்கும். 5 மணிக்கு சாயரட்சை, 9அர்த்தசாம பூஜை நடைபெறுவது வழக்கம்.

இத்திருக்கோவிலின் பிரகாரத்தைச் சுற்றி வரும்போது ஒரு இடத்தில் நின்று காணும் போது ஐந்து கோபுரங்களின் தரிசனம் கண்களுக்கு விருந்து படைக்கின்றன.
திருத்தலக் குறிப்பு:
இத்திருக்கோவில் அருள்மிகு லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி திருக்கோவில் மற்றும் இக்கோவிலின் உள்ளே இளங்கோவில் என்னும் அருள்மிகு மின்னும் மேகலை சமேத சகல புவனேஸ்வரர் திருக்கோவில் என இரண்டு கோவில்கள் சேர்ந்து அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிகுந்த கலை நயம் மிக்க சிற்பங்களைக் கொண்ட சிவ தலமாக விளங்குகிறது. இந்த இரண்டு கோவில்களும் சோழர் காலத்திய கற்கோயிலாக விளங்குகின்றன. இராஜேந்திர சோழன், செம்பியன் மாதேவி ஆகியோரது காலத்தில் கோவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோழ நாட்டின் காவிரி தென்கரை பாடல் பெற்ற திருத்தலங்களில் 56, 57-வது திருத்தலங்களாக விளங்குகின்றன.
தல மூர்த்தி : அருள்மிகு மேகநாத சுவாமி
தல இறைவி : அருள்மிகு லலிதாம்பிகை (சாந்த நாயகி அம்மன்)
தல விருட்சம் : வில்வ மரம்
தீர்த்தம் : சூர்ய புஷ்கரணி
திருமீயச்சூர் பெருங்கோவில் கஜப்பிரஷ்ட விமான அமைப்பினை உடையது. இத்திருக்கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும் ஏழு கலசங்களுடனும், கோவிலின் இரண்டாவது உள் கோபுரம் மூன்று நிலைகளுடன் ஐந்து கலசங்களுடனும் காணப்படுகின்றன. முதலில் அன்னை லலிதாம்பிகை குடிகொண்டுள்ள சன்னதி தனி கோபுரத்தின் கீழ் உள்ளது. அதனை அடுத்து, பெருங்கோயிலின் இரண்டாவது உள் கோபுரத்தில் நுழையும்போது ரத விநாயகர் நம்மை வரவேற்கிறார்.
முதலில் மேகநாத சுவாமி சன்னதி அமைந்துள்ளது. உட் பிரகாரத்தின் தென் பகுதியில் நாக பிரதிஷ்டைகள், சேக்கிழார், போன்றோரது திருவுருவங்களும், சப்த மாதாக்கள் பூஜித்த லிங்கங்கள், சுற்றி வரும்போது பிரகாரத்தில், அக்னி, எமன், இந்திரன் வழிபட்ட லிங்கங்கள், வள்ளி, தேவசேன சமேத சுப்பிரமணியர், நிருதி, வருணன், குபேரன், அகத்தியர், ஈசான லிங்கங்களும் உள்ளனர்.
இக்கோவில் சிற்பக் கலையில் சிறப்போடு விளங்குகிறது என்பதற்கு உதாரணமாக, சுவாமி அம்பாளை அமைதியாய், சாந்தமாய் இருக்கச் சொல்லும் தோற்றத்தில் இத்தலத்தின் க்ஷேத்திர புராணேஸ்வரர் திருவுருவம் அமைந்துள்ளது. இந்த சிற்பத்தில் என்ன ஒரு விசேஷம் என்றால், அம்பாளையும், ஈஸ்வரனையும் ஒரு புறத்தில் இருந்து பார்க்கும்போது சிரித்த முகமாகவும், மற்றொரு புறத்தில் இருந்து காணும் போது கோபமாகவும் தோன்றும் வண்ணம் இந்த சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த சிற்பத்தை காணும்போது நம் தினப்படி வாழ்வில் நடக்கும் விஷயம் தான் நினைவுக்கு வருகிறது. வீட்டில் கணவன் மனைவிக்குள் எத்தனை பிரச்சினைகள் நடந்து, சண்டை சச்சரவுகள் நடந்தாலும், வெளியில் இருந்து ஒரு விருந்தினர் நம் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்றால் அப்படியே கோபமான முகத்தை, சாந்தமான முகமாக மாற்றிக்கொண்டு விருந்தோம்பல் புரிவது நமது பண்பாடு. இவ்வாறு இறைவன் கூட அவர்களைக் காணச் சென்ற பக்தர்களாகிய நம்மை விருந்தினர்களாக நினைத்து தன் மனைவியை சிரித்த முகத்துடன் இருக்குமாறு சொல்கிறாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது. ஈஸ்வரனக்குத்தான் அவரது பக்தர்கள் மேல் எத்தனை பிரியம்.
இப்பெருமானைப் பார்த்துவிட்டு அப்படியே சுற்றி வரும்போது தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சந்திரசேகரர், அஷ்டபுஜா துர்க்கை, ரிஷபாருடர், ஆகியோரது திருவுருவங்களையும் கடந்து செல்கின்றோம். இந்த பெருங்கோயிலின் அர்த்தமண்டப வாயிலில், துவார கணபதிகளையும், போதிகை தூண்களும் அழகு சேர்க்கின்றன. இக்கோயிலின் வடப் பக்கத்திலே இளங்கோயிலை தரிசனம் செய்யலாம்.
இத்திருக்கோவிலின் பிரகாரத்தைச் சுற்றி வரும்போது ஒரு இடத்தில் நின்று காணும் போது ஐந்து கோபுரங்களின் தரிசனம் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. கோபுர தரிசனம் கோடி புண்ணியம். கோபுரங்களின் தரிசனம் கோடானு கோடி புண்ணியம்.
கோபுர தரிசனத்திற்கு பின்னர் அங்கேயே சற்றுதள்ளி, இளங்கோயிலின் சுற்றுச் சுவர்களில் லிங்கோத்பவர், பிரம்மா, மகாவிஷ்ணுவாகிய மும்மூர்த்திகளின் தரிசனம் நமக்கு ஒருசேரக் கிடைக்கிறது.
திருக்கோவில் அமைவிடம்:
அருள்மிகு லலிதாம்பிகை திருக்கோவில், திருமீயச்சூர் என்னும் ஒரு சிற்றூரில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ள பேரளம் என்னும் ஊருக்கு அருகே அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவிலும், திருவாரூரில் இருந்து 22 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. காரைக்காலில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் பாதையில் உள்ளது.

பங்குனி மாதம் 23 முதல் 27-ம் தேதி வரையிலும் சூரியன் வணங்கும் வேளையில் நிகழும் விசேஷ பூஜைகளில் கலந்துகொண்டு வழிபட்டால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.
விழுப்புரம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தால், விழுப்புரத்திலிருந்து 26 கி.மீ தொலைவில் உள்ளது திருநாவலூர். அருள்மிகு மனோன்மணி அம்மை சமேதராக அருள்மிகு பக்தஜனேஸ்வரர் கோயில் கொண்டிருக்கும் புண்ணிய க்ஷேத்திராம் இது!
இறைவனின் தோழன் என்றே ஞானநூல்கள் பலவும் போற்றும் சுந்தர மூர்த்தி சுவாமிகள் அவதரித்த தலம், இந்தத் திருநாவலூர் என்கிறார்கள் பக்தர்கள்! இங்கே பக்தஜனேஸ்வரராக சிவம் கோயில் கொண்ட திருக்கதை அற்புதமானது.
ஆலய வரலாறு
1300 ஆண்டுகள் பழைமையான சிவாலயம் என்கிறார்கள். ஐந்து நிலை கோபுரம் கம்பீரமாகக் காட்சி தருகிறது. கோபுர வாயில் கடந்து உள்ளே நுழைந்தால், அழகும் அமைதியும் ததும்ப காட்சி தருகிறது ஆலயம். பிரமாண்டமான நந்தி சிவச் சந்நிதியை எதிர்நோக்கி அமர்ந்திருக்க, அருகிலுள்ள சிங்க மண்டபத்தை ஒட்டியபடி அம்பாள் சந்நிதிக்கான பாதை செல்கிறது.
இதைக் கடந்ததும் உள் பிராகாரம். கிழக்குச் சுற்றில்- 16 பட்டைகளுடன் கூடிய நரசிங்க லிங்கம்; நரசிங்க முனையரையர் ஸ்தாபித்து வழிபட்டது. தெற்குச் சுற்றில்- பொள்ளாப் பிள்ளையார், சேக்கிழார், சைவ நால்வர், அறுபத்து மூவரும், தொகையடியார்களும். தொடர்ந்து சப்தமாதர்கள். தென்மேற்கு மூலையில்- வலம்புரி விநாயகர். அடுத்து சோமாஸ்கந்தர், வள்ளி- தெய்வானை சமேத ஆறுமுகர், பன்னிரு கரங்களுடன் மயிலேறுநாதராக அருள்கிறார்.
தொடர்ந்து நகர்ந்தால்... மேற்குச் சுற்றுத் திருமாளிகையில் முருகனுக்கு அருகில், விஷ்ணு சேவை சாதிக்கிறார். அடுத்து, கிருத யுக லிங்கம்; அதற்கும் அடுத்து, சண்டிகேஸ்வரர். தொடர்ந்து திரேதா யுக லிங்கம்; பிரம்மா; துவாபர யுக லிங்கம்; கலியுக லிங்கம்.
வடமேற்கு மூலையில் தனிச் சந்நிதியில் கஜலட்சுமி. வடக்குச் சுற்றில் சப்தரிஷிகள் பிரதிஷ்டை செய்த சப்த லிங்கங்கள்; வெவ்வேறு அளவுகளில் பாணங்கள் மட்டும் உள்ளன. தொடர்ந்து வந்தால், நடராஜர் சந்நிதி. கிழக்குச் சுற்றில் திரும்பினால், நவக்கிரகங்கள்.
அடுத்ததாக, அழகான ருத்திராட்ச விதானத்தின் கீழ் ஸ்ரீபார்கவலிங்கம்; சுக்கிரன் வழிபட்ட சிவலிங்கம் (பிருகு முனிவரின் மகன் என்பதால் பார்கவன் என்ற பெயரும் சுக்கிரனுக்கு உண்டு). அடுத்துள்ள இரண்டு சந்நிதிகளில் பைரவர் திருவுருவங்கள். அதனையும் அடுத்து, சூரியன் சந்நிதி. சுக்கிரனும் சூரியனும் இந்தத் தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி உய்வு பெற்றனர்.
கருவறையில், ஸ்ரீபக்தஜனேஸ்வரர்; வட்ட வடிவ ஆவுடையார். கிழக்கு நோக்கிய லிங்கத்தின் பாணம் சற்றே உயரமானது. நாவலேசர், தொண்டர் நாயகர், மனோன்மணி நாயகர், விஷ்ணுபூஜிதர், சாம்புபுரேசர், சண்டேச அனுக்கிரஹர், கருடானுகிரஹர், விஷபாத விமோசனர், கபர்தீசர், ஞானாச்சார்யர் முதலான திருநாமங்கள் கல்வெட்டுகளிலும் வழக்கிலும் காணப்படுகின்றன.
அம்பாள் சந்நிதியின் எதிரில் நந்தி. மகா மண்டபத்தில், ஒருபுறம் விநாயகர்; மறுபுறம் துர்கை. கருவறையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள் மனோன்மணி அம்பிகை. இரண்டு கரங்களில் பாசம் மற்றும் அங்குசம்; மீதமிரு கரங்களில் அபயம் மற்றும் வரம் முத்திரைகள். நாவலாம்பிகை, சுந்தராம்பிகை ஆகிய திருநாமங்களும் இவளுக்கு உண்டு.
சுக்கிரனின் தவத்தால் மகிழ்ந்து காட்சியளித்த சிவபெருமான், பூலோகத்தில் உள்ள பல தலங்களுக்குச் சென்று சிவ வழிபாடு செய்து வரும்படி அவரைப் பணித்தாராம். அப்படி, சுக்கிரன் வழிபட்ட தலங்களில் முதன்மையானது திருநாவலூர் என்கிறார்கள். சுந்தரர் இங்கு ஸ்ரீதட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்று ஞான தீக்ஷை பெற்றதாகச் சொல்கிறார்கள்.
பங்குனி மாத 23 முதல் 27-ம் தேதி வரையிலும் சூரியன் வணங்கும் வேளையில் நிகழும் விசேஷ பூஜைகளில் கலந்துகொண்டு வழிபட்டால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். அதேபோல், இந்தக் கோயிலில் கொடி மரத்தின் அருகே உள்ள சுந்தர கணபதிக்கு மஞ்சள் மாலை கட்டி வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும்; வீடு கட்டும் ஆசையும் நிறைவேறும்.
சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் விழாவில், பஞ்ச மூர்த்தி உற்சவம் நிகழும். சுந்தரர் அவர்களை வணங்கி வழிகாட்டிச் செல்வது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர நாளில், சுந்தரருக்கு விசேஷ பூஜை நடைபெறும். ஆடிச் சுவாதி மிகவும் விசேஷம். நவராத்திரியும் சிறப்பாக நடைபெறுகிறது!.

பழமையான தஞ்சபுரீஸ்வரர் திருக்கோவில் தஞ்சாவூர் நகரின் வடக்கு எல்லையில் வெண்ணாற்றின் தெற்குக் கரையோரம் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தஞ்சை மாநகரில் கி.பி பத்தாம் நூற்றாண்டில் சோழப் பேரரசன் ராஜராஜ சோழன் கட்டிய பிரகதீசுவரர் என்னும் பெரு உடையார் கோவில் தொடங்கி, அதன்பின் வந்த நாயக்கர்களும், மராட்டியர்களும் தங்களது பக்தியினையும் கலை உள்ளத்தையும் வெளிப்படுத்த சிறியதும் பெரியதுமான நூற்றுக்கணக்கான சிவ, வைணவ ஆலயங்களை கட்டியுள்ளனர்.
அவற்றுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற் போல பழமையான தஞ்சபுரீஸ்வரர் திருக்கோவில் தஞ்சாவூர் நகரின் வடக்கு எல்லையில் வெண்ணாற்றின் தெற்குக் கரையோரம் அமைந்துள்ளது. குடந்தை - திருவையாறில் இருந்து தஞ்சைக்கு நுழையும் வழியிலும், தஞ்சை பேருந்து நிலையத்திலிருந்து வடக்கே சுமார் 4 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
அதன் நேர் எதிரே திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் ஆகிய ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசமான வீரநரசிம்மர் எழுந்தருளியிருக்கும் தஞ்சை மாமணிக் கோவில் இருப்பது சரித்திரப் புகழுக்குக் சான்றாகும்.
சுவாமி அம்மன்
மூன்று நிலை கொண்ட சிறிய ராஜகோபுரத்தை தரிசித்தபடி உள்ளே நுழைந்தால் பலி பீடம், கொடி மரம், நந்தி, நீண்ட மண்டபத்தைத் தாண்டினால் பெரிய உருவில் துவார பாலகர்கள் இருக்கிறார்கள். கருவறையில் தஞ்சபுரீசுவரர். இவர் மேற்கு நோக்கி காட்சி தருவது சிறப்பானதாகும்.
அதே மண்டபத்தில் தெற்கு நோக்கியவாறு நின்ற கோலத்தில் ஆனந்தவல்லி அம்மன் அருளாட்சி செய்கிறார். அம்மன் சன்னிதி அருகில் ஆடவல்ல பெருமானின் செப்புத் திருமேனி திகழ்கின்றது. சோழர் காலக் கற்றளியாக விளங்கும் இத்திருத்தலத்தில் முன்மண்டபம் மராட்டிய அரசி காமாட்சி பாய் என்பவரால் நிறுவப்பட்டுள்ளது.
தேவகோட்டத்தில் துர்க்கை, லிங்கோத்பவர், பிரம்மன் இருக்கிறார்கள். துர்க்கைக்கு எதிரில் சிறிய கோவிலில் சண்டிகேசுவரர் அமர்ந்திருக்கிறார். வெளிச்சுற்றில் சுவாமிக்கு எதிரே கிழக்கு பார்த்தபடி விநாயகர், வில் ஏந்திய முருகப்பெரு மான், அய்யப்பன், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி மூர்த்தங்கள் வழிபடப்படுகின்றன.
தட்சணாமூர்த்தி சன்னிதிக்கு எதிரேயும் கொடிமரத்துக்கு அருகேயும் தலவிருட்சமான வன்னிமரங்கள் உள்ளன. அதனடியில் வன்னி லிங்கமும் இருக்கின்றன. பக்கத்தில் நவக்கிரகங்களின் சன்னிதி உள்ளது.
கோவிலின் திருச்சுற்றில் வடக்கு மதில் ஓரம் தெற்கு நோக்கிய படி பஞ்சமுக ஆஞ்சநேயர் இருக்கிறார். எல்லா தோஷங்களையும் போக்கும் வல்லமை படைத்தவராக விளங்குவதால் பக்தர்களை ஈர்த்து அருள் பாலித்து வருகிறார்.
குபேரன் வழிபாடு
இத்திருக்கோவிலில் மற்ற சிவாலயங்களில் இல்லாத சிறப்பு உள்ளது. இது குபேரன் வழிபட்ட தலம். ஆம்.. செல்வத்துக்கு அதிபதியான குபேரன் செல்வங்களை எல்லாம் இழந்து வாடினார். செல்வங்களை மீட்பதற்காக ஒவ்வொரு சிவாலயமாகத் தங்கி வழிபாடு செய்து வந்தார்.
இந்த தஞ்சபுரீஸ்வரிடம் தஞ்சமடைந்து வழிபாடு செய்து வந்தபோது அவருக்கு மீண்டும் அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெற்றதாகவும், அதனால் இந்த இறைவன் 'குபேரபுரீஸ்வரர்' என்று அழைக்கப்படுவதாகவும் வரலாறு சொல்கிறது.
அம்பிகையின் சன்னிதிக்கு எதிரே உள்ள மண்டபம் அஷ்டலட்சுமி மண்டபம் என்றே அழைக்கப் படுகிறது. இதன் சுவர்களில் மூன்று பக்கங்களிலும் வண்ணக்கோலத்தில் எட்டு லட்சுமிகளும் காட்சி தருகின்றனர். அதன் தென்கிழக்கு மூலையில் சிவலிங்கத்தை லட்சுமிதேவியும், குபேரரும் பூஜை செய்யும் காட்சி சிந்தையைக் கவருகிறது. அஷ்டலட்சுமிகளும் வழிபட்டதாலும் செல்வத்துக்கு அதிபதியான குபேரன் பூஜித்ததாலும் இத்தலத்து இறைவன் தன்னை வழிபடுவோருக்கு சகல சம்பத்துகளையும் வாரி வழங்குவதாக ஐதீகம்.
தஞ்சம் அடைந்தவரைக் காக்கும் இறைவன்
தன்னைத் தஞ்சமென்று வரும் அடியார்களைக் காப்பதனால் இறைவன் தஞ்சபுரீஸ்வரர் எனவும் அவர்களுக்கு ஆனந்தத்தை அள்ளித் தருபதால் அம்பிகைக்கு ஆனந்தவல்லி அம்மன் என்ற காரணப் பெயர் விளங்குவதாகவும் பெருமையுடன் சொல்கிறார்கள்.
தஞ்சகன் வதம்
எழில் சூழாத சமீ வனம் எனப்படும் இந்த வன்னிக் காட்டில் பராசர முனிவர் முதலான ரிஷிகள் சிவபூஜை செய்து தவம் இருந்த போது, அவர்களுக்கு அசுரர்கள் இடையூறு செய்து வந்தனர். முனிவர்கள் சிவனை வேண்ட, சிவனின் ஆணைப்படி சிவசக்தியான ஆனந்தவல்லி அம்மன் ஏகவீரா, ஜயந்தி, மர்தினீ, சண்டகாதினி ஆகிய சக்திகளாக உருவெடுத்து, தண்டகன், வீரன், வஞ்சகன், தஞ்சகன் ஆகிய அசுரர்களை அழித்தாள்.
தஞ்சகன் என்னும் அரக்கன் மரணத் தருவாயில் தன்னுடைய பெயரால் இவ்வூர் விளங்க வேண்டும் என்று மனமுவந்து வேண்டினான். அதனால் 'தஞ்சபுரி' என்று பெயர் வந்ததாகவும் இறைவன் தஞ்சபுரீசுவரர் என்றழைக்கப்படுவதாகவும் தஞ்சை நகரின் புகழ் கூறும் 'அளகாபுரி மகாத்மியம்' என்ற நூல் விளக்குகிறது.
'அளகை' என்றால் குபேரன் என்பதனால் அளகாபுரி என்பது குபேரனின் ஊர் என்பது புலனாகிறது. இதன் மூலம் குபேரன் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு பேறு பெற்ற செய்தி உறுதியாகிறது. அருகே உள்ள வெண்ணாறு தீர்த்த நதியாக விளங்குகிறது.
தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இத்திருக்கோவிலில் பிரதோஷம், திருவாதிரை, மகாசிவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
'ஆனந்தவல்லி தவழ் தாணுவே போற்றி
ஞானத்து மேலானந்தமே போற்றி
மெய்யாய் போற்றி மேலாய் போற்றி
துய்யாய் தஞ்சபுரீச் சரத்தாய் போற்றி'
என்று போற்றித் திருமாலை புகழ்மாலை சூட்டுகிறது.
டாக்டர்.ச.தமிழரசன்,
தஞ்சாவூர்.

திருமணமாகாத பெண்கள் இங்கு நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு, விநாயகரைத் தரிசித்து மாங்கல்யச்சரடு பெற்றுக்கொண்டால் விரைவில் திருமண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இக்கோவில் வெள்ளை விநாயகர் கோவில் என்று அறியபட்டாலும் இங்குள்ள விநாயகர் வல்லபை விநாயகராவார். இந்தக் கோயிலில் விநாயகருக்குள் வல்லபா தேவி ஐக்கியமாகி அரூபமாகக் காட்சி தருவதாக ஐதீகம். அதேநேரம் உற்சவர் மனைவி சகிதமாகக் காட்சி தருகிறார். வல்லபை என்பவள் சாபத்தால் அரக்கியாக மாறி முனிவர்களையும் தேவர்களையும் அச்சுறுத்தி வந்தாள்.
அனைவரும் சேர்ந்து சிவனிடம் முறையிட்டனர். அவர் முருகனை அனுப்பி வைத்தார். அரக்கியைக் கண்டு பயப்படுவதுபோல் நடித்த முருகன் அண்ணனை அனுப்பி வைத்தார். தனக்கு எதிரே தைரியமாக நின்ற விநாயகரைக் கண்டு சிலிர்த்தாள் வல்லபை. அவளை அப்படியே துதிக்கையால் தூக்கி தனது மடியில் அமர்த்திக் கொண்டார் கணபதி.
மனித உடலும் மிருக முகமும் கொண்டவரால் சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கும் என்று அறிந்திருந்த வல்லபை அந்த நிமிடமே பழைய உருவத்தைப் பெற்றாள். விநாயகரையே திருமணம் செய்து கொண்டாள். இத்திருமணம் நடந்த இடம் இதுவேயாகும். வியாழக்கிழமைகளில் இக்கோயிலிலுள்ள பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடை பெறுகின்றன.
விநாயக சதுர்த்தியன்று இந்த விநாயகருக்கு சந்தனக் காப்பு கிடையாது. அன்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து அபிஷேகங்கள் நடைபெறும். மூன்றாம் நாள் சந்தனகாப்பு அலங்காரத்துடன் காட்சி தருவது சிறப்பாகும்.
பலன்கள்:
திருமணமாகாத பெண்கள் இங்கு நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு, விநாயகரைத் தரிசித்து மாங்கல்யச்சரடு பெற்றுக்கொண்டால் விரைவில் திருமண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
தஞ்சாவூர் கீழவாசலில் இக்கோவில் அமைந்துள்ளது. பழைய பேருந்து நிலையத்திலிருந்து நடந்தோ அல்லது ஆட்டோவிலோ செல்லலாம்.
கோவில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 10.00 மற்றும் மாலை 5.00 – 8.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு வெள்ளை விநாயகர் கோவில்,
கீழவாசல்,
தஞ்சாவூர் – 613001.

மகாவிஷ்ணுவின் கிருஷ்ண அவதாரத்திற்கும் நாடு முழுவதும் பல திருக்கோவில்கள் இருக்கின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் கிருஷ்ணனுக்காக அமைந்த சில கோவில்களைப் பார்ப்போம்.
மகாவிஷ்ணு என்று அழைக்கப்படும் பெருமாளுக்கு, நாடு முழுவதும் ஏராளமான திருக்கோவில்கள் அமைந்திருக்கின்றன. அவரது அவதாரங்க ளாக இருக்கும், ராமர், கிருஷ்ணர், நரசிம்மர் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் பரவலாக ஆலயங்கள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். அதே போல் மகாவிஷ்ணுவின் கிருஷ்ண அவதாரத்திற்கும் நாடு முழுவதும் பல திருக்கோவில்கள் இருக்கின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் கிருஷ்ணனுக்காக அமைந்த சில கோவில்களைப் பார்ப்போம்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மயிலாடி என்ற ஊரில் கிருஷ்ணன் கோவில் ஒன்று உள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த ஆலயத்தில் இருக்கும் மூலவர் விக்கிரகம், சுயம்புவாக தோன்றியது. இந்த கிருஷ்ணருக்கு, அவல், பால், வெண்ணெய், சர்க்கரைப் பொங்கல் ஆகியவை நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. திருமண வரம், குழந்தை வரம் வேண்டி இங்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். மேலும் குடும்ப ஒற்றுமைக்காகவும், நினைத்த காரியம் நிறைவேறவும் இத்தல இறைவன் நல்வழி காட்டுவதாக பலரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
மதுரை நவநீத கிருஷ்ணன்
மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ளது, நவநீத கிருஷ்ணன் கோவில். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஆலயம் இது. மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வடக்கு கோபுர திசையில் இருப்பதால் ‘வடக்கு கிருஷ்ணன் கோவில்’ என்றும், ஆரம்பத்தில் கம்பத்தின் கீழ் வீற்றிருந்ததால் ‘கம்பத்தடி கிருஷ்ணன் கோவில்’ என்றும் இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது. இத்தல இறைவன் இரு கரங்களிலும் வெண்ணெய் ஏந்திய கோலத்தில் அருள்கிறார். அருகில் சத்தியபாமா, ருக்மணி தாயார் வீற்றிருக்கின்றனர். கேரளாவில் உள்ள குருவாயூரப்பனுக்கு வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடனை, அங்கு செல்ல முடியாதவர்கள் இத்தலத்தில் செலுத்தினாலே போதும் என்கிறார்கள்.
கோகுல கிருஷ்ணன்
திருச்சியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருவானைக்காவல் திருத்தலம். இங்கு கோகுலகிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. இத்தல இறைவனை வேணுகோபால சுவாமி என்றும் அழைக்கிறார்கள். 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த ஆலயம், திருவானைக்காவல் அக்ரஹாரத்தில் கிழக்கு நோக்கி இருக்கிறது. கருவறையில் கையில் புல்லாங்குழலுடன் ஒரு காலை மடக்கி வைத்தபடி நின்ற கோலத்தில் கோகுல கிருஷ்ணன் காட்சி தருகிறார். அவருக்கு இருபுறமும், ருக்மணி மற்றும் சத்தியபாமா இருக்கிறார்கள். திருமணத்தடை நீங்க இங்கு வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம். தவிர குழந்தைப்பேறு வேண்டியும் வழிபாடு செய்கிறார்கள்.
தொட்டிலில் தூங்கும் கிருஷ்ணர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ளது, வடசேரி. இதன் அருகே கிருஷ்ணன் கோவில் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள கிருஷ்ணன் கோவிலை அடிப்படையாக வைத்துதான், இந்த ஊரும் அதே பெயரில் அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. 13-ம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த ஆதித்தவர்மன் என்ற மன்னனால், இந்த ஆலயம் கட்டப்பட்டதாக, கோவிலில் உள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. இங்கு மூலவரான பாலகிருஷ்ணன், குழந்தை வடிவில் நின்ற கோலத்தில் அருள்கிறார். இரு கரங்களிலும் வெண்ணெயை ஏந்தி நிற்கும் இவரை, இரவு நேர பூஜையின் போது, வெள்ளித் தொட்டிலில் இட்டு தாலாட்டு பாடி தூங்க வைக்கும் வைபவம் நடைபெறுகிறது. அதற்கு முன்பாக பாலகிருஷ்ணனுக்கு படைக்கப்பட்ட வெண்ணெய் மற்றும் நைவேத்திய பால் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப் படுகிறது. இத்தல இறைவனை தொடர்ச்சியாக மூன்று அஷ்டமி தினங்கள் அல்லது ரோகிணி நட்சத்திர நாளில் வணங்கி வந்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சுயம்பு மூர்த்தி

இந்தக் காலத்தில் எல்லோரையும், எல்லா இடத்திலும் காத்து நிற்பவன் செவ்வேள். முருகன் அன்பு வடிவம். அன்பே சத்தியம், அன்பே நித்தியம் என்று அவனைப் போற்றுகிறது கந்தகுரு கவசம்.
வேலூர் அருகே அமைந்த தீர்த்தகிரி வடிவேல் சுப்ரமணியர் திருக்கோவில் பல விதங்களில் சிறப்பு பெற்று விளங்குகிறது. வள்ளியை மணம் புரிய கந்தன் வள்ளிமலை நோக்கிச் செல்லும்போது தீர்த்தகிரி மலையில் சிறிது நேரம் தங்கி இளைப்பாறியதாகக் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரமாக மருகனின் பாதச் சுவடுகள் மலையேறிச் செல்லும் பாதையில் உள்ளது.
வள்ளிக்கும், முருகனுக்கும் இங்கு சம உயரத்தில் சிலை அமைந்துள்ளது. ஆலயத்தின் பின்புறம் தெரியும் பசுமை மலை கண்ணுக்கு இதமான விருந்து. மலைக்கூட்டத்தில் சின்ன மலையின் மீது முருகனின் ஆலயம் உள்ளது. அடிவாரத்தில் செல்வ விநாயகர் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். இங்கிருந்து சன்னதிக்கு மலையேறும் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. மலைமீது வாகனங்கள் செல்லவும் வழி உள்ளது.
222 படிகள் உள்ளது.. படியேறும் போது பத்து படிகள் ஏறியதுமே வலதுபுறம் முருகனின் திருவடி தரிசனம் கிடைக்கிறது. இடது புறம் கன்னிமார்கள் சன்னதியும், வலது புறம் விழுதுகள் இல்லாத கல்லால மரமும் காட்சி தருகின்றது. மலையில் அழகான ஆலயம் கண்ணையும், மனதையும் கவருகிறது. ஆலயத்தின் மேற்கே ஆலமரம், கிழக்கே அத்திமரம், தென்கிழக்கே அரசமரம், வட கிழக்கே தலமரமான நாவல் மரம் ஆகியவை காணப்படுகிறது. ஆலமரத்தின் அடியில் ஒரு பாறையின் கீழ் இன்றும் சுனை நீர் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. இதனாலேயே இத்தலம் தீர்த்தகிரி என்று அழைக்கப் படுகிறது.
வள்ளியை காதலித்து மணந்த முருகன் தன் மனைவிக்கு சம மான இடம் தந்திருக்கிறான். தன்னில் பாதியாக மனைவியைக் கருதி அவளுக்கு உரிய மரியாதையைத் தர வேண்டும் என்று காண்பிக்கிறான் குமரன். எனவே இங்கு காதல் திருமணம்தான் அதிகம் நடக்கிறது. கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கும் முருகன் அழைத்தவர் குரலுக்கு உடனே ஓடி வருகிறான். இதையே தன் கந்தர் அலங்காரப் பாடலில் “சொன்ன கிரவுஞ்ச கிரியூடுருவ” என்கிறார்.
பொன் மயமான கிரவுஞ்ச மலையைப் பிளந்து அதில் அடைந்து கிடந்த லட்சக் கணக்கான வீரர்களையும், பூதத் தலைவர்களையும் காப்பாற்றினார்
கடம்ப மலர்மாலை அணிந்தவன், ஞானத்திற்கு எல்லையாக விளங்கும் மவுன நிலையை அடைந்து மெய்யறிவால் உன்னை அறிந்து, நான் என்ற எண்ணம் முழுதும் அழிந்தே விட்டது. உனைத் துதிக்கும் நிலை தவிர வேறு எதுவும் வேண்டேன் என்கிறார்.
நம்மை அறிந்து நான் என்ற எண்ணம் அழிந்து கடம்பனே கருத்தில் நிறைந்த பிறகு அங்கு எந்த ஒரு துன்பத்திற்கும் இடம் இல்லை என்பதே உண்மை. நம் துன்பங்கள் தீரவே, மனதில் உள்ள அசுர குணங்கள் அழியவே முருகனின் அவதாரம் நிகழ்ந்தது. இதையே கந்தர் அந்தாதியில் அடியார் களுக்கு அருளும் வரப் பிரசாதத்தை உடைய, மயிலின் மேல் ஏறி கிரவுஞ்ச மலையைத் தன் வேலால் தூளாக்கிய முருகப் பெருமானின் திருவடிகளை நான் அணுகாத காரணத்தினால், பஞ்ச இந்திரியங்களின் செயல்களால் என் இதயம் இருளில் மூழ்கி இருக்கிறது என்கிறார் அருணகிரி நாதர்.
தீர்த்தகிரியில் இவர் பாடிய திருப்புகழ் நம் அனைவருக்கும் முருகனின் பெருமையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. நல்ல நெறிகளை அறியவில்லை. இந்திரியங்களின் பின்னே ஓடுகிறோம். எழுதிய தலைவிதி என்பது எந்த வழியாக ஓடுகிறது என்பதையும் அறியவில்லை என்று அறிவுரை கூறுவது போல் அமைந்துள்ளது.
மனம் பாட்டின் பொருளையும், சொல்லையும் கேட்டு உருகுவதில்லை. யமன் வரும் வழியைக் கண்டும் பக்தியால் உருகுவதே, தினந்தோறும், கஷ்டங்களை அனுபவித்தாலும்,உண்மைப் பொருளை நாடி அணுகுவதில்லை. பாழ்படும் இந்தப் பிறப்புகளிலேயே ஈடுபடுகின்றது மனம். வேலை வாய்ப்பு, திருமண வரம், குழந்தை வரம் என்று வேண்டியதை அள்ளித் தரும் அருள் வள்ளல் முருகன்.
இங்கு ஆடிக் கிருத்திகை மூன்று நாள் விழாவாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது இது தவிர, சஷ்டி, சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம், பால்குட அபிஷேகம், விளக்கு பூஜை போன்றவை சிறப்பாகச் செய்யப்படுகிறது. மலேசியா பத்துமலை முருகன் சிலையைப் போலவே இங்கும் 108 அடி உயர முருகன் சிலை அமைக்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பத்துமலை முருகன் சிலையைச் செய்த சிற்பியே இந்தச் சிலையையும் வடிவமைத்துள்ளார்.
சென்னை&வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் வசூர் ஊரின் எல்லையில் அமைந்துள்ளது தீர்த்தகிரி. சோழர்களும், விஜய நகர அரசும் இக்கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்திருக்கிறது. தீர்த்தகிரி தேர் மிகவும் பிரசித்தி பெற்றது. திருவண்ணாமலை போலவே இங்கும் பல சித்தர்கள் பல வடிவங்களில் இருக்கிறார்கள் என்று நம்பிக்கை நிலவுகிறது.
தீர்த்தகிரியில் பல தீர்த்தங்கள் இருந்தாலும் ராம தீர்த்தம் மிக விசேஷமானது. ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க இங்கு வந்து வழிபட்டார் என்பது நம்பிக்கை. தீர்க்க முடியாத பெரிய பாபங்களைச் செய்தவர்கள் இங்கு வந்தால் அவர்கள் ராம தீர்த்தத்தில் நீராட விடாமல் இங்குள்ள குரங்குகள் நீரைத் தடுக்கும் என்பதைப் பலர் கண்டிருக்கிறார்கள்.
ஜி.ஏ.பிரபா
gaprabha1963@gmail.com
பணியில் இடைநீக்கம், பணிநீக்கம் போன்ற பிரச்னைகள் தீர்த்து வைப்பதிலும் எதிர்பார்க்கும் பணியை கிடைக்கச் செய்வதிலும் சித்தலிங்கேஸ்வரரின் அருள் சிறந்து விளங்குகிறது என்ற வலுவான நம்பிக்கை உள்ளது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் பாதையிலுள்ள சுந்தராபுரம் மற்றும் குறிச்சியும் அடர்ந்த காடாக இருந்தன. இந்த வனப்பகுதியில் சித்தர்களும் தவயோகிகளும் வசித்து வந்தனர். இங்கு விவசாயம் தழைத்திருந்தது. விவசாயிகள், இறைவனை வழிபட சித்தர்கள் வாழ்ந்த இடத்தில் வழிபாட்டு தலம் ஒன்றை அமைத்தனர். இதனாலேயே மூலவர் சித்தலிங்கேஸ்வரர் ஆனார்.
நுழைவாயிலைத் தாண்டியதும் மகாமண்டபம். எதிரே கருவறையில் சித்தலிங்கேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். கருவறையின் நுழைவாயிலின் இடதுபுறம் ஆதி விநாயகரும், வலதுபுறம் ஆதிமுருகனும் பக்தர்களை வரவேற்கின்றனர். தவிர, கருவறையின் இடதுபுறம் வரசக்தி விநாயகருக்கும், வலதுபுறம் முருகனுக்கும் தனித்தனிச் சந்நதிகள் அமைந்துள்ளன. விநாயகர் சந்நதியின் முன்னால் மூஞ்சூரும், பலி பீடமும்; முருகன் சந்நதிக்கு எதிரே மயிலும், பலிபீடமும்! மகாமண்டபத்தின் இடதுபுறம் விஷ்ணு துர்க்கை மிக அழகிய கோலத்தில் காட்சி தருகிறாள்.
கல்யாண சுப்ரமணியர், வள்ளி-தெய்வானையுடன் தனிச் சந்நதியில் அருள்பாலிக்கிறார். பிராகாரத்தின் மேற்கு திசையில் விநாயகரும், நாகரும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்கள். விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி நாட்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதேபோல முருகப் பெருமானுக்கு சஷ்டி, கிருத்திகை, விசாகம் போன்ற நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
ஐப்பசி மாதம் கந்தசஷ்டி அன்று முருகப் பெருமான் வள்ளி-தெய்வானையுடன் வீதியுலா வருவதுண்டு. ஐப்பசி மாத பௌர்ணமியில் அருள்மிகு சித்தலிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. அன்று ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.கார்த்திகைத் திங்கள் கடைசி சோமாவாரம் அன்று சித்தலிங்கேஸ்வரருக்கு சங்காபிஷேகம் சிறப்புடன் நடைபெறுகிறது. பிரதோஷம், அமாவாசை நாட்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உண்டு. ஆடிக்கிருத்திகை அன்று பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பால்குடம் எடுத்து வரும் காட்சி மிக அற்புதமானது.
மாதத்தின் முதல் சனிக்கிழமையில் நவகிரக நாயகர்களுக்கு தோஷ பரிகாரப் பூஜைகள் நடைபெறுகின்றன. விஷ்ணு துர்க்கைக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் நடைபெறும் பூஜையில் கலந்துகொள்ள இங்கு பெண்கள் கூட்டம் அலைமோதும். இங்கு கற்பூர தீப ஆராதனை இல்லை; தீப ஆராதனை மட்டுமே. அர்ச்சனை யாவும் தமிழிலேயே செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இறைவனுக்கு பொங்கல் படையல் வைத்து பிரார்த்தனை செய்து அந்தப் பொங்கலை விநியோகம் செய்து நற்பலன் பெறுகிறார்கள். இங்கு இரவு 8.30 மணி அளவில் நடைபெறும் அர்த்தசாம பூஜை மிகவும் விசேஷமானது. கையில் தீபத் தட்டுடன் திருவங்கமாலை பாடியபடி அர்ச்சகர் பிராகாரத்தை வலம் வருவார். அவரைத் தொடர்ந்து பல சுமங்கலிப் பெண்கள் கையில் விளக்குத் தட்டுகளுடன் பாடியபடி பிராகாரத்தை வலம் வருகிறார்கள். அந்தப் பாடல் ஓசை கேட்போர் இதயங்களை கொள்ளை கொள்வது அனுபவபூர்வமானது. அனைவரும் பாடியபடி மூன்று முறை பிராகாரத்தை வலம் வந்தபின் நடை சாத்தப்படுகிறது.
பணியில் இடைநீக்கம், பணிநீக்கம் போன்ற பிரச்னைகள் தீர்த்து வைப்பதிலும் எதிர்பார்க்கும் பணியை கிடைக்கச் செய்வதிலும் சித்தலிங்கேஸ்வரரின் அருள் சிறந்து விளங்குகிறது என்ற வலுவான நம்பிக்கை உள்ளது. கோவை, உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து மதுக்கரை செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவிலுள்ளது குறிச்சி.