என் மலர்
கோவில்கள்
தென்மலை திரிபுரநாதேஸ்வரர் கோவில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தென்மலை திரிபுரநாதேஸ்வரர் கோவில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். பஞ்சபூத தலங்களில் நான்காம் தலம் தென்மலை. இந்த கோவிலை ‘காற்று’ தலம் என்று அழைக்கிறார்கள். சிவராத்திரி அன்று பல அடியார்கள் ஒன்று கூடி பஞ்சபூத தலங்களுக்கும் நடந்தே செல்வார்கள். தென்மலையை தவிர்த்து பஞ்சபூத தலங்களில் மற்ற தலங்களும் அருகிலேயே உள்ளன. சங்கரன்கோயில் மண் தலமாகவும் தருகாபுரம் நீர் தலமாகவும் தேவதானம் ஆகாய தலமாகவும் கரிவலம் வந்த நல்லூர் அக்னி தலமாகவும் போற்றப்படுகிறது. இந்த ஐந்து தலங்களையும் ஒரே நாளில் வழிபட்டு வர வாய்ப்பு உள்ளது.
பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டை நிருத்திரர்கள் ஆண்டு வந்தனர். அவர்கள் நல்லாட்சி புரியவில்லை. மக்களை சுரண்டி சுகபோக வாழ்க்கை நடத்தினர். இவர்களின் கடைசி மன்னன் தாருகன். இவனுக்கு உடுக்கண்ணன் என்ற தாருகன் மறைக்கண்ணன் என்ற கமலக்கண் அறிவுடைமாலி என்ற வித்தியன்மாலி என்ற மூன்று மகன்கள். இவர்கள் மூவரும் ‘முப்புரத்தவர்’ என்று அழைக்கப்பட்டனர். யாராலும் இவர்களை அழிக்க முடியவில்லை.
முப்புரத்தவர்கள் பொன் வெள்ளி இரும்பு முதலிய மூன்று உலோகங்களை கொண்டு மூன்று பெரும் கோட்டைகளைக் கட்டி வாழ்ந்தனர். இவர்களிடம் இருந்து தங்களை காப்பாற்ற வேண்டும் என மக்கள் தங்களது இஷ்ட தெய்வமான பரமேஸ்வரரை வணங்கி நின்றனர். பரமேஸ்வரருக்கும் இமயமலையை ஆட்சி செய்த அரையன் மகள் உமையம்மைக்கும் திருமணம் முடிந்திருந்த வேளை அது. திருமணத்திற்காக உலகை சமன் செய்ய அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பியிருந்தார் ஈசன். அகத்தியரை வைத்தே முப்புரத்தவர்களை ஓட ஓட விரட்டியிருக்க முடியும். ஆனாலும் பக்தர்களை காக்க பரமேஸ்வரர் நேரிடையாகவே தென்னகம் வந்தார்.
பொதிகை மலையில் அகத்தியரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின் நிருத்திரர்களின் பொன் வெள்ளி இரும்பு கோட்டையை உடைத்து எறிந்தார். பரமேஸ்வரரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சரண் அடைந்த முப்புரத்தவர்கள் அவரிடம் அபயம் கேட்டனர். அவர்களுக்கு சிவன் அபயம் நல்கினார். வெற்றி கொண்டு தங்களை காப்பாற்றிய இறைவனை மக்களும் கொண்டாடினர். ‘தங்களுக்கு துன்பம் வரும் போதெல்லாம் தாங்கள் இங்கிருந்து அருளவேண்டும்’ என்று வேண்டிக்கொண்டனர்.
எனவே இறைவன் லிங்கமாய் அவ்விடத்தில் அருள்பாலிக்க ஆரம்பித்தார். மூன்று புரத்தினை அழித்து வெற்றி கொண்டதால் இறைவன் “திரிபுரநாதேஸ்வரர்” என்று பெயர் பெற்றார். ‘திரி’ என்றால் ‘மூன்று’ என்று அர்த்தம். கயிலாய மலையில் ஈசன் ஆட்சி செய்வது போலவே தென் பகுதியில் உள்ள இந்த மலையிலும் ஈசன் அருள்வதால் இது ‘தென்மலை’ என்று பெயர் பெற்றது.
காலங்கள் கடந்தது. இவ்விடத்தில் இருந்த லிங்கம் நாளடைவில் மறைந்து விட்டது. ஆனாலும் உலகை ரட்சிக்கும் சிவன் அடிக்கடி இந்த இடத்தில் தன் திருவிளையாடலை நிகழ்த்த ஆரம்பித்தார். இப்பகுதியில் பாளையக்காரர்கள் ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரம். சிவகிரி பாளையக்காரர் தென்மலையை தலைமையிடமாக கொண்டு ஆண்டு வந்தார். ஒருநாள் தென்மலை அடிவாரத்தில் தனது சேனைகளை நிறுத்திவிட்டு பாளையக்காரர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று பலத்த காற்று வீசியது. இலை தழைகள் எல்லாம் பறந்து செல்ல அதற்குள் தானே முளைத்த லிங்கமாய் திரிபுரநாதேஸ்வரர் வெளிபட்டார். பாளையக்காரர் தனது இரு கையையும் தூக்கி வணங்கி விட்டு அங்கிருந்து சேனைகளுடன் அரண்மனைக்கு சென்று விட்டார். ஆனால் அவருக்கு தூக்கம் வரவில்லை. ‘திடீரென்று லிங்கம் தோன்ற காரணம் என்ன?’ என்று தெரியாமல் தவித்தார்.
அன்று இரவு அவரது கனவில் இறைவன் தோன்றி “நான் மூன்று கோட்டை கட்டி மக்களை வாட்டிய முப்புரத்தவர்களை அடிபணிய வைத்த சிவன். எனக்கு கோவில் கட்டி வணங்கு. உன் எதிரிகளை எல்லாம் நான் உன்வசம் ஆக்குவேன்” என்றார்.
அதன்படியே தென்மலை அடிவாரத்தில் ஈசனுக்கு கோவில் எழுப்பப்பட்டது. அந்த பாளையக்காரர் சிவனை வணங்காமல் எந்த வேலையையும் செய்வது கிடையாது. அதன்பின் நடந்த பல போர்களில் சிவகிரி பாளையக்காரர்களே வென்றனர். தென்மலையை விட்டு சிவகிரிக்கு அரண் மனையை மாற்றிச் சென்றாலும் இவரை வணங்க தவறுவதே இல்லை. இவ்வழக்கம் இவர்களது வாரிசு களிடம் தற்போது வரை உள்ளது.
சிவபரிபூரணியம்மாள், திரிபுரநாதேஸ்வரர்
ஆலய அமைப்பு :
ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. தென்மலை குளம் கோவிலுக்கு முன்பாக அமைந்திருக்கிறது. கோவிலுக்குள் நுழைந்தால் தீர்த்தக் கிணறு உள்ளது. அதைத் தாண்டி உள்ளே சென்றால் தாயார் சன்னிதி. அதில் சிவபரிபூரணியம்மாள் கருணை முகத்துடன் காட்சி தருகிறார். இவர் சிவனின் பரிபூரண அருளைப் பெற்றவர். சிவனின் அம்சமான இவரை வணங்கினாலே நமக்கு அனைத்து காரியங்களும் கைகூடும்.
இடது புறத்தில் சிவன் சன்னிதி உள்ளது. நந்தி அதிகார நந்திகளைக் கடந்து உள்ளே சென்றால் அங்கே லிங்க வடிவத்தில் சிவ பெருமான் உள்ளார். இந்த ஆலயத்தில் கொஞ்சம் பருமனாகவே லிங்கநாதர் காட்சி தருகிறார். ஆலய பிரகாரத்தில் கன்னி மூல விநாயகர் முருகன் சனீஸ்வரன் துர்க்கை சண்டிகேஸ்வரர் தட்சிணாமூர்த்தி சண்டிகேஸ்வரி காலபைரவர் நடராஜர் சிவகாமியம்மாள் நவக்கிரகம் என பரிவார தெய்வங்களை வணங்கி நாம் அருள் பெறலாம்.
இந்தக் கோவிலில் திருமலை சித்தர் என்பவர்தங்கி பல திருப்பணி செய்துள்ளார். அவரை வணங்கும் விதமாகவும் இந்த கோவிலில் பீடம் உள்ளது.
ஆலயத்தில் புரட்டாசி நவராத்திரி விழா கந்த சஷ்டி விழா திருக்கார்த்திகை விழா பிரதோஷம் திருவாதிரை போன்ற நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. சிவராத்திரி அன்று பஞ்சபூத தலங்களை தேடி வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல ஆயிரத்தைத் தாண்டும்.
மலையை ஒட்டி கோவில் இருப்பதால் பக்தர்கள் மாதம் தோறும் பவுர்ணமியில் கிரிவலம் வருகிறார்கள். இந்த கிரிவலப் பாதை சுமார் 5 கிலோமீட்டர் தூரம். இத்தல இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும். காளகஸ்தியைப் போலவே சர்ப்ப தோஷம் நீங்கும். எதிரிகளின் பலம் குறையும் என்கிறார்கள்.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம் :
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில்- ராஜபாளையம் சாலையில் கரிவலம் வந்த நல்லூரில் இருந்து இடது புறம் திரும்பினால் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென் மலையை அடையலாம். ராஜபாளையம் - தென்காசி சாலையில் உள்ள சிவகிரியில் இருந்தும் தென்மலைக்கு ஆட்டோ வசதி உண்டு.
முத்தாலங்குறிச்சி காமராசு

சிவபரிபூரணியம்மாள், திரிபுரநாதேஸ்வரர்ஆலய அமைப்பு :

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோழிகுத்தி என்ற இடத்தில் வானமுட்டி பெருமாள் ஆலயம் இருக்கிறது. மிகப்பெரிய உருவத்தில் அமைந்த இந்த பெருமாளின் திருக்கோவில் வரலாற்றை நாம் காண்போம்.

தல வரலாறு:
பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் அது. குடகு மலைச் சாரலில், தொழுநோயால் பாதிக்கப்பட்டு வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான் ஒருவன். பல மருத்துவர்கள் முயன்றும் அவனது நோயை குணப்படுத்த முடியவில்லை. என்ன செய்வது என்று புரியாத அந்த நோயாளி, மனம் போன போக்கில், நடக்கத் தொடங்கினான்.
அப்படி சென்று கொண்டிருந்த ஒரு நாளில், அவனது காதுகளில் தெய்வீக வீணை ஓசை கேட்டது. ஓசை வந்த திசையை நோக்கி நடந்தான். அங்கே ஒரு முனிவர் வீணை வாசித்துக் கொண்டிருந்தார். அவர் வேறு யாருமல்ல, நாரத முனிவர். அவரை வணங்கி நின்றான், அந்த தொழு நோயாளி.
“இளம் வயதில் காடுகளில் பதுங்கி இருந்து, வழிப்போக்கர்களை வழி மறித்து, கொலை செய்து கொள்ளையடித்து வாழ்ந்ததின் விளைவு இந்த வியாதி” என்று முனிவரிடம் கூறினான்.
அந்த நோயாளிக்காக மனம் இரங்கிய நாரதர், அவனுக்கு ஒரு மந்திரத்தை உபதேசித்தார். அந்த மந்திரத்தை தினந்தோறும் ஜெபிக்கும்படி கூறினார். நோயாளியும் அப்படியேச் செய்து வந்தான்.
ஒரு நாள் ஒரு அசரீரி ஒலித்தது. “உனக்கு கடுமையான தோஷம் உள்ளது. அது நீங்குவதற்கு காவிரிக் கரையில் காணப்படும் ஆலயத் திருக்குளங்களில் எல்லாம் நீராடி வா. எந்த தீர்த்தத்தில் உன் நோய் குணமாகிறதோ அங்கே நீ பாவ விமோசனம்அடைந்து முக்தி பெறுவாய்” என்றது.
மனம் மகிழ்ந்த அவன், தன் பயணத்தைத் தொடர்ந்தான். காவிரிக் கரையில் உள்ள ஆலயங்களுக்கு எல்லாம் சென்று, அங்கிருந்த திருக்குளங்களில் நீராடினான். அதன் ஒரு கட்டமாக மூவலூர் திருத்தலம் வந்து சேர்ந்தான். அங்கு அருள்பாலிக்கும் மாணிக்க சகாயேஸ்வரரை மனமுருக வணங்கி நின்றான்.
அப்போது, “பக்தா! உனது துயர் நீங்கும் காலம் வந்துவிட்டது. வடக்கே சற்று தொலைவில் ஒரு திருக்குளம் தென்படும். அதில் நீராடு. உன்னை பற்றியிருக்கும் பிணிகள் யாவும் நீங்கும்” என்று ஒரு அசரீரி ஒலித்தது.
அதன்படியே அந்த நோயாளி சென்று நீராடினான். அவனது பிணி நீங்கி, பொன் நிற மேனி கொண்டவனாக மாறினான். தன்னை அழகுடையவனாக மாற்றி, இறைவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு வடதிசை நோக்கி புறப்பட்டான்.
ஓரிடத்தில் ஒரு பெரிய அத்தி மரம் தோன்றியது. அந்த மரத்தில் சங்கு, சக்கரம், கதை, அபய ஹஸ்தம் தாங்கி பெருமாள் காட்சி அளித்தார். அவரது மார்பில் இருந்து ஒரு ஒளிப் பிழம்பானது, விண்ணும் மண்ணும் நிரம்ப நின்றது.
“பக்தா! பொன்னி நதியில் நீராடி நோயில் இருந்து விடுபட்ட உன்னை இனி ‘பிப்பிலர்’ என அனைவரும் அழைப்பர். நீ நீராடிய தீர்த்தம் இனி ‘பிப்பில மகரிஷி தீர்த்தம்’ என அழைக்கப்படும். இந்த காவிரி தீர்த்த கட்டத்தில் நீராடுபவர்களின் பிறவிப் பிணி, மெய்ப் பிணி, பாவப் பிணி அனைத்தும் நீங்கும்” என அருளி மறைந்தார்.
பிப்பில மகரிஷியின் கோடிஹத்தி தோஷங்களையும் இத் தலம் நிவாரணம் செய்ததால் இத்தலம் ‘கோடி ஹத்தி’ எனவும், ‘பாப விமோசனபுரம்’ எனவும் அழைக்கப்படலாயிற்று. கோடிஹத்தி என்ற பெயர் நாளடைவில் மருவி, தற்போது இத்தலம் ‘கோழிகுத்தி’ என்று விளங்குகிறது. இங்கு அருளும் பெருமாள் ‘வானமுட்டி பெருமாள்’ என்று பெயர் பெற்றுள்ளார்.
மன்னன் கட்டிய ஆலயம்
வானமுட்டி பெருமாளின் சிறப்பைக் கேள்விப்பட்ட தஞ்சை சரபோஜி மன்னன், கோழிகுத்தி வந்தார். தனக்கு யுத்த தோஷம் உள்ளது. அதை நீக்கி அருள வேண்டும் என வேண்டி நின்றார். பிப்பிலருக்கு அருளியது போல், சரபோஜி மகா ராஜாவுக்கும் அத்தி மரத்தில் வானளாவிய காட்சி தந்து அருளினார் பெருமாள். மன்னனின் தோஷத்தையும் நீக்கினார்.
மன்னனின் மனதில் மகிழ்ச்சி பிரவாகம் எடுத்தது. தான் கண்ட காட்சியை அனைவரும் காண வேண்டுமென எண்ணினார். வானளாவிய பெருமாளின் திருக்கோலத்தை, அதே அத்தி மரத்தில் 14 அடி உயரத்தில் சிலையாக வடித்தார். அவரையே மூலவராய் கொண்டு ஓர் ஆலயம் எழுப்பினார் என்று ஆலய வரலாறு சொல்லப்படுகிறது.
1200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், இந்து அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் அழகிய ராஜகோபுரம். அதைக் கடந்து உள்ளே நுழைந்ததும் பலிபீடமும், கொடிமரமும், கருடாழ்வார் சன்னிதியும் உள்ளது.
கருவறையில் 14 அடி உயரத்தில் வானமுட்டி பெருமாளின் தோற்றத்தைக் கண்டு நாம் சிலிர்க்காமல் இருக்க முடியாது. பெருமாளின் வலது மார்பில் தாயார் தயாலட்சுமி உள்ளார். இடதுபுறம் பூமாதேவியின் சிலை வடிவம் உள்ளது. மிகப் பெரிய அத்திமரமே பெருமாளாக மாறி இருப்பதால், மரத்தின் வேரே திருவடிகளை தாங்கி நிற்கும் அதிசயத்தை உலகில் வேறு எங்கும் நாம் காண இயலாது.
மூலவர் அத்தி மரத்தால் ஆனவர் என்பதால், அவருக்கு எந்தவித அபிஷேகமும் கிடையாது. வெறும் சாம்பிராணி காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. இந்தப் பெருமாளை வேண்டினால், பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், சனி தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும் என்கிறார்கள்.
இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம் :
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது கோழிகுத்தி கிராமம். மயிலாடுதுறையில் இருந்து செல்ல மினி பஸ், ஆட்டோ வசதி உள்ளது.
ஜெயவண்ணன்

கரன் எனும் அசுரனுக்கு மறுபிறவி இல்லாமல், முக்தி தந்த கோவிலாகக் கருதப்படும் மகாதேவர் கோவில், கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், கடுத்துருத்தி என்னும் இடத்தில் அமைந்திருக்கிறது.

சிவ பக்தனான கரன் என்ற அசுரன், முக்தி வேண்டி கடுந்தவம் இருந்து வந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவனிடம் மூன்று சிவலிங்கங்களைக் கொடுத்து, அவற்றை மூன்று இடங்களில் நிறுவி வழிபட்டால், முக்தி கிடைக்கும் என்று கூறினார்.
அசுரனும் ஒரு லிங்கத்தை வலது கையிலும், மற்றொரு லிங்கத்தை இடது கையிலும், மூன்றா வது லிங்கத்தை வாயில் வைத்தும் எடுத்துச் சென்றான்.
சிவபெருமான், புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரை அழைத்து, கரனை பின் தொடர்ந்து செல்லும்படி அனுப்பி வைத்தார். அவரும் அசுரனைப் பின் தொடர்ந்து சென்றார். அசுரன் பயணக் களைப்பில் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதற்காக, தன் வலது கையில் இருந்த சிவலிங்கத்தை ஓரிடத்தில் வைத்தான். சிறிது நேரத்திற்குப் பின்பு, கீழே வைத்த சிவலிங்கத்தை எடுக்க முயன்றான். ஆனால் அதை அவனால் எடுக்க முடியாமல் போனது.
அப்போது அங்கு வந்த வியாக்ரபாதரிடம், அந்தச் சிவலிங்கத்தைப் பூஜை செய்து வழிபடும்படி வேண்டிக் கொண்டான். அதை ஏற்ற வியாக்ரபாதரும் அவ்விடத்திலேயே தங்கி, அந்தச் சிவலிங்கத்திற்கு நீண்ட காலம் பூஜை செய்து வழிபட்டு வந்தார். அந்த இடத்தில் அமைந்த கோவில் வைக்கம் மகாதேவர் கோவிலானது.
அசுரன் மீதமிருந்த இரண்டு சிவலிங்கங் களுடன் சென்ற போது, இடக்கையில் கொண்டு சென்ற சிவலிங்கத்தை ஏற்று மானூர் என்ற இடத்தில் நிறுவச் செய்தான். அந்தக் கோவில் ஏற்றுமானூர் மகாதேவர் கோவில் ஆனது. பின்னர் அங்கிருந்து சென்ற அசுரன், வாயில் எடுத்துச் சென்ற சிவலிங்கத்தை ஓரிடத்தில் கிழக்கு நோக்கி நிறுவி வழிபட்டு முக்தியடைந்தான்.
அசுரன் வாயில் கடித்து இருத்திக் (அமர்த்தி) கொண்டு சென்ற சிவலிங்கம் நிறுவப்பட்ட இடம் என்பதைக் குறிக்கும் வகையில், அவ்விடத்திற்குக் ‘கடித்துருத்தி’ என்ற பெயர் ஏற்பட்டது. அங்கிருக்கும் இறைவன், ‘கடுத்துருத்தி மகாதேவர்’ என்று அழைக்கப்பட்டார் என்று இந்த ஆலயம் அமைந்த வரலாறு பற்றி, பார்க்கவ புராணம் தெரிவிக்கிறது.
ஆலய அமைப்பு :
மலைக்குன்று ஒன்றின் மீது அமைந்திருக்கும் இந்த ஆலய கருவறையில், மூன்று அங்குலம் அளவு கொண்ட மிகச் சிறிய சிவலிங்கம் கிழக்கு நோக்கிய நிலையில் இருக்கிறது. அசுரன் கரன் கொண்டு வந்த மூன்று சிவலிங்கங்களுள் இக்கோவிலில் நிறுவப்பட்டிருக்கும் சிவலிங்கமே மிகச் சிறியது. இருப் பினும், இங்கிருக்கும் இறைவன் இறைவியுடன் இணைந்து அனுக்கிரக மூர்த்தியாகக் காட்சி யளிக்கிறார்.
கோவிலின் உள் மண்டபக் கூரையில், சிவ பெருமானிடம் பாசுபத அஸ்திரம் பெறுவதற்காக அர்ச்சுனன் செய்த தவமும், அவனைச் சோதிக்க இறைவன் வேடுவன் உருவில் வந்து அவனுடன் போர் செய்து, பின்னர் அவனுக்குப் பாசுபத அஸ்திரம் வழங்கிய கதையைச் சொல்லும் மரச்சிற்பங்கள் அழகாகச் செதுக்கப்பட்டிருக் கின்றன. கோவில் வளாகத்தில் கணபதி, தர்மசாஸ்தா, துர்க்கை ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன.
கடுத்துருத்தி மகாதேவர் கோவில் வளாகத் தின் தெற்குப் பகுதியில், ஏற்றுமானூர் மகாதேவர் சன்னிதியும், வடக்குப் பகுதியில் வைக்கம் மகாதேவர் சன்னிதியும் இருக்கின்றன. இந்த ஆலயத்தில் இந்த இரு சன்னிதிகள் அமைந்ததற்கும் ஒரு கதை இருக்கிறது.
கோவில் உள்புறத் தோற்றம், கடுத்துருத்தி மகாதேவர்
வடக்கன்கூர் ராஜா தினமும் குதிரையில் பயணித்து வைக்கம் மகாதேவர் கோவில், ஏற்று மானூர் மகாதேவர் கோவில் மற்றும் கடுத்துருத்தி மகாதேவர் கோவில் என்று மூன்று ஆலயங் களிலும் வழிபாடு செய்து வந்தார். வயதான காலத்தில், அவரால் மூன்று கோவில்களுக்கும் சென்று வழிபட முடியாமல் போனது. எனவே அவர், கடுத்துருத்தி கோவிலின் வடக்குப் பகுதியில் வைக்கம் மகாதேவரைக் கிழக்கு நோக்கியும், தெற்குப் பகுதியில் ஏற்றுமானூர் மகாதேவரை மேற்கு நோக்கியும் நிறுவி, ஒரே தலத்தில் வழிபாடு செய்தார். மூன்று கோவில்களுக்கும் செல்ல முடியாதவர்கள், கடுத்துருத்தி மகாதேவர் கோவிலுக்குச் சென்று, மூன்று சிவபெருமானையும் வழிபாடு செய்து, மூன்று தலங்களுக்கும் சென்று வந்த பலன்களை அடையலாம்.
இக்கோவிலில் சிவபெருமானுக்குரிய பிரதோஷம் உள்ளிட்ட அனைத்துச் சிறப்பு நாட்களிலும், சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகின்றன. இறைவன், இறைவியோடு சேர்ந்திருப்பதால் அம்மனுக்குரிய சிறப்பு வழிபாடுகளும் இங்கு பிரசித்தம். மார்கழி மாதம் திருவோண நட்சத்திர நாளில், அருகிலுள்ள பாலிச்சிறை ஆற்றில் இறைவனுக்கு ‘ஆறாட்டு’ நடத்தி ஆண்டு விழாவாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் வரும் மகா சிவராத்திரி நாள், மாசி மகம், புரட்டாசி மாதம் முதல் நாள் கோவில் நிறுவப்பட்ட நாள் ஆகியவையும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
கடுத்துருத்தி மகாதேவர் கோவிலில் சிவபெரு மான், இறைவியுடன் சேர்ந்து அனுக்கிரக மூர்த்தி யாக இருப்பதால், திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் இங்கு வழிபடலாம். அம்மனையும், சுவாமியையும் வழிபட்டால் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துச் செல்வங்களும், வளங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கணபதி வந்த கதை :
கடுத்துருத்தி மகாதேவர் கோவிலின் தெற்குப் பகுதியில் கணபதி சன்னிதி இருக்கிறது. இந்த சன்னிதி வந்ததற்கு ஒரு கதை இருக்கிறது. கோட்டயம் அருகில் உள்ள மாஞ்சூர் என்ற இடத்தில் நிறுவுவதற்காகக் கணபதி சிலையைச் செய்து, சிலர் தோணி (படகு) ஒன்றில் எடுத்துச் சென்றனர். அவர்கள் கடுத்துருத்திப் பகுதிக்கு வந்த போது, மாலை நேரமாகி விட்டது. தோணியில் வந்தவர்கள், இரவு வேளையில் அங்கு தங்கியிருந்து காலையில் மீண்டும் சிலையைக் கொண்டு செல்லலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் கொண்டு வந்த கணபதி சிலையைக் கோவிலுக்குள் ஓரிடத்தில் வைத்துவிட்டு அங்கேயே தங்கினர். மறுநாள் காலையில், அவர்கள் கணபதி சிலையை எடுக்க முயன்றபோது, அதை நகர்த்தக் கூட முடியவில்லை. வேறு வழியின்றி, அவர்கள் அந்தச் சிலையை அங்கேயே விட்டுச் சென்றனர். அவர்கள் விட்டுச்சென்ற சிலையே தற்போது கடுத்துருத்தி கோவிலில் தனிச் சன்னிதியில் இருக்கிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம் :
கேரள மாநிலம் கோட்டயம் நகரில் இருந்து வடக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது, கடுத்துருத்தி மகாதேவர் கோவில். வைக்கம் மகாதேவர் ஆலயத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், ஏற்றுமானூர் மகாதேவர் கோவிலில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் உள்ளது. இத்தலத்திற்குச் செல்ல கோட்டயம், வைக்கம், ஏற்றுமானூர் ஆகிய மூன்று ஊர்களில் இருந்தும் ஏராளமான பேருந்து வசதிகள் இருக்கின்றன.
தேனி மு.சுப்பிரமணி
சிவ பக்தனான கரன் என்ற அசுரன், முக்தி வேண்டி கடுந்தவம் இருந்து வந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவனிடம் மூன்று சிவலிங்கங்களைக் கொடுத்து, அவற்றை மூன்று இடங்களில் நிறுவி வழிபட்டால், முக்தி கிடைக்கும் என்று கூறினார்.
அசுரனும் ஒரு லிங்கத்தை வலது கையிலும், மற்றொரு லிங்கத்தை இடது கையிலும், மூன்றா வது லிங்கத்தை வாயில் வைத்தும் எடுத்துச் சென்றான்.
சிவபெருமான், புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரை அழைத்து, கரனை பின் தொடர்ந்து செல்லும்படி அனுப்பி வைத்தார். அவரும் அசுரனைப் பின் தொடர்ந்து சென்றார். அசுரன் பயணக் களைப்பில் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதற்காக, தன் வலது கையில் இருந்த சிவலிங்கத்தை ஓரிடத்தில் வைத்தான். சிறிது நேரத்திற்குப் பின்பு, கீழே வைத்த சிவலிங்கத்தை எடுக்க முயன்றான். ஆனால் அதை அவனால் எடுக்க முடியாமல் போனது.
அப்போது அங்கு வந்த வியாக்ரபாதரிடம், அந்தச் சிவலிங்கத்தைப் பூஜை செய்து வழிபடும்படி வேண்டிக் கொண்டான். அதை ஏற்ற வியாக்ரபாதரும் அவ்விடத்திலேயே தங்கி, அந்தச் சிவலிங்கத்திற்கு நீண்ட காலம் பூஜை செய்து வழிபட்டு வந்தார். அந்த இடத்தில் அமைந்த கோவில் வைக்கம் மகாதேவர் கோவிலானது.
அசுரன் மீதமிருந்த இரண்டு சிவலிங்கங் களுடன் சென்ற போது, இடக்கையில் கொண்டு சென்ற சிவலிங்கத்தை ஏற்று மானூர் என்ற இடத்தில் நிறுவச் செய்தான். அந்தக் கோவில் ஏற்றுமானூர் மகாதேவர் கோவில் ஆனது. பின்னர் அங்கிருந்து சென்ற அசுரன், வாயில் எடுத்துச் சென்ற சிவலிங்கத்தை ஓரிடத்தில் கிழக்கு நோக்கி நிறுவி வழிபட்டு முக்தியடைந்தான்.
அசுரன் வாயில் கடித்து இருத்திக் (அமர்த்தி) கொண்டு சென்ற சிவலிங்கம் நிறுவப்பட்ட இடம் என்பதைக் குறிக்கும் வகையில், அவ்விடத்திற்குக் ‘கடித்துருத்தி’ என்ற பெயர் ஏற்பட்டது. அங்கிருக்கும் இறைவன், ‘கடுத்துருத்தி மகாதேவர்’ என்று அழைக்கப்பட்டார் என்று இந்த ஆலயம் அமைந்த வரலாறு பற்றி, பார்க்கவ புராணம் தெரிவிக்கிறது.
ஆலய அமைப்பு :
மலைக்குன்று ஒன்றின் மீது அமைந்திருக்கும் இந்த ஆலய கருவறையில், மூன்று அங்குலம் அளவு கொண்ட மிகச் சிறிய சிவலிங்கம் கிழக்கு நோக்கிய நிலையில் இருக்கிறது. அசுரன் கரன் கொண்டு வந்த மூன்று சிவலிங்கங்களுள் இக்கோவிலில் நிறுவப்பட்டிருக்கும் சிவலிங்கமே மிகச் சிறியது. இருப் பினும், இங்கிருக்கும் இறைவன் இறைவியுடன் இணைந்து அனுக்கிரக மூர்த்தியாகக் காட்சி யளிக்கிறார்.
கோவிலின் உள் மண்டபக் கூரையில், சிவ பெருமானிடம் பாசுபத அஸ்திரம் பெறுவதற்காக அர்ச்சுனன் செய்த தவமும், அவனைச் சோதிக்க இறைவன் வேடுவன் உருவில் வந்து அவனுடன் போர் செய்து, பின்னர் அவனுக்குப் பாசுபத அஸ்திரம் வழங்கிய கதையைச் சொல்லும் மரச்சிற்பங்கள் அழகாகச் செதுக்கப்பட்டிருக் கின்றன. கோவில் வளாகத்தில் கணபதி, தர்மசாஸ்தா, துர்க்கை ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன.
கடுத்துருத்தி மகாதேவர் கோவில் வளாகத் தின் தெற்குப் பகுதியில், ஏற்றுமானூர் மகாதேவர் சன்னிதியும், வடக்குப் பகுதியில் வைக்கம் மகாதேவர் சன்னிதியும் இருக்கின்றன. இந்த ஆலயத்தில் இந்த இரு சன்னிதிகள் அமைந்ததற்கும் ஒரு கதை இருக்கிறது.
கோவில் உள்புறத் தோற்றம், கடுத்துருத்தி மகாதேவர்வடக்கன்கூர் ராஜா தினமும் குதிரையில் பயணித்து வைக்கம் மகாதேவர் கோவில், ஏற்று மானூர் மகாதேவர் கோவில் மற்றும் கடுத்துருத்தி மகாதேவர் கோவில் என்று மூன்று ஆலயங் களிலும் வழிபாடு செய்து வந்தார். வயதான காலத்தில், அவரால் மூன்று கோவில்களுக்கும் சென்று வழிபட முடியாமல் போனது. எனவே அவர், கடுத்துருத்தி கோவிலின் வடக்குப் பகுதியில் வைக்கம் மகாதேவரைக் கிழக்கு நோக்கியும், தெற்குப் பகுதியில் ஏற்றுமானூர் மகாதேவரை மேற்கு நோக்கியும் நிறுவி, ஒரே தலத்தில் வழிபாடு செய்தார். மூன்று கோவில்களுக்கும் செல்ல முடியாதவர்கள், கடுத்துருத்தி மகாதேவர் கோவிலுக்குச் சென்று, மூன்று சிவபெருமானையும் வழிபாடு செய்து, மூன்று தலங்களுக்கும் சென்று வந்த பலன்களை அடையலாம்.
இக்கோவிலில் சிவபெருமானுக்குரிய பிரதோஷம் உள்ளிட்ட அனைத்துச் சிறப்பு நாட்களிலும், சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகின்றன. இறைவன், இறைவியோடு சேர்ந்திருப்பதால் அம்மனுக்குரிய சிறப்பு வழிபாடுகளும் இங்கு பிரசித்தம். மார்கழி மாதம் திருவோண நட்சத்திர நாளில், அருகிலுள்ள பாலிச்சிறை ஆற்றில் இறைவனுக்கு ‘ஆறாட்டு’ நடத்தி ஆண்டு விழாவாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் வரும் மகா சிவராத்திரி நாள், மாசி மகம், புரட்டாசி மாதம் முதல் நாள் கோவில் நிறுவப்பட்ட நாள் ஆகியவையும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
கடுத்துருத்தி மகாதேவர் கோவிலில் சிவபெரு மான், இறைவியுடன் சேர்ந்து அனுக்கிரக மூர்த்தி யாக இருப்பதால், திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் இங்கு வழிபடலாம். அம்மனையும், சுவாமியையும் வழிபட்டால் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துச் செல்வங்களும், வளங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கணபதி வந்த கதை :
கடுத்துருத்தி மகாதேவர் கோவிலின் தெற்குப் பகுதியில் கணபதி சன்னிதி இருக்கிறது. இந்த சன்னிதி வந்ததற்கு ஒரு கதை இருக்கிறது. கோட்டயம் அருகில் உள்ள மாஞ்சூர் என்ற இடத்தில் நிறுவுவதற்காகக் கணபதி சிலையைச் செய்து, சிலர் தோணி (படகு) ஒன்றில் எடுத்துச் சென்றனர். அவர்கள் கடுத்துருத்திப் பகுதிக்கு வந்த போது, மாலை நேரமாகி விட்டது. தோணியில் வந்தவர்கள், இரவு வேளையில் அங்கு தங்கியிருந்து காலையில் மீண்டும் சிலையைக் கொண்டு செல்லலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் கொண்டு வந்த கணபதி சிலையைக் கோவிலுக்குள் ஓரிடத்தில் வைத்துவிட்டு அங்கேயே தங்கினர். மறுநாள் காலையில், அவர்கள் கணபதி சிலையை எடுக்க முயன்றபோது, அதை நகர்த்தக் கூட முடியவில்லை. வேறு வழியின்றி, அவர்கள் அந்தச் சிலையை அங்கேயே விட்டுச் சென்றனர். அவர்கள் விட்டுச்சென்ற சிலையே தற்போது கடுத்துருத்தி கோவிலில் தனிச் சன்னிதியில் இருக்கிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம் :
கேரள மாநிலம் கோட்டயம் நகரில் இருந்து வடக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது, கடுத்துருத்தி மகாதேவர் கோவில். வைக்கம் மகாதேவர் ஆலயத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், ஏற்றுமானூர் மகாதேவர் கோவிலில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் உள்ளது. இத்தலத்திற்குச் செல்ல கோட்டயம், வைக்கம், ஏற்றுமானூர் ஆகிய மூன்று ஊர்களில் இருந்தும் ஏராளமான பேருந்து வசதிகள் இருக்கின்றன.
தேனி மு.சுப்பிரமணி
கன்னியாகுமரியில் முருகப்பெருமான் வழிபட்ட ஈசன் மூலவராக ‘குக நாதீஸ்வரர்’ என்ற திருநாமத்தில் கிழக்கு நோக்கி மிகப்பெரிய லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார்.
அப்பனுக்கு பாடம் சொன்னவர் முருகப்பெருமான். அதுவும் உலகாளும் ஈசனை, தன் தகப்பனை, சீடனாக வைத்து, பிரணவத்தின் அர்த்தம் சொன்னவர் முருகப்பெருமான். இதனால் முருகப்பெருமானை தோஷம் பற்றியதாம். அந்த தோஷம் அகல தன் அன்னை பார்வதியின் வழிகாட்டல் படி, உமையவள் குமரியாக அருளும் கன்னியாகுமரியில், குகன் என்ற முருகப்பெருமான் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். அவ்வளவு புகழ்பெற்ற திருத்தலம் இதுவாகும்.
இங்கு முருகப்பெருமான் வழிபட்ட ஈசன் மூலவராக ‘குக நாதீஸ்வரர்’ என்ற திருநாமத்தில் கிழக்கு நோக்கி மிகப்பெரிய லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். குகநாதீஸ்வரர் உடனுறை சக்தியாக, அம்பிகையானவள் பார்வதி தேவி என்னும் திரு நாமத்திலேயே தெற்கு நோக்கி அருள்கிறார். இங்கு 11 திங்கட்கிழமை தொடர்ந்து வந்து, குமரி முக்கடல் திரிவேணி சங்கமத்தில் நீராடி கருவறை தீபத்தில் பசுநெய் சேர்த்து சுவாமி, அம்பாள், பைரவரை வழிபட குரு சாபம், மாத்ரு சாபம், பித்ரு சாபம், சுமங்கலி சாபம், முதியவர்களை மதிக்காததால் வரும் தோஷம் ஆகியவை அகலும் என்கிறார்கள். முக்கடல் சங்கமத்தில் நீராடி குமரி பகவதியை வழிபட்டு, பின்பு குகநாதீஸ்வரர் ஆலயம் வந்து வழிபட வேண்டும்.
இங்கு ஆலய உட்பிரகாரத்தில் சுவாமி சன்னிதி வாசலில் மிகப்பெரிய கணபதி இருக்கிறார். கருவறை கோஷ்டத்தில் லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் காணப்படுகின்றன. ஆலய வெளி பிரகாரத்தில் கன்னிமூலை கணபதி, மகாலட்சுமி சன்னிதிகள் உள்ளன. அதோடு வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமானும் அருள்கிறார். திருமணத் தடை உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் இங்குள்ள துர்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி, முருகர் சன்னிதியில் தீபம் ஏற்றி, பைரவர் சன்னிதியில் சிவப்பு அரளிப்பூ கொண்டு அர்ச்சித்து, தொடர்ந்து 9 வாரங்கள் வழிபட்டு வந்தால் திருமண பாக்கியம் விரைவில் அமையும் என்பது நம்பிக்கை.
இங்கு நவக்கிரக சன்னிதி அருகில், பைரவருக்கு தனிச் சன்னிதி உள்ளது. செவ்வாய்க்கிழமையும், பூச நட்சத்திரமும் கூடிய நாளில் இங்கு வழிபடுவது சிறப்பாகும். ஆலயம் தினமும் காலையில் திறக்கும் போதும், திருநடை இரவில் சாத்தும் போதும் ஆலய சாவியை பைரவரிடம் வைத்து பூஜை செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்ல புதிய வாகனம் வாங்குபவர்கள், இங்கு வந்து வாகனத்தின் சாவியை பைரவரிடம் வைத்து பூஜித்து பெற்றுக் கொள்கிறார்கள்.
ஆலய வளாகத்தில் உள்ள நந்த வனத்தில் அரசமரம் அடியில் நாகர் சிலைகள் உள்ளன. இந்த நாகர் சிலை களுக்கு மஞ்சள் பொடி தூவி, பசும் பால் அபிஷேகம் செய்து, பைரவரையும் பால், விபூதி, சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர், தயிர், நெய் என எட்டு பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்தால், காரிய அஷ்ட அபிஷேகம் செய்து வழிபட காரிய தடை அகலும். ராகு, கேது தோஷங்களும் அகலும். சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, விசாகம், சஷ்டி, பஞ்சமி, திருவாதிரை, பிரதோஷம், சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
அதிகாலையில் இங்கு ஆலயத்தில் தினமும் கோ பூஜை நடக்கிறது. தொடர்ந்து கோ-பூஜையில் பங்கு கொள்வதால் பித்ரு சாபம், பெண் சாபம், சுமங்கலி சாபம், நவக்கிரக தோஷங்கள் அகலும். ஆண்டுதோறும் புரட்டாசி திருவாதிரை நட்சத்திரத்தில் 1008 சங்காபிஷேகமும் வெகுசிறப்பாக நடைபெறுகிறது.
ஆனி மாத பவுர்ணமி நாளில் ‘மாங்கனித் திருவிழா' நடைபெறும். அதுசமயம் குகநாதீஸ்வரர் பிட்சாடனர் வடிவில் வந்து காரைக்கால் அம்மையாரிடம், மாங்கனி கேட்கும் வைபவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஈசன் ‘அம்மையே' என அன்புடன் அழைத்த காரைக்கால் அம்மையார் இத்தலத்தில் வீற்றிருக்கிறார். இத்தல நடராஜரின் தூக்கிய திருவடி எனும் குஞ்சித பாதத்தின் கீழ் காரைக்கால் அம்மையார் பாடிக்கொண்டிருக்கிறார். ‘அடியேனுக்கு இறவாத இன்ப அன்பு வேண்டும். பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல்.. என்றும் உம்மை மறவாமை வேண்டும், ஐயன் நடம் புரியும் போது அடியேன் மகிழ்ந்து பாடி, ஐயன் திருவடியின் கீழ் இருத்தல் வேண்டும்' என்று கேட்டு, திருவாலங்காடு திருத்தலத்தில் நடராஜர் பாதத்தில் அமர்ந்திருக்கிறார். அதே திருக்கோலத்தில்தான் இந்த ஆலயத்திலும் காரைக்கால் அம்மையார் அருள்கிறார்.
இல்லறத்திற்குப் பிறகு துறவறம் பூண்ட முதல் தமிழ் பெண்மணி காரைக்கால் அம்மையார்தான். சிவபெருமானின் அற்புதத்தை வியந்து ‘அற்புதத் திருவந்தாதி'யும், ‘சிவாய நம' எனும் திருவைந்தெழுத்தின் பெருமையை புகழ்ந்து ‘திருவிரட்டை மணிமாலை'யும், சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் தேவாரப் பதிகம் பாடுவதற்கு முன்பே ஈசனைப் போற்றி ‘திருவாலங்காடு மூத்த திருப்பதிகம்' எனும் பதிகமும் பாடியருளி, பதிக நிறைவில் தம்மை ‘காரைக்கால் பேய்' எனப்பாடி பரவசம் ஆனவர் காரைக்கால் அம்மையார்.
காரைக்கால் அம்மையார் சிவனடியாருக்கு மாங்கனி படைத்த நிகழ்வும், சிவபெருமான் காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனிகள் கொடுத்த நிகழ்வும் ஆண்டுதோறும் ஆனி மாதம் பவுர்ணமி நாளில் காரைக்காலில் ‘மாங்கனித் திருவிழா' எனும் பெயரில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே நாளில் கன்னியாகுமரியில் அமைந்துள்ள இந்த ஆலயத்திலும் ‘மாங்கனித் திருவிழா' வெகுசிறப்பாக அந்திப் பொழுதில் கொண்டாடுகிறார்கள்.
இந்த விழாவில் கலந்துகொண்டு காரைக்கால் அம்மையாருக்கும், ஈசனுக்கும் மாங்கனி படைத்து வழிபட்டால் வாழ்வில் வளங்கள் நம்மை வந்தடையும் என்கிறார்கள். கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவிலில் இருந்து ஒரு கிலோமீட்டர் வடக்கிலும், விவேகானந்தபுரம் திருமலை திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலுக்கு தெற்கில் ஒரு கிலோமீட்டர் தூரத்திலும், கன்னியாகுமரி ரெயில் நிலையத்திற்கு மிக அருகிலும் குகநாதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
சிவ.அ.விஜய் பெரியசுவாமி

சென்னையில் இருந்து மேற்கே 55 கிலோ மீட்டர் தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்தில் பேரம்பாக்கம் உள்ளது. இந்த ஊரில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் தலம் பல்வேறு தனித்துவமான சிறப்புகளைக் கொண்டது.

விஜயநகர மன்னர்களால் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் லட்சுமி நரசிம்மரும், மரகதவல்லி தாயாரும் எழில்வாய்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார்கள். நரசிம்மர் சுமார் 7 அடி உயரத்தில் கம்பீரமாக இருக்கிறார். சரணாகதி தத்துவத்தை அவர் காட்டியபடி உள்ளார்.
அதுபோல தனி சன்னதியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் மரகதவல்லி தாயாரும் சரணாகதி தத்துவத்தையே வெளிப்படுத்துகிறார். இந்த ஆலயத்தில் வழிபாடு செய்யும் போது பக்தர்களுக்கு ஒருவித மன அமைதி கிடைப்பதை கண் கூடாக பார்க்க முடிகிறது.
அதற்கு முக்கிய காரணம் நரசிம்மர், தனது மடியில் மகாலட்சுமியை அமர்த்தி, சாந்த சொரூபமாக காட்சி தருவதுதான். தாயார், நரசிம்மரை அணைத்தப்படி பக்தர்களை பார்த்தப்படி உள்ளார். தமிழ்நாட்டில் இத்தகைய லட்சுமி நரசிம்ம வடிவத்தை வேறு எங்கும் காண இயலாது.
பொதுவாக நரசிம்மர் கோவில்களில் தாயாரின் பெயர் அமிர்தவல்லி அல்லது நரசிங்கவல்லி என்று இருக்கும். ஆனால் பேரம்பாக்கம் தலத்தில் மரகதவல்லி என்று அழைக்கப்படுகிறாள்.
இந்தலத்தில் வழிபட்டால் திருமண தடை தரும் தோஷங்கள் உடனடியாக விலகும் என்பது ஐதீகம்.
சென்னையில் இருந்து இந்த ஆலயத்துக்கு செல்பவர்கள் ஸ்ரீபெரும்புதூருக்கு முன்னதாக சவிதா மருத்துவமனையை கடந்ததும் வரும் வலது பக்க சாலையில் சென்றால் பேரம்பாக்கத்தை எளிதில் சென்றடையலாம். பூந்தல்லி, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூரில் இருந்தும் பஸ் வசதி உள்ளது.

சேலம் மாவட்டம் நங்கவள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள இக்கோவில் சுமார் ஆயிரம் வருடம் பழமையானது. நரசிம்மர் சுயம்புவாக இங்கு காட்சியாளிகின்றார்.
சேலம் மாவட்டம் நங்கவள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள இக்கோவில் சுமார் ஆயிரம் வருடம் பழமையானது. இங்குள்ள வைணவ தலங்களில் மிகவும் புகழ்பெற்றது. நரசிம்மர் சுயம்புவாக இங்கு காட்சியாளிகின்றார்.
இங்கு சிவன் சிலைகளும் உண்டு , சைவ , வைணவ ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டான ஒரு தலம். 75 அடி ராஜ கோபுரத்தோடு காட்சி அளிக்கும் இக்கோவிலில் பல கடவுளர்களுக்கு தனி தனியே கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தீராத நோய்கள், தோல் சமந்தமான நோய்கள் , கடன் பிரச்சனை , குழந்தை பாக்கியம் முதலான அனைத்து வேண்டுதல்களுக்கும் இங்கு வந்து வழிபட்டால் தீரும் என்று நம்பப்படுகிறது. இக்கோவில் சோமேசுவரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு சிவனும், பெருமாளும் ஒரு சேர இருப்பதால் இப்பெயர் வந்தது.
ஏறக்குறைய ஆயிரம் வருடம் முன்பு ஆந்திரம் பகுதியில் இருந்து சேலம் பகுதிகளில் குடியேறிய தொட்டிய நாயக்கர்கள் அதிகமாக பசுமாடுகளை வளர்த்து வந்தனர் . இவர்களில் தொட்டிய நங்கை என்ற பெண் ஒரு கூடையுடன் மாடு மேய்க்க செல்கையில் கூடை கனத்தது.
கூடையினுள் பார்க்க ஒரு சாளக்ராம வடிவக் கல்லினைக் கண்டாள். அக்கல் எப்படி வந்தது என்று தெரியாமல் அதனை தூக்கி எறிந்து விட்டாள். சற்று நேரத்தில் மறுபடியும் கூடை கனக்க அதில் திரும்பவும் அக்கல் இருந்ததைக் கண்டாள். பயந்து போன அவள் மறுபடியும் அக்கல்லினை ஒரு குளத்தில் போட்டு சென்றுவிட்டாள்.
பிறகு ஊருக்கு திரும்பிய அவள் அன்றாட வேலைகளை செய்துகொண்டு இருக்க அவ்வூரில் ஒரு பெண்ணுக்கு சாமி வந்து , தான் லட்சுமி என்றும் உங்களுடன் பெல்லாரி என்னும் பகுதியில் இருந்தே உங்களுடனே வந்துவிட்டேன் என்றும் உன்னோடு கல்வடிவில் வந்தது தான் தான் என்றும், எனக்கு உங்கள் ஊரில் கோவில் அமைத்து வழிபட்டால் உங்களை என்றும் குறைவில்லாமல் காப்பேன் என்றும் கூறியது. அதன்பிறகு அக்கல்லினை ஒரு புற்றில் ஊர்மக்கள் கண்டு எடுத்தனர்.
கூரையினால் சிறிய அளவில் கோவிலமைத்து வழிபட்டு வந்தனர். இக்கோவில் பிறகு கம்பளத்து பாளைய கட்டுப்பாட்டில் வந்ததும் இக்கோவில் நல்ல வளர்ச்சி அடைந்து கோபுரங்கள் அமைக்கப்பட்டன.
இங்கு லட்சுமி மற்றும் பெருமாள் சிலைகள் அமைக்கப்பட்டு லட்சுமி நரசிம்மர் என்று பெயர் வழங்கினர். கருவறையில் உள்ள சிலைகளுக்கு அக்காலகட்டத்தில் பால் அபிசேகம் செய்து கற்பூர தீபம் காட்டும் முன்னரே புற்று மண் வந்து சிலைகளை மூடிவிடுமாம். இதனால் இங்குள்ள புற்றினை மறைத்து வைத்துள்ளனர். இப்புற்றில் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் அது நிரம்பாது என்கின்றனர். இப்புற்று மண்ணினை தோல் நோய்கள் உள்ளோர் எடுத்து பூசினால் உடனே சரியாகிவிடும் என்று நம்பப்படுகிறது.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது மள்ளியூர். இங்குள்ள மகா கணபதி ஆலயத்தில், விநாயகரின் மடியில் குழந்தை வடிவிலான கிருஷ்ணர் அமர்ந்திருக்கும் அற்புதக் காட்சியை கண்டு தரிசிக்கலாம்.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது மள்ளியூர். இங்குள்ள மகா கணபதி ஆலயத்தில், விநாயகரின் மடியில் குழந்தை வடிவிலான கிருஷ்ணர் அமர்ந்திருக்கும் அற்புதக் காட்சியை கண்டு தரிசிக்கலாம். இந்த தரிசனம் வேறு எந்த ஆலயத்திலும் கிடைக்காத சிறப்பு கொண்டதாக உள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை இங்கே பார்ப்போம்...
தல வரலாறு :
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, கணபதி மீது பக்தி கொண்ட ஒருவர், கணபதி சிலையை நிறுவி வழிபட்டு வந்தார். ஆர்யபள்ளி மனை, வடக்கேடம் மனை என்று இரு குடும்பத்தினர் அந்தக் கணபதி சிலையைச் சுற்றிக் கட்டிடம் கட்டிப் பராமரித்து வந்தனர். பிற்காலத்தில், அந்த இரு குடும்பத்திலும் வறுமையும் துன்பங்களும் ஏற்பட, அவர் களால் அந்தக் கோவிலை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. கோவிலில் மேற்கூரை இல்லாத நிலையிலும், அவர்கள் அங்கிருந்த கணபதியைத் தொடர்ந்து வழிபட்டு வந்தனர்.
அவர்களின் மரபு வழியில் வந்த சங்கரன் நம்பூதிரி என்பவர், குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவராக இருந்தார். அவர் தினமும் அங்கிருந்த கணபதி கோவிலின் முன்பு அமர்ந்து வேத வியாசரின் கிருஷ்ணன் பெருமைகளைச் சொல்லும் பாகவதத்தைப் பாராயணம் செய்து வந்தார். பின்னாளில், அவர் குழந்தை வடிவிலான கிருஷ்ணர் சிலை ஒன்றைச் செய்து, கோவிலில் இருந்த கணபதியின் மடியில் வைத்து வழிபடத் தொடங்கினார்.
அதன் பின்னர், அந்தக் கோவிலில் வழிபட்டு வந்த இரு குடும்பத்தின் மரபு வழியினரும் வறுமை நீங்கி வளம் பெற்றனர். கோவில் புதுப்பிக்கப்பட்டு, அனைவரது வழிபாட்டுக்கும் கொண்டு வரப்பெற்றது என்று இந்த ஆலயத்தின் தல வரலாறு சொல்லப்படுகிறது.
கோவில் அமைப்பு :
இந்தக் கோவில் கருவறையில் அமர்ந்த நிலையில் இருக்கும் கணபதியின் மடியில், குழந்தை வடிவிலான கிருஷ்ணர் அமர்ந்திருக்கிறார். ஆலய வளாகத்தில் சாஸ்தா, பகவதி, அந்திமகாகாலன், பிரம்ம ராட்சசன், ஆயயட்சி ஆகியோருக்கான சன்னிதிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆலயத்தில் கணபதி மற்றும் கிருஷ்ணர் ஆகியோருக்கான சிறப்பு நாட்களில் எல்லாம் வழிபாடுகளும், அபிஷேக, ஆராதனைகளும் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன.
நோயில் இருந்து விடுபட விரும்புபவர் களுக்கு ‘தடி நைவேத்தியம்’ எனப்படும் பச்சரிசி மாவு படைத்து வழிபடுதல், குழந்தைப் பேற்றுக்காகப் பால் பாயசம் படைத்து வழிபடுதல், முன்னோர் வழிபாட்டுக்கு (பித்ரு கடன்) ‘சதுர்த்தியூட்டு’ எனப்படும் சோறு, காய்கறி படைத்து வழிபடுதல், திருமணத்தடை நீங்குவதற்காக செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களில் சுவாமிக்கு அணிவிக்கப்படும் பழமாலை வழிபாடு போன்ற சிறப்பு வழிபாடுகளும் இந்த ஆலயத்தில் நடத்தப்பெறுகின்றன.
இந்தச் சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொள்வதற்கு முன் பதிவு செய்திட வேண்டும். மேலும், வழிபாட்டுப் பொருட்கள் அனைத்தையும் கோவிலில் பணம் செலுத்தியே பெற்றுக் கொள்ள வேண்டும். வெளியில் இருந்து கொண்டு வரப்படும் பொருட்களைக் கோவில் வழிபாட்டிற்கு அனுமதிப்பதில்லை.
இந்தத் திருத்தலத்தில் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதம் முதல் நாளில் தொடங்கி தை முதல் நாள் வரையிலான ஐயப்பனுக்குரிய மண்டல வழிபாட்டு நாட்களில் விளக்கேற்றுதல், புஷ்பாஞ்சலி மற்றும் மாலை வழங்குதல் போன்ற நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெறுகின்றன.
தை மாதம் மூலம் நட்சத்திர நாளில் பாகவத சப்தக யஜ்னம் எனும் சிறப்பு நிகழ்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இக்கோவிலில் எட்டு நாட்கள் நடைபெறும் ஆண்டுத் திருவிழா, சித்திரை முதல் நாள் வரும் விசுத் திருவிழா நாளில் வண்ணமயமான ஆறாட்டு விழாவுடன் நிறைவடைகிறது.
மேலும், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் பாகவத பிரபாசனம், அகண்ட நாம ஜெபம் போன்ற சிறப்பு நிகழ்வுகளும் நடத்தப்பெற்று வருகின்றன.
இந்தக் கோவிலில் ஐயப்பனுக்கான மண்டல வழிபாட்டு நாட்களில், ‘கணேச சங்கீத உத் சவம்’ எனும் பெயரிலான இசைத் திருவிழா நடைபெறுகிறது. இந்த இசைத் திருவிழாவில் இந்தியா முழுவதும் இருந்து பிரபலப் பாடகர்கள், பாடல்களைப் பாடி இறைவனுக்குத் தங்களது இசையைச் சமர்ப்பிக்கின்றனர். புதிய பாடகர்கள், இசை கற்பவர்கள் போன்றோர் இவ்விழாவில் பாடியும், இசை நிகழ்ச்சியை நடத்தியும் இறைவனின் அருளைப் பெறுகின்றனர். இங்கு இசை நிகழ்ச்சி நடத்தவும், பாடல்களைப் பாடவும் கோவில் நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற்றிட வேண்டும்.
முக்குற்றி புஷ்பாஞ்சலி:
இந்த ஆலய வழிபாட்டில் ‘முக்குற்றி புஷ்பாஞ்சலி’ எனும் சிறப்பு வழிபாடு பிரசித்திப் பெற்றதாக உள்ளது. இந்த வழிபாட்டிற்காக, முக்குற்றி எனப்படும் செடியை 108 எனும் எண்ணிக்கையில் வேருடன் பறித்து வந்து, வாசனைத் திரவத்தில் மூழ்க வைத்து விடுகின்றனர். பின்னர் அதனை எடுத்து, விநாயகருக்கான மந்திரங்களைச் சொல்லி வழிபாடு செய்கிறார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு எப்படிப்பட்ட தோஷங்கள் இருந்தாலும், அந்தத் தோஷம் விலகிவிடும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இவ்வழிபாடு ஒரு நாளில் ஐந்து முறை மட்டுமே நடத்தப்படுவதால், இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், கோவிலில் முன் பதிவு செய்து கலந்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம் :
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருப்பந்தரா என்ற ஊருக்கு அருகில் இருக்கிறது மள்ளியூர் திருத்தலம். இத்தலத்திற்குக் கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய இரு நகரங்களில் இருந்தும் பேருந்து வசதிகள் இருக்கின்றன. கோட்டயம் எர்ணாகுளம் சாலையில் கோட்டயம் நகரில் இருந்து 23 கிலோமீட்டர் தூரத்திலும், எர்ணாகுளம் நகரில் இருந்து 56 கிலோமீட்டர் தொலை விலும் இருக்கும் குருப்பந்தரா சந்திப்பு என்ற இடத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மள்ளியூர் செல்லலாம்.
- தேனி மு.சுப்பிரமணி

காஞ்சீபுரம் மாவட்டம் தென்னேரி அருகில் கட்டவாக்கத்தில் ஸ்ரீ விஸ்வரூப லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
காஞ்சீபுரம் மாவட்டம் தென்னேரி அருகில் கட்டவாக்கத்தில் ஸ்ரீ விஸ்வரூப லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் தென்னேரி அருகில் கட்டவாக்கத்தில் ஸ்ரீ விஸ்வரூப லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது.
இங்கு ஆதார பீடம், கூர்ம பீடம், பத்ம பீடம், அநந்த பீடம்,யோக பீடம் ஆகிய ஐந்து பீடங்களின் மேல் கம்பீரமாக வீற்றிருக்கும் பெருமாளுக்கு மேல் இரண்டு கரங்களில் சக்கரமும், வில், அம்பும் தாங்கி மற்றும் அபய வரத அஸ்தத்துடன் குளிர காட்சிக்கும் பாணியானது வந்தாரை வாழ வைக்கும் பெருமாள் என்பதை உறுதிப்படுத்துகிறது.
மகாலட்சுமியுடன் கூடிய இந்த நரசிம்மருக்கு த்ரிநேத்ரம் அமைந்துள்ளது “அருள்விழியால் நோக்கி கருணை மழை பொழிய இரு கண்ணும் போதாமல் முக்கண்ணனாக சேவை சாதிக்கிறார்” மடியில் வீற்றிருக்கும் தாயார் தாமரை தாங்கிய அபய அஸ்தத்துடன் மிகவும் சாந்தமான தோற்றத்துடன் எழுந்தருளியிருப்பதை காண்கில் அருள் பொழியும் திவ்ய தம்பதிகள் இவர்கள்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்தும். இங்கு எழுந்தருளி இருக்கும் நரசிம்மனுக்கு வஸ்ரதம்ஷ்ட்ரங்கள் (பற்கள்) 12 அமைந்திருக்கின்றன. இது 27 நட்சத்திரங்கள் அடங்கிய 12 ராசிகளைக் குறிக்கும்.
திருமுக மண்டலத்தில் இடது கண் சந்திரன், வலது கண் சூரியன், நெற்றிக்கண் செவ்வாய்,நாசி சுக்ரன், மேல் உதடு குரு, கீழ் உதடு புதன், வலது காதில் கேது, இடது காதில் ராகு, நாக்கில் சனி பகவான் ஆக நவக்கிரகங்களும் பெருமானுடைய திருமுக மண்டலத்தில் ஐக்கியமாகி இருப்பதால் இது ஒரு பரிகார தலமாக விளங்குகிறது.
பெருமாளின் அமைப்பு ஆறு அவதாரங்களையும், தாங்கி இருக்கும் ஆயுதங்கள் 4 அவதாரங்களையும் நினைவுபடுத்தும். கூர்ம பீடம் கூர்மாவதாரத்தையும், வஜ்ரதம்ஷ்ட்ரம வராக அவதாரத்தையும், வில் அம்பு (பார்கவ அஸ்திரம்) பரசுராம், ராம அவதாரங்களையும், சக்கரமானது கிருஷ்ண அவதாரத்தையும் நினைவுபடுத்துகிறது. மேலும் தாங்கியுள்ள ஆயுதங்களும் ஜய விஜயர்களுக்கு ஏற்பட்ட சாபத்தினால் அவர்களை வதம் பண்ண பெருமாள் 3 பிறவிகளில் உபயோகித்த ஆயுதங்கள் ஆகியவற்றையும் இந்த நரசிம்மனே தாங்கியிருப்பது விசேஷ அம்சம்.
மேலும் விவரங்கள் அறிய செல் : 9444225091, 94437 74775, 94447 11031.

நங்கநல்லூர் லட்சுமி நரசிம்ம நவநீதகிருஷ்ணன் திருக்கோவிலில் ஐந்து தலை நாகத்தின் மீது அமர்ந்தபடி யோக நரசிம்மர் அருள்பாலிப்பது சிறப்பு வாய்ந்தது.
மூலவர் : லட்சுமி நரசிம்மர்
பழமை : 500 வருடங்களுக்குள்
ஊர் : நங்கநல்லூர்
மாவட்டம் : சென்னை
திருவிழா: நரசிம்ம ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி
தல சிறப்பு: ஐந்து தலை நாகத்தின் மீது அமர்ந்தபடி யோக நரசிம்மர் அருள்பாலிப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி: அருள்மிகு லட்சுமி நரசிம்ம நவநீதகிருஷ்ணன் திருக்கோவில், நங்கநல்லூர், சென்னை.
போன்: +91 44 2224 9881
பொது தகவல்: எழிலான ஐந்து நிலை ராஜகோபுரத்தின் முன் உள்ள மண்டபத்தின் தெற்கே ரங்கநாதன் பள்ளி கொண்டுள்ளார். வடக்கே நர்த்தன கிருஷ்ணர் ஆடுகிறார்.கிழக்கில் லட்சுமி நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். நான்கு கரங்களோடு காட்சிதரும் நரசிம்மரின் மேலிரு கரங்கள் சங்கு சக்கரம் தாங்கியிருக்க,வலது கீழ்கரம் அபயமுத்திரை காட்டுகிறது. இடது கீழ் கரம் மடியில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமியை அணைத்தபடி இருக்கிறது. சீனிவாசப்பெருமாள், சஞ்சீவி ஆஞ்சநேயர், பதினொரு ஆழ்வார்கள், ஆண்டாள், சக்கரத்தாழ்வார் சன்னதிகள் உள்ளன. கண்ணாடி மாளிகை அற்புதமாக இருக்கிறது.
பிரார்த்தனை : இங்குள்ள பிரார்த்தனை சக்கரத்தின் மீது பக்தர்கள் கைகளை வைத்து வணங்கி நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்: இங்குள்ள நரசிம்மருக்கும், கிருஷ்ணருக்கும் வெண்ணெய், புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை: காலப்போக்கில் பூமியில் புதையுண்டது. 1975ல் இங்கு ஒரு கிருஷ்ணர் கோவில் கட்ட பிரசன்னம் பார்க்கப்பட்டது. அந்த இடத்தின் கீழ் ஒரு ஆலயம் புதைந்துள்ளது தெரியவந்தது. இங்குவிஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது. அத்துடன், 1500 ஆண்டுக்கு முந்திய பல்லவர் காலத்திய நரசிம்மர் ஆலயம் இருந்தது உறுதியானதுஅதன் பின்னர் கிருஷ்ண பக்த ஜனசபா அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, கோவில் எழுப்பப்பட்டது. கிருஷ்ணரும், நரசிம்மரும் இணைந்து வந்ததால், லட்சுமி நரசிம்ம நவநீதகிருஷ்ணன் கோவில் என பெயரிடப்பட்டது.
தல வரலாறு: பரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவருக்கு ஒரு ஆசை ஏற்பட்டது, அது பிரகலாதனுக்காக தூணைப்பிளந்து கொண்டு வந்த நரசிம்மரை தரிசிக்கவேண்டும் என்பதுதான். அதற்காக யாகம் நடத்தினார். யாகத்தீயின் நடுவே உக்கிர கோலத்தோடு தோன்றினார் நரசிம்மர். அவரைக் கண்டு பரவசப்பட்ட ஜமதக்னி, சாந்தமாக இருக்கும்படியும், தான் பெற்ற தரிசனம் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டுமென வரம் கேட்டார். பெருமாளும் லட்சுமியைத் தாங்கி லட்சுமி நரசிம்மராய் புன்னகை சிந்த அத்தலத்தில் எழுந்தருளினார். நங்கையாகிய லட்சுமி தோன்றிய இடம் நங்கைநல்லூராகி, நங்கநல்லூர் என திரிந்தது.
சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: ஐந்து தலை நாகத்தின் மீது அமர்ந்தபடி யோக நரசிம்மர் அருள்பாலிப்பது சிறப்பு.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்திருக்கும் இந்த தலத்தில் உள்ளது அருள்மிகு சுந்தரேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் சோழ நாட்டை ஆண்டு வந்த, சோழ மன்னரான மூன்றாம் குலோத்துங்கனின் பட்டப்பெயர் ‘ஜெயசிம்மகுல காலன்’ என்பதாகும். அந்த மன்னரின் பெயரைத் தாங்கி ‘ஜெயம்சிம்ம குல கால நல்லூர்’ என்ற பெயருடன் அழைக்கப்பட்ட ஒரு கிராமத்தின் பெயர், நாளடைவில் ‘ஜெயம்சிம்ம நல்லூர்’ என்றும், பின்னர் ‘ஜெயசிம்மன்’ என்றும் மருவி அழைக்கப்பட்டது. அந்த ஊர் தற்போது ‘கேசிங்கன்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்திருக்கும் இந்த தலத்தில் உள்ளது அருள்மிகு சுந்தரேஸ்வரர் ஆலயம். இந்தக் கோவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரம் இல்லாத நுழைவு வாசலைக் கடந்ததும், வெளிப் பிரகாரத்தில் நந்தியையும், பலி பீடத்தையும் காணலாம்.
அதையடுத்து உள்ள அலங்கார மண்டபத்தைக் கடந்ததும் வரும் மகா மண்டபத்தில், அர்த்த மண்டபத்திற்குச் செல்லும் வாசலின் வலது புறம் சனிபகவானுக்கு தனி மண்டபம் உள்ளது. மண்டபத்தின் வலதுபுறம் இறைவி சவுந்திரநாயகி தென்திசை நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அடுத்துள்ள அர்த்த மண்டபத்தைக் கடந்ததும் உள்ள கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார்.
மகாமண்டபத்தின் கீழ் திசையில் பைரவர், சூரியன், நாகர் ஆகியோரது திருமேனிகள் உள்ளன. இறைவனின் கருவறை தேவக்கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தி, மேல்புறம் மகாவிஷ்ணு, வடபுறம் துர்க்காதேவி ஆகியோர் வீற்றிருந்து அருள்புரிகின்றனர். பிரகாரத்தின் தென் திசையில் நால்வர் உள்ளனர். மேற்கில் பிள்ளையார், சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, கஜலட்சுமி, வடக்கில் சண்டி கேசுவரர் ஆகியோரது திருமேனிகள் உள்ளன. தினசரி நான்கு கால பூஜைகள் இங்கு நடைபெறுகின்றன.
இந்த ஆலயத்தில் அமைந்திருக்கும் சிறிய உருவமுடைய பிள்ளையார் ‘சின்ன பிள்ளையார்’ என பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.
பிரதோஷம், சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், புத்தாண்டு பிறப்பு, கார்த்திகை, சோமவாரம் போன்ற நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி மாத பவுர்ணமி அன்று இங்கு இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தைக் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இங்குள்ள இறைவனையும் இறைவியையும் வழிபடுவதால், வாதம் சம்பந்தப்பட்ட நோய்கள் உடனடியாக குணமாகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் கிடையாது. மகாமண்டபத்தில் தனி மண்டபத்தில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கும் சனி பகவானுக்கு சனிக்கிழமைகளிலும், கிரக மாற்றம் ஏற்படும் நாட்களிலும் விசேஷ பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றன. சனிக்கிரக பாதிப்பு உள்ளவர்கள் இந்த சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வந்தால், சனிதோஷ பாதிப்பின் வீரியம் கணிசமாக குறையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம் :
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பனந்தாளில் இருந்து மணல்மேடு பேருந்து தடத்தில் கடலங்குடியில் இருந்து தெற்கில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கேசிங்கன் என்ற திருத்தலம்.
மல்லிகா சுந்தர்

இந்தியர்கள், மலேயர்கள், சீனர்கள் என மூன்று நாட்டினர் சங்கமிக்கும் சிங்கப்பூரில் அனைத்து தரப்பு மக்களும் விரும்பி வழிபடும் தெய்வமாக விளங்குபவர், லயன் சித்தி விநாயகர்.
இந்தியர்கள், மலேயர்கள், சீனர்கள் என மூன்று நாட்டினர் சங்கமிக்கும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்வது சிங்கப்பூர். இங்குள்ள அனைத்து தரப்பு மக்களும் விரும்பி வழிபடும் தெய்வமாக விளங்குபவர், லயன் சித்தி விநாயகர். இக்கோவிலை சிங்கப்பூர் நகரத்தார் சமூகம் எழுப்பி, நிர்வாகம் செய்து வருகிறது.
‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்ற பழமொழிக்கு ஏற்ப, தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்கும் சென்று பிழைப்புத் தேடி வருகின்றனர். ஆனால் நகரத்தார் சமூகத்தினர் வட்டித் தொழிலைச் செய்து வந்தனர். காலனியத்திய ஆட்சி நடந்த பர்மாவில் செய்து வந்த வட்டித் தொழில் ஆதரவைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் வட்டித் தொழில் மேற்கொண்டு கடன் வழங்கும் வணிகம் செய்தனர். ஆங்கிலேயர்களுக்கே பணம் தந்து வணிகம் செய்யும் அளவுக்கு அவர் களின் தரம் உயர்ந்திருந்தது. இதற்குச் சான்றாக இன்றும் ரபேல் சதுக்கத்தில் நகரத்தார் நிதி வணிகம் செய்யும் காட்சியாக வெண்கலச்சிலை நிறுவப்பட்டிருப்பதை காணலாம்.
வட்டித்தொழில் செய்து வந்த நகரத்தார், தெய்வ வழிபாட்டிலும் சிறப்பானவர்களாக விளங்கினர். முருகப்பெருமானின் தீவிர பக்தர்களாக விளங்கும் இவர்கள், தாங்கள் சென்ற இடமெல்லாம் முருகன் ஆலயங்களை எழுப்பி வழிபடத் தொடங்கினர். அவ்வாறு எழுப்பப்பட்டதே, சிங்கப்பூர் தண்டாயுதபாணி ஆலயம். இதன்பின் துணைக் கோவிலாக எழுந்த ஆலயம், ‘லயன் சித்தி விநாயகர்’ ஆலயம்.
ஆலயத் தோற்றம்
நகரத்தார் சிங்கப்பூரில் கி.பி. 1820-ம் ஆண்டு முதல் குடியேறத் தொடங்கினர். என்றாலும், கி.பி.1859-ம் ஆண்டுதான் முதன்முதலாக தண்டாயுதபாணி கோவில் எழுப்பப்பட்டது. இதன்பிறகு கி.பி. 1925-ம் ஆண்டு எழுப்பப்பட்டதே லயன் சித்தி விநாயகர் கோவில்.
இந்தக் கோவிலில் உள்ள மூன்று விநாயகர் விக்கிரகங்களில், மூலவிக்கிரகமாக விளங்குவது லயன் சித்தி விநாயகர் ஆவார். கி.பி. 1925-ம் ஆண்டு சிங்கப்பூர் நகரில் இந்தக் கோவில் எழுப்பப்பட்டபோது, பிரிட்டிஷ் - இந்திய ராணுவத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர், மூல விக்கிரகத்தை நகரத்தாரிடம் ஒப்படைத்தார். அப்போது அவரிடம் தந்த வாக்குறுதியின்படி, அவர் வழங்கிய சிலையோடு புதிய கருங்கல் விக்கிரகத்தை இந்தியாவில் இருந்து வரவழைத்து பிரதிஷ்டை செய்தனர். ‘சிப்பாய் லயன்’ என்ற குடியிருப்புப் பகுதியில் இருந்து வந்த விநாயகர் என்பதால், இவருக்கு ‘லயன் சித்தி விநாயகர்’ எனப் பெயர் ஏற்பட்டது.
மார்க்கெட் அருகில் உள்ள நகரத்தார் கிட்டங்கிகள், நகர மேம்பாட்டுக்காக அரசால் கையகப்படுத்தப்பட்டது. அப்போது மூன்றாவது பிள்ளையார் சிலையை நகரத்தார் இக்கோவிலுக்கு வழங்கினர். 1975 மற்றும் 1989-ம் ஆண்டுகளில் ஆலயம் மறு சீரமைக்கப்பட்டு, 2007-ம் ஆண்டு ஆலயத்தின் மூன்றாவது கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
ஆலய அமைப்பு
ஐந்து நிலை ராஜகோபுரம் எழிலாக காட்சி தர, பெரிய சுற்று மண்டபம், பல்நோக்கு அரங்கம், ஊழியர் தங்குமிடம் என ஆலயம் விஸ்தாரமாக அமைந்துள்ளது.
இக்கோவிலில் தெய்வ வழிபாடுகளுடன் சமூகத் தொண்டும் ஆற்றப்பட்டு வருகிறது. தங்களின் சொந்த நலன் என்பது, பிற சமூகத்தின் நலன் சார்ந்தது என்பதை உணர்ந்த இந்த ஆலயத்தின் நிர்வாகம், தமிழ்ப் பள்ளிகள் நடத்துதல், மாணவர் களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்குதல், மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குதல், மருத்துவ முகாம்கள், அன்னதானம், தேவார வகுப்புகள் என பல்வேறு சமூகச் சேவைகளைச் செவ்வனே செய்து வருகின்றது.
இந்த ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியும், தைப்பூசமும் மிகவும் முக்கிய விழாக்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன. தைப்பூசம் அன்று தேங் ரோட்டில் உள்ள தண்டாயுதபாணி உற்சவர் புறப்பாடு ஆகும். மார்க்கெட் தெரு வழியாக உலா வரத் தொடங்கும் முருகப்பெருமான், தனது அன்னை மாரியம்மனை தரிசித்து, தன் அண்ணன் லயன் சித்தி விநாயகரை தரிசித்து ஆசி பெற்று, மீண்டும் தன் ஆலயம் திரும்புவார். ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி, விநாயகருக்கான முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் இங்கு வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. விழாக் காலங்களில் மாலையில் வளாகத்திற்குள் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
எந்த விதமான நல்ல நோக்கம் கொண்ட வேண்டுதலையும், எளிதில் நிறைவேற்றித் தருபவர் இந்த ஆலயத்தில் இருக்கும் லயன் சித்தி விநாயகர் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இவரை 108 முறை வலம் வந்து வழிபடுவோர், எண்ணம் எளிதாக ஈடேறும் என்பது ஐதீகமாக உள்ளது.
தண்டாயுதபாணி ஆலயத்தைப் போலவே, லயன் சித்தி விநாயகர் ஆலயமும் நகரத்தார் சமூகத்தினரால் நல்ல முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்

சிங்கப்பூரின் சைனா டவுன் பகுதியில், லயன் சித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. கியோங் செய்க் சாலை மற்றும் கிரேத்தா ஆயர் சாலை சந்திப்பில் இவ்வாலயம் இருக்கிறது. இதன் அருகே ஊட்டரம்பார்க் மெட்ரோ மற்றும் சைனா மெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்ளன.
பனையபுரம் அதியமான்
சென்னையில் எத்தனையோ சாய்பாபா ஆலயங்கள் உள்ளன. அந்த வரிசையில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஸ்ரீ விஸ்வரூப சீரடி சாய்பாபா ஆலயம் சற்று தனித்துவம் கொண்டதாக காணப்படுகிறது.
சீரடி சாய்பாபாவுக்கு உலகம் முழுவதும் லட்சத்துக்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன. மனிதராக, மகானாக வாழ்ந்து கடவுள் அவதாரமாக உருவெடுத்த சீரடி சாய்பாபுவுக்கு சமீப காலமாக ஏராளமான ஆலயங்கள் தோன்றி வருகின்றன. தமிழ்நாட்டில் பாபாவுக்கு அதிகளவில் கோவில் கட்டப்படுவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
சென்னையில் எத்தனையோ சாய்பாபா ஆலயங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆலயமும் ஒவ்வொரு வகையில் தனித்துவம் கொண்டதாக திகழ்கிறது. அந்த வரிசையில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஸ்ரீ விஸ்வரூப சீரடி சாய்பாபா ஆலயம் சற்று தனித்துவம் கொண்டதாக காணப்படுகிறது.
வியாழக் கிழமைகளில் இந்த ஆலயத்துக் குள் சென்று வருவதற்கே பக்தர்கள் திணற வேண்டிய திருக்கும். வளசர வாக்கம் மேற்கு காம கோடி நகரில் வேல வன் தெருவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. வெளியில் இருந்து பார்த்தாலே பாபா நம்மை உள்ளே அழைப்பது போன்று ஒரு உணர்வு தோன்றும். சினிமா படத்தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் இந்த ஆலயத்தை கட்டி உள்ளார். ஆனால் அவரோ, “இந்த ஆலயத்தை நான் கட்டவில்லை. பாபாவே தனக்கான இந்த இடத்தை தேர்வு செய்து தானே கட்டிக்கொண்டுள்ளார்” என்றார்.
2012-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு மே மாதம் 8-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட இந்த ஆலயம் தற்போது 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஆனால் மிக பழமையான ஆலயத்தை நோக்கி பக்தர்கள் எவ்வளவு ஆர்வத்துடன் செல் வார்களோ அதே ஆர்வத்துடன், ஆத்மார்த்த உணர்வுடன் இந்த ஆலயத்துக்கும் வந்து செல்கிறார்கள்.
இந்த ஆலயம் உருவானதன் பின்னணியில் பல ருசிகரங்களும், ரகசியங்களும் அடங்கி உள்ளன. தமிழ் திரை உலகில் 1996&ம் ஆண்டு முதல் இந்தியன், குஷி, ரன், பாய்ஸ், எனக்கு 20 உனக்கு 18, தூள், கில்லி, 7ஜி ரெயின்போ காலனி, ஆரம்பம், வேதாளம் உள்பட பல படங்களை தயாரித்துள்ள ஏ.எம்.ரத்னத்தின் அலுவலகத்தின் ஒரு பகுதியில்தான் இந்த ஆலயம் உள்ளது.
இத்தனைக்கும் ஏ.எம்.ரத்னம் ஆரம்ப காலங்களில் சீரடி சாய்பாபாவின் பக்தனாக இருந்தது இல்லை. அவர் சபரிமலை அய்யப்பனின் தீவிர பக்தர் ஆவார். கடந்த 41 ஆண்டுகளாக அவர் ஒரு ஆண்டுகூட இடைவெளி விடாமல் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு சபரிமலைக்கு சென்று வருகிறார். அவரது மனதில் சீரடி சாய்பாபா மெல்ல மெல்ல இடம் பிடித்தார். அது எப்படி என்பதை ஏ.எம்.ரத்னமே சொல்கிறார். கேளுங்கள்....
பொதுவாகவே நான் பழமையான ஆலயங்களை தேடிச் சென்று வழிபடுவேன். தமிழகத்தில் அறுபடை வீடுகள், சிவாலயங்கள் உள்பட பல பழமையான ஆலயங்களுக்கு சென்று இருக்கிறேன். அப்படிதான் மும்பைக்கு செல்லும்போது சீரடிக்கு சென்று வந்திருக்கிறேன். ஆனால் எனக்கு முன்பே சீரடி சாய்பாபா என் இல்லத்துக்குள் வந்து விட்டார்.
எனது மனைவி பத்மஜா மிக சிறந்த பாபாவின் பக்தை. நெல்லூர் மாவட்டத்தில் வளர்ந்த அவர் சிறு வயதிலேயே சீரடி சாய் பாபாவால் ஆட்கொள்ளப்பட்டவர். சிறு வயதில் அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது சுற்றுலா செல்வதற்காக 3 காலணா (75 காசு) கேட்டிருக்கிறார். அவரது தந்தை கொடுக்கவில்லை.
இதனால் அவர் அழுதுக்கொண்டே பள்ளிக்கு சென்று இருக்கிறார். அப்போது வழியில் உள்ள சீரடி பாபா ஆலயத்தில் இருந்து அவரது பெரியப்பா வெளியில் வந்திருக்கிறார். “ஏன் அழுகிறாய்?” என்று விசாரித்துள்ளார். அதற்கு பத்மஜா, “சுற்றுலா செல்ல 3 காலணா கேட்டேன். அப்பா தரவில்லை” என்று சொல்லி இருக்கிறார்.
உடனே அவரது பெரியப்பா தனது சட்டை பைக்குள் கையை விட்டு வெளியில் எடுத்து இருக்கிறார். அவரது கை நிறைய காலணா காசுகள் இருந்து இருக்கிறது. உனக்கு எவ்வளவு வேண்டுமோ எடுத்துக் கொள் என்று சொன்னாராம். ஆனால் பத்மஜா, 3 காலணா போதும் என்று சொல்லி 3 மட்டும் எடுத்து இருக்கிறார். அன்று இரவு அவரது தந்தை, “சுற்றுலா செல்ல காசு கேட்டாயே இந்தா வைத்துக் கொள்” என்று கொடுத்து இருக்கிறார்.
அதற்கு பத்மஜா, “பெரியப்பா தந்து விட்டார்கள்” என்று சொல்லி உள்ளார். அவரது தந்தையால் நம்ப முடியவில்லை. ஏனெனில் பத்மஜாவின் பெரியப்பா யாருக்குமே ஒரு பைசா கூட கொடுக்காதவர். அவர் எப்படி கொடுத்து இருப்பார் என்று பத்மஜா தந்தை விசாரித்துள்ளார். அப்போது பத்மஜாவின் பெரியப்பா, “நான் காசு கொடுக்கவில்லை” என்று உறுதிபட கூறியுள்ளார்.
அதன் பிறகே “பத்மஜாவுக்கு மூன்று காலணா கொடுத்தது சீரடி பாபா” என்பதை அனைவரும் அறிந்து மகிழ்ந்துள்ளனர். உடனே பாபா ஆலயத்துக்கு ஆரத்தி எடுத்துள்ளனர். இப்படி எனது மனைவியின் சிறு வயதிலேயே அவருக்கு பாபாவின் அருள் கிடைத்து விட்டது. அதனால்தானோ என்னவோ அவர் எப்போதுமே சீரடி சாய்பாபாவின் நினைவிலேயே இருப்பார்.
வீட்டில் ஆங்காங்கே பாபாவின் சிலைகளை வாங்கி வைத்தார். அவற்றில் இருந்து மிகவும் பாசிட்டிவ்வான அலைகள் வருவதை நான் உணர்ந்தேன். அதிலிருந்து எனக்கும் பாபா மீது தனி ஈடுபாடு ஏற்பட்டது. இந்த ஆலயம் இருக்கும் பகுதியில் முன்பு எனது அலுவலகத்தின் தோட்டம்தான் இருந்தது. எனது அலுவலகத்துக்கு வருபவர்கள் இங்கிருந்து சாப்பிட்டு விட்டு செல்வார்கள்.
ஒருநாள் என் மனைவி இந்த இடத்தில் பாபா சிலை ஒன்றை வையுங்கள். இங்கு வருபவர்கள் அவரை வழிபட்டு செல்லட்டும் என்று கூறினார். நானும் சரி சொன்னேன். பாபா சிலையை எங்கு வைப்பது என்று யோசித்த போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னற்றம் ஏற்பட்டது. முதலில் சுவர் ஓரத்தில் சிலையை வைக்கலாம் என்று நினைத்தேன். பிறகு மரத்தடியில் அவரை வைக்க முடிவு செய்யப் பட்டது. இதைத் தொடர்ந்து அந்த மரத்தடியில் மிக சிறிய ஒரு அறை கட்டலாமா? என்று யோசனை தோன் றியது.
இதைத் தொடர்ந்து பக்தர் கள் நிற்பதற்கு அரங்கம் கட்டலாமா? என்ற யோசனை பிறந்தது. இப்படி ஒவ்வொன்றாக நினைத்து நினைத்து கடைசியில் அது ஒரு ஆலயத்தின் வடிவுக்கு வந்து நின்றது. உடனடியாக அந்த இடத்தில் பாபாவுக்கு ஆலயம் கட்ட ஏற்பாடு நடந்தது. அந்த வகையில் இந்த ஆலயம் பாபா தனக்காக தானே கட்டிக் கொண்ட ஆலயம்தான் என்று சொல்ல வேண்டும்.
ஆலயம் கட்டுமானப் பணிகள் நடந்தபோது துனி கட்ட வேண்டும் என்றார்கள். துனி பற்றி அப்போது எனக்கு எதுவுமே தெரியாது. பாபா சீரடியில் துவாரகமாயில் வசித்தபோது அவரால் ஏற்றி வைக்கப்பட்ட அணையா தீபம்தான் துனி என்று அழைக்கப்படுகிறது. அதுபோன்று துனியை இந்த ஆலயத்திலும் கட்ட ஒருவர் உதவி செய்தார்.
சீரடியில் பாபா ஏற்றி வைத்த அணையா தீபத்தில் இருந்து நெருப்பு எடுத்து வரப்பட்டு இங்கு துனி அமைக்கப்பட்டுள்ளது. சீரடியில் செய்யப்படுவது போன்றே இங்கு 4 நேர ஆரத்தி பாபாவுக்கு நடத்தப்படுகிறது. இதற்காக சீரடியில் இருந்து அர்ச்சகர்களையும் அழைத்து வந்துள்ளோம்.
சீரடியில் யுகாதி, ராமநவமி, குருபவுர்ணமி, விஜயதசமி, தத்தாத்ரேயர் ஜெயந்தி ஆகிய 5 விழாக்களும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அதே போன்று இங்கும் விழாக்கள் நடத்தப்படுகிறது. இந்த ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள சாய் பாபா சிலை உயிரோட்டமானது. அதை நேரில் பார்த்து அனுபவ பூர்வமாக உணர்ந்தவர்களுக்குதான் அந்த சிறப்பு தெரியும்.
இந்த ஆலயத்தில் பாபாவின் சிலை எப்படி அமைய வேண்டும் என்று அவரே எனக்கு கண்ணில் காட்டி இருந்தார். அதற்கேற்ப சிலைகள் ஜெய்ப்பூரில் இருப்பதாக கேள்வி பட்டேன். சிரித்த முகத்துடன் உட்கார்ந்த நிலையில் பாபா இருக்கும் சிலையை தேடினேன். நீண்ட தேடுதலுக்கு பிறகு ஜெய்ப்பூரில் இந்த சிலை கிடைத்தது. அதைத்தான் இங்கு பிரதிஷ்டை செய்துள்ளோம்.
மற்ற சிலைகள் அனைத்தும் பைபர் கிளாசால் செய்யப்பட்டவை. ஒரு தடவை சினிமா கலை இயக்குனர் தோட்டாதரணி வந்திருந்தபோது பிரமாண்டமான பெருமாள் சிலை செய்ததாக கூறினார். உடனே நாங்கள் அதே போன்று பாபாவுக்கும் பெரிய சிலை செய்ய சொன்னோம். அதன்படி 9 அடியில் விஸ்வரூப பாபா சிலை செய்து இங்கு நிறுவப்பட்டுள்ளது. அதனால்தான் இந்த ஆலயத்துக்கும் விஸ்வரூப சீரடி சாய்பாபா மந்திர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை தோறும் இங்கு அன்னதானம் நடத்தப்படுகிறது. சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நூற்றுக் கணக்கானவர்கள் அன்று வந்து வழிபடுகிறார்கள். நிறைய பேரின் வாழ்வில் இந்த ஆலயத்தின் பாபா அற்புதங்கள் செய்து இருக்கிறார். தாங்கள் நினைத்ததை இந்த பாபா நிறைவேற்றி கொடுக்கிறார். அப்படி காரியம் நிறைவேறிய பிறகு பலர் பாபாவின் அற்புதத்தை சொல்கிறார்கள். அனைத்து மதத்தினரும் பாபாவை இங்கு வழிபட்டு செல்வது சிறப்பான ஒன்றாகும்.
பாபாவை குருவாகவோ, தந்தையாகவோ, மகானாகவோ நினைத்து சரணடைந்தால் போதும். அவர் நிச்சயம் நம் வாழ்வில் அதிசயம் செய்வார். இந்த ஆலயத்தை நாங்கள் கட்டவில்லை. அவராகவே கட்டிக் கொண்டார் என்பதுதான் உண்மை.
இவ்வாறு படஅதிபர் ஏ.எம்.ரத்னம் கூறினார்.
இந்த ஆலயத்தின் பொறுப்பாளராக பாலகிருஷ்ணன் இருக்கிறார். அவர் சாய்பாபாவின் மிக தீவிரமான பக்தராக திகழ்கிறார். அவர் கூறுகையில், “என் வாழ்வில் எத்தனையோ அற்புதங்களை பாபா நிகழ்த்தி இருக்கிறார். ஒரு தடவை நான் மரத்தில் இருந்து விழுந்து விட்டேன். நான் எழுந்து நடக்கவே 5 வருடங்கள் ஆகும் என்றார்கள். நான் இந்த பாபாவைதான் கண்ணீர் மல்க அழைத்தேன். 15 நாளிலேயே எழுந்து விட்டேன்.இரவு 7 மணிக்கு இங்கு வந்து பாருங்கள். அவரையே உற்று பாருங்கள். அவர் உங்களோடு பேசுவார். அந்த அற்புதத்தை நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரும் உணர முடியும்” என்றார்.
வளசரவாக்கம் விஸ்வரூப சீரடி சாய்பாபா ஆலயத்தின் வழிபாடுகள் தொடர்பான தகவல்களை பாலகிருஷ்ணனிடம் 97102 82877 மற்றும் 044 24868127 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.