என் மலர்
முக்கிய விரதங்கள்
சாவித்திரி என்ற பெண் உயிர் இழந்த தன் கணவன் சத்யவானை இடைவிடாத நோன்பு மற்றும் இறை வேண்டலால் காப்பாற்றினாள். அதை நினைவுபடுத்தும் வகையிலும் வட் பூர்ணிமா திருவிழா கொண்டாடப்படுகிறது.
வட இந்திய பெண்கள் ஆண்டு தோறும் ‘வட் பூர்ணிமா’ திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். வட் பூர்ணிமா என்றால் ‘முழு நிலவு’ என்று பொருள். இந்த ‘முழு நிலவு நாள்’ அன்று பெண்கள் தங்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், அவர் நல்ல உடல் நலத்துடன் வாழவும் இறைவனை வழிபடுகின்றனர்.
இந்த நாளே வட் பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. சாவித்திரி என்ற பெண் உயிர் இழந்த தன் கணவன் சத்யவானை இடைவிடாத நோன்பு மற்றும் இறை வேண்டலால் காப்பாற்றினாள். அதை நினைவுபடுத்தும் வகையிலும் வட் பூர்ணிமா திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்த திருவிழா மராட்டியம், குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மராட்டிய மாநிலம் முழுவதும் வட் பூர்ணிமா எனப்படும் முழுநிலவு திருவிழா வெகு உற்சாகமாக கொண்டாடபட்டது.

திருவிழாவை முன்னிட்டு திருமணம் முடிந்த பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் அதிகரிக்க நேற்று உணவு ஏதும் உண்ணாமல் நோன்பு இருந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் தங்களை மணப்பெண்கள் போல அலங்கரித்து கொண்டு கோவிலுக்கு சென்று இறைவனை வேண்டினர்.
பின்னர் அவர்கள் குழுவாக ஆலமரத்தில் நூலை சுற்றினர். மேலும் ஒருவருக்கொருவர் குங்கும திலகமிட்டு கொண்டனர். இவ்வாறு பெண்கள் நோன்பு இருந்து ஆலமரத்தில் நூல் சுற்றினால் அவர்களின் கணவன் நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ்வார் என்பது ஐதீகம்.
மும்பையை பொருத்தமட்டில் தாராவி, தாதர், அந்தேரி, பாந்திரா, கொலாபா ஆகிய அனைத்து பகுதிகளிலும் வட் பூர்ணிமா திருவிழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதுபோன்று தானே, நவிமும்பை, வாஷி பகுதிகளிலும் முழுநிலவு திருவிழாவை திருமணமான பெண்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

உணவு கட்டுப்பாடு ஒழுக்கத்துடன், சிவ விரதங்களாக கையாளப்படும் நமது விரதங்கள் ஒன்பது ஆகும். அந்த விரதங்கள் என்னவென்று பார்க்கலாம்.
சைவ சமய விரதங்கள் மனம் ஐம்பொறிகளின் தன்மைக்கு ஆட்பட்டு அலைபாயாது, பொய்யான ஆகைகளுக்கு ஆட்படாமல் மெய்ஞான வழியில் தங்களது நினைவை செலுத்த, நெறி பிறழாத நினைவால் இறைவனை ஒரு நிலைப்படுத்திய வழக்காக சில நியமங்களைக் கைக்கொள்ள வேண்டியுள்ளது.
முதலாவது மனக்கட்டுப்பாட்டுடன் உணவுக் காட்டுப்பாட்டினையும் கடைப்பிடித்திட வேண்டும். உணவின் தன்மைக்கேற்ற நமது சிந்தனைகள் மென்மை, கடினம் என்ற நிலையைப் பாதிப்பதால் நமது முன்னோர்கள் விரதங்களை கடைப்பிடித்தனர் – உணவு கட்டுப்பாடு ஒழுக்கத்துடன், சிவவிரதங்களாக கையாளப்படும் நமது விரதங்கள் ஒன்பது ஆகும். அவையாவின,
சோமவாரவிரதம்,
திருவாதிரை விரதம்,
உமா மகேஸ்வரி விரதம்,
சிவசாத்திரி விரதம்,
கேதார விரதம்,
கல்யாண சுந்தர விரதம்,
சூல விரதம்,
இடப விரதம்,
பிரதோஷ விரதம்,
கந்த சஷ்டி விரதம் ஆகும்.

ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினம் என்பதால் வைகாசி விசாகம், விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகிறது. இன்று எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
7-6-2017 விசாகத் திருநாள்
இருபத்தேழு நட்சத்திரங்களில் விசாகமும் ஒன்று. சூரபதுமன் முதலான அசுரர்களின் துன்பங்களைத் தாங்க முடியாத தேவர்கள், சிவபெருமானிடம் சென்று, தங்களது குறைகளைக் கூறி முறையிட்டனர். கருணையின் கடலாகிய சிவபெருமான், அசுரர்களின் கொடுமையில் இருந்து தேவர்களைக் காப்பாற்ற விரும்பினார். இதனால் தனது நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். அந்த ஆறு தீப்பொறிகளையும், வாயு மற்றும் அக்னி தேவர்கள் கங்கையில் கொண்டுபோய் விட்டனர்.
கங்கை அந்த ஆறு தீப்பொறிகளையும், சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்த்தது. சரவணப் பூந்தடாகத்திலே தாமரை மலரில் ஆறு தீப்பொறிகளும், ஆறு குழந்தைகளாக மாறின. விஷ்ணுமூர்த்தி கார்த்திகை முதலிய கன்னியர்கள் மூலமாக, அந்தக் குழந்தைகளுக்கு பாலூட்டுவித்தார். ஆறு பொறிகளும் திருக்குழந்தைகளான தினம் வைகாசிமாதத்து விசாகநாள் ஆகும்.
ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினம் என்பதால் வைகாசி விசாகம், விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதே வைகாசி விசாக நட்சத்திரத்தில் பல ஞானிகள் பிறந்திருக்கிறார்கள். சித்தார்த்தன் என்னும் இயற்பெயர் கொண்ட புத்தர் பிறந்தது இந்த தினத்தில் தான். அதே போல் அவர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றதும், ஜோதி நிலையை அடைந்ததும் கூட இந்த வைகாசி விசாக நாளில்தான் என்பது சிறப்புக்குரியதாகும்.
இந்த நாளில் அனைத்து முருகன் கோவில்களிலும் விழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். முருகனின் அறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் பல்வேறு காவடி எடுத்தும், அலகு குத்தியும் இறைவனை வழிபடுவார்கள்.

விரதம் இருப்பது எப்படி?
விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.
வைகாசி விசாகம் தான் எமதர்மன் அவதரித்த நாளாகும். இந்நாளில் எமனுக்கு தனிபூஜை செய்வது உண்டு. எம பூஜை செய்வதால் நோய்களை நீக்கி நீண்ட ஆயுளை அவர் வழங்குவதாக ஐதீகம்.
வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.
வைகாசி விரதம் இருப்பவர்கள் அதிகாலை 4.30 மணியளவில் இருந்து 6 மணிக்குள் எழுந்து குளிக்க வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு உட்கொள்ளலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’, ‘நம ஓம் முருகா’ என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம்.
முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது. முருகன்கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி கிரி வலம் வந்தால் விசேஷம். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப்பெறும்.

செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும்.
முருகப் பெருமானுக்கு உகந்த விரதங்கள் என்று மூன்று விரதங்கள் பிரதானமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அவை வார விரதம்; நட்சத்திர விரதம்; திதி விரதம்.
கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகப் பெருமான். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமியினால் தீராத பிரச்சனைகள் உள்ளவர்களும் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும்.
விரதம் இருக்கும் முறை: செவ்வாய்க்கிழமைதோறும் காலையில் நீராடி முடித்து, அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். பிறகு வீட்டுக்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ளவேண்டும்.
கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம். மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்தால், செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கிவிடும் என்பது உறுதி.

சிவன் - பார்வதியைப் போல கணவனும் மனைவியும் ஓருயிர், ஈருடலுமாக வாழும் வரம் வேண்டும் பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம்.
சிவன் - பார்வதியைப் போல கணவனும் மனைவியும் ஓருயிர், ஈருடலுமாக வாழும் வரம் பெறவே இவ்விரத்தினை விரும்பி அனுஷ்டிக்கின்றனர் பெண்கள்.
ஆதர்ச தம்பதிகளாக ஆயுள் முழுவதும் ஒன்றாக வாழும் பேற்றை தரும் வல்லமை இந்த விரதத்துக்கு உண்டு. குடும்பத்தில் பிரச்சனையுள்ளவர்கள் இவ்விரதத்தினனை அனுஷ்டிப்பதன் மூலம் குடும்ப ஒற்றுமையையும் சுபீட்சமான வாழ்கையையும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
இவ்விரதத்தை ஆண், பெண் இருபாலாரும் அனுஷ்டிக்கின்றனர். மணமாகிய பெண்கள், தங்கள் மாங்கல்யம் நீடிக்கவும், மணமாகாத பெண்கள் நல்ல வாழ்கை அமைய வேண்டியும் இந்த விரதத்தினை அனுஷ்டிக்கின்றனர். இதே காரணத்துக்காக ஆண்களும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம்.

கேதார கௌரி விரதத்தை ஐந்து மாதங்களுக்குள் கர்ப்பிணியாக இருக்கும் பெண்களும், மாதவிலக்கு நின்ற பெண்களும் 21 நாட்கள் விரதமிருந்து பூஜிக்கலாம். மற்றவர்கள், அமாவாசைத் திதிக்கு முன்னுள்ள 9 நாட்களோ 7 நாட்களோ மூன்று நாட்களோ அல்லது கேதார கௌரி தினத்தன்றோ இவ் விரதத்தை அனுஷ்டித்து 21 முடிச்சிட்ட கயிற்றை இடது புஜத்திலோ அல்லது மணிக்கட்டிலோ கட்டிக் கொள்ளலாம்.
கேதாரகௌரி தினத்தில் பார்வதி சமேதரான சிவபெருமானை வழிபட வேண்டும். ஆண்களும் இவ்விரத்தை அனுஷ்டிக்கலாம். விரத காலத்தில் தீய பேச்சுக்கள் எதையும் பேசாமல், "ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்" என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்கும் தம்பதிகளை விட, ஒற்றுமையில்லாமலோ அல்லது தம்பதியரில் ஒருவர் பிணியால் அவதிப்பட்டாலோ அவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டு ஒற்றுமையையும், சகல சௌபாக்யங்களையும் பெறலாம். இது இந்த விரதம் இருந்து அனுபவப்பூர்வமாக உணர்ந்த பலரும் கூறும் கூற்றாகும்.

‘ஆயிரத்தம்மன்’ கோவிலில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருநெல்வேலி பாளையங்கோட்டை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஆயிரத்தம்மன் ஆலயம். ஆயிரம் கண் உடையவள் என்பதால் இந்த அம்மன் ‘ஆயிரத்தம்மன்’ என்று அழைக்கப்படுகிறாள்.
இந்தக் கோவிலில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு கால நேரத்தில், இத்தலத்து அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.
தீராத நோய் உள்ளவர்கள் விரதமிருந்து ராகு காலத்தில் மாதுளை பழத்தோலில் நெய் விளக்கு ஏற்றி 41 நாட்கள் வழிபட்டால், நோய் தீர்ந்து விடுவதாக நம்பிக்கை உள்ளது. அதேபோன்று இந்த அம்மனை மனதார வேண்டினால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் தனிச்சிறப்பாகும்.
திருமணம் ஆகாத பெண்கள், படித்து வேலையில்லாமல் திண்டாடுவோர், பல்வேறு குடும்ப பிரச்சினைகளில் சிக்கி தவிப்பவர்கள் அனைவருடைய பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் தெய்வநாயகியாக திகழ்ந்து நிற்பவள் பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன்.

ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று கருடனுக்கு விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். தொடர்ந்து விரதம் இருந்து வந்தால் நாக தோஷம் நீங்கும்.
மகா விஷ்ணுவின் வாகனங்களில் பெரிய திருவடி என்று அழைக்கப்படுபவர் கருடன். விஷ்ணு தலங்கள் மூலவருக்கு எதிரில் தனிச் சன்னிதியில் வீற்றிருப்பார். பெருமாள் கருடனை வாகனமாக ஏற்ற போது, ‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் இருப்பாய்’ என்று வரமளித்தார். பெருமாள் கோவில்களில் நடைபெறும் பிரமோற்சவத்தின் போதும், கருட சேவையின் போதும் பெருமாள் கருடன் மீது அமர்ந்துதான் திருவீதி உலா வருவார்.
கருடாழ்வார் மீது அமர்ந்தபடி பெருமாள் வீதி உலா வருவதில் ஒரு தத்துவம் அடங்கியிருக்கிறது. ‘கோவிலுக்கு வர இயலாத பக்தர்களுக்கு, அவர்கள் இல்லம் நாடி அருள்புரிய இறைவன் வருகிறான்’ என்பது தான் அந்த தத்துவம்.
கருட தரிசனம், சுப தரிசனமாகும். கருடன் மங்கள வடிவானவன். வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. கோவில்களில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும் போது கோவிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம்.
கருடாழ்வார் ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார்.
பெருமாள் கோவில்களில் மூலவருக்கு முன்பாக நேராக எழுந்தருளி இருக்கும் இவரையே பக்தர்கள் முதலில் வணங்க வேண்டும். பக்தர்களுக்கு சிறிய துன்பம் ஏற்பட்டாலும் துயர் துடைத்து இன்பம் அருளி உரிய நேரத்தில் காப்பவர் இவர்.
கருட தரிசனம் பகை பிணி போக்கும். நிறை செல்வத்தை நல்கும்.

விரதம் இருப்பது எப்படி?
கருடன் பஞ்சமியில் பிறந்ததாலும், ஆவணி மாதம் வளர்பிறையில் பஞ்சமி அன்று அமிர்தத்தைக் கொண்டு வந்ததாலும் இது கருட பஞ்சமி என்றானது.
சுமங்கலி பெண்கள் ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். காலையில் எழுந்து குளித்து விட்டு தூய்மையான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். வீட்டில் தூய்மையான இடத்தில் பூக்களால் அலங்கரித்து ஐந்து நிறங்கள் கொண்ட கோலங்கள் போட வேண்டும்.
நடுவில் ஒரு பலகை போட்டு அதன் மேல் வாழை இலையை விரித்து பச்சரிசியை கொட்டி அதன் மேல் நமது சக்திக்கு ஏற்றப்படி வெள்ளி, தாமிரம் அல்லது மண் இவற்றில் ஏதாவது ஒன்றால் செய்யப்பட்ட பாம்பின் உருவம் செய்து அரிசியின் மேல் வைக்க வேண்டும். பாம்பின் படத்தில் நடுவில் மஞ்சளால் செய்யப்பட்ட கவுரிதேவியின் வடிவத்தை வைத்து அலங்காரங்கள் செய்து பூஜை செய்ய வேண்டும். பத்து முடியுள்ள நோன்பு கயிற்றை கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, பெண்கள் 10 ஆண்டுகள் தொடர்ந்து விரதம் இருந்து வந்தால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர். கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறி, சகல விதமான செல்வங்களையும் அடைவர். இந்த பூஜை செய்வதால் நாக தோஷம் நீங்கும். நினைத்த காரியம் வெற்றி பெறும்.

இந்து மதத்தில் மிகவும் முக்கியமானது விரதம். அந்த வகையில் தினமும் கடைபிடிக்கும் விரதத்தையும் அதனால் கிடைக்கும் பலன்களையும் பார்க்கலாம்.
* ஞாயிற்றுக்கிழமை - சூரிய பகவானுக்குரிய நாள். சூரிய நமஸ்காரம் செய்யலாம். ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் செய்யலாம். இதைச் சொன்னால் சூரிய நமஸ்காரம் செய்த பலன் உண்டு.
* திங்கட்கிழமை விரதம் சிவபெருமானுக்குரிய விரதம். இதை சோமவார விரதம் என்பார்கள். கார்த்திகை மாத சோமவாரம் சிறப்பான விரதமாகும்.
* செவ்வாயக்கிழமை விரதம் அங்காரக விரதம். செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு இந்த விரதம் நல்ல பலனைத் தரும்.
* புதன்கிழமை விரதம் அனுஷ்டித்தால் கல்வி, புகழ், ஞானம், தனம் பெருகும். விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம்.
* வியாழக்கிழமை குரு பகவானுக்குரிய நாள். இந்நாளில் விரதமிருந்தால் குருவின் அருளால் திருமணம் கைகூடும். நல்ல குழந்தைகள் பிறக்கும். சகல காரியங்களும் கைகூடும்.
* வெள்ளிக்கிழமை விரதம் சுக்ரவார விரதம். அம்பாளை பூஜை செய்து பாயசம், வடை நைவேத்யம் பண்ணலாம்.
* சனிக்கிழமை விரதம் - சனீஸ்வர பகவானைக் குறித்து இருப்பது என்றாலும் திருப்பதி வேங்கடா சலபதிக்கு உகந்த நாள். தினமும் காக்கைக்கு அன்னமிட்ட வேண்டும். கேது தசை நடப்பவர்கள் சனிக்கிழமை விரதமிருப்பது அவசியம்.
- இது எல்லாவற்றையும் விட ஒரு முக்கிய விரதம் இருக்கிறது. அதுதான் மௌன விரதம்.

பெண்கள் 10 ஆண்டுகள் தொடர்ந்து இந்த விரதம் இருந்து வந்தால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர். நாக தோஷம் நீங்கும். நினைத்த காரியம் வெற்றி பெறும்.
மகா விஷ்ணுவின் வாகனங்களில் பெரிய திருவடி என்று அழைக்கப்படுபவர் கருடன். விஷ்ணு தலங்கள் மூலவருக்கு எதிரில் தனிச் சன்னிதியில் வீற்றிருப்பார்.
கருட தரிசனம், சுப தரிசனமாகும். கருடன் மங்கள வடிவானவன். வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. கருடாழ்வார் ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார். கருட தரிசனம் பகை பிணி போக்கும். நிறை செல்வத்தை நல்கும்.
விரதம் இருப்பது எப்படி?
கருடன் பஞ்சமியில் பிறந்ததாலும், ஆவணி மாதம் வளர்பிறையில் பஞ்சமி அன்று அமிர்தத்தைக் கொண்டு வந்ததாலும் இது கருட பஞ்சமி என்றானது.

சுமங்கலி பெண்கள் ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். காலையில் எழுந்து குளித்து விட்டு தூய்மையான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். வீட்டில் தூய்மையான இடத்தில் பூக்களால் அலங்கரித்து ஐந்து நிறங்கள் கொண்ட கோலங்கள் போட வேண்டும்.
நடுவில் ஒரு பலகை போட்டு அதன் மேல் வாழை இலையை விரித்து பச்சரிசியை கொட்டி அதன் மேல் நமது சக்திக்கு ஏற்றப்படி வெள்ளி, தாமிரம் அல்லது மண் இவற்றில் ஏதாவது ஒன்றால் செய்யப்பட்ட பாம்பின் உருவம் செய்து அரிசியின் மேல் வைக்க வேண்டும். பாம்பின் படத்தில் நடுவில் மஞ்சளால் செய்யப்பட்ட கவுரிதேவியின் வடிவத்தை வைத்து அலங்காரங்கள் செய்து பூஜை செய்ய வேண்டும். பத்து முடியுள்ள நோன்பு கயிற்றை கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, பெண்கள் 10 ஆண்டுகள் தொடர்ந்து விரதம் இருந்து வந்தால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர். கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறி, சகல விதமான செல்வங்களையும் அடைவர். இந்த பூஜை செய்வதால் நாக தோஷம் நீங்கும். நினைத்த காரியம் வெற்றி பெறும்.
கருட தரிசனம், சுப தரிசனமாகும். கருடன் மங்கள வடிவானவன். வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. கருடாழ்வார் ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார். கருட தரிசனம் பகை பிணி போக்கும். நிறை செல்வத்தை நல்கும்.
விரதம் இருப்பது எப்படி?
கருடன் பஞ்சமியில் பிறந்ததாலும், ஆவணி மாதம் வளர்பிறையில் பஞ்சமி அன்று அமிர்தத்தைக் கொண்டு வந்ததாலும் இது கருட பஞ்சமி என்றானது.

சுமங்கலி பெண்கள் ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். காலையில் எழுந்து குளித்து விட்டு தூய்மையான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். வீட்டில் தூய்மையான இடத்தில் பூக்களால் அலங்கரித்து ஐந்து நிறங்கள் கொண்ட கோலங்கள் போட வேண்டும்.
நடுவில் ஒரு பலகை போட்டு அதன் மேல் வாழை இலையை விரித்து பச்சரிசியை கொட்டி அதன் மேல் நமது சக்திக்கு ஏற்றப்படி வெள்ளி, தாமிரம் அல்லது மண் இவற்றில் ஏதாவது ஒன்றால் செய்யப்பட்ட பாம்பின் உருவம் செய்து அரிசியின் மேல் வைக்க வேண்டும். பாம்பின் படத்தில் நடுவில் மஞ்சளால் செய்யப்பட்ட கவுரிதேவியின் வடிவத்தை வைத்து அலங்காரங்கள் செய்து பூஜை செய்ய வேண்டும். பத்து முடியுள்ள நோன்பு கயிற்றை கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, பெண்கள் 10 ஆண்டுகள் தொடர்ந்து விரதம் இருந்து வந்தால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர். கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறி, சகல விதமான செல்வங்களையும் அடைவர். இந்த பூஜை செய்வதால் நாக தோஷம் நீங்கும். நினைத்த காரியம் வெற்றி பெறும்.
ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் இந்த ஏகாதசி பாபாங்குசா ஏகாதசி எனப்படும். பாவங்களை நீக்கும் அங்குசமாக இந்த ஏகாதசி இருப்பதால் பாபாங்குசா ஏகாதசி எனப்பட்டது.
ஒவ்வொருவருமே ஏராளமான வேதனைகளையும் சோதனைகளையும் அனுபவித்து வருகிறோம் கண்ணுக்குத் தெரியாமல் நம்மைப்படுத்தும் துயரம் வேதனை எனப்படும். கண்ணுக்குத் தெரிந்தே நம்மைத் துயரங்களில் ஆழ்த்துபவை சோதனை எனப்படும். வேதனைகளையும், சோதனைகளையும் ஒட்டுமொத்தமாக நீக்கும் ஏகாதசி இது.
அதுமட்டுமில்லாமல் கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்கள், யாகங்கள், தானங்கள் முதலியவற்றால் உண்டாகும் பலன்களையும் இந்த ஏகாதசியே கொடுக்கும். விதிமுறை தெரியாமலோ அல்லது பெருமைக்காகவோ இந்த விரதம் இருந்தாலும், மேற்சொன்ன பலன்கள் எல்லாம் தரக்கூடியது இந்த ஏகாதசி.
ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் இந்த ஏகாதசி பாபாங்குசா ஏகாதசி எனப்படும். பாவங்களை நீக்கும் அங்குசமாக இது இருப்பதால் பாபாங்குசா எனப்பட்டது.

நல்லவற்றை மட்டும் செய்து, தீய செயல்களை ஒடுக்க வேண்டுமானால், பட்டினி கிடக்க வேண்டும் அல்லது உணவைக் குறைக்க வேண்டும். இதற்காகவே விரதங்கள் ஏற்படுத்தப்பட்டன.
நமது உடலுறுப்புக்கள் பலவித செயல்களைச் செய்கின்றன. அவற்றில் நல்லதும், கெட்டதும் அடக்கம். இந்த செய்கைகள் மனதின் தூண்டுதலால் வெளிப்படுகிறது. நல்லவற்றை மட்டும் செய்து, தீய செயல்களை ஒடுக்க வேண்டுமானால், பட்டினி கிடக்க வேண்டும் அல்லது உணவைக் குறைக்க வேண்டும். இதற்காகவே விரதங்கள் ஏற்படுத்தப்பட்டன.
சோமவார விரதம்:
நாள் : கார்த்திகை மாத திங்கள்கிழமைகள்
தெய்வம் : சிவபெருமான்
விரதமுறை : இரவு மட்டும் சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம்.
பலன் : திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணை, திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை
சிறப்பு தகவல் : கணவன், மனைவி இருவரும் இணைந்து சிவாலயம் சென்று வருவது மிகவும் நல்லது.
பிரதோஷம்:
நாள் : தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகள்.
தெய்வம் : சிவபெருமான், நந்திதேவர்
விரதமுறை : சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும். பகலில் சாப்பிடக்கூடாது. மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று வணங்கி, பிரதோஷ காலம் கழிந்தபிறகு சிவனடியார்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும்.
பலன் : கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை ஆகியவற்றிலிருந்து விடுதலை, பாவங்கள் நீங்குதல்.
சிறப்பு தகவல் : பிரதோஷ நேரத்தில் சாப்பிடுதல், தூங்குதல், குளித்தல், எண்ணெய் தேய்த்தல், விஷ்ணு தரிசனம் செய்தல், பயணம் புறப்படுதல், மந்திர ஜபம் செய்தல், படித்தல் ஆகியவை கூடாது.
சித்ரா பவுர்ணமி விரதம்:
நாள் : சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம்
தெய்வம் : சித்திரகுப்தர்
விரதமுறை : இந்நாளில் இரவில் மட்டும் சாப்பிட வேண்டும். காலையில் பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
பலன் : மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை எய்துவர்.
தை அமாவாசை விரதம்:
நாள் : தை அமாவாசை
தெய்வம் : சிவபெருமான்
விரதமுறை : காலையில் சாப்பிடாமல் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
பலன் : முன்னோர்களுக்கு முக்தி, குடும்ப அபிவிருத்தி
சிறப்பு தகவல் : பிற அமாவாசைகளில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், இன்று அவசியம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

கந்தசஷ்டி விரதம்:
நாள் : ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள்
தெய்வம் : சுப்பிரமணியர்
விரதமுறை : முதல் 5 நாட்கள் ஒருபொழுது சாப்பாடு. கடைசிநாள் முழுமையாக பட்டினி, சூரசம்ஹாரம் முடிந்தபிறகு வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட்ட பின், மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஏதாவது ஒன்று அருந்துதல்.
பலன் : குழந்தைப்பேறு
தைப்பூச விரதம்:
நாள் : தை மாத பூச நட்சத்திரம்
தெய்வம் : சிவபெருமான்
விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.
பலன் : திருமண யோகம்
சிவராத்திரி விரதம்:
நாள் : மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி
தெய்வம் : சிவன்
விரதமுறை : மூன்று வேளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தண்ணீர் அல்லது பால் குடிப்பது மத்திமம். முடியாதவர்கள் பழம் சாப்பிடலாம். உடல் நிலை சரியில்லாதவர்கள் மட்டும் இட்லி முதலான சாத்வீக உணவு வகைகளை சாப்பிடலாம். இரவில் சிவாலயத்தில் தங்கி நான்கு ஜாம பூஜையிலும் பங்கேற்க வேண்டும்.
பலன் : நிம்மதியான இறுதிக்காலம்
கேதார விரதம்:
நாள் : புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அல்லது தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் அல்லது தேய்பிறை அஷ்டமி முதல் சதுர்த்தசி வரையான 7நாட்கள். இதுவும் முடியாதவர்கள் தேய்பிறை சதுர்த்தசி நாள் மட்டும்.
தெய்வம் : கேதாரநாதர்
விரதமுறை : ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். முதல் 20 நாள் ஒருபொழுது உணவு, கடைசிநாள் முழுவதும் உபவாசம் உடல்நிலை சரியில்லாதவர்கள் உப்பில்லாத உணவு சாப்பிடலாம்.
பலன் : தம்பதிகள் நீண்டநாள் வாழ்வர்
முருகன் சுக்ரவார விரதம்:
நாள் : ஐப்பசி மாதம் முதல் வெள்ளி துவங்கி மூன்று ஆண்டுகள் வரை அனுஷ்டிக்க வேண்டும்.
தெய்வம் : சுப்ரமணியர்
விரதமுறை : பகலில் ஒருபொழுது உணவு, இரவில் பழம் மட்டும் சாப்பிட வேண்டும்.
பலன் : துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் மனம் கிடைக்கும்.
கிருத்திகை விரதம்:
நாள் : கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்திலும் அனுஷ்டிப்பது. தொடர்ந்து 12 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும்.
தெய்வம் : சுப்பிரமணியர்
விரதமுறை : பகலில் பட்டினி கிடந்து இரவில் பழம், இட்லி சாப்பிடலாம்
பலன் : 16 செல்வமும் கிடைத்தல்

தன்னை வியாழக்கிழமைகளில் விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு, உயர் பதவி, புத்திரப்பேறு, நிறைவான செல்வம், திருமணம் போன்றவற்றை அருள்பவர் குரு பகவான்.
மனிதர்களை நல்வழிக்கு கொண்டு செல்வதில் குரு பகவானுக்கு நிகர் யாரும் இல்லை. இதைத் தான் ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்கிறார்கள். பிரம்ம தேவரின் மானச புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதா என்பவருக்கும் பிறந்த பிள்ளைகளில் ஒருவர் குரு பகவான். இவர் அறிவில் சிறந்தவர். தேவர்களின் குருவாக திகழ்பவர். அவரது நுண்ணறிவின் காரணமாக ‘பிரகஸ்பதி’ என்று அழைக்கப்பட்டார். பிரகஸ்பதி என்ற சொல்லுக்கு ‘ஞானத் தலைவன்’ என்று பொருள். இவருக்கு மந்திரி, அமைச்சர், ஆசான், குரு, வியாழன் என பல பெயர்கள் உண்டு.
பிரகஸ்பதி, காசியில் பல காலம் சிவபெருமானை வேண்டி கடுமையான தவத்தை மேற்கொண்டார். இதன்காரணமாகவே அவர், தேவர்களுக்கு குருவாக விளங்கும் பதவியும், கிரக பதத்தில் வீற்றிருக்கும் பேறும் பெற்றார். இவருக்கு எம கண்டன், கசன் என்ற இரண்டு புதல்வர்கள் உண்டு. நவக்கிரகங்களில் பிரதானமான இவர் சுபக்கிரகர் ஆவார். மூன்று குணங்களில், சாத்வீக குணத்தைக் கொண்டவர். மஞ்சள் நிறம் உடையவர். அதனால் இவரை ‘பொன்னன்’ என்றும், ‘வியாழன்’ என்றும் கூறுவார்கள். தயாள சிந்தனை கொண்டவர்.
குரு பகவானின் 5, 7-ம் பார்வை சகல நன்மைகளையும் தரும். ஒருவரின் திருமண யோகத்திற்கு குரு பலம் மிகவும் அவசியம். தன்னை வழிபடுபவர்களுக்கு உயர்வான பதவியையும், மன மகிழ்ச்சி, புத்திரப்பேறு, செல்வம், சுகம் ஆகியவற்றையும் கொடுப்பவர். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவானின் அருள் பூரணமாக இருந்தால், அவருக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கும். கடல் கடந்து சென்று செல்வம் தேடி செல்வந்தர் ஆகும் சூழ்நிலையும் ஏற்படும்.
வியாழ பகவான் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருவார். கமண்டலம், அட்சமாலை, யோக தண்டத்தை தாங்கி, அபய முத்திரையுடன் அருள்புரிவார். இவருக்கு பிடித்த உலோகம் தங்கம். ஜாதக ரீதியான பல்வேறு தோஷ அமைப்புகளை ஏற்படுத்தும் கிரகங்கள், ராசிகள், கிரகக்கூட்டணிகள், அசுப ஸ்தானங்கள் ஆகியவற்றை தமது பார்வை பலத்தால் நன்மை செய்துவிடுவார்.
யானையை வாகனமாக கொண்ட இவருக்கு, பிடித்த உணவு கொண்டைக் கடலை தானியம். இதனால்தான் வியாழ பகவானுக்கு கொண்டைக் கடலை மாலை சூட்டி வழிபாடு செய்கிறார்கள். நவ ரத்தினங்களில் புஷ்பராகத்தை அணிந்திருப்பவர். அரசமரம் இவருக்கு பிடித்தமான மரம். இனிப்பு சுவை பிடிக்கும். நான்கு சக்கரங்கள் கொண்ட ரதத்தில் நாற்கோண பீடத்தில் எழுந்தருளி இருப்பார். ரதத்தின் ஓரத்தில் வில்லும், மீனும் அடையாளமாக இருக்கும். தனுசு ராசிக்கும், மீன ராசிக்கும் இவர் அதிபதி என்பதை எடுத்துக் காட்டும் அடையாளம் அவை.
நீதி சாஸ்திரங்களை அறிந்த குரு பகவான் ஒருவருக்கு எந்த அளவு அதிர்ஷ்டத்தை வழங்கலாம் என்பதை நிர்ணயம் செய்வார்.
அரசியல் தலைவர்கள், அமைப்பு ரீதியான தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், ஆன்மிகம் சார்ந்த அமைப்புகளை வழிநடத்தும் துறவிகள் ஆகிய பல்வேறு விஷயங்களை குரு பகவான் தமது நிலைக்கேற்ப வெளிப்படுத்துகிறார்.

வியாழக்கிழமை விரதம் :
ஆங்கில தேதிகளான 3, 12, 21, 30 ஆகியவற்றிலும், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களிலும் தனுசு, மீன ராசிகளிலும் வியாழக்கிழமைகளில் பிறந்தவர்கள் குருவின் குரு அம்சத்தை பிறவியிலேயே பெற்றவர்கள் ஆவார்கள். ‘வியாழக்கிழமை விரதம்’ எனப்படும் குரு வார வழிபாட்டை கடைப்பிடிப்பதால் குரு பகவானின் சக்தியால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றிபெறுவார்கள்.
குருவின் பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். குரு பார்வை சரி இல்லாதவர்கள் அவருக்கு சாந்தியும், பூஜையும் செய்வது நல்லது. வியாழக்கிழமை விரதம் இருக்க வேண்டும். குரு ஒரு ராசியில் ஓர் ஆண்டு தங்கி தன் கடமையை செய்கிறார். ராசி சக்கரத்தை கடக்க பன்னிரண்டு ஆண்டுகளாகின்றன.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு பகவான் மகம் நட்சத்திரத்திலே சஞ்சரிக்கும் போதுதான் ‘மகா மகம்’ நடைபெறுகிறது. இதையே ‘மாமாங்கம்’ என்று சொல்வார்கள்.
ஜாதகத்தில் குரு கெட்டிருந்தாலோ, குரூரமானவராக இருந்தாலோ, வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து, குரு பகவானை பூஜிக்க வேண்டியது அவசியம். அப்படிச் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவருக்கு குரு திசையே ஆரம்பமாக நடக்கும். மேஷம், கடகம், விருச்சிகம் ஆகிய லக்னத்தாருக்கு குரு சுப ஸ்தானங் களில் வலுப்பெற்றிருந்து தசை நடைமுறைக்கு வருமானால் யோகமான பலன்களை அளிப்பார்.
குரு தசை நடைமுறை முறையில் இருக்கும் காலங்களில் அதனால் கெடுபலன்கள் நடக்காமல் இருக்க அதிதேவதையான தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை தோறும் வழிபட்டு அர்ச்சனை செய்து வரவேண்டும்.
மஞ்சள் நிற உடைகளை அணிவதாலும், புஷ்பராக மணியை தரிப்பதாலும், மஞ்சள் நிற வஸ்திர தானம் செய்வதாலும், கொண்டைக்கடலை தானியத்தை தானம் கொடுப்பதாலும், குருவார விரதம் இருப்பதாலும் குருதோஷம் நிவர்த்தியாகும்.

குருவார விரத வழிபாட்டை வளர்பிறை வியாழக்கிழமையில் தொடங்கி செய்வது சிறப்பானது. சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு மஞ்சள் நிற ஆடை அணிந்து, நெற்றியில் சந்தனம் பூசி வடக்கு முகமாக அமர்ந்து பூஜையை தொடங்க வேண்டும்.
தட்சிணாமூர்த்தியின் திருஉருவப்படம் அல்லது தங்களது ஆன்மிக குருவின் படங்களை பூஜைக்குப் பயன்படுத்தலாம்.
ஒரு மஞ்சள் விரிப்பை விரித்து அதில் தெய்வ படங்களை மலர் தூவி அலங்கரித்து கிழக்கு நோக்கி வைத்து, ஆறு தீபங்களை அகல் விளக்காக ஏற்றி வைக்க வேண்டும். இனிப்பு கள், முல்லை மலர்கள், கொண்டைக் கடலை, சர்க்கரை பொங்கல், கற்கண்டு போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து தூப, தீப, கற்பூர ஆராதனைகள் செய்து குரு கீர்த்தனைகளை பாடி பிரார்த்தனை செய்தபடி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
அன்று ஒருவேளை மட்டும் உணவு உட்கொண்டு விரதம் இருக்க வேண்டும். அன்று முழுவதும் மவுன விரதம் இருப்பது நல்லது. இந்த விரதம் மூலம் குருவின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.
குரு பகவான் அருளைப்பெற தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் 8 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்து இருக்கும் திட்டை குரு பகவான் ஆலயம் சென்று வழிபடலாம். வசிஷ்ட முனிவர் ஆசிரமம் அமைத்து சிவனை பூஜித்ததால் வசிஷ்டேஸ்வரர் எனப்பெயர் பெற்றார். அம்பாள் நாமம் உலகநாயகி. குரு பகவானை வசிஷ்ட மகரிஷி ராஜ குருவாக வழிபட்டதால் இத்தலம் குரு பகவான் தலமாக உள்ளது. இங்கு வேண்டிக்கொள்ள குரு தோஷம் நீங்கும். கல்வி செல்வங்களில் சிறக்கலாம்.
குரு பகவானுக்கு திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் தனி சன்னிதி அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக கொண்டாடப்படும். இங்கு வந்து வணங்கி வழிபட்டு நலம் பெறலாம்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் குரு தலமாகும். அங்கு அவசியம் சென்று தரிசிக்க வேண்டும். கும்பகோணம் மகாமக பொற்றாமரைக் குளத்தின் வடக்கே சோமேஸ்வரர் கோவில் உள்ளது. குருபகவான் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்றாகும். இங்குள்ள காசிவிஸ்வநாதர், விசாலாட்சியை வணங்கி நலம்பெறலாம்.
தன்னை வழிபடுபவர்களுக்கு, உயர் பதவி, புத்திரப்பேறு, நிறைவான செல்வம் போன்றவற்றை அருள்பவர் குரு பகவான். அதோடு, கல்லீரல், காது, இடுப்புகளில் ஏற்படும் நோய்களுக்கு இவரை வேண்டினால் தீர்வு கிடைக்கும். வியாழக்கிழமை விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றி குருவிற்குரிய வஸ்திரம் சாத்தி, தானியம் வைத்து வழிபட்டால் நன்மைகள் நம்மை நாடி வரும்.