என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    வறுமையில் வாடுபவர்கள் சாகம்பரி சஹஸ்ரநாமத்தை விரதமிருந்து பாராயணம் செய்தால் உண்ண உடை, பருக நீர், உடுக்க உடை, இருக்க இடம் குறைவின்றிக் கிடைக்கும் என்பது ஐதீகம்.
    பராசக்தி பக்தர்களைக் காக்க பல்வேறு திருக்கோலங்களைத் தாங்கியருள்கிறாள். அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியின் திருக்கோலங்களில் சாகம்பரி தேவியின் திருவடிவமும் ஒன்று.

    சாகா என்றால் மாமிசமில்லாத உணவுப் பொருள் என்றுமொரு பொருள் உண்டு. காரி எனில் அதைக்கொண்டவள் எனவே சாகாரி எனும் பொருள்படும்படி மகாராஷ்ட்ராவில் இத்தேவியை விரதமிருந்து வணங்குகிறார்கள். புரட்டாசி மாத பௌர்ணமி தினத்தில் சிவனோடு கூடிய அம்பாள் ஆலயங்களில் நிறைமணி காட்சி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    உலக மக்களின் பஞ்சத்தைப் போக்கியருளிய தேவியின் கருணைக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் இனியும் உலகில் கடும்பஞ்சம் தோன்றக் கூடாது என வேண்டிக் கொண்டும் நிறை மணிக்காட்சி விழா நடத்தப்படுகிறது. எத்தனை உணவு பலகாரங்கள் உண்டோ, எத்தனை காய்கறி, கீரை வகைகள் உண்டோ அத்தனை பொருட்களாலும் ஆலயத்தில் தோரணப் பந்தல் உருவாக்கி மகிழ்வர்.



    சில ஆலயங்களில் அம்பாள், மற்றும் ஈசன் சந்நதியில் பந்தல் போல மரக்கட்டைகளைக் கட்டுவர். பின் கயிற்றில் காய்கறிகளையும் பழவகைகளையும் மாலை போல் தொடுத்து அலங்காரமாகத் தொங்கவிடுவர். அனைத்து விதமான காய்கறிகளையும் கீரைகளையும் பசுமைத் தோரணமாகக் காண்பதே கண்களுக்கு விருந்தாக இருக்கும்.

    நவராத்திரி கொலு பொம்மைகளைப் போல அம்பாளுக்கு முன்பு அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கும் காய்கனிகள் மனதைக் கவரும். இதைக் கண்டு களிக்கவே குழந்தைகளை அழைத்துக் கொண்டு கூட்டம் கூட்டமாய் பக்தர்கள் அன்று ஆலயத்திற்கு வருவார்கள். தங்கள் வசதிக்கேற்ப காய்கறிகளையும், உணவுப் பொருட்களையும் காணிக்கையாகத் தருவார்கள். அடுத்த நாள் அத்தனை உணவுப் பண்டங்களும் பிரசாதமாக அனைவருக்கும் பகிர்ந் தளிக்கப்படும்.

    சாகம்பரி தேவிக்கு கர்நாடகா, உத்திராஞ்சல், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம், மகாராஷ்ட்டிரா ஆகிய மாநிலங்களில் ஆலயங்கள் உள்ளன. வறுமையில் உழல்பவர்கள் சாகம்பரி சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்தால் உண்ண உடை, பருக நீர், உடுக்க உடை, இருக்க இடம் போன்றவை குறைவின்றிக் கிடைக்கும் என்பது ஐதீகம். வேண்டிய கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும் என்பதும் பலருடைய அனுபவபூர்வமான நம்பிக்கை.
    முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம் கிருத்திகை. மாதம் தோறும் வரும் கந்தனுக்கு உகந்த கார்த்திகை விரத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம்.
    முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம் கிருத்திகை. ஒவ்வொரு மாதத்திலும் வரும் கிருத்திகை நட்சத்திரமன்று முருகப்பெருமானை நினைத்து வழிபடுவார்கள். இன்று கார்த்திகை விரத நாள்.
     
    இன்றைய தினம் விரதம் மேற்கொள்வதால் முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். அன்றைய தினம் முருகன் கோவில்களில் விசேஷ ஆராதனைகள் நடைபெறும். அந்த தினத்தில் வீட்டிலும் முருகப் பெருமான் வள்ளி- தெய்வானையுடன் இருக்கும் படத்தை வைத்து மாங்கனி நைவேத்தியம் படைத்து, கந்த கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
     
    மேலும் கந்தனுக்கு பிடித்த கந்தரப்பம், பருப்பு பாயாசம், நைவேத்தியம் செய்து வழிபட்டால் 12 கரங்களை கொண்ட வேலன் வரங்களை அள்ளித் தருவான். ஆடி மாதம் வரும் கார்த்திகை மிகவும் விசேஷமானதாகும். இந்த நாளில் அன்னதானம் செய்வது நல்லது.
    ‘வியாழக்கிழமை விரதம்’ எனப்படும் குரு வார வழிபாட்டை கடைப்பிடிப்பதால் குரு பகவானின் சக்தியால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றிபெறுவார்கள்.
    ஆங்கில தேதிகளான 3, 12, 21, 30 ஆகியவற்றிலும், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களிலும் தனுசு, மீன ராசிகளிலும் வியாழக்கிழமைகளில் பிறந்தவர்கள் குருவின் குரு அம்சத்தை பிறவியிலேயே பெற்றவர்கள் ஆவார்கள். ‘வியாழக்கிழமை விரதம்’ எனப்படும் குரு வார வழிபாட்டை கடைப்பிடிப்பதால் குரு பகவானின் சக்தியால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றிபெறுவார்கள்.

    குருவின் பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். குரு பார்வை சரி இல்லாதவர்கள் அவருக்கு சாந்தியும், பூஜையும் செய்வது நல்லது. வியாழக்கிழமை விரதம் இருக்க வேண்டும். குரு ஒரு ராசியில் ஓர் ஆண்டு தங்கி தன் கடமையை செய்கிறார். ராசி சக்கரத்தை கடக்க பன்னிரண்டு ஆண்டுகளாகின்றன.

    பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு பகவான் மகம் நட்சத்திரத்திலே சஞ்சரிக்கும் போதுதான் ‘மகா மகம்’ நடைபெறுகிறது. இதையே ‘மாமாங்கம்’ என்று சொல்வார்கள். ஜாதகத்தில் குரு கெட்டிருந்தாலோ, குரூரமானவராக இருந்தாலோ, வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து, குரு பகவானை பூஜிக்க வேண்டியது அவசியம். அப்படிச் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.

    புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவருக்கு குரு திசையே ஆரம்பமாக நடக்கும். மே‌ஷம், கடகம், விருச்சிகம் ஆகிய லக்னத்தாருக்கு குரு சுப ஸ்தானங் களில் வலுப்பெற்றிருந்து தசை நடைமுறைக்கு வருமானால் யோகமான பலன்களை அளிப்பார்.



    குரு தசை நடைமுறை முறையில் இருக்கும் காலங்களில் அதனால் கெடுபலன்கள் நடக்காமல் இருக்க அதிதேவதையான தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை தோறும் வழிபட்டு அர்ச்சனை செய்து வரவேண்டும். மஞ்சள் நிற உடைகளை அணிவதாலும், புஷ்பராக மணியை தரிப்பதாலும், மஞ்சள் நிற வஸ்திர தானம் செய்வதாலும், கொண்டைக்கடலை தானியத்தை தானம் கொடுப்பதாலும், குருவார விரதம் இருப்பதாலும் குருதோ‌ஷம் நிவர்த்தியாகும்.

    குருவார விரத வழிபாட்டை வளர்பிறை வியாழக்கிழமையில் தொடங்கி செய்வது சிறப்பானது. சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு மஞ்சள் நிற ஆடை அணிந்து, நெற்றியில் சந்தனம் பூசி வடக்கு முகமாக அமர்ந்து பூஜையை தொடங்க வேண்டும். தட்சிணாமூர்த்தியின் திருஉருவப்படம் அல்லது தங்களது ஆன்மிக குருவின் படங்களை பூஜைக்குப் பயன்படுத்தலாம்.

    ஒரு மஞ்சள் விரிப்பை விரித்து அதில் தெய்வ படங்களை மலர் தூவி அலங்கரித்து கிழக்கு நோக்கி வைத்து, ஆறு தீபங்களை அகல் விளக்காக ஏற்றி வைக்க வேண்டும். இனிப்பு கள், முல்லை மலர்கள், கொண்டைக் கடலை, சர்க்கரை பொங்கல், கற்கண்டு போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து தூப, தீப, கற்பூர ஆராதனைகள் செய்து குரு கீர்த்தனைகளை பாடி பிரார்த்தனை செய்தபடி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

    அன்று ஒருவேளை மட்டும் உணவு உட்கொண்டு விரதம் இருக்க வேண்டும். அன்று முழுவதும் மவுன விரதம் இருப்பது நல்லது. இந்த விரதம் மூலம் குருவின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.
    செவ்வாய்க்கிழமைகளில் வரும் பிரதோஷம் அன்று விரதமிருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
    ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமும் என மாதம் இருமுறை பிரதோஷம் வரும். பிரதோஷம் என்பது ஏழரை நாழிகை மட்டும்தான்.

     பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள்.ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சவுகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.

    பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறனிந்து சிவ நாமம் ஆன நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.

    இந்த நேரம் சிவனுக்கு மிகவும் உகந்த நேரம் ஆகும். சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். எல்லா மாதங்களை விட கார்த்திகையில் வரும் சனி பிரதோஷம் மிகவும் விசேஷம் ஆனது ஆகும்.
    நாகதோஷம் உள்ளவர்களும் ராகு, கேது தோஷங்களால் பாதிப்பு உள்ளவர்களும் ஆடிமாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் ஆரம்பித்து நாகதேவதையை வழிபட்டு அனுசரிப்பதே நாகபஞ்சமி விரதம்.
    ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று நாகசதுர்த்தி கொண்டாடுகிறார்கள். அன்று நாகர் சன்னதியில் விசேஷ பூஜைகள், அபிஷேகம் உண்டு. நாகசதுர்த்தி நாளில் நாகருக்கு மஞ்சள் காப்பு அணிவித்து புது வஸ்திரம் கட்டி பால் அபிஷேகம் செய்து வழிபடலாம். இதர வளர்பிறை சதுர்த்தி தினங்களிலும் நாகரை வழிபடலாம்!

    நாகதோஷம் உள்ளவர்களும் ராகு, கேது தோஷங்களால் பாதிப்பு உள்ளவர்களும் ஆடிமாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் ஆரம்பித்து நாகதேவதையை வழிபட்டு அனுசரிப்பதே நாகபஞ்சமி விரதம். ஆடி பஞ்சமி முதல் ஒவ்வொரு மாதமும் பஞ்சமி திதியன்று இந்த விரதத்தை மேற்கொண்டு 12ம் மாதமான ஆனிமாத வளர்பிறை பஞ்சமி அன்று இவ்விரதத்தை முடிப்பர். இதன் பலனால், புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறும் குழந்தைப்பேறு உடையவர்கள் குழந்தைகளுக்கு ஆயுள் விருத்தியும் உண்டாகும்.

    புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது பேரையூர். இங்கு வீற்றிருக்கும் பிரகதாம்பாள் உடனுறை நாகநாதரை நாகலோகத்தில் இருந்த பாம்புகள் யாவும் வணங்கி அருள் பெற்றதாக தலவரலாறு கூறுகின்றது. இன்றும் பக்தர்கள் பலர் தங்களது நாகதோஷம் நீங்க ஆயிரக்கணக்கில் நாகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வணங்கி வருகின்றனர். இங்குள்ள ஐந்து தலை நாகரை வணங்குவதும் நாகதீர்த்தத்தில் குளிப்பதும் விசேஷம்.



    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு அருகில் அனுமார் கோதண்டராமர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு அனுமார் புளியமர வடிவில் காட்சி தருகிறார். ராகுதோஷம் உள்ளவர்கள் வழிபடுவதற்காக அனுமன் சன்னதிக்கு வலப்புறம் ஒரு சிறிய மாடம் அமைக்கப்பட்டு நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

    ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று நாகசதுர்த்தி கொண்டாடுகிறார்கள். அன்று நாகர் சன்னதியில் விசேஷ பூஜைகள், அபிஷேகம் உண்டு. நாகசதுர்த்தி நாளில் நாகருக்கு மஞ்சள் காப்பு அணிவித்து புது வஸ்திரம் கட்டி பால் அபிஷேகம் செய்து வழிபடலாம். இதர வளர்பிறை சதுர்த்தி தினங்களிலும் நாகரை வழிபடலாம் ! நாகபஞ்சமி நாளில் பெண்கள் விரதம் இருந்து விளக்கேற்றி வழிபட்டு மணப்பேறும் மகப்பேறும் பலனாகப் பெறுகிறார்கள்.
    ஒரு சிலருக்கு பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும். ஆடிப் பூரத்தன்று முறையாக விரதமிருந்து, அம்பிகையை வழிபாடு செய்தால் ஆண் குழந்தை பிறக்கும்.
    நவக்கிரகங்களின் சேர்க்கை தான் கரு உருவாக காரணமாக அமைகிறது. சுக்ரன், சுக்கில சுரோனிதங்களை இணைக்கிறார். இணைந்த சுக்கில சுரோனிதங்களை கருவாக மாற்றுகிறது செவ்வாய், உடல் உறுப்புகள் உருவாக குரு துணைபுரிகிறார். பூந்தசை தோல் போன்றவற்றை சந்திரன் உருவாக்குகிறார்.

    நகம், முடி, கழிவுப்பகுதி உற்பத்திக்கு சனியும், அறிவுக்கு புதனும் காரணமாகிறார். நமது முன்னோர்கள் கிரகங்களின் தன்மையை அறிந்தே புதுமணத் தம்பதியரை முதல் இரவில் கூட வைத்தனர். அதன் பிறகும் வரும் நாட்களில் சுப நாட்களை கணித்தே தம்பதியர் கூடினர்.

    அதனால் தான் ஒழுக்கமான, நோய் நொடிகள் இல்லாத, தோஷம் இல்லாத, உடல் ஊனம் இல்லாத குழந்தைகள் பிறந்தனர். ஆனால் இந்த கலிகாலத்தில் இந்த ஜோதிட முறைகளை பின்பற்றுவது குறைந்துள்ளதால், குழந்தை உருவாகுவதிலும், பிறந்த குழந்தையை பராமரிப்பதிலும் மருத்துவரை நாட வேண்டிய நிலையில் இன்றைய சமுதாயம் உள்ளது.

    ஒரு சிலருக்கு பெண் குழந்தைகள் பிறந்திருக்கும். எனவே, ஆண் குழந்தைக்காக தவமிருப்பர். அவர்கள் ஆடிப் பூரத்தன்று முறையாக விரதமிருந்து, அம்பிகையை வழிபாடு செய்தால் ஆண் குழந்தை பிறக்கும். ஆடி மாதம் பூரம் நட்சத்திரமன்று திருக்கோவில்கள் அனைத்திலும் உற்சவங்கள் நடைபெறும்.

    ஆடிப் பூரத்திற்கு சில நாட்கள் முன்னதாக பச்சைப் பயிறை தண்ணீரில் நனைய வைக்க வேண்டும். அது நன்கு முளைவிட்டிருக்கும். அதை அம்பிகைக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும்.

    பின்னர் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் விரதமிருந்து இதை நம்பிக்கையோடு சாப்பிட வேண்டும். இந்த விரதம் இருப்பதால் வாரிசு கிடைக்க வாய்ப்பு உருவாகும். தொட்டிலில் பிள்ளை தவழ துணையிருப்பாள் அம்பிகை.
    ஒவ்வொரு மாதங்களிலும் வரும் ஒவ்வொரு பவுர்ணமியும் சிறப்புடையது. இந்த வகையில் எந்த மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு எந்த கடவுளை வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
    சித்ரா பவுர்ணமி: (சித்திரை) அனைவரின் செயல்களையும் பதிவு செய்யும் சித்ரகுப்தனின் பிறந்த நாள். அவரை நினைவதன் மூலம் நம் கடந்த வருட செயல்பாட்டை நாமே மதிப்பிடும் தினம். மதுரையில் மிகு சிறப்பு.

    வைகாசி பவுர்ணமி: (விசாகம்) நல்லோரையும், நலிந்தோரையும் துன்புறுத்திய சூரனை அடக்கிட முருகன் அவதரித்த நாள். தீது அழிந்து, நன்மை நிலைக்கும் என்பதை உறுதிப்படுத்தும் தினம். திருச்செந்தூரின் தென்மேற்கே 30 கி.மீ. கடற்கரைத்தலமான உவரியில் மிகு சிறப்பு.

    ஆனிப் பவுர்ணமி : (மூலம்) தாயினும் மேலான இறைவனுக்கு தித்திக்கும் நல்கனிகளையெல்லாம் (குறிப்பாக மா, பலா, வாழை) படைக்கும் நாள். திருவையாற்றில் மிகு சிறப்பு.

    ஆடிப் பவுர்ணமி: (பூராடம்/உத்ராடம்) விஷ்ணு விரத வழிபாட்டுக்கு உகந்த நாள். காஞ்சியில் மிகு சிறப்பு.

    ஆவணிப் பவுர்ணமி: (அவிட்டம்) வட பாரதத்தில் ரக்ஷபந்தனம் என்று மிகக் கோலாகலமாக அனைவரிடையிலும் நல்லுறவை வளர்க்கும் திருநாள். கேரளத்தின் மிக மிக முக்கிய ஓணவிழா நாள்.

    புரட்டாசி பவுர்ணமி: (பூரட்டாதி/உத்ரட்டாதி) சிவசக்தியாக அருளும் உமாமகேஸ்வர விரத பூஜை நாள். வட நாட்டில் பிரபலம்.



    ஐப்பசி பவுர்ணமி: (அசுவதி) வடநாட்டில் லக்ஷ்மி விரதமும், தென்னாட்டில் சிவனுக்கு அன்னாபிக்ஷேகமும் விக்ஷேம் கங்கை கொண்ட சோழபுரத்தில் மிகு சிறப்பு.

    கார்த்திகைப் பவுர்ணமி: (கார்த்திகை) பரம்பொருள் அளத்தற்கரியது என்பதை நமக்கு உணர்த்துவதற்காக மும்மூர்த்திகளும் சேர்ந்து திருவிளையாடல் நடத்திய நாள். நம்முடைய நிலை கருதி பெருஞ்சோதி அண்ணாமலையில் மலையாகி அருளுகிறது. திருவண்ணாமலையில் மிகு சிறப்பு.

    மார்கழிப் பவுர்ணமி: (திருவாதிரை) இக்காலம் பலரும் பணிப்பித்தராய் இருப்பது போல, முன்பும் சில முனிவர்கள் கர்மாவே பெரிது என்ற எண்ணியபோது, எல்லாவற்றையும் ஆட்டுவிப்பவராக இறைவன் நடராஜனாய் காட்சியளித்த திருநாள். சிதம்பரத்திலும், திரு உத்தர கோசமங்கையிலும் மிகு சிறப்பு.

    தைப் பவுர்ணமி: (பூசம்) மிகு சிறப்புடைய பூச நக்ஷத்ரத்தன்று பரம்பொருளுக்கு பெருவிழா நடத்தும் நாள். மதுரையிலும், பழனியிலும் மிகு சிறப்பு.

    மாசிப் பவுர்ணமி: (மகம்) ஒரு முறை படைப்பு துவங்கிய நாளில், அனைவரும் புனித நீராடி விரதமிருந்து பரமனை வழிபடும் நாள். தெற்கே கும்பகோணத்திலும், வடக்கே அலகாபாத்திலும் மிகு சிறப்பு.

    பங்குனிப் பவுர்ணமி: (உத்திரம்) இல்லறமே நல்லறம் என்று உணர்த்துவதற்காக, சிவன் உமையை மணக்கும் திருவிளையாடல் நிகழ்ந்த நாள். பழனியோடு, பல்லாயிரம் தலங்களிலும் சிறப்பு.
    குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் தத்தாத்ரேயரை விரதமிருந்து வழிபட்டு வேண்டிக்கொண்டால், அவர்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    மும்மூர்த்திகளின் ஒரே உருவமாக கருதப்படுபவர் தத்தாத்ரேயர். இவர் மாயையை வென்றவர் என்பதைக் காட்டிலும், மாயையே உருவானவர் என்பதே சரியானதாக இருக்கும். அவரது பல்வேறு சோதனைகளையும் தாண்டியபடி, அவரின் மாயையை உணர்ந்தவர்கள் மட்டுமே அவரது சீடர்களாக இருந்துள்ளனர். அத்ரி- அனுசுயை தம்பதியரின் மகனாக அவதரித்தவர் தத்தாத்ரேயர். இவர் அனுசுயையின் மகனாக கிடைத்தது இறைவனின் திருவிளையாடல்.

    சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் தங்களின் மகனாக பிறக்க வேண்டும் என்று அனுசுயை விரதம் இருந்து வந்தார். பதிவிரதையான அவரது தவத்திற்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டிய கட்டாயம் மும்மூர்த்திகளுக்கும் ஏற்பட்டது. இதுபற்றி மும்மூர்த்திகளும், தங்களின் மனைவிகளிடம் கலந்துரையாடினர். அப்போது மும்மூர்த்திகளின் மனைவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர், ‘அனுசுயையின் பதிவிரதத்தை பரிசோதனை செய்து, அதில் அவர் வெற்றி பெற்றால் வரத்தை வழங்குங்கள்’ என்று தெரிவித்தனர்.

    சோதனை ஒன்றை வைக்கும்போது, அதை அனுசுயையால் சமாளிக்க முடியாது என்று அவர்கள் நினைத்தனர். இதையடுத்து மும்மூர்த்திகளும் முனிவர் வேடம் பூண்டு அனுசுயையின் குடிலுக்குச் சென்றனர். அந்த நேரத்தில் அத்ரி முனிவர் தவத்தில் இருந்தார். தன் இல்லம் தேடி வந்தவர்களுக்கு உணவளித்து உபசரிப்பதே, நல்ல இல்லாளின் கடமை என்பதை உணர்ந்திருந்த அனுசுயை, அவர்களுக்கான உணவுகளை தயார் செய்தார்.

    பின்னர் உணவுகளை அவர்களுக்கு பரிமாற தொடங்கியபோது, முனிவர் வேடத்தில் இருந்த மும்மூர்த்திகளும், ‘நிர்வாண நிலையில் உணவு பரிமாறினால்தான் உணவை ஏற்றுக்கொள்வோம்’ என்றனர்.

    உடனே அனுசுயை, தன் கணவரின் கமண்டலத்தை எடுத்து அதில் இருந்து சிறிது நீரை கையில் ஊற்றி, முனிவர் வேடத்தில் இருந்த மும்மூர்த்திகளின் மீதும் தெளித்தார். அவர்கள் மூவரும் குழந்தைகளாக மாறிப்போனார்கள். பின்னர் அவர்களுக்கு உணவு பரிமாறி, மூவரையும் தொட்டிலில் தூங்கச் செய்தார்.



    இந்த நிலையில் அனுசுயையின் கற்பை பரிசோதிக்கச் சென்ற தங்கள் கணவன்மார்கள், வெகு நேரமாகியும் திரும்பாததால், முப்பெரும் தேவியர்கள் மனம் கலங்கினர். என்ன நடந்தது? என்பதை அறிவதற்காக அனுசுயையின் குடிலை நோக்கி வந்தனர்.

    அங்கு மும்மூர்த்திகளும் குழந்தை வடிவில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு அனுசுயையின் கற்பை எண்ணி மலைத்தனர். இதையடுத்து அனுசுயையிடம் சென்ற அவர்கள், ‘தாயே! கற்பில் சிறந்த உன்னை சோதிக்க எண்ணிய தவறை உணர்ந்து கொண்டோம். எங்கள் கணவர்களை, பழைய படியே உருமாற்றி எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கேட்டனர்.

    இதையடுத்து அனுசுயை, மும்மூர்த்திகளையும் பழைய உருவுக்கு மாற்றினார்.

    பின்னர் மும்மூர்த்திகளும் அனுசுயை- அத்ரி தம்பதியருக்கு ஆசி வழங்கி, ‘என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டனர்.

    அதற்கு அனுசுயை, ‘இறைவா! தாங்கள் மூவரும் எங்களுக்கு குழந்தையாக வந்து பிறக்க வேண்டும்’ என்ற வரத்தை தரும்படி இறைவனிடம் வேண்டினர்.

    இறைவனும் அவ்வாறே வரம் அளித்தார். அதைத் தொடர்ந்து பல காலம் தவத்தில் ஈடுபட்டிருந்த அத்ரி- அனுசுயை தம்பதியருக்கு மும்மூர்த்திகளின் அம்சமாக, தத்தாத்ரேயர் பிறந்தார். அனுமன், மார்க்கண்டேயர் போலவே, தத்தாத்ரேயரும் சிரஞ்சீவியாக வாழும் சிறப்பு பெற்றவர்.

    குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் தத்தாத்ரேயரை விரதமிருந்து வழிபட்டு வேண்டிக்கொண்டால், அவர்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    அம்பாளின் பத்து அவதாரங்களில் ஸ்ரீ மாதங்கி என்னும் வடிவமும் ஒன்று. படிப்பில் உயர்ந்த நிலையை அடைய விரும்புபவர்கள் மாதங்கி தேவிக்கு விரதம் இருந்து வழிபாடு செய்யலாம்.
    மகாவிஷ்ணுவுக்கு தசாவதாரம் இருப்பதைப் போல் அம்பாளுக்கும் பத்து அவதாரங்கள் உண்டு. அவற்றில் ஸ்ரீ மாதங்கி என்னும் வடிவமும் ஒன்று. மதங்கர் என்னும் மகரிஷிக்கு அருட் செய்ததால் இந்த அம்பாளுக்கு மாதங்கி என்றும் ராஜமாதாங்கீ என்றும் பெயர் ஏற்பட்டது. இந்த தேவீ, அவதாரம் செய்த நாளே மாதங்கி ஜெயந்தி என்று கூறப்படுகிறது.

    அட்சய திருதியை தினத்தன்று விரதமிருந்து ஸ்ரீ ராஜமங்கீ தேவியின் படத்தை வைத்து ஆவாகனம் செய்து ரோஸ் கலரில் உல்ள ரோஜாப்பூ போன்ற பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். தேன் கலந்த பால்பாயாசம் நிவேதனம் செய்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதங்கி சுலோகத்தை சுமார் 21 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

    இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து வருவதன் மூலம் எதிரிகள் இல்லாத வாழ்க்கை, சர்வஜன வசீகரம் எனப்படும் எல்லா மக்களுடனும் அன்பும் இணக்கமும் கொண்ட வாழ்வும் கிட்டும்.



    புதன், வியாழக்கிழமைகளில் வலம்புரிச் சங்கில் சிறிது கற்கண்டு பச்சை கற்பூரம் கலந்த நீர் நிரப்பி இந்த மந்திரத்தை 108 எண்ணிக்கை கிழக்கு முகமாக அமர்ந்து ஜெபித்து அந்த நீரை மாணவர்கள், குழந்தைகளை அருந்தச்செய்ய நல்ல நினைவாற்றலும் படிப்பில் உயர்வும் உண்டாகும்.

    மந்திரம் :

    ஓம் |
    ஹ்ரீம் ஐம் ஸ்ரீம்|
    நமோ பகவதி உச்சிஷ்டசாண்டாளி |
    ஸ்ரீ மாதங்கிச்வரி |
    சர்வஜன வசங்கரி ஸ்வாஹா||

    இதை ஒரு வளர்பிறை புதன்கிழமை தொடங்கி ஜெபித்து வரவும்.

    இதனால் செல்வம், படிப்பு, வசியம் சங்கீதம் ஆகிய நான்கு விதமான பலன்களும் ஏற்படும். குறிப்பாக சங்கீத வித்தையில் ஈடுபடுபவர்கள் தேர்ச்சியான அறிவை பெற்று புகழுடன் பிரகாசிக்கலாம்.

    ஐப்பசி மாதத் தேய்பிறையில் வரும் ஏகாதசி இந்திரா ஏகாதசி எனப்படும். பித்ருக்களின் சாபத்தை நீக்கும் சக்தி இந்திரா ஏகாதசி விரதத்திற்கு உள்ளது.
    ஏகாதசியின் மகிமை யுகங்கள் தோறும் வெளிப்படும் என்று சொல்லி, அது துவாபர யுகத்தில் வெளிப்பட்டதைப் பற்றி ஏற்கெனவே பார்த்தோம். இதோ, கிருத யுகத்தில் வெளிப்பட்ட ஓர் ஏகாதசியின் மகிமையை பார்ப்போம்.

    மாஹிஷ்மதி நாட்டு மன்னர் இந்திரசேனனின் அரண்மனைக்கு நாரதர் வந்தார். "மன்னா, நான் இப்போது எமலோகத்தில் இருந்து வருகிறேன். அங்கே உன் தந்தை நரகத்தில் கிடந்து, துயரங்களை எல்லாம் அனுபவித்து வருகிறார். `என் மகனிடம் சொல்லி ஏகாதசி விரதம் இருக்கச் சொல்லுங்கள். என்னைக் கரையேற்றச் செய்யுங்கள்'' என்று என்னிடம் சொன்னார். அதற்காகத்தான் நான் வந்தேன்.



    ஐப்பசி மாதத் தேய்பிறையில் வரும் ஏகாதசி இந்திரா ஏகாதசி எனப்படும். நீ அந்த ஏகாதசி அன்று விரதம் இருந்து வழிபாடு செய். உன் தந்தைக்கு நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்" என்றார்.

    திரிலோக சஞ்சாரியான நாரதரே வழிகாட்டி இருக்கிறார் என்றால், மன்னர் மறுப்பாரா? இந்திரா ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து, தந்தைக்கு சிரார்த்தம் செய்தார். அவருடைய தந்தையும் நரகத்தில் இருந்து விடுதலை அடைந்து மகனை ஆசீர்வதித்தார். பித்ருக்களின் சாபத்தை நீக்கும் ஏகாதசி இது.
    செவ்வாய் தோஷத்தால் திருமணம் கைகூடாமல் தாமதம் ஆகும் பெண்கள் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
    செவ்வாய் தோஷம் நிறைய பேரை படாதபாடுபடுத்தி விடுகிறது. சில பெண்களுக்கு செவ்வாய் தோஷத்தால் திருமணம் கைகூடுவது தாமதம் ஆகிவிடுகிறது. எனவே செவ்வாய் தோஷ பாதிப்பில் இருப்பவர்கள் உரிய பரிகாரம் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

    செவ்வாய் தோஷ நிவர்த்திக்கு பல வழிபாடுகள் இருந்தாலும் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் வழிபாடு சிறப்பானது. லட்சுமி நரசிம்மர் படத்தை வீட்டில் வைத்து படத்துக்கு முன்னால் தீபம் ஏற்றி பூஜை பொருட்கள் உபயோகித்து ஸ்ரீநரசிம்மரை வழிபட வேண்டும், நிவேதனமாக பானகம் வைக்க வேண்டும். (நீர்+ ஏலம் + எலுமிச்சை +துளசி+ வெல்லம்= இதன் கலவையே பானகம் ஆகும்).

    இந்த பூஜையை எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?



    பூஜையை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் (அல்லது) செவ்வாய் ஹோரையில் செய்யவும்.பிரதோஷ காலத்தில் அவசியம் செய்ய வேண்டும். ஸ்ரீ வேதாந்த தேசிகரால் இயற்றப்பட்ட இந்த ஸ்லோகத்தை 28 முறை ஐபிக்கவும்.

    “ப்ரத்யாதிஷ்ட புராதந ப்ரஹரண க்ராம--;
    லட்ணம் பாணிஜை;
    அவ்யாத் த்ரீணிகனநீத்யகுண்ட மஹிமா
    வைகுண்ட கண்டீரவ;
    யத்ப்ரா துர்பவநா தவந்த்ய ஜடரா
    யாத்ருச்சிகாத் வேதஸாம்
    யா காசித் ஸஹஸா மஹாஸீர க்ருஹ
    ஸ்த்தூணா பிதா மஹ்யபூத்”

    தினமும் கூட ஜபித்து வரலாம். செய்யும் தொழிலில் பாதிப்பு உள்ளஎவர்களும் புத்திர தோஷம் உள்ளவர்களும் இந்த மூலமந்திரத்தை தினம் 9 முறை ஜபித்து வரலாம். நல்ல பலன் கிடைக்கும். சுவாதி நட்சத்திரம் வரும் நாளிலும் இந்த பூஜையை செய்யலாம். பூஜை முடிவில் பக்கத்தில் நரசிம்மர் ஆலயம் இருந்தால் அங்கு சென்று நரசிம்மரை வணங்கி வரவும். நரசிம்மர் ஆலயத்தில் நெய் தீபம் 9 வாரம் போட்டுவருவது மிகவும் நல்லது.
    வேண்டுதல்கள் நிறைவேற பக்தர்கள் விரதத்தை கடைபிடிக்கிறார்கள். அந்த வகையில் விரதம் இருக்கும் போது எந்த நிற உடையை அணி வேண்டும் என்பதை பார்க்கலாம்.
    திருமணப்பொருட்கள் வாங்கும் வரிசையில் முதலில் இடம் பெறுவது மஞ்சள் தான். காரணம் அது ஒரு மங்களப்பொருளாகக் கருதப்படுகிறது. எந்த பூஜையை நாம் செய்தாலும் மஞ்சள் பிள்ளையாரை வைத்து மலரும், குங்குமமும் வைத்து பூஜை செய்வது வழக்கம்.

    இலையில் விழுந்தால் அரிசி. தலையில் விழுந்தால் அட்சதை. அப்படிப்பட்ட அட்சதை முனை முறியாத அரிசியில் மஞ்சள் தடவித் தூவுவது ஆகும். சுமங்கலி பெண்கள் வீட்டிற்று வந்தால் வெற்றிலை, பாக்கு, குங்குமத்தோடு மஞ்சளும் கொடுப்பார்கள்.

    இங்ஙனம் செய்வதன் மூலம் நாம் செய்த பாவங்கள் விலகுவதாக நம்புகிறார்கள். நீண்ட ஆயுளும், ஐஸ்வர்யமும், ஆரோக்கியமும் பெற மஞ்சள் வண்ணத்தை பார்க்கும் பொருள்களில் உபயோகப்படுத்துவது வழக்கம். விரத காலங்களில் மஞ்சள் ஆடை அணிந்தால் குடும்பத்தில் மங்கலங்கள் நடைபெறும்.
    ×