search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாங்கல்யம்"

    • விளக்கை தீக்குச்சியால் நேரடியாக ஏற்றாமல், துணை விளக்கை ஏற்றி, அதன் மூலமே ஏற்ற வேண்டும்.
    • விளக்குகளை நன்றாகக் கழுவி, சுத்தமான தாம்பளம் அல்லது பலகையில் வைக்க வேண்டும்.

    * விளக்குகளை நன்றாகக் கழுவி, சுத்தமான தாம்பளம் அல்லது பலகையில் வைக்க வேண்டும்.

    உடைந்த, கீறல் விளக்குகளை பயன்படுத்தக்கூடாது.

    * ஏற்றிய பின்பு அசையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விளக்கிற்கு மாலை மற்றும் மாங்கல்ய கயிறை சூட்ட வேண்டும்.

    * சுடரில் இருந்து பத்தி, சூடம் கொளுத்தக் கூடாது. தீப்பெட்டியே பயன்படுத்த வேண்டும்.

    * எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ள வேண்டும்.

    திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும்.

    * வீடுகளில் பூஜை செய்யும் போது, விளக்கை கிழக்கு நோக்கி வைத்து அதற்கு வலப்புறத்தில் வடக்கு முகமாக அமர்ந்து கொள்ள வேண்டும்.

    * விளக்கை தீக்குச்சியால் நேரடியாக ஏற்றாமல், துணை விளக்கை ஏற்றி, அதன் மூலமே ஏற்ற வேண்டும்.

    * பூஜை முடியும்வரை ஸ்லோகங்களை ஒரே மாதிரியான குரலில் சொல்ல வேண்டும்.

    ஒருவர் உயர்த்தியும், ஒருவர் தாழ்த்தியும் குரல் கொடுக்கக்கூடாது.

    • ஆடி, செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும்.
    • ஆடி மாத செவ்வாய்க் கிழமைகளில் ஒளவையார் விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

    ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும்.

    அதேபோன்று ஆடி மாத செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு.

    கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும்,

    கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும், இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள்.

    வசதியுள்ளவர்கள், கடைசி செவ்வாய்க்கிழமை அன்று குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து

    அவர்களை தெய்வமாக வழிபட்டு விருந்தளிப்பார்கள்.

    ஆடி - செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கௌரி விரதம் கடைப்பிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.

    ×