என் மலர்
முக்கிய விரதங்கள்
விளம்பி வருடத்தில் ஒவ்வொரு மாதமும் வரும் பித்ருக்களுக்கு உகந்த அமாவாசை விரத நாட்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
சித்திரை 02 (15.04.2018) - ஞாயிறு
வைகாசி 01 (15.05.2018) - செவ்வாய்
வைகாசி 30 (13.06.2018) - புதன்
ஆனி 28 (12.07.2018) - வியாழன்
ஆடி 26 (11.08.2018) - சனி
ஆவணி 24 (09.09.2018) - ஞாயிறு
புரட்டாசி 22 (08.10.2018) - திங்கள்
ஐப்பசி 21 (07.11.2018) - புதன்
கார்த்திகை 20 (06.12.2018) - வியாழன்
மார்கழி 21 (05.01.2019) - சனி
தை 21 (04.02.2019) - திங்கள்
மாசி 22 (06.03.2019) - புதன்
பங்குனி 21 (04.04.2019 - வியாழன்
வைகாசி 01 (15.05.2018) - செவ்வாய்
வைகாசி 30 (13.06.2018) - புதன்
ஆனி 28 (12.07.2018) - வியாழன்
ஆடி 26 (11.08.2018) - சனி
ஆவணி 24 (09.09.2018) - ஞாயிறு
புரட்டாசி 22 (08.10.2018) - திங்கள்
ஐப்பசி 21 (07.11.2018) - புதன்
கார்த்திகை 20 (06.12.2018) - வியாழன்
மார்கழி 21 (05.01.2019) - சனி
தை 21 (04.02.2019) - திங்கள்
மாசி 22 (06.03.2019) - புதன்
பங்குனி 21 (04.04.2019 - வியாழன்
இன்று நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு அவரை விரதமிருந்து நாம் வழிபட்டால் பிரகலாதனுக்கு வழங்கியது போன்று நமக்கும் ராஜ வாழ்க்கையைத் தருவார்.
இன்று (சனிக்கிழமை) நரசிம்மர் ஜெயந்தி தினமாகும். நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நர-சிம்ம அவதாரம் எடுத்தார்.
நரசிம்மரின் உருவம் சிங்க முகத்துடனும் நகங்களோடும் மனித உடலோடும் தோற்றமளிக்கிறது. வைஷ்ணவர் பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர்.
தனது பக்தர்களைத் தக்கதருணத்தில் வந்து காக்கும் கடவுளாக இவர் கருதப்படுகிறார். தன் பரமபக்தனான பிரகலாதனைக் காத்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம்செய்ய எடுத்த அவதாரமே நரசிம்மம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வராக அவதாரத்தில் விஷ்ணுவால் இரணியாக்சன் கொல்லப்பட்ட பின்னர் வெகுண்ட இரணியன் விஷ்ணுவை அழிப்பதற்குத் தக்கபடித் தன்னை வலியவனாக்கிக் கொள்ள பிரம்மாவை நோக்கித் தவமிருந்தான். பிரம்மாவும் காட்சி தந்தார்.
இரணியன் தனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ எந்தவித ஆயுதத்தாலும் மரணம் சம்பவிக்கக் கூடாது. எவ்வுலகிலும் தனக்குப் போட்டியாக யாருமே இருக்கக்கூடாது. அனைத்து உயிரினங்களுக்கும் கடவுளுருக்கும் தான் மட்டுமே தலைவனாக இருக்க வேண்டும். அத்தகைய சக்தி வேண்டும். யோகங்களினாலும் தவத்தாலும் அடையக்கூடிய காலத்தால் அழியாத வல்லமை தனக்கு வேண்டும் என்று மிக புத்திசாலித்தனமாக வரம் கேட்டான்.
பிரம்மாவும் அளித்தார். கிடைத்த சக்தியை வைத்துக்கொண்டு அட்டூழியங்கள் புரிய ஆரம்பித்தான் இரணியன், அவனை அடக்க யாராலும் முடியவில்லை.
பிரகலாதன் கொடிய அரக்கனான இரண்யகசிபுக்கும் (இரணியன்) கயாதுக்கும் மகனாகப் பிறந்தான். இரணியகசிபு, தான் பெற்ற சாகா வரத்தால் ஈரேழு உலகத்திலும் ஆட்சி புரிந்து வந்தான். தான்தான் கடவுள் என்றும் அனைவரும் தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றும் அனைவரையும் கட்டாயப்படுத்தி வந்தான்.
அவனது மனைவி கர்ப்பம் தரித்தாள். நாரத மாமுனி ஆனவர், தாயின் கர்ப்பத்தில் இருந்த குழந்தை பிரகலாதனுக்கு அரி ஸ்ரீமன் நாராயணன் (விஷ்ணு) தான் இந்த ஈரேழு உலகத்திற்கும் கடவுள் என்று போதித்து விட்டார்.பிரகலாதன் பிறந்து அவன் கல்வி பயிலும் காலம் வந்ததும் அவனுக்கு அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இரணியன் தான் கடவுள் என்று போதிக்க, பிரகலாதன் அரி ஸ்ரீமன் நாராயணன் தான் தன் கடவுள் என்று சாதித்தான். இந்தச் செய்தியறிந்த இரணியன் பிரகலாதனை மாற்றசாம, பேத, தான தண்டம் என பலவிதங்களிலும் முயற்சி செய்தான்.
அவனது முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன. ஆத்திரமடைந்த இரணியன் தன் மகன் என்றும் பாராமல் கொல்ல முயற்சி செய்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியே அடைந்தான்.
யானையின் காலால் இடரச் செய்தல், கொடிய விஷம் கொண்ட பாம்புகளோடு அடைத்து வைத்தல், விஷமருந்தச் செய்தல், தீக்குள் இறங்கச் செய்தல் போன்ற அவனது கொடுமுயற்சிகளில் இருந்து பிரகலாதன், தான் கொண்ட அசைக்க முடியாத விஷ்ணு பக்தியினால் விஷ்ணுவின் உதவியால் காப்பாற்றப்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.
பிரகலாதனைக் கொல்லத் தான் எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோற்றுப்போன இரணியன் தானே நேராகப் பிரகலாதனைக் கொல்லப் போன போதும் பிரகலாதன் பயமின்றி தான் வணங்கும் கடவுள் தன்னைக் காப்பார் என்றான்.
அது கேட்டு ஆத்திரத்தில் அறிவிழந்தவனாக இரணியன் விஷ்ணுவைத் தானே கொல்லப் போவதாகக் கூறி உன் கடவுளைக் காட்டு என பிரகலாதனிடம் கேட்க, பிரகலாதனோ தன் கடவுள் அரி ஸ்ரீமன் நாராயணர் எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார், ஏன் தூணிலும் இருப்பார் எந்தத் துரும்பிலும் இருப்பார் என்று கூறினான்.
இரணியன் ஒரு தூணைக் காட்டி, இந்த தூணில் உள்ளாரா என்று கேட்க, பிரகலாதனோ இதை உடைத்து சோதித்துப் பாருங்கள் தந்தையே என்று கூறினான்.
இரணியன் அந்தத் தூணை உடைக்க, ஸ்ரீமன் நராயணர், நரசிம்ம அவதாரம் (மனிதன் பாதி சிங்கம் பாதி) பூண்டு தூணில் இருந்து வெளிவந்தது. இரணியன் பெற்ற சாகா வரங்கள் பலிக்காத வகையில் அவனை வதம் செய்து பிரகலாதனைக் காத்தருளினார்.
இரணியனைக் கொன்ற பின்பும் நரசிம்மரின் சீற்றம் தணியவில்லை. சிவன் உட்பட பிற தெய்வங்களால் அவரைச் சாந்தமடையச் செய்ய முடியவில்லை.
அதனால் அவர்கள் விஷ்ணுவின் தேவியான லட்சுமியை நாடினர். ஆனால் லட்சுமியாலும் அவரை அமைதிப்படுத்த முடியவில்ல. பின் பிரம்மாவின் ஆலோசனைப்படி பிரகலாதனை நரசிம்மரின் முன் நிறுத்தினர். அவனது அதீதமான பக்தியாலும் வேண்டுதலாலும் நரசிம்மரின் சினம் அடங்கியது.
அதன் பிறகு அவர் பிரகலாதனுக்கு மன்னனாக முடிச்சூட்டி அவனை வாழ்த்தினார். இன்று நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு அவரை நாம் வழிபட்டால் பிரகலாதனுக்கு வழங்கியது போன்று நமக்கும் ராஜ வாழ்க்கையைத் தருவார்.

நாளை வளர்பிறை சதுர்த்தசி திதியில் வரும் நரசிம்ம ஜெயந்தி (28-4-2018) அன்று விரதமிருந்து இந்த நேரத்தில் நரசிம்மரை வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.
இறைவன் எங்கும் நிறைந்துள்ளார் என்பதையும், தூய பக்தி கொண்டவர்கள் அசுரர்கள் என்றாலும், அவர்களைக் காப்பது இறைவனின் கடமை, அப்படி தன்னை நம்பும் பக்தனைக் காக்க இறைவன் தாமதிக்காமல் வருவார் என்பதையும் பறைசாற்றும் அவதாரம், நரசிம்மர் அவதாரம் ஆகும்.
யோக நரசிம்மர், வீர நரசிம்மர், உக்கிர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், கோப நரசிம்மர், சுதர்சன நரசிம்மர், அகோர நரசிம்மர், விலம்ப நரசிம்மர், குரோத நரசிம்மர் என்று நரசிம்மரின் முக்கியமான ஒன்பது வடிவங்கள் இருக்கின்றன. இவைத் தவிர பஞ்சமுக நரசிம்மர், விஷ்ணு நரசிம்மர், ருத்ர நரசிம்மர் போன்ற பல வடிவங் களிலும் விஷ்ணுவின் ஆலயங்களில் நரசிம்மர் அருள்பாலிப்பதைப் பார்க்கலாம்.
நரசிம்மர் விரத வழிபாட்டிற்கு உகந்த நேரம் அந்திசாயும் வேளையான மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையாகும். அதிலும் வளர்பிறை சதுர்த்தசி திதியில் வரும் நரசிம்ம ஜெயந்தி (28-4-2018) அன்று விரதமிருந்து இந்த நேரத்தில் நரசிம்மரை வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.
நரசிம்மருக்கு செவ்வரளி போன்ற சிவப்பு வண்ண மலர்கள், சர்க்கரைபொங்கல், பானகம் மற்றும் நரசிம்மரின் கோபத்தை தணிக்கும் குளுமையான பொருட்களை பூஜைக்கு கொடுத்து வழிபடலாம். மேலும் நரசிம்மர், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதால், விஷ்ணுவுக்கு ஏற்ற மலர்கள், வஸ்திரம், நைவேத்தியம் ஆகியவற்றையும் நரசிம்மருக்கு படைத்து வழிபாடு செய்யலாம்.

விளம்பி ஆண்டு முழுவதும் வரும் முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி விரத நாட்கள் என்னவென்று விரிவாக பார்க்கலாம்.
வளர்பிறை சஷ்டி
சித்திரை-08 (21.04.2018) சனி
வைகாசி-06 (20.05.2018) ஞாயிறு
ஆனி -04(18.06.2018) திங்கள்
ஆடி -02 -(18.07.2018) புதன்
ஆடி -31 (16.08.2018) வியாழன்
ஆவணி -30 (15.09.2018) சனி
புரட்டாசி -28 (14.10.2018) ஞாயிறு
ஐப்பசி -27 (13.11.2018) செவ்வாய்
கார்த்திகை -27 (13.12.2018) வியாழன்
மார்கழி -28 (12.01.2019) சனி
தை -28 (11.02.2019) திங்கள்
மாசி -28 (12.03.2019) செவ்வாய்
பங்குனி -28 (11.04.2019) வியாழன்
தேய்பிறை சஷ்டி
சித்திரை -23 (06.05.2018) ஞாயிறு
வைகாசி -21 (04.06.2018) திங்கள்
ஆனி -20 (04.07.2018) புதன்
ஆடி -18 (03.08.2018) வெள்ளி
ஆவணி -16 (01.09.2018) சனி
புரட்டாசி -14 (30.09.2018) ஞாயிறு
ஐப்பசி -13 (30.10.2018) செவ்வாய்
கார்த்திகை -12 (28.11.2018) புதன்
மார்கழி -12 (27.12.2018) வியாழன்
தை -12 (26.01.2019) சனி
மாசி -12 (24.02.2019) ஞாயிறு
பங்குனி -12 (26.03.2019) செவ்வாய்.
சித்திரை-08 (21.04.2018) சனி
வைகாசி-06 (20.05.2018) ஞாயிறு
ஆனி -04(18.06.2018) திங்கள்
ஆடி -02 -(18.07.2018) புதன்
ஆடி -31 (16.08.2018) வியாழன்
ஆவணி -30 (15.09.2018) சனி
புரட்டாசி -28 (14.10.2018) ஞாயிறு
ஐப்பசி -27 (13.11.2018) செவ்வாய்
கார்த்திகை -27 (13.12.2018) வியாழன்
மார்கழி -28 (12.01.2019) சனி
தை -28 (11.02.2019) திங்கள்
மாசி -28 (12.03.2019) செவ்வாய்
பங்குனி -28 (11.04.2019) வியாழன்
தேய்பிறை சஷ்டி
சித்திரை -23 (06.05.2018) ஞாயிறு
வைகாசி -21 (04.06.2018) திங்கள்
ஆனி -20 (04.07.2018) புதன்
ஆடி -18 (03.08.2018) வெள்ளி
ஆவணி -16 (01.09.2018) சனி
புரட்டாசி -14 (30.09.2018) ஞாயிறு
ஐப்பசி -13 (30.10.2018) செவ்வாய்
கார்த்திகை -12 (28.11.2018) புதன்
மார்கழி -12 (27.12.2018) வியாழன்
தை -12 (26.01.2019) சனி
மாசி -12 (24.02.2019) ஞாயிறு
பங்குனி -12 (26.03.2019) செவ்வாய்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விளம்பி வருடத்தில் வரும் இந்த நாட்களில் அம்பாளுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்ய மிக, மிக சிறந்த தினங்களாகும்.
சித்திரை 16 (29.4.2018) ஞாயிறு - அர்த்தநாரீஸ்வர விரதம் (தம்பதிகளுக்குள் அன்யோன்யம் ஏற்படும். பிரிந்த தம்பதியர் சேருவர்)
சித்திரை 17 (30.4.2018) திங்கள் - ச ம்பத் கவுரி விரதம் (வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்)
வைகாசி 31 (14.6.2018) வியாழன் - புன்னாக கவுரி விரதம் (வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் நொடிகள் தீரும்)
ஆனி 2 (16.6.2018) சனி - ரம்பா திருதியை, கதலி கவுரி விரதம் (பெண்களுக்கு அழகு வசீகரம் கூடும். விரைவில் திருமண பாக்கியம் ஏற்படும்)
ஆனி 14 (28.6.2018) வியாழன் - வடசாவித்திரி விரதம் (பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர்)
ஆடி 1 (17.7.2018) செவ்வாய் - சமீ கவுரி விரதம் (தாயும் சேயும் நலமாக இருப்பர்)
ஆடி 11 (27.7.2018) வெள்ளி - கோகிலா விரதம் (குரல் வளமை ஏற்பட்டுப் பெயரும் புகழும் கிடைக்கும்)
ஆடி 28 (13.8.2018) - ஸ்வர்ண கவுரி விரதம் (தங்கம் வாங்கும் யோகம் ஏற்படும். பெண்கள் தீர்க்க சுமங்கலியாயிருப்பர்)
ஆடி 30 (15.8.2018) புதன் - பணி கவுரி விரதம் (நோய் நொடிகள் தீரும். தனக்கும் கணவனுக்கும் தொழில் விருத்தி ஏற்படும்)
ஆவணி 1 (17.8.2018) வெள்ளி - சீதளா விரதம் (உடற்பிணிகள் தீரும். ஆரோக்கியம் ஆயுள் பெருகும்)
ஆவணி 27 (12.9.2018) புதன் - ஹரிதாளிகா கவுரி விரதம் (நோய்கள் தீரும். ஆரோக்கியம் ஏற்படும். பெண்கள் தீர்க்க சுமங்கலியாயிருப்பர். உயிருக்கு பாதுகாப்பு கிடைக்கும்).
புரட்டாசி 2 (18.9.2018) செவ்வாய் - அதுக்க நவமி விரதம் (துக்கங்கள் விலகும்).
புரட்டாசி 8 (24.9.2018) திங்கள் - உமா மகேஸ்வர விரதம் (பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். தம்பதிகள் ஒற்றுமையாக இருப்பர்)
ஐப்பசி 10 (27.10.2018) சனி - சந்திரோதய கவுரி விரதம் (திருமணத் தடைகள் நீங்கும். ஆயுள் பெருகும். மன அமைதி ஏற்படும்)
ஐப்பசி 21 (7.11.2018) புதன் - கேதார கவுரி விரதம் (லட்சுமி கடாட்சம் பெருகும். பெண்கள், ஆண்கள் நோயின்றி வாழ்வர்)
கார்த்திகை 23 (9.12.2018) ஞாயிறு - திந்த்ரிணீ கவுரி விரதம் (சனி தோஷம், நவக்கிரக தோஷம் விலகும்)
கார்த்திகை 24 (10.12.2018) திங்கள் - அபியோக திருதியை (தொழில் துறை வளர்ச்சி, திடீர் தனலாபம் ஏற்படும்)
பங்குனி 1 (15.3.2019) வெள்ளி - சம்பத் கவுரி விரதம் (சகல விதத்திலும் செல்வாக்குடன் பெண்கள் தீர்க்க சுமங்கலியாயிருப்பர்)
பங்குனி 25 (8.4.2019) திங்கள் - சவுபாக்கிய கவுரி விரதம் (சகல சவுபாக்கியங்களும் பெற்று நீடூழி வாழ்வர்)
இந்நாட்களில் வீட்டில் கலசம் வைத்து அம்பாளை வழிபட மேற்கூறிய சுபங்கள் யாவும் நிகழும். குறைந்தபட்சம் அன்றைய தினம் வீட்டில் அம்பாள் படத்திற்கும் கோவிலுக்கும் சென்று அம்பாளுக்கு விளக்கு வைத்து வர வேண்டும்.

ஏப்ரல் 14-ம் தேதி விளம்பி வருடம் தொடங்கியுள்ளது. விளம்பி வருடம் முழுவதும் வரும் முக்கியமான விரத நாட்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
26.4.2018 வியாழன் புதன் ஜெயந்தி அன்று நவக்கிரகத்தில் புதனுக்கு பச்சை ஆடை உடுத்தி பச்சை மலர்களால் அர்ச்சனை செய்து 5 நெய் விளக்குகள் வைக்க புதன் தோஷம் விலகும்.
28.4.2018 சனி ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி அன்று நரசிம்மரை வழிபட பிறவிக்கடன்கள் தீரும்.
29.4.2018 ஞாயிறு சித்ரா பவுர்ணமி அன்று சத்யநாராயண பூஜை செய்தால் உரிய பலன்களைப் பெறலாம்.
28.5.2018 திங்கள்-வைகாசி விசாகம்.
14.6.2018 வியாழன் கங்கா பூஜை. இன்று முதல் 10 நாட்கள் கங்கையில் ஸ்நானம் செய்தாலும் காசியில் இருந்து பெறப்பட்ட கங்கா தீர்த்தத்தை பூஜை செய்து தலையில் தெளித்துக் கொண்டாலும் சகல பாப நிவர்த்தி பெறலாம்.
16.6.2018 சனி ரம்பா திருதியை இன்று கவுரி பூஜை செய்ய திருமணத் தடை ஏற்பட்ட பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.
20.6.2018 புதன் ஆனித் திருமஞ்சனம் அன்று ஸ்ரீநடராஜர் அபிஷேகம் தரிசித்தால் தொழில் போட்டியில் வெற்றி கிடைக்கும்.
22.6.2018 வெள்ளி சக்கரத்தாழ்வார் ஜெயந்தி.
27.6.2018 புதன் ஜேஷ்டாபிஷேகம் அன்று அபிஷேக பிரார்த்தனைகள் நிறைவேற்ற ஏற்ற தினமாகும்.
28.6.2018 வியாழன் வடசாவித்திரி விரத தினம். இன்று கவுரி பூஜை செய்து சத்தியவான் சாவித்திரி கதை படித்தால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாயிருப்பர்.
27.7.2018 வெள்ளி குரு பூர்ணிமா இன்று ஆசிரியர்களுக்கு உதவிகள் செய்யலாம். வஸ்திர தானம் செய்யவும்.
3.8.2018 வெள்ளி ஆடி பதினெட்டு அன்று புண்ணிய நதிகளுக்கு பூஜை செய்து திருமாங்கல்யம் மாற்ற பெண்கள் தீர்க்க சுமங்கலியிருப்பர்.
5.8.2018 ஞாயிறு ஆடிக்கிருத்திகை அன்று அம்பாளையும், முருகனையும் வழிபாடு செய்யவும்.
13.8.2018 திங்கள் சொர்ண கவுரி விரதம் ஸ்ரீஆண்டாள் திருவாடிப்பூரம் இன்று கவுரி பூஜை செய்ய பெண்கள் பொன் நகைகளுடன் தீர்க்க சுமங்கலியாயிருப்பர்.
15.8.2018 புதன் நாக பஞ்சமி, கருட பஞ்சமி அன்று நாக பூஜை செய்யவும். கருட பகவானுக்கு நெய்விளக்கு ஏற்றவும், நாகதோஷம் விலகும்.
24.8.2018 வெள்ளி. பங்காளிகள் ஒன்றுகூடி முன்னோர் களுக்கு வழிபாடும், குலதெய்வ பூஜையும் செய்ய உகந்த நாளாகும்.
24.8.2018 வெள்ளி வரலட்சுமி விரதம் இன்று லட்சுமி பூஜை, துளசி பூஜை செய்யவும்.
25.8.2018 சனி. ஓணம் பண்டிகை, ஸ்ரீஹயக்ரீவ ஜெயந்தி அன்று மாணவர்கள் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரை வழிபட நிறைந்த கல்வி அறிவு பெறுவர்.
27.8.2018 திங்கள். இன்று 1008 முறை காயத்ரி ஜெபம் செய்ய சகல பாப நிவர்த்தி அடையலாம்.
30.8.2018 வியாழன் மகா சங்கடஹர சதுர்த்தி இன்று விநாயகருக்கு அபிஷேகம் செய்ய சர்வ சங்கடங்களும் விலகும்.
2.9.2018 ஞாயிறு கிருஷ்ண ஜெயந்தி.
4.9.2018 செவ்வாய் சனி ஜெயந்தி இன்று நவக்கிரகங்களில் சனி பகவானுக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி கருங்குவளை மலர்களால் அர்ச்சனை செய்து 8 நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சனி தோஷம் விலகும்.
11.9.2018 செவ்வாய் ஜெயந்தி இன்று நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு சிவப்பு வஸ்திரம் சாற்றி சிகப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து 9 நெய் விளக்குகள் வைக்க செவ்வாய் தோஷம் விலகும்.
13.9.2018 விநாயகர் சதுர்த்தி.
21.9.2018 வெள்ளி குரு ஜெயந்தி. இன்று நவக்கிரகங்களில் குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி மஞ்சள் சாமந்தி புஷ்பங்களால் அர்ச்சனை செய்து 3 நெய் விளக்கு வைத்து வர குரு தோஷம் விலகும்.
23.9.2018 ஞாயிறு அனந்த விரதம்.
30.9.2018 ஞாயிறு முதல் புரட்டாசி 25-ந் தேதி (11.10.2018) வியாழன் வரை காவேரி ஆந்த்ய புஷ்கரம் தினங்களாகும். கடந்த வருடம் காவேரி புஷ்கரத்தில் புனித நீராடாமல் வாய்ப்பை தவற விட்டவர்கள் இந்த நாட்களில் காவிரியில் புனித நீராடலாம்.
4.10.2018 வியாழன் ஸ்ரீசுக்கிர ஜெயந்தி இன்று நவக்கிரகங்களில் சுக்கிரனுக்கு வெள்ளை பட்டு வஸ்திரம் சாற்றி வெள்ளை சம்பங்கி மலர்களால் அர்ச்சனை செய்து 6 நெய் விளக்குகள் வைக்க சுக்கிர தோஷம் விலகும்.
8.10.2018 திங்கள் மஹாலய அமாவாசை இன்று முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும் படையல் வைக்கவும் திலஹோமம் செய்யவும் ஏற்ற நாளாகும்
9.10.2018 செவ்வாய் இன்று காமதேனு பூஜைசெய்ய ஏற்ற நாளாகும்.
10.10.2018 புதன் நவராத்திரி ஆரம்பம்.
12.10.2018 வெள்ளி முதல் 12 நாட்கள் தாமிர புஷ்கரம். தாமிரபரணியில் குளித்து தாமிரபரணிக்கரையில் தான தர்மங்கள், தர்ப்பணங்கள், சிராத்தங்கள், தோஷங்கள் செய்ய ஏற்ற காலமாகும். இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் நிகழ்வாகும்.
16.10.2018 செவ்வாய் பத்ரகாளி அவதார தினம். இன்று வீட்டில் தேவி பாகவதம் படித்தாலும் தொழில் ஸ்தாபனங்களில் சண்டி ஹோமம் செய்தாலும் தொழில் விருத்தியும் வழக்குகளில் வெற்றியும் பெறலாம்.
18.10.2018 வியாழன் துலா ஸ்நானம் ஆரம்பம். இம்மாதம் ஒருமுறையாவது ஸ்ரீரங்கம் சென்று காவேரி ஸ்நானம் செய்தால் கங்கையில் ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்கும். இன்று ஆயுத பூஜை. சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நாளாகும்.
19.10.2018 வெள்ளி விஜயதசமி இன்று புதுத்தொழில் தொடங்கவும். வேதம் படிக்கவும், கல்வி சாலைகளுக்கு செல்லவும் உகந்த நாளாகும்.
24.10.2018 புதன் அன்னாபிஷேகம். இன்று இரவு முழுவதும் கண்விழித்து லட்சுமி பூஜை செய்ய வருடம் முழுவதும் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.
4.11.2018 ஞாயிறு கோவஸ்த துவாதசி இன்று பிற்பகல் பிரதோஷ காலத்தில் கன்றையும் வழிபட வீட்டினுள் குழந்தைகளும், பெண்களும் உடல்நலம் பெறுவர்.
5.11.2018 திங்கள் யமதீபம், தனத் திரயோதசி தன்வந்திரி ஜெயந்தி இன்று மாலை பிரதோஷ காலத்தில் வீட்டிற்கு வெளியே கோலமிட்டு நபர் ஒருவருக்கு ஒரு தீபம் வீதம் (குறைந்தது 5 தீபம்) தெற்கு நோக்கி வைக்க வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியம் ஏற்படும். வீட்டில் தன்வந்திரி பகவானை பூஜை செய்யவும், தங்கம் வாங்கவும் உகந்த நாளாகும்.

6.11.2018 செவ்வாய் தீபாவளி. அதிகாலை 3 முதல் 6 மணிக்குள் எண்ணை தேய்த்து குளித்து லட்சுமி பூஜை செய்ய வேண்டும்.
7.11.2018 புதன் கேதார கவுரி விரதம் இன்று 21 ஜோடி வெற்றிலை 21 பாக்கு 21 பழங்கள் வைத்து கவுரி பூஜை செய்யவும். லட்சுமி குபேர பூஜை செய்யவும் இன்று உகந்த நாளாகும்.
9.11.2018 வெள்ளி யமத்துவிதியை இன்று சகோதரி அழைப்பின் பேரில் சகோதரன் சகோதரி வீட்டிற்கு சென்று உணவு அருந்தி பரிசுகளை பரிமாறிக் கொள்ள இரு குடும்பத்தாரும் தீக்காயங்களுடனும் தீர்க்க சுமங்கலியாகவும் இருப்பர்.
13.11.2018 செய்வாய் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம். இன்று முருகனை வழிபட தொழில் வெற்றி கிடைக்கும்.
17.11.2018 சனி முடவன் முழுக்கு இன்று காவிரியில் நீராட சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.
22.11.2018 வியாழன் பரணி தீபம். அண்ணாமலையார் திருக்கார்த்திகை தீபம்.
22.11.2018 வியாழன் சந்திர ஜெயந்தி இன்று நவக்கிரகங்களில் சந்திரனுக்கு வெள்ளை வஸ்திரம் சாற்றி வெள்ளை மலர்களால் அர்ச்சனை செய்து 2 நெய்தீபங்கள் ஏற்றிவர சந்ஙதிரதோஷம் விலகும்.
23.11.2018 வெள்ளி பாஞ்சராத்ர தீபம். இந்த நாட்களில் வீட்டில் தீபம் ஏற்ற லட்சுமி கடாட்சம் பெருகும்.
30.11.2018 வெள்ளி கால பைரவாஷ்டமி இன்று காலபைரவரை வணங்க உகந்த நாளாகும்.
12.12.2018 புதன் நாகபூஜா பஞ்சமி இன்று நாகதோஷ நிவர்த்தி செய்ய உகந்த நாளாகும்.
16.12.2016 ஞாயிறு முதல் 30 நாட்களும் அதிகாலையில் பெருமாள் கோயில் சென்று தினசரி திருப்பாவை 30 பாசுரங்கள் படித்தால் வீட்டில் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் ஏற்படும்.
18.12.2018 செவ்வாய் சர்வ முக்கோடி வைகுண்ட ஏகாதசி இன்று பெருமாள் கோயில் சென்று பரமபத வாசல் கடந்தால் வாழ்க்கை சொர்க்கமாகும்.
23.12.2018 ஞாயிறு ஸ்ரீஆருத்ரா தரிசனம். இன்று நடராஜரை வழிபட்டால் தொழில் போட்டியில் வெற்றி உண்டாகும்.
5.1.2019 சனி ஸ்ரீஆஞ்சநேயர் ஜெயந்தி. இன்று ஆஞ்சநேயரை வழிபட குறைகள் தீரும்.
11.12.2019 வெள்ளி கூடாரைவல்லி இன்று அதிகாலை பெருமாள் கோவில் ஆண்டாள் அருளிய திருப்பாவையில் “கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா” என்று தொடங்கும் பாடலை இருமுறை பாட திருமண பாக்கியமும் தொழிலில் வெற்றியும் ஏற்படும்.
14.1.2019 திங்கள் போகிப்பண்டிகை.
15.1.2019 செவ்வாய் பொங்கல் பண்டிகை.
16.1.2019 புதன் மாட்டுப் பொங்கல் காமதேனுவுக்கு பூஜை செய்யவும்.
21.1.2019 திங்கள் தைப்பூசம் இன்று முருகனை வழிபடவும்.
5.2.2019 செவ்வாய் முதல் 30 நாட்கள் புனித நீராடவும் தோஷ பரிகாரங்கள் செய்யவும் ஏற்ற காலமாகும்.
9.2.2019 சனி வரகுந்த சதுர்த்தி இன்று மல்லிகைப் பூவால் சிவபூஜை செய்ய காரியத் தடைகள் நீங்கும்.
10.2.2019 ஞாயிறு வசந்த பஞ்சமி இன்று வீட்டில் லட்சுமி பூஜை செய்ய வருடம் முழுவதும் வசந்தமாகும்.
12.2.2019 செவ்வாய் ரத சப்தமி. இன்று பெருமாள் கோவில்களில் சூரிய பிரபையுடன் கூடிய ரத சப்தமி உற்சவம் நடைபெறும். அதை தரிசித்தால் முன்னோர்கள் திருப்தியடைவர். திருப்பதி திருமலையில் நடக்கும் ரத சப்தமி உற்சவம் மிக விசேஷம். இன்று நவக்கிரகங்களில் சூரியனுக்கு சிகப்பு வஸ்திரம் அணிவித்து சிகப்பு மலர்களால் அர்ச்சனை செய்து ஒரு நெய்விளக்கு வைத்துவர சூரிய தோஷம் விலகும்.
19.2.2018 செவ்வாய் ஆகாமாவை மாசி மகம் இன்று புனித நீராடி தோஷ பரிகாரங்கள் செய்ய ஏற்ற நாளாகும்.
4.3.2019 திங்கள் மகா சிவராத்திரி இன்று இரவு முழுவதும் கண் விழித்து 4 ஜாமங்களிலும் சிவபூஜை செய்ய அல்லது சிவ அபிஷேகத்தை நேரில் கண்டு களித்தால் சகல பாவங்களும் விலகி கைலாச பாக்கியம் கிடைக்கும்.
6.3.2019 புதன் சிறிய திருவடி இன்று ஸ்ரீராமரையும் ஆஞ்சநேயரையும் தரிசிக்க பிரிந்த நண்பர்கள் கூடுவர்.
15.3.2019 காரடையான் நோன்பு இன்று அதிகாலை 4- 5 கௌரி பூஜை செய்து சத்தியவான் சாவித்திரி கதை படித்தால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்.
21-3-2019 வியாழன் பங்குனி உத்திரம் இன்று கோயில்களுக்குச் சென்று திருக்கல்யாண உற்சவம் தரிசித்தால் விரைவில் திருமணமாகும். ஸ்ரீரங்கம் சேர்த்தி உற்சவம் தரிசித்தால் பிரிந்த தம்பதியர் கூடுவர். கணவர்-மனைவிக்குள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கும் வகையில் அன்னியோன்யம் ஏற்படும்.
13.4.2019 சனி ஸ்ரீராம நவமி. அன்று பகல்வரை விரதம் இருந்து ஸ்ரீராமரை வழிபட பித்ரு தோஷங்களும் சூரிய தோஷமும் விலகும்.

இந்த விரத பூஜையை செவ்வாய்க்கிழமை ஆரம்பித்தால் 9 வாரம் செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் தொடர்ந்து செய்ய வரவேண்டும்.
இந்த விரத பூஜையை செவ்வாய்க்கிழமை ஆரம்பித்தால் 9 வாரம் செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணிக்கு மேல் 4.30 மணிக்குள் ராகு காலத்தில் தொடர்ந்து செய்ய வேண்டும்.
வெள்ளிக்கிழமை ஆரம்பித்தால் தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் ராகு காலத்தில் செய்ய வேண்டும்.
முதல்வாரம் ஒரு எலுமிச்சை பழத்தை நறுக்கி இரண்டு பாகங்களாக்கி சாறை வெளியேற்றி இரண்டு மூடியிலும் எண்ணெய் ஊற்றி துர்க்கை அம்மன் சந்நிதியில் விளக்கேற்ற வேண்டும். இரண்டாவது வாரம் இரண்டு எலுமிச்சை பழத்தை நறுக்கி நான்கு தீபங்கள் ஏற்ற வேண்டும்.
மூன்றாவது வாரம் ஆறு என்று ஒவ்வொரு வாரமும் கூட்டிக் கொண்டே 9-வது வாரம் 18 விளக்குகள் ஏற்றி பூஜையை முடிக்க வேண்டும். கடைசி வாரம் பூஜை செய்யும் நாளில் எலுமிச்சை மாலை துர்க்கை அம்மனுக்கு சூட்டி, எலுமிச்சை சாதம், சுண்டல், உளுந்த வடை, தேன், பானகரம், வெற்றிலை பாக்கு, தேங்காய் பழம் படைத்து அர்ச்சனை செய்து நீல வண்ண மலர்களால் பூஜிக்க வேண்டும்.
1. தேங்காயை துருவி அதனுடன் நாட்டுச் சர்க்கரை, காய்ந்த திராட்சை, முந்திரி, பேரிச்சம் பழம், பாதாம் பருப்பு, விஸ்தாப்பருப்பு, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், ஏலக்காய் இவற்றை கலந்து தேனை அதன்மீது ஊற்றி நிவேத்யத்திற்கு இதை வைக்க வேண்டும். ராகுதோஷ பரிகாரத்திற்கு இது மிகச் சிறந்ததாகும்.
2. உளுந்தவடை, தயிர்சாதம், புளியோதரை, உளுத் தம்பருப்பு சாதம் இவற்றை ஏழைகளுக்கு அன்னதானமாக வழங்கலாம்.
3. பாம்பு புற்றிற்கு பால் ஊற்றி ராகு காலத்தில் பூஜை செய்து வரலாம்.
4. கருமாரி அம்மனை வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் அர்ச்சனை செய்து வழிபட்டு வரலாம்.
5. சிவன் கோவிலுக்குச் சென்று சிவன், பார்வதியை வழிபட்டு அங்குள்ள நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கு கருப்பு வண்ணம் கலந்த பட்டாடை சாத்தி மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்து உளுந்து தானம் செய்து வரவும். நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வரவேண்டும்.
6. நாகதோஷம் உள்ளவர்கள் புதியதாக நாகர் செய்து சிவன் கோவிலில் பிரதிஷ்டை செய்யலாம்.
7. ராகு ஜாதகத்தில் எந்த கிரகத்தினுடைய வீட்டில் உள் ளதோ அந்த கிரகத்திற்குரிய கிழமையை பார்த்து அந்த நாளில் இரவில் படுத்து உறங்கும்போது தலையணைக்கடியில் கருப்பு பேப்பரில் சிறிதளவு உளுந்து மடித்து வைத்து வரவும். காலையில் அதை எடுத்து சாமிபடம் முன் வைத்து விடவும். இவ்வாறு 9 வாரங்கள் செய்து வரவேண்டும்.
பத்தாவது வாரம் அதைப் பிரித்து புதிய கருப்பு துணியில் கட்டி கிழக்கு முகமாக அமர்ந்து தலையை மூன்று முறைச் சுற்றி கடலிலோ ஆற்றிலோ எறிந்து விட வேண்டும். கிணற்றில் போடக்கூடாது. அதன்பிறகு சிவன் கோவில் அல்லது நாகத்தை தலைகவசமாக அணிந்த அம்மன் கோவிலுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வர வேண்டும்.
8. திருநாகேஸ்வரம் சென்று ராகுபகவானுக்கு பால் அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து வழிபட்டு வரவும்.
9. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீராமானுஜருக்கு ராகு காலத்தில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம்.
10. சரபேஸ்வரரை ராகு காலத்தில் விரத வழிபட்டு அர்ச்சனை செய்து வரலாம்.
11. கோமேதகத்தை மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்ளலாம். ஜோதிடரின் ஆலோசனைப்படி ஜாதகத்தை காண்பித்து அணியலாமா? என்று கேட்டு எப்போது, எப்படி, எந்த நாளில் அணியலாம் என்று கேட்டு அணியவும்.

நடந்து வரும் விளம்பி வருடத்தில் விநாயகருக்கு உகந்த விரத நாட்கள் எந்நெத்த நாட்களில் வருகிறது என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
நடந்து வரும் விளிம்பி வருடத்தில் விநாயகருக்கு உகந்த விரத நாட்கள் எந்நெத்த நாட்களில் வருகிறது என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மாத சதுர்த்தி நாட்கள்
வைகாசி - 04 (18.05.2018) வெள்ளி
ஆனி - 03 (17.06.2018) ஞாயிறு
ஆனி - 32 (16.07.2018) திங்கள்
ஆடி - 29 (14.08.2018) செவ்வாய்
ஆவணி - 28 (13.09.2018) வியாழன்
புரட்டாசி - 26 (12.10.2018) வெள்ளி
ஐப்பசி - 25 (11.11.2018) ஞாயிறு
கார்த்திகை - 25 (11.12.2018) செவ்வாய்
மார்கழி - 26 (10.01.2019) வியாழன்
தை - 26 (09.02.2019) சனி
மாசி - 26 (10.03.2019) ஞாயிறு
பங்குனி - 26 (09.04.2019) செவ்வாய்
சங்கடஹர சதுர்த்தி நாட்கள்
சித்திரை - 20 (03.05.2018) வியாழன்
வைகாசி - 19 (02.06.2018) சனி
ஆனி - 18 (31.07.2018) திங்கள்
ஆடி - 15 (31.07.2018) செவ்வாய்
ஆவணி - 14 (30.08.2018) வியாழன்
புரட்டாசி - 12 (28.09.2018) வெள்ளி
ஐப்பசி - 10 (27.10.2018) சனி
கார்த்திகை - 10 (26.11.2018) திங்கள்
மார்கழி - 10 (25.12.2018) செவ்வாய்
தை - 10 (24.01.2019) வியாழன்
மாசி - 10 (22.02.2019) வெள்ளி
பங்குனி - 10 (24.03.2019) ஞாயிறு
மாத சதுர்த்தி நாட்கள்
வைகாசி - 04 (18.05.2018) வெள்ளி
ஆனி - 03 (17.06.2018) ஞாயிறு
ஆனி - 32 (16.07.2018) திங்கள்
ஆடி - 29 (14.08.2018) செவ்வாய்
ஆவணி - 28 (13.09.2018) வியாழன்
புரட்டாசி - 26 (12.10.2018) வெள்ளி
ஐப்பசி - 25 (11.11.2018) ஞாயிறு
கார்த்திகை - 25 (11.12.2018) செவ்வாய்
மார்கழி - 26 (10.01.2019) வியாழன்
தை - 26 (09.02.2019) சனி
மாசி - 26 (10.03.2019) ஞாயிறு
பங்குனி - 26 (09.04.2019) செவ்வாய்
சங்கடஹர சதுர்த்தி நாட்கள்
சித்திரை - 20 (03.05.2018) வியாழன்
வைகாசி - 19 (02.06.2018) சனி
ஆனி - 18 (31.07.2018) திங்கள்
ஆடி - 15 (31.07.2018) செவ்வாய்
ஆவணி - 14 (30.08.2018) வியாழன்
புரட்டாசி - 12 (28.09.2018) வெள்ளி
ஐப்பசி - 10 (27.10.2018) சனி
கார்த்திகை - 10 (26.11.2018) திங்கள்
மார்கழி - 10 (25.12.2018) செவ்வாய்
தை - 10 (24.01.2019) வியாழன்
மாசி - 10 (22.02.2019) வெள்ளி
பங்குனி - 10 (24.03.2019) ஞாயிறு
பிள்ளையார் நோன்பு வழிபாட்டின் மூலமாக தனவிருத்தியும், தானிய விருத்தியும், இனத்தார் பகை மாறுதலும், எடுத்த செயலை எளிதில் முடிக்கும் ஆற்றலும் கிடைக்கும்.
நாம் ஒரு காரியத்தை செய்யத் தொடங்கும் முன்பாக முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானை வழிபடுவது வழக்கம். அதைப்போல, திருக்கார்த்திகை நாளிலிருந்து 21 நாட்கள் தொடர்ந்து விரதமிருந்து பிள்ளையாரை வழிபட்டு வரவேண்டும்.
ஒவ்வொரு நாளும் ஒரு நூல் திரி தனியாக எடுத்து வைக்க வேண்டும். 21-வது நாளில் சஷ்டியும், சதயமும் கூடும் நேரத்தில் ஆவல்களை நிறைவேற்றும் ஆனைமுகன் சன்னிதியில் ஐந்து வகை பொரி வைத்து, ஆவாரம் பூ அருகில் வைத்து, கருப்பட்டியில் பணியாரம் செய்து கணபதியை வழிபட வேண்டும். 21 நாட்கள் எடுத்து வைத்த 21 திரியையும் ஒரே திரியாக்கி வெல்லம் இணைந்த அரிசி மாவை நடுவில் வைத்து இழை எடுத்துக் கொள்வது வழக்கம்.
இந்த வழிபாட்டின் மூலமாக தனவிருத்தியும், தானிய விருத்தியும், இனத்தார் பகை மாறுதலும், எடுத்த செயலை எளிதில் முடிக்கும் ஆற்றலும் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் வாரிசு பிறக்கும் என்பதும் நம்பிக்கை. ஐந்து வகைப் பொரி என்பது - நெல் பொரி, கம்பு பொரி, சோளப்பொரி, அவல் பொரி, எள்ளுப் பொரி ஆகியன ஆகும்.

செவ்வாய் தோஷம், நாக தோஷம் போன்றவற்றிற்கும் ராகு கால பூஜையை உரிய விரதமிருந்து செய்ய வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
எலுமிச்சை விளக்கேற்றும் முறை ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுகிறது. எலுமிச்சை ஆகும். பழத்தை நறுக்கும்போது ஐம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மூடியை திருப்பும்போது க்ரீம் என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். அதில் பஞ்சு திரியை இடவேண்டும். எண்ணெய் ஊற்றும் போது க்லீம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
இந்தவிளக்கை துர்க்கையின் முன் வைத்து ஏற்றும்போது சாமுண்டாய விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும். விளக்கேற்றிய பிறகு கோயிலை ஒன்பது அல்லது 21 முறை சுற்றிவர வேண்டும். ஐம் என்ற சொல் சரஸ்வதியையும், க்ரீம் என்ற சொல் லட்சுமியையும், க்லீம் என்ற சொல் காளியையும் குறிக்கும்.
சாமுண்டாய விச்சே என்ற சொல்லுக்கு சரஸ்வதி கடாட்சம், லட்சுமி கடாட்சம், காளி கடாட்சம் ஆகியவற்றை வழங்கும் தெய்வமே என பொருள்.
தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும், குடும்பம் மற்றும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும், விரதமிருந்து துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும். ஒன்பது வாரங்களுக்கு விரதமிருந்து இந்தப் பூஜையை செய்ய வேண்டும்.
எலுமிச்சம்பழத்தை அறுத்து, சாற்றைப் பிழிந்து விட்டு, அந்த மூடியைப் புரட்டிப்போட்டு, அதில் நெய்யை ஊற்றி, சிறிய திரியைப்போட்டு, தீபம் வைத்து வழிபடுவது வழக்கம். அப்போது ‘மங்கல சண்டிகா ஸ்தோத்திரம்‘ என்னும் வழிபாட்டு மந்திரப் பாடலைப் படிப்பார்கள். ‘மங்கலன்’என்பது செவ்வாய்கிரகத்தின் பெயர்களில் ஒன்று. ஆகவேதான் ‘மங்கல சண்டிகா’ என்ற பெயர்.
செவ்வாய்க்கும் ராகுவுக்கும் கிரகப் பதவி கிடைப்பதற்காக அவர்கள் சண்டிகையை வழிபட்டார்கள் என்ற ஐதீகம். முறையே அவர்களுக்குரிய நாள், நேரம் ஆகியவற்றில் இந்தப் பூஜையைச் செய்தால் காரியசித்தியும் சண்டிகையின் பேரருளும் கிட்டும். ஆகவேதான் செவ்வாய் தோஷம், நாக தோஷம் போன்றவற்றிற்கும் இந்தப் பூஜையை உரிய விரதமிருந்து செய்கிறார்கள்.

இந்த அட்சயத் திருதியை நாளில் விரதமிருந்து வழிபாடு செய்வது மட்டுமின்றி, தானங்களும் உதவிகளும் செய்து வந்தாலே நம் வாழ்வில் செல்வங்கள் பெருகி வளரும்.
18-4-2018 அட்சயத் திருதியை
மனிதர்கள் அனைவருக்கும் தேவை யானது பணம். பை நிறையப் பணம் இருப்பவருக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் மற்றவருக்கு கிடைப்பதில்லை. அருள் இல்லாருக்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை எனும் வாக்கின்படி, செல்வம் இல்லாதவர்களை சக மனிதர்களும் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதை கண்கூடாகக் காணமுடிகிறது.
உழைப்பும் முயற்சியும் இருந்தாலும்.. அதோடு செல்வத்துக்கு அதிபதியான அன்னை மகாலட்சுமியின் அருள்மிகுந்த கடைக்கண் பார்வையும் கிடைத்தால் மட்டுமே வாழ்வில் வெற்றி பெற முடியும். அந்த வகையில் நம் முன்னோர்கள் செல்வம் வேண்டி மகாலட்சுமியை பூஜிக்க ஏற்ற சிறப்பான நாளாகத் தேர்ந்தெடுத்ததுதான், தமிழ் மாதமான சித்திரை மாத அமாவாசைக்கு பின் வளர்பிறையில் வரும் அட்சயத்திருதியை. திதிகளில் சிறப்புமிக்க திதிகளான பவுர்ணமி திதி, அமாவாசை திதி, சதுர்த்தி திதி, ஏகாதசி திதிகளின் வரிசையில் இந்த அட்சயத்திருதியை திதியும் இணைந்து, வாழ்விற்குத் தேவையான செல்வத்தை வழங்கும் சிறப்பை பெற்று மக்களின் கவனத்தை ஈர்க்கிறது.
‘சயம்’ என்றால் தேய்தல் அல்லது குறைதல் என்பது பொருள். அட்சயம் என்றால் குறைவில்லாதது, அள்ள அள்ளக் குறையாதது என்று அர்த்தம். பஞ்சபாண்டவர்களுக்கு சூரியனால் வழங்கப்பட்ட அட்சயப்பாத்திரத்தில், எடுக்க எடுக்க குறையாத உணவு கிடைத்தது போன்று, இந்த அட்சயத் திருதியை நன்னாளில் மகாலட்சுமியை வணங்கி என்றும் குறையாத செல்வங் களைப் பெறலாம்.
அட்சயத் திருதியையின் சிறப்புகளாக இந்து சமயபுராணங்கள் பல ஆன்மிக நிகழ்வுகளை பட்டியலிடுகிறது. யுகங்களில் முதல் யுகமான கிருதயுகம் தோன்றியது இந்நாளில்தான் என்றும், பிரம்மன் பூமியைத் தோற்றுவித்ததும், பரசுராமர் அவதாரம் நிகழ்ந்ததும், பகீரதன் கடும் தவம் செய்து ஆகாயத்திலிருந்த கங்கையை பூமிக்கு வரவைத்ததும், ஈஸ்வரனுக்கு அன்னை பராசக்தி தன் கையிலிருந்த அட்சயப் பாத்திரத்தில் இருந்து உணவளித்ததும் இந்த அட்சயத் திருதியை நாளில்தான் என்கிறது புராணங்கள். தீர்த்தங்கரர்களில் ஒருவரான ரிஷபதேவரின் நினைவாகவும் கருதப்பட்டு, சமணர்களுக்கும் இந்நாள் புனிதநாள் ஆகிறது.
அட்சயத் திருதியை நாளில்தான் திருப்பதி வெங்கடாசலபதி, தன் திருமணத்துக்காக குபேரனிடம் கடன் பெற்றாராம். குபேரனும் இதே நன்னாளில் மகாலட்சுமியை மனதார வேண்டி வணங்கி, தனது செல்வத்தை என்றும் குறையாமல் பெருக்கிக் கொண்டாராம். அதனால்தான் இந்த நாளில் குபேர லட்சுமி பூஜை செய்வது சிறப்புக்குரியதாகிறது. அலுவலக கணக்குகள், தொழில் சார்ந்த புத்தகங்கள் போன்ற வற்றை லட்சுமி பூஜையில் வைத்து வளம் பெறலாம்.
லட்சுமி குபேரன் வாசம் செய்ய சில வாஸ்து முறை கூறப்பட்டுள்ளது. அதன்படி வீட்டின் வட கிழக்கு பாகத்தில் தானியங்களை சேமித்து வைக்க வேண்டும். தென்மேற்கு மூலையில் குழந்தைகள் படிக்கும் அறையை அமைக்க வேண்டும். வீட்டு உபயோகப் பொருட்களையும் அதே பாகத்தில் வைக்கலாம். வடமேற்கு பகுதி பூஜை அறைக்கு சிறந்த இடம். வடக்கு திசை பொன் நகை வைப்பதற்கும், அக்னி மூலை சமையல் அறைக்கும் சிறப்பானது. பொதுவாக மனையின் தெற்கு பாகத்தில் குப்பைகள் இல்லா மல் பார்த்துக் கொண்டாலே, வீட்டில் லட்சுமி கடாட்சமும், குபேரன் ஆசியும் கிடைக்கும்.
கடந்த சில ஆண்டுகளாக மக்களிடையே, அட்சயத் திருதியை நாளில் பொன், பொருள் வாங்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அன்றைய தினம் பொன் நகை வாங்கினால் அது பல்கிப்பெருகும் என்று சிலர் நம்பு கிறார்கள். இதனால் அன்றைய தினம் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதைக் காணலாம். அட்சயத் திருதியை தினத்தில் குண்டுமணி அளவு தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்பதற்காக, கடன் வாங்குவதற்குக் கூட சிலர் தயங்குவதில்லை. ஆனால் தங்கம் வாங்கினால் மட்டும் தான் மகாலட்சுமியின் அருள் கிடைக்குமா? அதுவும் கடன் வாங்கி ஒரு பொருளை வாங்க வேண்டுமா? என்று யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.
அன்னை மகாலட்சுமி பொன்னிலும் பொருளிலும் மட்டும் இல்லை. நம் நாட்டின் வளத்தைக் குறிப்பிடும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உயிர்வளர்க்கும் தானியங்களிலும், மஞ்சள் போன்ற மங்கலப்பொருட்களிலும் கூட வாசம் செய்கிறாள். எனவே அட்சயத் திருதியை அன்று, தானியங்களையோ, உப்பையோ அல்லது மஞ்சளையோ வாங்கி வீட்டில் வையுங்கள். நல்ல எண்ணங்களோடு நல்ல செயல்களும் உள்ள இடத்தில் கண்டிப்பாக அன்னையின் அருள் கிடைக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.
இதுதவிர மகிழ்வித்து மகிழ் எனும் கருத்திற்கேற்ப, லட்சுமியை மனதார வணங்கி ஆதரவற்ற ஏழைகளுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கித்தந்து அவர்களை மகிழ்விக்கலாம். தானங்களில் சிறந்த அன்னதானம், வஸ்திர (உடை) தானம் போன்றவற்றுடன், கல்வி பயில வசதியின்றித் தவிக்கும் பிள்ளைகளுக்கு உதவுவது, புதிய செயல்களைத் தொடங்குவது, மரக்கன்றுகளை நடுவது, முதியோர்களுக்கு சேவை செய்வது போன்றவைகளை மனமுவந்து செய்து வந்தாலே நம் வாழ்வில் வளங்கள் பெருகி சிறக்கும். ஏழையின் சிரிப்பில்தான் இறைவன் இருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்வோம்.
இந்த அட்சயத் திருதியை நாளில் மட்டுமின்றி, என்றுமே தானங்களும் உதவிகளும் செய்து வந்தாலே நம் வாழ்வில் செல்வங்கள் பெருகி வளரும்.

துர்க்கை அம்மனின் அருளைப் பெற செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து துர்க்காதேவி வழிபட்டால் எண்ணங்கள் நிறைவேறும்.
எந்தவித தோஷங்கள் தாக்கி கஷ்டப்பட்டாலும் துர்க்கை அம்மன் அதனை அகற்றி அருள்புரிவாள். துர்க்காதேவிக்கு உகந்த நாட்கள் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களாகும். இருப்பினும், மிகவும் உகந்த காலம் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 வரையிலான ராகு காலமே பூஜைக்கு சிறப்பான நேரமாகும். அன்னையின் அருளைப் பெற செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து தலைக்குப்பூச்சூடி, நெற்றிக்கு விபூதி, குங்குமம் வைத்துக்கொண்டு துர்க்காதேவியை வழிபட கோவிலுக்குச் செல்லவேண்டும்.
துர்க்கை பூஜைக்கு உகந்த மலர் செவ்வரளிப்பூவாகும். நல்ல மஞ்சள் நிறமுடைய பழுத்த எழுமிச்சம் பழங்களை வாங்கி இரண்டாக அறுத்துச்சாறு பிழிந்துவிட்டு நெய் ஊற்றி திரிபோட்டு, கொளுத்தி ஒளிப்பெற செய்யவேண்டும். ஒரே ஒரு எலுமிச்ச விளக்கு ஏற்றக்கூடாது ஜோடியாகத்தான் ஏற்ற வேண்டும்.
திருமணம் ஆகவேண்டிய பெண்கள் இதனைச் செய்தால் நல்ல வரன் கிடைத்து குடும்பம் செழிப்புடன் இருக்கும். எலுமிச்சம் பழ நெய்விளக்குகள் ஏற்றிய பின்னர் அந்த ஒளியில் துர்க்காதேவியின் திருமுகத்தை உற்றுப்பாருங்கள். தன்னை மறந்து அன்னையின் மீது உங்கள் மனதை ஐக்கியப்படுத்துங்கள்.
அவளது பேரருள் தங்களுக்கு கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறி நல்வாழ்வுப் பெறுவீர்கள். அன்னையின் சுற்று பிரகாரத்தை பதினெட்டு தரம் வலம் வந்து, கொடி மரத்தையும் பதினொரு தரம் சுற்றிவிட்டு, அம்மனின் சன்னதியின் எதிரில் சிறிதுநேரம் அமர்ந்து விட்டு எழும்போது அங்கிருந்தவாறே அம்மனை வணங்கிவிட்டு வர வேண்டும்.