என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    சான்றோர்கள், விரதம் முடிந்த பிறகு நாம் சாப்பிட வேண்டுமென்று சொல்லிய உணவுகளைச் சாப்பிட்டால் உடல் பலம் பெறும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    விரத நாட்களில் சில வகை உணவுகளைச் சாப்பிடலாம். சிலவகை உணவுகளை சாப்பிடக்கூடாது.

    சான்றோர்கள், விரதம் முடிந்த பிறகு நாம் சாப்பிட வேண்டுமென்று சொல்லிய உணவுகளைச் சாப்பிட்டால் உடல் பலம் பெறும். சாப்பிடக்கூடாது என்று கூறிய உணவுகளைச் சாப்பிட்டால் ஆரோக்கியப் பாதிப்புகள் ஏற்படும்.

    அந்த அடிப்படையில் ஏகாதசியன்று விரதமிருப்பவர்கள் துவாதசியன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய் சாப்பிட வேண்டும்.

    துவாதசியன்று புடலங்காய் சாப்பிடக் கூடாது. பகல் தூக்கம் வைத்துக் கொள்ளக் கூடாது. தம்பதியர்கள் தாம்பத்ய உறவு கூடாது.

    சுபகாரியப்பேச்சுகள் நடைபெறும் நாளில் வீட்டில் பாகற்காய், கசப்புப் பொருள் உணவு சமைக்கக் கூடாது. ஒரு கோட்டில் மாக்கோலம் போடக்கூடாது. அசுப காரியங்கள் நடைபெறும் வீட்டில் இரட்டை கோட்டில் கோலம் போடக்கூடாது.

    துளசி மாடத்திற்கும், வீட்டு பூஜையறையிலும் குடும்ப உறுப்பினர்களே விளக்கேற்றிக் கோலம் போடுவது நல்லது. மாதப்பிறப்பு அன்றும், அமாவாசை அன்றும் துளசி பறிக்கக்கூடாது. அமாவாசை அன்று  அசைவம் சாப்பிடக்கூடாது.
    செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் தாக்கத்தை மாற்ற, நரசிம்மர் விரத வழிபாடு நன்மை அளிப்பதாக அமையும். மேலும் அனைத்து விதமான தீய சக்திகளிடம் இருந்து நரசிம்மர் காத்தருள்வார்.
    தேவர்களையும், முனிவர்களையும் துன்பப்படுத்தி வந்த இரண்யனை, நரசிம்ம அவதாரம் எடுத்து திருமால் அழித்தார். ஆனால் இரண்யனுக்கு அஞ்சி வேறு பகுதிகளில் ஒளிந்து வந்த முனிவர்கள், இரண்ய வதத்திற்குப் பிறகு, ஸ்ரீமன் நாராயணனிடம் வந்து தங்களுக்கு நரசிம்ம திருக்கோலத்தை காட்டியருளும்படி வேண்டினர்.

    அதற்கிசைந்த பெருமாள், நரசிம்ம அவதாரத்தை அவர்களுக்குக் காட்டி அருளினார். அவ்வாறு நரசிம்ம அவதாரத்தை முனிவர்களுக்கு காட்டி அருளிய தலம் தமிழகத்தில் எட்டு இருக்கிறது. அவை சோளிங்கர் நரசிம்மர், நாமக்கல் நரசிம்மர், அந்திலி நரசிம்மர், சிங்கப் பெருமாள் கோவில் (தென் அகோபிலம்), பரிக்கல் நரசிம்மர், சிங்கிரி கோவில் லட்சுமி நரசிம்மர், சித்தனைவாடி நரசிம்மர் ஆகிய தலங்களாகும்.

    நமது ஆன்மிகப் பாதையில் உள்ள தடைகளை நீக்கி ஞானத்தை வழங்க வல்லவர், பகவான் நரசிம்மர். அது மட்டுமின்றி, அனைத்து விதமான தீய சக்திகளிடமிருந்தும் பாதுகாப்பு அளிக்க வல்லவரும் இவரே. மேலும் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் தாக்கத்தை மாற்ற, நரசிம்மர் விரத வழிபாடு நன்மை அளிப்பதாக அமையும்.
    மாதந்தோறும் வருகின்ற பூர்வபட்சச் சதுர்த்தி நாட்களில் விநாயகருக்கு விரதம் இருப்பது மிகவும் விசேஷமானதாகும். இந்த விரதம் குறித்து விரிவாக பாக்கலாம்.
    எந்த செயலை ஆரம்பிப்பதற்கு முன்னர் பிள்ளையாரை வழிபட்ட பின்னரே ஆரம்பிக்கும் வழக்கம் சைவ மக்களிடையை காலாதிகாலமாக நிலவிவருகின்றது. அவரை வழிபட்டுத் தொடங்கினால் செய்கருமம் இடையே எதுவித விக்கினங்களும் இன்றி நிறைவுபெறும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

    மாதந்தோறும் வருகின்ற பூர்வபட்சச் சதுர்த்தி நாட்களும் விநாயகருக்குரிய விரத நாட்களே. சதுர்த்தி விரதம் எனப்படும் இந்த நாட்களிலும் விரதமிருப்பது மிக விசேஷமானதாகும். அவ்வாறு அனுஷ்டிக்க முடியாதவர்கள் விநாயக சதுர்த்தி எனப்படும் ஆவணிச் சதுர்த்தி நாளில் விரதமிருக்கலாம்.

    மாதந்தோறும் விரதமிருக்க விரும்புவோர் ஆவணிச் சதுர்த்தியிலே பூஜை வழிபாடுகளுடன் சங்கல்பபூர்வமாக ஆரம்பித்து (இந்தக் காரணத்துக்காக இந்த விரதத்தை நான் இத்தனை வருடம் கைக்கொள்வேன் என்று சங்கல்பம் பூண்டு) முறைப்படி தவறாமல் தொடர்ந்து கைக்கொள்ளவேண்டும். இருபத்தொரு வருடம் விரதமிருப்பது நன்று. இயலாதெனின் ஏழுவருடங்கள் அனுஷ்டிக்கலாம். அல்லது இருபத்தொன்றுக்குக் குறையாமல் மாத சதுர்த்தி விரதமிருந்து அதையடுத்துவரும் ஆவணிச் சதுர்த்தியில் நிறைவு செய்யலாம்.
    விரமிருந்து ராகு கால பூஜையில் எலுமிச்சை விளக்கேற்றுவது பற்றி புராணங்கள் எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும், காலம் காலமாக இந்த வழக்கம் இருந்து வருகிறது.
    விரமிருந்து ராகு கால பூஜையில் எலுமிச்சை விளக்கேற்றுவது பற்றி புராணங்கள் எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும், காலம் காலமாக இந்த வழக்கம் இருந்து வருகிறது. விளக்கேற்றுவதன் சரியான முறையை பார்க்கலாம்.

    ராகுகால துர்க்கை விரத பூஜையை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்வது அவசியம். அப்போது எலுமிச்சைப் பழத்தை நறுக்கி பிழிந்து அதன் மூடியைத் திருப்பி, எண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கேற்றி அம்மன் முன் வைத்து வணங்குவார்கள்.

    ராகு கால நேரம் தொடங்கிய பிறகே எலுமிச்சைப் பழத்தை நறுக்க வேண்டும். அதற்கு முன்பே நறுக்கி வைத்தல் கூடாது. எலுமிச்சை தேவ கனி என்பதால், அதனை நறுக்கும்போது தோஷங்கள் ஏற்படும். எனவே பழத்தை நறுக்கும்போது ‘ஐம்’ என்ற சரஸ்வதியின் பீஜ மந்திரத்தைச் சொல்ல வேண்டும். பழத்தைப் பிழிந்து விட்டு மூடியை வெளிப்பக்கமாகத் திருப்பும் போது மகாலட்சுமிக்கு உரிய ‘க்ரீம்’ என்ற மந்திரத்தை உச்சரிப்பது அவசியம். தூய்மையான புதிய பஞ்சு திரியை எலுமிச்சை மூடியில் போட்டு, நல்லெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றும்போது ‘க்லீம்’ என்ற தேவியின் மந்திரத்தைக் கூற வேண்டும். எலுமிச்சை விளக்கை ஏற்றும்போது ‘சாமுண்டாயை விச்சே’ என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும்.

    இந்தச் சொல்லுக்கு முப்பெரும் தேவியரான அம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் அருளை ஒருசேரத் தரும் சண்டிகா தேவியே அருள்க என்று பொருள்.
    ராகு பூஜைக்கென்று சில சங்கல்பங்கள் செய்து, விரதமிருந்து பக்தர்கள் குறையை நீக்கலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ராகு பூஜைக்கென்று சில சங்கல்பங்கள் செய்து, விரதமிருந்து பக்தர்கள் குறையை நீக்கலாம். அவை,

    1. திருமணத் தடையை நீக்குதல்
    2. வழக்குகளில் வெற்றி பெறுதல்

    3. குடும்பச் சிக்கல்களை நீக்கும் என்றும் அனைத்திற்கும் தனித்தனி மந்திரங்கள் இருக்கின்றன.
    1. ராகுகால அஷ்டமி பூஜை செய்தால் - குறைவற்ற வாழ்வைப் பெறலாம்.

    2. ராகுகால மங்களவார பூஜை (செவ்வாய்) செய்பவர்களுக்கு திருமணத் தடைகள் நீங்கும்.
    3. சுக்கரவார பூஜை (வெள்ளி) பூஜை செய்து வழிபட்டால் - நல்ல புகழைத் தருதல், எதிர் பார்ப்பில் வெற்றி கூடுதல் கிட்டும்.

    4. மாங்கல்ய பல ராகு பூஜை (வெள்ளிக்கிழமை) செய்தால் - திருமண நாணின் பலம் கூடும்.
    5. சிவாஸ்தான ராகுகால சாந்தி பூஜை (திங்கட்கிழமையில் மட்டும் செய்ய வேண்டும்)- சுபகாரியத் தடங்கல் மனோவியாகூலம், சிவ தோசம், சாபம் முதலியவை நீங்கும்.

    6. சர்ப்பதோச நிவாரணம் பூஜை செய்தால்- பாம்பு தோசம் நீங்கும்.
    7. வியாபார லாப ராகு கால பூஜை செய்தால்- வியாபாரத் தொடக் கத்தில் செய்யப்படுதல்.
    சித்ரா பவுர்ணமி நாளில் முறையாக விரதமிருந்து பவுர்ணமியை கொண்டாடினால் முன்னேற்றத்தின் முதற்படிக்குச் செல்ல இயலும்.
    மாதங்களில் முதல் மாதமாக வருவது சித்திரை. நமது வாழ்க்கையை ‘நித்திரை’யிலேயே கழிக்காமல் ‘முத்திரை’ பதித்து வாழ வேண்டுமானால் சித்திரையில் வரும் பவுர்ணமியைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். அதுமட்டுமல்ல நாம் செய்யும் பாவ புண்ணியங்களைப் பதிந்து வைக்கும் சித்ரகுப்தனையும் சிந்தையில் நினைத்து வழிபட்டால் அத்தனை காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

    திதி பார்த்து வழிபட்டால் விதிமாறும் என்று சொல்வார்கள் நம் முன்னோர்கள். நமக்கு விதிக்கப்பட்ட விதியை மாற்ற முடியாவிட்டாலும், விதியின் வலிமையை கொஞ்சம் குறைக்கவாவது வழிகாட்டுவது திதியின் அடிப்படையில் நாம் வழிபடுகின்ற வழிபாடுகள் தான்.

    சதுர்த்தி திதியில் ஆனைமுகப்பெருமானை வழிபட்டால் சகல யோகங்களும் நமக்கு வந்து சேரும். சஷ்டி திதியில் முருகப்பெருமானை வழிபட்டால் சங்கடங்கள் விலகும். ஏகாதசி திதியில் பெருமாளை வழிபட்டால் பெருமைகள் வந்து சேரும். அஷ்டமி திதியில் கிருஷ்ணரை வழிபட்டால் கீர்த்திகள் உண்டாகும். நவமி திதியில் ராமபிரானை வழிபட்டால் நல்ல இல்லறம் அமையும். அமாவாசை திதியில் முன்னோர்களை வழிபட்டால் முன்னேற்றம் கூடும். பவுர்ணமி திதியில் மலை வலம் வந்து சிவன், உமையவள், மால்மருகன் ஆகியோரை வழிபட்டால் மலைக்குமளவிற்கு வாழ்க்கைத் தரம் உயரும்.

    மாதம் தோறும் பவுர்ணமி வந்தாலும், சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியை மட்டும் சித்ராபவுர்ணமி என்று சிறப்புப் பெயரிட்டு நாம் அழைப்பது வழக்கம். ராஜகிரகங்களாக விளங்கும் சூரியனும், சந்திரனும் உச்சம் பெற்று திகழும் அந்த நாளில் முறையாக விரதமிருந்து பவுர்ணமியை கொண்டாடினால் முன்னேற்றத்தின் முதற்படிக்குச் செல்ல இயலும்.

    அன்றைய தினம் நாம், ‘மலையளவு செய்த பாவத்தை கடுகளாவாகக் குறைத்து எழுது என்றும், கடுகு அளவாகச் செய்த புண்ணியத்தை மலையளவாக உயர்த்தி எழுது’ என்றும் சித்ரகுப்தனிடம் வேண்டிக் கொள்ள வேண்டுமாம். அப்பொழுதுதான் நமது பாவக்கணக்கின் அளவு குறைந்து, புண்ணியக் கணக்கின் அளவு உயரும் என்பார்கள். ஆனால் நாம் காலக் கணக்கை மாற்றி எழுதச் சொல்லக்கூடாது.

    அதேசமயம் நாம் இன்று சித்ரகுப்தனுக்குப் பொங்கல் வைத்துப் படைத்து வழிபடுகின்ற பொழுது இனிமேல் நான் செய்யும் செயல்கள் புண்ணியம் தருவதாக அமைய நீ வழிகாட்டு. வாழ்க்கைப் பாதையை சீராகவும், நேராகவும், ஆக்கிக் கொடு. ஆயுள் வளரவும், ஆற்றல் பெருகவும், செல்வம் பெருகவும் வாசலைத் திறந்து வழியைக் காட்டு என்று வேண்டிக் கொண்டால் நமது வாழ்க்கைப் பயணம் சிறப்பாக அமையும்.

    பூஜையறையில் மூலமுதற்கடவுளான விநாயகப் பெருமானை மையத்தில் வைத்து அருகில் வெள்ளியில் ஏடும், எழுத்தாணியும் வைத்து ‘சித்திரகுப்தன் படியளப்பு’ என்றும் அதில் எழுதி வைப்பர்.

    சூரியனைப் பார்த்து கிழக்கு நோக்கிப் பொங்கல் வைத்து பொங்கல் பொங்கி வடியும் பொழுது சித்திர குப்தனைச் சிந்தையில் நினைத்து வழிபட வேண்டும். சர்க் கரைப்பொங்கல், வெண் பொங்கல், பச்சரிசிக் கொழுக்கட்டை, இனிப்புப் பலகாரங்கள் போன்றவற்றை இலையில் பரப்பி வைத்து, பழங்களில் பலாச்சுளை, திராட்சை, மாம்பழம், முழு நுங்கு போன்றவற்றையும் வைத்துப் படைக்க வேண்டும்.

    அன்றைய தினம் வைக்கும் குழம்பில் கூட தட்டைப் பயிறும், மாங்காயும் சேர்த்து வைப்பது நல்லது. ஜவ்வரிசி பாயசம், அப்பளம் வைத்து, இளநீர், பானகம், நீர்மோர் போன்றவைகளையும் அருகில் வைத்து முத்தாய்ப்பாக நடுவில் கரகம் வைக்க வேண்டும்.

    நமது வாழ்வில் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க பொங்கல் வைக்கின்றோம். கனிவாக வாழ்வமைய கனி வர்க்கங் களைப் படைக்கின்றோம். நவதான்யம் மற்றும் அனைத்துச் செல்வத்திற்கும் அதிபதியான குபேரனுக்கு இணையானவர் என்பதாலும் தட்டைப் பயறு வைக்கின்றோம். மங்கல நிகழ்ச்சிகள் நடைபெற மாவிலை, கிரகங்கள் சாதகமாக விளங்க கரகம் வைத்து வழிபடுகின்றோம்.

    பூமா தேவியால் பயிர் விளைவதால் தினமும் உணவு கிடைக்கவே வெண்கலக் கிண்ணத்தில் மண்ணும் தண்ணீரும் வைத்து அதன்மேல் தண்ணீர் நிரம்பிய செம்பின்மீது மாவிலைக் கொத்தும், மாங்காயும் வைப்பது வழக்கம். மற்ற கும்பங்களில் தேங்காய் வைப்பது வழக்கம். ஆனால் சித்ரகுப்தன் வழிபாட்டில் மாங்காய் வைப்பது தான் வழக்கம். அதன் அருகில் கோலமிட்டுக் குத்துவிளக்கேற்ற வேண்டும். பொங்கல் பொங்கி வரும்பொழுது சங்கு ஊதுவது அவசியமாகும். பவுர்ணமி விரதம் இருப்பவர்கள் விரதத்தைத் தொடங்க வேண்டிய நாள் சித்ரா பவுர்ணமி தான். விரதத்தை முழுமையாகக் கடைப்பிடிப்பவர்கள் இரவு நிலாப் பார்த்து வழிபட்ட பிறகு தான் உணவு அருந்த வேண்டும். நமது பாவ புண்ணியத்தையும் பதிந்து வைத்து அடுத்த பிறவிக்கு அனுகூலம் தரும் சித்ர குப்தனை வழிபட்டால் செல்வநிலை உயரும். தேவையானவைகள் தேவையான நேரத்தில் நடக்கும்.

    இந்தச் சித்ரகுப்தனுக்கு காஞ்சீபுரத்தில் தனிக்கோவில் உள்ளது. அருப்புக்கோட்டை அமிர்தலிங்கேஸ்வரர் கோவிலிலும் தனிச்சன்னிதி சித்ர குப்தனுக்கு உள்ளது. இங்கும் சென்று சித்ர குப்தனை வழிபட்டு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம்.
    சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது ரத சப்தமி. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் எவ்வளவு கொடிய பாவங்களும் அகன்று விடும்.
    சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது ரத சப்தமி. சூரிய ஜெயந்தி என்பது இந்த விழாவின் மற்றுமொரு பெயர்.

    இந்த சிறப்பு மிக்க தினத்தில், சூரிய உதயத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராட வேண்டும். இல்லாவிட்டால் வீட்டில் சூரிய ஒளி படும் இடத்தில் நின்று நீராடலாம். நீராடும் போது, ஏழு எருக்கம் இலை, மஞ்சள் பொடி கலந்த அட்சதையை தலைக்கு மேலே வைத்துக் கொண்டு நீராட வேண்டும்.

    ஏழு எருக்கம் இலைகளை கால்களில் இரண்டு, கைகளில் இரண்டு, தோள் பட்டைகளில் இரண்டு, தலையில் ஒன்றை வைத்து நீர் ஊற்ற வேண்டும். தலையில் வைக்கும் இலையில் பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும். தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழந்த பெண்கள், ஏழு எருக்கம் இலைகளுடன் பச்சரிசி, கருப்பு எள் ஆகியவற்றை தலையில் வைத்து நீராட வேண்டும்.

    கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது. ரத சப்தமி விரதத்தை சூரிய உதயத்தில் செய்ய வேண்டும். ரத சப்தமியன்று சுத்தமான இடத்தில் செம்மண்ணால் பூசி, அந்த இடத்தில் சூரிய ரதம் வரைய வேண்டும். அதில் சூரிய, சந்திரரை வரைந்து பவனி வருவதாக நினைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உள்பட பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சித்து சூரிய துதிகளை சொல்லி வழிபட வேண்டும்.

    சர்க்கரைப்பொங்கல், உளுந்து வடை நிவேதனம் செய்து பூஜை செய்ய வேண்டும். கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்ற வற்றை பசுமாட்டிற்கு கொடுப்பது நல்ல பலனை தரும். வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் ரதம் வரைந்து அரிசி, பருப்பு, வெல்லம் படைக்கலாம். சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆகலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.

    ரதசப்தமியன்று தொடங்கும் தொழில், பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் செய்யப்படும் தர்மம், தானத்திற்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். சூரியன், நாம் வழங்கும் தானத்தை நம் முன்னோர்களிடம் வழங்குகிறார். எவ்வளவு கொடிய பாவங்களும் அதனால் அகன்று விடும்.
    விரதங்களில் உயர்ந்ததாக கூறப்படுவது, மௌன விரதம். உடலின் அனைத்துவகை இயக்கங்களை கட்டுப்படுத்துவதே, மௌனவிரதம்.
    விரதங்களில் உயர்ந்ததாக கூறப்படுவது, மௌன விரதம். உடலின் அனைத்துவகை இயக்கங்களை கட்டுப்படுத்துவதே, மௌனவிரதம். பேச்சு, எண்ணம், செயல் இவற்றை நிறுத்தி, மனதை இறை சிந்தனையில் செலுத்தி இருப்பதே, மௌன விரதமாகும்.

    மௌன விரதம், ஞானிகளாலும், பல்வேறு சமய பெரியோர்களாலும், மோன நிலையில் இறை நிலையை அடைய, அனுஷ்டிக்கப்பட்டது. மௌன விரதம் என்பது, தவ ஞானிகளுக்கு சிறந்த ஆன்மீக அரணாக விளங்கியது, பகவான் இரமணரும், காஞ்சி பெரியவரும் அவ்வப்போது மௌன விரதம் இருந்து இறையுடன் கலந்திருப்பர். திருச்செந்தூர் திருமுருகனின் கந்த ஷஷ்டி விழாவின் கடைசி நாளில், முருகனடியார்கள், ஒரு வார காலம் அனுஷ்டித்த விரதத்தை, மௌன விரதம் இருந்தே நிறைவு செய்வர். இதன் மூலம், தங்கள் கோரிக்கைகளை சீரிய முறையில் முருகப்பெருமான் நடத்தித் தருவார் என்பது, முருகனடியார்களின் நம்பிக்கை.

    மௌன விரதம் என்றால் என்ன?

    முதலில் நமக்கு மௌனவிரதம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே, நாம் மனித வாழ்வின் விளக்கத்தை அடையும் நீண்ட பயணத்தில், நம்மை இணைத்துக்கொள்கிறோம் என்றுதானே பொருள்.

    மௌனவிரதம் என்பது நம்மை நாம் அமைதியாக மனதை ஒடுக்கி, இறை சிந்தனை அல்லது சிந்தனையை ஒருநிலைப்படுத்துவதாகும். இதனால் என்ன நடக்கும்? அமைதியாக ஓரிடத்தில் தரையில் தர்ப்பை பாய் அல்லது கோரைப்பாய் விரித்து அமர்ந்து, அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தி, சிந்திக்கும்போது, தினசரி வாழ்வில் நம்மை பாதிக்கும் அனைத்து செயல்களும் நம்முன் வந்துபோகும். இன்னும் சற்று ஆழமாக சிந்திக்க, அவையெல்லாம், நம்மாலேயே உண்டான பாதிப்புகள் என்பதையும் அறிந்து, அவற்றை எப்படி கடக்கவேண்டும் என்று சிந்திக்க, விடைகள் கிடைக்கும்.

    மாதம் ஒரு முறை பழச்சாறு மற்றும் தண்ணீர் மட்டும் உட்கொண்டு, மௌன விரதம் கடைபிடிக்க, மனம் பொலிவாகி, எண்ணங்களும் செயலும், பேச்சும் வளமாகும். நம் பேச்சில் உள்ள உண்மைத்தெளிவு, அடுத்தவரிடம் ஒரு ஈர்ப்பை உண்டாக்கும். இதுவரை, நாம் வாழ பிறரைக்கெடுத்தேனும் வாழலாம் என்ற சுயநல கண்ணோட்டம் மறைந்து, நம்மைப்போலவே அவரும், என்ற சக உயிரை மதிக்கும் மனநிலை உண்டாகும்.

    வராஹி வழிபாட்டால், வாழ்வின் உந்துதலையும் முக்கியமாக உயிரின் உந்துதலையும் அடையலாம், எதிரிகளை அன்பால் வெல்லலாம்.
    வராஹி அம்மனை விரதமிருந்து வழிபாட்டால், வாழ்வின் உந்துதலையும் முக்கியமாக உயிரின் உந்துதலையும் அடையலாம், எதிரிகளை அன்பால் வெல்லலாம்.

    அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் என்னும் ப்ராம்ஹி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்த்ராணி மற்றும் சாமுண்டி.

    இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராஹி. மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , ஆதரவிலே மழைக்கு நிகரானவள்.

    பல ஊர்களில் சிவன் கோவிலில் தென்முக கடவுளுக்கு எதிரில் வரிசையாக வீற்றிருப்பர்கள். நெல்லையப்பர் கோவில் வராஹி அதி அற்புதமாய் இருப்பாள். தஞ்சையில் பெரிய கோவிலில், தனியாக சந்நிதி அமைய பெற்றவள்.

    வராஹி வழிபாட்டின் பலன்தானே குண்டலினி எழுந்து நம்மை சாதாரண மனிதர் என்னும் படியில் இருந்து உயர்த்தி அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.

    ஆனால் ஒரு விஷயம் வராஹி வழிபாட்டுக்கு முக்கியம் உள்ள தூய்மையும் சுத்தமும், சிறிதளவும் காமத்தின் பால் உள்ளம் செல்லுதலாகாது. வாரஹி தேவ குணமும் மிருக பலமும் கொண்டவள். இதனால் தான் உக்கிர தெய்வம் என்று சொல்லுவார்கள். தவறுக்கான தண்டனையும் பெரிதாக இருக்கும்.
    ஆனால் வராஹி துடியானவள்.

    வராஹி வழிபாட்டால், வாழ்வின் உந்துதலையும் முக்கியமாக உயிரின் உந்துதலையும் அடையலாம், எதிரிகளை அன்பால் வெல்லலாம். வராஹியை வழிபடுவோம் வாழ்வில் ஏற்றம் காண்போம்... வராஹியின் பாதார விந்தங்களே சரண். அம்மையின் நாமமே துணை..

    துயரங்கள் நீங்குவதில் முதன்மையானது, துர்க்கை அம்மன் வழிபாடு. விரதமிருந்து துர்க்கையை வழிபாடு செய்வதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
    துயரங்கள் நீங்குவதில் முதன்மையானது, துர்க்கை அம்மன் விரத வழிபாடு. பொதுவாக சிவாலயங்களில் துர்க்கை அம்மனுக்கு தனி சன்னிதி இருப்பதைக் காணலாம்.

    * அஷ்டமி தினத்தில் துர்க்கைக்கு அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு புஷ்பங்களைக் கொண்டு அர்ச்சனை செய்யலாம். மேலும் சிவப்பு வஸ்திரத்தை அம்பாளுக்கு சாத்தியும் வழிபடலாம்.

    * விரதமிருந்து துர்க்கைக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, சண்டிகை தேவியின் சகஸ்ர நாமம் கொண்டு தான் அர்ச்சனை செய்ய வேண்டும். நல்லெண்ணெய் வழிபாடும், இந்த சகஸ்ர நாமமும் சக்தி வாய்ந்தவை.

    * துர்க்கையின் அற்புதத்தை விளக்கும் ‘துர்கா சப்தசதி’ என்ற 700 ஸ்லோகங்கள் படிப்பது நல்ல மனநிலையை ஏற்படுத்தும்.

    * பிறவி என்று வந்து விட்டால் கஷ்டங்கள், துன்பங்கள் வரத்தான் செய்யும். துக்கங்கள் அதிகமாகும். அந்த துக்கத்தைப் போக்குபவளே துர்க்காதேவி.

    * வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறவும், சிறை வாசத்திலிருந்து விடுபடவும் விரதமிருந்து துர்க்காதேவியை சரண் புகுந்தால், வெற்றியும் நிவாரணமும் சித்திக்கும்.

    * மிகச் சிறிய விஷயத்திலிருந்து, பெரிய பதவி அடைய முயற்சிக்கும் விஷயம் வரை, நினைத்தது நடக்க வேண்டுமானால், துர்க்கையின் திருவடி நிழலைப் பிரார்த்திப்பதே சிறந்த வழி.

    * பரசுராமருக்கு அமரத்வம் அளித்தவள் துர்க்காதேவி. அவளது உபாசனை மனத் தெளிவைத் தரும். துர்க்கையை அர்ச்சிப்பவர்களுக்கு பயம் ஏற்படுவதில்லை. மனத் தளர்ச்சியோ, சோகமோ உண்டாவதில்லை.



    * ஸ்ரீ துர்க்கையின் வாகனம் சிம்மம். இவளுடைய கொடி ``மயில்தோகை''. இந்தத் துர்க்காவை பூஜை செய்த ஒருவன், சொர்க்க சுகத்தை அனுபவித்து பின் நிச்சயமாக மோட்சத்தையும் அடைவான்.

    * ஒரு வருட காலம் துர்க்கை அம்மனை பூஜித்து வந்தால், அந்த நபருக்கு முக்தி வசமாகும். துர்க்கை அர்ச்சனை செய்பவரின் பாவங்கள், அவனிடம் தங்குவதில்லை. தாமரை இலை தண்ணீர் போல அவனை விட்டு விலகியே நிற்கும்.

    * தூங்கும் போதும், நின்ற போதும், நடக்கும் போதும் கூட தேவி துர்க்கையை வணங்குபவனுக்கு சம்சார பந்தம் ஏற்படுவதில்லை.

    * ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு மிகவும் பிடித்த மலர், ‘நீலோத் பலம்’. இது எல்லா புஷ்பங்களையும் விட நூறு மடங்கு உயர்ந்தது.

    * துர்க்கையின் முன் புல்லாங்குழல் வாத்தியம் வாசிக்கக் கூடாது.

    * துர்க்கையை ஒன்பது துர்க்கைகளாக பெயரிட்டுக் கூறுகின்றது, மந்திர சாஸ்திரம். அவை, குமாரி, த்ரிமூர்த்தி, கல்யாணி, ரோஹிணி, காளிகா, சண்டிகை, சாம்பவி, துர்க்கா, சுபத்ரா.

    * துர்க்கை என்ற சொல்லில் `த்', `உ', `ர்', `க்', `ஆ' என்ற ஐந்து அட்சரங்கள் உள்ளன. `த்' என்றால் அசுரர்களை அழிப்பவள். `உ' என்றால் விக்னத்தை (இடையூறை) அகற்றுபவள். `ர்' என்றால் ரோகத்தை விரட்டுபவள். `க்' என்றால் பாவத்தை நலியச் செய்பவள். `ஆ' என்றால் பயம், சத்ரு ஆகியவற்றை அழிப்பவள் என்று பொருள்.
    செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இன்று விரதம் இருந்து விநாயகரை வழிபாடு செய்தால் சங்கடங்கள் தீரும்.
    சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சுக்ல பட்சம் (வளர்பிறை) சதுர்த்தியை "வர சதுர்த்தி" என்றும், கிருஷ்ண பட்சம் (தேய் பிறை) சதுர்த்தியை "சங்கடஹர சதுர்த்தி" என்றும் கூறுவார்கள்.

    ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி (தேய்பிறை சதுர்த்தி) சங்கடஹர சதுர்த்தி ஆகும். வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு. ஆனால், பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.

    ஸ்ரீ விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது. சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள்.

    பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர்.



    நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். அந்த நாளில் காலையிலிருந்து உபவாசம் இருந்து கணபதியைத் தியானிக்க வேண்டும். இரவு பூஜை முடித்த பின் கணேச நிவேதனத்தை மட்டும் உண்டு தனிமையில் உறங்க வேண்டும்.

    சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மாசி மாதம் கிருஷ்ணபட்சம் செவ்வாய்க் கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி ஓராண்டு விதிப்படி அனுஷ்டித்தால் எல்லா துன்பங்களும் நீங்கும். செல்வம்,செல்வாக்கு கிடைக்கும்.

    இந்த விரதத்தை விநாயக சதுர்த்திக்குப் பிறகு வரும் சங்கடஹர சதுர்த்தியில் இருந்து மகா சங்கடஹரசதுர்த்தி வரை உறுதியுடன் கடை பிடித்தால் எல்லா நலன்களும் கிடைக்கும்.

    இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும்.
    ராகு காலத்தில் செய்யக்கூடிய சில விசேஷ விரத பூஜைகள் இருக்கின்றன. அந்தப் பூஜைகளை ராகு காலத்தில் செய்தால்தான் அவற்றின் ஆற்றல்கள் கூடுதலாகும்.
    ராகு காலம் என்று சொன்னதுமே நம் எல்லாருக்கும் நல்ல காரியங்களுக்கும் விலக்கு என்று நினைக்கப் பழக்கப்படுத்திக்கொண்டு விட்டோம். ஆனால் ராகு காலத்தில் செய்யக்கூடிய சில விசேட பூஜைகள் இருக்கின்றன. அந்தப் பூஜைகளை ராகு காலத்தில் செய்தால்தான் அவற்றின் ஆற்றல்கள் கூடுதலாகும்.

    ராகு காலம் என்பது மூன்றே முக்கால் நாழிகை கொண்டது. மூன்றே முக்கால் நாழிகை என்பதை ஒரு முகூர்த்த காலம் என்பார்கள்.

    ஒரு நாழிகைக்கு சர்வதேச கால அலகையால் இருபத்து நான்கு நிமிடங்கள். ஒரு மணி நேரத்துக்கு இரண்டரை நாழிகைகள். ஆகவே மூன்றேமுக்கால் நாழிகை என்பது ஒன்றரை மணி நேரமாகும்.

    ராகு காலத்தின் எல்லாப் பகுதிகளும் கெட்டவை என்று சொல்லமுடியாது. சில குறிப்பிட்ட பகுதிகள் மிகவும் வலு வாய்ந்தவை; ஆற்றல் வாய்ந்தவை.
    ராகு காலத்தில் செய்யப்படும் பூஜைகளில் முக்கியமானது துர்க்கை பூஜை. ‘ராகு கால துர்க்கா பூஜை’ என்று ஒரு தனி வழிபாட்டு முறையே இருக்கிறது.
    இதில் மிகவும் விசேடமாகக் கருதப்படுவது செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை. இதற்குரிய தெய்வம் ‘மங்கல சண்டிகா’.

    செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் இடையூறுகள் இருந்தால் செய்யப்படும் பூஜை இந்தப் பூஜை. அதுமட்டுமல்லாது நீண்ட நாட்களாகத் தடங்கலாக இருந்த காரியங்கள் தொடர்ந்து வில்லங்கமில்லாமல் நடப்பதற்காகவும் செய்யப்படுவது. பெண்களுக்குத் திருமணமாவதற்காகவும் இதனைச் செய்வார்கள். இதற்கென பூஜா விதானம் இருக்கிறது.

    ஒன்பது வாரங்களுக்கு விரதமிருந்து செய்யப்படுவது இந்தப் பூஜை. எலுமிச்சம்பழத்தை அறுத்து, சாற்றைப் பிழிந்துவிட்டு, அந்த மூடியைப் புரட்டிப்போட்டு, அதில் நெய்யை ஊற்றி, சிறிய திரியைப்போட்டு, தீபம் வைத்து வழிபடுவது வழக்கம். அப்போது ‘மங்கல சண்டிகா ஸ்தோத்திரம்‘ என்னும் வழிபாட்டு மந்திரப் பாடலைப் படிப்பார்கள்.

    ‘மங்கலன்’ என்பது செவ்வாய் கிரகத்தின் பெயர்களில் ஒன்று. ஆகவேதான் ‘மங்கல சண்டிகா’ என்ற பெயர். செவ்வாய்க்கும் ராகுவுக்கும் கிரகப் பதவி கிடைப்பதற்காக அவர்கள் சண்டிகையை வழிபட்டார்கள் என்ற ஐதீகம். முறையே அவர்களுக்குரிய நாள், நேரம் ஆகியவற்றில் இந்தப் பூஜையைச் செய்தால் காரியசித்தியும் சண்டிகையின் பேரருளும் கிட்டும் என்ற வரத்தையும் அவ்விருவரும் சண்டிகையிடம் பெற்றார்கள் என்று தேவீ பாகவதம் கூறும். ஆகவேதான் செவ்வாய் தோஷம், நாக தோஷம் போன்றவற்றிற்கும் இந்தப் பூஜையை உரிய விரதமிருந்து செய்கிறார்கள்.
    ×