என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    வாரத்தின் 7 நாட்களுள் வெள்ளிக்கிழமையன்று செய்யப்படும் நோன்பு சிறப்பானது. இது முருகக் கடவுளுக்கு உரிய நோன்பாகும்.
    ஒருமுறை வசிட்ட முனிவர், தன்னிடம் வந்த முசுகுந்த சக்கரவர்த்திக்கு முருகனுக்குரிய நோன்புகளைப் பற்றிக் கூறினார். வாரத்தின் 7 நாட்களுள் வெள்ளிக்கிழமையன்று செய்யப்படும் நோன்பு சிறப்பானது. இது முருகக் கடவுளுக்கு உரிய நோன்பாகும். இந்நோன்பை நோற்று பகீரதன் தன் அரசை மீண்டும் பெற்றான்.

    முன்னொரு காலத்தில் நாரதமுனிவர் விநாயகரிடம் வந்தார். ஏழு முனிவர்களை காட்டிலும் உயர்ந்தவராக தான் ஆவதற்கு என்ன செய்யவேண்டும் எனக்கேட்டார். அதற்கு விநாயகர், முருகனுக்குரிய கார்த்திகை நோன்பினை நோற்கும்படி சொல்லியருளினார். அந்நோன்பை இயற்றுபவர் பரணிநாள் பகலில் நீராடவேண்டும். ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட வேண்டும். வெள்ளை நிற ஆடை அணிய வேண்டும்.

    கார்த்திகை நாள் காலையில் நீராட வேண்டும். நாணல் புல்லில் இரவில் படுக்க வேண்டும். முருகன் திருவடிகளையே உறக்கமின்றி நினைத்திருக்க வேண்டும்.இந்த முறைப்படியே நாரத முனிவர் நோன்பிருந்தார். ரோகிணி நாள் அன்று முனிவர்களோடு சேர்ந்து உணவு உண்டார். இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகள் நோன்பிருந்தார். முருகன் அருளால் ஏழு முனிவர்களை காட்டிலும் உயர்ந்தவர் ஆனார்.

    இது போல கார்த்திகை நோன்பு இருந்தவர்கள் பலர். அவர்கள் முருகனின் அருளால் மேன்மைகள் பலவற்றை அடைந்தனர். முருகனுக்குரிய நோன்புகளும் சஷ்டியும் ஒன்று. ஐப்பசி மாதம் சுக்லபட்ச பிரதமை நாள் முதலாக ஆறு நாட்கள் முறையாக நீராட வேண்டும். உண்ணாதிருக்க வேண்டும். மோதகம் செய்து படைத்து முருகனை வழிபட வேண்டும். இதுவே சஷ்டி நோன்பு ஆகும்.
    பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்து தம்பதிகளாய் தினழும் தெய்வங்களை வழிபட்டால் பாவங்கள் விலகி மாங்கல்ய பலம் பெருகும் எனப்புராணங்கள் கூறுகின்றன.
    உத்திர நட்சத்திரத்தின் நாயகன் சூரியன் உத்திர நட்சத்திரம் பூரண சந்திரனுடன் இணையும் திருநாள் பங்குனி உத்திரத் திருநாள் சூரியன்-சந்திரன் இருவருடன் தொடர்பு பெற்றிருப்பதால் இத் திரு நாளுக்கு தனிச்சிறப்பு உண்டு.

    பனிக்காலம் முடிந்து வசந்த காலம் ஆரம்பமாகும். இம் மாதத்தில் பெய்யும் மழையை பங்குனிப் பழம் என்று கூறுவர். தெய்வத் திருமணங்கள் பல பங்குனி உத்திரத் திருநாளில் நடைபெற்றதாகப் புராணங்கள் கூறுகின் றன. இதன் காரணமாக பங்குனி உத்திர திருநாளை கல்யாண விரத நாள் என்று கூறுவர்.
    சிவன்-பார்வதி திருமணம் நடந்த தினம் பங்குனி உத்திரத் திருநாள் தான் அன்று காமாட்சியாக இறைவன் கரம்பித்தாள் இறைவி. தெய்வாணையை முருகப் பெருமாள் திருமணம் செய்து கொண்டதும் வள்ளித் குறத்தி அவதரித்த பெருமையும் பங்கு உத்திரத் திருநாளுக்கு உண்டு.

    ஸ்ரீராமன்-சீதாதேவி, லட்சுமணன் -ஊர்மினை, பரதன்-மாண்டலி, சத்ருகனன்-சுருதகீர்த்தி கல்யா ணங்கள் நடந்த தினமும் இதுவே. பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்து தம்பதிகளாய் தினழும் தெய்வங்களை வழிபட்டால் பாவங்கள் விலகி மாங்கல்ய பலம் பெருகும் எனப்புராணங்கள் கூறுகின்றன.
    இன்று விரதம் இருந்து ஒரு முகத்துடன் தெய்வ சிந்தனையுடன் ஆலயங்களுக்கு சென்று, தெய்வங்களின் திருமணக் காட்சியைக் கண்டு வேண்டினால் நிச்சயம் நாம் நினைத்தபடி திருமணம் கைகூடுகிறது.
    30-3-2018 கல்யாண சுந்தர விரதம்

    நம் தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றிலும், நாம் அன்றாடம் வணங்கும் தெய்வங்களின் பெயரால் விரதங்களை ஏற்படுத்தி, ஆன்மிகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையையும் அதன் மூலம் அவர்களுக்குள் மனோபலத்தையும் உருவாக்கி வந்துள்ளனர் நம் முன்னோர்கள்.

    அந்த வரிசையில் தமிழ் மாதங்களின் கடைசி மாதமான பங்குனியில் வரும் உத்திரம் நட்சத்திரம் மற்றும் பவுர்ணமியுடன் இணையும் நன்னாள் பல தெய்வங்களின் திருமணங்கள், நிகழ்வுகளால் மிகவும் சிறப்பைப் பெற்று அதன் நினைவைப் போற்றி மகிழும் விதமாக பங்குனி உத்திரப் பெருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.

    பொதுவாக திருமணம் என்பது இறைவனால் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு நிகழும் அற்புதம் என்று கூறுவது உண்டு. எங்கேயோ பிறந்து வெவ்வேறு சூழலில் வளர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் வாழ்க்கையில் இணைய வேண்டும் என்றால் அந்த இறைவன் அருள் இருந்தால் மட்டுமே முடியும். அது காதல் திருமணமாய் இருந்தாலும் சரி, பெற்றோரால் நடத்தி வைக்கப்படும் திருமணமாய் இருந்தாலும் சரி.

    இன்றைய காலத்தில் ஒரு திருமணம் நல்லவிதமாக முடிவதற்குள், பெற்றோர் படும்பாடு இருக்கிறதே? அடேங்கப்பா... ஜாதகம் பொருந்துவதில் இருந்து, கல்வி மற்றும் வசதிகள் வரை எத்தனை எத்தனை தடைகள்? அனைத்தையும் மீறிப் பொருத்தமான துணையுடன் எவ்வித பிணக்கும் இன்றி இல்லற வாழ்வின் மகிழ்வை முழுமையாக அனுபவிப்பது ஒவ்வொருவருக்கும் ஒரு சவாலாகவே உள்ளது. இந்த சவாலை சரி செய்து தகுந்த துணையுடன் திருமணம் நடைபெற பங்குனி உத்திர விரதம் உதவுகிறது. இந்த சிறப்பான நாளில் விரதம் இருந்து ஒரு முகத்துடன் தெய்வ சிந்தனையுடன் ஆலயங்களுக்கு சென்று, தெய்வங்களின் திருமணக் காட்சியைக் கண்டு வேண்டினால் நிச்சயம் நாம் நினைத்தபடி திருமணம் கைகூடுகிறது.

    திருமணத்துக்கும்.. பங்குனி உத்திரத்துக்கும் அப்படி என்னதான் தொடர்பு?

    பல தெய்வங்களின் திருமணங்கள் இந்த பங்குனி உத்திர நட்சத்திரம் வரும் பவுர்ணமி நன்னாளில்தான் நிகழ்ந்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. முப்பெரும் தெய்வங்களுக்கும் இந்த பங்குனி உத்திரத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. தெய்வங்களில் முதன்மையானவரான சிவபெருமான் தவம் கலைந்து, மீனாட்சியாக அவதரித்திருந்த பார்வதிதேவியை மணம் முடிந்தது இந்த பங்குனி உத்திரத்தில் தான்.

    மீனாட்சி திருக்கல்யாணத்தின் சிறப்பு நாம் அனைவரும் அறிந்ததே. அன்றைய தினம் சிவன், பார்வதிக்கு அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்து வாத்தியங்கள் முழங்க திருமாங்கல்யம் அணிவித்து பால் பழம் அளித்து தம்பதி சமேதராக பள்ளியறைக்கு அனுப்பும் வைபவம் அதி விசேஷமானது.



    அதே போல் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளுக்கும், மகாலட்சுமி தாயாருக்கும் திருமணம் நடந்ததும் இந்த நாளில் தான். மகாலட்சுமியை மனைவியாக அடைந்த பெருமாள், கடனுடன் இருந்தாலும் செல்வத்துக்கு அதிபதியான மனைவியுடன் இல்லற வாழ்வில் இணைந்து நிறைந்த செல்வங்களை பக்தர்களுக்கு அருள் கிறார். படைக்கும் தெய்வமான பிரம்மா, கல்விச் செல்வத்தை அருளும் சரஸ்வதியை திருமணம் செய்து, தனது நாவில் குடியமர்த்திக்கொண்டதும் இந்த பங்குனி உத்திர தினத்தில் தான் என்கிறது புராணங்கள். எனவே தான் இந்த விரதத்தை ‘கல்யாண சுந்தர விரதம்’ என்றும் அழைக்கிறார்கள்.

    ஜனகரின் மகள் சீதையை ஸ்ரீராமர் கரம்பிடித்ததும், கணவன் உயிரை எமனிடமிருந்து மீட்ட கற்புக்கரசி சாவித்திரி சத்யவானை திருமணம் செய்ததும், ஈசனின் கோபத்திற்கு ஆளாகி சாம்பலான மன்மதனை, உயிர்த்தெழச் செய்து ரதியானவள் மீண்டும் கணவனாக்கிக்கொண்டதும், தேவர்களின் தலைவன் இந்திரன் இந்திராணியை மணம் புரிந்ததும், முனிவரான அகத்தியர் முக்தியடைந்து சொர்க்கலோகம் செல்ல வாரிசு வேண்டும் என்பதற்காக, விரதம் இருந்து பக்தியிலும், புத்தியிலும் சிறந்த லோபாமுத்திரையை திருமணம் செய்ததும் இந்த பங்குனி உத்திர நாளில் தான்.

    இந்த பங்குனி உத்திரமானது, தமிழ்க்கடவுளான முருகனுக்கு உகந்ததாக அனைத்து முருகன் ஆலயங்களிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தேவர்களையும் உலகத்தினரையும் ஆட்டிப்படைத்த அசுரனான சூரபதுமனை வென்று, இந்திரன் மகள் தெய்வானையை தேவர்கள் ஆசியுடன் முருகப் பெருமான் கரம் பிடித்தது இந்த பங்குனி உத்திர தினத்தில் என்பதால் அந்த நாளில் முருகப்பெருமானின் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    இந்த நாளில் பக்தர்கள் பலரும் காவடிகளை சுமந்து, முருகன் ஆலயங்கள் நோக்கி சென்று தங்கள் வேண்டுதல்களை செலுத்துகின்றனர். அறுபடை வீடுகளில் அனைத்திலும் இந்த விழா கொண்டாடப்பட்டாலும், மூன்றாம் படைவீடான திருவாவினன்குடி என்றழைக்கப்படும் பழனியில் பங்குனி உத்திரப் பெருவிழா மிகச்சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் பக்தர்கள் விரதம் இருந்து, காவடி, பால் குடங்களுடன் அருகிலுள்ள கொடுமுடிக்கு சென்று காவிரி நீரையும் சுமந்து வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்வார்கள். பழனி தல புராணத்தில் குறிப்பிட்டு உள்ளதைப் போன்று அபிஷேகத்தின் போது முருகன் ஜடாமுடியுடன் உள்ள தோற்றத்தைக் காண இயலும்.

    அடுத்து முருகப்பெருமான், தெய்வானையுடன் திருமணம் புரிந்த அறுபடை வீடுகளில் முதன்மையானதான திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் திருக்கல்யாணத்தைக் காண, மதுரையில் இருந்து மீனாட்சி- சொக்கநாதர் இருவரும் எழுந்தருள்வார்கள். இத்தகைய தெய்வத்திருமணங்களைக் கண்டு மகிழ்வது, நம் இல்லற வாழ்வை மேம்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை .

    சிவபெருமானுக்கும், மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவுக்கும் இந்த பங்குனி உத்திரத்தில் தான் ஐயப்பன் தோன்றினார் என்கிறது வரலாறு. வில்லுக்கு விஜயன் எனப் போற்றப்படும் மகாபாரதத்தின் நாயகன் அர்ச்சுனன் பிறந்ததும் இந்த நட்சத்திர நன்னாளில்தான். இப்படி எத்தனையோ தெய்வநிகழ்வுகளைக் கூறலாம்.

    இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர விரத நாளன்று திருமணமாகாத ஆண்களும், பெண்களும் திருமணம் நடைபெற வேண்டியும், திருமணமானவர்கள் வாழ்வில் ஒற்றுமையாக வாழவும் ஆலயங்களுக்குச் சென்று, தெய்வங்களின் திருமணக் கோலத்தைக் கண்டு தரிசிப்பது நன்மை பயக்கும்.
    பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமை விலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
    சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமைவிலகும், நோய்கள் நீங்கும், சகலகாரியங்களில் வெற்றிகிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷவிரதம்.

    பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறனிந்து சிவ நாமம் ஆன நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.

    தினப்பிரதோஷ நேரம் என்பது ஒவ்வொரு நாளும் மாலை மணி 4.30 முதல் 6.00 வரையிலான நேரம் ஆகும். மிகவும் புண்ணியமான இந்த நேரத்தில் நாம் எந்த ஒரு மந்திரம் ஒரு முறை ஜபித்தாலும், அது பலகோடி மடங்கு ஜபித்ததற்கான புண்ணியத்தைத் தரும்.

    பிரதோஷம் அன்று ஓம் ஆம் ஹவும் சவும் என்ற மந்திரத்தை ஒரு சிவாலயத்தில் ஒரு முறை ஜபிப்பதால், நாம், நமது முந்தைய ஏழு பிறவிகள், நமது முன்னோர்கள் ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் அவற்றால் ஏற்பட்ட பாவங்கள் அழிந்துவிடும்.(பொய் சொல்லுதல், கொலை செய்தல், பேராசைப்படுதல், வீணான அபகரித்தல், குருவை நிந்தித்தல் போன்றவை பஞ்சமாபாதகங்கள்) எனவே, இந்த மந்திரத்தை குறைந்தது ஒன்பது தடவையும், அதிகபட்சமாக 108 முறையும் ஜபிப்போம்.

    பிரதோஷ தினமான இன்று மாலை வேளையில் சிவாலயங்களுக்கு சென்று உங்களால் இயன்ற அபிஷேகப்பொருட்களை அளித்து அபிஷேகம் செய்வித்து நந்தியெம்பெருமானை ஆராதித்து வழிபட்டு சிவனருள் பெறுவோம்.

    தெய்வ அனுக்கிரகத்துடன், முன்னோர்களின் ஆசியையும் பெற்றுத் தரும் அற்புதமான விரதங்கள் உள்ளன. இந்த விரதங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    அனந்த விரதம், அஜா மற்றும் பத்மநாபா ஏகாதசிகள் ஆகிய விரதங்களும் திருமாலுக்கு மிக உகந்தவை. அம்பாளுக்கு உகந்த சரத் ருதுவில் வரும் சாரதா நவராத்திரி, லலிதா சஷ்டி விரதம், உமாமகேஸ்வர விரதம், கேதார கௌரி விரதம், பிள்ளையாருக்கு உரிய தூர்வாஷ்டமி விரதம், ஜேஷ்டா விரதம் ஆகிய புண்ணிய தினங்களையும் தன்னகத்தே கொண்டது புரட்டாசி.

    ஜேஷ்டா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப்படும் விரதம் இது. ‘எங்களை நீ பீடிக்காதே!’ என்று மூதேவியை வேண்டுவதாக உள்ள விரதம்.

    தூர்வாஷ்டமி விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் செய்யப்படும் விரதம் இது. இந்த விரத நாளில், வடக்கு நோக்கிப் படர்ந்திருந்து, நன்கு வெண்மை படர்ந்த அறுகம் புற்களைக் கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட வேண்டும். இதனால் குடும்பம் செழிக்கும்.

    மஹாலட்சுமி விரதம்: புரட்டாசி மாத வளர் பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதம் இது. ஓவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, கனகதாரா ஸ்தோத்திரம் முதலான திருமகள் துதிப்பாடல்களைப் படித்து திருமகளை வழிபட்டு வந்தால், நம் வறுமைகள் நீங்கும்; வாழ்க்கை வளம் பெறும்.

    கபிலா சஷ்டி விரதம்: புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு (தாமிர) வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம்.

    அனந்த விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசியன்று கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. அன்று அதிகாலையில் நீராடி, தூய்மையான ஆடை அணிந்து, பூஜைக்குரிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகி, கறுப்பைத் தவிர்த்து ஐந்து விதமான வண்ணங்களில் கோலம் போட்டு தீர்த்தக் கலசம் வைத்து அனந்த பத்மநாபனை தியானித்து பூஜை செய்ய வேண்டும்.
    தேய்பிறை அஷ்டமி நாளில் விரதமிருந்து ராகு காலத்தில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
    தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

    அதனால்,நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் தொங்கும்; அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்.

    இந்த ராகு கால நேரத்தில் ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அவரது மூலமந்திரத்தை 330 தடவை ஜபிக்க வேண்டும்.அவ்வாறு ஜபித்தால்,பின்வரும் நன்மைகளில் ஏதாவது ஒன்று நமக்குக் கிட்டும் என்பது 16 மாத தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரை வழிபட்டதால் கிடைத்த அனுபவ உண்மைகள் ஆகும்.

    1. நமக்கு வர வேண்டிய பணம் வந்துவிடும்.
    2. நாம் தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகிவிடும்;எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
    3. வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும்;வலியும்,வேதனையும் பெருமளவு குறையும்.

    4. சனியின் தாக்கம் (ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி) தீரும்.
    5. வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டா கும். தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக் கொண்டே செல்லும்.
    6. அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகும்.அரசியல் சூழ்ச்சிகள் நிர்மூலமாகும்.
    7. பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் தீர்ந்து விடும்.
    8. நமது கடுமையான கர்மவினைகள் தீரத்துவங்கும்.
    அன்னை காமாட்சி இந்த விரதத்தினை மேற்கொண்டதால் காரடையான் நோன்பு காமாட்சி அம்மன் விரதம் என்று பெயர் பெற்றது.
    கயிலாயத்தில்,ஒரு சமயம் ஈசனின்  கண்களை விளையாட்டாகப் பார்வதி தேவியார் பொத்தியதால், உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது.அந்த கணம் உலகில் வாழும் ஜீவன்கள் மிகவும் துன்பத்திற்கு ஆளானதால், கோபம் கொண்ட இறைவன், பார்வதியை பூலோகம் சென்று தவம் செய்யும்படி கட்டளையிட்டார். பூலோகம் வந்த பார்வதி, காஞ்சி மாநகருக்கு வந்து கம்பா நதிக்கரையில் அமர்ந்து மண்ணால் சிவலிங்கம் நிறுவி விரதம் மேற்கொண்டு பூஜித்துக் கொண்டிருந்தாள்.

    தேவியை சோதிக்க விரும்பிய ஈசன், கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுக்க செய்தார். வெள்ளம்  பார்வதி தேவி பூஜை செய்யும் லிங்கத்தையும்  அடித்துச் செல்ல வந்தது. உடனே தேவி சிவலிங்கத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு இறைவனை வேண்டினாள். இறைவனும் நேரில் காட்சி கொடுக்க, இறைவனுடன் பார்வதியும் இணைந்தாள்.

    அன்னை காமாட்சியே இந்த விரதத்தினை மேற்கொண்டதால் காரடையான் நோன்பு காமாட்சி அம்மன் விரதம் என்று பெயர் பெற்றது.

    மஹா பதிவிரதையான சாவித்திரி செந்நெல்லையும் காராமணியையும் கொண்டு அடை தயார் செய்து, வெண்ணெய்யுடன் ஸ்ரீகாமாட்சிஅன்னைக்குச் சமர்ப்பித்து வழிபட்டதால், தன் கணவனை எமதர்ம ராஜனிடமிருந்து மீட்டாள். நோன்பு அன்று காரடை தயார் செய்து, “உருகாத வெண்ணெயும் ஓரடையும் வைத்து நோன்பு நோற்றேன். ஒரு நாளும் என் கணவர் பிரியாமலிருக்க வேண்டும்” என்று சுமங்கலிகள் பூஜையின் போது வேண்டிக் கொள்ள வேண்டும் என்பது ஐதீகம்.

    சுமங்கலிப் பெண்கள் தங்கள் கழுத்தில் மங்கல நாண் நிலைக்கவும்,தங்களது கணவன் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் சாவித்திரி அம்மனை வேண்டி இந்த விரதம் இருப்பது மரபு.
    ராமபிரான் அவதரித்த நாளே ‘ராமநவமி’ என்று கொண்டாடப்படுகிறது. நாளை ராம நவமி அன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணங்கள் நிறைவேறும்.
    25-3-2018 ராமநவமி

    மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ராமாவதாரம் பரிபூரண அவதாரம் ஆகும். அறமே வாழ்வின் ஆன்மிக ஜோதி. அறத்தை வளர்ப்பதற்கும், மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கும் ஸ்ரீமன் நாராயணன் ராமனாக அவதாரம் செய்தார்.

    மனிதன் நீதிமுறைகள், ஒழுக்க நியதிகள் மற்றும் ஆன்மிக லட்சியங்கள் குறித்து உறுதியான கொள்கையுடன் விளங்க வேண்டும். இப்படி தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியது ராமாவதாரம். ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்று வாழ்ந்தவர் அவர்.

    அந்த ராமபிரான் அவதரித்த நாளே ‘ராமநவமி’ என்று கொண்டாடப்படுகிறது.

    அயோத்தியை ஆண்டுவந்த தசரத சக்கரவர்த்திக்கு கோசலை, சுமித்ரா, கைகேயி ஆகிய மூன்று மனைவிகள் உண்டு. தனது புஜ, பல பராக்கிரமத்தால் உலகெங்கும் வெற்றிக்கொடி நாட்டி புகழ்கொடியை பறக்கவிட்ட தசரதருக்கு நாட்டை ஆள ஆண் வாரிசு இல்லாதது பெரும் மனக்குறையாக இருந்தது. தனது மனக்குறையை குலகுரு வசிஷ்ட மகரிஷியிடம் அவர் கூறினார்.

    வசிஷ்டரின் ஆலோசனைப்படி மகரிஷி ருஷ்யஷ்ருங்கர் உதவியுடன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். அந்த யாகத்தின் விளைவாக யக்னேஸ்வரர் தோன்றி பாயசம் நிறைந்த ஒரு கிண்ணத்தைக் கொடுத்து அதை மனைவிகளிடம் கொடுக்கும்படி கூறினார். தசரதர் பாயசத்தை தனது மனைவிகளுக்கு கொடுத்தார். சில நாட்களுக்கு பிறகு கோசலை, கைகேயி, சுமித்ரா ஆகிய மூவரும் கர்ப்பமுற்றனர்.

    பங்குனிமாதம் நவமியன்று கோசலை ராமபிரானைப் பெற்றார். கைகேயிக்கு பரதனும், சுமித்ராவுக்கு லட்சுமணன், சத்ருக்னன் ஆகியோரும் பிறந்தனர்.

    ராமன் அழகும், நல்ல தோற்றமும் அரச அம்சங்களுடனும் பிறந்தார். பூமியில் அவருக்கு நிகர் எவருமில்லை. மிகவும் பண்பானவர். அகில உலகமும் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. தன்னை நம்பி வந்தவர்களை அவர் கைவிட்டதே இல்லை.

    மிதிலை மாநகரில் ஜனகன் அரண்மனையில் ராமபிரானின் கைப்பட்டு பரமேஸ்வரனின் வில் உடைப்பட்டது. கானகத்தில் பெருமாளின் கால்பட்டு கல் உருகப்பெற்றது. ராமபாணத்தால் தாடகையை வதம் செய்தார். ராமநாம மகிமையால் வேடன் வால்மீகியின் சாபம் நீங்கியது. ராமரின் திருநாம ஜெபத்தால் நமது பாவங்கள் எல்லாம் விலகும். புண்ணியங்கள் பெருகும்.

    தசரதனுக்கு புத்திரனாக அவதரித்த ராமன் வசிஷ்டரிடம் வித்தைகளை கற்றார். விஸ்வாமித்திரருடன் சென்று தாடகையை வதம் செய்தார். மிதிலையை அடைந்து வில்லை ஒடித்து ஜானகியை மணம் புரிந்தார். கூனியின் சூழ்ச்சியால் கைகேயி தசரதனிடம் பெற்ற வரத்தால் கானகம் சென்றார். சீதையை கவர்ந்து சென்ற ராவணனை தேடிச் செல்லும் வழியில் சுக்ரீவனுக்காக வாலியை வதம் செய்தார். அனுமன் உள்ளிட்ட வானரர்களின் உதவியுடன் கடலுக்கு நடுவில் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்று போரில் ராவணனை அழித்தார். விபீஷ்ணனை இலங்கையின் அரசனாக நியமித்தார்.

    சீதையை தீக்குளிக்க செய்து புஷ்ப விமானத்தில் அழைத்து கொண்டு அயோத்தி சென்று முடிசூடி நல்லமுறையில் அரசாண்டார்.

    ராமன் பிறந்தகாலத்தில் ஐந்து கிரகங்களும் மிகவும் உச்சநிலையில் இருந்தது. அதனால் ராமருடைய ஜாதகத்தை எழுதி, அதை பூஜை அறையில் வைத்து பூஜை செய்பவர்களுக்கு ஜாதக ரீதியாக ஏற்படக்கூடிய நவக்கிரகதோஷம் நீங்கும். வியாதிகள் குணமாகும். ஐஸ்வரியங்கள் பெருகும்.

    விரதம் இருப்பது எப்படி?

    ராமநவமி அயன்று அதிகாலையில் குளித்துவிட்டு, வீட்டை தூய்மைப்படுத்தி விரதம் கடைப் பிடிக்க வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை நன்றாக சுத்தம் செய்து குங்குமம், சந்தனம் போன்றவற்றால் பொட்டிட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.

    சாதம், பாயசம், பானகம், வடை, நீர்மோர், தேங்காய், பஞ்சாமிர்தம், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு இவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். அன்றைய தினம் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். ராமரை பற்றிய நூல்களை படித்தும், பாராயணம் செய்வதுமாக இருக்க வேண்டும். அன்றைய தினம் ராமர் கோவில்களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டுகளிக்கலாம். அர்ச்சனை முடிந்தபின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் ராமநவமி விரதம் இருந்து ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். அதனால் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள்.

    லட்சுமி கடாட்சம் கிடைக்கும். பகைவர்கள் நண்பர்களாக மாறி வருவார்கள். வியாதிகள் நீங்கும். தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். குடும்பநலம் பெருகி வறுமையும், பிணியும் அகலும். நாடிய பொருட்கள் கைகூடும்.

    ‘ஸ்ரீராமஜெயம்’ என்ற எழுத்தை 108 முறை அல்லது 1008 முறை எழுதத் தொடங்கலாம். ஸ்ரீராம என்ற நாமத்தை மூன்று முறை அடுத்தடுத்தவாறு உச்சரிக்க வேண்டும். இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் ஆணவம் அழிந்து அன்பும், அறிவும் உண்டாகும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும்.

    விசிறி தானம்

    ராமநவமி அன்று சிலர் விசிறிகளை தானமாக வழங்குவார்கள். ஒரு சிலர் பானகம், நீர்மோர், வடை, பருப்பு போன்ற வற்றையும் கொடுப்பதுண்டு. ராமபிரான், மகரிஷி விஸ்வமித்திரரோடு சென்றபோதும், 14 ஆண்டுகள் வனவாசம் செய்த காலத்திலும் வெயிலில் அலைந்து கஷ்டப்பட்டார். அவர் பிறந்ததும், சித்திரை மாதமான கோடை காலத்தில் தான். ராமர் பிறந்த போது அவரைப் பார்க்க வந்தவர்களுக்கு, தசரதர், நீர்மோரும், பானகமும் கொடுத்து உபசரித்தார். கூடவே விசிறியும் கொடுத்தார். இதனால் ராமநவமியன்று இவற்றை பிறருக்கு கொடுக்கும் வழக்கம் உருவானது.
    ராம நவமி அன்று விரதம் இருப்பது நல்லது. அப்படி விரதம் இருக்க முடியாதவர்கள், ராமரை வணங்கி அன்று முழுவதும் ராம நாமத்தை பாராயணம் செய்வது சிறப்புக்குரியது.
    பொதுவாக ராமநவமி விழா அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் கொண்டாடப்பட்டாலும், ராமருக்கென்று அமைந்த தனி ஆலயங்களில் இவ்விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அயோத்தி ராமர் கோவில், ஆந்திராவின் பத்ராச்சலம் ராமர் கோவில், மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவில், திருவள்ளுர் வீரராகவப் பெருமாள் கோவில், புன்னைநல்லூர் சாளக்கிராம ராமர் கோவில், சேலம் அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள பட்டாபிஷேக ராமர் கோவில், ஸ்ரீரங்கத்திலுள்ள கல்யாணராமர், பட்டாபி ராமர் ஆலயம் போன்ற ஆலயங்களில் அதிகாலை அபிஷேக அலங்காரங்களுடன், ராமனை வழிபட்டு ராம நாமத்துடன் நாலாயிர திவ்யப்பிரபந்தம் ஓதி, ராம நவமிக்கு சிறப்பு சேர்க்கின்றனர்.

    மனிதன் என்பவன் இப்படித்தான் இருக்க வேண்டும் எனும் நியதிகளை கற்றுத்தந்து, மனித குலத்தை மேம்படுத்த எம்பெருமாள் எடுத்த அவதாரமான ராமாவதாரத்தின் நாள் இந்த ராம நவமி. இந்த நாளில் விரதமிருந்து நீர், மோர், பானகம் தயார் செய்து அதை ராமனுக்கு நைவேத்தியமாக படைத்து வழிபட்ட பின், பக்தர்கள் அனைவருக்கும் அவற்றை தாகம் தீர்க்கக் கொடுப்பது சிறப்பு.

    இந்த நாளில் விரதம் இருப்பது நல்லது. அப்படி விரதம் இருக்க முடியாதவர்கள், ராமரை வணங்கி அன்று முழுவதும் ராம நாமத்தை பாராயணம் செய்வது சிறப்புக்குரியது. உள்ளத்தில் ராமனை நினைத்து ராம நாமத்தை எழுதியோ, மனனம் செய்தோ ஒருமுகமாக ராமரை சிந்தித்து வழிபட்டால் வாழ்வு வளம் பெறும். ஏனெனில் ராமரை விடவும், ராம நாமமே சிறந்தது. மற்றவர் மனம் புண்படுத்தும் சொற்களை பேசாமலும், தீய செயல்களை செய்யாமலும், நேர்வழியில் சென்று அமைதி காத்து ராமரின் நற்குணங்களை நினைத்து அதன் வழி நாமும் செல்ல உறுதி கொள்ள வேண்டும்.
    நீண்ட நாட்கள் திருமணம் தடைபட்டு வரும் பெண்கள் விரதமிருந்து கீழ்கண்ட ராகு வழிபாட்டை செய்து விரைவில் திருமணம் கூடிவரப் பெறலாம்.
    நீண்ட நாட்கள் திருமணம் தடைபட்டு வரும் பெண்கள் விரதமிருந்து கீழ்கண்ட ராகு வழிபாட்டை செய்து விரைவில் திருமணம் கூடிவரப் பெறலாம்.

    திருமணம் ஆகாத பெண்கள் விரதமிருந்து ஞாயிறு தோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரை) தீபம் ஏற்றி துர்க்கையை வழிபட வேண்டும். இவ்வாறு செய்து வர அப்பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடிவரும்.

    திருமண வாழ்க்கையில் பிரச்சனையைக் காண்பவர்கள் அப்பிரச்சனையில் இருந்து விடுதலை பெற வெள்ளிக்கிழமை தோறும் விரதமிருந்து ராகு காலத்தில் (காலை 10.30 - 12.00 மணிவரை) தீபம் ஏற்றி வணங்குதல் வேண்டும். இவ்வாறு 11வாரம் செய்து முடித்த பிறகு 12வது வாரம் குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டினைச் செய்ய திருமண வாழ்வில் தம்பதியினருக்கிடையே ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.

    திருமண வரம் கூடிவந்தவுடன் காணிக்கையாக 108 எலுமிச்சம் பழத்தை மாலையாக்கி அம்மனுக்கு சாற்றலாம். அதேபோல் தம்பதிகள் மேற்கண்ட வழிபாட்டை செய்து தங்கள் பிரச்சனை தீர்ந்தவுடன் அரசுக்குக் கலர் பட்டுப் பாவாடை சாற்றலாம்.
    ஓவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபாடு செய்தால் குடும்பத்தில் சுபீட்சமும், தடையின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.
    விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும் விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும் சங்கடங்கள்
    அனைத்தையும் தீர்க்கக்கூடிய சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

    ஓவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபீட்சமும். தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.

    ஹரஎன்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஓவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபட்சத்தில் வரும் சதுர்த்தி ஆகும். ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளிலிருந்து இவ்விரதத்தை கடைப்பிடிக்க தொடங்க வேண்டும்.

    இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகின்றவர்கள் நிலையான சந்தோசத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்திக்கூர்மை, நீண்ட ஆயள், நிலையான செல்வம். நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனிதோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால் சனியின் தாக்கம் அதிகமாகக் குறையும்.

    சதுர்த்தியன்று அதிகாலை நீராடி உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும். பால் பழம் மட்டும் அருந்தலாம். மாலை ஆலயத்திற்குச் சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூசைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.
    ராகு தோஷத்தால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விரத முறைகளை பின்பற்றி வழிபாடு செய்தால் ராகுவில் இன்னல்களில் இருந்து விடுபடலாம்.
    ராகு காலத்தில் விரதமிருந்து துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யலாம்.

    சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும்.

    சனிக்கிழமைகளில் உபவாச விரதம் இருப்பது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்யலாம்.

    சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, அடுப்பில் உபயோகப்படுத்தும் கரி, நாணயங்கள் போன்றவற்றை தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுக்கலாம்.

    கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வது ஆகியவை செய்யலாம்.

    பாம்பு புற்றுக்கு பாலூற்றுவது, முட்டை வைப்பது நல்லது.

    கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்பயன்படுத்தலாம்.

    ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராஹவே நமஹ என்ற பிஜ மந்திரத்தை 40 நாட்களில் 18000 தடவை சொல்லலாம்.

    எதிரிகளை வெல்லவும், நோய் தீரவும், அரசாங்க உதவிகள் பெறவும். ராகு பூஜை செய்வது நல்லது.

    ராகுவின் நன்மையான காரகங்கள், அயல் மொழியில் புலமை, தைரியம், ஆராய்ச்சி, சமூக சேவை, புகைப்படக் கலை, மந்திர மாயங்களில் ஆர்வம் போன்றவை.

    ராகுவின் துயகாரகங்கள், மனதில் இறுக்கம், மின்சார அதிர்ச்சி, எதிலும் ஆர்வம் இல்லாத நிலை, தீய எண்ணங்கள், கெட்ட கனவுகள், சமூகத்தில் தாழ்ந்து இருத்தல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், அயல் நாட்டில் இருக்கும் போது தொல்லை ஏற்படுதல், தீயவழிகளில் பணத்தை இழத்தல், உடல் நல பாதிப்பு வழக்குப் பிரச்சினைகள் போன்றவை ஏற்படலாம்.
    ×