என் மலர்
முக்கிய விரதங்கள்
இந்துக்களாகிய நாம் எல்லோரும் வருடம் முழுவதும் மாதா மாதம் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேலும் பண்டிகைகளை விரதங்களாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
இந்துக்களாகிய நாம் எல்லோரும் வருடம் முழுவதும் மாதா மாதம் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேலும் பண்டிகைகளை விரதங்களாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பண்டிகை நாட்களைக் கூர்ந்து கவனித்தால் பெரும்பாலும் அமாவாசையும், பவுர்ணமியும் பங்கு வகிக்கின்றன. இந்த இரண்டு நாட்களையும் நம் முன்னோர்கள் புனித நாட்களாகக் கருதி அந்த நாட்களில் இறைவனிடம் மனதை செலுத்த விரத நாட்களாகவும் ஆக்கினார்கள். அப்படி விரதம் இருக்க வேண்டுமானால் நம் உடலில் பலமும், மனதில் சக்தியும் வேண்டும்.
விஞ்ஞான ரீதியாக மட்டுமல்லாமல் ஆன்மிக ரீதியாகவும் பவுர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கியநாளாகக் கருதப்படுவதால் மாதாமாதம் ஒவ்வொரு பவுர்ணமியையும் ஒரு பண்டிகையாகக் கொண்டாடும்படி நம் முன்னோர்கள் வைத்துள்ளார்கள். மாதா மாதம் பவுர்ணமி ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திலேயே வரும், அந்த நாட்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் பெரும்பாலும் அந்த நட்சத்திரத்தின் பெயரிலேயே வருவதைக் காணலாம். மேலும், தட்சனது சாபத்தால் சிவபெருமானிடம் அடைக்கலம் வேண்டினார் சந்திரன். சந்திரனுக்கு அடைக்கலம் அளித்த சிவபெருமான் அதை தன் தலையில் சூடிக்கொண்டு சந்திரசேகரர் ஆனார். ஆதலால் பன்னிரண்டு பவுர்ணமிகளுமே சிவபெருமானுக்குரிய விசேஷ நாட்களாகும்.
சித்திரை - சித்ரா பவுர்ணமி விரதம்
சித்திரை மாதத்தில் பவுர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் வரும். சித்ரா பவுர்ணமி யன்றுதான் யமதர்மராஜாவின் கணக்கரான சித்ரகுப்தன் அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. அன்று ஒரு நாள் விரதம் இருந்து சித்ரகுப்தனை வழிபட்டால் மோக்ஷம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சித்திரை நட்சத்திரம் அம்மனுக்குரிய சிறப்பு தினம். சிவாலயங்களில் சிவனுக்கு மருக்கொழுந்தால் அபிஷேகம் செய்வார்கள்.
வைகாசி - வைகாசி விசாகம் விரதம்
வைகாசி மாதத்தில் பவுர்ணமியில் வரும் விசாகம் என்பது முருகப் பெருமான் பொய்கையில் ஆறு முகங்களுடன் அவதரித்த நாளாகும் என்பதால் முருகன் கோயில்களில் இந்தநாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். சிவாலயங்களில் சிவனுக்கு சந்தனதத்தால் அபிஷேகமும், அலங்காரமும் செய்வார்கள்.

ஆனி - ஆனித் திருமஞ்சனம் விரதம்
ஆனி மாதத்தில் பவுர்ணமி கேட்டை நட்சத்திரத்தில் வரும். சிவன் கோயில்களில் சிவனுக்கு முக்கனிகளால் (மா, பலா, வாழை) அபிஷேகம் செய்வார்கள். ஆனி மாதத்தில் சிவபெருமான், பார்வதியின் அருளைப் பெற வழிவகுக்கும் நாளாகும். ஆனி மாதம் பவுர்ணமியன்று காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனித் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
ஆடி - ஆடி குரு பூர்ணிமா விரதம்
ஆடி மாதத்தில் பவுர்ணமி உத்திராடம் நட்சத்திரத்தில் வரும். இந்த பவுர்ணமியில் சிவன் கோயில்களில் சிவனுக்கு காராம் பசுவின் பாலால் அபிஷேகம் செய்வார்கள். மகாபாரதம் ஸ்ரீமத் பாகவதம் போன்ற புராணங்களை எழுதியவர் வேதவியாசர். ஆடி மாத பவுர்ணமியை வியாச பூர்ணிமா அல்லது குரு பூர்ணிமா என்ற பெயரில் வியாசபகவானை பூஜிக்கிறார்கள். ஆடி மாத பவுர்ணமியில் அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் கஜேந்திர மோட்சம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். அம்மன் கோயில்களிலும் இந்த பவுர்ணமி அன்று மாவிளக்கு போடுதல், பொங்கல் இடுதல், லலிதா ஸஹஸ்ரநாமம் அர்ச்சனை போன்ற விசேஷ ஆராதனைகள் நடைபெறுகின்றன.
ஆவணி - ஆவணி அவிட்டம் விரதம்
ஆவணி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் வரும். இந்த பவுர்ணமியில் சிவன் கோயில்களில் சிவனுக்கு வெல்ல சர்க்கரையால் அபிஷேகம் செய்வார்கள். உபநயனம் செய்து கொண்ட பிராமணர்கள் ஆவணி மாத்தில் அவிட்டம் நட்சத்திரத்தோடு கூடிய பவுர்ணமி அன்று கொண்டாடும் பண்டிகை ஆவணி அவிட்டம்.
புரட்டாசி - புரட்டாசி பூரட்டாதி விரதம்
புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பவுர்ணமி வருகிறது. இந்த மாத பவுர்ணமியில் சிவன் கோயில்களில் சிவனுக்கு கோதுமையும் வெல்லமும் கலந்த வெல்ல அப்பத்தால் அபிஷேகம் செய்வார்கள். இந்த மாத பவுர்ணமி அன்று தான் உமா மகேஸ்வர விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
ஐப்பசி - ஐப்பசி அன்னாபிஷேகம் விரதம்
ஐப்பசி மாதம் அசுவினி நட்சத்திரத்தில் பவுர்ணமி வரும். எல்லா சிவாலயங்களிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் மிக மிக சிறப்பாகக் கொண்டாடப்படும். உலகில் உள்ள ஜீவராசிகளுக்கெல்லாம் உணவளித்துக் காக்கும் சிவபிரானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவனுக்கு அன்னம், காய்கறி, பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்கரிப்பார்கள்.

கார்த்திகை - கார்த்திகை தீபம் விரதம் :
கார்த்திகை பவுர்ணமி கார்த்திகை நட்சத்திரத்திலேயே வரும். இந்த பவுர்ணமியில் எல்லா சிவாலயங்களிலும் சிவனுக்குப் பசு நெய்யால் அபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை நட்சத்திரமும் கார்த்திகை பவுர்ணமி நாளும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் எல்லா சிவாலயங்களிலும் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் ஏற்றப்படும் திருவண்ணாமலை தீபம் உலக பிரசித்தம். அன்று தான் பார்வதிக்கு ஈசுவரன் இடபாகம் தந்து அர்த்தநாரீசுவரன் ஆனார் என்பர்.
மார்கழி - மார்கழி திருவாதிரை விரதம் :
மார்கழி பவுர்ணமி திருவாதிரை நட்சத்திரத்தில் வரும். இது பரமசிவனின் நட்சத்திரமாகும். இந்த நாளில் சிவனுக்குப் பசு நெய்யாலும் நறுமண பன்னீராலும் அபிஷேகம் செய்வார்கள். மார்கழியில் பாடப்படும் திருப்பாவை மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் என்று பவுர்ணமியில் துவங்குகிறது. கோயில்களில் ஆருத்ரா தரிசனமும் இந்த திருவாதிரை பவுர்ணமி அன்றுதான் கொண்டாடப்படும்.
தை - தைப்பூசம் விரதம் :
தை மாதத்தில் பவுர்ணமி பூசம் நட்சத்திரத்தில் வரும். அன்று செய்யும் தைப்பூசம் முருகன் வழிபாட்டிற்கு ஈடு இணையே இல்லை. தைப்பூசம் முருகனுக்கு உகந்த நாள் என்றாலும் அன்று முருகனுடன் சிவனையும் வழிபட வேண்டும். சிவனுக்கு அன்று கருப்பஞ்சாறால் அபிஷேகம் செய்வது உகந்தது. தைப்பூசத்தன்றுதான் உலகம் தோன்றியதாகக் கூறப்படுகிறது. சத்தியஞான சபையைத் தோற்றுவித்த வள்ளலார் தைமாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று ஏற்றி வைத்த ஜோதி ஜோதி தரிசனமாகக் காட்டப்படுகிறது. சிவபெருமான் உமா தேவியுடன் ஞான சபையான சிதம்பரத்தில் நடனம் ஆடி தரிசனம் தந்ததும் இந்த தைப்பூசத் திருநாளில்தான்.
மாசி - மாசிமகம் விரதம்
மாசி மாதத்தில் பவுர்ணமி மகம் நட்சத்திரத்தில் வரும். சிவன் கோயில்களில் சிவனுக்குப் பசு நெய்யில் அபிஷேகம் செய்வார்கள். இந்த நாளை மாசி மகம் என்று கோயில்களில் இறைவனை புனித நீர் நிலைகளில் நீராடல் செய்து கொண்டாடுவார்கள். வீடுகளில் அன்று சித்ரான்னங்கள் பாயசம் முதலியன செய்து நிலவிற்குப் படைத்து நிலவொளியில் குடும்பத்துடன் உண்டு மகிழ்வார்கள்.
பங்குனி - பங்குனி உத்திரம் விரதம்
பங்குனி மாதத்தில் பவுர்ணமி உத்திர நட்சத்திரத்தில் வரும். சிவன் கோயில்களில் முருகனுக்கு சிறப்பு விரத தினமாக் கொண்டாடப்படுகிறது. கடவுளரின் திருமண நாளாகவும் கொண்டாடப்படும். இந்த பவுர்ணமியன்று திருச்செந்தூர் கோயிலில் ஐராவத மண்டபத்தில் 108 சிவலிங்கங்கள் சாட்சியாக வள்ளி முருகன் திருமணம் சிறப்பாக நடைபெறும். மேலும் பார்வதி தேவி சிவனை மணந்து கொண்ட நாள். மேலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஸ்ரீராமர் - சீதை, ஆண்டாள் - ஸ்ரீரங்கநாதர், சாவித்திரி - சத்தியவான், மயிலை கற்பகாம்பாள் - கபாலீஸ்வரர் திருமணங்கள் நடைபெற்ற நன்னாள். இந்த தினம் ஸ்ரீஐயப்பனும், அர்ஜுனனும் அவதரித்த திருநாள்.

பன்றி முகத்தோடும், அழகிய இளம் பெண்ணின் அமைப்புத் தோற்றத்தோடும் காட்சியளிக்கும் அந்தக் காவல் தெய்வத்தை விரதமிருந்து வழிபட்டால் தேவைகள் அனைத்தும் நிறைவேறும்.
ஒவ்வொருவருக்கும் வாழ்வில் வளமும் நலமும் பெற வேண்டும் என்ற ஆர்வம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. இருபத்தி நான்கு மணி நேரமும் இறைவனின் திருப்பெயரை இதயத்தில் பதித்து வைத்துக்கொண்டு தான் வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றோம். தும்மும் போது கூட சிவா, முருகா என்று இறைவனின் நாமத்தை உச்சரிப்பது நல்லது என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள்.
சிலருக்கு வாழ்க்கையில் எப்போதாவது பிரச்சினைகள் உருவாகும். சிலருக்கோ பிரச்சினையே வாழ்க்கையாக அமையும். அலைபாயும் மனதில் நிலையான நிம்மதி கிடைக்காது. 'நெஞ்சிற்கு நிம்மதி ஆண்டவன் சன்னிதி' என்று கவியரசு கண்ணதாசன் சொல்வார். பக்தர்களைப் பாதுகாப்பதில் வேகத்தோடு செயல்படும் தெய்வமாகவும், தொல்லை தருபவர்களை தூர ஓட்டும் தெய்வமாகவும், எதிர்ப்புகளை வெல்லும் ஆற்றல் பெற்ற தெய்வமாகவும், இடையூறுகளை அகற்றி இனிய வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் தெய்வமாகவும், செல்வ நிலையை உயர்த்திக் கொடுக்கும் தெய்வமாகவும் இந்தக் கலியுகத்தில் விளங்குவது வராஹி அம்மனாகும்.
பன்றி முகத்தோடும், அழகிய இளம் பெண்ணின் அமைப்புத் தோற்றத்தோடும் காட்சியளிக்கும் அந்தக் காவல் தெய்வத்தை விரதமிருந்து வழிபட்டால் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். சஞ்சலம் தீர்க்கும் சக்தியாக, சந்தோஷம் வழங்கும் சக்தியாக, நித்தமும் வரம்தரும் சக்தியாக, நிலையான புகழ் தரும் சக்தியாக விளங்கும் சக்தி வராஹி.
பஞ்சமி திதியில் 'வராஹி' இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று விரதமிருந்து வழிபட்டால் பலன்கள் அதிகமாகக் கிடைக்கும். செம்பருத்தி, செவ்வரளி, பிச்சிப்பூ, மல்லிகைப்பூ போன்றவைகளை அதற்குரிய அர்ச்சனையில் சேர்க்க வேண்டும். வராஹி சன்னிதியில் விளக்கு ஏற்றுங்கள். கலக்கம் அகலும். காசுபணப்புழக்கம் அதிகரிக்கும்.

தெய்வங்களுக்குத் திருமணம் நடைபெற்ற இந்த நாளில், மனிதர்களாகிய நாம் விரதமிருந்து மால்மருகனை வழிபட்டால் மண மாலை சூடுகின்ற மங்கல நாளைக் காண இயலும்.
சிவனின் மைந்தன் செந்தில் வடிவேலனுக்கு உத்திரப் பெருவிழாக் கொண்டாடும் மாதம் பங்குனி மாதம் ஆகும். எத்தனை உத்திர நட்சத்திரங்கள் வந்தாலும் பங்குனி மாதத்தில் வரும் பொழுது அது ‘பங்குனி உத்திரம்’ என்று மாதத்தின் சிறப்போடு அழைக்கப்படுகிறது.
மாதங்களில் கடைசி மாதம் பங்குனியாக இருந்தாலும், நம்மை முதன்மையான மனிதராக மாற்றுவதற்கும், முக்கியமாக இல்லறம் என்னும் நல்லறத்தை ஏற்பதற்கும் இந்தப் பங்குனித் திருநாளில் தான் விரதமிருந்து வள்ளி மணாளனை வழிபட வேண்டும்.
இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திரத் திருநாள், 30.3.2018 (வெள்ளிக்கிழமை) அன்று வருகின்றது. அன்றைய தினம் வீட்டு பூஜையறையில் வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமானின் படத்தை வைத்து, பஞ்சமுக விளக்கேற்றி விரதமிருந்து வழிபாடு செய்ய வேண்டும்.
‘முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்
மருகனே, ஈசன்மகனே ஒரு கைமுகன் தம்பியே
நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்!’
என்று முன்னோர்கள் பாடியதைப் போல நாமும் நம்பிக்கையோடு பாடி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
பங்குனி உத்திரத் திருநாளில் முருகப்பெருமானுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடைபெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. அதுமட்டுமல்ல ராமர் - சீதை திருமணம் நடைபெற்றதும், மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருமணம் நடைபெற்றதும், ரதிக்காக மன்மதனைச் சிவபெருமான் எழுப்பித் தந்ததும் இந்தநாளில் தான் என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன.
தெய்வங்களுக்குத் திருமணம் நடைபெற்ற இந்த நாளில், மனிதர்களாகிய நாம் விரதமிருந்து மால்மருகனை வழிபட்டால் மண மாலை சூடுகின்ற மங்கல நாளைக் காண இயலும். ஆகவே தான் இந்த விரதத்தை ‘கல்யாண விரதம்’ என்று வர்ணிக்கிறார்கள்.
வீட்டைத் தாங்குவது உத்திரம். அதைப்போல நம் முடைய வாழ்க்கையைத் தாங்கிப் பிடிப்பது வாழ்க்கைத் துணை. அந்தத் துணையைத் தேர்ந்தெடுக்க முடியாமல் சிலர் தவிப்பார்கள். ஜாதகத்தில் அங்காரக தோஷம், களத்திர தோஷம் போன்ற தோஷங்கள் அமைந்தவர் களுக்குஎல்லாம் வரன்கள் வாசல் தேடி வந்து திரும்பிச் செல்லும் சூழ்நிலை அமையும்.
முழுநாளும் விரதமிருந்து ‘வேலை’ வணங்குவதே வேலை எனக்கொண்டால் நாளும், பொழுதும் நலமாக இருக்கும். வாழ்க்கை வளமாக இருக்க எதையேனும் ஒன்றை நாம் நம்புகிறோம். அந்த நம்பிக்கையை சிவன் மீது மாசி சிவராத்திரியன்று பரிபூரணமாக வைக்கின்றோம். தந்தை மீது நம்பிக்கை வைத்த நாம், பங்குனி மாதம் தனயன் முருகன் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும். குத்துவிளக்கின் கீழே இடும் கோலம் வெறும் கோலமாக இல்லாமல், நடு வீட்டுக் கோலம் என்று அழைக்கப்படும் முக்கோண, அறுகோண, சதுரங்கள் அமைந்த கோலங்களாக இடவேண்டும். கோலத்தில் புள்ளி அதிகமிருந்தால் தான் ‘புள்ளி’ எனப்படும் வாரிசு பெருகும் என்பார்கள்.
வழிபாட்டின் பொழுது, மாங்கனி வைத்தும் வழிபடலாம். இல்லையேல் தேன் கதலியோடு, தேனும், தினை மாவும் நைவேத்தியமாகப் படைத்து பூஜைக்குப் பின் அதைச் சாப்பிடலாம். அருகில் இருக்கும் சிவாலயங்களுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருவது நல்லது.
அன்றைய தினம் சண்முகருக்கு சர்க்கரை அபிஷேகம் செய்தால் அவன் அக்கறையோடு நமக்கு அருள் தருவான். பஞ்சாமிர்தத்தால் அந்தப் பாலகனுக்கு அபிஷேகம் செய்தால், அஞ்சாத வாழ்வை அவன் அளிப்பான். பாலாலும், பன்னீராலும் அபிஷேகம் செய்து பார்த்தால் வாழ்நாளை நீடித்துக் கொடுப்பார்.
பங்குனி உத்திரத்தன்று ஆலயங்களுக்கு அருகில் தண்ணீர் பந்தல் வைத்து பக்தர்களுக்கெல்லாம் மோர் மற்றும் பானகம் கொடுத்தால் எண்ணிய பலன் நமக்குக் கைகூடும். அந்த அடிப்படையில் பார் போற்றும் வாழ்வமைய, நாம் பரமசிவனின் மைந்தனை மனதில் நிறுத்தி வழிபடுவோம்.
‘காவிரியின் நீர்பெருகிக் கடை உடைந்து
வந்து விட்டால்
கடைசியிலே கொள்ளும் இடம் கொள்ளிடம்.
கவலையென்று வந்து விட்டால்
கைகூப்பித் தொழுதவர்க்கு
கவலை தீரும்! கந்தன் என்று சொல்லுமொரு
சொல்லிடம்!’
எனவே உத்திரநாளில் ‘கந்தா! கந்தா!’ என்று கனிவோடு கூறினால், ‘இந்தா! இந்தா!’ என்று வரங்களை நமக்கு வடிவேலன் தருவார்.
-“ஜோதிடக்கலைமணி” சிவல்புரிசிங்காரம்.

ராம நவமி அன்று விரதமிருந்து வழிபடுவதன் மூலமும், ராமருடன் இணைந்து சீதா, லட்சுமணர், அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமும் லட்சியங்கள் நிறைவேறும்.
ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என்று வாழ்ந்தவன் ராமபிரான். தெய்வமாக இருப்பவன் மனிதனாக அவதரித்து ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்து காட்டியவன். ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தவனுடைய பெருமையே ராமாயணம் என்று எழுதப்பெற்றது.
ராமன் காட்டிய வழியே நடக்க வேண்டும் என்று தான் இல்லம்தோறும் ராமாயணம் படிப்பதை பலரும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ராமர் பிறப்பு அன்று ஆலய வழிபாட்டில் கலந்துகொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ராமர்-சீதை திருமணம் சொற்பொழிவுகளில் கலந்து கொண்டு, அந்தக் கதைகளைக் கேட்டால் திருமண பாக்கியம் கை கூடும்.
ராமர் நவமி திதியில் பிறந்ததால் அன்றைய தினம் ‘ராமநவமி’ என்று அழைக்கப்படுகிறது. அந்தத் திருநாள் 25.3.2018 (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. அன்றைய தினம் ராமபிரானை விரதமிருந்து வழிபடுவதன் மூலமும், ராமருடன் இணைந்து சீதா, லட்சுமணர், அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமும் லட்சியங்கள் நிறைவேறும். அனுமன் வழிபாட்டால் தம்பதியர் ஒற்றுமை உருவாகும்.

திருமணம் ஆன பெண்கள் இந்த விரதத்தை கடைபிடித்து வந்தால் பிரிந்த தம்பதியர் கூடுவர். கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
காரடையான் நோன்பு (இன்று) அன்று வீட்டை தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். வாசல் நிலை, சுவாமி அறை நிலைகளில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட்டு காமாட்சி அம்மன் மற்றும் சுவாமி படங்களுக்கு பூமாலை அளிக்க வேண்டும்.
ஒரு கலசத்தின் மேல் தேங்காய் மாவிலை வைக்க வேண்டும். கலசத்தில் குங்குமம், மஞ்சள் பூசி, அதன்மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் காமாட்சி அம்மன் படம் வைத்து அதனை சாவித்திரியாக கருதி வழிபட வேண்டும். சாவித்திரி, காட்டில் தன் கணவர் சத்தியவானுடன் வாழ்ந்த போது அங்கு கிடைத்த கார் அரிசியையும், காராமணியையும் கொண்டு அடை தயார் செய்து வெண்ணெய்யுடன் இறைவன், இறைவிக்கு சமர்ப்பித்து வழிபட்டாள்.
அதனால் சிறிது வெண்ணெய்யுடன், விளைந்த நெல்லைக்குத்தி கிடைத்த அரிசி மாவில் அடை தயாரித்து நைவேத்தியமாக படைக்க வேண்டும். நுனி வாழை இலையில் வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை ஒரு தட்டில் வைக்க வேண்டும். மஞ்சள் சரடு (மஞ்சள், பூ இதழும் நடுவில் கட்டி) இவைகளை வைத்து இலை நடுவில் வெல்ல அடையும், வெண்ணெய்யும் வைக்க வேண்டும். நோன்பு சரடை அம்மனுக்கு சாற்றி, பின் அதில் துளசி இலையை சுற்றி தங்கள் கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும்.
‘உருகாத வெண்ணெய்யும், ஓரடையும்
வைத்து நோன்பு நோற்றேன்
ஒரு நாளும் என் கணவன் என்னைப்
பிரியாமல் இருக்க வேண்டும்’
என்று ஒவ்வொரு சுமங்கலி பெண்ணும் அம்மனிடம் விண்ணப்பித்து வேண்டி கொள்ள வேண்டும். மூத்த பெண்கள் இளைய பெண்களுக்கு சரடு கட்ட வேண்டும்.

பிறகு தானும் கட்டிக் கொண்டு அம்மனை வணங்கிய பின்னர் அடையை சாப்பிடலாம். நோன்பு தொடங்கியது முதல் முடிக்கும் வரை தீபம் எரிய வேண்டியது முக்கியமானது. அன்று பாலும், பழமும் சாப்பிடுவது மாங்கல்ய பலத்தை பெருக்கும். நிவேதனப் பொருட்களை உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். மறுநாள் சூரிய உதயத்திற்கு முன்பு பசுவிற்கு இரண்டு வெல்ல அடைகள் கொடுக்க வேண்டும்.
வைக்கோலுக்கு மரியாதை
காரடையான் நோன்பில் காரரசி மாவும், காராமணி அல்லது துவரையும் கலந்த அடை செய்து நைவேத்தியமாக படைக்கப்படும். அடை தயாரிக்கப்படும்போது வாணலியின் அடியில் வைக்கோல் போட்டு மேலே தட்டில் அடையை வேக வைப்பார்கள். நெல் கதிரில் இருந்து பிரியும் வரை வைக்கோல் நெல்மணியை காத்து இருக்கும்.
அதைப்போல் சத்தியவான் உடலில் இருந்து உயிர் பிரிந்தவுடன், உயிரை மீட்டுக் கொண்டு வரும் வரை உடலை காத்திரு என்று சாவித்திரி சொல்லி விட்டு வைக்கோலால் சத்தியவான் உடலை மூடி விட்டு சென்றாள். அதன் நினைவாக தான் வைக்கோல் போடுகிறோம். இந்த விரதத்தால் பிரிந்த தம்பதியர் கூடுவர். கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

தங்கள் கணவரின் ஆயுள் நீண்டு தாங்கள் என்றும் தீர்க்கசுமங்கலியாக வாழவேண்டும் என்ற வேண்டுதலுடன் சாவித்திரி அம்மனை வழிபடும் விரதமே, காரடையான் நோன்பு ஆகும்.
ஒவ்வொரு மாதங்களிலும் மேற்கொள்ளப்படும் பண்டிகைகளும், விரதங்களும் வாழ்க்கைக்குத் தேவையான நியதிகளையே ஆன்மிகத்தின் வாயிலாக நமக்கு உணர்த்துகின்றன. இந்த பாரம்பரியமிக்க விரதங்களின் வரிசையில் வருவது தான் காரடையான் நோன்பு. மாசி மாதத்தின் முடிவில் பங்குனி மாதம் பிறக்கும் போது தங்கள் கணவரின் ஆயுள் நீண்டு தாங்கள் என்றும் தீர்க்கசுமங்கலியாக வாழவேண்டும் என்ற வேண்டுதலுடன் சாவித்திரி அம்மனை வழிபடும் விரதமே, காரடையான் நோன்பு ஆகும். இந்த நோன்பு வந்ததின் வரலாறைப் பார்ப்போம்.
மந்திர தேசத்தின் மன்னன் அஸ்வபதி நீண்ட காலமாக புத்திரப்பேறு இன்றி இறைவனை வேண்டி பல யாகங்கள், பூஜைகள், தவங்களை நிகழ்த்தினான். அதன் பலனாக இறைவன் அருளால் அழகிய பெண் குழந்தை பிறக்க, மகிழ்ந்த அரசன் அந்த குழந்தைக்கு சாவித்திரி என்று பெயரிட்டான். அக்குழந்தைக்கு சகல வித்தைகளையும் கற்றுத்தந்து சகலகலாவல்லி ஆக்கியதுடன், அவளை பண்புள்ள பெண்ணாகவும், கடவுளின் மீது அளவற்ற பக்தி கொண்டவளாகவும் வளர்த்தான்.
சாவித்திரி திருமண வயதை எட்டினாள். தன் ஆசை மகளின் மணாளனை அறிந்து கொள்ளும் ஆவலில், ஒரு நாள் அரண்மனைக்கு வந்த நாரத முனிவரிடம், தன் மகளின் மணவாழ்க்கை பற்றி கேட்டான் மன்னன்.
அதற்கு நாதரர், ‘கண் பார்வையை இழந்த பெற்றோரை பேணிக் காத்து, அவர்களையே தெய்வமாக எண்ணி சேவை செய்து வரும் குணவானான சத்தியவான் என்பவனைத் தான் சாவித்திரி விரும்பி மணப்பாள். ஆனால் சத்தியவான் அற்ப ஆயுளில் மரணிப்பது விதி’ என்றார்.
நாதரர் சொன்னபடியே நடந்தது. ஒரு நாள் காட்டுப் பகுதிக்குள் பூப்பறிக்கச் சென்ற சாவித்திரி, சத்திய வானைக் கண்டு அவனை விரும்பினாள். மன்னனும் விதியை மாற்ற இயலாது என்பதை உணர்ந்து, சத்தியவானையே தன் மகளுக்கு மணம் முடித்து வைத்தான்.
பகைவர்களால் கண்கள் பிடுங்கப்பட்டு, நாட்டினின்று காட்டுக்கு விரட்டப்பட்ட சாலுவ தேசத்து அரசன் துயுமுத்சேனனின் மகன் தான் சத்தியவான். காட்டில் குடிசை அமைத்து பெற்றோருடனும், காதல் மனைவி சாவித்திரியுடனும் மகிழ்வுடன் வாழத் தொடங்கினான். காட்டில் உள்ள மரங்களை வெட்டி ஜீவனம் நடத்தி வந்தான், சத்தியவான்.
வருடம் சென்றது. நாரதர் கூறிய ரகசியமான சத்தியவானின் ஆயுள் முடியும் காலம் வந்தது. தன் பதிவிரதத் தன்மையால் கணவனின் ஆபத்தை உணர்ந்த சாவித்திரி, அவனுடனே இருக்கப் பிரியப்பட்டாள். அது ஒரு மாசி மாதத்தின் கடைசி நாள். கணவனே கண் கண்ட தெய்வமாகவும், அவனைப் பெற்றவர்களுக்கு செய்யும் தொண்டையே கடவுளுக்கு செய்யும் சேவையாகவும் எண்ணி வாழ்ந்து வந்த குணவதியான சாவித்திரி, காட்டிற்கு மரம் வெட்டப் புறப்பட்ட கணவனுடன் தானும் வருவதாகக் கூறி புறப்பட்டுச் சென்றாள்.
சத்தியவான் மரத்தை வெட்டி விறகுகளாக்க, அருகில் சாவித்திரியோ வரும் ஆபத்தை எதிர்நோக்கி முழுமையான இறை தியானத்தில் ஆழ்ந்திருந்தாள். மதிய வேளை வந்தது. உணவு உண்ட சத்தியவான் களைப்பில் மனைவியின் மடியில் தலை வைத்து உறங்க, உறக்கத்திலேயே அவனின் உயிரைக் கவர்ந்து, தன் கையில் இருந்த கயிற்றில் ஐக்கியமாக்கினான் எமன்.
தியானத்திலிருந்த சாவித்திரி கணவனின் உடலினின்று வெளிப்பட்ட ஒளி, எமனின் கைகளில் இருந்த கயிற்றில் ஐக்கியமானதை அறிந்து கண் விழித்தாள். தவ வலிமையால் எதிரில் நின்ற எமனைக் காணும் சக்தியைப் பெற்றிருந்தாள், அவள். எமனை வணங்கினாள். தன்னை வணங்கும் அந்தப் பெண்ணை வாழ்த்தும் நோக்கில், ‘தீர்க்க சுமங்கலி பவ’ என்று வாழ்த்திய எமதர்மன், சத்தியவானின் உயிரோடு எமலோகம் நோக்கிச் சென்றான்.
கணவனின் உடலை பத்திரப்படுத்திய சாவித்திரியும், இறைவனை வேண்டியபடி எமனைப் பின் தொடர்ந்தாள். கற்புக்கரசிகளின் தவ வலிமை எதையும் சாதிக்கும் வல்லமை கொண்டது என்பதை தன் பூத உடலுடன் எமனைப் பின் தொடர்ந்த சாவித்திரி நிரூபித்தாள்.

‘தீர்க்க சுமங்கலி பவ’ என்று வாழ்த்தியது உண்மையானால், தன் கணவரின் உயிரைத் திரும்பித் தரும்படி அவள் எமதர்மனிடம் வேண்டினாள். அவளது பதியின் மேல் கொண்ட பக்தியையும், விடா முயற்சியையும், புத்தி சாதுர்யத்தையும் கண்டு வியந்த எமதர்மன், ‘மங்கையே! உன் பதிபக்தியைக் கண்டு மெச்சுகிறேன். ஆனாலும் நான் என் கடமையில் இருந்து தவற முடியாது. ஆகவே உன் கணவனின் உயிரைத் தவிர வேறு வரங்களைக் கேள் தருகிறேன்’ என்றார்.
சாவித்திரி மிகுந்த சாதுர்யத்துடன் ‘தீர்க்கசுமங்கலி பவ என்று என்னை வாழ்த்தி அருளிய எமதர்மனே, நான் என் கற்புநிலை பிறழாமல் நூறு பிள்ளைகளைப் பெற்று மகிழவேண்டும். என் மாமனார், மாமியார் இருவரும் அதனைக் கண்டு மகிழ வேண்டும்’ என்று வேண்ட, அவளின் கோரிக்கையில் மறைந்து இருந்த அர்த்தம் புரிந்த எமன் அவளைப் பாராட்டியபடி அவளின் வேண்டுதலுக்கிணங்கி கற்புநிலை பிறழாமல் (பிற ஆடவனின் துணையின்றி) நூறு பிள்ளைகள் பெற ஏதுவாக அவளின் கணவன் உயிரைத்தந்து வாழ்த்தியதாக புராண வரலாறு கூறுகிறது.
இதையடுத்து உறக்கத்தில் இருந்து விழித்தவனைப் போல், உயிருடன் எழுந்த சத்தியவானுடன் இல்லம் நோக்கிச் சென்ற சாவித்திரி, அங்கு தன் மாமனார், மாமியாரின் கண்கள் திரும்ப வரப் பெற்றதைக் கண்டு எமதர்மனுக்கு மனதார நன்றி கூறினாள்.
தன் கணவனின் உயிரைத் திரும்பித் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, அப்போது வீட்டில் இருந்த கார் அரிசியையும், காராமணியையும் அரைத்து மாவாக்கி இனிப்பு அடையும், கார அடையும் செய்து, அதனுடன் அன்று கடைந்த உருகாத வெண்ணெய்யையும் சேர்த்து தூய நுனி வாழை இலையில் படைத்து இறைவனை வழிபட்டாள். பின் அந்த பிரசாதத்தை வீட்டில் உள்ளவர்களுக்கு அளித்து மகிழ்ந்தாள்.
இந்தப் புராண நிகழ்வு நிகழ்ந்தது மாசி மாதத்தின் கடைசி நாள். எமனைப் பின்தொடர்ந்து சென்று கணவன் உயிரை மீட்டு வந்தபோது, மாலைப்பொழுது முடிந்து இருள் சூழ்ந்து விட்டது. எனவே அது பங்குனி மாதம் பிறக்கத் தொடங்கிய நேரம். இரு மாதமும் கூடும் நேரம். மேலும் சாவித்திரி, எமனுடன் சென்று கணவன் உயிரை மீட்டு வர மூன்றே முக்கால் நாழிகை நேரம் (ஒன்றரை மணி நேரம் ) ஆனதென்றும், அதனால் தான் என்றும் ஒருவரின் இறப்பு நிகழ்ந்து ஒன்றரை மணி நேரம் கழித்தே மற்ற காரியங்களைத் தொடங்குவதாகவும் ஐதீகம் உள்ளது. இறந்தவரின் உடல் சூடு அந்நேரம் வரை இருப்பது நாம் அறிந்ததே.
பொதுவாக இறைவனின் பெயர்கள் லட்சுமி நாராயணன், மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்று பெண்களுக்கு முன்னுரிமை தந்து அதன் பின்தான் இருக்கும். ஆனால் சாவித்திரி தன் காதல் கணவனின் மேல் கொண்ட அளவற்ற பக்தியால் எமனிடமே வாதிட்டு வெற்றி கொண்டு “சத்தியவான் சாவித்திரி” என்று புகழப்படுவது சிறப்பு. சாவித்திரியின் கற்பும், கணவன் மீதும் அவன் வீட்டார் மீதும் அவள் கொண்டிருந்த பக்தியும், எதற்கும் கலங்காத எமதர்மனையே அசைத்து விதியைப் புறந்தள்ள வைத்தது. இதே போல் எத்தனை இடர்கள் வந்தாலும், தங்கள் கணவரின் உயிருக்கு ஆபத்து வராமலும், தங்களை விட்டுப் பிரியாமலும் நீடுழி வாழவே சாவித்திரியின் வழியில் பெண்கள் இவ்விரதத்தை மேற்கொண்டு அம்மன் அருளைப் பெற்று மகிழ்கின்றனர்.

ராகு கால பூஜை செய்பவர்கள் பூஜை முடியும் வரை விரதம் அனுஷ்டிப்பது நன்மை தரும். இது விரதம் குறிந்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ராகு கால துர்க்கை பூஜையை இயன்றவரை கோவிலில் செய்வதே நல்லது. முடியாத நேரத்தில் அவரவர் வீட்டிலும் செய்யலாம். ராகு கால பூஜை செய்பவர்கள் பூஜை முடியும் வரை விரதம் அனுஷ்டிப்பது நன்மை தரும். முடியாதவர்கள் சிறிது பால், பழம் அருந்தலாம்.
வீட்டு பூஜை அறையை மெழுகி கோலமிட வேண்டும். சுத்தமான மணைப் பலகை ஒன்றின் மீது நுனி வாழை இலையை வைத்து (நுனி வடக்கு பார்த்து இருப்பது நல்லது), அதன் நடுவே சிறிது பச்சரிசியைப் பரப்பி, அதன் மையத்தில் சிறிது துவரம் பருப்பைப் பரப்புங்கள். இந்த அமைப்பின் நடுவே குத்துவிளக்கு அல்லது காமாட்சி அம்மன் விளக்கை வைத்து, அதனை துர்க்கையாக பாவித்து, பொட்டு வைத்து, பூ போட்டு பின்னர் விளக்கேற்ற வேண்டும். அதன் முன் எலுமிச்சைப் பழத்தின் சாறை ஒரு பாத்திரத்தில் பிழிந்து விட்டு, மூடியில் திரி போட்டு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து வணங்குங்கள்.
செவ்வரளி மற்றும் மஞ்சள் நிறப் பூக்களைப் பயன்படுத்துங்கள். தெரிந்த துர்க்கை துதிகளைச் சொல்லுங்கள். துர்க்கை போற்றியினை சொல்லி குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். தூப, தீபம் காட்சி வணங்க வேண்டும். தயிர் சாதம், பால் பாயாசம் என உங்களால் இயன்ற நிவேதனங்களோடு, பிழிந்து வைத்த எலுமிச்சை சாறினை சேர்த்து பானம் தயாரித்து அதையும் நைவேத்தியம் செய்யுங்கள்.
பூஜை முடிந்த பின்னர் யாரேனும் பெண்மணிக்கு பிரசாதங்களோடு இயன்ற மங்கள பொருட்களைக் கொடுத்து, நீங்களும் பிரசாதம் சாப்பிடுங்கள். ராகு காலம் முடிந்த பின்னர், பூஜித்த விளக்கு அமைப்பினை சற்று வடக்காக நகர்த்தி வைத்து பூஜையை நிறைவு செய்யுங்கள்.

அனகாஷ்டமி விரதத்தை ஒருவர் கடைப்பிடித்து வந்தால், அவரது முன் ஏழு தலைமுறையினரையும், பின் ஏழு தலைமுறையினரையும் முக்தி அடையச் செய்யும்.
மார்கழி மாதம் சுக்லபட்ச அஷ்டமி தினத்தில், எட்டு சித்திகளுக்கும் உறைவிடமான அனகாதேவியுடன் தத்தாத்ரேயரை சேவிப்பவர்களுக்கு, மனம், மொழி, மெய் ஆகியவற்றால் ஏற்படும் பாவங்களை போக்கி, அவர்களை பாவமற்றவர்களாக செய்வார்.
இன்றைய தினம் அனகாஷ்டமி என்று அழைக்கப்படும். இதற்காக மேற்கொள்ளப்படும் விரதம் அனகாஷ்டமி விரதம் எனப்படும். எவன் ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் இந்த விரதத்தை கடைப்பிடிக்கிறானோ, அவனுக்கு நானே நேரடியாக அவன் வசமாகி உன்னைப்போல் ஆக்குவேன்’ என்று அருளினார்.
அனகாஷ்டமி தினத்தன்று, விரதமிருந்து அனகாதேவியுடன் கூடிய தத்தாத்ரேயரின் உருவத்தை, தர்ப்பை புல்லில் செய்து வைத்து பக்தியுடன் பூஜை செய்ய வேண்டும். மேலும் சந்தனம், மலர், நறுமணம் தரும் புகை, தீபம் போன்றவற்றாலும் வழிபாடு நடத்த வேண்டும். பலவித வாத்தியங்கள் முழங்க, பாட்டு, பஜனை, நாட்டியத்துடன் தத்தாத்ரேயரை வழிபட்டால் இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் குறையேதும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. இந்த விரதத்தை ஒருவர் கடைப்பிடித்து வந்தால், அவரது முன் ஏழு தலைமுறையினரையும், பின் ஏழு தலைமுறையினரையும் முக்தி அடையச் செய்யும்.

வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமி விரதம்
எதிர்ப்பில் இருந்து மீண்டும் வருவதற்குத்தான் காலபைரவ வழிபாடு கைகொடுக்கிறது. எதிரியை துவம்சம் செய்வதற்காகத்தான் காலபைரவர், தன் சந்நிதிக்கு வருபவர்கள் யார் என்று காத்திருக்கிறார்.
இன்று தேய்பிறை அஷ்டமி விரதமிருந்து வழிபாடு செய்ய காலபைரவருக்கு உரிய அருமையான நாள். சிவாலயத்துக்குச் செல்லுங்கள். பல சிவாலயங்களில், காலபைரவருக்கு ராகுகாலத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் கலந்து கொள்ளுங்கள். பைரவர் முன்னே ஒருமித்த மனத்துடன் நில்லுங்கள்.
உங்களால் முடிந்த அளவுக்கு அரளிப்பூச்சரங்களை வழங்குங்கள். இன்னும் முடியும் என்றால், தயிர்சாதம் நைவேத்தியம் வழங்குங்கள். குடும்பத்துடன் சென்று, குடும்பம் நன்றாக சீரும் சிறப்புமாக இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்.
எதிர்ப்புகள் அகலும். தடைகள் விலகும். எதிரிகள் தவிடுபொடியாவார்கள். உங்கள் வீட்டில் தடைப்பட்ட காரியங்கள் யாவும் இனிதே நடைபெறும். உத்தியோகம் சிறக்கும். தொழில் விருத்தியாகும். லாபம் பெருகும். சந்தோஷம் இரட்டிப்பாகும். உற்சாகம் கரைபுரண்டோடும். ஒற்றுமை மேலோங்கும்.
இவையெல்லாம் இன்னும் இன்னும் வளரச் செய்யும். வாழையடிவாழையென தழைக்க வைக்கும். பைரவ வழிபாடு, மகத்துவமானது. மறந்துவிடாதீர்கள். தேய்பிறை அஷ்டமி வழிபாடு, உங்களை வளர்ச்சிப்படுத்தும். வளமாக்கும் என்பது உறுதி!

கங்கை நீருக்கு விரதமிருந்து பூஜை செய்வதால் பூர்வ ஜென்ம பாவம் தீரும். இந்த பிறவியில் செய்யும் பாவங்கள் நீங்கும்.
நதி தெய்வமான கங்கா தேவிக்கான பூஜை. மலைமகளாக பார்வதி தேவியைக் குறிக்கும் பூஜை. ஒரு வெள்ளி அல்லது பித்தளை செம்பில் சுத்தமான நீர் ஊற்றி பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு போட்டு அதன்மேல் தேங்காய்க்கு மஞ்சள் பூசி கலசமாக ஆவாஹனம் செய்யலாம். இல்லாவிட்டால் வித்தியாசமாக செம்பின் மீது ஒரு தட்டில் தீபம் ஏற்றி கங்கா மாதாவை ஆவாஹனம் செய்யலாம்.
அருகில் கெளரி தேவி முகம் வைத்து அல்லது மஞ்சளால் முகம் செய்து வைக்கலாம். கங்கா அஷ்டோத்திர சத நாமாவளி தெரிந்தால் சொல்லலாம். இல்லாவிட்டால் கங்கேசயமுனேச மந்திரத்தை 36 முறை சொல்லி பூக்களால் பூஜை செய்யலாம். கெளரி அஷ்டோத்திர சத நாமாவளி சொல்லி, மஞ்சள் தூள், குங்குமம், சந்தனத்தூள், காசுகளால் அர்ச்சனை செய்து, எலுமிச்சம்பழ ஜூஸ், பாசிப்பருப்பு பாயாசம் நிவேதிக்கலாம். பூஜை நிறையவடைந்தபின் ஆரத்தி பாடல் பாடலாம்.
பூஜா பலன் :
கங்கை நீருக்கு விரதமிருந்து பூஜை செய்வதால் பூர்வ ஜென்ம பாவம் தீரும். இந்த பிறவியில் செய்யும் பாவங்கள் நீங்கும், அடுத்த பிறவி நல்ல பிறவியாக கங்கா மாதா ஆசிதருவார். அந்த தீர்த்தத்தை குடிக்கலாம், தலையில் தெளித்துக்கொள்ளலாம். செடிகளுக்கு ஊற்றலாம். கெளரி அருளால் கல்யாண, சந்தான தீர்க்க சுமங்கலி பாக்கியங்கள் கிடைக்கும், வியாபாரம் பெருகும். இந்த பூஜையை அமாவாசை, நிறைந்த பெளர்ணமி நாட்களிலும் செய்யலாம்.

விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர். தினந்தோறும் கடைபிடிக்கப்படும் விரதங்களால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.
விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர். மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான். ஒவ்வொரு காலகட்ட விரதத்துக்கும் உரிய பலன்கள் கிடைக்கும்.
திங்கள் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவான் பரிபூர அன்பைப் பெறலாம்.
செவ்வாய் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு நீங்கி வாழலாம்.
புதன் கிழமை விரதம் இருந்தால் நோய்கள. தீரும்.
வியாழன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கியம் பெறலாம்.
வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் நீண்ட ஆயுளைப் பெறலாம்.
சனிக்கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.
ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறலாம், நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் கிட்டும். எனவே உங்கள் நிலைக்கு ஏற்ப விரதம் இருங்கள்.

சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் வழிபாடும் செய்வது பல கோடி புண்ணியத்தை தரவல்லது. 20 வகையான பிரதோஷ விரதங்கள் இருக்கின்றன.
சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமையில் சிவ வழிபாடு செய்வது மிகவும் விசேஷம். அதுவும் அன்றைய தினம் பிரதோஷம் வந்து விட்டால், அதன் சிறப்பு அற்புதமானதாகும். சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் வழிபாடும் செய்வது பல கோடி புண்ணியத்தை தரவல்லது. குறிப்பாக ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இல்லாதவர்கள், சோம வார பிரதோஷம் அன்று சிவன் கோவில்களில், வில்வ இலையை அர்ச்சனைக்குக் கொடுத்து வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் உங்கள் ஜாதகத்தில் உள்ள மதி (சந்திரன்) மட்டுமல்ல உங்கள் மதியும் (புத்தியும்) நன்றாக அமையும்.
பிரதோஷங்களில் 20 வகை இருக்கின்றன. அவை: தினசரி பிரதோஷம், பட்சப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், நட்சத்திரப் பிரதோஷம், பூரண பிரதோஷம், திவ்யப் பிரதோஷம், தீபப் பிரதோஷம், அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம், மகா பிரதோஷம், உத்தம மகா பிரதோஷம், ஏகாட்சர பிரதோஷம், அர்த்தநாரி பிரதோஷம், திரிகரண பிரதோஷம், பிரம்மப் பிரதோஷம், அட்சரப் பிரதோஷம், கந்தப் பிரதோஷம், சட்ஜ பிரபா பிரதோஷம், அஷ்ட திக் பிரதோஷம், நவக்கிரகப் பிரதோஷம், துத்தப் பிரதோஷம்.
இந்தப் பிரதோஷங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
மகா பிரதோஷம்
ஈசன் ஆலகால விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்த பிரதோஷம் ‘மகா பிரதோஷம்’ எனப்படுகிறது. அன்றையதினம் எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது சிறப்பு. மாசி மாத மகா சிவராத்திரிக்கு முன்பு வரும் பிரதோஷமும், ‘மகா பிரதோஷம்’ எனப்படும்.
அர்த்தநாரி பிரதோஷம்
வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால், அதற்கு ‘அர்த்தநாரி பிரதோஷம்’ என்று பெயர். அந்த நாட்களில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைபட்ட திருமணம் இனிதே நடந்தேறும். மேலும் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர்வார்கள். இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தீபப் பிரதோஷம்
பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங் களைத் தீபங்களால் அலங்கரித்து வழிபடுவதற்கு ‘தீபப் பிரதோஷம்’ என்று பெயர். இந்த பிரதோஷ வழிபாட்டை மேற்கொண்டால், இறையருளால் சொந்த வீடு அமையும்.
அபயப் பிரதோஷம்
வானத்தில் ‘வ’ வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டம், ‘சப்தரிஷி மண் டலம்’ ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதி யில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசிப்பதற்கு ‘அபயப் பிரதோஷம்’ அல்லது ‘சப்தரிஷி பிரதோஷம்’ என்று பெயர்.
திவ்யப் பிரதோஷம்
பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது ‘திவ்யப் பிரதோஷம்’ ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ் வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால், பூர்வ ஜென்ம வினை முழுவதும் நீங்கும்.
தினசரி பிரதோஷம்
தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய, மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம். நித்தியப் பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார் களோ, அவர்களுக்கு முக்தி நிச்சயம் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.
ஏகாட்சர பிரதோஷம்
வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை, `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரை வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்ன தானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.
மாதப் பிரதோஷம்
பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ண பட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் திரயோதசி திதியே ‘மாதப் பிரதோஷம்’ ஆகும். இந்தத் திதியின் போது மாலை நேரத்தில் பாணலிங்க வழிபாடு (பல்வேறு லிங்க வகைகளில் பாண லிங்கம் ஒரு வகை) செய்வது உத்தம பலனைத் தரும்.
திரிகரண பிரதோஷம்
வருடத்துக்கு மூன்று முறை மகா பிரதோஷம் வந்தால், அது ‘திரிகரண பிரதோஷம்’ எனப்படும். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமி களுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
பட்சப் பிரதோஷம்
அமாவாசைக்குப் பிறகான, சுக்ல பட்சம் என்ற வளர்பிறை காலத்தில் 13-வது திதியாக வருவது திரயோதசி திதி. இந்தத் திதியே ‘பட்சப் பிரதோஷம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தத் திதியின் மாலை நேரத்தில் பட்சி லிங்க வழிபாடு (பறவையோடு சம்பந்தப்பட்ட லிங்கம்) செய்வது நல்லது. அதாவது மயிலாப்பூர், மயிலாடுதுறை ஆகிய திருத்தலங்களில் உள்ள சிவலிங்கத்தை வழிபட வேண்டும்.

உத்தம மகா பிரதோஷம்
சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங் களின் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் ‘உத்தம மகா பிரதோஷம்’ என்று சொல்லப்படுகிறது. இது மிகவும் சிறப்பும், கீர்த்தியும் பெற்ற தினமாகும்.
துத்தப் பிரதோஷம்
அரிதிலும் அரிது பிரதோஷ வழிபாடு இது வாகும். ஒரு வருடத்தில் பத்து மகாபிரதோஷம் வருவதைத் தான் ‘துத்தப் பிரதோஷம்’ என் கிறார்கள். அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும் என்கிறார்கள்.
அட்சரப் பிரதோஷம்
வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது ‘அட்சரப் பிரதோஷம்’ ஆகும். தாருகா வனத்து ரிஷிகள்`நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.
நட்சத்திரப் பிரதோஷம்
பிரதோஷ திதியாகிய திரயோதசி திதியில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை வழிபடுவது ‘நட்சத்திரப் பிரதோஷம்’ ஆகும். இந்த நாளில் மாலை வேளையான பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
அஷ்டதிக் பிரதோஷம்
ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷங்கள் வந்தால் அதனை ‘அஷ்டதிக் பிரதோஷம்’ என்கிறார்கள். இந்த எட்டு மகா பிரதோஷங்களையும் முறையாக கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து, நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.
நவக்கிரக பிரதோஷம்
ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது ‘நவக்கிரகப் பிரதோஷம்’ ஆகும். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷங்களில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக்கிரகங்களின் அருளும் கிடைக்கும்.
பூரண பிரதோஷம்
திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் ‘பூரண பிரதோஷம்’ ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது சுயம்பு லிங்கத்தைத் தரிசனம் செய்வதுஉத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.
கந்தப் பிரதோஷம்
சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத் திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் ‘கந்தப் பிரதோஷம்’. இது முருகப்பெருமான் சூரசம்ஹாரத் துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு என்று சொல்லப்படுகிறது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிடைக்கும்.
சட்ஜ பிரபா பிரதோஷம்
ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தாராம். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.
பிரம்ம பிரதோஷம்
ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அதற்கு ‘பிரம்மப் பிரதோஷம்’ என்று பெயர். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.