search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "narasimha Viratham"

    கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகம் இது. இதை முறையாக கடைப்பிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் அனைத்தும் கைகூடும்.
    அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களால் கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும். நரசிம்மரை முழுமையாக சரணடைந்து ‘ஓம் நமோ நாராயணாய’ எனகூறி வழிபட்டால் தாயுள்ளம் படைத்த அவர் தண்டனையில் இருந்து விடுதலை கிடைக்க செய்வார். தினமும் குளித்துவிட்டு நரசிம்மபிரபத்தி ஸ்லோகத்தை 3, 12, 28 என பாராயணம் செய்ய வேண்டும்.

    ‘நரசிம்மரே தாய்; நரசிம்மரே தந்தை,
    சகோதரனும் நரசிம்மரே, தோழனும் நரசிம்மரே,
    அறிவும் நரசிம்மரே, செல்வமும் நரசிம்மரே,
    எஜமானனும் நரசிம்மரே. இவ்வுலகத்தில் நரசிம்மரே,
    அவ்வுலகத்திலும் நரசிம்மரே, எங்கெங்கு செல்கிறாயோ, அங்கெல்லாம் நரசிம்மரே’.

    நரசிம்மரை காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை. அதனால் நரசிம்மரே உம்மை சரணடைகிறேன்.

    இந்த சுலோகத்தை சொல்லி லட்சுமி நரசிம்மரின் முன்விளக்கேற்ற வேண்டும். காய்ச்சி ஆறவைத்த பசும்பால் அல்லது பானகத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்த பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வர வேண்டும். கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகம் இது. இதை முறையாக கடைப்பிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடும்.
    செவ்வாய் தோஷத்தால் திருமணம் கைகூடாமல் தாமதம் ஆகும் பெண்கள் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
    செவ்வாய் தோஷத்தால் திருமணம் கைகூடாமல் தாமதம் ஆகும் பெண்கள் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். செவ்வாய் தோஷத்தால் திருமணம் கைகூடாமல் தாமதம் ஆகும் பெண்கள் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

    செவ்வாய் தோஷ நிவர்த்திக்கு பல வழிபாடுகள் இருந்தாலும் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் வழிபாடு சிறப்பானது. லட்சுமி நரசிம்மர் படத்தை வீட்டில் வைத்து படத்துக்கு முன்னால் தீபம் ஏற்றி பூஜை பொருட்கள் உபயோகித்து ஸ்ரீநரசிம்மரை வழிபட வேண்டும், நிவேதனமாக பானகம் வைக்க வேண்டும். (நீர்+ ஏலம் + எலுமிச்சை +துளசி+ வெல்லம் = இதன் கலவையே பானகம் ஆகும்). பூஜையை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் (அல்லது) செவ்வாய் ஹோரையில் செய்யவும். பிரதோஷ காலத்தில் அவசியம் செய்ய வேண்டும்.

    சுவாதி நட்சத்திரம் வரும் நாளிலும் இந்த பூஜையை செய்யலாம். பூஜை முடிவில் பக்கத்தில் நரசிம்மர் ஆலயம் இருந்தால் அங்கு சென்று நரசிம்மரை வணங்கி விரதத்தை நிறைவு செய்யவும். நரசிம்மர் ஆலயத்தில் நெய் தீபம் 9 வாரம் போட்டுவருவது மிகவும் நல்லது. செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்து, சர்க்கரை பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளை படைக்கலாம். 
    சுவாதி நட்சத்திரத்தன்று மாலை வேளையில் நரசிம்மரை விரதம் இருந்து வழிபட்டால் வாயுவேகத்தில் வந்து பாதுகாத்து அவர் அருள் செய்வார்.
    நரசிம்ம மூர்த்தியைத் தியானம் செய்பவர்கள் தம் பகைவர்களை சுலபமாக வெல்லும் திறன் பெறுவர். அஷ்டத் திக்குகளிலும் புகழ் பெற்று விளங்குவர். நரசிம்மரை விரதம் இருந்து வழிபடுவதால் கொடிய நீண்ட காலத்துன்பம் நீங்கும்.

    மனோ வியாதி, கடுமையான பாவங்களினால் ஏற்படும் துன்பங்கள் விலகும். பசி, பிணி, மூப்பு, பொறாமை, பில்லி, சூனியம், ஏவல் உள்பட சகல தோஷங்களும், துரோகங்களும் இன்னல்களும் மறையும். நரசிம்மரை விரதம் இருந்து வழிபடுவதற்கு செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களும் மாலை வேளையும் உகந்ததாகும்.

    பால், இளநீர் அபிஷேகமும் பானகமும் நரசிம்மருக்கு மிகவும் விருப்பமானவை. விரதம் இருந்து நீராஞ்சனம் என்னும் நெய்தீபம் ஏற்றி 16 சுற்றுகள் பிரதட்சணமாக நரசிம்மரை வலம் வந்து மிகுந்த பக்தியுடனும் ஆழ்ந்த பக்தியுடனும் வழிபடுபவர்களின் பிரார்த்தனைகள் வெகுவிரைவில் நிறைவேறுகிறது.

    சுவாதி நட்சத்திரத்தன்று மாலை வேளையில் நரசிம்மரை விரதம் இருந்து வழிபட்டால் வாயுவேகத்தில் வந்து பாதுகாத்து அவர் அருள் செய்வார். தொடர்ந்து சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்மரை விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு கடன் தொல்லைகள் நீங்கி செல்வச் செழிப்புகள் ஏற்படும்.

    வியாபாரம் அபிவிருத்தியாகும்.மேலும் ஜாதகத்தில் ராகுவினால் ஏற்படும் தடைகள், பிரச்சினைகள் நீங்கி நன்மை உண்டாகும்.

    யார் ஒருவர் விரதமிருந்து “ஓம் நமோ நாராயணா” என்று உச்சரித்தப்படி பரிக்கல் லட்சுமி நரசிம்மரை நினைத்து ஈர உடையுடன் 48 தடவை பிரதட்சணம் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக பலன் கிடைக்கும்.
    பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயம் எத்தனையோ பழமை சிறப்புகள் கொண்டது. அந்த ஆலயத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை விதம், விதமான வழிபாடுகள் நடத்தப்பட்டன. அவற்றில் பல வழிபாடுகள் கால ஓட்டத்தில் மறைந்து விட்டன.

    அந்த வழிபாடுகளில் சில தற்போது மீண்டும் நடைமுறைக்கு வரத் தொடங்கியுள்ளன. அதில் விரதம் இருந்து ஈரத்துணியுடன் 48 தடவை பரிக்கல் ஆலய முதல் பிரகாரத்தை சுற்றி பிரதட்சணம் செய்யும் வழிபாடு புத்துயிர் பெற்றுள்ளது.

    யார் ஒருவர் விரதமிருந்து “ஓம் நமோ நாராயணா” என்று உச்சரித்தப்படி பரிக்கல் லட்சுமி நரசிம்மரை நினைத்து மனம் உருகி ஈர உடையுடன் 48 தடவை பிரதட்சணம் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக பலன் கிடைக்கும். அவர்கள் என்ன வேண்டுதல் வைக்கிறார்களோ அதை லட்சுமி நரசிம்மர் நிறைவேற்றி வைப்பார்.

    இந்த வழிபாட்டுக்கு உதவும் வகையில் பரிக்கல் ஆலயம் அருகில் இரவில் பக்தர்கள் தங்குவதற்கான வசதிகள் உள்ளன. இரவில் அங்கு தங்கி விட்டு அதிகாலை எழுந்து குளித்து விட்டு ஈரத்துணியுடன் 48 தடவை ஆலய பிரதட்சணம் செய்யலாம்.

    சுவாதி உள்பட நரசிம்மருக்கு உகந்த நாட்களில் இந்த விரத வழிபாட்டை செய்வது மிகவும் நல்லது.

    நல்ல வேலை கிடைக்கவில்லை என வருந்துவோர் விரதம் இருந்து திருக்கண்டியூரில் ஹரசாப விமோசனப் பெருமாளை அர்ச்சனை செய்து வழிபட்டால், விரைவில் நல்ல உத்தியோகம் கிடைக்கும்.
    திருவையாறு அருகில் உள்ள திருக்கண்டியூரில் ஹரசாப விமோசனப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது.

    108 திவ்விய தேசங்களில் ஒன்று, பஞ்ச கமல தலங்களில் ஒன்று என புராணப் பெருமைகள் பல கொண்ட அற்புதமான ஆலயம் இது. ஸ்ரீபிரம்மாவின் சிரசைக் கொய்ததால் விளைந்த சாபத்தில் இருந்து விடுபடுவதற்காக சிவபெருமான் இங்கு தவமிருந்தார். அவரின் சாபத்தை திருமால் போக்கி அருளினார். எனவே இந்தத் தலத்து பெருமாளுக்கு, ஸ்ரீஹர சாப விமோசனப் பெருமாள் எனும் பெயர் உண்டானது.

    ஒவ்வொரு சனிக்கிழமையும் ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் நடைபெறும். தொடர்ந்து 11 வியாழன் அல்லது சனிக்கிழமைகளில் இங்கு வந்து, ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தரிசித்தால், சகல தோஷங்களும் விலகும். அவரின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம் என்பது ஐதீகம்.

    ஆனி மாத சித்திரை நட்சத்திர நாளில், ஸ்ரீசுதர்சன வழிபாடு இங்கு வெகு விமரிசையாகக் கெண்டாடப்படுகிறது. இந்த வைபவத்தில் கலந்து கொண்டு ஸ்ரீசக்கரத்தாழ்வாரை மனமுருகப் பிரார்த்திக்க வீட்டில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஐதீகம்.

    நல்ல வேலை கிடைக்கவில்லையே என வருந்துவோர் திருமணம் கைகூடவில்லையே என்று ஏங்குவோர், விரதம் இருந்து வியாழன் அல்லது சனிக்கிழமைகளில் (தொடர்ந்து 16 வாரங்கள்) இந்தத் தலத்துக்கு வந்து முல்லைப் பூமாலை சார்த்தி, அர்ச்சனை செய்து வழிபட்டால், விரைவில் நல்ல உத்தியோகம் கிடைக்கும். நல்ல வரன் அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    புதன் மற்றும் சனிக்கிழமைகளில், விரதம் இருந்து ஸ்ரீஹரசாப விமோசன பெருமாளுக்கு தாமரை தலர்கள் சார்த்தி, ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை சார்த்தி வழிபட்டால்.. குடும்பத்தில் நிலவுகிற பிரச்சினைகள் உடனே நீங்கிவிடும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். அமாவாசை நாளில் இங்கு வந்து நெய் தீபமேற்றி வணங்கிளால், தோஷங்கள் நீங்கி, சந்தோஷம் பொங்க வாழ்வார்கள் என்பது உறுதி.
    மன நிலை பாதிப்பு, கடன் தொல்லை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், எதிரிகளால் தொந்தரவு, கிரக தோஷம் உள்ளவர்கள் சிங்கிரிக்குடி தலத்தில் விரதமிருந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
    மன நிலை பாதிப்பு, கடன் தொல்லை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், எதிரிகளால் தொந்தரவு, கிரக தோஷம் உள்ளவர்கள் சிங்கிரிக்குடி தலத்தில் விரதமிருந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

    வேண்டுதல் நிறைவேற செவ்வாய்க் கிழமைகளில் விரதமிருந்து நெய்விளக்கு ஏற்றி, துளசி அர்ச்சனை செய்கிறார்கள். பிரகலாதனின் விருப்பப்படி நரசிம்மர், மூலஸ்தானத்தில் 16 திருக்கரங்களுடன், இரணியனை வதம் செய்த கோலத்தில் மிகப்பிரமாண்டமாக அருள் பாலிக்கிறார்.

    இரணியனை மேற்கு பார்த்து நின்று நரசிம்மர் வதம் செய்ததைக் குறிக்கும் வகையில், மேற்கு பார்த்த நிலையில் உள்ளார். ஒரே மூலஸ்தானத்தில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பதை காண்பது அரிது.

    இவ்வகை அபூர்வ நரசிம்மர் தலங்கள் ராஜஸ்தானிலும், தமிழகத்தில் இங்கும் நெல்லை மாவட்டம் கீழபாவூரிலும் மட்டுமே உள்ளதாகக் கூறுகிறார்கள். மற்ற நரசிம்மர் தலங்களை விட சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் தலம் இது. உற்சவர் பிரகலாத வரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் பாவன விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.
    பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்ம பெருமாளை 48 நாட்கள் விரதமிருந்து உள்ளன்போடு வழிபட்டால் கடன்தொல்லைகள் தீரும். எதிரிகள் தொல்லை தீரும் என்பது ஐதீகம்.
    பூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவில் கருவறையில் அழகு சொரூபமாக நரசிம்ம மூர்த்தியும், அமிர்தவல்லி தாயாரும் அருள்பாலிக்கின்றனர். இத்திருக்கோவிலில் இருக்கும் தாயார் அமிர்தத்திற்கு இணையான பலனை கொடுக்க வல்லவள். இதனால் அமுதவல்லி என திருநாமம் கொண்டு அழைக்கப்படுகிறாள்.

    கருவறையில் லட்சுமி நரசிம்மர் நான்கு கரங்களுடன் காணப்படுகிறார். இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன. ஒரு கையால் லட்சுமியை (அமிர்த வல்லித்தாயாரை) அனைத்துக் கொண்டிருக்கிறார். வலது கை அருள் காட்டுகிறது.

    இடது காலை மடக்கி வைத்து அதில் லட்சுமியை அமர்த்தியுள்ளார். நரசிம்மருடைய மடியில் பெருமிதத்துடன் தாயார் அமர்ந்திருக்கிறார். வலக்கரம் அன்புக்கரமாக அண்ணலைத் தழுவிக் கொண்டிருக்கிறது. ஒரு கண் அண்ணலை நோக்குகின்றது. மற்றொரு கண் பக்தர்களை நோக்கியுள்ளது. இது போன்ற அமைப்பு இந்த பூவுலகில் வேறு எங்கும் இல்லை.

    முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நரசிம்மர் இத்தலத்தில் மகாலட்சுமியை தன் இடது மடியில் அமர்த்தி காட்சி அளித்தார். அப்போது லட்சுமி முனிவர்களை பார்க்காமல் நரசிம்மரையே பார்த்தார்.

    உடனே நரசிம்மர், “நீ முனிவர்களை பார்த்து அருள்பாலிக்காமல் என்னை மட்டும் ஏன் பார்த்து கொண்டிருக்கிறாய்” என்றார். அதற்கு லட்சுமி, “கோபமாக உள்ள நீங்கள் உங்களது வெப்பத்தை, தரிசிக்க வரும் பக்தர்களிடம் காட்டக் கூடாது. எனவேதான் நான் உங்களையே பார்த்து கொண்டிருக்கிறேன்” என்றார்.

    அதன் பின் நரசிம்மரின் கட்டளைக்கிணங்க லட்சுமி ஒரு கண்ணால் நரசிம்மரையும், மற்றொரு கண்ணால் பக்தர்களையும் பார்த்து அருள்பாலித்து வருகிறாள். பிரகாரத்தினுள் இராமானுஜர், நாகசன்னதியும் இருக்கிறது.

    இந்த லட்சுமி நரசிம்ம பெருமாளை 48 நாட்கள் விரதமிருந்து உள்ளன்போடு வழிபட்டால் கடன்தொல்லைகள் தீரும். பதவி உயர்வு வந்து சேரும் மற்றும் எதிரிகள் எல்லாம் இல்லாமல் நண்பர்களாகி விடுகிறார்கள் என்பது ஐதீகம்.
    ×