என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "singirikudi"

    • வருடந்தோறும் பிரம்மோற்சவ விழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
    • பல்வேறு வாகனத்தில் சாமி வீதி உலா மற்றும் கருடசேவை விழா நடைபெற்றது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது . இக்கோவிலில் வருடந்தோறும் பிரம்மோற்சவ விழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம் .

    இந்த நிலையில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது . பின்னர் பல்லக்கில் சாமி , மாட வீதியில் வீதி உலா நடைபெற்றது . இதனைத் தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு வாகனத்தில் சாமி வீதி உலா மற்றும் கருடசேவை விழா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

    இதனையொட்டி அதிகாலை லட்சுமி நரசிம்மர் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து லட்சுமி நரசிம்ம பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில், ஊர்வலமாக கம்பீரமாக பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.

    இதனை தொடர்ந்து அய்யப்பன் எம்.எல்.ஏ தலைமையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் அங்குத் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய மாடவீதியில் தேரோட்டம் நடைபெற்று பின்னர் நிலையை அடைந்தது. இன்று நரசிம்மர் அவதாரம் தினமான நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    நாளை காலை மட்டையடி உற்சவம், இரவில் இந்திர விமானத்தில் சாமி வீதி உலாவும், புஷ்பயாகம், இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது . இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

    மன நிலை பாதிப்பு, கடன் தொல்லை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், எதிரிகளால் தொந்தரவு, கிரக தோஷம் உள்ளவர்கள் சிங்கிரிக்குடி தலத்தில் விரதமிருந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
    மன நிலை பாதிப்பு, கடன் தொல்லை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், எதிரிகளால் தொந்தரவு, கிரக தோஷம் உள்ளவர்கள் சிங்கிரிக்குடி தலத்தில் விரதமிருந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

    வேண்டுதல் நிறைவேற செவ்வாய்க் கிழமைகளில் விரதமிருந்து நெய்விளக்கு ஏற்றி, துளசி அர்ச்சனை செய்கிறார்கள். பிரகலாதனின் விருப்பப்படி நரசிம்மர், மூலஸ்தானத்தில் 16 திருக்கரங்களுடன், இரணியனை வதம் செய்த கோலத்தில் மிகப்பிரமாண்டமாக அருள் பாலிக்கிறார்.

    இரணியனை மேற்கு பார்த்து நின்று நரசிம்மர் வதம் செய்ததைக் குறிக்கும் வகையில், மேற்கு பார்த்த நிலையில் உள்ளார். ஒரே மூலஸ்தானத்தில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பதை காண்பது அரிது.

    இவ்வகை அபூர்வ நரசிம்மர் தலங்கள் ராஜஸ்தானிலும், தமிழகத்தில் இங்கும் நெல்லை மாவட்டம் கீழபாவூரிலும் மட்டுமே உள்ளதாகக் கூறுகிறார்கள். மற்ற நரசிம்மர் தலங்களை விட சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் தலம் இது. உற்சவர் பிரகலாத வரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் பாவன விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.
    பரிக்கல், பூவரசங்குப்பம், சிங்கிரிக்குடி ஆகிய மூன்று தலங்களில் உள்ள நரசிம்மர்கள் மாறுபட்ட அம்சங்களில் காணப்படுகிறார்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பரிக்கல், பூவரசங்குப்பம், சிங்கிரிக்குடி ஆகிய மூன்று தலங்களில் உள்ள நரசிம்மர்கள் மாறுபட்ட அம்சங்களில் காணப்படுகிறார்கள். சிங்கிரிக்குடி ஆலயத்தில் இருக்கும் நரசிம்மர் மிகமிக ஆக்ரோஷமான நிலையில் இருப்பவர். இரணியனை வதம் செய்தபோது எந்த அளவு அவர் கோபமாக இருந்தாரோ அந்த அளவுக்கு இந்த தலத்திலும் ஆக்ரோஷமாக இருப்பதாக கருதப்படுகிறது.

    இதனால் தான் சிங்கிரிக்குடி தலத்தில் கருவறையில் நரசிம்மர் மட்டும் இருக்கிறார். ஒரே நேர் கோட்டில் மூன்று நரசிம்மர் ஆலயங்களில் இந்த சிங்கிரிக்குடி தலத்துக்குதான் முதலில் சென்று வழிபட வேண்டும் என்பதை ஐதீகமாக வைத்துள்ளனர்.

    அதன்பிறகு 2-வ தாக பூவரசங்குப்பம் தலத்துக்கு சென்று லட்சுமி நரசிம்மரை வழி பட வேண்டும். இந்த தலத்தில் கருவறை யில் நரசிம்மரும், லட்சுமியும் ஒருவரை ஒருவர் ஆலிங் கானம் செய்தப்படி இருப்பது மிக சிறப்பாக கருதப்படுகிறது. இந்த தலத்தில் வழிபட்டால் இல்லற வாழ்வுக்கு தேவையான அத்தனை சுகங்களையும் லட்சுமி நரசிம்மர் தருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

    அடுத்து 3-வது தலமான பரிக்கல் ஆலயத்திலும் கருவறையில் நரசிம்மரும், லட்சுமியும் ஒருங்கே அமர்ந்துள்ளனர். நரசிம்மரின் தொடையில் லட்சுமி அமர்ந்து இருந்து அருள்பாலிகிறார். அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சமம் என்ற அளவில் முழுமையான மகிழ்ச்சியுடன் உள்ளனர். எனவே அவர்களை வழிபட்டால் பக்தர்களுக்கு இல்லற வாழ்வுக்கு தேவையான முழுமையான மகிழ்ச்சி கிடைப்பது ஐதீகமாகும்.
    ×