search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நரசிம்மர் மாறுபட்ட அம்சங்களில் தோன்றும் கோவில்கள்
    X

    நரசிம்மர் மாறுபட்ட அம்சங்களில் தோன்றும் கோவில்கள்

    பரிக்கல், பூவரசங்குப்பம், சிங்கிரிக்குடி ஆகிய மூன்று தலங்களில் உள்ள நரசிம்மர்கள் மாறுபட்ட அம்சங்களில் காணப்படுகிறார்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பரிக்கல், பூவரசங்குப்பம், சிங்கிரிக்குடி ஆகிய மூன்று தலங்களில் உள்ள நரசிம்மர்கள் மாறுபட்ட அம்சங்களில் காணப்படுகிறார்கள். சிங்கிரிக்குடி ஆலயத்தில் இருக்கும் நரசிம்மர் மிகமிக ஆக்ரோஷமான நிலையில் இருப்பவர். இரணியனை வதம் செய்தபோது எந்த அளவு அவர் கோபமாக இருந்தாரோ அந்த அளவுக்கு இந்த தலத்திலும் ஆக்ரோஷமாக இருப்பதாக கருதப்படுகிறது.

    இதனால் தான் சிங்கிரிக்குடி தலத்தில் கருவறையில் நரசிம்மர் மட்டும் இருக்கிறார். ஒரே நேர் கோட்டில் மூன்று நரசிம்மர் ஆலயங்களில் இந்த சிங்கிரிக்குடி தலத்துக்குதான் முதலில் சென்று வழிபட வேண்டும் என்பதை ஐதீகமாக வைத்துள்ளனர்.

    அதன்பிறகு 2-வ தாக பூவரசங்குப்பம் தலத்துக்கு சென்று லட்சுமி நரசிம்மரை வழி பட வேண்டும். இந்த தலத்தில் கருவறை யில் நரசிம்மரும், லட்சுமியும் ஒருவரை ஒருவர் ஆலிங் கானம் செய்தப்படி இருப்பது மிக சிறப்பாக கருதப்படுகிறது. இந்த தலத்தில் வழிபட்டால் இல்லற வாழ்வுக்கு தேவையான அத்தனை சுகங்களையும் லட்சுமி நரசிம்மர் தருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

    அடுத்து 3-வது தலமான பரிக்கல் ஆலயத்திலும் கருவறையில் நரசிம்மரும், லட்சுமியும் ஒருங்கே அமர்ந்துள்ளனர். நரசிம்மரின் தொடையில் லட்சுமி அமர்ந்து இருந்து அருள்பாலிகிறார். அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சமம் என்ற அளவில் முழுமையான மகிழ்ச்சியுடன் உள்ளனர். எனவே அவர்களை வழிபட்டால் பக்தர்களுக்கு இல்லற வாழ்வுக்கு தேவையான முழுமையான மகிழ்ச்சி கிடைப்பது ஐதீகமாகும்.
    Next Story
    ×