என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    சிவராத்திரி தினத்தில் வழிபடுபவர்களுக்கு இம்மையில் செல்வமும், மறுமையில் சொர்க்கமும், இறுதியில் முக்தியும் அளிக்க வேண்டும் என்று பார்வதி தேவி பரமனிடம் வேண்டினாள். அதுவே மகா சிவராத்திரி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
    சிவராத்திரி வழிபாட்டை உருவாக்கிய பெருமை பார்வதி தேவியையே சேரும். ஒரு முறை பார்வதிதேவி, விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களை மூடினார். உலகுக்கு ஒளி வழங்கும் சூரியனும், சந்திரனுமே, ஈசனின் இரண்டு கண்களாக உள்ளனர். எனவே ஈசனின் கண்கள் மூடப்பட்டதும், உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது. உலக உயிர்கள் தவித்தன.

    இதனால் பயந்து போன பார்வதிதேவி, தன்னுடைய பிழையை பொறுத்தருளும்படி சிவனை வேண்டினாள். அதோடு உலகம் மீண்டும் இயங்கவும், உயிர்கள் துன்பமின்றி வாழவும் அன்றைய இரவில் நான்கு ஜாமங்களிலும் கண் விழித்து சிவனை அர்ச்சனை செய்து வழிபட்டாள். வழிபாட்டின் முடிவில் பார்வதிக்கு காட்சியளித்த ஈசன், தன் உடலில் பாதியை அவளுக்குத் தந்து உலகமும், உயிர்களும் இன்புற்று வாழ அருள்பாலித்தார்.

    தனக்கும் உலக உயிர்களுக்கும் அருள்பாலித்த ஈஸ்வரனை வணங்கிய பார்வதி, “உலகமும் உயிர்களும் மீண்டும் இயங்க காரணமான இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் மறவாமல் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அது உங்கள் திருநாமத்தினாலேயே விளங்க வேண்டும். அந்த தினத்தில் வழிபடுபவர்களுக்கு இம்மையில் செல்வமும், மறுமையில் சொர்க்கமும், இறுதியில் முக்தியும் அளிக்க வேண்டும்” என்று பரமனிடம் வேண்டினாள். அதுவே மகா சிவராத்திரி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
    அறியாமல் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவினால் அடையும் துன்பங்களும், அறிந்தே இப்பிறவியில் செய்த வினையால் ஏற்படும் துன்பங்களும், தாமோதரப் பெருமாளை விரதம் இருந்து வழிபடுவதால் அகன்றுவிடும்.
    வில்லிவாக்கத்தில் மகாவிஷ்ணு, அமிர்தவல்லித் தாயார் உடனுறை சவுமிய தாமோதரப் பெருமாள் கோவில் உள்ளது. புராண காலத்தில் வில்வ வனமாக விளங்கிய இப்பகுதி தற்போது வில்வலன், வாதாபி இருவர் பெயரும் சேர்ந்து ‘வில்லிவாக்கம்’ என அழைக்கப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெருஞ்சிறப்புக் கொண்ட இந்த சேத்திரத்தில் மகாவிஷ்ணு, அமிர்தவல்லித் தாயார் உடனுறை சவுமிய தாமோதரப் பெருமாள் ஆக எழுந்தருளியுள்ளார்.

    திருமண பாக்கியம், குழந்தைப்பேறு கிடைக்க விரும்பும் பெண்கள், விரதம் இருந்து இங்குள்ள அமிர்தவல்லித் தாயாருக்கு நடைபெறும் ஊஞ்சல் சேவை தரிசனம் காண்பது சிறப்பு. தொடர்ந்து ஐந்து வாரம் இந்த ஊஞ்சல் தரிசனம் செய்வது சிறப்பு. வெள்ளிக்கிழமை வரும் உத்திர நட்சத்திரத்தில் மகாலட்சுமி சகஸ்ர நாமம், அஷ்டோத்ரம், அம்ருதவல்லி ஸ்தோத்திரம் சொல்லி தேன், பேரீச்சம்பழம் நிவேதனம் செய்வது நன்று.

    அறியாமல் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவினால் அடையும் துன்பங்களும், அறிந்தே இப்பிறவியில் செய்த வினையால் ஏற்படும் துன்பங்களும், தாமோதரப் பெருமாளை விரதம் இருந்து வழிபடுவதால் அகன்றுவிடும். புதன் கிழமை அன்று அர்ச்சனை செய்து, பச்சைப்பயறு, சுண்டல் அல்லது பால் பாயசம் (அக்கார வடிசல்) குழந்தைகளுக்கு தானம் தருவது சிறப்பு.

    மிதுனம், கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து 5 புதன்கிழமை விரதம் இருந்து, தாமோதர காயத்ரி மந்திரம் ஜெபம் செய்து (காலை 6-7, 9-10, மாலை 5-6 மணிக்குள்) பெருமாளுக்கு அர்ச்சனை செய்து, ஆலயத்தை ஐந்து முறை வலம் வர வாழ்வில் மிகுந்த முன்னேற்றம் அடைவார்கள். உத்திர நட்சத்திரம் வரும் புதன்கிழமையிலும், அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்றும் வழிபடுவது உத்தமம்.

    எல்லா யாகங்களையும் எல்லா தர்மங்களையும் விட, மிக உயர்ந்த விரதம் ‘மகா சிவராத்திரி’ விரதம் என்று கருதப்படுகிறது.
    மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்களை எமதர்மனும் நெருங்க அஞ்சுவான். எல்லா யாகங்களையும் எல்லா தர்மங்களையும் விட, மிக உயர்ந்த விரதம் ‘மகா சிவராத்திரி’ விரதம் என்று கருதப்படுகிறது.

    புராணங்களில் சொல்லப்பட்ட ஏனைய பல விரதங்களை நெடுங்காலம் கடைப்பிடிப்பதும், நூறு அசுவமேத யாகங்களை செய்வதும், பல முறை கங்கா ஸ்நானம் செய்வதும் கூட, ஒரு மகா சிவராத்திரி நாளில் ஈசனை நினைத்து விரதம் இருப்பதற்கு ஈடாகாது.

    இப்படி புராணங்கள் போற்றும் மகா சிவராத்திரி தினத்தில் உடலையும், உள்ளத்தையும் பரிசுத்தமாக்கி, சிவபெருமானை மனதில் நினைத்து, இரவு முழுவதும் கண் விழித்து நான்கு கால வேளையிலும் வழிபாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு செய்வதால் ஒருவரின் வாழ்வில் துன்பம், வறுமை நீங்கி வாழ்வு செழிக்கும். சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே செய்த பாவங்களும் நம்மை விட்டு நீங்கிப் போகும்.

    சைவ, வைணவ ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெறும் சிவாலய ஓட்டம் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் விரதம் மேற்கொள்வார்கள்.
    குமரி மாவட்டத்தில் கல்குளத்தை சுற்றி 12 சிவாலயங்கள் உள்ளன. இந்த 12 சிவாலயங்களுக்கும் சிவராத்திரி தினத்தில் பக்தர்கள் காவி உடை அணிந்து “கோபாலா... கோவிந்தா...” என அழைத்தவாறு நடந்தும், ஓடியும் சென்று வழிபடுவார்கள். இந்த சிவாலய ஓட்டம் புதுக்கடை அருகே உள்ள முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்குகிறது. அங்கிருந்து புறப்படும் பக்தர்கள் 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்கு செல்வர்.

    பின்னர் அருமனை, களியல் வழியாக 14 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திற்பரப்பு மகாதேவர் கோவில், அதைத்தொடர்ந்து குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு வழியாக 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருநந்திக்கரை சிவன் கோவிலை அடைவார்கள். பின்னர் பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்றிப்பாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட மகாதேவர் கோவில் சென்று வழிபடுவார்கள். இங்கு மட்டும் தேவி வடிவில் சிவன் உள்ளார்.

    அதன்பிறகு மேலாங்கோடு சிவன் கோவில், தென்கரை வில்லுக்குறி வழியாக திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், கோழிப்போர் விளை பள்ளியாடி திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில் சென்று விட்டு, இறுதியாக நட்டாலம் சங்கர நாராயணர் கோவிலில் சிவாலய ஓட்டத்தை பக்தர்கள் நிறைவு செய்கிறார்கள். சிவாலய ஓட்டத்தின் போது பக்தர்கள் சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை சுற்றி வருவார்கள்.

    இந்த ஆண்டுக்கான சிவாலய ஓட்டம் மார்ச் 3-ந்தேதி தொடங்கி 4-ந்தேதி முடிவடைகிறது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் விரதம் மேற்கொள்வார்கள். விரதத்தின் போது, முதல் 5 நாட்கள் அசைவ உணவுகளை தவிர்த்து, காலை, மாலை நேரங்களில் குளித்து, சாமி கும்பிடுவார்கள். சிவாலய ஓட்டம் தொடங்கும் 3-ந் தேதி தீயில் சமைத்த உணவுகளை சாப்பிட மாட்டார்கள். 
    மெளனவிரதம் இருப்பது வாய் எனும் உறுப்பின் மற்றொரு விரதமாகும். மெளன விரதத்தால் நமது உடல் மற்றும் மனது தூய்மை ஆகிறது.
    மெளனவிரதம் இருப்பது வாய் எனும் உறுப்பின் மற்றொரு விரதமாகும். மெளன விரதத்தால் நமது உடல் மற்றும் மனது தூய்மை ஆகிறது. மெளனவிரதம் அனைவரும் இருக்க தகுந்த ஒரு விரதம். இதில் யாருக்கும் தடையில்லை. உலகின் சிறந்த மொழி மெளனம். தக்‌ஷ்ணாமூர்த்தி உலகுக்கு அளித்த வேதம். மெளனமாக இருப்பதால் நம்மில் இருக்கும் சக்தியை மிகவும் துல்லியமாக அறியலாம். மெளனவிரதம் இருந்துவந்தால் உங்கள் உள்ளுணர்வு மிகவும் கூர்மையானதாக மாறி உங்களை விழிப்புணர்வாளர்களாக மாற்றும்.

    மெளனவிரதம் இருக்கும் பொழுது சிலர் காகிதத்தில் எழுதி காட்டுவார்கள். மனதை ஒருநிலைப்படுத்தும் நோக்கில் இருக்கும் விரதத்திற்கு இது எதிரான செயல். மெளனவிரதம் இருக்கும் காலத்தில் உங்களை ஒரு ஜடப்பொருளாக பாவித்துக்கொள்ளுங்கள். உங்கள் உடல் செயல்படலாம் ஆனால் சைகை மூலமோ, எழுத்து மூலமோ பேசாதீர்கள். அப்பொழுது தான் மெளனவிரதத்தின் பயனை முழுமையாக உணரமுடியும்.
    குலதெய்வ வழிபாட்டை முறையாக விரதம் இருந்து செய்பவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. ஆகவே குலதெய்வத்தை கண்டுபிடித்து சரணாகதி அடையுங்கள். உங்கள் வம்சம் தழைத்தோங்கும்.
    மனித வாழ்வை முறைப்படுத்தவும், பிரபஞ்ச சக்தியை உணரவும் முன்னோர்களால் உருவாக்கப்பட்டது தான், இறை நம்பிக்கையும், வழிபாடும். அந்த பிரபஞ்ச சக்தியை, உண்மை என்று அனைவருக்கும் உணர்த்துவது சூரிய- சந்திரர் இயக்கமே. இந்த இரண்டு கிரகங்களின் இயக்கத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. உலகம் முழுவதும் நவக்கிரகங்களின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது என்பது நிதர்சனமான உண்மை.

    உளவியல் ரீதியாக ஒரு ஆன்மா, பூமியில் தன் வினைப் பயனை கூட்டவோ, குறைக்கவோ தன் பயணத்தில் பல்வேறு சிரமங்களை சந்திக்கிறது. நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் தன் வினைப் பயனே எல்லாவற்றுக்கும் காரணம் என்பதை உணரும் ஆன்மா, பாக்கிய பலனை அதிகரித்து முக்திக்கு வழி தேடும். அவ்வாறு பாக்கிய பலனை அதிகரிக்க, ஒருவரது 5-ம் பாவம் தொடர்பான வழிபாடு நல்ல பலன் தரும்.

    இங்கே 5-ம் பாவம் என்பது, 5-ம் பாவத்தின் 5-ம் பாவமான 9-ம் பாவம் ஆகும். 9-ம் பாவம் என்பது தந்தை மற்றும் தந்தை வழி முன்னோர்களை குறிப்பதாகும். குலத்தை காக்கவும் தனது வாரிசுகளின் நலனை காக்கவும் முக்தியடைந்த ஆன்மாக்களே குல தெய்வமாக இருந்து ஆசி வழங்குகிறார்கள். தெய்வங்களில் மிகவும் வலிமையானது குல தெய்வமே. அது மற்ற தெய்வங்களின் வழிபாட்டு பலன்களையும் பெற்றுத் தரும் ஆற்றல் மிக்கது.

    குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே இருக்கும். ஆனால் அளவற்ற சக்தியுடையது. இவ்வளவு மகிமை வாய்ந்த குல தெய்வம், பலருக்கு தெரியாமலேயே இருக்கலாம். தெரிந்தவர்கள் பலரும் அதனை முறையாக விரதம் இருந்து வழிபாடு செய்யாமல் இருக்கலாம். அப்படி தெரிந்தும் வழிபடாமல் இருப்பதால் ‘குலதெய்வ குற்றம்’ ஏற்படும். ஒரு ஜாதகத்தின் 5-ம் பாவத்திற்கான அதிபதி மற்றும் 5-ம் பாவம் குல தெய்வ அருளை காட்டும். ஐந்தாம் பாவத்தை பார்க்கும் அல்லது ஐந்தாம் பாவ அதிபதியுடன் சேரும் கிரகத்தின் தன்மையைக் கொண்டு, ஒருவரது குல தெய்வ அனுக்கிரகம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி அறியலாம்.

    * ஒரு ஜாதகத்தில் குரு அல்லது 1, 5, 9 ஆகிய இடங்கள் வலிமையாக இருந்தால், அந்த நபரின் குரலுக்கு குல தெய்வம் முன் வந்து நிற்கும்.

    * 1, 5, 9 ஆகிய இடங்களுக்கான அதிபதி அல்லது குரு 5-ம் பாவத்துடன் சம்பந்தம் பெற்றிருந்தால், அந்த ஜாதகருக்கு குலதெய்வத்தின் அருள் நிச்சயம் உண்டு.

    * 5-ம் பாவ அதிபதியின் மீது, சனி, செவ்வாய், ராகு-கேது பார்வை விழுந்தால், குல தெய்வ வழிபாட்டை தடை செய்யும்.

    * 5-ம் பாவ அதிபதி நீச்சம் அல்லது அஸ்தமனம் அடைந் திருந்தால், அவர்களுக்கு குலதெய்வம் இருந்தும், அதனை வழிபாடு செய்வதில் ஆர்வம் இருக்காது.

    * 5-ம் பாவ அதிபதி 8-ல் மறைந்திருந்தால், குல தெய்வ குற்றம், சாபம் இருக்கிறது என்று பொருள். குலதெய்வ குற்றம், சாபம் ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை சரி செய்ய கோவிலை சரியாக பராமரித்து, முறையான அபிஷேக ஆராதனை செய்து, வாசனை மிகுந்த மலர்களால் அலங்கரித்து, உணவு படைக்க வேண்டும். அத்துடன் கோவிலுக்கு வருடம் ஒரு முறையாவது சென்று வழிபட்டு, தான தர்மம் செய்ய வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, குலதெய்வத்தின் திருமேனி பழுதடையாமல் பாதுகாக்க வேண்டும்.

    * 5-ம் பாவ அதிபதி 12-ல் இருப்பது அல்லது பாதகாதிபதியுடன் சம்பந்தம் பெற்றிருப்பது, குலதெய்வ சாபம் ஆகும். அதோடு சூரியனும், சந்திரனும் சம்பந்தம் பெற்றிருந்தால், அது பரம்பரை பரம்பரையாக தீர்க்கப்படாத சாபமாக இருக்க வாய்ப்பு உண்டு. இந்த சாபங்கள், கோவில் சொத்து, வருமானத்தை அபகரிப்பதால் மட்டுமே ஏற்படும். இதன் பலனாக பூர்வீக இடத்தில் குடியிருக்க முடியாத நிலை, பூர்வீகச் சொத்தை இழக்கும் நிலை, கஷ்ட ஜீவனம், நல்ல வேலை மற்றும் தொழில் அமையாத நிலை, தீராத கடன், கர்ம வினை நோய், தொடர் துர்மரணம், ஊனம் உள்ள குழந்தை பிறப்பது போன்ற அசம்பாவிதங்கள் இல்லத்தில் இருக்கும்.



    ஒரு குறிப்பிட்ட ஊரில் உருவாகும் இயற்கை சீற்றத்திற்கும் கூட, குலதெய்வ சாபமே காரணமாக இருக்க வாய்ப்பு உண்டு. அந்த ஊரில் நடக்கும் தொடர் அசம்பாவிதங்களுக்கு குலதெய்வம் மகிழ்வோடு இருக் கிறதா? இல்லையா? என்பதை காண்பித்து விடும். ஒரு வருக்கு தங்களின் குலதெய்வம் தெரியாமல் இருப்பதும் கூட, ஒரு வகையில் குலதெய்வ சாபம் தான்.

    குலதெய்வ சாபம் உள்ளவர்கள், குல தெய்வம் தெரியாதவர்கள் ஜோதிட ரீதியாக 5-ம் பாவ அதிபதி தொடர்பான தெய்வத்தை கண்டறிந்து, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நெய் தீபம் ஏற்றி, தீபத்தை குலதெய்வமாக பாவித்து, சர்க்கரை பொங்கல் படையலிட்டு வாருங்கள். இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால், குலதெய்வம் தொடர்பான தகவல்கள் கிடைக்கும்.

    பெண்கள் அனைவரும் தங்களின் திருமணம் முடிந்த பிறகு, பிறந்த விட்டு குலதெய்வத்தையும், புகுந்த வீட்டு குலதெய்வத்தையும் வணங்கி வந்தால் பலன்கள் இரட்டிப்பாகும். பிறந்த வீட்டின் குல தெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழி வகுக்கும்.

    விநாயகர், முருகன், திருப்பதி வெங்கடாசலபதி போன்ற தெய்வங்கள், ஒருவருக்கு இஷ்ட தெய்வமாக இருக்க முடியுமே தவிர, குல தெய்வமாக இருக்கும் வாய்ப்பு நிச்சயமாக இல்லை.

    குல தெய்வங்கள் கர்ம வினைகளை நீக்க வல்லவை. தென் தமிழ்நாட்டில் சில சமூகத்தினர், குல தெய்வம் தெரியாதவர்களின் வீட்டில் பெண் எடுப்பதும் இல்லை, கொடுப்பதும் இல்லை. குல தெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. எவ்வளவு சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும் அது பயனற்றது தான். குலதெய்வத்தை பலர் மறந்துவிடுகிறார்கள். குலதெய்வ வழிபாட்டை முறையாக விரதம் இருந்து செய்பவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. ஆகவே குலதெய்வத்தை கண்டுபிடித்து சரணாகதி அடையுங்கள். உங்கள் வம்சம் தழைத்தோங்கும்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
    விரதத்தை, எந்த தெய்வத்திற்காக, எதற்காக அனுஷ்டிக்க வேண்டும் என்று தெரியாமல் செய்தால் எந்த பலனும் ஏற்படாது. விரதங்களும் அவற்றின் பலன்களைப் பற்றியும் காணலாம்.
    விரதங்கள் நம்மை ஒரு கட்டுப்பாடான வாழ்க்கை முறைக்கு உட்படுத்த ஏற்படுத்தப்பட்டது. ஆனால், எந்த விரதத்தை, எந்த தெய்வத்திற்காக, எதற்காக அனுஷ்டிக்க வேண்டும் என்று தெரியாமல் செய்தால் எந்த பலனும் ஏற்படாது. விரதங்களும் அவற்றின் பலன்களைப் பற்றியும் காணலாம்.

    சோமவார விரதம்

    கார்த்திகை மாத திங்கள்கிழமைகளில் கடைப்பிடிக்கப்படும் சோமவார விரதம் சிவபெருமானைக் குறித்து அனுஷ்டிப்பதாகும். காலையில் உணவு எதையும் எடுத்துக்கொள்ளாமல், இரவு மட்டும் சாப்பிட வேண்டும். அப்படி முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம். தகுந்த வாழ்க்கை துணை வேண்டுபவர்களும், திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை கிடைக்கவும் இந்த விரதம் இருப்பர்.

    பிரதோஷம்

    தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகளில் பிரதோஷ விரதம் சிவபெருமான், நந்திதேவரின் அருள் வேண்டி இருப்பது.

    சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கும் போது, சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் இருந்து இந்த விரதத்தை ஆரம்பிக்கலாம். வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டிய இந்த விரதத்தின் போது, பகலில் எதையும் சாப்பிடாமல், மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று பிரதோஷ வழிபாடு முடிந்த பிறகு, சாப்பிட வேண்டும். இந்த விரதம் இருப்பதினால் கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், ஆகியவை நீங்கும்.

    சித்ரா பவுர்ணமி விரதம்

    சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில், சித்திரகுப்தருக்காக இருப்பது.காலையில் பிதுர் தர்ப்பணம் செய்து விட்டு, இரவில் மட்டும் சாப்பிட வேண்டும்.இதனால் மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை எய்தலாம் .

    தை அமாவாசை விரதம்

    சிவபெருமானுக்காக இருக்கப்படும் தை அமாவாசையில், காலையில் சாப்பிடாமல் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதால், முன்னோர்களுக்கு முக்தி கிடைப்பதுடன், குடும்பமும் அபிவிருத்தி அடையும்.

    கந்தசஷ்டி விரதம்

    ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள் சேவற்கொடியோன் சுப்பிரமணியருக்காக இருக்கப்படும் விரதம். முதல் 5 நாட்கள் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு, கடைசிநாள் முழுமையாக பட்டினி இருந்து, மாலை சூரசம்ஹாரம் முடிந்தபிறகு வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட்ட பின், மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஏதாவது ஒன்று அருந்தி விரதத்தை நிறைவு செய்யலாம்.

    மங்களவார விரதம்

    தை மாதம் முதல் செவ்வாயில் துவங்கி ஆயுள்முழுவதும் செவ்வாய் கிழமைகளில் பைரவர் மற்றும் வீரபத்திரருக்காக அனுஷ்டிக்கும் விரதம்.பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு இருக்கும் இந்த விரதத்தால், பயணத்தின்போது பாதுகாப்பு, பயம் நீங்கும்.

    தைப்பூச விரதம்

    தை மாத பூச நட்சத்திரத்தில் சிவபெருமானுக்காக இருக்கப்படும் விரதம். காலையில் மட்டும் சாப்பிடாமல் இருக்ககூடிய இந்த விரதத்தால், திருமண யோகம் கூடி வரும்.

    கேதார விரதம்

    புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அல்லது தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் அல்லது தேய்பிறை அஷ்டமி முதல் சதுர்த்தசி வரையான 7 நாட்கள் தான் விரததிற்குரிய நாட்கள். இதுவும் முடியாதவர்கள் தேய்பிறை சதுர்த்தசி நாள் மட்டும் விரதம் இருக்கலாம்.

    ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக் கொண்டு, கேதாரநாதருக்காக முதல் 20 நாள் ஒருபொழுது உணவு, கடைசிநாள் முழுவதும் உபவாசம் இருந்தால்,தம்பதிகள் நீண்டநாள் வாழ்வர் என்பது நம்பிக்கை .

    கிருத்திகை விரதம்

    கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் சுப்பிரமணியருக்காக அனுஷ்டிப்பது. தொடர்ந்து 12 ஆண்டுகள் இவ்விரதத்தை அனுஷ்டிப்பதால், 16 வகையான செல்வத்தைப் பெறலாம்.

    நவராத்திரி விரதம்

    புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி திதி வரை மகாசக்தி பார்வதிதேவியை ,முதல் 8 நாள் பழ உணவு சாப்பிட்டு, 9ம் நாளான மகாநவமி அன்று முழுமையாக சாப்பிடாமல் விரதம் இருந்தால், கல்வி, செல்வம், ஆற்றல் ஆகியவற்றை அடையலாம்.

    இந்த விரதங்கள் புண்ணியங்களை பெற்றுத்தருவதுடன் நமது உடல் மற்றும் மனதையும் மேம்படுத்துகிறது.

    துர்க்கா விரத பூஜையை உரிய முறையில் மேற்கொண்டால் நமக்கு சகலவிதமான சந்தோஷங்களும் வந்துசேரும். குடும்ப கஷ்டங்கள் விலகி ஓடும்.
    துர்க்கா விரத பூஜையை உரிய முறையில் மேற்கொண்டால் நமக்கு சகலவிதமான சந்தோஷங்களும் வந்துசேரும். குடும்ப கஷ்டங்கள் விலகி ஓடும். தோஷம் அகல உகந்த நேரம் மாலை நேரம் என்பதினால் அந்நேரத்தில் அம்மனை வழிபடவேண்டும். எந்தவித தோஷங்கள் தாக்கி கஷ்டப்பட்டாலும் துர்க்கை அம்மன் அதனை அகற்றி அருள்புரிவாள்.

    துர்க்காதேவிக்கு உகந்த நாட்கள் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களாகும். இருப்பினும், மிகவும் உகந்த காலம் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 வரையிலான ராகு காலமே பூஜைக்கு சிறப்பான நேரமாகும். அன்னையின் அருளைப் பெற செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து தலைக்குப்பூச்சூடி, நெற்றிக்கு விபூதி, குங்குமம் வைத்துக்கொண்டு துர்க்காதேவியை வழிபட கோவிலுக்குச் செல்லவேண்டும். துர்க்கை பூஜைக்கு உகந்த மலர் செவ்வரளிப்பூவாகும்.

    அந்த பூக்களை உதிரியாகவோ அல்லது மாலையாகவோ வாங்கிக்கொள்ளலாம். எழுமிச்சம்பழக் கிண்ண விளக்கில் நெய் ஊற்றி திரிபோட்டு, அத்துடன் அர்ச்சனைப் பொருட்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அம்மனை அர்ச்சனை செய்ய கொண்டு வந்திருக்கும் பூ, பழம், கற்பூரம், தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு, ஊதுவத்தி, எலுமிச்சம்பழம், மஞ்சள், குங்குமம், விபூதி, பன்னீர் பாட்டில் அடங்கிய அர்ச்சனை தட்டை அம்மனை பூஜை செய்யும் அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும்.

    துர்க்கைக்கு எலுமிச்சம்பழ மாலை சூட்ட விருப்பம் உள்ள பக்தர்கள் எலுமிச்சம் பழத்தை மாலையாகத் தொடுத்து அர்ச்சகரிடம் கொடுத்தால் அவர் அம்மாலையை அம்மனுக்கு செலுத்துவார். அதன்பின்னர் தயாராக செய்து வைத்துள்ள எலுமிச்சப்பழக் கிண்ண விளக்கில் திரியை கொளுத்தி ஒளிப்பெற செய்யவேண்டும். ஒரே ஒரு எலுமிச்ச விளக்கு ஏற்றக்கூடாது ஜோடியாகத்தான் ஏற்ற வேண்டும். பிரார்த்தனைக்கு ஏற்றவாறு ஐந்து, ஒன்பது, பதினொன்று, நூற்றிஒன்று இப்படி எத்தனை வேண்டுமானாலும் நெய்விளக்கு ஏற்றலாம்.

    திருமணம் ஆகவேண்டிய பெண்கள் விரதமிருந்து இதனைச் செய்தால் நல்ல வரன் கிடைத்து குடும்பம் செழிப்புடன் இருக்கும். எலுமிச்சம்பழ நெய்விளக்குகள் ஏற்றிய பின்னர் மானசீகமாக தங்களின் குறைகளை அன்னையிடம் சமர்ப்பியுங்கள். உங்களது குறைகள் என்னவாக இருந்தாலும் தீர்த்து வைப்பாள். அவளது பேரருள் தங்களுக்கு கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறி நல்வாழ்வுப் பெறுவீர்கள். அன்னையின் முன்னால் துர்க்கை அம்மன் கவசத்தை 108 தடவை வாய்விட்டுச் சொல்லுங்கள். பக்தி பரவசத்துடன் பாமாலைப்பாடி மனமுருகி துதியுங்கள்.

    மன நிம்மதி பெறுவீர்கள். தீபாராதனை முடித்து-அர்ச்சகர் அர்ச்சனைத்தட்டை தரும்போது அம்மனின் பிரசாதமாக குங்குமம், பூ தருவார். அதனால் அன்னையின் அருள்கடாட்சம் பரிபூரணமாகக் கிடைக்கும். பூஜை முடிந்த பின்னர் அன்னையின் சுற்று பிரகாரத்தை பதினெட்டு தரம் வலம் வந்து, கொடி மரத்தையும் பதினொரு தரம் சுற்றிவிட்டு, அம்மனின் சன்னதியின் எதிரில் சிறிதுநேரம் அமர்ந்து விட்டு எழும்போது அங்கிருந்தவாறே அம்மனை வணங்கி விட்டு வர வேண்டும்.
    மாசி மாதத்தில் பவுர்ணமியோடு கூடிய மகம் நட்சத்திரம் வரும் மாசி மகமான இந்த புண்ணிய நாளில், விரதம் இருந்து புண்ணிய தீர்த்தங்களில் வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.
    19-2-2019 (இன்று) மாசி மகம்

    மாசி மாதத்தில் பவுர்ணமியோடு கூடிய மகம் நட்சத்திரம் வரும் தினத்தை ‘மாசி மகம்’ என்று விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். இந்த புண்ணிய நாளில், விரதம் இருந்து புண்ணிய தீர்த்தங்களில் வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

    முன்காலத்தில் ஒரு அரசன் இருந்தான். அவன் பல கொடிய செயல்களைச் செய்து, மக்களை துன்புறுத்தி வந்தான். அவனைக் கொல்வதற்கான வழியை, அவனது குலகுரு அறிந்திருந்தார். அதை வருண பகவானிடம் சொல்வதற்காக அவர், இருள் சூழ்ந்த நேரத்தில் சென்றார். இருட்டில் குருவை பகைவன் என்று நினைத்த வருணன், அவர் மீது தனது பாசத்தை வீசினான். இதில் அந்த குரு இறந்தார்.

    அவன் செய்த பாவத்தினால் அங்கு ஒரு பெரிய ராட்சசன் தோன்றினான். அவன், வருணனை இரண்டு கால்கள் மற்றும் கைகள், கழுத்தோடு இணையும்படி கட்டி, கடலுக்குள் தூக்கி வீசினான். அந்த துன்பத்தில் இருந்து விடுபட முடியாமல் பலகாலமாக கடலுக்குள்ளேயே கிடந்தான் வருணன். இதையடுத்து தேவர்கள், முனிவர்கள் பலரும் சிவபெருமானை நோக்கி தவம் இருந்தனர். வருணனை விடுவிக்கும்படி வேண்டுதல் வைத்தனர். இதையடுத்து சிவபெருமான், வருணன் ஆழ்ந்து கிடந்த சமுத்திரத்தில் எழுந்தருளி, அவனது கட்டுகளை விடுவித்து அருளினார். இது நிகழ்ந்ததாக சொல்லப்படுவது சிதம்பரம் திருத்தலம் ஆகும்.

    துன்பத்தில் இருந்து மீண்ட வருணன், சிவபெருமானை வணங்கி “இறைவா! மாசி மகமாகிய இந்த தினத்தில், இத்தலத்தில் நீராடு பவர்களுடைய துன்பங்களை போக்கி அருள வேண்டும். அதுபோன்ற தருணங்களில் இறைவனாகிய நீங்கள், புண்ணிய நதிகளில் எழுந்தருளி மக்களை காத்தருள வேண்டும்” என்று வேண்டி வரம் பெற்றான்.

    இந்த கதையை வியாக்ரபாத முனிவர், இரணியவர்மன் என்ற மன்னனுக்கு கூறினார். அவன் மாசி மகத்தன்று, சிதம்பரத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு கொடியேற்றி வைத்தான். அப்போது தேவர்கள், முனிவர்கள் பலரும் அங்கு வந்து விழாவை கண்டுகளித்தனர். மேலும் “இறைவா! கனகசபைக்குத் தலைவரே. எங்களுக்கு அருள் செய்யுங்கள்” என்று வேண்டினர்.

    பின்னர் தேவர்கள் அனைவரும் சிவபெருமான் சமுத்திரத்திற்கு எழுந்தருளும் வழியை அலங்காரம் செய்தனர். சிவபெருமான் கடற்கரைக்கு எழுந்தருளினார். இதனை வருணன் கண்டு, எதிர் கொண்டு ஈசனை வணங்கினான். சிவபெருமான் வருணனின் துன்பத்தை நீக்கிய துறையிலேயே நீராடி, அடியார்களுக்கு அனுக்கிரகம் செய்து கனக சபைக்குள் புகுந்தார்.

    சிதம்பரத்தில் உள்ள பத்து தீர்த்தங்களில் ‘பாசமறுத்த துறை’யும் ஒன்று. இது சிதம்பரத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மாசி மக நாளில் அந்த தீர்த்தத்தில், தீர்த்த உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும்.
    நாளை மாசிமக நாளில் வரும் பவுர்ணமி விரதத்தை கடைப்பிடித்து, அம்மையப்பனை வழிபட்டு வளம் பல பெறுங்கள். அந்த நாளில் குளத்தில் நீராடுவதால் கர்ம வினைகள் நீங்கி பிறவிப்பயன் கிடைக்கப்பெறலாம்.
    19.2.2019 அன்று மாசி மகம்

    பிரபஞ்ச சக்தி உண்மை என்பதை உணர்த்துவது சூரியனும், சந்திரனும். உலக இயக்கம் சூரியன், சந்திரனை கொண்டே இருக்கிறது. சூரியனும் சந்திரனும் ஒன்று சேரும் நாள் அமாவாசை. சூரியனுக்கு நேரே 180 டிகிரியில் சந்திரன் சஞ்சரிக்கும் நாள் பவுர்ணமி. இந்த இரு நாட்களும் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் நாட்கள் என்பதால், நம் முன்னோர்கள் சுபகாரியங்களை தவிர்த்து வழிபாட்டிற்கு முக்கியத்துவம் தந்தனர்.

    இந்த உலகத்தில் மனிதர்கள் உள்பட அனைத்து ஜீவராசிகளும், கர்ம வினைகளை தீர்க்கவே ஜனனம் செய்கிறது. கர்ம வினையைக் குறைப்பதற்கு மூன்று விதமான வழிகளை நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அவை ‘மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம்’ ஆகும். புராண இதிகாசங்களுடன் தொடர்பு பெற்ற ஸ்தலங்களும் அங்கு வீற்றிருக்கும் மூர்த்தியும், தீர்த்தங்களும் கர்ம வினைப் பலனை மாற்றும் சக்தி படைத்தவை. வருடத்தின் சில குறிப்பிட்ட மாதம் மற்றும் நாளில் சில தீர்த்தங்களுக்கு தனிச் சிறப்பு ஏற்படுகிறது.

    ஒவ்வொரு தமிழ் மாதமும் சில குறிப்பிட்ட நட்சத்திரத்தில் தான் பவுர்ணமி வரும். ஒவ்வொரு மாதம் பவுர்ணமி வந்தாலும் மகம் நட்சத்திரமும் மாசி மாதமும் இணையும் பவுர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. மாதம் தோறும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாத மகம் நட்சத்திரத்திற்கு வலிமை அதிகம்.

    சிம்ம ராசியைச் சேர்ந்த மகம் நட்சத்திரத்தின் ராசி அதிபதி சூரியன். எனவே இந்த நட்சத்திரத்திற்கும் ஆளுமை தன்மை அதிகம். மகம் என்பது கேதுவின் நட்சத்திரம். ஒரு ஆன்மாவை உலக இன்பங்களுக்கு அழைப்பது ராகு என்றாலும், மோட்சம் அளிப்பது கேது தான். மோட்சக்காரகன் எனப்படும் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார்.

    மாசி மகம் அன்று, கால புருஷ 5-ம் இடத்தின் அதிபதி சூரியன் வீட்டில் சந்திரன் இருக்கிறார். 5-ம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம். சூரியன் ஆன்மா, சந்திரன் உடல். சந்திரன் புனித நீருக்கு அதிபதி. ராஜ கிரகமான சூரியன் தன் வீட்டை தானே பார்ப்பதால் மகம் நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் போது சூரியன், சந்திரன், கேதுவின் தொடர்பு ஏற்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஜீவாத்மாவின் கர்ம வினையை போக்குவதில் நிகரற்ற சக்தி படைத்த நாளாக மாசி மகம் திகழ்கிறது. அதாவது சந்திரன், ஆன்மா என்ற சூரியனின் பார்வை பெறும் நாள் மகம் நட்சத்திரம் என்பதால் அன்றைய தினம் ஆன்மாவையும், உடலையும் பரிசுத்தம் அடையச்செய்வார்கள். ஆன்மாவும் உடலும் பரிசுத்தம் அடையும் போது, கர்ம வினைப் பதிவு குறையும்.

    இந்த ஆத்ம சுத்தி சூரியன், சந்திரனின் தொடர்பு எப்பொழுது சிம்மத்திற்கு கிடைக்கிறதோ, அப்பொழுது மட்டுமே சாத்தியம். அத்துடன் குரு சிம்மத்திற்கு வரும் போது ‘மகாமகம்’ என்ற அதி புனித நாள் 12 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மாசி மகம், கும்பகோணம் கும்பேஸ்வரர் திருக்கோவிலின் மகாமகத் திருக்குளத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. அன்று அனைத்து புண்ணிய நதிகளும் தங்கள் பாவ சுமையை நீக்க மகாமகக் குளத்திற்கு வருவதாக ஐதீகம். அந்த நாளில் குளத்தில் நீராடுவதால் கர்ம வினைகள் நீங்கி பிறவிப்பயன் கிடைக்கப்பெறலாம்.

    மகாமக குளத்திற்கு சென்று நீராட முடியாதவர்கள், உங்களது ஊரிலோ, அதற்கு அருகாமையிலோ உள்ள பழமையான ஆலயங்களிலும் நடைபெறும் அபிஷேக ஆராதனை, தீர்த்தவாரியில் கலந்து கொள்ளலாம்.

    மாசிமக நாளில் வரும் பவுர்ணமி விரதத்தை கடைப் பிடித்து, அம்மையப்பனை வழிபட்டு வளம் பல பெறுங்கள்.
    மகா மக நாளில் விரதம் இருந்து சிவ-சக்தி ரூபங்களை வணங்கினால் அவர்களின் அருள் ஒருங்கே கிடைக்கும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள்.
    சூரியனின் அதிதேவதை பரமேஸ்வரன். சந்திரனின் அதிதேவதை பார்வதிதேவி. ஆண் கிரக ராசியில் வரும் பெண் கிரகமான சந்திரன். பெண் கிரக ராசியில் வரும் ஆண் கிரகமான சூரியன். இது தான் மாசி மக பவுர்ணமி நாளின் சிறப்பு அம்சம்.

    எனவே இந்த நாட்களில் சிவனுக்குள் சக்தி ஐக்கியம், சக்திக்குள் சிவன் ஐக்கியம். எனவே மகா மக நாளில் விரதம் இருந்து சிவ-சக்தி ரூபங்களை வணங்கினால் அவர்களின் அருள் ஒருங்கே கிடைக்கும்.

    இந்த பவுர்ணமியில் விரதம் இருந்து பிரதோஷ நேரமான மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் பார்வதி பரமேஸ்வரரை வழிபட, திருமணத் தடை நீங்கும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். தம்பதியின் ஒற்றுமை, குடும்பத்தில் இன்பம் பெருகும்.
    சந்திராம்ச விரதம் என்ற ஒரு வகை விரத முறையும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சந்திராம்ச விரதம் என்ற ஒரு வகை விரத முறையும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது, சந்திரனின் பிறை வளர்வதற்கு ஏற்ப உணவின் அளவை முறைப்படுத்தி விரதம் இருப்பதாகும்.

    இந்த முறையின்படி அமாவாசை அன்று எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். அமாவாசைக்கு அடுத்த நாளில் இருந்து ஒவ்வொரு கவளமாக படிப்படியாக உணவின் அளவு கூட்டப்பட்டு, பவுர்ணமியில் முழு உணவாக உண்பது முறை. பின்னர், படிப்படியாக குறைத்துக்கொண்டே வந்து அமாவாசையன்று விரதத்தில் முடிவு பெறும்.
    ×