என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    ஈஸ்வரனிடத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் இருப்பது பக்தி. ஆன்மீகவாதியின் லட்சணங்களான இவை விரதம் இருக்கும் பொழுது நம்மில் செயல்படத் தொடங்கும்.
    ஒரு ஆன்மீகவாதிக்கு வைராக்கியம், அப்யாசம், பக்தி ஆகியவை மிகவும் முக்கியம். தனது எடுத்துக்கொண்ட செயலை எப்பாடுபட்டாவது முடிக்கும் செயல் வைராக்கியம். தனது ஆன்மீக செயல்களை தடையில்லாமல் தினமும் எந்த காரணம் கொண்டும் விடாமல் செய்வது அப்யாசம்.

    ஈஸ்வரனிடத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் இருப்பது பக்தி. ஆன்மீகவாதியின் லட்சணங்களான இவை விரதம் இருக்கும் பொழுது நம்மில் செயல்படத் தொடங்கும். இறைவனை நினைத்து உண்ணாமல் இருக்கும் பொழுது நம்மில் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுவதன் காரணமும் இதுதான்.

    நமது சாஸ்திரம் பஞ்ச அவயங்களுக்கும் தனித்தனியே விரதங்களை வழங்கி உள்ளது. நமது உணர்வு உறுப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தினால் அதன் சக்தியையும் படைப்பாற்றலையும் மேம்படுத்தமுடியும். இரைச்சலான ஒரு சந்தையில் ஒருவரை அழைத்தால் அவருக்கு நாம் அழைப்பது கேட்காது, அதே நேரம் அமைதியான ஒரு தோட்டத்தில் இருக்கும் ஒருவரை அழைத்தால் அவருக்கு நமது அழைப்புரியும்.

    அது போல உங்கள் உணர்வு உறுப்புக்கள் சந்தைக்கடை போல பல செயல்களில் ஈடுபடும் பொழுது பரமாத்மாவை அழைத்தால் அவரிடம் நீங்கள் நெருங்க முடியாது. விரதம் மூலம் உங்கள் உடலை மேன்மையாக்குங்கள். உங்கள் உடல் எனும் நந்தவனத்தில் பரமாத்மா நிரந்தரமாக வசம் செய்வார்.
    திருமணம் தடைபடுபவர்கள் துர்க்கையை விரதம் வழிபாடு செய்தால் போதுமானது. ஒவ்வொரு கிழமையிலும் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய விபரம் தரப்பட்டுள்ளது.
    திருமணம் தடைபடுபவர்கள் துர்க்கையை விரதம் வழிபாடு செய்தால் போதுமானது. ஒவ்வொரு கிழமையிலும் வழிபாடு செய்ய வேண்டிய விபரம் தரப்பட்டுள்ளது.

    ஞாயிறு : ஞாயிற்றுக்கிழமை துர்க்கை சன்னிதியில் மாலை 4.30 முதல்  - 6 மணிக்குள் புதிய வெள்ளைத்துணியில் திரி செய்து, விளக்கேற்ற வேண்டும். சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.

    திங்கள்: திங்கள்கிழமைகளில் காலை 7.30 -  முதல் 9 மணிக்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும் என்பதும். வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும்

    செவ்வாய்: ராகு கால நேரமான மாலை 3 மணி முதல் - 4.30க்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கைய வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்
    புதன்: மதியம் 12 முதல் 1.30 மணிக்குள் பஞ்சில் திரிசெய்து, விளக்கேற்றி, புளியோ தரை நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிட்டும் என்பது, ரத்த சம்பந்தமான நோய் தீரும்  

    வியாழன்: வியாழக்கிழமைகளில் மதியம் 1.30 முதல்  - 3 மணிக்குள் விளக்கேற்றி, எலும்மிச்சம்பழம் சாதம் நைவேத்யம் செய்து, வழிபட வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும்

    வெள்ளி: வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து ராகுகால நேரமான காலை 10.30 முதல்  - 12 மணிக்குள் துர்க்கையை வழிபட மற்ற நாட்களை விட மிக ஏற்ற காலம். எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும் .

    சனி: காலை 9 -  முதல் 10.30 மணிக்குள் மஞ்சள்துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் வேலை வாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும் .
    முக்கிய விரத தினங்களில் கண்டிப்பாக எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது. அதற்கான காரணத்தை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சஷ்டி விரதம், சதுர்த்தி விரதம் போன்றவற்றை எண்ணற்ற மக்கள் மேற்கொள்கிறார்கள்.

    அப்படி விரதம் இருக்கும் நாட்களில், அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்னதாக குளித்து விபூதி அணிந்து விநாயகரை வழிபட்ட பின் எந்த தெய்வத்திற்காக விரதம் இருக்கிறோமோ, அந்த தெய்வத்தை மனதில் தியானித்து “விரதத்தின் மூலம் உன் அருளைக் கேட்கிறேன். நீ விரும்பிய காரியத்தை கொடுப்பாய்” என்று எண்ணி இருகரம் கூப்பி வழிபட்ட பின்பு விரதத்தை தொடங்க வேண்டும்.

    அப்போதுதான் அந்த தெய்வம் ஆலயத்தை விட்டு உங்கள் இல்லத்தில் அடியெடுத்து வைத்து அருள் கொடுக்கும். அவ்வாறு முக்கிய விரத தினங்களில் கண்டிப்பாக எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது. அதிகாலை நேரத்தில் தீபாவளி தவிர மற்ற விரத காலத்தில் தவிர்த்தல் நல்லது.

    ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இந்த விரதத்தை கடைபிடித்தால் நல்ல பலனை காணலாம். எந்த கிழமைகளில் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற பார்க்கலாம்.
    சனிக்கிழமைகளில் அதிகாலை எழுந்து குளித்து விரதத்தை ஆரம்பித்து காளி கோவிலுக்குச் சென்று வேப்ப எண்ணெய் விளக்கேற்றி மந்தார மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். உளுந்தினால் செய்யப்பட்ட பலகாரங்களை நைவேத்தியமாகப் படைப்பது பலன் அளிக்கும். ராகுவிற்கும் மந்தார மலர்களைப் படைப்பது நல்லது. கருப்பு நிற ஆடைகளை ஏழை-எளியவர்களுக்கு தானம் அளிப்பது ராகு தோஷத்தைப் போக்கும்.

    கேது விரதம்

    செவ்வாய்க்கிழமை அதிகாலையில் எழுந்து குளித்து விரதத்தை தொடங்கி விநாயகரை வணங்குவது நல்லது. விநாயகருக்கு செவ்வரளி மாலை அணிவித்து கொள்ளில் செய்த கொழுக்கட்டையை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். கேதுவை அவருக்குரிய மந்திரங்கள் சொல்ல வழிபட்டு வைடூரியத்தை மோதிரமாக அணிந்து வழிபடுவது மிகவும் நல்லது. கேது தோஷத்தை நீக்கக்கூடியது.
    சிவபெருமானுக்கு உகந்த விரதங்களுள் சிவராத்திரி விரதம் முக்கியமானது. எந்த சிவராத்திரி சிவபெருமானுக்கு மிகவும் விசேஷமானது என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.
    1. மகா சிவராத்திரி:- மாசி மாதத்து தேய்ப்பிறைச் சதுர்த்தசி கூடிய நாளே மகா சிவராத்திரியாகும். அந்த நாள் சிவனுக்கே உரியது.

    2. யோக சிவராத்திரி:- சோமவார சம்பந்தமாக வரும் யோக சிவராத்திரி நான்கு வகைப்படும். சோம வாரத்தன்று சூரிய உதயகாலம் தொட்டு இரவு முழுவதும் அமாவாசை இருக்குமானால் அன்று யோக சிவராத்திரியாகும்.

    3. நித்திய சிவராத்திரி:- வருடத்தின் 12 மாதங்களிலும் வரும் தேய்பிறை வளர்பிறைகளின் சதுர்த்தசி கூடிய 24 நாட்களும் நித்திய சிவராத்திரியாகும்.

    4. பட்ச சிவராத்திரி:- தை மாதத்தின் தேய்பிறைப் பிரதமையன்று தொடங்கி 13 நாள் வரையில் தினமும் நியமத்துடன் ஒரு பொழுது மட்டும் உண்டு 14-ஆம் நாளாகிய சதுர்த்தசியன்று விதிப்படி விரதம் நோற்பது பட்ச சிவராத்திரியாகும்.

    5. மாத சிவராத்திரி:- ஒவ்வொரு மாதத்தில் வருகின்ற சிவராத்திரி மாத சிவராத்திரியாகும் அன்று சிவபுராணம் படித்துச் சிவனைப் போற்றினால் வராத நன்மை நம்மை தேடி நாடி வரும்.
    மாத சிவராத்திரி விரதங்களைப் பற்றி மாத சிவராத்திரி விரத கல்பம் என்னும் நூல் விரிவாகச் சொல்லுகிறது. அதனைச் சுருக்கி இங்கே தரப்படுகிறது.
    த சிவராத்திரி விரதங்களைப் பற்றி மாத சிவராத்திரி விரத கல்பம் என்னும் நூல் விரிவாகச் சொல்லுகிறது. அதனைச் சுருக்கி இங்கே தரப்படுகிறது.

    1. சித்திரை மாதம் :- இம்மாதம் தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி உமா தேவியால் வழிபடப்பட்டது.
    2. வைகாசி மாதம் :- வளர்பிறை. அஷ்டமி சிவராத்திரி சூரிய பகவனால் வழிபடப்பட்டது.
    3. ஆனி மாதம் :- வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரி ஈசானால் வழிபடப்பட்டது.

    4. ஆடி மாதம் :- தேய்பிறை பஞ்சமி சிவராத்திரி முருகனால் வழிபடப்பட்டது.
    5. ஆவணி மாதம் :- வளர்பிறை-அஷ்டமி சிவராத்திரி சந்திரனால் வழிபடப்பட்டது.
    6. புரட்டாசி மாதம் :- வளர்பிறை திரியோதசி சிவராத்திரி ஆதி சேஷனால் வழிபடப்பட்டது.

    7. ஐப்பசி மாதம் :- வளர்பிறை-துவாதசி சிவராத்திரி இந்திரனால் வழிபடப்பட்டது.
    8. கார்த்திகை மாதம் :- 2 சிவராத்திரி வளர்பிறை சப்தமியும் தேய்பிறை அஷ்டமியும் சிவராத்திரிகள் இவற்றை சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்டது.
    9. மார்கழி மாதம் :- வளர்பிறை, தேய்பிறையில் வரும் சிவராத்திரி லட்சுமியால் வழிபடப்பட்டது.

    10. தை மாதம் :- வளர்பிறை-நந்தி தேவரால் வழிபடப்பட்டது.
    11. மாசி மாதம் :- தேய்பிறை- தேவர்களால் வழிபடப்பட்டது.
    12. பங்குனி மாதம் :- வளர்பிறை- குபேரனால் வழிபடப் பட்டது.
    நாமும் சிவராத்திரியில் சிவபெருமானை வழிபடுவோம். அருளைப் பெறுவோம்.
    மாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் விரதம் இருந்து மறைந்த நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் கிரக தோஷங்கள், திருமண தடை, குழந்தை பாக்கியமின்மை போன்ற பிரச்சனைகள் விரைவில் நீங்கும்.
    மாசி அமாவாசை தினமான இன்று அதிகாலையிலேயே குளித்து முடித்து விட்டு, விரதம் இருந்து உங்கள் ஊரில் கோயில் குளக்கரை மற்றும் ஆற்றங்கரையோரங்களில் மறைந்த உங்கள் முன்னோர்களுக்கு சிராத்தம், திதி போன்றவற்றை தர வேண்டும். இந்த சடங்குகளை முடித்த பின்பு சிராத்த சடங்குகளை செய்வித்த வேதியர்களுக்கு அரிசி, காய்கறிகள், வஸ்திர துண்டு போன்றவற்றை தானம் அளிப்பது சிறந்தது.

    தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் மகத்துவங்களை தரும் மாசி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் வாங்கி, உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய நேரத்தில் உடைக்க வேண்டும். திருஷ்டி கழித்து உடைபவர்களுக்கு தட்சிணை கட்டாயம் தர வேண்டும். இதை செய்வதால் தொடர்ந்து வரும் காலங்களில் தொழில், வியாபாரங்களில் நல்ல லாபங்கள் ஏற்படும். வீண் செலவுகள் ஏற்படாது.

    மாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் விரதம் இருந்து மறைந்த நமது முன்னோர்கள் மற்றும் சமீபத்தில் மறைந்த உறவினர்கள் போன்றோர்களுக்கும் சேர்த்து பித்ரு தர்ப்பணம், சிராத்தம் தருவதால் பித்ரு லோகத்தில் இருக்கும் முன்னோர்களின் ஆன்மாக்கள் நற்கதி அடைந்து நமக்கு அவர்களின் ஆசிகள் கிடைக்கின்றன. மேலும் நமது குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஏற்படுகின்ற கிரக தோஷங்கள், திருமண தடை, குழந்தை பாக்கியமின்மை, உடலாரோக்கிய குறைபாடுகள் போன்றவை விரைவில் நீங்கும்.
    இந்து சமயத்தில் விரதங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
    ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறுவதுடன், நோய்கள் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

    திங்கட்கிழமை விரதம் இருப்பதன் மூலம் குடும்பத்தில் பரஸ்பர அன்பும், அமைதியும் நிலவும்.

    செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதன் மூலம் குடும்ப உறவுகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை ஏற்படும்.

    புதன்கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் கல்வி, கேள்விகளில் தேர்ச்சி ஏற்படும்.

    வியாழக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கிய தடைகள் நீங்கி சத்புத்திர பாக்கியம் கிடைக்கும்.

    வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் தம்பதியர்களுக்கு ஆயுள் தோஷங்கள் விலகப்பெறும்.

    சனிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் வேலை, தொழில் ஆகியவை விருத்தி பெற்று செல்வம் பெருகும்.
    சிவராத்திரி விரதமானது வயது, பால், இன, மத வேறுபாடுகளைக் கடந்து யாவரும் அனுஷ்டிக்க கூடியது. இந்த விரதம் கடைபிடிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.
    சிவராத்திரி அன்று விரதம் கடை பிடிக்கும் அடியவர்கள் அதிகாலை நீராடி, அன்று முழுவதும் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கிற பூஜைகளில் கலந்து எம்பெருமானை வணங்க வேண்டும்.

    வீட்டில் பூஜை செய்வதாக இருந்தால் குளித்து உலர்ந்த ஆடை அணிந்து நெற்றியில் திருநீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையை ஆரம்பிக்க வேண்டும். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூசிக்க வேண்டும். வில்வ இலைகளைப் பயன்படுத்தி பூசிப்பது பெரும் சிவபுண்ணியத்தைத் தரும். பின்னர் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.

    கோவில்களில் வீதி வலம் வரும் போது சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு சாமத்திலும், சிவபுராணம் கேட்டும், தேவாரம், திருவாசகம் என திருமுறைகள் ஓதியபடியும், சிவாலய தரிசனம் செய்தும் விரதத்தை மேற்கொள்ளலாம்.

    சிவராத்திரி விரதமானது வயது, பால், இன, மத வேறுபாடுகளைக் கடந்து யாவரும் அனுஷ்டிக்க கூடியது. ஏனைய விரதங்கள் என எவற்றாலும் நுகர முடியாத சிவானந்தத்தை தர வல்லது சிவராத்திரி விரதமாகும்.

    மகா சிவராத்திரி விரதம் இருப்போருக்கு நற்கதி கிடைப்பதுடன் இப்பூத உடல் மடிந்த பின் சொர்க்கத்தையும் இறைவன் அளிப்பான் என்பதே பின்னணித் தத்துவம்.
    கா சிவராத்திரி நாளில் விரதம் இருந்து சிவன் கோவில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி, முன்னேற்றம், தீய சக்திகள் வேரோடு அகலுதல் போன்ற நன்மைகள் நமக்கு உண்டாகும்.

    மகா சிவராத்திரி நாளில் விரதம் இருப்போருக்கு கிடைக்கும் மகத்துவங்கள் அளவிட முடியாதது. சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.

    புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதற்கு ஈடாகாது.

    சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்தின்போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும்.

    அதன் பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். பூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து நண்பகலில் குளித்து மாலையில் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம். மாலையில் மீண்டும் குளித்து வீட்டில் சிவ பூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை செய்தலும் நலம். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தல் கூடுதல் உத்தமம்.

    மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதுடன், பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும். சிந்தையில் அமைதியுடன் சிவ புராணத்தைப் பாடிக்கொண்டிருக்க வேண்டும். பற்றற்று இருப்பதுடன் பேராசைகளைக் கைவிட்டுப் பிறருக்குத் தீங்கிழைக்காமல் இருத்தல் வேண்டும்.

    மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் ருத்திராட்ச மாலையுடன் வீடுகளில் சிவ பூஜை செய்தோ அல்லது கோயில்களுக்குச் சென்றோ சிவனை வழிபடுதல் வேண்டும். கோயில்களிலும் சிவ பூஜை செய்யலாம். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்துப் பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம். பூக்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களைக் கோயில்களுக்கு வாங்கிக் கொடுத்தல் நலம்.

    பின்னர் சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறிப் பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம். வில்வ இலைகளைக் கோயில்களுக்கும் வழங்கலாம்.
    பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷ, சாம்பு, சூலினா, உக்ரா, பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

    அன்றைய தினம் இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை அனுஷ்டானத்துடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் அப்போதே முடிக்க வேண்டும். அதன் பின் தீட்சை தந்த குருவைப் பூஜை செய்துவிட்டு, உடைகள் மற்றும் உண வினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

    பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவ புராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். பிறகு மாலை நெருங்கியதும் மாலை அனுஷ்டானங்களை முடித்து, அன்றிரவும் எதுவும் உண்ணாமல் இருந்து உறங்க வேண்டும். சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைபிடித்தால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என்பது ஐதீகம்.

    தவிர மகா சிவராத்திரி விரதம் இருப்போருக்கு நற்கதி கிடைப்பதுடன் இப்பூத உடல் மடிந்த பின் சொர்க்கத்தையும் இறைவன் அளிப்பான் என்பதே பின்னணித் தத்துவம். இப்படி இருபத்து நான்கு வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள். அத்துடன் அவர்களின் மூவேழு தலைமுறைகளும் நற்கதி அடைந்து, முக்தியை அடைவது சத்தியம் என்று புராணங்கள் கூறுகின்றன.
    சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தை கடைப்பிடித்தால் சிவபெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன், மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் தருவதாக ஐதீகம்.
    4-3-2019 மகா சிவராத்திரி

    சிவபெருமானுக்கு உரிய விரதங்களில் முக்கியமானவையாக எட்டு விரதங்கள் கந்தபுராணம் குறிப்பிடுகிறது. அவை சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், கல்யாண சுந்தர விரதம், சூல விரதம், ரிஷப விரதம், கேதார விரதம் ஆகியவையாகும். அவற்றுள் சிறப்பான விரதமாக மகா சிவராத்திரி உள்ளது. சிவ விரதங்கள் நிறைய இருந்தாலும் முக்கியமான சிவராத்திரி விரதம், முக்திப்பேறு அடைய உற்ற துணையாக விளங்குகிறது. செம்மையான மங்களம் தருபவன் என்ற அர்த்தம் கொண்ட சிவபெருமானை நினைத்து, மனமுருகி, உணவு தவிர்த்து, நாமம் சொல்லும் புண்ணிய தினம் சிவராத்திரி என்பது ஆன்மிக சான்றோர்களின் கருத்தாகும்.

    ராத்திரி என்றால் இருள் காலம் என்பது பொருள். உண்மையான இருள் காலம் என்பது இறைவன், உலகம் முழுவதையும் ஒடுக்கியுள்ள காலமாகும். இதனை ‘பிரளய காலம்’ என்றும், ‘ஊழிக்காலம்’ என்றும் சொல்வார்கள். பொதுவாக, இரவு நேரத்தில், ஒளி இல்லாமல், உயிர்களின் நடமாட்டமும் இல்லாமல் அமைதி நிலவும். உடலின் பஞ்ச பூத இயக்கங்கள் குறைந்து, உயிர்கள் செயலற்று இருப்பதால் ஏற்படும் அமைதியான பெரும் இருளில் தனித்து நிற்பவர் சிவபெருமான். அதனால், அது சிவராத்திரி என்று சொல்லப்படும். உலகத்தின் ஒடுக்க நிலையான இரவுக்காலம் சிவனுக்கே உரியது என்ற நிலையிலும், இரவை சிவராத்திரி என்று குறிப்பிடுவார்கள். குறிப்பாக, ராத்திரி என்ற சொல் ‘பூஜை செய்தல்’ என்ற பொருளையும் தருகிறது. அதன் அடிப்படையில் சிவனை வழிபட தகுந்த இரவை சிவராத்திரி என்றும் ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிடுகிறார்கள்.

    பொதுவாக, சிவராத்திரி என்பது நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி என ஐந்து வகையாக உள்ளது. இதில், மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தசி நாளில் வரும் மகா சிவராத்திரியை, வருஷ சிவராத்திரி என்றும் சொல்வார்கள்.

    சிவராத்திரி விரதம் இருப்பதற்கான விதிமுறைகள் அனைவரும் மேற்கொள்ளும் விதமாகவே உள்ளன. சிவபெருமான் மீது அன்பு கொண்ட பக்தியுடன் எவரும் சிவராத்திரி விரதம் இருந்து பலன் பெறலாம் என்பதை ஆன்றோர் பெருமக்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

    சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்தின்போது காலையில் வீட்டில் பூஜையை செய்து முடிக்க வேண்டும். பின்னர், கோவிலுக்கு சென்று சிவதரிசனம் செய்ய வேண்டும். நண்பகலில் ஓய்வெடுத்து விட்டு, மாலையில் கோவிலுக்கு சென்று, வழிபட்டு விட்டு கோவிலை வலம் வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்வது நலம். பின்னர், மீண்டும் வீட்டில் சிவபூஜை செய்யலாம். வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் வில்வ இலைகளால் அர்ச்சனை மற்றும் பூஜை செய்வது நல்லது. கலச பூஜையுடன் சிறிய அளவில் லிங்கம் வைத்தும் பூஜை செய்யலாம்.

    சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தை கடைப்பிடித்தால் சிவபெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன், மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் தருவதாக ஐதீகம். சிவ சிந்தனை இல்லாமல் கண் விழித்தால் மட்டும் போதும் என்று நினைத்துக் கொண்டு, உலக விஷயங்களை பேசிக்கொண்டிருப்பதால் எவ்விதமான பலனும் கிடைக்காது என்றும் ஆன்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

    முறைப்படி இருபத்து நான்கு ஆண்டுகள் சிவராத்திரி விரதம் கடைப்பிடிப்பவர்கள் சிவகதியை எளிதாக அடைவார்கள். அத்துடன் அவர்களது 21 தலைமுறைகளும் நற்கதி பெற்று, முக்தியையும் அடைவது சத்தியம் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. சிவராத்திரி அன்று நியம முறைப்படி விரதம் மேற்கொள்பவர்களுக்கு வாக்கு பலிதமும், மந்திர சித்தியும் கைகூடும் என்பது சித்தர்கள் வாக்கு ஆகும். கவுதம மகரிஷி, வசிஷ்டர், அகஸ்தியர் போன்ற சப்தரிஷிகளும், சூரியன், சந்திரன், அக்னி, குபேரன், மன்மதன் ஆகியோரும் சிவராத்திரி விரதம் இருந்து பேறு பெற்றதாக ஐதீகம்.
    சிவபெருமானுக்கு முக்கியமானது சிவராத்திரி விரதம். சிவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஒரு நாள் கயிலாய மலையில் சிவபெருமானும், பார்வதியும் வீற்றிருந்தனர். அப்பொழுது பார்வதி தேவி, “உங்களை வழிபடுவதற்கு மிக உகந்த நாள் எது?” என்று ஈசனிடம் கேட்டாள்.

    அதற்கு சிவபெருமான், “தேவி! இரவு வேளையில் வரும் நான்கு ஜாம வேளையிலும் கண் விழித்திருந்து, உபவாசத்துடன் நீ என்னை பூஜித்து வழிபட்டாய். அந்த மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி நாளே எனக்கு மிகவும் பிரியமானது.

    அது மகா சிவராத்திரி தினம். அந்த நாளில் உணவருந்தாமல் இருந்து, நான்கு ஜாமங்களிலும், நான்கு கால பூஜை நடத்த வேண்டும். வாசனை மலர், அலங்காரத்தை விடவும், வில்வ அர்ச்சனையே பூஜைக்கு ஏற்றது. இந்த விரதத்தின் பெருமையை வேறு எந்த விரதத்தோடும் ஒப்பிட முடியாது” என்றார்.

    விரத முறை

    சிவராத்திரிக்கு முதல் நாள், ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, ஆலயத்திற்குச் சென்று ஈசனை வழிபட வேண்டும். தொடர்ந்து வீட்டில் சிவபூஜை செய்ய வேண்டும். இரவு வீட்டிலேயே நான்கு ஜாமங்களிலும் நான்கு கால பூஜையை முறைப்படி செய்யலாம். அப்படி செய்ய முடியாதவர்கள், சிவாலயங்களில் நடைபெறும் சிவ பூஜையில் கலந்து கொள்ளலாம். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வது கூடுதல் பலன் தரும்.

    வீட்டில் பூஜை செய்பவர்கள், பஞ்சாட்சர மந்திரமான ‘நமசிவாய’, ‘சிவாய நம’ வார்த்தைகளை உச்சரித்தபடி இருக்க வேண்டும்.

    மகா சிவராத்திரியின் முதல் ஜாமத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் ஜாமத்தில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியையும், மூன்றாம் ஜாமத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் ஜாமத்தில் ரிஷபாரூட மூர்த்தி (சந்திரசேகரர்)யையும் வழிபட வேண்டும். நான்கு கால பூஜைக்கு முன்பாக நடராஜரையும், பிரதோஷ நாயகரான நந்தியம்பெருமானையும் வழிபட வேண்டும். கண் விழித்திருக்கும் பக்தர்கள் சிவ புராணம், திருவிளையாடல் கதைகள், அறுபத்து மூவர் வரலாறு முதலான சிவ மகத்துவங்களை விவரிக்கும் ஞான நூல்களைப் படிப்பது, மிகுந்த புண்ணியம் தரும்.

    மறுநாள் அதிகாலையில் நீராடி, இறைவனுக்கு நைவேத்தியம் படைத்து பூஜிக்க வேண்டும். ஏழை எளியவர்களுக்கு தானம் செய்து சிவராத்திரி விரதத்தை முடிக்கலாம்.
    ×