என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    உங்கள் வேண்டுதல் அனைத்தும் நிறைவேற வேண்டுமா? அப்படியென்றால் திருப்பதியில் நீங்கள் செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை அறிந்து கொள்ளலாம்.
    திருமலை திருப்பதியில் வடக்குதுவாரம் என்பதற்கு பதிலாக ஏகாதசி, துவாதசி இரண்டு நாட்களுக்கு மட்டும் வைகுண்ட பிரதட்சணம் நடைபெறுகிறது. அதாவது 12 ம் நூற்றாண்டில் ஆனந்த நிலையம் விரவுபடுத்துவதற்காக, கர்ப்பாலயத்தை சுற்றிவரும் பாதை அகலப்படுத்தப்பட்டது. அந்த பழைய குறுகலான பாதையே வைகுண்ட பிரதட்சணமாக, இந்த இருநாட்கள் மட்டும் திறந்து விடப்படுகிறது.

    மற்றநாட்களில் நாம் கோயிலை சுற்றிவரும் பாதையில் ஆனந்த நிலைய விமானத்தில் வடக்குமுகமாக விமான வேங்கடேஸ்வரசாமி எழுந்தருளியிருக்கிறார்.கூடவே, பரமபதநாதர் எழுந்தருளியிருக்கிறார், வருடத்தின் 365 நாளும் இவரை தரிசிக்கலாம், இது வைகுண்ட ஏகாதசியின் பலனை கொடுக்கும் என்பது ஆகமம்.

    பரமபதநாதர் (வண்ண கட்டமிடப்பட்டிருப்பது) அருகில் வெள்ளி தோரணத்தில் காட்சி தருபவர்தான் விமான வெங்கடேஸ்வரர். ஆனந்த நிலைய விமானத்தில் பரமபதநாதர் என்பது வைகுண்டத்தில் பாற்கடலில் மஹாவிஷ்ணு கோலம் ஆதிசேஷனின் மேல் வலதுகால் மடித்து, இடதுகால் பூமியை தொட்டுஇருக்கும் இந்த திருக்கோலம்தான் பரமபதநாதர் எனப்படுகிறது.

    இது பிரம்மா முதலானவர்களுக்குக்கூட கிடைக்காத தரிசனம் பரமபதநாதர் எனபது இந்த தரிசனத்தை பக்தர்கள் ஆனந்த நிலைய விமானத்தில் எப்போதும் தரிசிக்கலாம். "..உள்ளே, சாமிய நாம கூட்டத்துல சரியா பார்த்து வேண்டுதல்கள சொல்லமுடியாத காரணத்துனால, கோபுரத்துல அதே கோலத்துல இருக்குற விமான வெங்கடேஸ்வரர் அமைக்கப்பட்டிருக்காரு..,இவருகிட்ட உங்களோட வேண்டுதல்கள மனசார சொல்லிட்டு வாங்க..அது அப்படியே மூலவர்கிட்ட சொன்னமாதிரி..நிச்சயம் நல்ல பலன் தரும்.."
    குழந்தை வரம் வேண்டியும், விரைந்து திருமணம் நடக்க வேண்டியும், பிணி நீங்கி விரைவில் குணமாக வேண்டியும் வேண்டும் பக்தர்களின் கோரிக்கைகளை கனிவோடு நிறைவேற்றி தருகிறாள் குள்ள முத்து மாரியம்மன்.
    கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள மருதூர் என்ற பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள ராஜேந்திரம் ஊரின் நடுவே ஊர் மக்களைக் காக்கும் தெய்வமாய், கிராமத்தின் காவல் தெய்வமாய் கோவில் கொண்டு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள் அன்னை குள்ள முத்து மாரியம்மன்.

    குழந்தை வரம் வேண்டியும், விரைந்து திருமணம் நடக்க வேண்டியும், பிணி நீங்கி விரைவில் குணமாக வேண்டியும் வேண்டும் பக்தர்களின் கோரிக்கைகளை கனிவோடு நிறைவேற்றி தருகிறாள் அன்னை. பயன் பெற்றோர் அன்னைக்கு புடவை வாங்கி சாத்தியும், குத்துவிளக்கு வாங்கி சன்னிதியில் வைத்தும் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

    அம்மை நோய் கண்ட பலர் அம்மன் ஆலயத்திலேயே தங்கி, அம்மன் தீர்த்தத்தைப் பருகி குணமானதும் இல்லம் திரும்புவது இங்கு வழக்கமாக காணும் காட்சி.

    தன்னை நாடும் பக்தர்கள் நலன் பல பெற்று வாழ அன்னை குள்ள முத்து மாரியம்மன் அருள்புரிவது கண்கூடான உண்மையே!

    ராஜயோகம் தரும் கிரகம் சூரியன் எனப்படும் ராஜகிரகமாகும். பிதுர்காரகன் என்று சூரியனை அழைப்பது வழக்கம். எனவே சூரிய பலத்தால்தான் தந்தை வழி சொத்துக்களால் நன்மை கிடைக்கும்.
    ஒவ்வொருவரும் எப்போது யோகம் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பர். ராஜயோகம் தரும் கிரகம் சூரியன் எனப்படும் ராஜகிரகமாகும். பிதுர்காரகன் என்று சூரியனை அழைப்பது வழக்கம். எனவே சூரிய பலத்தால்தான் தந்தை வழி சொத்துக்களால் நன்மை கிடைக்கும்.

    தந்தை அனுகூலமாக நடந்து கொள்வார். தான் இருக்கும் இடத்தில் இருந்து 7-ம் இடத்தைப் பார்க்கும் சூரியனுக்கு ஆட்சிவீடு சிம்மம். நீச்ச வீடு துலாம். உச்ச வீடு மேஷம் ஆகும். சித்திரையில் பிள்ளை பிறந்தால் சூரியன் உச்சம் பெறும்.

    அதிலும் ஆண் குழந்தை சித்திரை மாதம் பிறந்து விட்டால் தந்தையின் முன்னேற்றத்தில் தடைகள் உருவாகாமல் இருக்க பரிகாரம் செய்வர். எனவே குழந்தை பிறந்த நட்சத்திர அடிப்படையில் அதற்குரிய ஸ்தலத்திற்கு சென்று சிறப்பு பரிகாரங்களைச் செய்தல் வேண்டும். அப்பொழுதுதான் சிறப்பான வாழ்க்கையை சூரியன் வழங்குவார்.

    சூரியனுக்கு ஆதவன், ஆதித்தன், ஞாயிறு, ரவி, பார்கவன் என பலவிதப் பெயர்கள் உண்டு. அவர் ஒருவருக்கு சாதகாதிபதியாக அமைந்தால், அந்த நபருக்கு ராஜயோகம் கிட்டும். அரச பதவிகளும், அரசு தொடர்புகளால் ஆதாயமும் வந்துசேரும்.
    கேது சரியில்லை எனில் திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் வரும். எனவே கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரரை தரிசிக்கும்போது கேதுவினால் ஏற்படும் பிரச்னைகள் தீரும்.
    நவகிரகங்களில் கேதுவை ஞானகாரகன் என்று அழைப்பர். தெளிவற்ற, நிம்மதியற்ற எந்த ஒரு குறிக்கோளும் இல்லாது வாழ்பவர்கள் கேதுவின் அருளால் சட்டென்று ஞானப் பாதைக்குத் திரும்புவார்கள்.

    கேது சரியில்லை எனில் திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் வரும்; எந்த காரியமானாலும் அலைச்சலுடன்தான் முடிக்கவேண்டியிருக்கும். எனவே கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரரை தரிசிக்கும்போது கேதுவினால் ஏற்படும் பிரச்னைகள் தீரும்.

    இக்கோயிலில் கேதுபகவானை தனிச் சந்நதியில் தரிசிக்கலாம். இரு நாகங்கள் பின்னிப் பிணந்திருக்க, நடுவில் ‘காளிங்க நர்த்தன கண்ணன்’போல இவர் அருள்பாலிக்கிறார். எமகண்ட வேளை கேதுவிற்கு உரியது என்பதால் இவர் சந்நதியில் செய்யப்படும் எமகண்டவேளை பூஜைகள் விசேஷம். ஈசனுக்கும் நந்திக்கும் இடையே உள்ள மேல் விதானத்தில், சூரியனை கேது விழுங்குவது போல் ஒரு சிற்பம் காணப்படுகிறது.

    இதன் கீழ் நின்று ஈசனையும் அம்பிகையையும் மனமுருக வேண்டினால் கேதுவின் கெடுபலன்கள் குறைகிறது. சென்னை அருகே போரூர்-குன்றத்தூர்  பாதையில் கெருகம்பாக்கத்தில் உள்ளது, இந்த ஆலயம். போரூர் சந்திப்பில் இருந்து 3 கி.மீ. தொலைவு.
    காலை, மாலை இருநேரமும் வாசலில் விளக்கு ஏற்ற வேண்டும். நல்லெண்ணையால் ஏற்றப்படும் தீபத்தினால் அனைத்து தோஷங்களும் தீய சக்திகளும் நீங்குகின்றது.
    தீப கதிர் வீச்சு சுற்று புறத்தில் காந்த சக்தியினை காற்றில் சேர்க்கும். இக்காற்று மனித உடலிலும், மனதிலும் நல்ல ஆக்கப் பூர்வ மாற்றங்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக பசு நெய் தீபத்திற்கு இப்புனித தன்மை மிகக் கூடுதலாக இருப்பதாகக் கூறப்படுகின்றது. நெய் தீபம், உடல் நலம், மனவளம், தீய சக்தி விலகுதல், மகாலட்சுமி கடாட்சம் இவற்றுக்கு உகந்ததாகக் கூறுகின்றனர். எனவே காலை, மாலை இருநேரமும் வாசலில் நெய் ஊற்றி விளக்கு ஏற்ற வேண்டும்.

    நல்ல எண்ணெயால் ஏற்றப்படும் தீபத்தினால் அனைத்து தோஷங்களும் தீய சக்திகளும் நீங்குகின்றது. நீண்ட கால தீரா பிரச்சினைகளால் உடையவர்கள், பூர்வ ஜென்ம கர்மங்களால் பாதிக்கப்படுபவர்கள், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம், சனி இவைகளின் பாதிப்பில் உடையவர்கள் நல்ல எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

    வேப்பிலை எண்ணெய் குல தெய்வ வழிபாடு பராசக்தி வழி பாட்டிற்கு உகந்தது. சத்ருக்களால் பாதிக்கப்படுபவர்கள் வேப்ப எண்ணெய் கொண்டு 8 விளக்கேற்றி அமாவாசையில் பைரவரை வழிபடலாம்.

    விளக்கெண்ணை கொண்டு தீபம் ஏற்றுவது குடும்ப வளம், குடும்ப உறவுகள் ஒற்றுமை இவற்றினை கொடுக்கும்.

    தேங்காய் எண்ணெய் கொண்டு விளக்கேற்ற பிள்ளையார் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்ப மகிழ்ச்சி பெருகும்.

    பஞ்சு எண்ணெய் கொண்டு ஏற்றப்படும் தீபம் கண்திருஷ்டி, அறிவுப்பூர்வ எண்ணங்கள், வறுமை, நோய் இவற்றினை நீக்கும்.

    பொதுவாக நெய் தீபமும், நல்ல எண்ணெய் தீபமும் வீடுகளில் ஏற்றுவது நடைமுறையில் உள்ளது.

    கிழக்கு நோக்கி தீபம் ஏற்றுவது ஒருவரை இந்திரன் போல் ஆக்கிவிடுமாம்.

    மேற்கு நோக்கி தீபம் ஏற்றுவது கடன்தொல்லை, சனி தோஷம் நீக்கும்.

    வடக்கு நோக்கி தீபம் ஏற்றுவது திருமண தடைகளை நீக்கும்.
    தெற்கு நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது.
    மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றினால் பீடை விலகும்.
    வெள்ளி விளக்கில் திருமகள் வாசம் செய்வாள்.
    பஞ்சலோக விளக்கில் தேவதை வசியமாகும்.

    வெண்கல விளக்கில் ஆரோக்கி யம் கிடைக்கும்.
    இரும்பு விளக்கினால் சனி தோஷம் நீங்கும்.
    குத்து விளக்கினை நடு முற்றத் தில் போட்ட கோலத் தின் மீது வைத்து சந்தனம், குங்குமம் இட்டு மஞ்சள் திரி கொண்டு நெய் ஊற்றி விளக்கேற்றி, பூ சுற்றி வழிபட வறுமை நீங்கும்.
    சிவபெருமான் வருண பகவானிற்கு சாப விமோசனம் தந்த நாள் மாசிமகம் என்பதால், அன்று சிவபெருமானை வணங்க சாப விமோசனம் கிடைக்கும்.
    மாசி மகம் அன்று பார்வதி - பரமேஸ்வரரை வழிபட திருமணத் தடை நீங்கும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். தம்பதியின் ஒற்றுமை பெருகும். குடும்பத்தில் இன்பம் பெருகும்.

    சிவபெருமான் வருண பகவானிற்கு சாப விமோசனம் தந்த நாள் மாசிமகம் என்பதால், அன்று சிவபெருமானை வணங்க சாப விமோசனம் கிடைக்கும்.

    பார்வதி தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சனின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார். எனவே அன்றைய தினம் சக்தி வழிபாடு மற்றும் பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது.

    மாசி மகம் அன்று சிவபெருமானையும், ஸ்ரீவிஷ்ணு பகவானையும், பித்ருக்களையும் வணங்கினால் சகல நலன்களையும் பெற்று வளமான வாழ்க்கை அமையும்.

    சிவன், விஷ்ணு, முருகன் என முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள், தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம்.

    மகம் நட்சத்திரத்தின் அதிதேவதை பித்ருக்கள். ஆகையால் அன்றைய தினம் பித்ருக்கள் வழிபாடு செய்ய முன்னோர்களின் ஆசி கிடைக்கும். கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மை தரும்.

    புனித நீராட்டு மற்றும் வழிபாட்டுடன் சில தான தர்மங்களையும் செய்வதால் பாவங்கள் நீங்கி அனைத்து வளங்களும் கிடைக்கப் பெறுவது உறுதி. அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது தான் மாசி மகம் என்பதால், இயன்ற வரை அன்னதானம் செய்தால், கோடி புண்ணியம் வந்து சேரும்.


    ஈரோடு காசி விசுவநாதர் தலத்திற்கு நேரில் வந்து அம்மையப்பரை தரிசிப்போருக்கு திருமணம், மகப்பேறு, தொழிற்கல்வி ஆகிய பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன என்பது பலனடைந்தவர்கள் கூறும் தகவல்.
    காசிக்கு நிகரான சிவத்தலங்களுள் மிகவும் குறிப்பிடத்தக்கது, ஈரோடு அருகே குரும்பலமகாதேவி கிராமம், வடுகபாளையத்தில் உள்ள காசி விசாலாட்சி சமேத காசி விசுவநாதர் ஆலயம்.

    இத்தலத்திற்கு நேரில் வந்து அம்மையப்பரை தரிசிப்போருக்கு மறுபிறவி இல்லையென்று நம்பப்படுகிறது. திருமணம், மகப்பேறு, தொழிற்கல்வி ஆகிய பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன என்பது பலனடைந்தவர்கள் கூறும் தகவல். மேலும் தொழில் சிக்கல் தீரவும், தம்பதி அன்னி யோன்யமாக வாழவும் இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வருகின்றனர்.

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், குரும்பலமகாதேவி கிராமம், வடுகபாளையத்தில் இக்கோவில் இருக்கிறது. திருச்செங்கோடு - ஜேடர்பாளையம் வழியில் கள்ளுக்கடைமேடு பஸ் நிறுத்தத்தில் இருந்து மேற்கில் 1 கிலோமீட்டர் அருகில் வடுகபாளையம் காவிரிக்கரை அமைந்துள்ளது.
    காலபைரேஸ்வரர் கோவிலில் உள்ள பிந்து சரோவரா புஷ்கரணியில் குழந்தையில்லாத தம்பதியினர் காலபைரவரை பரிபூரணமாக நினைத்து புனித நீராடினால் குழந்தையின்மை நீங்கி விரைவில் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.
    காலபைரவர் என்றவுடன் நமக்கெல்லாம் உடனடியாக ஞாபகத்திற்கு வருவது, பைரவரின் வாகனமாக இருக்கும் நாய்தான். பைரவரை தேய்பிறை அஷ்டமியில் அதிகாலையில் நீராடி விரதம் இருந்து பஞ்ச தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இப்படி தொடர்ந்து ஆறு தேய்பிறை அஷ்டமியில் காலபைரவரை வணங்கினால், ஆரோக்கியமான வாழ்க்கை, செல்வ வளம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்காக 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாண்டியா மாவட்டம் பெல்லூர் நகரில் உள்ள ஆதிசுன்சனகிரியில், கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் காலபைரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    இந்த ஆலயத்தில் பழமை வாய்ந்த பிந்து சரோவரா புஷ்கரணியும் உள்ளது. இந்த புஷ்கரணியில், குழந்தையில்லாத தம்பதியினர் காலபைரவரை பரிபூரணமாக நினைத்து புனித நீராடினால் குழந்தையின்மை நீங்கி விரைவில் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.
    திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் ஒரு மண்டலம் இங்குள்ள காமநாசினி தீர்த்தத்தில் நீராடி, ஈசனுக்கு பால் அபிஷேகம் செய்து, கருவறை தீபத்தில் தூய பசும் நெய் சேர்த்து வழிபட கர்மவினைகள், காம வினைகளால் வந்த தோஷங்கள் யாவும் அகலும் என்பது நம்பிக்கை.
    சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் ஆலயம் மிகப் பழமையானது. ஆலயம் திருவான்மியூர் பஸ் நிலையத்தின் அருகிலேயே உள்ளது.

    மூளை, மனது, எண்ணங்கள், கற்பனைகள், உணர்ச்சிகள் முதலிய நம் செயல்களுக்கு சந்திர பகவானே காரணம். தற்போது ஆட்டிசம், ஹைப்பர் ஆக்ட்டிவ் குழந்தைகளை காண்கிறோம். இதற்கு காரணம் கர்ம வினைகள் தான்.

    ஆனாலும் இந்த விதமான பாதிப்புக்கு ஆளாக்குபவர் சந்திரனே. சந்திரன் சுபகிரகம். நம் சந்தோசம், தானம், தனம் இவைகளுக்கும் சந்திரனே காரணமாவார்.
    அத்திரி முனிவரின் புதல்வர் சந்திரன். மிகுந்த அழகன். அத்திரி முனிவர் தன் புதல்வன் சந்திரனை கல்வி கற்க வேண்டி பிரகஸ்பதியிடம் அனுப்பினார். பிரகஸ்பதியும் சந்திரனுக்கு சகல கலைகளையும் போதித்தார். பிரகஸ்பதியின் மனைவி தாரை சந்திரனின் அழகில் மயங்க, கல்வி கற்க வந்த இடத்தில் தன் குருவின் மனைவியான தாரையின் அழகில் சந்திரனும் மயங்க, இருவரும் ஒன்றாயினர்.

    இதனால் தாரையின் வயிற்றில் கரு உண்டானது. இப்படி சந்திரனுக்கும் தாரைக்கும் பிறந்தவர் ‘புதன்’. சகல கலைகள், கல்வி, ஞானம், புத்திரபாக்கியம் இவைகளை அளிக்க கூடியவர் புதன். சந்திரன் தன் குருவின் மனைவி தாரையோடு தொடர்பு கொண்டதால் அவனுக்கு பாவம் உண்டானது. பிரகஸ்பதி சந்திரனை குரு துரோகி என சபிக்க, சந்திரன் தனது கலைகளை இழந்து, ஒளியை இழந்தார்.

    அந்த சாபம் நீங்குவதற்கான வழிகளைத் தேடினார் சந்திரன். நாரதர், சந்திரனை திருவான்மியூர் திருத்தலம் சென்று, அங்கு உள்ள காமநாசினி தீர்த்தத்தில் நீராடி, ஈசனை வழிபட பணித்தார். சந்திரன் திருவான்மியூர் வந்து முறைப்படி ஈசனை வழிபாடு செய்து, தாம் இழந்த அனைத்து கலைகளையும், ஒளியையும் மீண்டும் அடைந்தார்.

    கலிகாலத்தில் காமத்தால் தவறுகள், கொலைகள் பல நடந்து வருகின்றன. இதனால் இன்று பல குடும்பங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டு, தீர்வுகளைத் தேடி அலை கிறார்கள். இந்த கொடிய காம பாவங்களுக்கு பரிகாரம் இல்லை. இருந்தாலும் மன ஒருமைப்பாட்டுடன், மனம் திருந்தி இத்தலம் வந்து ஒரு மண்டலம் தொடர்ந்து இங்கு உள்ள காமநாசினி தீர்த்தத்தில் நீராடி, ஈசனுக்கு பால் அபிஷேகம் செய்து, கருவறை தீபத்தில் தூய பசும் நெய் சேர்த்து வழிபட கர்மவினைகள், காம வினைகளால் வந்த தோஷங்கள் யாவும் அகலும் என்பது நம்பிக்கை.

    இங்கு உள்ள கேதாரீஸ்வரர் வழிபாட்டினை திங்கள், தீபாவளி நாட்களில் செய்தால் பித்ரு சாபங்கள் தீர வழிவகுக்கும். இங்கு உள்ள கேதாரீஸ்வரரை தீபாவளி நாளில் வட மாநிலத்தவர் உட்பட பலரும் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.
    திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் வந்து வழிபட்டால் தீராத நோயும் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதே போல இது ஒரு சாப விமோசனத் தலமும் ஆகும்.
    திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் திரிபுரசுந்தரி அல்லது சொக்கநாயகி, வள்ளிதெய்வானையுடன் முருகன், விஜயகணபதி எனும் வினாயகர், நடன காட்சியில் தியாகராஜராக சிவன், நவகிரகங்கள், மூன்று மூன்ற லிங்கங்களாக 36 வரிசையில் 108 சிவ லிங்கங்கள், கால பைரவர், 63 நாயன்மார்கள் போன்றவர்களின் தனி சன்னதிகள் உள்ளன.

    ஆலயம் காலை ஆறு முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மாலை மூன்று முதல் இரவு ஒன்பது மணி வரையிலும் திறந்து உள்ளது. ஆலயம் ஏழாம் அல்லது பதினொன்றாம் நூற்றாண்டை சேர்ந்தது என்கிறார்கள். ஆனால் நிச்சயமாக ஆலயம் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டு உள்ளதாம். சோழ மன்னர்கள் காலத்தில் ஆலயம் கட்டப்பட்டது. அதனால் இந்த ஊரும் திருவாளர் வான் மீகி எனும் பெயரைத் தரும் திரு வான்மீகி என ஆகி பின்னர் மருவி திருவான்மீயூராகியது.

    இந்த ஆலயத்தில் வந்து வழிபட்டால் தீராத நோயும் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாலயத்திற்கு வந்து தமது நோயை நீக்கி சுகம் பெற்றவர்கள் பலர். அதே போல இது ஒரு சாப விமோசனத் தலமும் ஆகும்.
    திருச்சி மணப்பாறை மாரியம்மன் கோவிலில் மஞ்சள் கயிறு வாங்கி அம்மன் சன்னிதியின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் கட்டி வேண்டிக்கொண்டால், விரைவில் திருமண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    சமயபுரம் மாரியம்மன், மாசி மாதத்தில் தன்னுடைய அடியவர்களின் நலனுக்காக 28 நாட்கள் பட்டினி விரதம் மேற்கொள்வாள். தாலி வரம் வேண்டும் பெண்கள், சமயபுரத்து அம்மனுக்கு தங்கள் தாலியை நேர்த்திக்கடனாக செலுத்துவர்.

    அதேபோல் திருச்சி மணப்பாறை மாரியம்மன் கோவிலில் திருமணத் தடை அகல, மஞ்சள் கயிறு வாங்கி அம்மன் சன்னிதியின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் கட்டுவார்கள். இவ்வாறு கட்டி வேண்டிக்கொண்டால், விரைவில் திருமண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    ஒரு கல் நாகரை வைத்து தோஷ பரிகார பூஜை செய்யும்போது அந்த பூஜை செய்யும் நபருக்குரிய தோஷங்கள் அனைத்தையும் நாகர் நீக்கிவிடுவதாக ஐதீகம்.
    நாகராஜா கோவிலில் திரும்பிய திசை எல்லாம் நாகர் சிலைகளாக உள்ளது. கோவிலின் நுழைவு வாசலில் தொடங்கி நடை பாதைகளின் இரு பக்கங்களிலும் நாகர் சிலைகள் குவிக்கப்பட்டுள்ளன. கோவில் குளத்தை சுற்றியும் நாகர் சிலைகளே உள்ளன. கோவில் சுற்றுச்சுவர் மீது வரிசையாக நாகர் சிலைகளை அடுக்கி வைத்துள்ளனர்.

    கோவில் உள்ளே பிரகாரத்தின் நாகர் சிலைகள் உள்ளன. கோவிலுக்கு பின்புறம் உள்ள நந்தவனத்திலும் நாகர் சிலைகள் வரிசையாக அடுக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான நாகர் சிலைகளை ஒரே இடத்தில் பார்க்கும் போகும் சற்று பிரமிப்பாக உள்ளது.

    நாகர் கல் சிலைகளை தோஷ பரிகாரம் செய்வதற்காக பக்தர்கள் பயன்படுத்துகிறார்கள். பரிகார பூஜைகள் முடிந்த பிறகு பக்தர்கள் யாரும் நாகர் சிலைகளை எடுத்து செல்வது இல்லை. அவற்றை கோவிலிலேயே விட்டு சென்றுவிடுவார்கள். இதனால் நாகராஜா ஆலயத்தில் நாகர் சிலைகள் ஆயிரக்கணக்கில் சேர்ந்துவிட்டன. பொதுவாக ஒரு கல் நாகரை வைத்து தோஷ பரிகார பூஜை செய்யும்போது அந்த பூஜை செய்யும் நபருக்குரிய தோஷங்கள் அனைத்தையும் நாகர் நீக்கிவிடுவதாக ஐதீகம். அதாவது தோஷங்கள் அனைத்தையும் நாகர் தன் வசம் இழுத்துக்கொள்கிறார். இதனால் பக்தர்கள் புத்துணர்ச்சி பெறுகிறார்கள்.

    அதே சமயத்தில் தோஷ பரிகாரத்துக்காக பயன்படுத்தப்படும் நாகர் சிலைகளும் ஒன்றும் இல்லாததாக மாறி விடுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் பரிகார பூஜை முடிந்த பிறகு நாகர் சிலைகளில் எந்த சக்தியும் இருப்பதில்லை. என்றாலும் அது வழிபடபட்ட ரூபம் என்பதால் அதற்கென்று தனி மகத்துவம் நீடிக்கிறது. எனவே தான் அவற்றை கோவிலின் முக்கிய பகுதிகளில் வைத்துள்ளனர்.

    நாகராஜா ஆலயத்தின் முன்பகுதியில் உள்ள அரசமரத்தடி பகுதியிலும் ஏராளமான நாகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அந்த சிலைகளுக்கு பால், மஞ்சள் அபிஷேகம் செய்வதன் மூலம் பக்தர்களுக்கு உரிய பலன்கள் கிடைக்கிறது.
    ×