என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    ஒருவரது வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தால் அவருக்கு கடன், சொத்து பிரச்சனை, திருமண தடை, பணப்பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.
    ஒருவரது வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தால் அவருக்கு கடன், சொத்து பிரச்சனை, திருமண தடை, பணப்பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.

     * நீங்கள் வசிக்கும் வீடானது சரியாக வடக்கு திசை அல்லது சரியான கிழக்கு திசையாக இல்லாமல் இருப்பது.

    * புதன் வாசல், சுக்கிரன் வாசல் என்று நினைத்துக் கொண்டு நீச்ச பகுதியில் வாசல் அமைப்பது.

    * வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் தூண்களுடன் கூடிய அமைப்பில் போர்டிகோ அமைத்திருப்பது.

    * வீட்டின் உட்பகுதியில் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் பூஜையறையை வைத்து வழிபடுவது.

    * வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் உள்ள பூஜையறையில் எல்லா நேரமும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து கொண்டே இருப்பது.

    * வடக்கு மற்றும் கிழக்கு பொது சுவர்கள் இருப்பது,

    * வடக்கு பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் உள்ள ஜன்னலைத் திறந்தால் வானம் தெரியாதபடி அமைப்பில் இருப்பது,

    * வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள ஜன்னலை திறந்து வைக்காமல் திரைசீலை கொண்டு மூடி இருப்பது,

    * மணிபிளான்ட் போன்ற  கொடி தாவரங்களை வளர்ப்பது

    * தென்மேற்கு பகுதியை மாஸ்டர் பெட்ரூம் ஆக உபயோகப் படுத்தாமல் இருப்பது,

    * தவறான தெருகுத்து, தெருப்பார்வை இருப்பது.

    * தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு பகுதியில் ஆறு, ஓடை, குளம், குட்டை போன்ற ஊருக்குப் பொதுவான நீர்நிலைகள் இருப்பது.

    * ஆறாம் பாவகம்  6, 8, 12 உடன் தொடர்பு இருந்தால் நீண்ட காலம் வட்டி மட்டுமே கட்டிக் கொண்டிருப்பார்கள்

    * ஆறாம் பாவகம்  6, 8 தொடர்பு இருந்தால் பணத்தால் அசிங்கப்பட வேண்டிய நிலை ஏற்படும்.

    * சுக்கிரனின் தொடர்பு 6, 8, 12 ஆக இருந்தால் வாழ்நாள் முழுவதும் வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சுக்கிரனின் தொடர்பு 6, 8  மட்டும் இருந்தால் பணத்தால் அசிங்க பட வேண்டிய சூழல் ஏற்படும்.

    * ஒருவருடைய ஜாதகத்தில்1, 3, 5, 7, 9, 11 இதுபோல ஒற்றைப்படை தொடர்புகள் அதிகமாக இருக்கும் போதும் பணத்தால் நீண்டகாலத்திற்கு கஷ்டம் என்பது இருந்து கொண்டே இருக்கும்.
    அடுத்தவர்களின் கண்திருஷ்டி உங்கள் மேல் விழாமல் இருக்க, இப்படி நீங்கள் குடும்பத்தோடு செல்லும் போது, உங்களுடைய கைகளில் ஒரு வில்வ இலையை எடுத்து செல்ல வேண்டும்.
    எப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலிகளாக இருந்தாலும், எவ்வளவு பொருட்களை வாங்கிக் குவிக்கும் யோகம் உள்ளவர்களாக இருந்தாலும், அஷ்டலட்சுமி உங்கள் வீட்டில் தான் குடி இருக்கின்றாள் என்றாலும், கஷ்டத்தைக் கண்டு நீங்கள் பயப்படாதவர்களாக இருந்தாலும், அடுத்தவர்களின் கண் பார்வைக்கும், வயிற்றெரிச்சலுக்கும், கண் திருஷ்டிக்கும் கண்டிப்பாக பயந்துதான் ஆக வேண்டும்.

    அடுத்தவர்களின் கண்திருஷ்டி உங்கள் மேல் விழாமல் இருக்க, இப்படி நீங்கள் குடும்பத்தோடு செல்லும் போது, உங்களுடைய கைகளில் ஒரு வில்வ இலையை எடுத்து செல்ல வேண்டும். வெளியில் சென்று விசேஷங்களில் கலந்து கொண்டு, வீடு திரும்பும்போது வீட்டு வாசலில் நின்று உங்கள் வீட்டு உறுப்பினர் அனைவரையும் வாசலிலேயே நிறுத்தி, உங்கள் கைகளில் இருக்கும் வில்வ இலையை எடுத்து திருஷ்டி சுற்றுவது போல் எல்லோரையும் சுற்றி வீட்டு, வாசலிலேயே அந்த இலையை இரண்டாக கிழித்து போட்டு விட வேண்டும். இப்படி செய்யும்பட்சத்தில் அடுத்தவர்களின் கண் திருஷ்டியும், வயிற்றெரிச்சலும் கட்டாயமாக உங்களை தாக்காது. நீங்கள் வாங்கிய பொருட்களும் எந்தவித சேதாரமும் இல்லாமல் இருக்கும்.

    தினம்தோறும் சோம்பேறித்தனம் பார்க்காமல் வேலைக்கு சென்று வருபவர்களுக்கும் இப்படி ஒரு கண்திருஷ்டி ஏற்படும். அவர்கள் கூட தங்கள் கைகளில் ஒரு வில்வ இலையை வைத்துக்கொள்ளலாம். தினம்தோறும் வேலைக்கு சென்று வந்த பிறகு, வீட்டு வாசலில் தங்களுடைய தலையை மூன்று முறை சுற்றி, இந்த இலையைக் கிழுத்து வாசலில் போட்டு விடுவதும் நல்ல பலனைத் தரும். கண் திருஷ்டியால் உங்களுடைய வேலைக்கும் எந்தவித பிரச்சினையும் வராது.

    இயற்கையுடன் இணைந்த இறைவன், ஒரு குகையில் ‘பாதாள புவனேஷ்வர்’ என்ற நாமம் தாங்கி தன்னை நாடி வரும் பக்தர் களுக்கு நலமும், வளமும் வழங்கி வருகிறார்.
    உத்ரகாண்ட் மாநிலத்தில் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ளது, குமா ஊன் என்ற பகுதி. நெடிந்துயர்ந்த மலை, சுற்றிலும் பாய்ந்தோடிச் செல்லும் நதி, அடர்ந்த மரங்கள் நிறைந்த இடம் என இயற்கை எழில் சூழ்ந்த சோலையில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. பாதாள புவனேஷ்வர் வீற்றிருந்து அருள்புரியும் இடம், சுண்ணாம்பு குகை ஆகும். இந்தக் குகை 100 அடி ஆழமும், 160 அடி நீளமும் கொண்டது.

    இந்த ஆலயத்தில் உள்ள புவனேஷ்வரரை மனமுருக வேண்டிக்கொண்டால், நீடித்த ஆயுள், குறையாத செல்வம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்தக் குகை கோவில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் பாதுகாக்கப்படுகிறது. இந்த ஆலயம் ஒவ்வொருவருக்கும், ஏதோ தேவலோகத்திற்கே வந்து விட்டது போன்ற உணர்வை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

    பாதாள புவனேஷ்வர் கோவிலில், சனிப் பிரதோஷம் மிகவும் விசேஷம் ஆகும். அன்றைய தினம் நந்தி வழிபாட்டில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தால், மரணமடைந்த மூதாதையர்களுக்கு சிவபெருமான் சாந்தி அளிப்பதாக கூறப்படுகிறது. அப்படி அவர்களுக்கு சாந்தி கிடைத்தால், அவர்கள் மகிழ்ச்சியில் தங்களின் சந்ததியினரை ஆசீர்வதிக்கின்றனர் என்பது ஐதீகம்.

    பாதாள புவனேஷ்வர் கோவில், டெல்லியில் இருந்து 506 கிலோமீட்டர் தூரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 1350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பாதாள புவனேஷ்வருக்கு அருகிலுள்ள ரெயில் நிலையம் 154 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனக்பூர் ஆகும். பாதாள புவனேஷ்வர் கோவில், பித்தோராகர் மாவட்டம் கங்கோலிஹாட்டில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

    பாதாள புவனேஷ்வருக்கு அருகிலுள்ள விமான நிலையம், சுமார் 226 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பந்த்நகர் விமான நிலையம் ஆகும்.

    பரிகாரங்கள் செய்வதால் பிரச்சினைகள் எப்படி தீரும் என்பதை, சிறிது கூட சிந்தித்து பார்ப்பது இல்லை. மனிதர்களுக்கு நேரும் பிரச்சினைகளை பரிகாரம் என்ற ரப்பரால் அழிக்க முடியாது.
    இப்போதெல்லாம் நிறைய வாசகர்கள் பொது விழாக்களின் போது என்னை சந்திக்கிறார்கள். அப்படி அவர்கள் என்னை சந்திக்கும் பொழுது கதைகளை தவிர்த்து நிறைய கேள்விகளை கேட்கிறார்கள். அந்த கேள்விகளில் ஒரு கேள்வி நிச்சயம் இதுவாகத்தான் இருக்கிறது. அது என்ன கேள்வி என்றால் ஜாதகம், கைரேகை, ஜோதிடம், பரிகாரம் போன்றவற்றை நீங்கள் நம்புகிறீர்களா?

    நான் அவர்களுக்கு சொல்லும் பதில் இதுதான். ஜாதகம், கைரேகை இதெல்லாம் ஒருவகையான கோள்கள் சம்பந்தப்பட்ட மேத்தமேடிக்ஸ். பரிகாரங்கள் எல்லாம் இப்போது வந்தது.

    என்னை பொறுத்த வரைக்கும் ஜாதகம், கைரேகை இந்த இரண்டும் ஒரு காலத்தில், அதாவது சித்தர்கள் இருந்த காலத்தில் மிகத்திறமையான ஜோதிடர்கள் வாழ்ந்த காலத்தில் உண்மையாக இருந்திருக்க வாய்ப்பு அதிகம். ஏனென்றால் அவர்கள் அவைகளைப் பற்றி நன்கு அறிந்து வைத்து இருந்தனர். இன்றைக்கு இருக்கும் ஜோதிடர்கள் துல்லியமாக பலன் சொல்ல வேண்டும் என்றால், அவர்கள் அந்த ஜோதிட கணிதத்தை முழுமையான அளவில் கற்று இருக்க வேண்டும். இப்போது அப்படிப்பட்ட ஜோதிடர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது.

    ஜோதிடம், கைரேகை, வாஸ்து, எண் பலன்கள் என்கிற இந்த வார்த்தைகள் இப்போது வியாபார பொருளாக மாறி நிறைய வருடங்கள் ஆகிவிட்டது. மாதாந்திர டூர் போட்டுக்கொண்டு, லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி, ஜோதிடம் சொல்பவர்கள் எண்ணிக்கை இப்போது அதிகமாகி விட்டது. மக்களும் ‘எதை தின்றால் பித்தம் தீரும்’ என்றெண்ணி தங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளில் இருந்து எப்படியாவது விடுபட வேண்டும் என்று அப்படிப்பட்ட நபர்களை தேடி போகிறார்கள். அவர்களும் சில பரிகாரங்களை செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லி வாய்ஜாலம் பேசி பணத்தை கறந்து விடுகிறார்கள்.

    பரிகாரங்கள் செய்வதால் பிரச்சினைகள் எப்படி தீரும் என்பதை, அவர்கள் சிறிது கூட சிந்தித்து பார்ப்பது இல்லை. மனிதன் தவறு செய்தால் அதற்கான தண்டனை உண்டு. கடவுள் தண்டித்து விடுகிறார். (கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அதை இயற்கை என்று அழைத்து கொண்டாலும் தப்பில்லை) மனிதர்களுக்கு நேரும் பிரச்சினைகளை பரிகாரம் என்ற ரப்பரால் அழிக்க முடியாது.

    ஒரு குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு, குறிப்பிட்ட நவரத்தின கற்களை போட்டால் பிரச்சினைகள் காணாமல் போய்விடும், வீட்டில் செல்வம் கொழிக்கும் என்று ‘ஜெம்மாலிஸ்ட்’ என்று தன்னை சொல்லி கொள்பவர்கள் அடித்து கூறுகிறார்கள். எல்லா நவரத்தினங்களும் அழகானவை. அதற்கென்று தனிப்பட்ட முறையில் எந்தவிதமான சக்தியும் கிடையாது. உடம்பில் அணிந்து கொள்ளலாம். பார்ப்பதற்கு அழகாகவும், அந்தஸ்தாகவும் இருக்கும் அவ்வளவுதான். அது ஒரு அணிகலன் எனக்கு தெரிந்தவரை எத்தனையோ பேர், இந்த ஜெம்மாலஜி ஜோதிட விஷயத்தில் ஏமாந்து போயிருக்கிறார்கள். ஆனால் அதை வெளியே யாரும் சொல்லுவது இல்லை.

    இதய நோயாளிகள் எனர்ஜிக் ஸ்டிக்கை கையில் வைத்துக் கொண்டால், இதயத்தில் 90 சதவீதம் அடைப்பு இருந்தாலும் பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டியதே இல்லையாம். இதெல்லாம் நம்புகிற மாதிரியாகவா இருக்கிறது?. மக்களுக்கு இந்த விஷயம் எல்லாம் தெரியாதா? என்று நீங்கள் கேட்கலாம்.

    தெரியும்! இருந்தாலும் அவர்களுக்கு இருக்கும் மனநிலையில் எது நல்லது? எது கெட்டது? என்று பகுத்து பார்க்கும் அளவுக்கு பொறுமை இல்லாமல் போவதால்தான் ஏமாந்து போய் விடுகிறார்கள். லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்கிறார்கள். நல்ல நாள் பார்த்து, நல்ல நேரம் பார்த்து, வைதீக முறைப்படி சகலவிதமான மந்திரங்கள் ஓதப்பட்டு செய்யப்படும் திருமணங்கள் கூட, ஏன் விவாகரத்தில் போய் முடிய வேண்டும்? அதே நேரத்தில் ஒரு ஆணும், பெண்ணும் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி ஊரைவிட்டு ஓடிப்போய் சாஸ்திரம், வைதீகம் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் திருமணம் செய்து கொள்பவர்கள் ஒற்றுமையோடும், சந்தோஷத்தோடும் நீண்ட ஆயுளுடன் வாழ்கிறார்கள். இந்த முரண்பாட்டுக்கு என்ன காரணம்? அவர்கள் நடந்து கொள்ளும் விதம்தான்.

    நம்முடைய எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் நாம்தான். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்று சொல்வார்கள். அதற்கேற்ப நம்முடைய நல்ல செயல்களுக்கும், கெட்ட செயல்களுக்கும் நாம் நடந்துகொள்ளும் முறைதான் காரணம். நம்மை மீறிய ஒரு சக்தி இருப்பதை நாம் ஒப்புக்கொண்டே தீரவேண்டும். அந்த சக்தியை நீங்கள் கடவுள் என்றும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இயற்கை என்றும் அழைத்து கொண்டாலும் தப்பில்லை. அந்த சக்திக்கு நாம் அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். சிலருக்கு மனிதனை படைத்தது கடவுள் தானா? என்பதில் சந்தேகம்.

    ஒரு வீட்டை வடிவமைத்து கட்டியது ஒரு பொறியாளர் என்று சொன்னால், ஒப்புக் கொள்பவர்கள். மனிதனை படைத்தது இறைவன்தான் என்பதை ஒப்புக்கொள்ள மறுத்து விடுகிறார்கள். கடவுள் மனிதனை பார்த்துப் பார்த்து படைத்திருக்கிறான்.

    அதற்கு ஒரு உதாரணம். மூன்று வேளையும் எதை உள்ளே போட்டாலும் எரிக்கும் ஒரு சாண் வயிறு, பார்க்க இரண்டு கண்கள், கேட்க இரு காதுகள், உணவு உண்ண வாய் பற்கள், நாக்கு பேச குரல் நாண்கள். எல்லா உறுப்புகளையும் அடக்கிவாசிக்க மூளை என்கிற ஒரு சுப்ரீம் கோர்ட்டு.

    இதைக் காட்டிலும் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் உரலில் அரிசி போட்டு மாவாக மாற தண்ணீர் விட்டு ஆட்டுவார்கள்.ஆனால் நாம் சாப்பிடும்போது நமது உணவை வாயில் அரைப்பதற்கு உமிழ்நீர் எங்கிருந்து வருகிறது? அந்த உமிழ்நீரை சுரக்க வைப்பது யார்? இறைவன் படைப்பில் மனிதன் மட்டும் அதிசயம் கிடையாது. எல்லாமே அதிசயமானதுதான், பாதுகாப்பானதுதான். புளியம்பழம் பிசுபிசுப்பாக உள்ள ஒரு பொருள். அது மரத்திலிருந்து கீழே விழுந்தால் அந்த பிசுபிசுப்பு மண்ணில் ஒட்டிக்கொண்டு, யாருக்குமே உபயோகப்படாமல் போய் விடுமே என்பதற்காக, அதற்கு ஒரு உறையை கடவுள் போட்டுள்ளார். அதேபோல் தென்னை மரம் உயரமாக வளரும் ஒரு மரம். அவ்வளவு உயரத்தில் இருந்து தேங்காய் விழுந்தால் அது உடைந்து விடும். தேங்காய் அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தாலும், உடையாமல் இருப்பதற்காக தேங்காயை சுற்றிலும் ‘ஷாக் அப்சர்வர்’ போல் கெட்டியான நார் உள்ளது. இப்படி நாள் முழுவதும் இறைவன் படைத்த பொருள்களையும், அந்த பொருள்களுக்கு அவன் செய்துவைத்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம்.

    வெறுமனே கோவிலுக்குப் போய், நெற்றியில் விபூதி குங்குமம் வைத்துக்கொண்டு கடவுளை கும்பிடுவதால் மட்டுமே நமக்கு நிம்மதி கிடைத்து விடாது. நம்முடைய எண்ணங்களும், செயல்களும் தூய்மையாக இருக்க வேண்டும்.

    நாம் பேசும் வார்த்தைகள் ஒருவரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமே தவிர புண்படுத்தக் கூடாது. பெற்றவர்களையும், பெரியோர்களையும் மதிக்க வேண்டும். செய்யும் தொழிலை தெய்வமாக நினைக்க வேண்டும். நம் நிலை உயரும்போது பணிவு கொள்ள வேண்டும். எல்லோரிடமும் திறமை இருக்கிறது என்று எண்ண வேண்டும். பிறரை பார்த்து பொறாமைப் படக்கூடாது. இதுபோன்ற எண்ணங்களை வளர்த்துக் கொண்டால் நாம் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்கலாம்.

    ராஜேஷ்குமார்
    கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பெரிந்தல்மன்னா என்ற இடத்தில் அமைந்துள்ள பகவதியம்மன் கோவிலில் இருக்கும் கணபதி சன்னிதியில், திருமணத் தடை உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் மாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்கின்றனர்.
    கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், அங்காடிபுரம் அருகில் உள்ளது, பெரிந்தல்மன்னா என்ற இடம். இங்கு அமைந்துள்ள பகவதியம்மன் கோவிலில் இருக்கும் கணபதி சன்னிதியில், திருமணத் தடை உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் மாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்கின்றனர்.

    இக்கோவிலில் உள்ள விநாயகர் சன்னிதியில் மலையாள நாட்காட்டியின்படி துலாம் (ஐப்பசி) மாதம் முதல் வெள்ளிக் கிழமை நாளில், திருமணமாகாத இளைஞர்கள், இளம்பெண்கள் மாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. முன்பு ஆண்டுக்கொரு முறை நடைபெற்று வந்த இந்த மாங்கல்ய பூஜையானது, பூஜை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றதால், தற்போது ஒவ்வொரு வாரமும், செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்று வாரத்திற்கு மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

    கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், அங்காடிபுரம் என்ற இடத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரிந்தல்மன்னாவில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. திருச்சூரில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவிலும், குருவாயூரில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்காட்டில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும், காடம்புழாவில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் இருக்கிறது. மேற்கண்ட ஊர்களில் இருந்து அங்காடிபுரம் சென்று, பின்னர் அங்கிருந்து கோவிலுக்குச் செல்லலாம். அங்காடிபுரம் செல்லவும், அங்கிருந்து பெரிந்தல்மன்னாவிற்குச் செல்லவும் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

    வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லையே என்று வருந்துபவர்கள், நம் முன்னோர்கள் கூறியுள்ள பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயமாக கடன் தொல்லைகள் தீரும்.
    ‘கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்ற பழமொழியில் இருந்து, கடன் ஒருவருக்கு மீள முடியாத துயரத்தை கொடுக்கிறது என்பதை உணர முடியும்.

    பணம் படைத்தவர்கள், நடுத்தர வர்க்கம், எளிய மக்கள் என அனைவரது வாழ்விலும், அவரவர் தகுதிக்கு ஏற்ப கடன் பிரச்சினை இருக்கத்தான் செய்யும். ஒரு சிலருக்கு கடனை திருப்ப செலுத்தும் சூழ்நிலை ஏற்படும். சிலருக்கு கடனே வாழ்க்கையை முடித்து விடுகிறது. ஒருவரின் ஜனன ஜாதகம் எப்படி அமைகிறதோ, அதன்படி தான் கடன் வாழ்க்கை, கடன் படாத வாழ்க்கை அமைகிறது.

    கடன் ஏற்படக் காரணங்கள்

    லக்னத்திற்கு 6-ம் இடம் என்பது ருண, ரோக , சத்ரு ஸ்தானம் ஆகும். ‘ருணம்’ என்றால் கடன். ‘ரோகம்’ என்றால் நோய். ‘சத்ரு’ என்றால் எதிரி. 6-ம் அதிபதியோ, 6-ல் நின்ற கிரகமோ அல்லது 6-ம் அதிபதியின் நட்சத்திரங்களோ தான், ருண - ரோக - சத்ரு ஸ்தானத்தை இயக்குபவர்கள். இந்த 6-ம் பாவக காரகர்கள் சனி மற்றும் செவ்வாய்.

    ஒரு ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் இருந்து 3, 6, 8, 12 ஆகிய 4 பாவகங்களும், ‘துர் ஸ்தானங்கள் அல்லது ‘மறைவு ஸ்தானங்கள்’ எனப்படும் . ஒருவர் கர்ம வினைப்படி அனுபவிக்க வேண்டிய துன்பங்களை பரிபூரணமாக தருவது இந்த மறைவு ஸ்தானங்களே. இந்த மறைவு ஸ்தானங்கள் ஆட்சி, உச்சம் பெறாமல், கேந்திர, திரிகோணம் பெறாமல் வலுக்குன்றியிருப்பின், விபரீத ராஜ யோகம் எனப்படும் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். இவர்கள் அடுத்தவர் பொருளை அனுபவிக்கும் யோகம் பெற்றவர்களாக இருப்பர். மறைவு ஸ்தானங்கள் வலு பெற்றவர்களுக்கு நோயும் கடனும் தேடி வரும்.

    மனித வாழ்வையே தடம் புரட்டி போடும் வலிமை, கோட்சார கிரகங்களுக்கு உண்டு. தசா, புத்தியோடு தொடர்பு பெறாத கோட்சார கிரகத்தால் ஏற்படுத்தப்படும் தாக்கம் குறைவாக இருக்கும். அதேநேரம் தசா, புத்தியோடும் அதன் அதிபதிகளோடும் தொடர்பு பெறும் கோட்சார கிரகங்கள், சாமானியர்களை கூட உருத் தெரியாமல் செய்து விடும் வலிமை கொண்டது.

    ஜனன கால ஜாதகத்தில் குரு, சனி, ராகு - கேதுவுடன் உள்ள தொடர்பே கடன் ஏற்படும் காலத்தையும், நிவாரணம் ஏற்படும் காலத்தையும் உணர்த்தும். லக்னம், லக்னாதிபதி பலமாக இருந்தால் கடன் அடைபடும். லக்னம், லக்னாதிபதி வலிமை இழந்தவர்கள் படும் அவஸ்த்தை அளப் பரியது.

    கடன் என்றாலே கர்மா தான். காசு, காமம், சொத்து என்ற மூன்றின் மூலமே கர்மா உருவாகிறது. நமது முன்னோர்கள் கர்ம வினையை மூன்று வகையாக பிரிக்கிறார்கள். அதை மனிதன் தன் வாழ்நாளில் மூன்று வகையான கர்ம வினை களாக பெற்று அனுபவிக்கிறான். அவை:- சஞ்சித கர்மம், பிராப்த கர்மம், ஆகாமிய கர்மம்.

    சஞ்சித கர்மம்

    தாய், தந்தையிடம் இருந்தும், நமது முன்னோர் களிடம் இருந்தும் நமது ஆத்மா பல்வேறு பிறப்புகளில் செய்த பாவ புண்ணியங்களின் சேர்க்கை. இதனையே ‘சஞ்சித கர்மம்’ என்கிறார்கள். இது கரு உருவாகும் போதே உடன் உருவாவது.

    * 3 , 6 , 10 , 11 எனும் உப ஜெய ஸ்தானத்தோடு, 6-ம் இடம் சம்பந்தம் பெறும் போது உடன் பிறந்தவர்கள் , இளைய மனைவி , காதலர்கள், அதீத அன்பால் ஒருவர் பிரச்சினையை அடுத்தவர் சுமப்பது, தொழில், உத்தியோகத்தினால் கடன் உருவாகும்.

    * 5, 6-ம் பாவகம் சம்பந்தம் பெறும் போது, குழந்தைகளின் நலனுக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படும்.

    * 6, 7-ம் பாவகம் சம்பந்தம் பெறும் போது, நண்பர்கள், தொழில் கூட்டாளி, களத்திரத்தின் மூலமாக கடன் உண்டாகும்.

    * 6 , 9-ம் பாவக இணைவால் பூர்வீக சொத்தைக் காப்பாற்றவும், தந்தையாலும் கடன் வந்து சேரும்.

    ஆக சஞ்சித கர்மா என்பது சென்ற பிறவியில், முன்னோர்களால் உருவான கடனை இந்த பிறவியில் தீர்க்க எடுக்கும் முயற்சியால் வரும் கடனாகும்.

    பிராப்த கர்மா

    இந்த பிறவியில் தான் செய்யும் செயல்களின் பதிவே, ‘பிராப்த கர்மா’ எனப்படும். இந்த கர்மாவால் வரும் பலனையும், நாம் இந்த பிறவிலேயே அனுபவிக்க வேண்டும்.

    * 1, 2, 4, 6-ம் பாவக சம்பந்தம் நவநாகரிக உலகின், லெளகீக இன்பங்களான வீடு, வாகனம், ஆடம்பர பொருட்களை அனுபவிக்க ஜாதகரால் இந்த பிறவியில் உருவாக்கப்படும் சுய கடன்.

    ஆகாமிய கர்மா

    மேற்கூறிய இரண்டு கர்மாக்களை கழிக்க செய்யும் செயல்கள் மூலம், இந்தப் பிறவியில் சேர்க்கும் புதிய வினைக்கு ‘ஆகாமிய கர்மா’ என்று பெயர்.

    * புதன், சனி, ராகு-கேது போன்ற கிரகங்களின் தசை நடக்கும் போது, சுய தேவைக்காக, பணம், பொருளால் ஏமாற்றப்படுதல், பரிவு மிகுதியால் ஜாமீன் போட்டு கடனையும் சத்ருவையும் உருவாக்கி, வட்டிக்கு வட்டி கட்டி, சொல்ல முடியாத துயரம் ஏற்படும்.

    * 6, 8,12-ம் பாவக இணைவால் போலீஸ் நிலையம் செல்லுதல், நீதிமன்ற வழக்கு, கட்ட பஞ்சாயத்துக்களால் நஷ்டம், அவமானம், தற்கொலை எண்ணம், சிறை தண்டனை உருவாகும். இவர்களில் பெரும்பாலானோர், பங்குச்சந்தை, சீட்டு மோசடி, குதிரை பந்தயம் போன்றவற்றால் பணத்தை தொலைத்து கடனாளியானவர்களாக இருப்பார்கள்.

    பரிகாரம்

    மனித வாழ்வில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் ஜோதிட சாஸ்திரத்தில் பரிகாரங்கள் உண்டு. கடன் தொல்லை என்பது ஒரு மனிதருக்கு வரக்கூடாத பிரச்சினைதான். வந்த பிறகு வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லையே என்று வருந்துபவர்கள், நம் முன்னோர்கள் கூறியுள்ள பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயமாக கடன் தொல்லைகள் தீரும்.

    வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் தவிப்பவர்கள், மைத்ர முகூர்த்த நேரத்தில் கடன் தொகையில் ஒரு சிறு பகுதியை திருப்பி கொடுத்தால் விரைவில் கடன் முழுவதும் திருப்பிக் கொடுக்கும் வகையில் வாய்ப்பு வசதிகள் உருவாகும். அஸ்வினி நட்சத்திரமும் மேஷ லக்னமும், அனுஷ நட்சத்திரமும் விருச்சிக லக்னமும் கூடிய காலத்திற்கு ‘மைத்ர முகூர்த்தம்’ என்று பெயர். இந்த முகூர்த்தத்தில் கடனின் ஒரு சிறு தொகையை கொடுத்தால் கொடுக்க வேண்டிய கடன் தொகை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் விரைவில் தீர்ந்துவிடும். அத்துடன் செவ்வாயின் நட்சத்திரமும் சனிக்கிழமையும் இணைந்த நாளில் மேஷ, விருச்சிக லக்னத்திலும் கடனை தீர்க்கலாம்.

    செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாளில் பிரதோஷ நேரத்தில் கடனைத் திருப்பிக் கொடுக்கலாம். சூரிய, சந்திர கிரகணம் ஏற்பட்டு விலகும் சமயம் கடனை திருப்பித் தரலாம். செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித்தரலாம். சென்ற பிறவியின் தவறுகளால் உருவான நோய் மற்றும் கடனுக்கு ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு தொடர்ந்து செய்து வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
    பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் அம்மனாக நத்தம் மாரியம்மன் திகழ்வதால் ஆண்டுதோறும் நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் நத்தம் மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மாசி பெருந்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

    திருவிழா காலத்தில், பக்தர்கள் காப்பு கட்டுதல், 15 நாட்கள் விரதமிருத்தல், அக்னிசட்டி எடுத்தல், கரும்பு தொட்டில் கட்டுதல், அங்கப்பிரதட்சணம் செய்தல், மாவிளக்கு, பொங்கல் வைத்தல் மற்றும் கழுமரம் ஏறுதல், பூக்குழி இறங்குதல், பால்குடம் எடுத்தல் என்று பல்வேறு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகிறார்கள்.

    பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் அம்மனாக மாரியம்மன் திகழ்வதால் ஆண்டுதோறும் நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    மாசிமக நாளில் திருக்கோஷ்டியூர் கோவில் மகாமக கிணற்றினை தொழுது, ஆலயத் தெப்பக்குளத்தை வலம்வந்து பெருமாளைப் பணிந்தால் பாவங்கள், தோஷங்கள் அகன்று விடும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.
    நவக்கோள்களில் ஒருவரான புதனின் புதல்வன் புருரூபன், அரச சக்கரவர்த்தியாக திகழ்ந்தவன். ஒருமுறை புருரூப சக்கரவர்த்தி திருக்கோஷ்டியூர் வந்தபோது, மாசி மகாமகம் வந்தது. மகா மகத்தன்று மகாவிஷ்ணுவை கங்கையில் நீராடி தரிசிக்க விரும்பினார் புருரூப சக்கரவர்த்தி. அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் திருக்கோஷ்டியூர் தலத்தின் வடகிழக்கு திசையில் உள்ள கிணற்றில் இருந்து கங்கை நதி பொங்கிவர, அதன் மத்தியில் மகாவிஷ்ணு காட்சி தந்தார்.

    தற்போதும் ஆலய பிரகாரத்தில் அமைந்துள்ள இந்தக் கிணறு ‘மகாமக கிணறு’ என்று அழைக்கப்படுகிறது. இன்றும் மாசி மக நட்சத்திர நாளில் இந்த கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம். எனவே மாசிமக நாளில் இத்தல மகாமக கிணற்றினை தொழுது, ஆலயத் தெப்பக்குளத்தை வலம்வந்து பெருமாளைப் பணிந்தால் பாவங்கள், தோஷங்கள் அகன்று விடும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

    மதுரையில் இருந்து 61 கிலோமீட்டர் தூரத்திலும், திருச்சியில் இருந்து புதுக்கோட்டை சென்று அங்கிருந்து 49 கிலோமீட்டர் தூரத்திலும் திருக்கோஷ்டியூர் அமைந்துள்ளது.
    புதன் கிழமை வரும் பிரதோஷத்தில் கலந்துகொண்டால், புதனால் வரும் கெடுபலன் நீங்கும். கல்வி சிறக்கும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
    மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, இருப்பிடம். இந்த அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய மனிதனுக்கு கல்வி மிகவும் அவசியம். கல்வி மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. அது மனிதனுக்கு அறிவு, திறமை, பண்பாடு, நன்நடத்தை போன்றவற்றை தருகிறது. அறியாமையை நீக்கி சிந்தனை திறனை அதிகரித்து, முழு ஆற்றல் உள்ளவனாக மாற்றுகிறது.

    மனித வாழ்க்கையை முறைப்படுத்தும் சக்திவாய்ந்த கருவியான கல்வி, அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களால் மக்களை எளிதில் சென்று அடையும் விதத்தில் இருந்தால் கூட, ஒரு சிலருக்கு வாய்ப்பு இருந்தும் கற்க முடியாத நிலையையும், ஒரு சிலருக்கு கற்ற கல்வியால் பயன் இல்லாத நிலையையும் தந்து விடுகிறது. அதற்கான காரணங்களை காணலாம்.

    ஜாதகத்தில் லக்னம், கேந்திரம் மற்றும் திரிகோணம் வலிமைபெற்றிருந்தால், அந்த பிள்ளைகள் படித்து பட்டங்களும், பதக்கங்களுமாக குவிப்பார்கள்.

    கல்வி கிரகமான புதன், ஆட்சி, உச்சம், நட்பு பலம் பெற்று, லக்ன, கேந்திர, திரிகோணங்களுடன் இணைவு பெற்றிருந்தாலோ, அறிவுக்கு அதிபதியான குருவும், மனோகாரகன் சந்திரனும் வலுப்பெற்றிருந்தாலோ சிறு வயது முதல் படித்து முடிக்கும் வரை அந்த நபர் சாதனை மாணவராகவே இருப்பார்.

    சில குழந்தைகள் இளம் வயதில் சரியாக படிக்காமல், மத்திம வயதில் சிறப்பாக படித்து நல்ல மதிப்பெண் எடுப்பார்கள்.

    இதற்கு காரணம் மத்திம வயதில் வரும் தசாபுத்தியில் 4-ம் பாவகத்தை இயக்கும் கிரகம் சுப வலிமை பெற்றதாக அமைந்துவிடுவதுதான்.

    சிலர் இளம் வயதில் நன்றாக படித்து, மத்திம வயதில் கவனக் குறைவால் படிப்பில் ஆர்வம் இழப்பார்கள். இவர்களுக்கு 2-ம் பாவகம் சுப வலிமையாகவும், 4-ம் பாவகம் வலிமை குன்றியும் இருக்கும். எது எப்படி இருந்தாலும் ஒருவரின் கல்வியை தீர்மானம் செய்வதில் புதன் மற்றும் 4, 5 பாவகத்தின் பங்கு மிக முக்கியமானது.

    ஜனன ஜாதகத்தில் புதன் - ராகு அல்லது புதன் - சனி இணைந்திருந்தாலோ, அல்லது ஏதாவது ஒரு வகையில் சம்பந்தம் பெற்றிருந்தாலோ, சிறு வயதிலேயே ராகு தசை, சுக்ர தசை நடந்தாலோ, அவர்களுக்கு படிப்பில் மந்த நிலை உருவாகும். 4, 5-ம் பாவக அதிபதி அல்லது 4, 5-ம் பாவகத்தில் நீச்ச, அஸ்தமன, வக்ர கிரகங்கள் இருப்பது இளம் பருவத்திலேயே படிப்பில் தடையை ஏற்படுத்தும்.

    கல்விக்கான காரக கிரகம் புதன், தன்னுடைய பயண பாதையில் சுப கிரகங்களை தொடும்போது சிறப்பான கல்வியை தரும். அசுப கிரகங்களான ராகு, கேது, சனி, செவ்வாய் இவற்றை தொடும்போது கல்வியில் தடையை கொடுக்கும். அதே நேரம் அசுப கிரகங்களை புதன் தொடும் போது, அந்த காரகத்துவம் சம்பந்தப்பட்ட படிப்பை தேர்ந்தெடுத்து படித்தால் தடை உருவாகாது. உதாரணமாக புதன், கேதுவை தொட்டால் கேதுவின் காரகத்துவம் தொடர்பான ஜோதிடம், ஆன்மிகம், சட்டம் தொடர்பான படிப்பை எடுத்துப் படிக்கும்போது அந்த படிப்பில் தடை ஏற்படாது. ஜாதகத்தின் குறையை தனக்கு சாதகமாக மாற்ற முயலும்போது, ஜாதகர் அடையும் வெற்றி அளப்பரியது.

    ஒவ்வொரு பெற்றோருக்கும் தன் பிள்ளை என்ன படிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அவர்கள் தங்களின் கனவுகளை பிள்ளைகளின் மீதும் திணிக்க முயல்கிறார்கள். ‘எந்த படிப்பை தேர்வு செய்து படித்தால், பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்?’ என்ற மனக் குழப்பமும் நிறைய பெற்றோரிடம் இருக்கிறது. சில பெற்றோர்கள்தான், பிள்ளைகளின் விருப்பத்திற்கு ஏற்ப படிப்பை தேர்வு செய்ய உதவுகிறார்கள். பலரும் தாங்கள் படிக்க நினைத்து நிறைவேறாத ஆசையை, பிள்ளைகளின் மீது புகுத்தி படிக்க வைக்க நினைக்கிறார்கள்.

    பிள்ளைகளின் விருப்பமோ, பெற்றோரின் விருப்பமோ எதுவாக இருப்பினும், கல்லூரி படிப்பை தேர்ந்தெடுக்கும் போது, அவர்களின் ஜனன ஜாதகத்தில், ஜீவனத்தைக் குறிப்பிடும் 10-ம் பாவகத்தை முதன்மை படுத்தி கல்வியை தேர்வு செய்வது சிறப்பு.

    ஒருவர், தான் எவ்வளவு கல்வி கற்றாலும், அதனை செயல் வடிவில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் கற்ற கல்வியின் பயன் அவருக்கு கிடைக்கும். இல்லாவிட்டால் கற்ற கல்வியால் பயன் இல்லாமல் போய்விடும்.

    புதன், கேந்திர திரிகோணத்துடன் சம்பந்தம் பெறும் ஜாதகர் மட்டுமே, தாங்கள் கற்ற கல்வியை அதிகம் பயன்படுத்துபவர்கள்.

    பரிகாரங்கள்

    புதன் கிழமை வரும் பிரதோஷத்தில் கலந்துகொண்டால், புதனால் வரும் கெடுபலன் நீங்கும். கல்வி சிறக்கும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

    ஜாதகத்தில் புதன் வலிமை குன்றியவர்கள், புதன் கிழமை தோறும் பச்சைப் பயரை உணவில் சேர்ப்பதுடன், ஹயக்கிரீவருக்கு நெய் தீபம் ஏற்றி துளசி இலையால் அர்ச்சனை செய்தால் நன்மைகள் கிடைக்கும்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
    திருமணம் செவ்வாய் தோஷத்தால் தடைபடு மாயின் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை (முருகன்) வணங்கி வர விரைவில் திருமணம் நிச்சயமாகும்.
    * துளசி கல்யாணம் செய்தால் விரைவில் திருமணமாகும்.

    * ஓர் ஏழைப் பெண்ணுக்கு எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, சக்திக்கு ஏற்ப புத்தாடை அளித்து உணவு அளித்தால் திருமணம் விரைவில் நடைபெறும்.

    * சென்னை - திருவேற்காட்டில் தேவி கருமாரி அம்மன் கோவில் உள்ளது. பல்வேறு புராணச் சிறப்புகள் மிக்கது. இந்த ஆலயம் திருவேற்காடு கருமாரியம்மனை தரிசிக்கும் கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கூடி வருகிறது.

    * வேப்ப மரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாரை கடலை எண்ணெய் நீங்கலாக பிற பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி மஞ்சள் பொடி அபிஷேகமும், பால் அபிஷேகமும் செய்து வழிபட்டு வந்தால் மனதிற்கேற்ற வாழ்க்கை துணை அமையும்.

    * காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகமூர்த்திகளை வெள்ளிக்கிழமை மற்றும் பஞ்சமி நாட்களில் அடிப்பிரதட்சணம் செய்யுங்கள். ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்யச் சரடு தானம் செய்யுங்கள். சகல திருமண தோஷமும் தீரும்.

    * தேவதோஷம், பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம், திருஷ்டி தோஷம், பிரேத சாபம், அபிஷார தோஷம் என்று ஆறு வகையான தோஷங்களால் திருமணம் தடைப்படுகிறது. கல்யாண சுந்தரேஸ்வரரை வணங்கி விரதம் இருந்தால் இந்த 6 வகை தோஷங்களும் நீங்கி உடனே திருமணம் ஆகிவிடும்.

    * திருமணம் செவ்வாய் தோஷத்தால் தடைபடு மாயின் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை (முருகன்) வணங்கி வர விரைவில் திருமணம் நிச்சயமாகும்.

    * வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சித்து வழிபட திருமணம் கை கூடும்.

    * புன்னை மரத்தை சுற்றி வணங்கி வந்தால் திருமணம் விரைவில் நடைபெறும்.

    * ஞாயிறு தோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை) தீபம் ஏற்றி துர்க்கையை வழிபட வேண்டும். துர்க்கையை மனம் உருக வேண்டினால் நிச்சயம் பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடி வரும்.
    நத்தம் மாரியம்மனுக்கு எதனை பயன்படுத்தி அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
    நத்தம் மாரியம்மனுக்கு எதனை பயன்படுத்தி அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

    * மஞ்சள்பொடி - ராஜா போன்ற நிலை

    * நெய்-மோட்சம் கிடைக்கும்

    * பு‌‌ஷ்பகவ்யம் - புனித தத்துவங்களின் அடிப்படையில் வாழ்க்கை அமையும்

    * தண்ணீர் - மன அமைதி தரும்

    * அரிசிமாவு - கடன் நீங்கும்

    * மாதுளைச்சாறு- லாபம் கிடைக்கும்

    * சந்தனம்- பக்தி, ஞானம் பெருகும்

    * வாசனைத் திரவியங்களும், எண்ணெய்காப்பும்- குடும்பத்தினரின் நலன் அதிகரிக்கும்

    * பால் - ஆயுள் விருத்தி

    * கரும்புச்சாறு - உடல்நலம், ஆயுள்பலம்

    * எலுமிச்சைச்சாறு - ஞானம்

    * பு‌‌ஷ்பங்கள் - செல்வம் குவியும்

    * பன்னீர் - திருப்தியான மனநிலை
    கர்ப்பிணி பெண்கள் அபிராமபுரம் ஸ்ரீ பிரம்ம புரீஸ்வர சுவாமி ஆலயத்திற்கு வந்து வேண்டிக்கொண்டால் அவர்களுக்கு சுகப் பிரசவம் ஆவதாக பக்தர்கள் நம்பிக்கையோடு தெரிவிக்கின்றனர்.
    கர்ப்பிணி பெண்களைக் காக்கும் இறைவியைக் காண வேண்டுமா? வாருங்கள்.. அபிராமபுரத்திற்கு. இந்த ஊரில் அமைந்திருக்கிறது, ஸ்ரீ பிரம்ம புரீஸ்வர சுவாமி ஆலயம். இத்தல இறைவனின் பெயா் ‘பிரம்மபுரீஸ்வரர்’ என்பதாகும். இறைவியின் திருநாமம் ‘அபிராமி அம்பிகை.

    சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆலயம் இது என்று கூறப்படுகிறது.

    கர்ப்பிணி பெண்கள் இந்த ஆலயத்திற்கு வந்து வேண்டிக்கொண்டால் அவர்களுக்கு சுகப் பிரசவம் ஆவதாக பக்தர்கள் நம்பிக்கையோடு தெரிவிக்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள், அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் - பந்தநல்லூர் பேருந்து வழித்தடத்தில் பந்தநல்லூருக்கு கிழக்கே 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அபிராமபுரம் என்ற இந்த தலம்.
    ×