என் மலர்
தோஷ பரிகாரங்கள்
வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் தவிப்பவர்கள், மைத்ர முகூர்த்த நேரத்தில் கடன் தொகையில் ஒரு சிறு பகுதியை திருப்பி கொடுத்தால் விரைவில் கடன் முழுவதும் திருப்பிக் கொடுக்கும் வகையில் வாய்ப்பு வசதிகள் உருவாகும் .
மனித வாழ்வில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் ஜோதிட சாஸ்திரத்தில் பரிகாரங்கள் உண்டு. கடன் தொல்லை என்பது ஒரு மனிதருக்கு வரக்கூடாத பிரச்சினைதான். வந்த பிறகு வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லையே என்று வருந்துபவர்கள், நம் முன்னோர்கள் கூறியுள்ள பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயமாக கடன் தொல்லைகள் தீரும்.
வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் தவிப்பவர்கள், மைத்ர முகூர்த்த நேரத்தில் கடன் தொகையில் ஒரு சிறு பகுதியை திருப்பி கொடுத்தால் விரைவில் கடன் முழுவதும் திருப்பிக் கொடுக்கும் வகையில் வாய்ப்பு வசதிகள் உருவாகும் . அஸ்வினி நட்சத்திரமும் மேஷ லக்னமும், அனுஷ நட்சத்திரமும் விருச்சிக லக்னமும் கூடிய காலத்திற்கு ‘மைத்ர முகூர்த்தம்’ என்று பெயர். இந்த முகூர்த்தத்தில் கடனின் ஒரு சிறு தொகையை கொடுத்தால் கொடுக்க வேண்டிய கடன் தொகை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் விரைவில் தீர்ந்துவிடும். அத்துடன் செவ்வாயின் நட்சத்திரமும் சனிக்கிழமையும் இணைந்த நாளில் மேஷ, விருச்சிக லக்னத்திலும் கடனை தீர்க்கலாம்.
செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாளில் பிரதோஷ நேரத்தில் கடனைத் திருப்பிக் கொடுக்கலாம். சூரிய, சந்திர கிரகணம் ஏற்பட்டு விலகும் சமயம் கடனை திருப்பித் தரலாம். செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித்தரலாம். சென்ற பிறவியின் தவறுகளால் உருவான நோய் மற்றும் கடனுக்கு ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு தொடர்ந்து செய்து வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்.
மைத்ர முகூர்த்தம்
11.4.2020 சனி இரவு 8.12 மணி முதல் 10.12 மணி வரை

கிருஷ்ணரின் இந்த தத்துவம் பல விஷயங்களில் நமக்கு பொருந்தும். நாமும் பல விஷயங்களுக்கு, எந்த எதிர்வினையும் ஆற்றாமல் இருந்தாலே, அந்த விஷயம் ஒன்றும் இல்லாமல் போய்விடும்.
மனித வாழ்க்கையில் தத்துவத்தை கிருஷ்ணர் உதிர்த்த மொழிதான், இன்று நம் கையில் ‘பகவத் கீதை’ என்ற நூலாக தவழ்ந்து கொண்டிருக்கிறது. கிருஷ்ணரின் ஒவ்வொரு நடவடிக்கையும் நமக்கு வாழ்வின் தத்துவத்தை உணர்த்துவதாகவே அமைந் திருக்கும். கிருஷ்ணரின் உபதேசம், நமக்கு பல சூழ்நிலைகளிலும் பாடம் சொல்லித் தருவதாக இருக்கும். அப்படி ஒரு கதையைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.
ஒரு முறை கிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், பாண்டவர்களின் ஒருவரான அர்ச்சுனன் ஆகிய மூவரும், ஒரு அடர்ந்த வனத்தின் வழியாக சென்று கொண்டிருந்தனர். நடு இரவாகி விட்ட காரணத்தால், ஓரிடத்தில் தங்கி விடிந்ததும் செல்லலாம் என்றும் மூவரும் நினைத்தனர்.
அடர்த்தி மிகுந்த இந்த வனத்தில் கொடிய மிருகங்கள் இருக்கும் என்பதால், மூவரும் ஒருசேர தூங்கக்கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராக காவல் காக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கிருஷ்ணரும், பலராமரும் தூங்கச் செல்ல, அர்ச்சுனன் காவலுக்கு இருந்தான். அப்போது அங்கு திடீரென ஒரு புகை மண்டலம் உண்டானது. அதிலிருந்து பார்ப்பவர்களை பயம் கொள்ளச் செய்யும் வகையிலான ஒரு உருவம் வெளிப்பட்டது. மரத்தடியில் இருவர் தூங்குவதையும், ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அந்த உருவம், அசந்து தூங்கிக்கொண்டிருந்த கிருஷ்ணர், பலராமர் அருகில் சென்றது. அதைக்கண்ட அர்ச்சுனன் கோபத்துடன் அந்த உருவத்தைத் தடுத்தான்.
அதற்கு அந்த உருவம், “நான் இந்த இருவரையும் கொல்லப்போகிறேன். அதற்கு நீ துணை நிற்க வேண்டும்” என்று கேட்டது. அதைக் கேட்டு மேலும் கோபம் கொண்ட அர்ச்சுனன், அந்த உருவத்தைத் தாக்கினான். அர்ச்சுனனின் கோபம் அதிகமாக அதிகமாக, அந்த உருவத்தின் பலமும், வடிவமும் பெருகிக்கொண்டே போனது. அதைக் கண்டு அர்ச்சுனன் நடுநடுங்கிப்போனான். இருப்பினும் அந்த உருவத்தோடு ஆக்ரோஷத்துடன் போரிட்டான். இப்போது அந்த உருவம் பூதாகரமாக அந்த இடம் முழுவதையும் ஆக்கிரமித்தாற்போல் வளர்ந் திருந்தது. அது அர்ச்சுனனை பலமாகி தாக்கி விட்டு மறைந்தது.
ஒரு ஜாம நேரம் முடிந்தது. அதனால் பலராமரை எழுப்பி விட்டு விட்டு, அர்ச்சுனன் தூங்கச் சென்றான். இப்போது பலராமர் காவலுக்கு இருந்தார். அப்போது மீண்டும் அந்த உருவம் அங்கு தோன்றியது. அர்ச்சுனனிடம் கூறியது போல, தூங்கிக்கொண்டிருக்கும் இருவரையும் கொல்லப்போவதாகவும், அதற்கு பல ராமர் துணை நிற்க வேண்டும் என்று கூறியது.
பலராமரும் அந்த உருவத்துடன் சண்டையிட்டார். அந்த உருவம் அவருக்கு அடிபணிவதாய் இல்லை. பலராமரின் கோபம் அதிகமாக, அதிகமாக அந்த உருவம் பெரியதாகிக்கொண்டே சென்றது. பின் அந்த உருவம் பலராமரையும் பலமாகத் தாக்கி விட்டு, அங்கிருந்து மறைந்தது.
இப்போது அடுத்த ஜாமம் தொடங்கிவிட்டது. பலராமர், கிருஷ்ணரை காவல் இருக்கும்படி எழுப்பிவிட்டு, தான் படுத்துக் கொண்டார். கிருஷ்ணர் காவல் இருக்கும்போதும், அந்த உருவம் வெளிப்பட்டது. அதைப் பார்த்த கிருஷ்ணர் கடகடவென சிரித்தார்.
உடனே கோபம் கொண்ட அந்த உருவம், “ஏன் சிரிக் கிறாய்?” என்றது. தன்னுடைய தூக்கிய பற்களையும், வெளியே பிதுங்கி நிற்கும் முட்டை கண்களையும் பார்த்துதான் கிருஷ்ணர் சிரிப்பதாக அது எண்ணியது. “நீ என் உருவத்தைப் பார்த்து கேலி செய்கிறாயா?” என்று கேட்டபடியே, கிருஷ்ணருடன் போரிட்டது.
கிருஷ்ணரோ புன்னகை மாறாமல், அந்த உருவத்தோடு சண்டையிட்டார். கிருஷ்ணர் பலமாக சிரிக்க, சிரிக்க, அந்த உருவத்தின் பலம் குறைந்ததோடு, அந்த உருவமும் சிறியதாகிக்கொண்டே போனது. இறுதியில் அந்த உருவம் சிறு புழுவாக மாறி, தரையில் கிடந்து நெளிந்தது. கிருஷ்ணர் அந்தப் புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார்.
பொழுது விடிந்தது. பலராமரும், அர்ச்சுனனும் எழுந்தனர். இரவில் தங்களுக்கு நடந்த அனுபவங் களைப் பற்றி, இருவரும் கிருஷ்ணரிடம் கூறினர்.
அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்து வைத்திருந்த புழுவைக் காட்டி, “நீங்கள் இருவரும் தீவிரமாக சண்டை போட்ட உருவம் இதுதான்.
நீங்கள் இந்த உருவத்துடன் சண்டையிடும்போது, கடுமையாக கோபம் கொண்டீர்கள். உங்கள் கோபம் அதி கரிக்க, அதிகரிக்க அதன் பலமும், உருவமும் பெருகுகிறது. ஆனால் நான் அந்த உருவத்துடன் சிரித்துக்கொண்டே சண்டையிட்டேன். அதனால் அதன் உருவமும், பலமும் குன்றியது. இப்போது ஒரு புழுவாக காட்சியளிக்கிறது. நம்மோடு வீண் சண்டைக்கு வருபவனை, புன்னகையோடு கடந்து போய்விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான். கோபத்தைக் குறைப்பவனே ஞானி” என்றார்.

அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள், கடன், எதிரிகள் தொல்லை , முன் வினை, பித்ரு சாபம், கர்ம வினைகள் நீங்க பரிகாரங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

(1) தினசரி சுத்தமான பசு நெய்யினால் இஷ்ட தெய்வம் அல்லது குல தெய்வத்திற்க்கு விளக்கு.
(2) தினசரி பசுவிற்கு சிறிது உணவு.
(3) தினசரி மதியம் 12 மணிக்கு மேல் காக்காய்க்கு சிறிது உணவு.
(4) தினசரி எதுனும் ஒருவருக்கு சிறிது உணவோ அல்லது
குழந்தைகளுக்கு இனிப்பு சிறிதேனும் வழங்குதல்.
(5) தினசரி சிறிது சர்க்கரை எறும்புகளுக்கு.
மேற்கண்டவை மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரங்களாக நமது முன்னொல்கள் வழங்கியவை ஆகும்

‘கோஷ்டியூர்’ எனும் ‘திருக்கோஷ்டியூர்’ தல ‘பிரார்த்தனை கண்ணன்’ எனும் சந்தான கிருஷ்ணரை வழிபட்டால், வெகுவிரைவில் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்.
இரண்யகசிபு என்ற அரக்கனை அழிப்பதற்காக சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மதேவர் ஆகிய மும்மூர்த்திகளும் கூடிப் பேசி, புதிய அவதாரம் ஒன்றை உருவாக்கினார்கள். அதுவே மகாவிஷ்ணுவின் ‘நரசிம்ம அவதாரம்.’
அந்த அவதாரத்தை உருவாக்கும் நோக்கில் மும்மூர்த்திகளும் அமர்ந்து பேசிய திருத்தலமே ‘கோஷ்டியூர்’ எனும் ‘திருக்கோஷ்டியூர்’ ஆகும். நின்ற, இருந்த, கிடந்த, நடந்த ஆகிய நான்கு கோலங்களையும் இங்கு காட்டியருளினார் மகாவிஷ்ணு. இந்த தலத்தின் மூலவர் ‘உரக மெல்லணையான்’ ஆவார். ‘உரகம்’ என்றால் ‘பாம்பு.’ ‘மெல்லணை’ என்றால் ‘மிருதுவான உடல் படுக்கை’ என்பதாகும். ஆதிசேஷன் மீது பெருமாள் பள்ளிகொண்டதால், அவருக்கு இந்தத் திருநாமம் வழங்கப்படுகிறது. இவர் புஜங்க சயனத்தில் கிழக்கு பார்த்த வண்ணம் ஸ்ரீதேவி - பூதேவியுடன் அருள்கிறார். மது, கைடபர், இந்திரன், காசி மகாராஜா, புருரூப சக்கரவர்த்தி, கதம்ப முனிவர், பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி, சந்தான கிருஷ்ணன் ஆகியோரும் காட்சி தருகிறார்கள்.
சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் வீற்றிருக்கிறார். இத்தல ‘பிரார்த்தனை கண்ணன்’ எனும் சந்தான கிருஷ்ணரை வழிபட்டால், வெகுவிரைவில் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். நாக தோஷத்தினால் திருமணம், குழந்தை பாக்கியம், வீடு கட்டும் மற்றும் வீடு வாங்கும் யோகம் தடைபட்டவர்களுக்கும் இத்தல தரிசனம் மிகச்சிறப்பானதாக கூறப்பட்டுள்ளது.
தற்போதும் ஆலய பிரகாரத்தில் அமைந்துள்ள இந்தக் கிணறு ‘மகாமக கிணறு’ என்று அழைக்கப்படுகிறது. இன்றும் மாசி மக நட்சத்திர நாளில் இந்த கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம். எனவே மாசிமக நாளில் இத்தல மகாமக கிணற்றினை தொழுது, ஆலயத் தெப்பக்குளத்தை வலம்வந்து பெருமாளைப் பணிந்தால் பாவங்கள், தோஷங்கள் அகன்று விடும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.
மதுரையில் இருந்து 61 கிலோமீட்டர் தூரத்திலும், திருச்சியில் இருந்து புதுக்கோட்டை சென்று அங்கிருந்து 49 கிலோமீட்டர் தூரத்திலும் திருக்கோஷ்டியூர் அமைந்துள்ளது.

கால-சர்ப்ப தோஷத்திற்கு மிகவும் நல்ல பலனும், பரிகாரமும் அளிக்கக்கூடிய சக்தி வாய்ந்த திருத்தலங்களில் நாகர்கோவில் நாகராஜா ஆலயம் தனித்துவம் கொண்டதாக திகழ்கிறது.
கால-சர்ப்ப தோஷத்தை மற்ற தோஷங்களைப் போலவே ஜாதகத்தின் லக்கினம், பூர்வ புண்ணியம் ஜெனன காலத்தின் மற்றய கிரக நிலைகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே, தீய பலன்களை விளைவிக்கும்.
ஆதலால், காள-சர்ப்ப தோஷம் உள்பட அனைத்து தோஷங்களையும், அவற்றின் தன்மை, அளவு, ஏற்படும் காலம் இவற்றைத் தக்க ஜோதிடரைக் கொண்டு ஆராய்ந்து, அறிந்து கொள்ளாமல் கலங்க வேண்டிய அவசியமில்லை. பாதிப்பின் கடுமையைத் தக்க பரிகாரத்தினால் குறைக்க முடியும். ஆயினும் அந்தப் பரிகாரத்தை - சாந்தியை - அதிகப்பொருட்செலவில்தான் செய்ய வேண்டும் என்பதில்லை.
சாதாரணமாக, சர்ப்ப தோஷம், நாகதோஷம் என ஜோதிடக்கலை குறிப்பிடுவதெல்லாம், ராகு அல்லது கேது ஆகிய இரு கிரகங்களில் ஒன்றினால் மட்டுமே ஏற்படுவதாகும். ஆனால் கால-சர்ப்ப தோஷம் என்பது ராகு, கேது ஆகிய இரு கிரகங்களினாலுமே ஏற்படும். இதற்கு மிகவும் நல்ல பலனும், பரிகாரமும் அளிக்கக்கூடிய சக்தி வாய்ந்த திருத்தலங்களில் நாகர்கோவில் நாகராஜா ஆலயம் தனித்துவம் கொண்டதாக திகழ்கிறது.

ராசிபுரத்தில் திருமணத் தடை நீக்கும் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் கொண்டுள்ளார். கணவனை விட்டுப் பிரியாமல், எப்போதும் சுமங்கலியாக இருக்கும் அம்பிகை என்று, இத்தல மாரியம்மனை இந்தப் பகுதி மக்கள் போற்றுகிறார்கள்.
ராசிபுரத்தில் திருமணத் தடை நீக்கும் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் கொண்டுள்ளார். முன்காலத்தில் இந்தப் பகுதியை ஆட்சி செய்த சிற்றரசன் ஒருவன், நோயால் அவதியுற்று படுத்த படுக்கையாக இருந்தான். மன்னனின் நோய் தீராததால் மிகவும் வருந்திய அவனது மனைவி, இத்தலத்தில் வீற்றிருக்கும் அம்மனை வழிபட வந்தாள்.
ஒரு கட்டத்தில் தாலிக்கொடியை இரு கைகளால் பிடித்துக் கொண்டு, கணவனை காப்பாற்றும்படி வேண்டிக்கொண்டிருந்தாள். உணவருந்தாமல் அம்மனை வேண்டிக்கொண்டு இருந்ததால், மயக்கம் வந்து அங்கேயே விழுந்துவிட்டாள். அந்த பக்தையின் மீது இரக்கம் கொண்ட மாரியம்மன், சிற்றரசனின் நோயை குணமாக்கி அவனை எழுந்து நடமாடச் செய்தாள்.
தன் மாங்கல்யத்தைக் காப்பாற்றிய அம்மனை நோக்கி, “எனது தாலி பாக்கியத்தை நிலைக்கச் செய்த சுமங்கலி மாரியம்மனே” என்று மன்னனின் மனைவி நன்றி கூறினாள். இதையடுத்து அந்தப் பெயரே இத்தல அம்மனுக்கு நிலைத்து விட்டது.
பொதுவாக மாரியம்மன் கோவில்களில், திருவிழாக் காலங்களில் கருவறைக்கு எதிரே வேம்பு கம்பம் ஒன்று நடப்படும். அந்த வேம்பு கம்பம், சிவபெருமானைக் குறிப்பதாக ஐதீகம். திருவிழா முடிந்ததும், வேம்பு கம்பத்தை நீர்நிலைகளில் விட்டுவிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமானை குறிக்கும் வேம்பு கம்பம், ஆண்டு முழுவதும் நடப்பட்டு இருக்கும்.
ஆகையால் கணவனை விட்டுப் பிரியாமல், எப்போதும் சுமங்கலியாக இருக்கும் அம்பிகை என்று, இத்தல மாரியம்மனை இந்தப் பகுதி மக்கள் போற்றுகிறார்கள். எனவே இத்திருத்தலத்திற்கு வரும் பெண்கள், தங்கள் கணவர் உடல்நலம் பெற வேண்டியும், குடும்பப் பிரச்சினைகளை தீர்க்கக் கோரியும் கோவிலில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்து வந்து, வேம்பு கம்பத்தில் ஊற்றி, மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து அம்மனை வழிபட்டு பயன்பெறுகின்றனர்.

நாகர்கோவில் நாகேஸ்வரர் ஆலயம் சென்று மூன்று இரவு தங்கி ஈசனை வணங்கினால் நாகதோஷத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
நாகர்கோவில் நாகேஸ்வரர் ஆலயம் சென்று மூன்று இரவு தங்கி ஈசனை வணங்கினால் நாகதோஷம் பரிகாரமாகும். வசதி உள்ளவர்கள் தங்கத்தால் குழந்தை பதுமை செய்து ஏழைக்கு அன்னம் அளித்து வேட்டி துண்டு தாம்பூலம் பழத்துடன் தங்க விக்ரகத்தைத் தானம் செய்தால் நாகதோஷம் விலகும்.
தங்கத்தில் செய்ய சக்தியில்லாத வர்கள் வெள்ளியில் செய்து தானம் அளிக்கலாம். தங்கம் அல்லது வெள்ளி சிறு ஐந்து தலை நாகம் செய்து வீட்டில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகம் செய்து, பூசித்து பிறகு ஒருவருக்கு புது வேட்டி துண்டு தாம்பூலம் தட்சணையுடன் நாக விக்கிரகத்தையும் தானம் செய்யலாம்.
கருங்கல்லில் நாகப் பிரதிஷ்டை செய்து ஆறு, குணம் அருகில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகத்துடன் பூசித்து தினமும் 108 முறை வலம் வந்தால் நாக தோஷம் நிவர்த்தியாகும்.
இரண்டு நாகங்கள் பின்னிக் கொண்டு ஒன்றின் முகத்தை ஒன்று பார்க்கு மாறு கல்லில் வடித்து அரசமரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள்கள் விளக்கேற்றி வைத்து பூசித்தால் நாகதோஷம் விலகும்.
கண்ணன் நடனமாடு வது போலவும், அவனுக்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போலவும் கல்லில் வடித்து வேம்பும் அரசும் இணைந்திருக்கும் குளக்கரையில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள் விளக்கேற்றி வலம் வந்து வணங்கினால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.
சிவலிங்கத்திற்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் சிலை வடித்து நதிக்கரை அல்லது, குளக்கரையில் பிரதிஷ்டை செய்து, நாற்பது நாள் பூசித்து வலம் வந்தால் நாகதோஷம் பரிகாரமாகும்.
குளம் அல்லது நதிக்கரையில் அரசு, வேம்பு கன்றுகளை நட்டு, முறையாகத் திருமணம் செய்து குறைந்தது நூறு தம்பதிகளுக்கு விருந்தும் தட்சணை தாம்பூலம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகி சத்புத்திரர்கள் பிறப்பதுடன் வாழ்க்கையும் இன்பமாக அமையும். வசதி உள்ளவர்கள் ஓர் ஏழைக்கு பயிர் நிலம் வாங்கி தானம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.
ஓர் ஏழைக்கு அன்னம் அளித்து புதுவேட்டி துண்டு, தாம்பூலம் தட்சணையுடன் பால் பசுவும் கன்றையும் தானம் செய்தால் நகதோஷம் விலகி சத்புத்திரர்கள் பிறப்பார்கள். வீட்டில் ராகு கேது படங்களை வைத்து தினமும் பூசை செய்யலாம்.
தினமும் ராமாயணம் படிக்கலாம். மாதம் ஒரு சிவாலயம் சென்று ஈசனை வழிபட்டு வரலாம். நவக்கிரகங்களை பிரதட்சணம் செய்யலாம். ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் ஒரு தம்பதிக்கு அன்னம் அளித்து தாம்பூலம் தட்சணை கொடுத்து வலம் வந்து நமஸ்கரித்து வருவதால் எல்லா தோஷங்களும் நிவர்த்தியாகி வாழ்க்கை மகோன்னதமாக இருக்கும்.
புத்திரதோஷம் ராகுவால் ஏற்பட்டால் செவ்வாய்க் கிழமைகளில் ராகு காலத்தின் போது ராகுவின் இஷ்ட தெய்வமான பத்ரகாளிக்கு எலுமிச்சம் பழத்தோலில் எண்ணெய் விட்டுத் திரிபோட்டு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். தோஷம் நீங்கி புத்திரர் பிறந்து நீண்ட ஆயுளுடன் இருப்பர். நவக்கிரகங்களை பிரதட்சணம் செய்யச் செல்லும் போது ஒரு பிடி உளுந்து எடுத்துச் செல்லவும். ராகுவின் பாதங்களில் உளுந்தையும் கேதுவின் பாதங்களில் கொள்ளையும் வைத்து வணங்கி வந்தால் நாக தோஷம் பரிகாரமாகும்.
ராகுவை பிரீதி செய்ய கறுப்பு வேட்டி வாங்க தானம் செய்வதாலும் நாகதோஷம் அகலும். கேதுவைப் பிரீதி செய்யவும் புத்திர தோஷத்துக்குப் பரிகாரமாகவும் சிவந்த வேட்டியை வாங்கி தானம் செய்யலாம். புத்திர தோஷமுள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை நவக்கிரக ஹோமம் செய்து வந்தால் தோஷ பரிகாரத்துடன் லட்சுமி கடாட்சமும் ஏற்படும்.

பிரச்சினையை தரும் பிரபஞ்சமே அதற்கான தீர்வையும் தந்திருக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொண்டால் எந்த விதமான வைரஸ் வந்தாலும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
பிரச்சினையை தரும் பிரபஞ்சமே அதற்கான தீர்வையும் தந்திருக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொண்டால் எந்த விதமான வைரஸ் வந்தாலும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இயற்கை பிரபஞ்சம் தந்த வரம் சூரியக் குளியல். தினமும் அதிகாலையில் சூரிய உதயத்தின் போது, 1 மணி நேரம் சூரிய ஒளி உடலில் படுமாறு இருக்க வேண்டும்.
நவக்கிரக சமித்துகளால் ஹோமம் நடத்த வேண்டும். ஹோமத்தில் செவ்வாயின் சமித்தான கருங்காலி, புதனின் சமித்தான நாயுருவி, குருவின் சமித்தான அரசு, ராகுவின் சமித்தான அருகு, கேதுவின் சமித்தான தர்ப்பை ஆகியவை கண்டிப்பாக இடம் பெறவேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள வைரஸ் கிருமிகள் எதுவாக இருந்தாலும் அழியும். ஹோமம் நடத்த இயலாதவர்கள் தினந்தோறும் குறிப்பிட்ட மூலிகை குச்சிகளை நெருப்பில் இட்டு ஹோமப் புகையை உற்பத்தி செய்து, வீட்டை சுத்தப்படுத்தலாம். மந்திரங்கள் மூலம் நல்ல அதிர்வலைகள் ஏற்படும். ஹோமப் புகையை சுவாசிக்கும் போது நுரையீரலை ஆக்கிரமிக்கும் நோய் கிருமிகள் உருவாகாது.
வீட்டின் உள் பகுதியில் சூரிய வெளிச்சம் படும்படி கதவு, ஜன்னல் கதவுகளை திறந்து வைக்க வேண்டும்.
அசைவ உணவை இயன்றவரை தவிர்க்க வேண்டும். வீட்டில் சமைத்த சுத்தமான பச்சை காய்கறிகள் மற்றும் பழ வகைகளை சாப்பிட வேண்டும். நன்றாக சுத்தம் செய்த பாத்திரத்தைப் பயன்படுத்தி சமைக்க வேண்டும்.
கொதித்து ஆறிய சுத்தமான குடிநீரை பருக வேண்டும்.
தினமும் குளித்து விட்டு துவைத்த சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும்.
தேவையின்றி அடுத்த நபரை தொட்டு பேசுதல் கூடாது.
எச்சில் மற்றும் அடுத்த நபர் கைபட்ட உணவை உண்ணுதல் கூடாது.

திருக்கோவில்களை தரிசனம் செய்வதுடன், இறைவனது நாமங்களை உச்சரித்து நம் பாவங்கள் நீங்கப்பெறுவது நமது கைகளில்தான் உள்ளது.
நாம் வாழும் இந்த பூமி, கர்ம பூமி என்று மகான்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, செய்த பாவங்களுக்கு ஏற்ப இன்ப, துன்பங்களை அடைந்து, அவை அளிக்கும் அனுபவங்கள் மூலம் நலம் பெற்று ஆன்மிக உயர்வை அடைவதே வாழ்வின் லட்சியமாக சொல்லப்படுகிறது. கடவுளே மனிதனாக வந்து இந்த உலகத்தில் பிறந்தாலும், அவரும் பூவுலக நியதிகளுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தாக வேண்டும். மனிதனது செயல்களால் ஏற்படக்கூடிய பாவம் மற்றும் புண்ணியம் ஆகிய இரண்டு விளைவுகளும் எப்போதுமே, அவனை தொடர்ந்து வரக்கூடிய நிழல்களாக சொல்லப்படுகின்றன. அவற்றின் தன்மைகள் எந்த நிலையிலும் மாறுவதில்லை.
மனிதனது பாவ, புண்ணியங்கள் என்பது தாமாக ஏற்படுவதில்லை. ஒருவர் செய்யும் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களின் மன சங்கடங்கள் மூலம் வெளிப்படும் வெப்பச் சிந்தனைகளின் பிரதி விளைவுகள்தான் சாபமாக வெளிப்படுகிறது. அவை, சம்பந்தப்பட்டவரின் வாழ்வியல் கணக்கில் பதிவாக அமைந்து, அனுபவமாக பலன் அளிக்கத்தக்க சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. ஒருவரது சாபங்கள் எவ்வாறு அதற்கான அனுபவத்தை அளிப்பதற்கான காலநேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறதோ, அதே போல புண்ணியங்களும் அவற்றை வெளிப்படுத்திக்கொள்ள தக்க சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றன என்பதும் உலக நியதியாகும்.
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் சிறப்புடையதாகச் சொல்லப்படுவது ராம அவதாரம். காரணம், அதில்தான் இறைவன், மனிதத் தன்மையோடு பிறந்து, அனைத்து துன்பங்களையும் தாங்கி, தர்மத்தின் வழியில் அதை சந்தித்து வென்றதாக அறிகிறோம். ராம அவதாரம் அடைந்த சிரமங்களை, மற்ற எந்த அவதாரமும் அடையவில்லை என்பதை பல சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மகாவிஷ்ணு தன்னுடைய வாமன அவதாரத்தில், மகாபலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி நிலத்தை தனது தவத்துக்காக தானமாக அளிக்கும்படி கேட்கிறார். அப்போது மகாபலி யாகம் செய்து கொண்டிருந்த சமயம். தர்ம சாஸ்திர நியதிப்படி எந்த ஒரு சுப காரியத்தையும் செய்வதற்கு முன்னதாகவே தானம் செய்துவிட வேண்டும். அப்போதுதான் தொடங்க உள்ள சுப காரியம் நல்ல முறையில் பூர்த்தி அடையும். ஆனால் அதை மீறி வாமனருக்கு தானம் அளிக்க மகாபலி முடிவு செய்தான்.
அப்போது அவனது குரு சுக்ராச்சாரியார் உண்மையை அறிந்து கொண்டு, “உன்னை அழிக்க கடவுளே வந்திருப்பதால், தானம் அளிக்காதே” என்று தடுக்கிறார்.
ஆனால் மகாபலி, “நான் கொடுத்த வாக்கை மீற மாட்டேன். அதோடு கடவுளுக்கே தானம் அளிக்கும் அளவுக்கு, நான் உயர்ந்த நிலையில் இருப்பதை எண்ணி மனம் பூரிக்கிறேன்” என்றபடி, தானம் அளிக்க தயாரானான்.
தானம் அளித்தால் மகாபலிக்கும் கெடுதல் நேரும் என்பதை உணர்ந்த சுக்ராச்சாரியார், அதை தடுக்க எண்ணினார். வாமனரின் கமண்டல நீரை மகாபலியின் கைகளில் வார்த்து நிலத்தை தானம் பெற நடந்த செயலை தடுக்க, வண்டாக மாறி கமண்டலத்தின் நீர் வரும் வழியை அடைத்துக்கொண்டார். அதை அறிந்த வாமனர், ஒரு தர்ப்பை புல்லால் குத்தி, வண்டை வெளியேற்றும்போது, சுக்ராச்சாரியாரின் ஒரு கண் பார்வை பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து மூன்றடி மண் கேட்ட வாமனர், விஸ்வரூபம் கொண்டு முதல் இரண்டு அடிகளில் மண்ணுலகையும், விண்ணுலகையும் அளந்தார். “அடுத்த அடியை எங்கே வைப்பது?” என்று அவர் மகாபலியிடம் கேட்க, அவனோ “என் தலையில் வையுங்கள்” என்கிறான்.
அதன்படியே மகாபலியின் தலையில் பாதம் வைத்து அவனை பாதாளத்துக்கு அனுப்புகிறார், வாமனர். மகாபலியின் தலையில் கால் வைத்ததால், அவருக்கு பாவம் உண்டானது. அதன் காரணமாகத்தான், இறைவன் தன்னுடைய ராம அவதாரத்தில் 14 ஆண்டுகள் கால்களில் பாதுகை (காலணி) இல்லாமல் வனத்தில் வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காட்டுக்கு கிளம்பிய ராமனிடம் இருந்த அவனது பாதுகைகள், பூமியின் கர்ம விதிகளின் நியதியாக பரதனால் பெற்றுக்கொள்ளப்பட்டது. அதனால் ராமன் வெறும் கால்களுடன் காட்டுக்குச் செல்ல வேண்டிய சூழலை உருவாகிவிட்டது.
இந்த பூவுலகின் தர்ம நியதிகள் மிகவும் சூட்சுமமாக அமைந்துள்ளதை பல மகான்கள் விளக்கி இருக்கின்றனர். ‘ஒரு பல்லி தனது இரையான ஒரு பூச்சியை பிடிப்பதை தடுப்பது பாவமா? அல்லது புண்ணியமா?’ என்ற கேள்விக்கு, அதற்கான பதிலும் சூட்சுமமாக அமைந்துள்ளது.
அதாவது, பல்லி பூச்சியை பிடித்தவுடன் அதை துரத்துவது பாவக்கணக்கில் கொள்ளப்படும். காரணம், அது பல்லியின் உணவுக்கான வாய்ப்பை தட்டி பறித்த பாவமாகிறது. ஆனால், பூச்சியை பிடிப்பதற்கு முன்னதாக பல்லியைத் துரத்தி விடுவது, ஒரு உயிரை காப்பாற்றிய புண்ணிய கணக்கில் சேர்க்கப்படும் என்பதே தர்ம நியதியின் சூட்சுமம் ஆகும்.
சாபமானாலும் சரி, பாவமானாலும் சரி அவற்றை அகற்றும் இடம் நாம் வாழும் இந்த பூமியாகும். அதிலும் குறிப்பாக நமது பாரத நாடும், அதில் உள்ள புண்ணிய தலங்களும், இறைவனது திருநாமமும் பிறவிப் பெருங்கடலை கடக்க உதவும் மகத்தான தன்மை பெற்று விளங்குகின்றன. ஆகையால் திருக்கோவில்களை தரிசனம் செய்வதுடன், இறைவனது நாமங்களை உச்சரித்து நம் பாவங்கள் நீங்கப்பெறுவது நமது கைகளில்தான் உள்ளது.
கவிஞர் ஆவியூரான்

ஆம்ரவனேஸ்வரர் கோவில் மூல நட்சத்திரக்காரர்களுக்கு ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்தல இறைவனையும் இறைவியையும் வழிபட்டு அர்ச்சனை செய்ததால் அவர்களின் அனைத்து தோஷங்களும் நீங்கி தடைபட்டு வந்த திருமணம் கைகூடும்.
திருச்சியில் இருந்து லால்குடி செல்லும் வழியில், திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும், லால்குடியில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது ஆம்ரவனேஸ்வரர் கோவில்.
இங்கு இறைவனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்நேரத்தில், இறைவன் ஆம்ரவனேஸ்வரரை வழிபட்டால், சகல தோஷவகளும் நீங்கி குறைவிலாத வாழ்க்கை கிடைக்கும், பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருஞானசம்பந்தரும் தனது பதிகத்தின் கடைசிப் பாடலில் இதை உறுதிப்படுத்துகிறார்.
இவ்வாலயம், மூல நட்சத்திரக்காரர்களுக்கு ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. அவர்கள் இத்தலத்தில் இறைவனையும் இறைவியையும் வழிபட்டு அர்ச்சனை செய்து வந்தால், அவர்களின் அனைத்து தோஷங்களும் நீங்கும். தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். இக்கோவிலில் மாதந்தோறும் மூல நட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. திருமணத் தடை நீங்கவும், கல்வியில் மேன்மை பெறவும், வாழ்க்கையில் உள்ள தீராத இன்னல்கள் தீங்கவும், செய்யும் தொழில் மேன்மை அடையவும், மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றும் அனைத்து மற்ற நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் இந்தச் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டு இறையருள் பெற, ஒரு முறை இத்தலம் சென்று வழிபட்டு வரவும்.

அரச மரத்தடியில் விநாயகர் சிலையும், பாம்பு கல்லும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதை பல கோவில்களில் காணலாம். சிவாலயங்களில் பாம்புக் கல்லை பிரதிஷ்டை செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்று நம்புகின்றனர்.
சிவாலயங்களில் வழிபாடு செய்துவிட்டுப் பிரகாரத்தைச் சுற்றி வரும் பொழுது ஒரு புறம் அரச மரத்தடியை காணலாம்.
அரச மரத்தடியில் விநாயகர் சிலையும், பாம்பு கல்லும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதை பல கோவில்களில் காணலாம். பாம்புக் கல்லில் இரண்டு பாம்புகள் பின்னி இணைந்திருப்பதையும் நடுவில் சிறிய சிவலிங்கம் இருப்பதையும் காணலாம். பாம்புக்கல்லில் உள்ள பாம்பு போல தம்பதியர் இணைந்து, விநாயகரின் அருளாலும், வேப்ப மரங்களின் மருத்துவ சக்தியாலும் மகப்பேறு பெறலாம் என்பது தத்துவம்.
அரசமரம், விநாயகர், பாம்புக்கல் இந்த மூன்றையும் ஒருங்கே வலம் வந்து வழிபடவேண்டும். திங்கட்கிழமை அமாவாசை வந்தால் அன்று வழிபாடு செய்வது சிறப்பு உடையது. வழிபாடு செய்யும் பொழுது ஏழுமுறை வலம் வர வேண்டும். ஒரு சிலர் கடும் விரதம் இருந்து 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர்.
பாம்புக் கல்லைப் பிரதிஷ்டை செய்ய விரும்பினால் முதல்நாள் அதை தண்ணீ ரில் மூழ்கி இருக்கச் செய்ய வேண்டும். மகப்பேறு வேண்டி பிராத்தனை செய்து கொண்ட தம்பதிகள் அந்த குறிப்பிட்ட முதல் நாள் இரவு உணவு உட்கொள்ளக்கூடாது. மறுநாள் அரசமரத்தடியில் மேடை அமைத்து அதன்மேல் பாம்புக்கல்லைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும். இவ்வாறு பிரதிஷ்டை செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்று நம்புகின்றனர்.
இந்த ஐதீக நம்பிக்கையில் நாகர்கோவிலில் உள்ள நாகராஜர் ஆலயத்தில் எண்ணற்ற பாம்புக்கற்கள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.

ராகு - கேது தாக்கத்தை குறைக்க தினமும் திருக்கோளறு பதிகம் படிக்க வேண்டும். விநாயகர், வராஹி, ஆஞ்சநேயர், சரபேஸ்வரர், நரசிம்மர் போன்ற தெய்வங்களை வழிபடுங்கள்.
போகர் நவபாஷணத்தால் உருவாக்கிய பழனி மலை முருகன் சிலையை, வீட்டிலிருந்தே மனதார வழிபடவும்.
தலை வேறு, உடல் வேறு என்ற நிலையில் அசுர முகமும் பாம்பு உடலும் கொண்டவர் ராகு, அசுர உடலும் பாம்பு முகமும் கொண்டவர் கேது. எனவே மனித முகம் இல்லாத தெய்வங்களை வழிபடலாம். விநாயகர், வராஹி, ஆஞ்சநேயர், சரபேஸ்வரர், நரசிம்மர் போன்ற தெய்வங்களை வழிபடுங்கள்.
ஆஞ்சநேயர், கால பைரவருக்கு உளுந்து வடை மாலை சாற்றி வழிபடலாம்.
ஆடம்பரமாக பூஜை செய்து ராகுவையும், கீழ்படிந்து செய்யும் நடைமுறை பரிகாரங்களால் கேதுவையும் வணங்கலாம்.
மாரியம்மன் குறிப்பாக சமயபுரம் மாரியம்மன், திருவேற்காடு கருமாரி மற்றும் படவேடு ரேணுகாதேவி, பெரியபாளையம் பவானி அம்மன், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி போன்ற அம்மன்களை ராகு, கேது தோஷம் நீங்க மனதால் வேண்டலாம்.
கொரோனா பாதிப்பு இருப்பவர்கள் கருப்பு ஆடு, கருப்பு உளுந்து தானம் செய்யலாம். காளி, துர்க்கை, பிரத்யங்கிரா அம்மனுக்கு புடவை வாங்கிக் கொடுத்து, கருப்பு திராட்சை நிவேதனம் செய்யலாம்.
ராகு, காற்று ராசியான மிதுனத்தில் சஞ்சாரம் செய்வதால், பரிகாரங்கள் பாராயணம் செய்யும் மந்திர ஜபமாக இருப்பது மிகவும் நன்மை தரும். நாட்டு நலனுக்கு வீட்டு உறுப்பினர்கள் தினமும் கூட்டாக இணைந்து சாந்தி மந்திரத்தை ஆத்மார்த்தமாக ஜெபித்து வர அளவிட முடியாத நன்மை உண்டாகும்.
‘ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனது ஸஹ வீர்யம்
கரவாவஹை தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி’
ராகு - கேதுக்களின் தாக்கத்தை குறைக்க தினமும் திருக்கோளறு பதிகம் படிக்க வேண்டும்.