என் மலர்
தோஷ பரிகாரங்கள்
ஆவுடையார்கோவிலில் 12 தீர்த்தங்கள் உள்ளன. இவை அனைத்து பக்தர்களுக்கும் சித்தியாய் அமைந்து, அவர்களின் பாவங்களை போக்கவல்லது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆவுடையார்கோவிலில் 12 தீர்த்தங்கள் உள்ளன. இவை அனைத்து பக்தர்களுக்கும் சித்தியாய் அமைந்து, அவர்களின் பாவங்களை போக்கவல்லது என குறிப்பிடப்பட்டுள்ளது. சிவதீர்த்தம், அக்கினி தீர்த்தம், தேவதீர்த்தம், முனிவர் தீர்த்தம், அசுர தீர்த்தம், வாயு தீர்த்தம், சிவ கங்கை தீர்த்தம், நாராயண தீர்த்தம், பிரம தீர்த்தம், அறு பத்து நான்கு கோடித்தீர்த்தம், வெள்ளாறு, திருத்தொட்டித்தீர்த்தம்.
இவற்றில் 9 தீர்த்தங்கள் மிக முக்கியமானவையாக கருதப்படுகிறது. சிவ தீர்த்தம் ஆத்மநாத கூபம் எனப்படும் கிணற்று நீரை ஆத்மநாதர் அபிஷேகத்திற்கு மட்டும் பயன்படுத்துகின்றனர். அக்னி தீர்த்தம் என்பது கோவிலுக்குள் பெரிய குளமாக அமையப் பெற்றுள்ளது. இந்த தீர்த்தத்தை பருகினாலும், நீராடினாலும் நினைத்த பலனை அடையலாம் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

உங்கள் வீட்டில் ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் நிரப்பி முழு எலுமிச்சம்பழத்தை அதில் போட எலுமிச்சை மிதந்தால் நெகடிவ் ஆற்றல் இல்லை எனவும், மூழ்கி போனால் நெகடிவ் எனர்ஜி உள்ளதாகவும் கொள்ளலாம்.
நீங்கள் யாரை குருவாக ஏற்றுக்கொண்டு இருக்கிறர்களோ அவருக்கு ஒரு மஞ்சள் வேஷ்டி ஒரு துண்டு குரு பெண் ஆக இருந்தால் மஞ்சள் நிற சேலை மற்றும் காலணி
(செறுப்பு) இவற்றை தானமாக அளித்து அவரிடம் ஆசி பெற நல்ல உத்யோகம் அல்லது தொழில் அமையும் மஞ்சள் நிற புஷ்பராக கல் தங்க மோதிரத்தல் பதித்து வலது கை நடுவிரலில் அணிந்து கொண்டால் வேலை வாய்ப்புகள் தேடி வரும் தொழில் சிறக்கும்.
உங்கள் வீட்டில் ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் நிரப்பி முழு எலுமிச்சம்பழத்தை அதில் போட எலுமிச்சை மிதந்தால் நெகடிவ் ஆற்றல் இல்லை எனவும், மூழ்கி போனால் நெகடிவ் எனர்ஜி உள்ளதாகவும் கொள்ளலாம்.
நெகடிவ் எனர்ஜி குறைய செய்ய வேண்டியவை...
1. தினமும் காலையிலும் மாலையிலும் விளக்கேற்றுதல்
2. சாம்பிராணியுடன் குங்க்லியம் சேர்த்து தூபம் போடுதல்
3. கோமியத்துடன் கோமுக நீர் கலந்து வீடு முழுவதும் தெளித்தல்
4. பழைய பொருட்களை அகற்றுதல்
5. ஓடாத கடிகாரங்களை சரிபார்த்தல்
6. ஒழுகும் பைப்புகளை சரி செய்தல்
உங்கள் ஜாதகத்தில் உண்டாகும் எப்படிப்பட்ட தோஷங்களையும் நீக்கும் ரகசியம்

ஆத்மநாத சுவாமி கோவிலுக்கு வந்து யோகாம்பாள் சன்னதிக்குச் சென்று குருந்த மரம் அருகே தொட்டில் கட்டி போட்டால் கட்டாயம் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் தந்து அருள்புரிவார் அம்பிகை யோகாம்பாள்.
ஆத்மநாத சுவாமி கோவிலை திருவாவடுதுறை ஆதீனம் நிர்வகித்து வருகிறது. ஆவுடையார்கோவில் பகுதியை சுற்றியுள்ள 52 கிராம மக்கள் ஆத்மநாத சுவாமி கோவிலின் குத்தகை நிலத்தில் விவசாயம் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக அதில் நெல், கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.
கோவிலின் சிறப்பு மற்றும் அற்புதங்கள் மற்றும் பலன்கள் குறித்து குருக்கள் கூறுகையில், குழந்தை இல்லாதவர்கள் ஆத்மநாத சுவாமி கோவிலுக்கு வந்து யோகாம்பாள் சன்னதிக்குச் சென்று குருந்த மரம் அருகே தொட்டில் கட்டி போட்டால் கட்டாயம் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் தந்து அருள்புரிவார் அம்பிகை யோகாம்பாள்.
பின்னர் குழந்தைகள் பிறந்த பிறகு குழந்தைகளை பெற்றோர் எடுத்து வந்து யோகாம் பாள் சந்நிதிக்கு முன்னால் பட்டுத்துணி விரித்து அதன் மேலே குழந்தையை படுக்க வைத்து பூஜைகள் செய்து வழிபாடுகள் நடத்துகின்றனர். கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் பக்தர்களை ஆத்மநாதர் ஆட்கொண்டு விடுகிறார்.
எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் கோவிலின் உள்ளே நுழைந்தால் மனதில் புதிய மார்க்கம் உண்டாகிறது. குழப்பங்கள் தீர்ந்து, தீராத பிரச்சினைகளும் ஆத்மநாத சுவாமி சன்னிதிக்கு வந்தால் தீர்ந்து விடும் என்று நம்பிக்கை இருக்கிறது. மனதில் ஏற்படும் குழப்பங்கள் கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் பக்தர்களிடம் இருந்து நீங்கி விடும்.
பெரும்பாலும் ஆத்ம நாதசுவாமியை வழிபடுவதற்காக திருமணமான தம்பதிகள் அதிகமாக வந்து செல்கின்றனர். சிவனின் மறு உருவமாக இருக்கக்கூடிய ஆத்மநாத சுவாமி பாரபட்சம் பாராமல் அனைவருக்கும் அருளை அள்ளி அள்ளி தந்து கொண்டிருக்கும் ஆலயம் ஆவுடையார் கோவில் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது என்றார்.

சந்திர பகவானுக்குரிய சிறந்த பரிகாரத் தலமாக தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் திங்களூர் சந்திரன் கோவில் இருக்கிறது. இங்கு வழிபாடு செய்வதால் ஜாதகத்தில் சந்திர பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.
சந்திர பகவானுக்குரிய சிறந்த பரிகாரத் தலமாக தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் திங்களூர் சந்திரன் கோவில் இருக்கிறது. ஏதேனும் ஒரு வளர்பிறை திங்கட்கிழமை தினத்தில் காலை 9 மணிக்குள்ளாக திங்களூர் சந்திர பகவான் கோவிலுக்கு, சென்று சந்திர பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவதால் ஜாதகத்தில் சந்திர பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும். இந்த பரிகாரத்தை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ செய்வது சிறப்பு.
திங்களூர் சந்திர பகவான் கோவிலுக்கு சென்று வழிபட முடியாதவர்கள் வளர்பிறை திங்கட்கிழமை மற்றும் பௌர்ணமி தினங்களில் அருகில் உள்ள கோவிலில் இருக்கும் நவக்கிரக சந்நிதியில் சந்திரனுக்கு மல்லிகை பூ சாற்றி, நிறமி சேர்க்கப்படாத கேசரி அல்லது தயிர் சாதம் நைவேத்தியம் வைத்து, சந்திர காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 முறை வரை துதித்து வழிபாடு செய்வதால் சந்திர பகவானின் அருளால் வாழ்வில் மங்களமான பலன்கள் அதிகம் ஏற்படும்.
மேற்கூறிய இரண்டு பரிகாரங்களையும் செய்ய முடியாதவர்கள் திங்கட்கிழமைகள் மற்றும் பௌர்ணமி தினங்களில் அருகில் உள்ள சிவ பெருமான் கோவிலில், சிவபெருமான் அபிஷேகத்திற்கு தரமான பசும்பாலை தானமாக கொடுக்க வேண்டும். தினமும் காலையில் எழுந்ததும் பெற்ற தாயாரிடம் காலை தொட்டு, ஆசிர்வாதம் வாங்குவது சந்திரனின் அருளை உங்களுக்கு தரும். வெள்ளியில் சந்திரகாந்தக்கல் பதித்த மோதிரத்தை எப்போதும் உங்கள் வலது கை மோதிர விரலில் அணிந்து கொள்வது சிறந்தது.
மேலும் உங்கள் சக்திக்கு ஏற்ப திங்கட்கிழமைகளில் மனநலம் குன்றியவர்கள் மற்றும் ஏழைகளுக்கு தயிர்சாதம், நீர்மோர் போன்றவற்றை தானம் வழங்க வேண்டும். கோடைக்காலங்களில் மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் பந்தல் அமைப்பது, சாலையில் திரிகின்ற விலங்குகள் தாகம் தணிப்பதற்கு வீட்டிற்கு வெளியே தண்ணீர் தொட்டியில் நீர் ஊற்றி வைப்பதும் சந்திர பகவானின் அருளைப் பெறுவதற்கான சிறந்த பரிகாரங்களாக இருக்கிறது.

சில நட்சத்திரங்களில் சில காரியங்கள் செய்யலாம், சில காரியங்கள் செய்யக் கூடாது. குறிப்பாக மனை முகூர்த்தம் வைக்கக்கூடாது. தூரதேசப் பயணங்கள் செல்லக்கூடாது என்பர்.
தலையற்ற நட்சத்திரங்கள்: கார்த்திகை, உத்ரம், உத்ராடம் இவற்றிற்கு முதல் பாதம் ஒரு ராசியிலும் மீதம் மூன்று பாதங்களும் அடுத்த ராசியிலும் இருக்கும்.
உடலற்ற நட்சத்திரங்கள்: மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் இவற்றிற்கு முதல் இரண்டு பாதங்கள் ஒரு ராசியிலும், அடுத்த 2 பாதங்கள் அடுத்த ராசியிலும் இருக்கும்.
காலற்ற நட்சத்திரங்கள்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இந்த நட்சத்திரங்களுக்கு முதல் 3 பாதங்கள் ஒரு ராசியிலும், கடைசி பாதம் மட்டும் அடுத்த ராசியிலும் இருக்கும்.
மேற்கண்ட நட்சத்திரங்களில் சில காரியங்கள் செய்யலாம், சில காரியங்கள் செய்யக் கூடாது. குறிப்பாக மனை முகூர்த்தம் வைக்கக்கூடாது. தூரதேசப் பயணங்கள் செல்லக்கூடாது என்பர்.
தலையற்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் தலைப்பகுதியில் உள்ள நோய்களுக்கும் கண், காது, மூக்கு மூளை சம்பந்தப்பட்ட நோய் குணமாக மருத்துவரை முதன் முதலில் அணுகும் நாளாக இருக்கக் கூடாது. பொதுநலத்தில் உள்ளவர்கள் தலைமைப் பொறுப்பேற்கும் நாட்களில் இந்த நட்சத்திரமும் வலிமை யானால் அது நிலையாக இருக்காது.
அடுத்து உடலற்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் உடல் வலி ஜீரண உறுப்புகள் சம்பந்தப்பட் நோய்கள் அகல முதன் முதலில் மருந்து மாத்திரைகளை உட்கொள்வது பலன் தராது.
காலற்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் உத்தியோகம் சம்பந்தமாக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொண்டவர்களுக்கு அது அனுகூலமாக இருக்காது. கால் வலி, காலில் உள்ள நரம்பு, எலும்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் அகல மருத்துவரை முதன் முதலில் சந்திப்பதற்கு ஏற்றதாக இருக்காது, குணமாவதில் தாமதம் ஏற்படும்.

ஜோதிட ரீதியாக இனிய குடும்ப வாழ்க்கை யாருக்கு எளிதில் சாத்தியமாகும் என்பதையும், குடும்ப வாழ்வில் சிக்கலை தீர்ப்பதற்கான பரிகாரத்தையும் காணலாம்.
இறைவன் படைப்பில் பூமியில் பிறக்கும் ஒவ்வொரு ஜீவனும், தனித்தன்மையோடு கூடிய ஆன்மா தான். ஒவ்வொரு ஆன்மாவிற்கும் ஒரு நீண்ட இல் வாழ்க்கை பயணம் உள்ளது. ஆனால் அந்தப் பயணம் இனிமையானதாக, எல்லாருக்கும் அமைந்துவிடுவதில்லை. இனிமையான இல்வாழ்க்கை என்பது தனம், வாக்கு, குடும்பம் என்ற மூன்று நிலைகளை உள்ளடக்கியது.
இன்றைய கால கட்டத்தில் பொருளாதார தேவை காரணமாக கணவன் - மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. எனவே ஒருவரையொருவர் பார்த்து பேசக்கூட நேரம் கிடைப்பது அரிதாகி விட்டது. அத்துடன் பணத் தேவைக்காக கணவன் ஓரிடத்திலும், மனைவி ஒரு இடத்திலும், குழந்தைகள் வேறு இடத்திலும் பிரிந்து வாழ வேண்டிய நிலை. இதுபோன்ற காரணங்களால், பந்தம், பாசம், விட்டுக்கொடுத்தல், அன்பாக பழகுதல் போன்றவற்றிற்கான சாத்தியக் கூறுகள் மிக மிக குறைவு.
ஜோதிட ரீதியாக இனிய குடும்ப வாழ்க்கை யாருக்கு எளிதில் சாத்தியமாகும் என்பதையும், குடும்ப வாழ்வில் சிக்கலை தீர்ப்பதற்கான பரிகாரத்தையும் காணலாம்.
ஜனன கால ஜாதகத்தில் லக்னத்திற்கு இரண்டாம் இடத்தைக் கொண்டு, ஒருவருக்கு எந்தெந்த வழிகளில் எல்லாம் வருமானம் வரும்?, வாக்கு வன்மை அமையும், குடும்பம் போன்றவைகளை அறிய முடியும். எனவே இரண்டாம் இடம் ‘தனம் வாக்கு, குடும்ப ஸ்தானம்’ என அழைக்கப்படுகிறது. இரண்டாம் இடத்தோடு சம்பந்தம் பெறும் கிரகங்களுக்கு ஏற்ப, தனம், வாக்கு, குடும்பம் அமையும். அதனால் இரண்டாம் இடம் வலிமையாக இருப்பது மிக அவசியம்.
2-ம் இடத்தில் ஆட்சி, உச்சம் பெற்ற கிரகம் இருந்தாலோ, லக்னத்தில் சுப கிரகம் மற்றும் சுப கிரகங்களின் பார்வை இருந்தாலும் நிறைந்த தனமும், வாக்கு சாதுர்யமும் மற்றும் அமைதியான குடும்ப வாழ்க்கையும் அமையும். 2-ம் இடத்தோடு சம்பந்தம் பெற்ற லக்ன ரீதியான சுபகிரகங்களின் தசை நடந்தால் குடும்ப உறுப்பினர்கள் மூலமும், தன் வாக்காலும் வருமானம், நீண்ட ஆயுள், வீடு, வாகன யோகம், நோயற்ற வாழ்க்கை, மன நிம்மதி, அன்பான வாழ்க்கை துணை, அனுசரனையான குழந்தைகள் கிடைக்கும்.
2-ம் இடத்திற்கு சனி, ராகு- கேது, சூரியன், செவ்வாய் போன்ற அசுப கிரகங்களின் சம்பந்தம் இருந்தால், வாழ்வில் மனக்கசப்பான சம்பவம் மிகுதியாக இருக்கும். 2-ம் இடத்தோடு சம்பந்தம் பெறும் அசுப கிரகங்களின் தசை காலங்களில் பணம் - பொருள் விரயம், அவமானம், மன வேதனை, வாக்கால் பிரச்சினை ஏற்படும். இதன் உச்சகட்டமாக பொருள் தேடுவதற்காக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடும்.
உளவியல் ரீதியாக குடும்ப ஒற்றுமைக்கு தீர்வு காண முயற்சிப்பவர்களுக்கு, உள்ளுணர்வு மிக முக்கியம். கோபம், குரோதம், காமம், வெறுப்பு, ஆத்திரம், அவசரம், படபடப்பு இவற்றை நீக்கி, மனம், வாக்கு, உடம்பு இம்மூன்றையும் சுத்தமாக வைத்தால் உள்ளுணர்வு சரியாக இயங்கும். மனஅமைதி, அடக்கம், இறை மற்றும் குருபக்தியை வலுப்படுத்தும் போது, தனம், வாக்கு, குடும்பம் மனிதர்களுக்கு வசியப்படும். பேச்சை குறைத்து, விட்டுக்கொடுத்தலே பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தரும்.
பரிகாரம்
ஜனன கால ஜாதகத்தில் 2-ம் இடத்தில் வக்ரம், அஸ் தமனம் மற்றும் நீச்ச, அசுப கிரகங்களால் பிரச்சினையை சந்திப்பவர்கள், குளத்தில் உள்ள மீன்களுக்கு பொரி போட வேண்டும். எறும்பு புற்றுக்கு நாட்டு சர்க்கரை கலந்த நொய் அரிசி போட குடும்பம் கோவிலாகும்.
தனம்
‘தனம்’ எனும் பணமே மனித வாழ்வை மகழ்ச்சி கரமாக மாற்றும் கருவியாகத் திகழ்கிறது. இன்றைய நவநாகரிக உலகில், பணம் வைத்திருப்பவர்கள் பணக்காரர்கள் அல்ல.. செலவு செய்பவர்களே பணக்காரர்கள். பணம் மனிதனை படைத்ததா? அல்லது மனிதன் பணத்தை படைத்தானா? என்று வியக்கும் வகையில் நுகர்வுக் கலாசாரம் பெருகியிருக்கிறது. குடும்ப நபர்களின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை நிறைவு செய்ய பணம் மிக மிக அவசியம்.
வாக்கு
வாக்கு வன்மையே ஒரு மனிதனை சமுதாயத்தில் தலைசிறந்த மனிதனாக்குகிறது. வாக்கு சாதுர்யம் இருப்பவர்களே, குடும்ப உறுப்பினர்களிடம் அன்பை பெறமுடியும். வார்த்தைகளில் உண்மை, நிதானம் இருப்பவர்களால் நினைத்ததை சாதிக்க முடியும். சொல்வாக்கு இருந்தால் செல்வாக்கு தானே உயரும். தனக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் நன்மைகளை உண்டாக்கிட முடியும். பலர் நிதானமற்ற கோபத்தால், தேவையற்ற வார்த்தைகளை உதிர்த்து விட்டு, பின் வருத்தப்படுவார்கள். தன்னை அறியாது வெளியான தீய வார்த்தைகள் கூட, குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து பேதத்தை ஏற்படுத்திவிடும்.
குடும்பம்
குடும்பம் என்பது நிம்மதி, சந்தோஷம் நிறைந்ததாகவும், தெய்வம் வாழும் கோவிலாகவும் இருக்க வேண்டும். செல்வாக்கு மற்றும் சொல்வாக்கே குடும்பத்தை கோவிலாக்கும். இதில் குற்றம் ஏற்படும் போது குடும்பத்தில் கலகலப்பு குறைந்து, சலசலப்பு மிகுதியாகும். நல்ல விவாதத்தில் நிம்மதி, நியாயம் கிடைக்கும். அழுகை இருக்காது. நியாயமற்ற பிரச்சினைகளால் நிம்மதி, தூக்கம் பறிபோவதுடன் சண்டை சச்சரவு, அழுகை, பிரிவு போன்ற மோசமான சூழலை ஏற்படும். கலகலப்பும், சலசலப்பும் நிறைந்ததுதான் குடும்ப வாழ்க்கை. குடும்பம் என்றால் கருத்து வேறுபாடு, விவாதம், சண்டை இல்லாமல் வாழ முடியாது. வறட்டு கவுரவம், நியாயமற்ற கோபம், தரமற்ற வார்த்தைகள் குடும்பத்தில் விரிசலை ஏற்படுத்தவே செய்யும். இதனால் பல குடும்பங்களில் ஒற்றுமை குறைவு உண்டாகும்.
பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

எப்படிப்பட்ட துயரங்கள் வந்தாலும் அதை மாற்றுவது பரிகாரங்கள் தான். வெயிலின் கடுமையை குறைக்க குடையைப் பிடிப்பது போல, அதிகத் துயரத்தை அளவோடு மாற்றிக் கொடுப்பது பரிகாரமாகும்.
எல்லோரும் அலங்காரம் செய்து கொள்வதில் பிரியம் வைப்பார்கள். பொதுவாக ஒவ்வொரு மனிதரும் மூன்றுவித காரங்களில் நம்பிக்கை வைத்தாலே முன்னேற்றங்கள் வந்து சேரும். ஒன்று ‘ஓம்காரம்’, மற்றொன்று ‘பிரகாரம்’, மூன்றாவது ‘பரிகாரம்.’ எப்படிப்பட்ட துயரங்கள் வந்தாலும் அதை மாற்றுவது பரிகாரங்கள் தான். வெயிலின் கடுமையை குறைக்க குடையைப் பிடிப்பது போல, அதிகத் துயரத்தை அளவோடு மாற்றிக் கொடுப்பது பரிகாரமாகும்.
சுய ஜாதகத்தில் தசாபுத்தி பார்த்து பாக்கிய ஸ்தானம், பார்க்கும் கிரகம், இருக்கும் கிரகம் பார்த்து ஆராய்ந்து தேர்ந்தெடுக்கும் கோவில்களில் பிரகாரங்களையும், எண்ணிக்கையின் அடிப்படையில் நீங்கள் வலம் வர வேண்டும். அடிமேல் அடியெடுத்து வைக்கும் பிரகாரம் ‘முன் நோக்கிய பிரகாரம்’, ‘பின்னோக்கிய பிரகாரம்’ என்று இருக்கின்றன. அதில் தங்களுக்கு பலன் தருவதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அங்ஙனம் பிரகார வலம் வரும்பொழுது ‘ஓம்காரம்’ மற்றும் சிவநாமங்களை உச்சரித்துக்கொண்டு செல்லும் பொழுது மேலும் நற்பலன்களை நாம் காணலாம். பலவித காரங்களில் ‘அகங்காரம்’, ‘அதிகாரம்’, ‘பலாத்காரம்’ போன்ற காரங்களை விலக்கிவிட்டு, பரிகாரம், பிரகாரம், ஓம்காரம் ஆகிய காரங்களின் மீது நம்பிக்கை வைத்தால் நாளும் நன்மைகளைச் சந்திக்கலாம்.

நாகதோஷங்களை அடியோடு நீக்கும் வல்லமை பெற்ற திருத்தலமாக நாகர்கோவில் நாகராஜா திருக்கோவில் திகழ்கிறது. நாக தோஷம் நீங்க வழிபாடு செய்யும் முறையை அறிந்து கொள்ளலாம்.
கன்னியாகுமரியில் உள்ள குமரி அம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக, மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும் இது பெயர் பெற்றுள்ளது. இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் நாகராஜரின் பெயரிலேயே, இந்த ஊர் ‘நாகர்கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் நாகர் வழிபாட்டிற்கு என்று தனியாக அமைந்தக் கோவில் இதுவேயாகும். திருப்பாம்புரம், பாமணி, நாகப்பட்டினம், திருக்காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், திருப்பனந்தாள், கீழ்ப்பெரும் பள்ளம், திருநெல்வேலி (கோடகநல்லூர்) போன்ற ஆலயங்களில் எல்லாம் மூலவரான சிவபெருமானை வழிபட்டு நாகங்கள் தங்களது கொடிய தோஷங்களைப் போக்கிக் கொண்டதால் பெருமை மிக்கதாகும்.
ஆனால் நாகருக்கென்றே தனிக்கோவில், அதாவது நாகர் மூலவராக வீற்றிருக்கும் ஆலயம் நாகராஜா கோவில் மட்டுமேஆகும். ஆதிகாலத்தில் இந்த பகுதி வயல்கள் சூழ்ந்ததாக இருந்துள்ளது. வயலில் அரிவாளை வைத்து நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்த ஒரு பெண், நெற்கதிரை அறுக்கும்போது, திடீரென ரத்தம் வந்தது.
இதைக் கண்டு பயந்து போன அந்தப்பெண் அருகில் இருந்தவர்களிடம் சொல்ல, அவர்கள் ரத்தம் வந்த இடத்தைப் பார்த்தபோது, அங்கே பாறையன்றில் ஐந்து தலையுடன் கூடிய நாகர் உருவம் இருந்தது.
அந்த நாகர் சிலையின் மேற்பகுதியில் இருந்துதான் ரத்தம் வந்து கொண்டிருந்தது. பின்பு அந்த நாகர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து அந்தப் பகுதி மக்கள் அனைவரும் வழிபட்டனர். இதையடுத்து ரத்தம் வருவது நின்றது. எனவே அந்தப் பகுதி மக்கள், தினமும் அந்த சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடத் தொடங்கினர். இதனால் அந்த மக்களின் வாழ்க்கையில் துன்பங்கள் அகன்று, வசந்தம் வீச ஆரம்பித்தது.
முதலில் குடிசைப் போட்டு சிலையை வைத்து ஆராதித்து வந்தனர். ஒரு முறை சரும நோயால் பாதிக்கப்பட்ட களக்காடு பகுதியை ஆண்டுவந்த மன்னன் மார்த்தாண்டவர்மா, நாகராஜா கோவிலுக்கு வந்தார். அவர் நாகராஜருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார். இதனால் மகிழ்ந்த மன்னன், அவ்விடத்திலேயே நாகராஜாவுக்கு ஆலயம் எழுப்பினார். ஆனால் கருவறை மட்டும் நாகங்கள் வசிப்பதற்கேற்ப, ஓலைக் கூரையாலேயே வேயப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் இத்தல அர்ச்சகர்களே ஓலைக் கூரையைப் பிரித்து விட்டு, புதிய கூரையை வேய்கிறார்கள். கேரள கட்டிட பாணியில் இந்த ஆலயம் அமையப் பெற்றுள்ளது.
இந்தக் கோவிலை நாகங்களே பாதுகாக்கின்றன. கருவறையில் நாகராஜர் ஐந்து தலைகளுடன் சுயம்புவாக காட்சி தருகிறார். இத்தலத்தில் தர்னேந்திரன் என்ற ஆண் நாகமும், பத்மாவதி என்ற பெண் நாகமும் துவார பாலகர்களாக உள்ளனர்.
மண் பிரசாதம் :
இத்தல மூலவர் நாகராஜாவின் எதிரில் உள்ள தூணில் நாகக்கன்னி சிற்பம் இருக்கிறது. கருவறையில் நாகராஜா இருக்கும் இடம் மணல் திட்டாக உள்ளது. மேலும் வயல் இருந்த இடம் என்பதால் எப்போதும் இவ்விடத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. இது இன்றும் காணக் கூடிய ஒரு அதிசய நிகழ்வாகும். இந்த நீருடன் சேர்ந்த மணலையே, கோவில் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கு கிறார்கள். இந்த மணலானது ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும் மாறிக் கொண்டே இருப்பது அதிசயிக்கத்தக்க ஒன்றாகும்.
நாகராஜர் சன்னிதிக்கு வலது புறம் காசி விஸ்வநாதர், அனந்த கிருஷ்ணன் மற்றும் கன்னி மூல கணபதி சன்னிதிகள் அமைந்துள்ளன. தினமும் நாகராஜருக்கு பூஜைகள் நடைபெற்று முடிந்த பின்னர்தான், இவர்களுக்கு பூஜைகள் நடைபெறும். அர்த்த ஜாம பூஜையில் மட்டும் அனந்த கிருஷ்ணருக்கு முதல் பூஜை நடைபெறுகிறது. இத்தல காசி விஸ்வநாதருக்கு சிவராத்திரி மற்றும் பிரதோஷ நாட்கள் விசேஷமானவை. இந்த இரு தினங்களிலும் காசி விஸ்வநாதர் மற்றும் நாகராஜாவுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் இன்பம் பெருகும். ஆலயமானது கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆனால் பிரதான வாயில் தெற்கு நோக்கியே இருக்கிறது. இந்த வாசலை ‘மகாமேரு மாளிகை’ என்று அழைக்கிறார்கள்.
கோவில் வெளி வளாகத்தில் துர்க்கை சன்னிதி, பாலமுருகன் சன்னிதி, திறந்தவெளியில் குழலூதும் கண்ணன் சன்னிதி முதலியவை உள்ளன. மேலும் காவல் தெய்வங்களான சாஸ்தாவும், நாகமணி பூதத்தான் சன்னிதியும் ஆலய வளாகத்திற்குள்ளேயே இருக்கிறது. ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை) இவ்வாலயத்தின் முன்புள்ள அரச மரங்களின் கீழ் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் தங்கள் கையாலேயே மஞ்சள் பொடி தூவி, பால் அபிஷேகம் செய்யலாம். இவ்வாலயத்தில் தினமும் காலை 10 மணிக்கு மூலவர் நாகராஜாவுக்கு பால் அபிஷேகம் நடைபெறுகிறது.

நாம் ஆஞ்சனேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம், ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சநேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும் சனியின் தாக்கம் மிகவும் குறையும்.
நாம் ஆஞ்சனேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம், ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சநேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும் சனியின் தாக்கம் மிகவும் குறையும். அதே போல் பலவிதமான இன்னல்கள் வரும் போது ஆஞ்சநேயருக்கு நெய் விளக்கு வைத்தால் படிப்படியாக பிரச்சனைகள் தீரும்.
அவருக்கு செய்பவைகளில் சில ,
- வடைமாலை சாத்துதல்
- செந்தூரக்காப்பு அணிவித்தல்
- வெண்ணெய் காப்பு சாத்துதல்
- ராம் ராம் என்று எழுதி மாலை சாத்துதல்
இந்த பரிகாரங்களை செய்து பலர் நன்மை நடந்ததை கண்கூடாகப் பார்க்கிறோம்.
வடைமாலை
அனுமானுடைய தாய் அஞ்சலிதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடைசெய்து கொடுத்ததாக ஐதீகம்.
வெண்ணெய் சாத்துதல்
ராம ராவண யுத்தம் நடக்கிறது அப்போது ராமரையும் லக்குமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டுச் சென்றார் அனுமான் அப்போது ராவணன் சராமாரியாய் அம்பு தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப் பட்டார்,அந்தக் காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக் கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை ,அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது,
சிந்தூரக் காப்பு
சீதையை அசோகவனத்தில் கண்ட அனுமாரிடம் சீதை கேட்கிறாள்.”என் அவர் நலமா? என்று..... அதற்கு அனுமான் “எப்போதும் உங்களைத்தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார் என்றதும்.....
மகிழ்ச்சி தாங்காமல் சீதை தரையிலிருந்து செம்மண்ணை நெற்றியில் வைத்துக் கொண்டாள்.,இதைப் பார்த்த அனுமனுக்கு மிக மிக சந்தோஷம் .தாங்க முடியவில்லை தானும் தன் உடம்பு முழுவதும் செம்மண் பூசிக் கொண்டாராம்..
ஜெய் ஸ்ரீ ராம் என்று மாலையாக அணிவித்தல்
ராம் ராம் என்று எழுதி மாலையாக அணிவித்தல், அனுமன் தன் இதயத்திலேயே ராமாவை வைத்திருக்கிறார். சில படங்களில் அவர் தன் இதயத்தையே கிழித்து ராமாவைக் காட்டுவது போல் நாம் பார்த்திருக்கிறோம் ராம் நாமம் எல்லா ஷேமங்களையும் அள்ளி வழங்கும் மகிமை கொண்டது.
வாலில் பொட்டு வைப்பது
அனுமனுக்கு சக்தி முழுவதும் தன் வாலில் தான் .இராவணன் முன் தன் வாலையே சுருளாக்கி சிம்மாசனமாக்கி இராவனனுக்கும் மேல் உயரமாக் அமர்ந்தவர் அவர் இலங்கையை எரித்ததும் வாலில் வைத்த நெருப்பினால் தான் அவருக்கு சூடு தெரியாமல் ஆனால் இலங்கையே எரிந்தது, ஆகையால் வாலிலிருந்து சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து ஒரு சுற்றுமுடிவதற்குள் நினைத்த காரியம் சித்தியாகிறது என்ற நம்பிக்கை
ஆஞ்சநேயர் ராமஜெய மாலை
ஆஞ்சநேயரிடம் வேண்டிக் கொள்பவர்கள், ராமஜெயம் எழுதிய காகிதங்களை சுவாமிக்கு அணிவிக்கிறார்கள். இது சரியான முறை அல்ல. ஆஞ்சநேயருக்கு காகித மாலை போடவேண்டுமென சாஸ்திரத்திலும் சொல்லவில்லை. ஆஞ்சநேயரின் அருள்பெற வேண்டுபவர்கள், அவருக்கு பிடித்த துளசி, வெற்றிலை மாலை சார்த்தி, ஸ்ரீராமஜெய நாமத்தை மனதாரச் சொல்லி, வணங்கினால் போதும்.

‘சனியைபோல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை’ என்றும், ‘சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்’ என்ற ஜோதிட சொற்றொடர்கள் உள்ளன.
பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.
ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும். அதே நேரத்தில் சனியால் யோக பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு. ஆகையால்தான் ‘சனியைபோல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை’ என்றும், ‘சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்’ என்ற ஜோதிட சொற்றொடர்களும் ஏற்பட்டன.
வழிபாடு பரிகாரம்
பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் தூக்குவோர், துப்புரவு தொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவியும், தொண்டும் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானதாகும். சனி ஸ்தலமான திருநள்ளாறு சென்று வழிபட்டு அன்னதானம் செய்யலாம்.
நவ திருப்பதிகளில் பெருங்குளம் சனி பரிகார ஸ்தலமாகும். சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம்.
சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வணங்கலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, 8 சிதறு தேங்காய் உடைத்து வழிபடலாம்.
ஏழைகளுக்கு, குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்யலாம். இல்லாதோர், இயலாதோர், சாலையோரம் வசிப்பவர்களுக்கு இரும்பு சட்டி வாங்கி தரலாம். சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் அன்னதானம், வஸ்திர தானம் செய்வது சிறப்பு.

வாழ்க்கையில் வெற்றி பெற, சாஸ்திரத்தில் சில வழிபாட்டு பூஜை முறைகள் செய்துவைக்கப்பட்டுள்ளன. முழுமையான ஆர்வம் மற்றும் ஈடுபாட்டுடன் வழிபாட்டு முறைகளை கையாண்டால், பரிபூரண பலன் கிடைக்கும்.
காலச் சக்கரத்தின் பிடியில் சிக்கிச் சுழலும் ஒவ்வொரு மனிதனும், அந்த வாழ்க்கையின் பிடியில் இருந்து வெற்றி பெற வேண்டும் என்றே நினைப்பார்கள். அப்படி வெற்றி பெற, சாஸ்திரத்தில் சில வழிபாட்டு பூஜை முறைகள் செய்துவைக்கப்பட்டுள்ளன. முழுமையான ஆர்வம் மற்றும் ஈடுபாட்டுடன் வழிபாட்டு முறைகளை கையாண்டால், பரிபூரண பலன் கிடைக்கும்.
பூர்வீக இடத்தில் வசிக்க முடியாமல் போவது, பூர்வீக சொத்துக்களை அனுபவிக்க முடியாமல் இருப்பது, பூர்வீகத்தில் அவமானங்கள், சங்கடங்களை சந்திப்பது, பரம்பரை பரம்பரையாக தொடரும் வியாதி, கடன் போன்றவை இந்த தோஷத்தால் ஏற்படும்.
பரிகாரம்
* தினமும் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
* குலதெய்வத்திற்கு விசேஷ அபிஷேக, ஆராதனை செய்து வழிபட வேண்டும்.
* பராமரிப்பு இல்லாத கோவில்களுக்கு திருப்பணி நடத்த வேண்டும்.

சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய தலம் திருந்துதேவன்குடி தலமாகும். இத்தல இறைவி அருமருந்தம்மை, தீராத நோய்களை தீர்ப்பவள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் ” திருந்துதேவன்குடியின் ” நாயகி, தீரா நோய்கள் தீர்க்கும் அருமருந்தம்மை. இத்தல இறைவி அருமருந்தம்மை, தீராத நோய்களை தீர்ப்பவள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு, அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய், வேண்டுவோர்க்கு பிரசாதமாகப் பின்னர் வழங்கப்படுகிறது. அம்மனுக்கு சாத்தி தரப்படும் எண்ணெய், சர்வ வியாதிகளுக்கும் நிவாரணமாகக் கருதப்படுகிறது. நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும்வண்ணம், வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப்போல் சித்திரிக்கப்பட்டுள்ளது.
சந்திரன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு தனது சாபம் நீங்கப்பெற்றான். ஆகையால், சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய தலம் திருந்துதேவன்குடி தலமாகும். அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் சந்திரனுக்குத் தனி சந்நிதி இருக்கும். சந்திரன் நின்ற நிலையில் காணப்படுவார். இத்தலத்தில் மட்டும் சந்திரன் அமர்ந்த நிலையில், யோக நிலையில் இருக்கிறார். எல்லாவகையான யோகங்களும் கிடைக்க வழிபட வேண்டிய தோஷ பரிகார சந்திரன் இவர். குறிப்பாக, கடக ராசிக்காரர்கள் (புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால், அனைத்து தோஷங்களில் இருந்தும் நிவாரணம் பெறலாம். இத்தலத்தில் தேவர்களின் வைத்தியரான தன்வந்திரிக்கும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.